வெள்ளி, 14 ஜனவரி, 2011

புத்தகக் கண்காட்சி, சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், நான், அபி.....

இந்தப் பக்கத்தை சாரு நிவேதிதா தன்னுடைய சாரு ஆன்லைன் டாட் காமில் லிங்க் கொடுத்திருக்கிறார். இதை அங்கே படிக்க............ சாரு ஆன்லைன்.காம்


இந்த முறை சென்னை புத்தகக் கண்காட்சி நடக்கும் போது நான் ஹோசூரில். கடவுளே மிஸ் பண்ணிவிடுவோமோ என்று நினைத்தேன். எப்படியாவது போய்விட வேண்டும் என்றும் ஆசைப்பட்டேன். (பெரிய இது....................... புத்தகக் கண்காட்சிக்கு போய் மட்டும் என்ன கிழிக்கப்போறே.. ஐநூறு ரூபாய்காவது புக்கு வாங்குவியா என்று கேட்டுக்கொண்டிருக்கும் மனசாட்சியை என்ன செய்வது?)

சென்ற வருடம் ஒன்பது முறை போய் வந்தேன். இந்த வருடம் ஒரே முறை. நிறைய புத்தகம் வாங்குகிறோமோ இல்லையோ.. அங்கே ஸ்டால் ஸ்டாலாய் சுற்றும் போது வரும் சந்தோஷம் வேறு எங்கேயும் (எனக்குக்) கிடைக்காது. சேலம் டிஸிஎல் (டிஸ்டிரிக்ட் சென்ட்ரல் லைப்ரரி) யின் ரெஃப்ரன்ஸ் செக்ஷனில் வரும் அதே ஃபீலிங்கு இங்கே கிடைக்கும். அது மட்டுமில்லாமல் இங்கே ஒவ்வொரு முறையும் தவறாமல் சாருவையும், மனுஷ்யபுத்திரனையும் பார்த்து விடுவேன்.

இந்த முறை கம்பேனியில் (ஆமா... பெரிய மன்னார் அன்ட் கம்பேனி............ ரொம்ப அளக்காதடா டேய் என்கிறீர்களா?) சென்னையில் இரண்டாவது ரிவ்யூ மீட்டிங் போட்டார்கள். அங்கே டவுசர் கிழிபட்டதையெல்லாம் பெருமையாய் வெளியில் சொல்லிக்கொள்ள முடியாது. ரிவ்யூ மீட்டிங் முடித்து மறுநாள் தங்கி விட்டேன். பெரியப்பாவிடம் போய் பிட்டைப்போட்டதில் அவர் டோட்டல் ஃபேமிலியையும் கிளப்பிக் கொண்டு புத்தகக் காட்சிக்கு வந்து விட்டார். ஞாயிற்றுக்கிழமை... கூட்டம் அம்மும் என்று சொன்னாலும், பரவாயில்லடா போலாம், விட்டா மிஸ்ஸாயிடும் என்று அழைத்துச்சென்று விட்டார்.

மூன்று டு வீலர்கள். இரண்டு பைக்குகளிலும் இரண்டு ஜோடிகள், ஸ்கூட்டி பெப் எனக்கு. சென்னை தெருக்களில் டூ வீலர் ஒட்டியதே இல்லை நான். ஒரு வழியாய் ஓட்டிக்கொண்டு வந்து அங்கங்கே வழி தெரியாமல் சதீஷ் அண்ணாவை சிக்னல் சிக்னலாய் ஃபாலோ செய்து (லைசென்ஸ் வேறு இல்லை) எப்படியோ சரியாய் போய்ச் சேர்ந்தேன். கேட் வரை ஸேஃபாக வந்தபின்பு அங்கே போய், எனக்கு சைடில் வந்த ஒரு கார்மேல் இடிக்கப்போய் பார்க்கிங்கில் இருந்த செக்யூரிட்டியை போலீஸ் என்று பயந்து, பார்க் செய்ய இடம் கிடைக்காமல் (என் பயில்வான் உடம்பை வைத்துக்கொண்டு) வண்டிகளை அட்ஜஸ்ட் செய்து நகர்த்தி என் ஸ்கூட்டியை பார்க் செய்து (ஸ்ஸ்ஸ்ஸ்....... அப்பா) டயர்டாகி உள்ளே நுழைந்தால் தலைவர் சுஜாதா என்ட்ரன்ஸிலேயே இரண்டு பேனர்களில் புன்னகைத்தபடி இருந்தார். அப்பாடா... வந்த சந்தோஷம் கிடைத்தாயிற்று..


வரிசையாய் இருந்த எல்லா கவுன்டர்களிலும் டிக்கெட் காலி. நானும் ஒவ்வொரு கவுன்டராக ஓடி ஓடிப்போய் பார்த்தேன். ஆனால் கடைசியில் இருந்த ஒரு மூத்திர நாத்த கவுன்டர் ஒன்றில் தான் வாங்க முடிந்தது. அதனுடன் இணைக்கப்பட்ட கூப்பனில் பெயர் எழுதிப்போட்டாயிற்று. ஏதாவது பரிசு (வேறென்ன புத்தகங்கள் தான்) கிடைக்காதா என்று.. நம்பிக்கை தானே வாழ்க்கை. ஆனால் கூப்பன் எழுதிப்போடும் போது என்னோட ராசி நல்ல ராசி பாட்டு ஓடியது என் மன எஃப். எம் மில். கோயமுத்தூர் பிக் பஜாரில் இதே போல் கூப்பன் எழுதிப்போட்டதில் வாஷிங் மிஷின் விழுந்தது பாவாவுக்கு (காசு கொடுத்து பொருள் வாங்கியதென்னவோ நானு - எங்க வீட்டுக்கோழி உங்க வீட்ல முட்டை போட்டா அது எனக்கா உனக்கா?) சரி விடுங்கள், அந்தக் கதையை அப்புறம் சொல்கிறேன். நம்ம பாவா தானே வைத்துக்கொள்ளட்டும். "டேய், உங்க பாவாவுக்கு எழுதிப்போட்ட மாதிரி எனக்கும் கூப்பன்ல பேர் எழுதிப்போடுடா, எனக்கு எதாவது கிடைக்குமா பார்க்கிறேன்" என்றார் பெரியப்பா.


உள்ளே போகும்போது மேடையில் நடிகர் சிவகுமாரின் புத்தகங்கள் வெளியீட்டு விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. தமிழருவி மணியன் பேசிக்கொண்டிருந்தார். "போய் சிவகுமாரை போட்டோ எடுத்துட்டு வாடா" என்றார் பெரியம்மா. "ஓக்கே" என்று பக்கத்தில் போய் மேடையில் இருந்த எல்லாரையும் ரெண்டு மூணு போட்டோ எடுத்துக்கொண்டு வந்தேன். பென் டென், பென் டென் என்று குதித்துக்கொண்டே வந்தான் அபி.

உள்ளே நுழைந்ததும் தினத்தந்தி ஸ்டால்தான். அவர்களின் "வரலாற்றுச் சுவடுகள்" தான் இந்த வருடத்திய டாப் சேல்ஸாம். கியூவில் நின்று வாங்கிக்கொண்டு போகிறார்கள். அப்புறம் சாருவின் தேகமும், நாஞ்சில் நாடனின் "சூடிய பூ சூடற்க"வும், போன வருடம் மாதிரியே இந்த வருடமும் நீயா நானா கோபிநாத்தின் "ப்ளீஸ், இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க"வும் நல்ல சேல்ஸ் என்று சொன்னார்கள். வேறு என்னென்ன புத்தகங்கள் என்று தெரியவில்லை. நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். இன்னும் ரெண்டுமுறை பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன் என்று சொன்னார்கள்.

நான் உயிர்மை ஸ்டாலில் சுஜாதாவுடைய "கணையாழியின் கடைசிப்பக்கங்கள்" வாங்கினேன். ஆட்டோகிராஃப் போடும் போது வாசகரின் பெயரைக்கேட்டு எழுதி கையெழுத்திடுவது மனுஷ்யபுத்திரனின் வழக்கம். போன முறை புத்தகக் கண்காட்சியில் "ஹைக்கூ, ஒரு எளிய அறிமுகம் (சுஜாதா)" புத்தகத்தில் மனுஷ்யபுத்திரனிடம் ஆட்டோகிராஃப் வாங்கினேன். (அப்போதும் சாருவிடம் வாங்கவில்லை) என்று சொன்னேன் ஞாபகம் இருக்கிறதா? (அதைப்பற்றிய பதிவு இது சுஜாதாவும் மனுஷ்ய புத்திரனும் அப்போதும் பெயரைக்கேட்டுதான் ஆட்டோகிராஃப் போட்டார்.

இந்த முறை புத்தகத்தை நீட்டி, குனிந்த படியே உயிரோசையில் கட்டுரைகள் எழுதி வருகிறேன் என்று சொன்னேன். உடனே பளிச்சென்று நிமிர்ந்து பார்த்தார். என்ன பெயர் என்றார்? சொன்னேன். உதட்டில் ஒரு இன்ஸ்டன்ட் புன்னகை உற்பத்தி ஆகியது. ஓ. அது நீங்கள் தானா என்று கேட்டார். உங்க கட்டுரைகளை படிச்சிருக்கேன் (தளத்தின் ஆசிரியராயிற்றே, படிக்காமல் இருப்பாரா?) நல்லா நகைச்சுவையா எழுதுறீங்க என்றார். சீரியஸ் கட்டுரைகள் பற்றிப்பேசவில்லை.

அப்போது சிறிது நேரத்திற்குக் கூட்டம் இல்லை. நான் ஆட்டோகிராஃப் வாங்கிவிட்டு பேசிக்கொண்டிருந்ததைப்பார்த்து "இவர் யார்?" என்று கேட்டது ஒரு ஃபேமிலி. நாற்பத்தைந்து மதிக்கத்தகக்க ஏதோ துபாய் ரிட்டன் ஆட்கள் போல இருந்தார்கள். எனக்கு இவரை கவிஞன் என்று சொல்வதா அல்லது பதிப்பாளன் என்று சொல்வதா என்று ஒரு கணம் தடுமாற்றம் ஏற்பட்டது.

உடனே சொல்வதற்காக இவர் பெயர் மனுஷ்ய புத்திரன் என்றேன். பிறகு ஸ்டாலைக் காண்பித்து அதிலிருந்த அவரது புத்தகம் ஒன்றைக்கைகாட்டி இவர் சமகாலத்திய ஒரு பெரிய கவிஞர் என்றேன். "அப்படியா?" என்றார் அவர். ஆமாம், இந்தப்பதிப்பகம் கூட அவருடையதே. அவரது கவிதைப்புத்தகங்கள் கிடைக்கும், வாங்கிப்படியுங்கள் என்றேன். உள்ளே பிதுங்கிக் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து விட்டு மேலேயும் கீழேயும் தலையை ஆட்டிவிட்டு போய்விட்டது அந்தக் கும்பல். அனேகமாக ஜூஸ் கடையில் மேய்ந்து கொண்டிருப்பார்கள் என்று நினைத்தேன். ஓழியட்டும்.


மனுஷ்ய புத்திரன் போட்டோ எப்படி இருக்கிறது? நானே எடுத்தது..

கொஞ்ச நேரத்தில் அங்கே வந்தார் சாரு... சும்மா ஜிகு ஜிகு என்று இருந்தார். ஒரு ஆரஞ்சு டி.ஷர்ட், காதில் ஒரு கோல்டு ரிங் (அது ரிங்கோ, கடுக்கனோ, கம்மலோ தெரியவில்லை), ப்ளூ ஜீன்ஸ் என்று நினைக்கிறேன். பளபளா, தளதளா என்று இருந்தார். முகம் முழுக்க சிரிப்பு. ஒரு கல்யாண வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டால் வருமே அந்தச் சிரிப்பு. எங்கோ அழககம் (பியூட்டி பார்லர்) போய் ஃபேஷியல் போட்டுக்கொண்டு வந்திருப்பார் போலிருக்கிறது.

உள்ளே சேல்ஸ் பாய்ஸ் (டெம்பரரியாக வேலைக்கு சேர்ந்திருக்கும்) இரண்டு பேர் சாரு கடந்ததைப் பார்த்து விட்ட அவரைப் பற்றி பேசிக்கொண்டார்கள். "டேய், அங்க பாரு. அவர்தான் சார் நிவேதா (அப்படித்தான் உச்சரித்தான் அந்தப்பையன்)", "யாரு அவரு?", "ரைட்டருடா", "ம்?, என்ன சொல்ற?", "பெரிய ரைட்டருடா அந்தாளு, செம சேல்ஸ் ஆவும் அவுரு புக்கெல்லாம், ரொம்ப பேமஸ்", "அப்டியா?", "ஆமாங்கறேன்", "என்னென்ன புக்கு எழுதிருக்காரு?", "அதெல்லாம் எனக்கு தெரியாது."

நானும் அவரிடம் புத்தகத்தில் ஆட்டோகிராஃப் வாங்கலாமா என்று யோசித்தேன். ஆனால் முதலில் மனுஷ்யபுத்திரனிடம் வாங்குவது என்று முடிவு செய்து விட்டேன். வாங்கியபின் சாருவிடம் போனால் என்ன நினைப்பார் என்று சொல்ல முடியாது. மனுஷ்யபுத்திரனின் கையெழுத்துக்குக் கீழே ஆட்டோகிராஃப் போடுவாரா இல்லையா என்று தெரியாது. அல்லது ஆட்டோகிராஃப் போட்டு விட்டு அப்புறம் போய் ப்ளாக்கில் ஏதாவது திட்டினால்?

"புத்தகம் வாங்குபவர்களுக்கு அறிவே இல்லை. யாருமே தத்தாஸ்கி, ஃபூக்கோ படிப்பதே இல்லை, கேரளாவில் எல்லாம் இந்த மாதிரி எழுத்தாளர்களை அவமானப்படுத்த மாட்டார்கள். ஒரே புத்தகத்தில் இரண்டு பேரிடம் கையெழுத்து வாங்கி இரண்டு பேரையும் இன்ஸல்ட் செய்கிறார்கள். இந்த ஹமீது சொன்னால் கேட்கவே மாட்டேனென்கிறார், இந்த மாதிரி என்னை இன்ஸல்ட் செய்வதற்கா நான் புத்தகக் கண்காட்சிக்கு வந்தேன்" என்றெல்லாம் எழுதி விட்டால் என்ன செய்வது என்று பயம் எனக்கு... நம்மைத் திட்டினால் ஒன்றும் பிரச்சினையில்லை. நம்ம பேர் கொஞ்சம் அடிபடும். ஆனால் நம்மால் வீணாக மனுஷ்ய புத்திரன் எதற்கு வம்பில் என்று................... ஸோ.......... சாருவிடம் ஆட்டோகிராஃப் வாங்கவே இல்லை...

கொஞ்ச நேரம் நின்று வேடிக்கை பார்த்து விட்டு மீண்டும் ஸ்டால்களை வேடிக்கை பார்க்கப்போய் விட்டேன். பெரியப்பா போன் செய்து கூப்பிட்டார். "டேய், ஸ்டால் நம்பர் F 3 யில மனுஷ்ய புத்திரனும், பார்த்திபனும் இருக்காங்கடா". நான் "நீங்க இன்னும் முதல் ரோவையே பார்க்கலையா?, நான் ஒரு ரவுண்டு அடிச்சுட்டு கடைசி ரோல ஜிஞ்சர் ஜூஸ் குடிச்சிகிட்டு இருக்கேன்" என்றேன்.


பார்த்திபன்தான்.
பிறகு F 3 க்கு போனால் பார்த்திபனை மொய்த்துக்கொண்டிருந்தது ஒரு கூட்டம். எட்டிப்பார்த்தேன். பழைய மினுமினுப்பு இல்லை. ஆயிரத்தில் ஒருவன் சோழ ராஜா போல ரொம்ப சுருங்கிப்போயிருந்தார் பார்த்திபன். ஆனால் கூட்டம் கணிசமாக இருந்தது. சுமார் முப்பது, நாற்பது பேர் இருக்கலாம். மனுஷ்யபுத்திரன் ஒரு ஓரமாக பரிதாபமாக (ஸாரி, அமைதியாக) வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். "என்ன? போட்டோ எடுக்கணுமா?" என்றேன் பெரியப்பாவிடம். இல்லை வேண்டாம் என்றுவிட்டார்.

அந்தப் பக்கம் சாரு நின்று கொண்டிருந்தார். அப்புறம் மனுஷ்யபுத்திரனும். இருவரிடமும் சமீபகாலமாக கவிஞர் என அறியப்படும் நர்சிம் பேசிக்கொண்டிருந்தார்.

பதிவு ரொம்பப் பெரிதாகப்போகிறது... ஒரு தொடரும் போட்டு விட்டு மீண்டும் தொடர்கிறேன். மணி விடிகாலை ஒன்று... ஜெயாம்மா வாசல் தெளிக்க வந்து விட்டார். போய் கோலம் போட் எல்ப் பண்ணுவோம்....

இதனுடைய தொடர்ச்சியான பதிவு... புத்தகக் கண்காட்சி - ஒரு கண்டுபிடிப்பு, ஒரு காமெடி, ஒரு ஐடியா

-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

25 கருத்துகள்:

 1. இனம் மறந்து இயல் மறந்து
  இருப்பின் நிலைமறந்து
  பொருள் ஈட்டும் போதையிலே
  தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
  நினைவூட்டும் தாயகத் திருநாள்

  உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. எனக்கு இவரை கவிஞன் என்று சொல்வதா அல்லது பதிப்பாளன் என்று சொல்வதா என்று ஒரு கணம் தடுமாற்றம் ஏற்பட்டது

  வியாபாரி என்றே சொல்லியிருக்கலாம்

  பதிலளிநீக்கு
 3. // நிறைய புத்தகம் வாங்குகிறோமோ இல்லையோ.. அங்கே ஸ்டால் ஸ்டாலாய் சுற்றும் போது வரும் சந்தோஷம் வேறு எங்கேயும் (எனக்குக்) கிடைக்காது. //

  எனக்கும் அப்படித்தான்... நான் பக்கத்தில்தான் இருக்கிறேன்... ஒரு எட்டு சொல்லியிருந்தால் ஓடி வந்திருப்பேனே... பதிவுலக நண்பர்களை பார்ப்பதில் விருப்பம் இல்லையா...

  பதிலளிநீக்கு
 4. சாருவின் தேகம் வாங்கலாம் என்று இருக்கிறேன்... முதல்முறையாக சாரு புத்தகம் வாங்க இருக்கிறேன் என்பதால் உங்களிடம் கருத்து கேட்கிறேன்... தேகம் வாங்கலாமா அல்லது வேறு ஏதேனும் புத்தகம் வாங்கட்டுமா...

  பதிலளிநீக்கு
 5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

  என்னுடைய தளத்தில் கருத்துப் பொங்கல் வைத்திருக்கிறேன்... வந்து சுவைத்துப் பார்க்கவும்...
  http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_15.html

  பதிலளிநீக்கு
 6. //@@உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)
  உழவர் திருநாள் வாழ்த்துக்கள்! //
  வாழ்த்துக்களுக்கு நன்றி....

  பதிலளிநீக்கு
 7. // பெயரில்லா சொன்னது…
  வியாபாரி என்றே சொல்லியிருக்கலாம்//

  அப்படியா? எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள்? ஆயினும் இலாபம் என்ற ஒன்று இதில் ரொம்பக் குறைவே... இலாபம் இல்லாவிட்டாலும் நான் இதைத்தான் செய்வேன் என்ற எண்ணம்..............................

  பதிலளிநீக்கு
 8. // Philosophy Prabhakaran சொன்னது…
  நான் பக்கத்தில்தான் இருக்கிறேன்... ஒரு எட்டு சொல்லியிருந்தால் ஓடி வந்திருப்பேனே... பதிவுலக நண்பர்களை பார்ப்பதில் விருப்பம் இல்லையா... //

  அப்படி இல்லை பிரபாகரன்.. நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது.. மேலும் பெரியப்பா ஃபேமிலியுடன் வந்திருந்தேன்... வருத்தமில்லை... எப்படியும் பிப்ரவரியில் டவுசர் கிழிக்கக் கூப்பிடுவார்கள். அப்போது வரும் போது சந்திக்கிறேன்.....

  பதிலளிநீக்கு
 9. // Philosophy Prabhakaran சொன்னது…

  சாருவின் தேகம் வாங்கலாம் என்று இருக்கிறேன்... முதல்முறையாக சாரு புத்தகம் வாங்க இருக்கிறேன் என்பதால் உங்களிடம் கருத்து கேட்கிறேன்... தேகம் வாங்கலாமா அல்லது வேறு ஏதேனும் புத்தகம் வாங்கட்டுமா... //

  என் கருத்து என்னவென்றால் சாருவைப்பொறுத்தவரை கட்டுரைகள் தான் ஸ்பெஷல் கதைகளை விட.. ஆனால் இன்னொன்று.... புத்தகம் படிப்பதில் மட்டும் கருத்துக்கேட்காதீர்கள். படிப்பதற்குக் கோடி புத்தகங்கள் உள்ளன.. ஆளுக்கொன்றை சொல்லி குழப்புவார்கள்.

  என்ன? இதைக்கூட படித்ததில்லையா? என்ன? இதைக்கூட படித்ததில்லையா? என்று கேட்டு சாவடிப்பார்கள். உண்மை என்னவென்றால் அவர்கள் தெரு முக்குக்கடையில் பத்து ரூபாய் கொடுத்து ஒரு பழைய புத்தகத்தை வாங்கிப்படித்து விட்டு என்னமோ உலக இலக்கியம் படித்ததைப்போல அளப்பார்கள். உண்மை என்னவென்றால் அந்தக் கதையை எழுதியவர் தன் வாழ்நாளிலேயே அதை மட்டும் தான் எழுதியிருப்பார். நீங்களோ நானோ ஒரே ஒரு கதையை எழுதிவிட்டு ஒதுங்கி நம் வேலையைப்பார்க்கப்போய்விட்டால் எப்படி இருக்கும். ஆயிரமாயிரம், இலட்சோப இலட்சம் தேறும் அப்படி.. அதனால் தான் சொல்கிறேன். உங்களுக்குப்பிடித்ததைப்படியுங்கள்.

  சாரு என்றால் ஸீரோ டிகிரி வாங்குங்கள். ப்ளஸ் கட்டுரைத்தொகுப்புக்கள்...

  பதிலளிநீக்கு
 10. // தமிழ்ப் பையன் சொன்னது…
  பொங்கல் நல் வாழ்த்துக்கள்... தோழரே... //

  நன்றி... நன்றி... நன்றி... வாழ்த்துக்கள்..

  என்னங்க """பொங்கல் திருநாள் …. வயது வந்தோருக்கு மட்டும் தானுங்க…. 18+"""" இப்படி ஒரு பதிவு போட்டிருக்கீங்க??

  பதிலளிநீக்கு
 11. // Philosophy Prabhakaran சொன்னது…
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

  என்னுடைய தளத்தில் கருத்துப் பொங்கல் வைத்திருக்கிறேன்... வந்து சுவைத்துப் பார்க்கவும்...
  http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_15.html //

  சுவைச்சாச்சு... கருத்தும் சொல்லியாச்சு....

  பதிலளிநீக்கு
 12. // ரஹீம் கஸாலி
  கலக்கல் எஸ்கா...ஆமா போட்டோ எங்கேப்பா? //

  அச்சச்சோ..... நடு ராத்திரி பதிவு போட்டேனா..... அப்படியே தூங்கிட்டேன்... இதோ இப்போ போட்டோவை சேர்த்துடறேன்...

  பதிலளிநீக்கு
 13. ஹலோ பாஸ்......... உங்க கட்டுரையை சாரு அவரோட வெப்சைட்ல லிங்க் கொடுத்திருக்காரு.......... பார்த்தீங்களா????

  பதிலளிநீக்கு
 14. பார்த்தாச்சு பார்த்தாச்சு........ இந்த மாதிரி நடக்குறது இதுதான் முதல் தடவை... என்னப்பா இது? அவரைப்பத்தி கொஞ்சம் நக்கல் அடிச்சு தான் எழுதியிருக்கேன்... அதையும் போய் லிங்க் கொடுத்திருக்காரே...

  பதிலளிநீக்கு
 15. பொங்கல் வாழ்த்துக்கள்! ஒரே புத்தகத்தில் இருவர் கையெழுத்து நிச்சயம் வாங்கலாங்க!! சாரு நிச்சயம் போட்டுத் தந்திருப்பார்..

  பதிலளிநீக்கு
 16. இந்தியா வரவேண்டும் என்ற என் ஆசையில் பிரதான காரணம் இப்புத்தக கண்காட்சி. சென்ற முறையைப் போல இந்த முறையும் முடியாமல் போய்விட்டது. அடுத்த புத்தக கண்காட்சிக்கு நிச்சயமாக வரவேண்டும் என எண்ணியுள்ளேன் பார்ப்போம்... உங்கள் பதிவு சுவாரசியமாக இருந்தது..

  வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 17. // பழூர் கார்த்தி .... சாரு நிச்சயம் போட்டுத் தந்திருப்பார்..//

  அப்படீங்கறீங்க... அப்படியா சாரு? போட்டுத் தந்திருப்பீங்களா?

  பதிலளிநீக்கு
 18. // துயரி சொன்னது…
  இந்தியா வரவேண்டும் என்ற என் ஆசையில் பிரதான காரணம் இப்புத்தக கண்காட்சி. சென்ற முறையைப் போல இந்த முறையும் முடியாமல் போய்விட்டது. அடுத்த புத்தக கண்காட்சிக்கு நிச்சயமாக வரவேண்டும் என எண்ணியுள்ளேன் பார்ப்போம்... உங்கள் பதிவு சுவாரசியமாக இருந்தது.. //

  மிக்க நன்றி... அடுத்த முறை வாருங்கள்.. வரவேற்கிறோம்...

  பதிலளிநீக்கு
 19. // இளைய அப்துல்லாஹ் சொன்னது…
  நல்லாயிருகக்கு லைவ் //
  முதல் முறை வருகைக்கு நன்றி.....

  பதிலளிநீக்கு
 20. சாரு - தமிழ் எழுத்துலக கழிவு. தமிழ் எழுத்தாளர்களில் ஆக கடைந்தெடுத்த கழிவு நீர்.
  கழிவின் மணம் விரும்புவோர் எப்பொழுதும் உளர்

  பதிலளிநீக்கு