திங்கள், 17 ஜனவரி, 2011

நீயா? நானா?வில் கலந்து கொள்வது எப்படி?

அன்புத்தாய்மார்களே....அருமைப்பெரியோர்களே........ நான்தான் நீயா? நானா? விஜய் டி.வி புகழ் (??????????) கார்த்திக் பேசுகிறேன்...

கடந்த இருநாட்களாகவே ஒரே ஃபேன்ஸ் தொந்திரவு... என்னமா பேசிருக்க நீ? சூப்பர். ஆஹா... ஓஹோ.. அஹா.. ஒஹோ.. எஹே என்றெல்லாம் கமெண்ட்ஸ்.. ஒரே எஸ்.எம்.எஸ், ஈ.மெயில்ஸ், போன் கால்ஸ். நீயா? நானா? வில் எப்படி கலந்து கொள்வது? எப்படி கலந்து கொள்வது? என்று ஒரே கேள்வி மழை.. மெயில் மேல் மெயில் வேறு வந்து குவிந்து (???) கொண்டிருக்கிறது. பலருக்கும் என்னைப்பார்த்து ஒரே பொறாமை வேறு.

வீட்டில் திருஷ்டி சுத்திப்போடச்சொல்லியிருக்கிறேன்.

(ஓவர் பில்டப் இல்ல? அறிந்தும், அறியாமலும் படத்தில் கிருஷ்ணா சொல்வது போல - அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் மீனாக்கா கூட ஓடி வர்ற பசங்கள்ல முதல்ல ஓடி வர்ற பையன் யாரு? ஆங்... நான்தான் அதுக்கு தான் இவ்ளோ ஃபேன்ஸ் - என்று சொல்வாரே? ஞாபகம் இருக்கிறதா?)

சரி.. சரி.. சீரியஸ்... மெயில் மூலமாகக் கேட்ட நண்பருக்கு நான் அனுப்பிய பதில் மெயிலை இங்கே தருகிறேன்.


விஜய் TV யின் நீயா? நாணா? நிகழ்ச்சியில்கலந்து கொள்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை. நான் சில எண்கள் தருகிறேன். (அது தான் விளம்பர இடைவேளைக்கு முன்பு டி.வியிலேயே வருகிறதே)

போன் செய்து - நான் நீயா நானாவில் கலந்து கொள்ள விரும்புகிறேன் என்று சொல்லுங்கள்.

உங்கள் விபரங்கள் கேட்பார்கள்.

பிறகு உங்கள் பயோ டேட்டா அனுப்பச் சொல்வார்கள்.

பிறகு உங்கள் போட்டோ அனுப்பச் சொல்வார்கள்.

சில வாரங்களோ அல்லது மாதங்களோ கழித்து உங்கள் படிப்பு, சூழ்நிலை, தகுதி, தோற்றம் ஆகியவற்றிற்குத் தோதான ஒரு தலைப்பு வரும்போது நீயா நானாவில் கலந்து கொள்ள அழைப்பார்கள்.

விருப்பமும் நேரமும் இருந்தால் கலந்து கொள்ளலாம். (பஸ் சார்ஜ், தங்குமிடம் ஏற்பாடு அனைத்தும் உங்களுடையது. கலந்து கொள்பவர்களுக்கு அவர்கள் தருவது மதிய உணவும், இரண்டு முறை டீயும் மட்டுமே)

எப்படி? ஈஸியாக இருக்கிறதா? இப்படித்தான் நானும் செய்தேன். சப்ப மேட்டர்.

நீயா? நானாவில் கலந்து கொண்ட கொடுமையின் புலம்பலாக என் முந்தைய பதிவு இங்கே...நீயா நானா வில் நான்

எங்க? இப்போ எல்லாரும் சொல்லுங்க பார்க்கலாம்? வடிவேலு ஸ்டைல்ல... இது உங்கள் சொத்து......... இது உங்கள் சொத்து.........

அப்புறம் இன்னொன்று........... என்னிடம் மைக்கே வரவில்லை. நான் பேசியதை எடிட்டிங்கில் கட் செய்து விட்டார்கள். டி.வியில் என் மூஞ்சி சரியாகவே தெரியவில்லை, ஆயிரம் ரூபாய் தண்டச்செலவு, ஒரு நாள் லீவு வேஸ்ட் என்றெல்லாம் (என்னை மாதிரி) புலம்பக்கூடாது. ஓக்கே?

-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

25 கருத்துகள்:

 1. //என்னிடம் மைக்கே வரவில்லை. //

  ஆமாம் கவனித்தேன். பாவமாகத் தெரிந்தீர்கள்:)! டேக் இட் ஈஸி:))!

  பதிலளிநீக்கு
 2. நுணலும் (அதாகப்பட்டது) தவளை தன் வாயால் கெடும் என்றொரு பப்பாட்டி காலத்து பழமொழியை நேற்று நான் சுமார் இருநூறு பேருக்கு "நீயா? நானா? பாரு, நீயா? நானா? பாரு, " என்று மெஸேஜி மெய்யாக்கினேன். (ஹேஹ்ஹே............. ஒன்பதில் நான்கு முறை பேசியது டெலிகாஸ்ட் ஆன என் நிலைமையே இப்படி என்றால் டி.வியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் ஃபிரண்ட்ஸிடம் பெருமை பேசி பல்பு வாங்கிய மற்ற சுமார் 20 பேரின் நிலைமை எப்படி இருந்திருக்கும்?)

  பதிலளிநீக்கு
 3. நேற்றைய நீயா நானா பார்த்தேன். எஸ்.ரா. பற்றி நீங்கள் கூறிய வார்த்தைகள் பரவசம். நீங்கள் எதிர்பார்த்தது நிறைவேறியதால்,, உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான் . எஸ்.ரா.வுடன் வேறு ஏதேனும் பேசினீர்களா?
  டி.வி.யில் ஒளிப்பரப்பானதில் கொஞ்சம் கட் செய்து விட்டதாகவே தோன்றியது.

  பதிலளிநீக்கு
 4. எனி வே.. உங்கள் வாசிப்பு திறனுக்கு சல்யூட்...

  பதிலளிநீக்கு
 5. // பாரத்... பாரதி... சொன்னது…
  நேற்றைய நீயா நானா பார்த்தேன். எஸ்.ரா. பற்றி நீங்கள் கூறிய வார்த்தைகள் பரவசம். நீங்கள் எதிர்பார்த்தது நிறைவேறியதால்,, உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான் . //

  நிஜம்......... ஒரு சாதாரண சினிமா ரசிகன் ரஜினி, கமல் அல்லது விஜயை பார்த்தால் எப்படிக் குதிப்பானோ அப்படி இருந்தது எங்களுக்கு..

  // எஸ்.ரா.வுடன் வேறு ஏதேனும் பேசினீர்களா? //

  ம்... ஆனால் ஸ்பெஷலாக ஒன்றும் இல்லை.. சும்மா ஃபார்மாலிட்டி...
  ஆனால் நன்றாக சிரித்த முகம் அவருக்கு.. சட்டென்று ஒட்டிக்கொள்ளத் தோன்றுகிறது.. (ஜெயமோகனைப்பார்த்தால் எனக்கு கடுப்பாக இருக்கும்)

  // டி.வி.யில் ஒளிப்பரப்பானதில் கொஞ்சம் கட் செய்து விட்டதாகவே தோன்றியது. //

  ஆமாம். நிறைய........ நான்கு மணி நேரம் ஷூட் செய்து ஒன்றரை மணி நேரம் தான் ஒளிபரப்பினார்கள்..

  // எஸ்.ரா. பற்றிய பேசியது நீங்கள் தானே? //

  நானே.. நானே.. ப்ளூ ஷர்ட்...
  (சிவப்பு சட்டைப்பையன் பெயர் அருள். நாங்கள் இரண்டு பேர் மட்டும் தான் எஸ்.ரா வை வரவேற்றுப் பேசினோம்..

  // எனி வே.. உங்கள் வாசிப்பு திறனுக்கு சல்யூட்... //

  டாங்க்ஸ்......... பட், என்னோட வாசிப்புத் திறனை நீங்க எங்கே பாத்தீங்க???

  பதிலளிநீக்கு
 6. //நான்கு முறை பேசியது//

  அந்த மணி நேரத்துள் அதுவே பெரிய விஷயம்தானே? எஸ் ரா அவர்களை வரவேற்றுப் பேசியது, வாசிப்பை போதை என்ற எதிர்தரப்பை ‘சுக’மான போதை என மடக்கியது, பிடித்த கதையாக புதுமைப்பித்தனின் ’கடவுளும், கந்தசாமிப்பிள்ளையும்’ சிறுகதையைக் குறிப்பிட்டுச் சொன்னது..., விஜய் டிவி புகழ் என போட்டுக் கொள்ளலாம்தான் இனி நீங்க:)!

  பதிலளிநீக்கு
 7. புத்தக சந்தைக்கு போயிட்டு ராத்திரி பத்தரை மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன்... யூடியூப் வீடியோ கிடச்சா லிங்க் கொடுங்க...

  பதிலளிநீக்கு
 8. // ராம்ஜி_யாஹூ சொன்னது…
  பகிர்ந்தமைக்கு நன்றிகள் //

  வருகைக்கு நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 9. // ராமலக்ஷ்மி சொன்னது…
  அந்த மணி நேரத்துள் அதுவே பெரிய விஷயம்தானே? எஸ் ரா அவர்களை வரவேற்றுப் பேசியது, வாசிப்பை போதை என்ற எதிர்தரப்பை ‘சுக’மான போதை என மடக்கியது, பிடித்த கதையாக புதுமைப்பித்தனின் ’கடவுளும், கந்தசாமிப்பிள்ளையும்’ சிறுகதையைக் குறிப்பிட்டுச் சொன்னது..., விஜய் டிவி புகழ் என போட்டுக் கொள்ளலாம்தான் இனி நீங்க:)! //

  ஆஹா..... டீட்டெயில்டா கவனிச்சிருக்கீங்களே..........

  பதிலளிநீக்கு
 10. // Philosophy Prabhakaran சொன்னது…
  புத்தக சந்தைக்கு போயிட்டு ராத்திரி பத்தரை மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன்... யூடியூப் வீடியோ கிடச்சா லிங்க் கொடுங்க... //

  கண்டிப்பாக........ கிடைத்ததும் தருகிறேன்.

  பதிலளிநீக்கு
 11. ஹிஹிஹி,, இவ்ளோ கஷ்டப்பட்டு போனீங்களா? இந்த வெட்டி ப்ரோக்ராம்க்கு--

  இப்படிக்கு நீயா நானாவில் சணடை போட்டு, கொலவெறியில் இருப்போர் சங்கம்

  பதிலளிநீக்கு
 12. // விஜி சொன்னது…
  நீயா நானாவில் சணடை போட்டு, கொலவெறியில் இருப்போர் சங்கம்//

  நீங்களுமா??

  ஐ மீன் நீங்களுமா போயிருந்தீக..........

  இதையெல்லாம் ஒரு பதிவா போட்டு எங்களை உசார் பண்ணியிருக்கக் கூடாதா?

  பதிலளிநீக்கு
 13. ரொம்ப நன்றி !!!
  --
  மதுரை பாண்டி
  http://maduraipandi1984.blogspot.com

  பதிலளிநீக்கு
 14. மதுரை பாண்டி அவர்களே.... நன்றி எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?

  பதிலளிநீக்கு
 15. //அப்புறம் இன்னொன்று........... என்னிடம் மைக்கே வரவில்லை. நான் பேசியதை எடிட்டிங்கில் கட் செய்து விட்டார்கள். டி.வியில் என் மூஞ்சி சரியாகவே தெரியவில்லை, ஆயிரம் ரூபாய் தண்டச்செலவு, ஒரு நாள் லீவு வேஸ்ட் என்றெல்லாம் (என்னை மாதிரி) புலம்பக்கூடாது. ஓக்கே?///

  எலே மக்கா நான் எஸ்கேப்பூ..............

  பதிலளிநீக்கு
 16. ஆஹா, அதெல்லாம் பதிவா வந்ததுமே போட்டாச்சு

  http://thegreatviji.blogspot.com/2010/10/blog-post_25.html

  இதுல பாருங்க:)

  பதிலளிநீக்கு
 17. // MANO நாஞ்சில் மனோ சொன்னது…
  எலே மக்கா நான் எஸ்கேப்பூ.............. //

  அட என்னங்க நீங்க...... இதுக்கே அசந்தா எப்பூடி........... இன்னும் எவ்ளோ மேட்டர் இருக்கு..........

  பதிலளிநீக்கு
 18. // விஜி சொன்னது…
  ஆஹா, அதெல்லாம் பதிவா வந்ததுமே போட்டாச்சு //

  ஓ... அப்படியா? நம்ம கண்லதான் படலியோ..........? ஆனா நீங்க ரொம்ப ரொம்ப சாஃப்டா எழுதியிருக்கீங்க....... ஏங்க? அடிச்சு ஆட வேண்டியது தான.. நம்பள்து பாருங்க... மூணு நாலு பதிவு ஆகிப்போச்சு..........

  பதிலளிநீக்கு
 19. // சி.பி.செந்தில்குமார் சொன்னது…
  THANKS FOR AWARNESS //

  என்ன செந்தில்...... எத்தனையோ பத்திரிகைகள்ல எழுதறீங்க? நீயா? நானா?வுக்கும் ஒரு தடவை போயிட்டு தான் வாங்களேன்.

  பதிலளிநீக்கு
 20. எஸ்.ராவைப் புகழ்ந்த எஸ்கா வாழ்க..!! கதைகள் பற்றிய அவருடைய விளக்கத்தை கேட்கமுடிந்தது உன்னால்தான்.அதற்கு மிக்க நன்றி..!! :-)

  பதிலளிநீக்கு