செவ்வாய், 18 ஜனவரி, 2011

புத்தகக் கண்காட்சி - ஒரு கண்டுபிடிப்பு, ஒரு காமெடி, ஒரு ஐடியா

புத்தகக் கண்காட்சி பற்றிய எனது முந்தைய பதிவு புத்தகக் கண்காட்சி, சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், நான், அபி.....

அந்தப்பதிவை நமது சக பதிவர் சாரு நிவேதிதா (ஹி... ஹி... ஹி... எப்பூடி.....) தன்னுடைய சாரு ஆன்லைன் டாட் காமில் லிங்க் கொடுத்திருக்கிறார். இதை அங்கே படிக்க............ சாரு ஆன்லைன்.காம்இந்த முறை புத்தகக் கண்காட்சிக்கு என்னுடைய கேமராவோடு போயிருந்தேன். ஒரு செம மேட்டர் சிக்கியது. இந்தப் பக்கத்தில் உள்ள போட்டோவைப்பாருங்கள் ஐயா... எதையாவது கண்டு பிடித்தீர்களா? அட்டைப்படத்தில் "நற்றினை" என்று தப்பாக இரண்டு சுழி "ன" அச்சடிக்கப்பட்டிருக்கிறது. உள் பக்கத்தில் "நற்றிணை" என்று மூன்று சுழி "ண" பிரிண்ட் ஆகி இருக்கிறது.

நமக்கே நாலு முறை படித்தால் "நற்றிணை"-க்கு ஸ்பெல்லிங் எனக்கு மறந்து போய் விடும் போலிருக்கிறது. இந்தக் கொடுமையை செய்தது எந்தப்பதிப்பகம் என்று நினைவில்லை.. பெரியப்பா கூப்பிட்டுக்கொண்டே இருந்தாரா?? . அந்த அவசரத்தில் பதிப்பகத்தின் பெயரை கவனித்தது மறந்து போய்விட்டது. இருந்தாலும் அங்கே கொட்டிக் கிடந்த எல்லா புத்தகங்களையும் இன்னோரு ஃபோட்டோ எடுத்து வந்தேன். அதை வைத்து எதையாவது கண்டு பிடிக்க முடியுமா பாருங்கள்?

இப்படி ஒரு சங்க இலக்கியப் புத்தகத்தையே தப்பாக அச்சடித்து அதையும் தைரியமாக இலட்சக் கணக்கானோர் கூடும் புத்தகக் கண்காட்சியிலேயே கொண்டுவந்து விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.. எந்த மாங்கா மடப்பயல் (அவனுக்கென்னங்க மரியாதை?) புரூஃப் பார்த்தானோ தெரியவில்லை. நல்ல வேளை......... மூலமும் உறையும் (???) என்று போடாமல் போனார்கள்.. உறை நாறியிருக்கும்...


அப்புறம் இங்கே வரும்போது ஒவ்வொரு முறையும் இன்னோரு காமெடி ஸ்டாலை கடப்பது வழக்கம். ஜோ மல்லூரி என்று ஒரு கவிஞர் (?) தனியாக ஸ்டால் போட்டிருப்பார். அவருக்கு பேனரெல்லாம் வழியிலேயே பட்டையைக்கிளப்பும். உண்மையிலேயே அவர் கவிஞரா என்று தெரியாது.. நான் எங்கேயும் (புத்ததகக் கண்காட்சி தவிர) அவர் பெயரை கேள்விப்பட்டதே இல்லை. ஒரு வேளை மலையாளியோ? இருக்காதே.. இருந்தால் ஜெயமோகன் எங்காவது பறஞ்சிருப்பாரே... அல்லது சாருவாவது எங்கேயாவது திட்டியிருப்பாரே....

ஸ்டாலை க்ராஸ் செய்தால் ரொம்ப சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டிருக்கும். நன்றாக மங்கி குல்லா போட்டு, ஒரு புரொஃபஷனல் போட்டோகிராபரை வைத்து போட்டோ எடுத்துக்கொண்டு ரஜனீஷ் லெவலுக்கு போஸ் கொடுத்து, சூப்பராய் நான்கு ஃப்ளக்ஸ் போர்டுகள் வைத்துக்கொண்டு....... "கவிஞர் ஜோ மல்லூரி யின் படைப்புலகம்" என்று ஒரு ஃப்ளக்ஸ் இருக்கும். இந்த முறை "அம்ரித்தா எனும் அழகியோடு" என்ற பெயரில் கூடுதலாக ஒரு புத்தகத்திற்கான பேனர். (சரோஜாதேவி புத்தகமோ?)அடுத்த முறை இதே மாதிரி நானும் ஒரு ஸ்டால் போட்டு விடலாமா என்று பார்க்கிறேன். என்ன? ஸ்டால் வாடகை தானே போகும்? (எவ்வளவு என்று தெரியவில்லை) கொடுத்து விடலாம். ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதச் சம்பளமாக இருக்கலாம். போகட்டும். பேர் கிடைக்கும் அல்லவா? இன்றைக்கு ஜோ மல்லூரி பற்றி நான் எழுதுவது போல என்னைப்பற்றி நக்கலடித்தாவது நாலு பேர் எழுத மாட்டார்களா?

இடம் நிறைய இருக்கிறது என்று பதிவர் சந்திப்பு என்று போர்டு போடலாம். சுற்றிக்கொண்டிருப்போரில் எப்படியும் இருபது முப்பது பேராவது தேறுவார்கள்... டெய்லி பதிவர் சந்திப்பு தான். எப்படியும் ஒரு கைப்புள்ளை பதிவர் புத்தகம் எழுதியிருப்பார். நம்ம ஸ்டாலிலேயே வெளியிட்டுக்கொள்ளலாம். கண்காட்சிக்கு வரும் யாராவது வி.ஐ.பியை கெஞ்சிக்கூத்தாடி வரவழைத்து போட்டோ போட்டுக்கொள்ளலாம்.

நான் புத்தகமே வெளியிடத்தேவையில்லை. புத்தகத்தின் அட்டைப்படம் போல ஃப்ளக்ஸ் போர்டுகள் தயார் செய்து (மொத்தம் நான்கு விதமான புத்தகங்கள்) வைத்துக்கொள்ளலாம். ஐநூறே ஐநூறு ரூபாய் தான் செலவாகும். அப்புறம் நம்ம ஃபோட்டோ.. ஒரு நாலஞ்சு விதமாக.. (பொண்ணு பார்க்கக் கொடுக்கணும்.. ஸ்டூடியோ போய் எடுத்துட்டு வா எடுத்துட்டு வா என்று வீட்டில் ரொம்ப நாளாக அரித்துக்கொண்டிருக்கிறார்கள்) ஒரே கல்லுல ரெண்டு மாங்கா...

ஸ்டால் வாசலில் ஒரு இருநூற்றைம்பது ரூபாய்க்கு மசாலா கடலை பாக்கெட்டுகளை வாங்கிப்போட்டு, (சாம்பிளுக்கு இரண்டிரண்டு கொடுப்பார்களே அந்த மாதிரி) ஸ்டாலுக்கு வரும் வாசகர்களுக்கு கொடுத்தால் அந்த சுவை நாக்கில் நிற்கும் வரை இன்னும் இரண்டு கடலை கிடைக்காதா என்று நிற்பார்கள். அந்த கேப்பில் ஒரு லெட்ஜர் போட்டு "சும்மா உங்கள் முகவரியை மட்டும் எழுதுங்கள், எங்கள் கார்திக் (த் விட்டுப்போயிற்றே என்று பார்க்கிறீர்களா? இப்படி எதாவது செய்தால் தான் இலக்கியம். நாலு பேர் கவனிப்பார்கள்) பதிப்பகத்தின் கேடலாக் உங்கள் வீடு தேடி வரும் என்று சொல்லிவிடலாம், கவிதை அல்லது கட்டுரைப் புத்தகங்களை முன்பதிவு செய்வோர்க்கு 25% டிஸ்கவுண்ட் என்றால் இன்னும் நிறைய கூட்டம் தேறும். நான்கைந்து லெட்ஜர்கள் வாங்கி வைக்க வேண்டியிருக்கும்.

பிற்பாடு அந்த லெட்ஜர்களை அப்படியே ஒரு ரேட் பேசி ஏதேனும் டேட்டாபேஸ் கம்பெனிக்கு விற்று விடலாம். (மக்களே....... உள்ளே நுழையும் போது என்ட்ரி கூப்பனில் உங்கள் பெயர், முழு முகவரி, வீட்டுக்கு போகும் குறுக்கு வழி, போன் நம்பர், ஈ.மெயில் ஐடி எல்லாவற்றையும் எழுதிப்போடுகிறீர்களே. அதெல்லாம் இப்படித்தான் விலை போகிறது. அப்புறம் கொஞ்ச நாள் கழித்து கிரெடிட் கார்டு, டூவீலர் லோன் காரன்லாம் எப்படி என் நம்பரைக்கண்டு பிடித்தான், இது புது நம்பராயிற்றே என்று மனைவியிடம் குழம்பிக்கொண்டிருப்பீர்கள்) அப்படி விற்றால் எப்படியும் ஒரு பதினைந்தாயிரம், இருபதாயிரம் தேறும். இன்னும் கொஞ்சம் நிறைய பணம் தேறினால் நிஜமாகவே ஒரு புத்தகம் போட்டு அடுத்த கண்காட்சியில் மனுஷ்ய புத்திரனை (கெஞ்சிக்கேட்டு) வெளியிடச் சொல்லலாம். ரொம்ப நல்லவர், பத்து நிமிடம் ஒதுக்கி வரமாட்டாரா?

இந்த மாதிரி நிறைய ஐடியாக்கள் ஸ்டாக் இருக்கிறது. அப்பப்போ ஒரு ஆயிரத்தை வெட்டுனீங்கன்னா இந்த ஐடியா டிப்போல இருந்து நெறைய ஐடியா வாங்கிக்கலாம். விபரங்களுக்கு தொலைபேசுங்கள் (நம்பரைக்கண்டு புடிக்கிறது ரொம்ப ஈஸி)..

-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

10 கருத்துகள்:

 1. //எஸ்.கே சொன்னது… //

  வர்றீங்களா? சோடி போட்டுக்கலாம்... சோடி.....

  பதிலளிநீக்கு
 2. பகிர்வு வித்தியாசமாக நல்லாயிருக்கு.

  பதிலளிநீக்கு
 3. இது கூட நல்ல ஐடியாவா இருக்கே!!! ஏற்கனவே விஜய் டிவி புகழ் yeskha , இனிமேல்?
  --
  மதுரை பாண்டி
  http://maduraipandi1984.blogspot.com

  பதிலளிநீக்கு
 4. // asiya omar சொன்னது…
  பகிர்வு வித்தியாசமாக நல்லாயிருக்கு. //

  அன்புக்கு நன்றி... எதையோ எழுத ஆரம்பித்து எங்கேயோ போகிறது பதிவு....

  பதிலளிநீக்கு
 5. // கொல்லான் சொன்னது…
  வாங்க துறை.... (ரை) //

  பிழை....... எழுத்துப்பிழை... வருகைக்கு நன்றி... உரை, உறை வித்தியாசம் புரியுமென்று நினைக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 6. // MANO நாஞ்சில் மனோ சொன்னது…
  நல்லா இருக்குங்க.... //

  என்னங்க..... டெம்ப்ளேட் பின்னூட்டம் போடறீங்க.......

  பதிலளிநீக்கு
 7. // Madurai pandi சொன்னது…
  இது கூட நல்ல ஐடியாவா இருக்கே!!! ஏற்கனவே விஜய் டிவி புகழ் yeskha , இனிமேல்? //

  ஜெயா டிவி ஜாக்பாட் ஷோவுக்கு அப்ளை பண்லாமான்னு பார்க்கிறேன.

  பதிலளிநீக்கு