வெள்ளி, 21 ஜனவரி, 2011

பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி

நண்பன் சேலம் தேவா வின் ட்வீட் ஒன்று இந்த வார ஆனந்த விகடனில் வந்துள்ளது. அதைப்பற்றி அவன் எழுதிய "ஆனந்தம்.. பரமானந்தம்" என்ற பதிவில் பிரபல பதிவர் சி.பி. செந்தில்குமார் அவர்களின் "பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி? பாகம் - 3" என்ற பதிவின் லிங்க்கை கொடுத்திருந்தான். அவர் சென்னிமலை சி.பி. செந்தில்குமார் என்ற பெயரில் பல பத்திரிகைகளில் ஜோக்குகள், ஒரு பக்கக் கதைகள், வாசகர் கடிதங்கள் என்று எழுதி வருகிறார். அவருடைய பதிவு எனக்கு ரொம்பப் பிடித்தது. அதற்கு ஒரு பின்னூட்டம் போடப்போய் வரிசையாக ஆறு, ஏழு பின்னூட்டங்கள் போட்டேன்.. கொஞ்ச நேரம் கழித்து அதைப்படித்த போது அதையே ஏன் நம் ப்ளாக்கிலும் போடக்கூடாது என்று தோன்றியது.. இன்னும் ஒரு நூறுபேராவது படிப்பார்களே என்று.. இதோ போட்டு விட்டேன்..

இது போன்ற ஜோக் எழுத்தாளர்கள் பற்றிய "அறிவுத்திருட்டும், துணுக்கு எழுத்தாளர்களும்" என்ற எனது ஆதங்கக் கட்டுரை உயிரோசையில வெளியானது.

பின்னூட்டங்களை படிக்குமுன் மேற்கண்ட இரு பதிவுகளையும் படித்து விட்டு வந்தால் இது முழுதாகப்புரியும்... ஆகவே அவ்விரண்டையும் படித்து விட்டு வர வேண்டுகிறேன்...

பின்னூட்டம் ஒன்று

குமுதத்தில் ஜோக்ஸ், வாசகர் கடிதம் இரண்டுக்கும நான் இதே டெக்னிக்கை பின்பற்றுவது வழக்கம். சுமாராக என்னுடைய நூறு ஜோக்குகள் வெளியாகியுள்ளன. அதே போல் வாசகர் கடிதம் பகுதியில் ஏ.எஸ்.யோகானந்தம் மற்றும் உங்களுடையவை (வேறு வேறு பெயரில்) இரண்டு மூன்று கடிதங்கள் வந்ததைப்பார்த்து நானும் எழுதி அனுப்புவேன். (சுமார் ஐம்பது கடிதங்கள்) ஒருமுறை ஒரே பக்கத்தில் மூன்று கடிதங்கள் பிரசுரமானதைப்பார்த்து ஒரே குஷி. அதுவரை மணியார்டராகத்தான் பணம் வீட்டுக்கு வரும், ஆனால் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக செக் அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள். ஒருமுறை 750 ரூபாய்க்கு ஒரே செக் காக வந்தது. அப்போது என்னுடைய மாதச் சம்பளமே 2500 ரூபாய் தான். அப்போ தஞ்சை தாமுவை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கும். என்னய்யா இந்த மனுஷன் எல்லா புக்குலயும் எழுதுறாரு.. மாசா மாசம் அவருக்கு எவ்வளவு வரும்? என்று கணக்குப்போட்டுப்பார்ப்பேன்..

- சேலம் எஸ்கா

பின்னூட்டம் இரண்டு

நான் கவிதைக்கு டெக்னிக் எதையும் பின்பற்றாமல் தோன்றுவதை எழுதி அனுப்பி விடுவேன். அதனால் பிரசுரமானவை என்னுடைய இரண்டே இரண்டு கவிதைகளே.. ஒருபக்கக் கதைகளில் ஐரேனிபுரம் பால்ராசய்யா பற்றி நினைத்தாலே பற்றிக்கொண்டு வரும். எப்படிய்யா இந்த ஆளு அடிக்கடி கதை எழுதுறாருன்னு.. நானும் இரண்டு கதைகள் அனுப்பிப்பார்த்தேன். வரவில்லை. சரி இது நமக்கு வேலைக்காகாது. நாம பேசாம ஜோக் எழுதறதோட நிறுத்திக்க வேண்டியது தான்னு ஒருபக்கக் கதை அனுப்புறதையே நிறுத்தி விட்டேன்.

இந்த ஐடியாக்களை எல்லாம் என்னுடைய நண்பர்களுக்கும், இதே போல் எழுத ஆசைப்படுபவர்களுக்கும் சொல்வது உண்டு. ஆனால் இப்படி பதிவாய்ப் போட்டு பலருக்கும் உபயோகமாக ஆக்கும் எண்ணம் எனக்குத்தோணவே இல்லை. சி.பி. உண்மையாவே பெரிய ஆளுதான் நீங்க.

- சேலம் எஸ்கா

பின்னூட்டம் மூன்று

இன்னோரு டெக்னிக் சொல்றேன். நீலக்கலரை விட்டு விட்டு வித்தியாசமான வேறு கலர் (எப்போதும்) பேனாக்களை உபயோகப்படுத்திப்பாருங்கள். உங்கள் கார்டு மட்டும் தனியாகத்தெரியும். ஆனால் இதில் ரிஸ்க்கும் உண்டு. நீங்கள் நன்றாக எழுதி பல ஜோக்குகள் பிரசுரமாகும் பட்சத்தில் இந்த ஐடியா பலன் தரும். ஆனால் நாம் தத்தா புத்தா என்று எதையாவது எழுதி சொதப்பினால் இந்த ஐடியா ரிவர்ஸில் திரும்பி விடும். உங்கள் லெட்டரை, கார்டை பார்த்ததுமே தூக்கிப்போட்டு விடுவார்கள்.

ரொம்பவும் முக்கியமான ஒரு விஷயம். ஜோக்குகளும் கடிதங்களும் போஸ்ட் கார்டில் மட்டுமே அனுப்புதல் நலம். A4 பேப்பரில் எழுதி பிரவுன் கவரில் போட்டு அனுப்பாதீர்கள். மூட்டை மூட்டையாக வரும் கடிதங்களில் முதலில் அவர்கள் பார்ப்பது கார்டுகளை மட்டுமே... - சேலம் எஸ்கா

பின்னூட்டம் நான்கு

இன்னோரு முக்கியமான விஷயம்.. சாதாரண போஸ்ட் கார்டு ஐம்பது பைஸா.. மேக்தூத் போஸ்ட் கார்டு என்று ஒன்று உண்டு. மேக்தூத் கார்டு இருபத்தைந்து பைஸா மட்டுமே. ஆனால் அட்ரஸ் எழுதும் இடத்திற்கு பக்கத்தில் உள்ள ஏரியாவில் நாம் எழுத முடியாது... அந்த இடத்தில் விளம்பரம் வரும் (அரசாங்கத்திற்கு மிச்ச இருப்பதைந்து காசு கிடைப்பது அந்த விளம்பர வருமானம் தான்) அது லிமிடெட் எடிஷன். எப்போதாவது தான் வரும். வந்த இரண்டு தினங்களில் கார்டே தீர்ந்து போய் விடும். அதனால் லோக்கல் போஸ்ட் மாஸ்டரை ஃபிரண்டு பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.. இன்றைய கால கட்டத்தில் மொபைல் போன் நம்பர் கிடைக்கும். மேக்தூத்த கார்டு வந்தால் அவர் உங்களுக்கு போன் செய்வார்.. ஓடிப்போய் பல்க்காக ஒரு ஐம்பது, நூறு ரூபாய்க்கு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். கவலை வேண்டாம். நாம் எழுதி எழுதி அது தீர்வதற்குள் அடுத்த செட் மேக்தூத் கார்டு வந்து விடும்.. வேறு யாராவது விளம்பரம் கொடுப்பார்கள். அப்படி வந்த முதல் விளம்பரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "பாபா"..

பின்னூட்டம் ஐந்து

ஸோ... மேக்தூத் கார்டின் உள்ளே உள்ள அகன்ற பக்கத்தில் நம் ஜோக்கை எழுதி விட்டு கீழே நம் அட்ரஸை நுணுக்கி நுணுக்கி எழுத வேண்டும். அதற்கும் ஒரு ஐடியா. ஐம்பது ரூபாய் கொடுத்து ரப்பர் ஸ்டாம்பு செய்து வைத்துக்கொள்ளுங்கள்... (சுஜாதா எழுதியது ஞாபகம் இருக்கிறதா? குளச்சல் ஜார்ஜ் என்பரை ஓட்டு ஓட்டு என்று ஓட்டியிருப்பாரே - நாங்கள்லாம் குளச்சல் ஜார்ஜ் கோஷ்டி "சுஜாதா வீட்டில் ஒரு நாய் இருக்கிறது, அது ஆங்கிலத்தில் பேசினால் புரிந்து கொள்கிறது") நம் அட்ரஸ் மட்டுமல்ல. தனித்தனியாக ஆனந்த விகடன் அட்ரஸ், குமுதம், குங்குமம் மற்றும் வேறு என்னவெல்லாம் பத்திரிகைகளுக்கு நாம் அனுப்புகிறோமோ அவை அனைத்தின் அட்ரஸூம். (என்னிடம் கல்கி அட்ரஸூக்கு கூட ஸ்டாம்பு உள்ளது. (என்ன நக்கலா? சிரிக்காதீர்கள். எத்தனை கார்டில் அட்ரஸ் எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி அனுப்புவீர்கள். இம்போசிஷன் மாதிரி, முட்டி பெயர்ந்து விடும்) ஒரு ஜோக் பிரசுரமாக வேண்டுமென்றால் பத்து ஜோக் அனுப்ப வேண்டும். சமயத்தில் இருபது முப்பது (விகடனுக்கு) அனுப்பினால் போனால் போகிறதென்று ஒன்றே ஒன்று தான் பப்ளிஷ் ஆகும்..

பின்னூட்டம் ஆறு

சமயத்தில் ஒரு மாதம் அதாவது நான்கு வாரங்களாக நம் ஜோக்கே வராது எந்தப்பத்திரிகைகளிலும். அந்த சமயத்தில் ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.. சொந்தக் காசில் புக்கும் கார்டும் வாங்க மாட்டேன்.. பரிசாக வந்த பணத்தில் மட்டுமே வாங்குவேன் என்று. ஸோ போனமாதம் பரிசாக வந்த பணத்தில் மட்டும் விகடன், குமுதம், இந்தியா டுடே, கல்கி, ஆனந்த ஜோக்ஸ் எல்லாம் வாங்கினால் அந்த காசு தீர்வதற்குள் நமது அடுத்த கடிதமோ அல்லது ஜோக்கோ பிரசுரம் ஆக வேண்டுமே என்ற வெறி வரும்... எழுதித்தள்ளுவோம். கண்டிப்பாக அடுத்த வாரமே பப்ளிஷ் ஆகும். (மறுபடியும் நக்கலாய் சிரிக்காதீர்கள். எனக்குத் தெரிந்த ஜோக் எழுத்தாளர் ஒருவர். அவருக்கு மாதச் சம்பளம் கம்மி. இந்த மாதிரி மாதா மாதம் வரும் பணத்தில் தான் அவர் தனது பையனுடைய ஸ்கூல் ஃபீஸே கட்டுகிறார்)

பின்னூட்டம் ஏழு

இது போன்ற ஜோக் எழுத்தாளர்கள் பற்றிய "அறிவுத்திருட்டும், துணுக்கு எழுத்தாளர்களும்" என்ற எனது ஆதங்கக் கட்டுரை உயிரோசையில வெளியானது. அதன் லிங்க் இதோ... http://yeskha.blogspot.com/2010/08/blog-post_11.html

இந்தப்பதிவுக்கு ரொம்ப நேரமாக என்ன தலைப்பு வைப்பது என்று யோசித்து அவர் வைத்த தலைப்பையே கரெக்ஷன் போட்டு "பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி" என்று போட்டு விட்டேன். செந்தில் கோபித்துக்கொள்ளாமல் இருக்கக் கடவது..

-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

34 கருத்துகள்:

 1. நல்ல ஐடியா,பின்னாளில் உபயோகமாகலாம்.
  வெளிநாட்டில் இருந்து எப்படிங்க நம்ம ஊர் பத்திரிக்கையில் எழுதி பாப்புலர் ஆவதுன்னு ஏதாவது ஐடியா இருந்தால் அதையும் சேர்த்து எழுதுங்க,இங்கே ஏது போஸ்ட் கார்டு,ஒரு சமயம் ஏர் மெயிலை பார்த்தால் பிரித்து பார்ப்பார்களோ!

  பதிலளிநீக்கு
 2. நண்பர் எஸ்கா இதுபோல பல ட்ரிக்ஸ் வைத்திருக்கிறார்.பத்திரிக்கைகளில் புகழ் பெற நினைப்பவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கும் யோசனை உள்ளது.விருப்பமுள்ளவர்கள் 1000ரூ. அக்கவுண்ட்டில் போட்டுவிட்டு தொடர்பு கொள்ளவும். :-)))

  பதிலளிநீக்கு
 3. உண்மையான வார்த்தைகள், உண்மையான பதிவு..
  கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்
  see,
  http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_21.html

  http://sakthistudycentre.blogspot.com/2011/01/2.html

  பதிலளிநீக்கு
 4. ஹி.ஹி... என் அக்கவுண்ட்ல இல்லீங்க அவரு அக்கவுண்ட்ல..!!

  பதிலளிநீக்கு
 5. //asiya omar சொன்னது…
  நல்ல ஐடியா,பின்னாளில் உபயோகமாகலாம். //

  டாங்க்யூ

  //வெளிநாட்டில் இருந்து எப்படிங்க நம்ம ஊர் பத்திரிக்கையில் எழுதி பாப்புலர் ஆவதுன்னு ஏதாவது ஐடியா இருந்தால் அதையும் சேர்த்து எழுதுங்க //

  ஒண்ணு, ரெண்டு ஐடியா இருக்கு.. கன்ஃபர்ம் பண்ணிட்டு வருகிறேன்..

  // இங்கே ஏது போஸ்ட் கார்டு,ஒரு சமயம் ஏர் மெயிலை பார்த்தால் பிரித்து பார்ப்பார்களோ! //

  பார்ப்பாங்க. ஆனா வாரா வாரம் வருகிற ரெண்டு முட்டையில கலந்து உங்களது வீணா, காணா போயிடும்.. உங்களுக்கு காசு தான் வேஸ்ட்...

  பதிலளிநீக்கு
 6. // சேலம் தேவா சொன்னது…
  நண்பர் எஸ்கா இதுபோல பல ட்ரிக்ஸ் வைத்திருக்கிறார்.பத்திரிக்கைகளில் புகழ் பெற நினைப்பவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கும் யோசனை உள்ளது.விருப்பமுள்ளவர்கள் 1000ரூ. அக்கவுண்ட்டில் போட்டுவிட்டு தொடர்பு கொள்ளவும். :-))) //

  யார் அக்கவுண்டல.. ?

  பதிலளிநீக்கு
 7. // sakthistudycentre-கருன் சொன்னது…
  Good, // நன்றி
  // கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள் //
  கவனிப்புத்தன்மை இல்லீங்க.. இதெல்லாம் பல வருட அனுபவம்..

  பதிலளிநீக்கு
 8. // சேலம் தேவா சொன்னது…
  ஹி.ஹி... என் அக்கவுண்ட்ல இல்லீங்க அவரு அக்கவுண்ட்ல..!! //

  அது மேட்ரு.........

  ஆமாம். அது கிடக்கட்டும். என்னை ஏண்டா சாரு நிவேதிதா மாதிரி ஆக்கிட்ட...........

  பதிலளிநீக்கு
 9. சரி பாஸ் உங்க கம்பெனி மேனேஜர் பதவில இருக்குற நான் உங்க ப்ராடக்ட ஒரு ரூபாய்க்கு விகறேனு சொல்லிட்டு எல்லாத்தையும் நானே என் பினாமி பேர்ல வாங்கி 10 ரூபாய்க்கு விற்றால் மீதி 9 rs எங்க போச்சு பாஸ் --- எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் பாஸ்

  பதிலளிநீக்கு
 10. அது சர்த்தான்... ஸ்பெக்ட்ரம் விஷயத்துல அதான் நடந்திருக்கும்.......

  ஆனா எக்ஸாக்டா........... இப்படி "என்னிடம் உள்ள 1.76 லட்சம் கோடி ருபாய்" போட முடியாதுல்ல...

  பதிலளிநீக்கு
 11. தன்னைபோல் பிறரும் வளரவேண்டும் என எண்ணும் தங்கள் பொன்மனம் வாழ்க!

  பதிலளிநீக்கு
 12. தன்னைப்போல் பிறரும் வளர்ந்தோங்க வேண்டும் என எண்ணும் தங்கள் நல்ல மனம் வாழ்க!

  பதிலளிநீக்கு
 13. 1990-களின் இறுதியிலும், 2000 தொடக்கத்திலும் நானும் அவ்வப்போது குமுதம், விகடன், பாக்யா, இந்தியா டுடே,கல்கி உள்ளிட்ட வெகுஜன இதழ்களில் எழுதி பரிசு பெற்றிருக்கிறேன் . அப்போதெல்லாம் எந்த பத்திரிகையை திறந்தாலும் சிறுகதையோ, ஜோக்கோ, துணுக்கோ சென்னிமலை சி.பி.செந்தில்குமாரின் பெயர் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும். எப்படி இவரு தொடர்ச்சியாக இப்படி எழுதி குவிக்கிறார் என்று வியந்ததுண்டு..... நீங்களும் அப்போது எழுதிய விஷயம் எனக்கு இப்போதுதான் தெரிகிறது கார்த்தி....எப்படியோ...உங்கள் கட்டுரையும், சி.பி.கட்டுரையும் நிறைய எழுத்தாளர்களை உருவாக்கினால் சரிதான்.

  பதிலளிநீக்கு
 14. நல்ல ஐடியாக்கள் நிறையத் தந்துள்ளீர்கள்.
  பின்னூட்டங்களையும்கூட பதிவாகப்
  போடலாம் என்பதுகூட நியூ ஐடியாதான்.

  'பத்திரிக்கை' என்பதை திருத்தி,
  'பத்திரிகை' என்று டைப்புங்கள்.

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 15. //rssairam சொன்னது…
  தங்கள் பொன்மனம் வாழ்க! //

  நன்றி.. முதல் வாழ்த்து சி.பி.எஸ்ஸூக்கு. அடுத்தது என்னை பதிவு போட மறைமுகமாக ஊக்குவித்த தேவாவுக்கு..

  பதிலளிநீக்கு
 16. // சீராசை சேதுபாலா சொன்னது…
  தங்கள் நல்ல மனம் வாழ்க //
  நன்றி.. முதல் வாழ்த்து சி.பி.எஸ்ஸூக்கு. அடுத்தது என்னை பதிவு போட மறைமுகமாக ஊக்குவித்த தேவாவுக்கு..

  பதிலளிநீக்கு
 17. // ரஹீம் கஸாலி சொன்னது…
  எப்படியோ...உங்கள் கட்டுரையும், சி.பி.கட்டுரையும் நிறைய எழுத்தாளர்களை உருவாக்கினால் சரிதான். //

  கஷ்டம் பாஸ்.. நெட்டில் படிக்கும், எழுதும் யாரும் பத்திரிக்கைகளில் பெயர் வர வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். இது வேறு தளம்.. அது வேறு தளம்.. இதில் போதை கண்டவர்கள் அதிலும், அதில் போதை கண்டோர் அதிலுமே மேலேறுவர்.. மேலும் ப்ளாக் எழுதுபவர்கள் பலரும் பெரு நிறுவனங்களில் பணி புரிவோர்.. பத்திரிகைகளில் ஐம்பது ரூபாய் சன்மானம், அதிலும் மேலே சொன்ன அத்தனை முயற்சிகளையும் தாண்டி தான் பத்திரிகைகளில் எழுத முடியும்....

  பதிலளிநீக்கு
 18. // ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…
  நல்லா இருக்கு! //
  நன்றி..

  பதிலளிநீக்கு
 19. // NIZAMUDEEN சொன்னது…//

  வருகைக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 20. உபயோகமான கட்டுரை...
  --
  மதுரை பாண்டி
  http://maduraipandi1984.blogspot.com

  பதிலளிநீக்கு
 21. சேலம் தேவா சொன்னது…
  நண்பர் எஸ்கா இதுபோல பல ட்ரிக்ஸ் வைத்திருக்கிறார்.பத்திரிக்கைகளில் புகழ் பெற நினைப்பவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கும் யோசனை உள்ளது.விருப்பமுள்ளவர்கள் 1000ரூ. அக்கவுண்ட்டில் போட்டுவிட்டு தொடர்பு கொள்ளவும். :-)))


  ha haa haa I KNOW HIM FOR THE PAST 7 YEARS

  பதிலளிநீக்கு
 22. >>>>கஷ்டம் பாஸ்.. நெட்டில் படிக்கும், எழுதும் யாரும் பத்திரிக்கைகளில் பெயர் வர வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். இது வேறு தளம்.. அது வேறு தளம்.. இதில் போதை கண்டவர்கள் அதிலும், அதில் போதை கண்டோர் அதிலுமே மேலேறுவர்.. மேலும் ப்ளாக் எழுதுபவர்கள் பலரும் பெரு நிறுவனங்களில் பணி புரிவோர்.. பத்திரிகைகளில் ஐம்பது ரூபாய் சன்மானம், அதிலும் மேலே சொன்ன அத்தனை முயற்சிகளையும் தாண்டி தான் பத்திரிகைகளில் எழுத முடியும்....


  SUPER LINES.

  பதிலளிநீக்கு
 23. // சி.பி.செந்தில்குமார் சொன்னது…
  விருப்பமுள்ளவர்கள் 1000ரூ. அக்கவுண்ட்டில் போட்டுவிட்டு தொடர்பு கொள்ளவும்.

  ha haa haa I KNOW HIM //

  என்ன சொல்ல வர்றீங்க???

  //ha haa haa I KNOW HIM FOR THE PAST 7 YEARS //

  யாரை? என்னையா பாஸ்? இல்லை தேவாவையா?

  பதிலளிநீக்கு
 24. // சி.பி.செந்தில்குமார் சொன்னது…
  SUPER LINES. //
  நன்றி... நன்றி... நன்றி...

  பதிலளிநீக்கு
 25. நல்ல படைப்பு

  கலக்குங்க. :)

  பதிலளிநீக்கு
 26. நல்ல படைப்பு

  கலக்குங்க. :)

  பதிலளிநீக்கு
 27. இனிய நண்பர் சேலம் எஸ்கா அவர்களே,
  நான் குமுதத்தில் கதை எழுத வந்த விதமே தனி. குமுதம் வாசகனாக இருந்த நான் ஒரே ஒரு கதை எழுதி அனுப்பியிருந்தேன். தொடர்ந்து நான்கு வாரம் ஆவலோடு பிரித்துப்பார்த்து ஏமார்ந்து போனேன்.இரண்டு மாதங்கள் கழிந்து சென்னையிலிருந்து நண்பன் ஃபோன் செய்து உன்னுடைய கதை குமுதத்தில் படித்தேன் என்றான். அப்பொழுது நான் ஆந்திராவில் ஒரு குக்கிராமத்தில் மார்கெட்டிங் வேலையாய் போயிருந்தேன். அங்கு குகுதம் கிடைக்காமல் நான் பட்ட அவஸ்தை கொஞ்சமல்ல, பிறகு ஊர் வந்து கதையைப் படித்ததில் மிகுந்த ம்கிழ்ச்சி அடைந்தேன். குமுதத்தில் கதை எழுதுவது ஒன்றும் பெரிய வித்தையில்லை. அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து ஒரு கருவைப் தேடிப் பிடித்து அதை சமுதாயத்திற்கென்று ஒரு நல்ல மெசேஜ் சொல்வதுபோல முடித்தால் ஒரு பக்க கதை ரெடி. இந்த விஷயத்தை எனது நண்பர் கோவை ந.கி பிரசாத் அவர்களோடு பகிர்ந்து அவரையும் எழுத தூண்டினேன். தற்பொழுது 15 க்கும் மேற்பட்ட கதைகள் எழுதி கலக்கி வருகிறார். நீங்களும் ஜோக் மட்டும் எழுதாமல் கதையும் எழுதுங்கள். நிச்சயம் ஒரு நாள் வெளிவரும்.
  நன்றி
  ஐரேனிபுரம் பால்ராசய்யா

  பதிலளிநீக்கு
 28. நிறைய பயனுள்ள தகவல்கள் கொடுத்திருக்கீங்க.

  நன்றி!

  பதிலளிநீக்கு