ஞாயிறு, 20 மார்ச், 2011

கலவை சாதம் - ஐ யாம் பேக்

ஐ யாம் பேக்

வந்துட்டேன்.. வந்துட்டேன்.. வந்துட்டேன்..

என்ன வந்துட்டேன்..? என்ன பொல்லாத "ஐ யாம் பேக்" ரெண்டு பதிவு போடுவே..? அப்புறம் (என்ன ஃபிலாஸபி பிரபாகரன்? இந்த வார்த்தை தானே?) மறுபடி காணாம போயிடுவ, இதுக்கு என்ன ஐ யாம் பேக் - னு ஒரு தேவையில்லாத பில்ட் அப்... அப்டிதான நினைக்கிறீங்க? சரி, சரி விடுங்க.. நெக்ஸ்ட்டு... அது என்னமோ உண்மை தான், மறுபடி இந்த வாரம் ஆபீஸ் வேலையா கோவா போறோம் (போட்ட திட்டங்கள் கை கூடும் நாள் வந்தது... கோவா.. கோவா.... நல்ல வெள்ளக்கார பிகரா பாத்து செட்டிலாய்ட வேண்டியது தான்) கோவா போறோமே...... போய்ட்டு வந்து எல்லாத்தையும் சொல்றேன் என்ன?

என்ன பெருசா... வழக்கம் போல இயர்லி ரிவ்யூ மீட்டிங், டவுசர கிழிக்கப்பாறாங்க... இதுல என்ன பெருமை... அவனா நீ பதிவை படிக்கும் போதே உன் லட்சணம் எங்களுக்கு தெரிஞ்சு போச்சு, நீ போய் இந்த ரிவ்யூல என்னத்தை கிழிக்கப்போற அப்டிங்கறீங்களா? சரி, சரி, விடுங்க... நாம அடி வாங்கறது ஜகஜம் தானே... சரி, இப்போதைக்கு ஒரு கோட்டு வேணும் எனக்கு. யாராவது எல்ப் பண்றீங்களா? இந்த கோட்டு கம்பல்ஸரின்னு சொல்லியிருக்காங்க, ஆனா என்னாண்ட கோட்டு இல்ல, கல்யாணத்தப்ப தெச்சுக்கலாம்னு விட்டுட்டேன், (அப்டி ஒன்னு நடந்தா ஒலகம் அழிஞ்சுரும்) இப்ப என்ன பண்றதுன்னு தெரியல? சந்தோஷ்கிட்ட கேட்டிருக்கேன். பாக்கலாம்..

வேற யாராவது கலக்கப் போவது யாரு? அசத்தப்போவது யாரு? அசத்தல் மன்னர்கள் யாராவது கோட்டு வாடகைக்குத் தர்றீங்களா? ரெண்டு நாள்தாம்பா... திருப்பி பத்திரமா தந்துடறேன்... அப்புறம் அப்படியே அதை ஃப்ளைட்ல எப்டி மடிக்காம எடுத்துட்டுப்போறதுன்னு யாராவது சொல்லுங்களேன்... சென்னை டு பெங்களூரு, பெங்களூரு டு கோவா. ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

----------------------------------------

"டங் ட்விஸ்டர்" கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழாக்கம் தெரியவில்லை... பொதுவாக எல்லாருக்கும் தெரிந்த ஒன்று இது... "இது யாரு தைச்ச சட்டை எங்க தாத்தா தைச்ச சட்டை". என் பங்குக்கு புதிதாக சாம்பிளுக்கு ஒன்று கீழே.. சொல்லிப்பாருங்கள்.. இதுபோல் சிலவற்றை மனப்பாடம் செய்து அரை டிக்கெட்டுகளிடம் சொல்லிக்காண்பித்தால் நமக்கு ஹீரோ இமேஜ் கொடுப்பார்கள்.

கும்பகோணம் குட்டையாம் பாளையத்தில் குடியிருக்கும் குமரேசனின் குமரன் குமரப்பன், குளத்தில் குளிக்கும் போது குளிக்க வந்த குரங்குக் குட்டியை குச்சியால் குத்தினான். குரங்குக் குட்டி குதித்துக் கூப்பாடு போட்டது.

எப்படி?

----------------------------------------

நேற்று பெங்களூரு டு சேலம் பஸ்ஸில் வரும் போது ஜீவா-வின் டிஷ்யூம் படம் பார்க்க நேர்ந்தது. நைஸ் இல்ல... (விறு விறுவென வளரும்பழம் எந்தன் விரதங்களை வெல்லுதே - ராகுல் நம்பியார்) கூடவே ஈ படமும் சேர்த்து நினைவுக்கு வந்தது.. நல்ல அருமையான, கேஷூவலான நடிப்பு. ஆனால் கொஞ்ச நாளாக ஏன் இப்படி மசாலா பக்கம் (அதுவும் ஒன்றும் உருப்படியாக ஓடுவதாக இல்லை) போய்விட்டார் என்று தெரியவில்லை.. மீண்டும் சில நல்ல படங்கள் (கமர்ஷியலாகவும்) செய்யுமாறு அன்புடன் ஜீவாவை கேட்டுக்கொள்கிறேன்..

----------------------------------------

கடந்த ஜனவரி மாதம் நடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் எடுத்த படங்களை (ராமலக்ஷ்மி அளவுக்கு இல்லாவிட்டாலும்) ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் விஸிட் செய்து பார்க்கலாம் இங்கே...

சிவகுமார் புத்தக வெளியீட்டு விழா, தலைவர் சுஜாதா ஸ்டில்ஸ், மதி கார்ட்டூன் புத்தகங்கள், மனுஷ்ய புத்திரன், பார்த்திபன், நற்றினை (ஸ்பெல்லிங்கைப்பாருங்கள், நற்றிணை இல்லீங்க நற்றினை - போய்ப்பாருங்க தெரியும்), ஜோ மல்லூரி ஸ்டால் இன்னபிற... நான் எடுத்த போட்டோக்கள் ஆதலால் எதிலும் நான் இருக்க மாட்டேன்... டிங் டிங் டிடிங்..

----------------------------------------

வலைச்சரத்தில் (வாரம் ஒரு ஆசிரியர்) தங்களது வாரம் வந்த போது என் பதிவுகளை அறிமுகப்படுத்திய ரஹீம் கஸாலி, மற்றும் ஃபிலாஸபி பிரபாகரன், மற்றும் எஸ்.கே ஆகியோருக்கு நன்றிகள்..

ரஹீம் கஸாலி-யின் பக்கம் இது..

ஃபிலாஸபி பிரபாகரன்-யின் பக்கம் இது..

எஸ்.கே-யின் பக்கம் இது..

----------------------------------------

அப்புறம், ஒரு கோக் சாப்பிடுறீங்களா? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
----------------------------------------


ஆச்சா... படிச்சாச்சா... அப்புறம் என்ன? வழக்கம் போல இன்ட்லியிலும், தமிழ்மணத்திலும் ஓட்டு தான்... கொஞ்சம் போட்டுடுங்களேன்... என்ன? முடிஞ்சா நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்க....

-----------------------------------------

7 கருத்துகள்:

 1. வெல்கம் பேக்னு சொல்லலாம்னு பாத்தா அதுக்குள்ளே கோவா கிளம்பிட்டீங்க....பை பை

  பதிலளிநீக்கு
 2. கலவை சாதம் என்றவுடன் சமையல் குறிப்பாக இருக்குமோன்னு நினைச்சேன்,எஸ்கா என்றவுடன் விஜய் டிவியில் பார்த்து முகம் நினைவு வந்தது,வேற விஷ்யமாக இருக்கும் என்று வந்தேன்,வந்த வேகத்தில் பறக்க போறீங்க,வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. அதேதான்... கொஞ்சம் ஆணி இருந்ததால் வலைச்சரத்தில் உங்களுக்கு பதில் போட முடியவில்லை... அப்புறம் அப்படியே மறந்துவிட்டேன்...

  நீங்கதான் தேஜூ உசேன் என்பதி எப்படி கண்டுபிடித்தேன் என்று கேட்டிருந்தீர்கள்... நீங்க டுவிட்டரில் லிங்கை போஸ்ட் பண்ணப்பவே டவுட் வந்துச்சு... ரஹீம் கசாலி கன்பார்ம் பண்ணிட்டார்...

  பதிலளிநீக்கு
 4. // கலாநேசன் சொன்னது…
  வெல்கம் பேக்னு சொல்லலாம்னு பாத்தா அதுக்குள்ளே கோவா கிளம்பிட்டீங்க....பை பை //

  ஆமாங்க.. பை பை.. ரெண்டு பை தான்.. ஒண்ணு லக்கேஜூக்கு.. ஒண்ணு லேப்புடாப்புக்கு... வரட்டா.. பை பை (இது வேற பை)

  பதிலளிநீக்கு
 5. நல்ல தொகுப்பு.

  //ராமலக்ஷ்மி அளவுக்கு இல்லாவிட்டாலும்)//

  அது சரி:)!

  //டங் ட்விஸ்டர்//

  தாத்தா தச்ச சட்டையே இன்று வரை சரியா சொல்ல முடிந்ததில்லை:)! இந்த புதுசு நல்லாயிருக்கு.

  பதிலளிநீக்கு
 6. // asiya omar சொன்னது…
  கலவை சாதம் என்றவுடன் சமையல் குறிப்பாக இருக்குமோன்னு நினைச்சேன்,//

  சமையல் குறிப்பா... ஆஹா... மேடம்... நாங்கள்லாம் சுடுதண்ணி சூப்பரா வைப்போம் தெரியுமா?

  // எஸ்கா என்றவுடன் விஜய் டிவியில் பார்த்து முகம் நினைவு வந்தது,வேற விஷ்யமாக இருக்கும் என்று வந்தேன்//

  வருகைக்கு நன்றி..

  // வந்த வேகத்தில் பறக்க போறீங்க,வாழ்த்துக்கள். // ஆமாம்.. அதுக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 7. // Philosophy Prabhakaran சொன்னது…
  அதேதான்... கொஞ்சம் ஆணி இருந்ததால் வலைச்சரத்தில் உங்களுக்கு பதில் போட முடியவில்லை... அப்புறம் அப்படியே மறந்துவிட்டேன்... //

  பரவாயில்லை.. நன்றி..

  // நீங்கதான் தேஜூ உசேன் என்பதி எப்படி கண்டுபிடித்தேன் என்று கேட்டிருந்தீர்கள்... நீங்க டுவிட்டரில் லிங்கை போஸ்ட் பண்ணப்பவே டவுட் வந்துச்சு... ரஹீம் கசாலி கன்பார்ம் பண்ணிட்டார்... //

  கஸாலீலீலீலீலீலீ......... பாத்துக்கிறேன் உங்களை...

  கஸாலீ நம்மளை.... நான் யூத்ஃபுல் விகடன்ல எழுதினப்போ இருந்தே ஃபாலோ பண்ணிக்கொண்டு இருக்கிறார்... இப்போ அவர் ப்ளாக் ஆரம்பிச்சு பெரிய ஆள் ஆயிட்டார்....

  பதிலளிநீக்கு