ஞாயிறு, 16 ஜனவரி, 2011

நீயா நானா வில் நான்

நான் பங்கேற்ற நீயா? நானா? ஷோ இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) இரவு 9 மணிக்கு விஜய் டி.வி.யில். (ப்ளூ ஷர்ட் - மேலிருந்து இரண்டாவது ரோ கடைசி சீட்) அன்பர்கள் பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள்

தலைப்பு "சிறு வயதில் இருந்தே கதைப்புத்தகங்கள் படித்து வளர்வது நல்லதா? கெட்டதா?" என்பது. ஆனால் இன்றைக்கு டி.வியில் டிரெயிலர் பார்த்தால் "நாவல் படிப்பது நல்லதா? கெட்டதா?" என்று மாறியிருக்கிறது.


ஆக்சுவலி நீயா? நானாவுக்கு நான் பெயர் கொடுத்ததென்னவோ வேறொரு ஷோவுக்காக. ஆனால் திடீரென்று ஒரு வெள்ளிக்கிழமை (அன்றைக்கு டீம் பசங்களுக்கு ஒரு டிரெயினிங் செஷன் போய்க்கொண்டிருந்து) வந்த கால், நீங்கள் கதைப் புத்தகங்கள் படிப்பது உண்டா என்று கேள்வி கேட்க ஆரம்பித்தது. சுமார் பத்து நிமிடங்கள் ஒரு சின்ன இன்டர்வியூ எடுத்தார்கள். பிறகு "நாளைக்கே சென்னையில் ஷூட்டிங் என்றால் உங்களால் உடனடியாக வர முடியுமா?" என்றார்கள். ஓக்கே சொல்லிவிட்டேன்.

மறுநாள் மூன்று மணிக்கு ஷூட்டிங் மதியம் இரண்டரை மணிக்கே வடபழனி செந்தில் ஸ்டூடியோவுக்கு வந்து விடுங்கள் என்றார்கள். சரி என்று சொல்லிவிட்டு அன்று இரவே பஸ் ஏறி விட்டேன். பெரியப்பா வீட்டில் போய் தங்கி விட்டேன். பெரியப்பாவே டிராப் செய்கிறேன் என்று சொன்னார். நான் இரண்டரைக்கெல்லாம் போகவில்லை. மூன்று மணிக்கு தான் போனேன். நாங்கள் போன போது யூனிட்டே உணவருந்திக் கொண்டிருந்தது. வருபவர்களை எல்லாம் கூப்பிட்டு கூப்பிட்டு "சாப்பிட்டீங்களா?" "சாப்பிட்டீங்களா?" என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

செந்தில் ஸ்டூடியோவில் ஒரே ஒரு அரங்கம் - அட்டை, தகரம் எல்லாம் போட்டு. இந்தப்பக்கம் பாதி நீயா நானாவுக்கான ஷூட்டிங் செட். அந்தப் பக்கம் மொட்டை சுரேஷின் காதல் மீட்டர் ஷூட்டிங்குக்கான செட். நீயா? நானா ஷூட்டிங் நடந்தால் கேமரா, யூனிட் ஆட்கள் எல்லாம் காதல் மீட்டர் செட்டின் மேல் உட்கார்ந்திருக்கிறார்கள். காதல் மீட்டர் ஷூட்டிங் நடந்தால் அப்படியே முழு யூனிட்டையும் மாற்றி நீயா? நானா? செட்டின் மேல் உட்கார வைத்து ஷூட் செய்கிறார்கள். காதல் மீட்டரில் ஜோடிகள் நின்று விளையாடும் அந்த ரவுண்டான பலகையின் மீது அமர்ந்துதான் ஸ்டார்ட், கட், எடிட்டிங்க கரெக்ஷன் எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார் ஆன்டனி.

ஒரு பெரிய டீமே வேலை செய்து கொண்டிருந்தது. அதில் முக்கியமாய் பார்ட்டிசிபேன்ட்ஸை ஆர்கனைஸ் செய்து கொண்டிருந்தது ஜோதி, மஞ்சு என்ற இரண்டு பேர். அந்த அட்டை, கண்ணாடி செட்டின் மேல் ஏறி யாரும் உடைத்து விடாமல் பார்த்துக்கொண்டு, (அந்த சிகப்பு நிற) பள்ளத்தில் விழுந்த ஒரு கிழவியை தூக்கி விட்டு, பார்ட்டிசிபேன்ட்ஸ் எல்லாருக்கும் பொறுமையாய் பதில் சொல்லி, சேர் அரேஞ்ச்மென்ட்ஸ் செய்து....... புன்சிரிப்பும் கொஞ்சம் கலந்து...... எல்லா டென்ஷனையும் மனதுக்குள்ளேய வைத்து ஆடியன்ஸிடம் காட்டாமல் வேலை செய்தார்கள்.

இரவு ஷோவின் ஷூட்டிங் முடிந்து கிளம்பும் முன் ஜோதியிடம் போய் "மறுபடியும் நீயா, நானா வரணும்னா?" வாக்கியம் முடிக்கும் முன் "ஒன் இயர் ஆகும்..." என்றார், "வாட்? எஸ், அட் லீஸ்ட் நைன் மன்த்ஸாவது ஆகும். வீ டோன்ட் வான்ட் ரிபீட்ட் ஃபேஸஸ்". அதையும் புண்படாமல் எல்லாரிடமும் பொறுமையாய் ஒரு ஸ்மைலுடன் சொல்ல பெரிய மனசு வேண்டும். கிளம்பி வரும் போது ஜோதியையும், மஞ்சுவையும் எனக்கு ரொம்ப பிடித்துப்போயிற்று.

அப்புறம் அவர்களுக்கு அஸிஸ்ட் செய்யும் செல்வா. அவர் சென்னையில் எதோ ஒரு காலேஜில் விஸ்காம் படித்துக்கொண்டிருக்கிறாராம். இரண்டு மாதம் இன்டர்ன்ஷிப் - காக வந்திருக்கிறாராம். திரும்ப காலேஜ் போய் விடுவாராம். விருப்பம் இருந்தால் படிப்பை முடித்து விட்டு திரும்ப வந்து கூட இணைந்து கொள்ளலாமாம். அங்கே தலையை விரித்துப்போட்டு சுற்றிக்கொண்டிருந்த ஒருவரைக்காட்டினார். “அவர் எங்க சீனியர் தாங்க. என்னை மாதிரியே இன்டர்ன்ஷிப்புக்காக வந்திருந்தார். கோர்ஸ் முடிச்சுட்டு திரும்ப வந்து நிருபரா ஜாய்ன் பண்ணிட்டார்” என்றார்.

ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன் அவரைத்தான் நடு மேடையில் நிறுத்தினார்கள் கேமரா பொஸிஷன் பார்க்க... "செல்வா....... நடுவுல வந்து நில்லு... பார்ட்டிசிபேன்ட்ஸ்..... க்ளாப்... ஒரு நிமிடம்.. கைதட்டல் ஸ்லோவாக...... க்ளாப்ஸ் அகெய்ன், எல்லாரும் நடுவுல நிக்கிறவரைப்பாருங்க... ரெண்டு நிமிடம்....... க்ளாப்ஸ் ப்ளீஸ்..... செல்வா இங்க பாரு... கேமரா த்ரீ...... ஜிம்மி ஜிப்பை பார்க்காத... எல்லாரும் நடுவுல நிக்கிறவரையே பாருங்க... க்ளாப்ஸ் ப்ளீஸ்...... க்ளாப்ஸ் வித் ஸ்மைல்........" புரிகிறதா?

அதாகப்பட்டது நீங்கள் நீயா? நானா? (அல்லது சாலமன் பாப்பையா பட்டிமன்றம்) வை டி.வியில் பார்க்கும் போது நடு நடுவே ஆடியன்ஸ் கைதட்டுவது, சிரிப்பதை எல்லாம் காண்பிக்கிறார்கள் அல்லவா? (குறிப்பாக சன் டிவியில் கலாநிதி மாறனை காண்பிக்கும் போதெல்லாம் ஆடியன்ஸ் கைதட்டல் கிழிக்குமே) அதையெல்லாம் இப்படித்தான் முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொண்டு எடிட்டிங்கில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

இரண்டு மணி நேரம் ஒளிபரப்பாகவிருக்கும் ஷோவுக்கு.. நாலு மணி நேரம் ஷூட்டிங். நான் பேசியதெல்லாம் எடிட்டிங், கட்டிங், வெட்டிங், ஒட்டிங் எல்லாம் போக மிச்சம், மீதி ஏதாவது இருந்தால் வரும். நாங்கள் போன அன்று எங்கள் ஷோவுக்கு மட்டும் என்ன கஷ்டமோ தெரியவில்லை. இரண்டு பக்கமும் ஆள் பற்றாக்குறை. இரண்டு டீமிலும் அவர்கள் யூனிட் ஆட்கள் இரண்டிரண்டு பேர் அமர வைக்கப்பட்டார்கள். ஷோ சென்சிடிவ்வாக போக வேண்டும் என்பது தான் ஒரே மோட்டோ..

பங்கேற்பவர்கள் ஷோவை பற்ற வைக்கவில்லையென்றால் அவர்களின் யூனிட் ஆட்கள் அதைச்செய்வார்கள். ப்ளூ ஸ்டிரைப்ட டீ ஷர்ட் காரர் ஒருத்தர் எங்கள் டீமில் கீழ் ரோவில் இருப்பார் பாருங்கள். அது அவர்கள் ஆள். திகுதிகுவென்று முழுதாகப் பற்ற வைத்தார். எதிர் டீமில் ஒரு நாற்பது வயது அப்பா கேரக்டருக்கும அவருக்கும் சரியான சண்டை.

இந்த கேப்பில் பெரியப்பா என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். ஆள் பற்றாக்குறையால் நான் அந்த அம்மணியிடம் ஆரம்பத்தில் இருந்தே நச்சு நச்சென்று நச்சிக் கொண்டிருந்ததில் என் பார்வையையே தவிர்க்க ஆரம்பித்து விட்டார் அவர். அப்புறம் ஒரு வழியாய் ஸ்பெஷல் சிபாரிசின் பேரில் அவரை கூப்பிட்டு ஷோவில் உட்கார வைத்தாயிற்று... "வெரி குட்" என்று பாராட்டியபடியே ஸ்டேஜ் ஏறி வந்தார் என் பெரியப்பா. (ம்ம்ம்...... இன்னும் ஒரு வருஷத்துக்குத் தாங்கும்)

ஷூட்டிங்குக்கு உட்கார வைக்கும் போதே ஒரே களேபரம் தான். அந்த ரெட் சுடிதாரோட பிரவுன் ஷர்ட் க்ளாஷ் ஆகுது. ஏய், அந்த ப்ளூ ஷர்ட்டை (நான் தான்) த் தூக்கி நடுப்புற போடுப்பா.. கேமரா டூ...... ஆங்கிள் பாரு... "செட்டாகலை சார்" ரோ ஒன், ரோ டூவுல வயசானவங்களா அஞ்சு பேர் உட்கார்ந்திருக்காங்க பாரு. அவங்களுக்கு நடுப்புற அந்த ப்ளூ ஷர்ட்டைத் தூக்கிப்போடு.. "சார், இங்க வாங்க". கேமரா ஃபைவ் முறைத்தது. மஞ்சு ஓடி வந்து ப்ளூ ஷர்ட்டுக்கும் பக்கத்துல இருக்குற லேடியோட க்ரீன் ஜாக்கெட்டுக்கும் க்ளாஷ் ஆகுது சார்.

"நான் வேணா சட்டையைக் கழட்டிட்டு பனியனோட வந்து உக்காரவா?"

"சாரி சார்" அப்படி இப்படி என்று ஒரு வழியாக என்னை நாலு இடம் மாற்றி மேலிருந்து இரண்டாவது ரோவில் வலது கடைசியில் தூக்கி உட்கார வைத்தார்கள். என்னருகில் ஒரு சாணி கலர் சபாரி சட்டைக்காரர்.

நியாயமாக எனக்கு சஃபாரியும் பிடிக்காது, சஃபாரி போடுபவர்களையும் பிடிக்காது. ஆனால் என் பக்கத்திலேயே பொறுமையாக அமர்ந்திருந்த அந்த சபாரி சட்டைக்காரரைப்பார்த்தால் ரொம்பவும் பரிதாபமாக இருந்ததது. ஷோவில் மனுஷன் பேசியது அதிகபட்சம் இரண்டு வரி இருக்கலாம்.. பாவம் அந்த சபாரி சட்டைக்காரர், அவர் திருநெல்வேலியில் இருந்து பஸ் பிடித்து வருகிறாராம். “வருஷா வருஷம் கூப்பிடுறாங்க சார். நானும் பஸ் பிடிச்சி வருவேன். அதிகம் பேசல்லாம் மைக் கிடைக்காது”

அன்றைக்கு ஒரே நாளில் மட்டும் மூன்று ஷோக்களுக்கான ஷூட்டிங் நடந்தது. எங்களது ஒன்று. மற்றொன்று டைம் மேனேஜ்மெண்ட் பற்றி. மூன்றாவது ஷோ கணவன் மனைவி பற்றிய ஷோவாம். டைம் மேனேஜ்மெண்ட் சென்ற ஜனவரி ஒன்றாம் தேதி ஒளிபரப்பாகியது. கணவன் மனைவி பற்றிய ஷோ ஜனவரி 2ம் தேதி. எங்களது ஷோ நார்மல் ஸ்லாட்டிற்காக. இதுதவிர முந்தைய நாள் ஒரு ஷோ டைரக்டர்ஸ் ஸ்பெஷலாம். அது அப்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஃபிலிம் ஃபஸ்டிவெலுக்காக பதிவு செய்யப் பட்டதாம். அது ஒளிபரப்பானது நியூ இயர் ஸ்பெஷலில்.


டைரக்டர் ஆன்டனி பற்றி சாரு மூலமாகவும், அங்கங்கே கிசுகிசு பாணியிலான நியூஸ்கள் மூலமும் கொஞ்சம் கொஞ்சம் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அன்று தான் முதலில் பார்த்தேன். ஒரே நேரத்தில் ஆறு ஷோக்கள் செய்ததாகவும் அனைத்துமே ஹிட் என்றும் சொன்னார். கதையல்ல நிஜம், இப்படிக்கு ரோஸ் உட்பட. கோபிநாத் வெறும் பொம்மை. நடிகர். அவ்வளவு தான். ஷோ ப்ரேக் விட்டால் அடுத்த நொடி விடு ஜூட் தான். மேக்கப் ரூமில் போய் ஒளிந்து கொள்கிறார்.

கோபியின் இடது காதில் ஒரு சிறிய மைக்ரோபோன் இருக்கும். அதற்கு ஆன்டனியின் ஹேண்ட் மைக் மூலம் கட்டளைகள் போகின்றன. மைக்கை அந்த யெல்லோ சுடிதார் கிட்டே கொடு, அந்த ப்ளூ ஷர்ட், அந்த ரெட் ஸாரிகிட்ட என்று இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பறக்கின்றன. "வாவ்" சொல்லு.. "நீங்க ஏன் நாவல் படிக்கறதில்லை? லவ்வுங்கற விஷயம் உங்களை பாதிச்சுடுமா? திரும்பவும் கேளு, திரும்பவும் கேளு.." ரெண்டு பேர் சண்டை போடும் போது "அப்படியே விட்டுடு, விடு, விடு இன்னும் கொஞ்சம் ஹாட் ஆகட்டும், ம்... ம்... இப்போ கூல் பண்ணு" என்றவுடன் கோபி ஓடி வந்து "ஹேய்.. ஹேய்.. ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.. " என்று ஆஃப் செய்கிறார். இந்த ஷோ முழுக்க முழுக்க முன்பே கட்டமைக்கப்படுகிற ஒன்று. முன்பே ப்ளான் செய்யப்பட்ட, சரியாக வழிநடத்தப்படுகிற ஒரு தேர்ந்த நாடகம்..


அன்றைய ஸ்பெஷல் கெஸ்ட் யார் தெரியுமா? எஸ். ரா.. புத்தகங்கள் என்ற தலைப்பு இருப்பதனால் சாரு நிவேதிதா அல்லது எஸ்.ராமகிருஷ்ணன்தான் அழைக்கப்படுவார்கள் என்று நினைத்திருந்தேன். அதே போல் எஸ்.ரா வந்தார். மேக்கப் எல்லாம் போட்டுவிட்டார்கள் அவருக்கு. மனிதர் வந்தவுடன் விசில், கைதட்டல் பறந்தது எங்கள் டீமில் இருந்து. வேறு யார்? நானும் என் பின்னால் அமர்ந்திருக்கும் அருள் என்ற சிவப்பு சட்டைப்பையனும் தான். சிறந்த பத்து புத்தகங்கள் அல்லது சிறந்த பத்து ஆசிரியர்களைச் சொல்லுங்கள் என்று கோபி கேட்டவுடன் கடகடவென்று சொல்ல ஆரம்பித்து விட்டார். ப.சிங்காரத்தையும் (புயலிலே ஒரு தோணி), ஹெப்சிபா ஜேசுதாசனையும் (புத்தம் வீடு) சொல்வார் என்று நினைத்தேன். சரியாக அவர்கள் இருவரையும் குறிப்பிட்டார்.

ஓக்கே... ரொம்பவும் நீளமாகப்போகிறது... இந்த ஷோவில் விவாதிக்கப்பட்ட விஷயத்தைச் சொல்ல அவசியமில்லை. டி.வியில் பாருங்கள். எனக்கு வீடியோ கிடைத்தால் யூ ட்யூபில் அப்லோட் செய்து லிங்க் தருகிறேன்.

கதை படிப்பதுங்கறதே ஒரு போதை மாதிரி ஆயிடுச்சே சார் என்றார் எதர் பக்கததில் இருந்த ஒருவர். சரியாக என்னிடம் அந்த நேரம் வந்தது மைக். "சார், போதைங்கறது ஒரு சுகமான போதையா இருந்தா அதை சந்தோஷமா அனுபவிக்கலாமே" என்றேன். அந்த லைன் தான் டிரெயிலரில் ஓடியதாம். நண்பர்களும், உறவினர்களும் பார்த்து விட்டு போன் செய்தார்கள்.

ஷோவில் எங்கள் டீமிடம் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரங்கள் யார்? என்ற கேள்விக்கு கடவுளும் கந்தசாமி பிள்ளையும் கதையில் வருகிற கந்தசாமி பிள்ளை கேரக்டரும், சமகால சரித்திர நாவலான "காந்தளூர் வசந்த குமாரன் கதை"யின் கணேச பட்டரும் எனது ஃபேவரைட் என்று சொன்னேன்.

நீயா நானா குறித்து நான் இதற்கு முன்பு எழுதிய மற்ற இரண்டு பதிவுகள் இதோ...

நீயா நானா?, ஜெயமோகன் மற்றும் சாரு

நீயா, நானா, சுதந்திர தினம், நித்தி, ஜக்கி, விகடன்

-------------------------------------
இனிமேல் டிவி புகழ் ஏ.எஸ்.ஜி மேனேஜர் என்று தான் அடைமொழி போட வேண்டும் என்று பசங்களிடம் சொல்லி விட்டேன். அதே மாதிரி பொண்ணு பார்க்கும் போதும் "விஜய் டிவி புகழ்" என்று ஞாதகத்தில் சேர்க்கச் சொல்லியிருக்கிறேன். வீட்டில் முன்னால் மாட்டுவதற்கு ஒரு மர போர்டு வேறு செய்து வைத்திருக்கிறேன். கடவுளே, நிறைய எடிட்டிங்கில் போகாமல் இருக்க வேண்டும்.

ஜனவரி பதினாறாம் தேதி அதாவது நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு டெலிகாஸ்ட் ஆகிறது. அன்பர்கள் பார்த்து விட்டு கருத்துக்கூறவும். டார்க் ப்ளூ ஷர்ட் போட்டுக்கொண்டு கோபிக்கு வலது பக்க டீமில் மேலிருந்து இரண்டாவது ரோ கடைசி சீட்டில் அமர்ந்திருந்தேன்...

-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

58 கருத்துகள்:

 1. நன்றி... பார்த்து விட்டு வந்து பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 2. என்ன சார்? என்னென்னமோ சொல்றீங்க?

  பதிலளிநீக்கு
 3. தொடர்ந்து பார்க்கும் நிகழச்சியில் இதுவும் ஓன்று,நிச்சயம் பார்க்கணும்.ஆகா,இப்படி புட்டு புட்டு வச்சிட்டீங்களே,கொஞ்சம் நிகழ்ச்சி மீது இண்ட்ரெஸ்ட் குறையுது.

  பதிலளிநீக்கு
 4. நீயா நானா மட்டுமல்ல, அனைத்து விஜய் டிவி so called reality showsம் மிகச்சரியாகத் திட்டமிடப்பட்டு, திரைக்கதை தயாரிக்கப்பட்டு நடத்தப்படும் நாடகம்தான்னு super singer junior சமயத்துலே தெரிஞ்சுப்போச்சு. மக்கள்ஸ்தான் இன்னும் பிடிவாதமா இதையெல்லாம் நம்பிட்டிருக்காங்க.

  பதிலளிநீக்கு
 5. பிரபல நீயா நானா புகழ் எஸ்கா என்னும் எஸ். கார்த்தி வாழ்க....
  விஜய் டி.வி. புகழ் கார்த்தி வாழ்க....(போதுமா எஸ்கா. கொடுத்த காசுக்கு மேலே கூவிட்டேன். ஏதாவது பார்த்து போட்டுகொடுப்பா....)

  பதிலளிநீக்கு
 6. உங்களின் முன்னோட்டம் அருமையா இருக்கு எஸ்கா. இன்னிக்கு நீயா நானா பார்த்துட வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 7. உங்களின் முன்னோட்டம் அருமையா இருக்கு எஸ்கா. இன்னிக்கு நீயா நானா பார்த்துட வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 8. பொண்ணுவீட்டுக்காரங்களுக்கு போட்ட பதிவு மாதிரியே தெரியுதுரா நண்பா..!! வாழ்த்துகள் டிவி புகழ் ஆயிட்ட..!! :-))

  பதிலளிநீக்கு
 9. // பெயரில்லா சொன்னது…
  என்ன சார்? என்னென்னமோ சொல்றீங்க? //

  என்னென்னமோ இல்லீங்க. நடந்ததைச் சொல்றேன்.. (உண்மையைச்சொல்றேன்.. ஹா.. ஹா.. ஹா.. )

  பதிலளிநீக்கு
 10. // Maduraimalli சொன்னது…
  yaaru sir ithu vayashaana karunash mathiri?? //

  அவருதாங்கோ ஆன்டணி.......... நீயா? நானாவோட டைர டக்கரு...

  பதிலளிநீக்கு
 11. // asiya omar சொன்னது…
  தொடர்ந்து பார்க்கும் நிகழச்சியில் இதுவும் ஓன்று,நிச்சயம் பார்க்கணும்.ஆகா,இப்படி புட்டு புட்டு வச்சிட்டீங்களே,கொஞ்சம் நிகழ்ச்சி மீது இண்ட்ரெஸ்ட் குறையுது. //

  சாரு ப்ளாக்கை படிப்பீங்களா? அவரு இதை விடக் கேவலமா கிழி கிழி ன்னு கிழிச்சிருக்காரு. நான் ஒரே ஒரு தடவை போனதுனால கொஞ்சமா சொல்லிருக்கேன்.

  பதிலளிநீக்கு
 12. // Denzil சொன்னது…
  மக்கள்ஸ்தான் இன்னும் பிடிவாதமா இதையெல்லாம் நம்பிட்டிருக்காங்க. //

  கண்டிப்பாக........ ஆனால் சன், கலைஞர், ஜெயா, ராஜ் வகையறா டி.விக்களை கம்பேர் செய்யும் போது விஜய் எவ்வளவோ தேவலை தானே...

  பதிலளிநீக்கு
 13. // MANO நாஞ்சில் மனோ சொன்னது…
  அருமையா இருக்கு..... //

  நன்றி...... நீயா? நானா?வா? கட்டுரையா?

  பதிலளிநீக்கு
 14. // ரஹீம் கஸாலி சொன்னது…
  பிரபல நீயா நானா புகழ் எஸ்கா என்னும் எஸ். கார்த்தி வாழ்க....
  விஜய் டி.வி. புகழ் கார்த்தி வாழ்க....(போதுமா எஸ்கா. கொடுத்த காசுக்கு மேலே கூவிட்டேன். ஏதாவது பார்த்து போட்டுகொடுப்பா....) //

  ஹே... ஹே... நன்றி......... கஸாலி ஃப்ரம் ரஹீம்........ விஜய் டி,வி புகழ் கார்த்தி வாழ்க... ஹை..... நல்லா இருக்கு இல்ல..... (ஏதோ ஒரு அல்ப சந்தோஷம் - விடுங்கப்பா திட்டாதீங்க)

  பதிலளிநீக்கு
 15. // ரஹீம் கஸாலி சொன்னது…
  இன்னிக்கு நீயா நானா பார்த்துட வேண்டியதுதான். //

  அங்கே நீயா? நானா? வருதா என்ன?

  பதிலளிநீக்கு
 16. // சேலம் தேவா சொன்னது…
  பொண்ணுவீட்டுக்காரங்களுக்கு போட்ட பதிவு மாதிரியே தெரியுதுரா நண்பா..!! வாழ்த்துகள் டிவி புகழ் ஆயிட்ட..!! :-)) //

  டேய் அங்கிள்.. கல்யாணம் ஆயிடுச்சுங்கிற திமிர்ல பேசாதடா......... எந்த பொண்ணு வீட்டுக்காரன் டி.வி பார்த்து மாப்ள பாக்குறான்?

  பதிலளிநீக்கு
 17. இன்னிக்கு நீயா நானா பார்த்துட வேண்டியதுதான்.
  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 18. கண்டிப்பா பார்த்துட்டு சொல்றேன். உங்க பதிவுல எக்கச் சக்கமாக ஆங்கில வார்த்தைகளை உபயோகப் படுத்தியிருக்கிறீர்கள், சிலது அன்றாட உபயோகத்தில் இருப்பவை, தவிர்க்க முடியாதவை,பரவாயில்லை, பலது அப்படியில்லை, அவற்றை தவிர்க்கலாம். [ஆக்சுவலி, ப்ளூ ஷர்ட் - மேலிருந்து இரண்டாவது ரோ கடைசி சீட், டிரெயினிங் செ ஷன், ...பெரியப்பாவே டிராப் செய்கிறேன்...,...அதில் முக்கியமாய் பார்ட்டிசிபேன்ட்ஸை ஆர்கனைஸ் செய்து கொண்டிருந்தது... ,அஸிஸ்ட் செய்யும் செல்வா...etc.,].

  பதிலளிநீக்கு
 19. // கிளம்பி வரும் போது ஜோதியையும், மஞ்சுவையும் எனக்கு ரொம்ப பிடித்துப்போயிற்று.// அவ்வளவுதானா?

  பதிலளிநீக்கு
 20. //அதாகப்பட்டது நீங்கள் நீயா? நானா? (அல்லது சாலமன் பாப்பையா பட்டிமன்றம்) வை டி.வியில் பார்க்கும் போது நடு நடுவே ஆடியன்ஸ் கைதட்டுவது, சிரிப்பதை எல்லாம் காண்பிக்கிறார்கள் அல்லவா?// இந்த மாதிரி வேலையை இத்துப் போன Sun டிவிக்காரன்தான் பண்ணுவான். நீயா நானாவைப் பொறுத்தவரை நீங்கள் சொன்னது நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது பயன்படுத்துவார்கள், மற்ற சமயத்தில் தானாகவே அவர்கள் கரவொலி செய்வதைத் தான் காட்டுவார்கள். நிகழ்ச்சி தொடர்ச்சியாக வருவதை (continuity) நீங்கள் இதைக் கண்டு பிடித்து விடலாம். நீங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அப்படி பொய்யாக காண்பித்திருந்தால் பார்த்துவிட்டு சுட்டிக் காட்டவும்.

  பதிலளிநீக்கு
 21. //ஆள் பற்றாக்குறையால் நான் அந்த அம்மணியிடம் ஆரம்பத்தில் இருந்தே நச்சு நச்சென்று நச்சிக் கொண்டிருந்ததில் என் பார்வையையே தவிர்க்க ஆரம்பித்து விட்டார் அவர்.// எந்த அம்மணி, புரியலையே?

  பதிலளிநீக்கு
 22. \\கோபிநாத் வெறும் பொம்மை. நடிகர். \\ கோபிநாத்தை எடுத்து விட்டு வேறு யாரையாவது போட்டு நிகழ்ச்சியை இதே சுவராஸ்யத்தோடு தயாரிப்பாளர் செய்து காட்டட்டும், ஒப்புக் கொள்ளலாம். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பவர்கள் அத்தனை பேரைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பாது கடினம், அந்த தகவல்களை ஒருவேளை அவர்கள்
  காதிலிருக்கும் ஒலிப்பான் [mike] மூலம் கொடுக்கலாம், மற்றபடி கோபிநாத் கேள்விகள் கேட்பதில் கெட்டிக்காரர்தான். அவர் எல்லா அரசியல் தலைவர்களையும் குடைந்து பேட்டியெடுத்த "மக்கள் யார் பக்கம்" நிகழ்ச்சி Sun TV யின் நிகழ்சிகளையே தூக்கியடிக்க ஆரம்பித்தது, ஆடிப் போன மாறன்கள் மிரட்டி அந்த நிகழ்ச்சியையே நிறுத்தும் படிச் செய்தார்கள். மேலும் நீயா நானாவிலும், அவ்வப்போது கோபிநாத் விடும் சமயதிற்க்கேற்ற தமாஷ் [cutting Timing Jokes ] மிகவும் நன்றாக இருக்கும். அவரை விட்டு வேறு யாராலும் அந்த நிகழ்ச்சியை இவ்வளவு பிரசித்தி பெற்றதாக்க முடியுமா என்பது சந்தேகமே.

  பதிலளிநீக்கு
 23. ///ஷூட்டிங்குக்கு உட்கார வைக்கும் போதே ஒரே களேபரம் தான். அந்த ரெட் சுடிதாரோட பிரவுன் ஷர்ட் க்ளாஷ் ஆகுது. ஏய், அந்த ப்ளூ ஷர்ட்டை (நான் தான்) த் தூக்கி நடுப்புற போடுப்பா.. கேமரா டூ...... ஆங்கிள் பாரு... "செட்டாகலை சார்" ரோ ஒன், ரோ டூவுல வயசானவங்களா அஞ்சு பேர் உட்கார்ந்திருக்காங்க பாரு. அவங்களுக்கு நடுப்புற அந்த ப்ளூ ஷர்ட்டைத் தூக்கிப்போடு.. "சார், இங்க வாங்க". கேமரா ஃபைவ் முறைத்தது. மஞ்சு ஓடி வந்து ப்ளூ ஷர்ட்டுக்கும் பக்கத்துல இருக்குற லேடியோட க்ரீன் ஜாக்கெட்டுக்கும் க்ளாஷ் ஆகுது சார்.// இதெல்லாம் முக்கியம் சார், இப்படி சரி செய்யாம எடுத்தா நிகழ்ச்சி பார்பதற்க்கே கொடுமையை இருக்கும். அனுபவத்தில் தான் இவற்றை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள், குறை சொல்ல வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 24. //எனக்கு வீடியோ கிடைத்தால் யூ ட்யூபில் அப்லோட் செய்து லிங்க் தருகிறேன்.// ஏற்கனவே இருக்கிறது, அந்த கஷ்டம் உங்களுக்கு வேண்டாமே?
  http://www.techsatish.net/2010/04/tv-shows-index.html

  பதிலளிநீக்கு
 25. //புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...// Done!

  பதிலளிநீக்கு
 26. // Jayadev Das சொன்னது…
  கண்டிப்பா பார்த்துட்டு சொல்றேன். உங்க பதிவுல எக்கச் சக்கமாக ஆங்கில வார்த்தைகளை உபயோகப் படுத்தியிருக்கிறீர்கள், //

  சரி......... அதனால?? எனி ப்ராப்ளம்??

  // கிளம்பி வரும் போது ஜோதியையும், மஞ்சுவையும் எனக்கு ரொம்ப பிடித்துப்போயிற்று.// அவ்வளவுதானா? //

  அவுங்க நம்பரும் என் கிட்ட இருக்கு. போதுமா?

  // இந்த மாதிரி வேலையை இத்துப் போன Sun டிவிக்காரன்தான் பண்ணுவான். //

  பாஸ்.. இதுல டி.வி வித்தியாசமெல்லாம் கிடையாது. எல்லா டி.வியும் அப்படித்தான். எடிட்டர்கள் தனக்குத் தேவையான சீன் வர்றதைப் பார்த்து வெட்டி எடுத்துக்குவாங்க..

  //நீயா நானாவைப் பொறுத்தவரை நீங்கள் சொன்னது நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது பயன்படுத்துவார்கள், மற்ற சமயத்தில் தானாகவே அவர்கள் கரவொலி செய்வதைத் தான் காட்டுவார்கள். //

  அப்படி அல்ல.. முகக்குறிப்பு, முகச்சுளிப்பு, சிரிப்பு, கைதட்டல், கோபம், முறைப்பு போன்ற பல விஷயங்களையும் எடிட் செய்து தேவையான இடத்தில் சேர்ப்பார்கள்.

  //நீங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அப்படி பொய்யாக காண்பித்திருந்தால் பார்த்துவிட்டு சுட்டிக் காட்டவும்.//

  இது பாயிண்ட்.

  // எந்த அம்மணி, புரியலையே? //
  மஞ்சு மேடம்..........

  //ஷூட்டிங்குக்கு உட்கார வைக்கும் போதே ஒரே களேபரம் தான். மஞ்சு ஓடி வந்து ப்ளூ ஷர்ட்டுக்கும் பக்கத்துல இருக்குற லேடியோட க்ரீன் ஜாக்கெட்டுக்கும் க்ளாஷ் ஆகுது சார்.//

  //இதெல்லாம் முக்கியம் சார், இப்படி சரி செய்யாம எடுத்தா நிகழ்ச்சி பார்பதற்க்கே கொடுமையை இருக்கும். அனுபவத்தில் தான் இவற்றை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள், குறை சொல்ல வேண்டாம். //

  ஹலோ என்ன பிரச்சினை உங்களுக்கு? நான் எதையும் குறை சொல்லலை. அங்க நடந்ததை சொல்லியிருக்கேன் - என் ப்ளாக்கை படிக்குறவங்களுக்காக - ஒரு லைவ் எக்ஸ்ப்ளனேஷனுக்காக. உங்களுக்கு நீயா? நானா? பிடிக்கும்னு தெரியுது.. அதுக்காக குதிக்கிறீங்க.. இப்போ மேலே இருக்கற பாராவை வச்சு நீங்க என்னை குறை சொல்றீங்கன்னு எடுத்துக்கலாமா?
  நான் குறை சொல்றேன்னு வச்சுகிட்டாலும்................. இது என்னோட ப்ளாக்.. என் விருப்பப்படி எனக்கு தோணறதை தான் எழுத முடியும்.

  //புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...// Done!

  ஓட்டுக்கு நன்றி.. நன்றி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 27. உண்மையில் உங்களை எப்படியெல்லாம் மாற்றி மாற்றி உட்கார வைத்தார்கள் என்பதை நான் மிகவும் ரசித்துப் படித்தேன், உங்க பிளாக் Live ஆக இருக்க எழுதிய மாதிரியே நானும் பின்னூடமும் என் வழியில் Live ஆக இருப்பதற்க்காகப் போட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! ஆங்கில வார்த்தைகள் என்னைப் போல இருக்குறவங்களுக்கு புரியாதே, அதனால தமிழில் போடும்படி வேண்டுகோள் விடுத்தேன், மறுப்பது உங்கள் சுதந்திரம், நான் சொல்ல ஒன்றுமில்லை.

  பதிலளிநீக்கு
 28. ஹலோ தம்பி,எங்க வீட்டில் அனைவரும் இருந்து பார்த்தோம்,உங்களையும் உங்கள் தெளிவான பேச்சு,கொஞ்சம் தான் பேசீருந்தீங்க,ஆனால் அருமை.எஸ்.ராவின் விளக்கம் அருமை.

  பதிலளிநீக்கு
 29. உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது.

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 30. அடடா மிஸ் பண்ணிட்டேனே? ப்ரோகிராம் மறு ஒளிபரப்பு உண்டா?

  பதிலளிநீக்கு
 31. நல்ல எழுத்து நடை.... படிக்கும் போது நேரில் பார்த்தது போல இருக்கு.

  பதிலளிநீக்கு
 32. பார்த்துறலாம் பாஸ்!!!
  --
  மதுரை பாண்டி
  http://maduraipandi1984.blogspot.com

  பதிலளிநீக்கு
 33. // காவேரி கணேஷ் சொன்னது…
  உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. //

  நன்றி.. நன்றி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 34. // பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
  அடடா மிஸ் பண்ணிட்டேனே? ப்ரோகிராம் மறு ஒளிபரப்பு உண்டா? //

  உண்டு. ஆனா எப்போன்னு தான் தெரியலை............

  // நல்ல எழுத்து நடை.... படிக்கும் போது நேரில் பார்த்தது போல இருக்கு. //

  அப்படின்றீங்க? சந்தோஷம்...

  பதிலளிநீக்கு
 35. // Madurai pandi சொன்னது…
  பார்த்துறலாம் பாஸ்!!! //

  ம்...... நன்றி.........

  // Post the video link if u have.. //

  இப்போ இல்லை. கிடைச்சதும் சொல்றேன்.

  பதிலளிநீக்கு
 36. // செந்திலான் சொன்னது…
  i am watching you now. //

  Oh.. thanks.. thanks a lot.

  பதிலளிநீக்கு
 37. // asiya omar சொன்னது…
  ஹலோ தம்பி,எங்க வீட்டில் அனைவரும் இருந்து பார்த்தோம்,உங்களையும் உங்கள் தெளிவான பேச்சு,கொஞ்சம் தான் பேசீருந்தீங்க,ஆனால் அருமை.எஸ்.ராவின் விளக்கம் அருமை. //

  போங்க............ ஒன்பது தடவை மைக் என்கிட்ட வந்தது. ஆனா அதுல நாலே முறைதான் டெலிகாஸ்ட் ஆனது.. அதுலயும் ரெண்டு தடவை பேசினதுல பாதி பாதி தான் வந்தது.. .

  சாரு பத்தியும், ஸீரோ டிகிரி பத்தியும் பேசினேன்.. ஆனா சாருவுக்கும், ஆன்டனிக்கும் தான் ஆகாதே...... அதான் அதுவும் எடிட்டிங்ல போயிடுச்சு...

  பதிலளிநீக்கு
 38. விஜய் டிவி புகழா , ஒரு ஷோவ்க்கே இந்த ஆட்டமா இதெல்லாம் த்ரீ மச் நண்பா.......

  பதிலளிநீக்கு
 39. // பெயரில்லா சொன்னது…
  விஜய் டிவி புகழா , ஒரு ஷோவ்க்கே இந்த ஆட்டமா இதெல்லாம் த்ரீ மச் நண்பா.......//

  டாய்.......... டாய்.......... டாய்.......... யார்றா அது உள்ள பூந்து கலாய்க்கிறது.. நாங்கள்லாம் யாரு தெரியுமா? டேய்..... எட்றா அந்த அருவாள........ (எங்க தாத்தா எடுத்த போட்டோவால தான் எம்.ஜி.ஆரே ஃபேமஸ் ஆனார் தெரியுமா?)

  பதிலளிநீக்கு
 40. // அன்புடன் அருணா சொன்னது…
  அட!பார்த்தேனே! //

  அப்படியா.... என்னையா? நீயா? நானா? ஷோவையா?

  பதிலளிநீக்கு
 41. நானும் நினைப்பேன் வித விதமா,. மானட மயிலாட, காத்ல் மீட்டர், நீயா நானா எப்படி தான்
  செட் பண்றாங்கலோன்னு
  எப்பவாவ்து நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன்.
  ஓ கோபி நாத் கால்க்ல இருக்கா மைக் தான் அவர பேச வைக்குதா.

  மஞ்சு, ஜோதி, ஆனாலும் அவர்களை பாராட்டனும்.

  பதிலளிநீக்கு
 42. // Jaleela Kamal சொன்னது…
  ஓ கோபி நாத் கால்க்ல இருக்கா மைக் தான் அவர பேச வைக்குதா. //

  அடுத்த வாரம் நல்லா உத்து கவனிச்சுப்பாருங்க... கோபி இடது பக்கமா திரும்பினா உடனே அந்த கேமரா கோணம் கட் ஆயிடும். வேற ஆங்கிள்ல இருந்து காண்பிப்பாங்க...

  // மஞ்சு, ஜோதி, ஆனாலும் அவர்களை பாராட்டனும். //
  கண்டிப்பா.. இதையே தான் நீயா? நானா?வுக்கு போயிட்டு வந்த இன்னோருத்தரும் எழுதியிருக்காங்க......

  பதிலளிநீக்கு
 43. உங்களோட தெள்ள தெளிவான விவரிப்புகள் அருமை ஒளிப்பதிவு என்பது மிக நேர்த்தியான கலை, இந்த காலத்துல தொடர்ந்த போல வாக்கியம் அமைச்சு பேசற மக்கள் மிக மிக குறைவு, நீங்க இத தெளிவ செய்தி வரும் போது பார்க்கலாம், துய தமிழ் ஆரமிச்சு, இங்கிலீஷ் தொடந்து பேசி பிறகு ஒரு வழிய உளறி முடிப்பங்க, அத நாம்ப பாக்கும் போது தர்ம சங்கடமகா இருக்கும், அந்த மாதரி சூழ்நிலைகளை தவிர்க்க இது போன்ற முன் ஏற்பாடுகள் தேவை,கோபி நாத் என்னை பொறுத்த வரை கொஞ்சம் தெரிந்தவர், மன்னிக்கவும் தப்பா சொல்லி இருந்தா....

  பதிலளிநீக்கு
 44. // அம்மாவிற்கு.blogspot.com சொன்னது…
  உங்களோட தெள்ள தெளிவான விவரிப்புகள் அருமை //
  நன்றி...

  // அந்த மாதரி சூழ்நிலைகளை தவிர்க்க இது போன்ற முன் ஏற்பாடுகள் தேவை //
  கண்டிப்பாக. ஒப்புக்கொள்கிறேன்.. மேலே உள்ள கட்டுரை முழுவதும் அங்கே என்ன நடந்தது என்பதற்கான காட்சி விவரிப்புகள் மட்டுமே.. எழுதுபவனின் கருத்துக்கள் எங்கேயும் இருக்காது. கவனிக்கவும்... இது கதையல்ல நிஜம்..

  // கோபி நாத் என்னை பொறுத்த வரை கொஞ்சம் தெரிந்தவர் //
  இருக்கலாம்.. மற்ற சொத்தை தொகுப்பாளர்களுடன் ஒப்பிடும் போது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஆன்டனி தான் எல்லாம். நான் சொல்வது அவ்வளவே...

  // மன்னிக்கவும் தப்பா சொல்லி இருந்தா.... //
  அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. தங்கள் கருத்து. தாங்கள் என்னை திட்டினாலும் நான் வெளியிடுவேன்...

  பதிலளிநீக்கு
 45. @ அம்மாவிற்கு.blogspot.com

  உங்கள் கருத்துகளோடு நானும் ஒத்துப் போகிறேன். சாதாரணமாக இயற்பியல் அல்லது கணித வகுப்புகள் நடக்கும் போது பார்த்தால் ஒரு விஷயம் புலப் படும். ஆசிரியர் [M.ed.,M.Phil.,Ph.D பண்ணியிருப்பார், பல வருடங்கள் வகுப்புகள் நடத்து பழம் தின்று கொட்டை போட்டவராக இருப்பார்.] மாணவர்களைப் பார்த்தால் அந்த ஆண்டுதான் புதிதாக படிக்க வந்த வர்களாக இருப்பார்கள். ஆசிரியர் Equation- களை Derive செய்யும் போது தப்பு தப்பா எழுதுவார், சில சமயம் அந்த தப்புகள் எட்டாம் வகுப்பு மாணவன் கூட பண்ண மாட்டான் அந்த அளவுக்கு எளிதான ஒன்றாகக் கூட இருக்கும், அதை அங்கே உட்கார்ந்திருக்கும் மாணவர்கள், அதைச் சுட்டிக் காட்டி சரி செய்து கொண்டிருப்பார்கள். இது எது பள்ளிகளில் நடக்கும் விஷயம் அல்ல, நீங்கள் Post Graduate அளவில் நடக்கும் வகுப்புகளிலும் கூட இது நடக்கிறது, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இந்த வாத்தியாருக்கு ஒண்ணுமே தெரியவில்லை, என்றுதான் நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்லவே! இங்கே திரு. ஆண்டனியே வந்து கொபினத்தைப் போல நிகழ்ச்சி நடத்தினாலும் அவர் காதிலும் மைக்கை வைத்து control room -ல் இருந்து வேறு யாராவது கட்டளை இட்டுக் கொண்டிருப்பார்கள். அவ்வளவுதான்.

  பதிலளிநீக்கு
 46. இப்போ சமீபத்தில் எந்திரன் படத்தில் நடித்த அனுபவம் பற்றி Sun TV -ல் பேட்டி வெளியானது, அதைப் பார்த்து நொந்து போகாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். ஏனென்றால் கேள்விகேட்ட அறிவுஜீவியை எங்கேயிருந்துடா புடிச்சிகிட்டு வந்தாங்க என்பது போல கேட்டார். இங்கே மட்டும் கோபிநாத் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று வலைப் பதிவுகளில் சிலர் ஆதங்கத்தை வெளியிட்டும் இருந்தார்கள். இந்தப் பேட்டியை எடுத்தவர் முன்னமே கேள்விகளைத் தயாரித்திருக்கலாம், ஆனால் நிகழ்ச்சி ஏன் சொதப்பலாக போய் விட்டது? [வேண்டுமானால் காதில் மைக்கும் வைத்திருந்திருக்கலாம்!]. ஆக, ஒரு நிகழ்ச்சியை ரசிக்கும் படி கொண்டு செல்வது நாம் வெளியில் உட்கார்ந்து கொண்டு நினைப்பதைப் போல அவ்வளவு எளிதல்ல. வெறுமனே மானிட்டரில் வரும் செய்தியைப் படிக்கும் செய்தி வாசிப்பாலருக்கே நிறைய தகுதிகள் வேண்டும். இதில் கேள்வி கேட்டு லாவகமாகப் பதில் வாங்குவதென்றால் நிறைய திறமைகள் வேண்டும். சொல்லப் போனால், இரண்டு வாரங்களுக்கு முன்பு திரையுலகில் இன்றுள்ள முக்கியப் புள்ளிகள் இயக்குனர்கள் மனோபாலா, வசந்த், வெற்றி மாறன், மிஸ்கின், குஷ்பு, சுகாசினி உட்பட கிட்டத்தட்ட நூறு பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியை நடுவில் நின்று நடத்துவது அவ்வளவு எளிதல்ல. சில சமயம் ஞானி போன்ற எழுத்தாளர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்சிகளும் நடக்கின்றன. இதையெல்லாம் செய்வதற்கு விஷயமும் தெரிந்திருக்க வேண்டும், திறமையும் வேண்டும். எல்லோராலும் அது முடியாது. நான் கோபிநாத்திற்கு வக்காலத்து வாங்கவில்லை, ஒரு திறமையான நிகழ்ச்சித் தொகுப்பாலனை, வெறும் கைப்பொம்மை, அல்லது கயிறு கட்டி ஆட்டுவிக்கப் படும் பொம்மை என்று சிறுமை படுத்துவதை மனம் பொறுக்கவில்லை. அவ்வளவுதான்.

  பதிலளிநீக்கு
 47. அடப்பாவி... இத்தனை நாள் கழிச்சு இப்பத்தான் இந்தப்பதிவையே படிக்குறியா?

  பதிலளிநீக்கு
 48. நா அதைவிட லேட்'ங்க... இப்ப தான் உங்க பேர் தெரிஞ்சு கொஞ்சம் கொஞ்சமா படிக்க முயற்சிக்கிறேன்... செல்வமுரளி'ய விட கொஞ்சமே லேட்...

  பொறுத்தருளவும்...

  மற்றபடி, ஜாலி பதிவு... தொடர்ந்து படிக்கிறேன்... :) :) :)

  பதிலளிநீக்கு