திங்கள், 20 டிசம்பர், 2010

மைனா பாத்தாச்சு (இதானா சார் உங்க டக்கு..............?)மைனா பற்றிய எனது முந்தைய பதிவை பார்க்க மைனா - ஒரு புலம்பல்ஸ், அப்புறம் ஒரு செல்போன் மேல் க்ளிக்கவும்.

பருத்தி வீரன் வந்தவுடனேயே பிரபு சாலமன் ஒரு காப்பி ஜெராக்ஸ் போட்டு வைத்திருப்பார் போலிருக்கிறது. கொஞ்ச நாள் கேப் விடுவோம். மக்கள் மறக்கட்டும் என்று காத்திருந்திருக்கிறார் போல.

படம் ஜில்லென்று இருக்கிறது. நன்றாகவும் இருக்கிறது. கொடுத்த காசுக்குப் பழுதில்லை. கிளைமாக்ஸ் மனசை என்னவோ செய்கிறது. ஜில்லென்ற ஹீரோயின். டிரெக்கிங் போய் ஊர் சுற்றிப்பார்ப்பது போன்ற திரைக்கதை. கொஞ்சம் கொஞ்சம் காமெடி.. நல்ல காம்பினேஷன்.

ஆனால் அதை வர்ணித்து உலகப்படம் ரேஞ்சுக்கு பலரும் பொட்டி தட்டுவது தான் இடிக்கிறது.

நொட்டை சொல்ல வேண்டும் என்றால் நிறைய சொல்லலாம். முப்பது வயது ஹீரோ. ஆனால் அப்போது தான் வயசுக்கு வரும் ஸ்கூல் போகும் ஹீரோயின் (அப்படின்னா ஞாயமா பதினஞ்சு வயசுக்குள் தானே இருக்க வேண்டும்). ஆனால் இரண்டு பேரும் சின்ன வயதில் இருந்தே ஃபிரண்டாமாம். ரெண்டு பசங்களும் ஒரே சைசிஸ் இருக்கின்றன பிளாஷ்பேக்கில்.

சந்தேகப்பிராணி பொண்டாட்டியை வைத்துக்கொண்டு ஏன் இந்த ஜெயிலர் மைனாவை தன் வீட்டுக்கு அழைத்துப்போகிறார். ஏட்டய்யா வயசானவர், அப்பா மாதிரி என்கிறார்கள் அல்லவா? அவர் கூட அனுப்பலாமில்லை? என்றெல்லாம் கேட்கலாம். சரி போகட்டும். டாகுடர் பிளைட்டில் புட்போர்டு அடித்ததையே "ஆ" வென்று வாய்பிளந்து பார்த்தவர்கள் நாம். அதற்கு இது ஒன்றும் மோசமில்லை. பாவம் பிரபு சாலமன். மூன்று படங்களுக்குப்பிறகு ஒரே ஒரு ஹிட்....

அதனால் பட டிஸ்கஷனில் சாலமனுக்கும் அவரது அஸிஸ்டென்டுகளுக்கும் என்ன விவாதம் நடந்திருக்கும் என்று நினைத்துப்பார்த்தேன். பருத்தி வீரனையே எடுத்து தண்ணி ஊற்றி பிசைந்திருக்கிறார்கள்.


"சார், நம்ம படத்துல கொஞ்சம் ரெகுலர் கிளிஷே சீன்லாம் வச்சா நல்லாயிருக்கும்"

"அப்படிங்குற? ஓக்கே. அப்போ அதுல வர்றா மாதிரி சின்னப்பசங்க பாட்டைப்போட்டுக்கோ, பிரபலமாகாத மூஞ்சியா பாத்து, அதாம்பா அதுல வந்த அதே செவ்வாழையை எடுத்து இதில் போடு. அதே மாதிரி ஊர் சுத்துற ஒரு பொறுக்கி ஹீரோ கேரக்டர். அவனை லவ் பண்ற ஒரு ஹீரோயின்னு வச்சிக்கோ"

"சார், எல்லாமே அதே மாதிரி வருது"

"இருப்பா வர்றேன். அது மதுரை பேக்கிரவுண்டா? சரி, இதுல குரங்கணி, கேரளானு மலைக்கிராமமா மாத்திக்கோ. நடு நடுப்புற மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டுக்கணும் என்ன?"

"சரி சார், அப்புறம்?"

"அதுல ஹீரோயினுக்கு அப்பா பிரச்சினையா? இதுல அம்மான்னு மாத்திக்கோ, அதுல ஹீரோவுக்கு அப்பா, அம்மா கிடையாது. இதுல இருக்குற மாதிரி காமிப்போம்"

"அதுல போலீஸ் சும்மா ரெண்டு மூணு சீன்தானே வருது....? இதுல படம் முழுக்க வர்றா மாதிரி எழுதிக்கோ"

"பருத்தில வறண்ட கிராமமா? சரி இதுல ஜில்லுன்னு ஒரு கிராமத்தைக் காமிச்சுக்கலாம்"


"அதுல ரஃப் அண்ட் டஃப்பான ஹீரோயினா? இதுல சாஃப்டா காமிச்சுக்கலாம்"

"சார், அதுல ரேப் சீன்தான் சார் மெயின்"

"ஆமாம்ல? சரி இதை ரேப் இல்லாம சந்தேகம்கிற லெவல்ல நிறுத்திக்குவோம். வேணும்னா ஹீரோயின் வயசுக்கு வர்ற மாதிரி ஒரு சீன் வச்சுக்கலாம்"

"சார், நேத்து ஜூராஸிக் பார்க் பார்த்தேன் சார். அதுல இருக்குற வேன் ஆக்ஸிடென்ட்டை இதுல பஸ் ஆக்ஸிடென்ட்டா மாத்திப்போட்டுக்கலாமா?"

"போட்டுக்கப்பா, இதையெல்லாம் போய் கேட்டுகிட்டு"

"டைட்டில் என்ன? பருத்தி வீரன் - ஹீரோ டைட்டிலா இருக்கு. நாம ஹீரோயின் டைட்டில் வச்சுக்குவோம். ஏதாவது பூ பேரு இல்லாட்டி கவிதை மாதிரி இல்லாட்டி பறவை மாதிரி பேரா போட்டுக்கோ - ரோஜா, மல்லி, குயிலு, மைனா இந்த மாதிரி எதாவது......."

"ஓக்கே. மசாலா ரெடியா? வாங்கப்பா, புரொடியூஸர் தேடப்போகலாம்"

------------------------------------------------------

இப்படியெல்லாம் டிஸ்கஷன் போயிருக்குமோ........... சரி, விடுங்கள்.. ஒண்ணும் பிரச்சினையில்லை.. படம் நன்றாக இருக்கிறதா? பார்த்தோமா? ரைட்டு விடு........
------------------------------------------------------

15 கருத்துகள்:

 1. ரைட்டு.. :) குத்தியாச்சு..

  பட் பிரியாமணிய விட இந்த அமலா பொண்ணு நல்ல தான்பா இருக்கு..

  பதிலளிநீக்கு
 2. நீங்கள் சாரு ரசிகர் என்று அறிகிறேன்... என்னுடைய நண்பரான மற்றொரு சாரு விசிறிக்கு உங்களுடைய தளத்தை அறிமுகப் படுத்துகிறேன்...

  பதிலளிநீக்கு
 3. கவனித்து எழுதியது சிறப்பு .உங்கள் பதிவை அறிமுகபடுத்திய பிரபாகரனுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. லூசாயா நீ...? நீ சொல்ற மாதிரி சொன்னா உலகத்துல எல்ல திரைப்படங்களையும் ஒன்றுதான் என்று சொல்லலாம். நீ எல்லாம் பதிவு எழுதலன்னு எவன் அழுதான்..

  பதிலளிநீக்கு
 5. என்னது காந்திய சுட்டு கொன்னுட்டாங்களா?

  பதிலளிநீக்கு
 6. //மதுரை பாண்டி சொன்னது…
  ரைட்டு.. :) குத்தியாச்சு.. //
  ஆஹா... மதுரைக்காரய்ங்க பாசக் காரய்ங்க ன்னு சொன்னது சரியாத்தானய்யா இருக்கு.. நமக்கு ஓட்டுப் போடவும் ஆளிருக்கே.... (இவுங்களுக்கெல்லாம் நான் என்ன பண்ணப்போறேன்???)

  //பட் பிரியாமணிய விட இந்த அமலா பொண்ணு நல்ல தான்பா இருக்கு.. //
  அப்படின்றீங்க? சரி விடுங்க.. நமக்கென்ன? அஞ்சு வருஷம்... ஒரு ஹீரோயின் கணக்கு...

  பதிலளிநீக்கு
 7. // philosophy prabhakaran சொன்னது…
  நீங்கள் சாரு ரசிகர் என்று அறிகிறேன்... என்னுடைய நண்பரான மற்றொரு சாரு விசிறிக்கு உங்களுடைய தளத்தை அறிமுகப் படுத்துகிறேன்...//

  அன்புக்கு நன்றி பிரபாகரன்.. சாரு மட்டுமல்ல. எஸ்.ராவின் ரசிகனும் கூட. ஆனால் சாருவை நக்கலடிக்கும் அளவு ஆசை. எஸ்.ரா மீது மரியாதையும் உண்டு.

  பதிலளிநீக்கு
 8. // பார்வையாளன் சொன்னது…
  கவனித்து எழுதியது சிறப்பு .உங்கள் பதிவை அறிமுகபடுத்திய பிரபாகரனுக்கு நன்றி//

  வருக. வருக.. அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 9. // பிரபா சொன்னது…
  லூசாயா நீ...? //
  வாழ்த்துக்கு நன்றி பிரபா அவர்களே..

  //நீ சொல்ற மாதிரி சொன்னா உலகத்துல எல்ல திரைப்படங்களையும் ஒன்றுதான் என்று சொல்லலாம். நீ எல்லாம் பதிவு எழுதலன்னு எவன் அழுதான்..//
  அதை ஏன் அனானிமஸ் ஆப்ஷன்ல வந்து சொல்றீங்க? உங்க ஐடி போட்டு வாங்களேன்...

  பதிலளிநீக்கு
 10. // Jayadev Das சொன்னது…
  என்னது காந்திய சுட்டு கொன்னுட்டாங்களா?//

  இதுதாங்க அக்மார்க் நக்கல்...

  பதிலளிநீக்கு
 11. உங்க பதிவ படிச்சதுக்கப்புறம், நிஜமாவே இந்த படத்தோட டிஸ்கஷன் இப்படித்தான் போய் இருக்கும்னு நினைக்கிறேன். // சந்தேகப்பிராணி பொண்டாட்டியை வைத்துக்கொண்டு ஏன் இந்த ஜெயிலர் மைனாவை தன் வீட்டுக்கு அழைத்துப்போகிறார். ஏட்டய்யா வயசானவர், அப்பா மாதிரி என்கிறார்கள் அல்லவா? அவர் கூட அனுப்பலாமில்லை? என்றெல்லாம் கேட்கலாம்// படம் பார்த்துகிட்டிருக்கும்போதே, எனக்கு இதான் .தோணுச்சு.....க்ளைமாக்ஸ் சோகமா இருந்தாதான் படம் வெற்றி அடையும்னு நினைச்சிருபார் போல

  பதிலளிநீக்கு
 12. உன்ன படத்தோட டிஸ்கஷனுக்கு கூப்பிட்டா அவ்ளோதான்..!!ஒரு படத்த காப்பி அடிக்க முடியாது..!! :-))

  பதிலளிநீக்கு
 13. // Raj சொன்னது…
  உங்க பதிவ படிச்சதுக்கப்புறம், நிஜமாவே இந்த படத்தோட டிஸ்கஷன் இப்படித்தான் போய் இருக்கும்னு நினைக்கிறேன். //
  இன்றைக்கெல்லாம் பட டிஸ்கஷன்கள் இப்படித்தான் நடக்கின்றன....

  //க்ளைமாக்ஸ் சோகமா இருந்தாதான் படம் வெற்றி அடையும்னு நினைச்சிருபார் போல//
  கண்டிப்பாக சார், என்னுடைய மைனா பற்றிய முந்தைய பதிவை படித்துப்பாருங்கள்....

  பதிலளிநீக்கு
 14. // சேலம் தேவா சொன்னது…
  உன்ன படத்தோட டிஸ்கஷனுக்கு கூப்பிட்டா அவ்ளோதான்..!!ஒரு படத்த காப்பி அடிக்க முடியாது..!! :-))//
  இன்னோரு சீக்ரெட் சொல்லவா உனக்கு. விஜய், தரணியோட கில்லி படமும், தருண் கோபி, விஷால் காம்பினேஷன்ல வந்த திமிரு படமும் இதே ரிவர்ஸ் காம்பினேஷன் தான். ஒரே நாள்ல இந்த ரெண்டு படத்தையும் பாரு தெரியும்..........

  பதிலளிநீக்கு
 15. சிரிப்பை அடக்க முடியவில்லை. பக்கதில் இருந்து பார்த்த மாதிரியே எழுதி இருக்கீனங்க. டைரட்டர் பிரபு சாலமனுக்கு சொந்தமோ

  பதிலளிநீக்கு