ஞாயிறு, 20 ஜூலை, 2014

சினிமா - மேக்கப் முதல் மேக்கிங் வரை



தமிழரின் தின வாழ்வையும் சினிமாவையும் பிரிப்பது ரொம்பக் கஷ்டம். தமிழ் மட்டுமல்ல. ஒட்டுமொத்த தென்னிந்தியாவுமே அப்படித்தான். சினிமாவில் இருந்து முதல்வர்களையே அனுமதிப்போம் நாம். இதுவே வட இந்தியாவில் அரசியல் ஆசையோடு ஒரு நடிகன் இருந்தான் என்றால் சில வருடங்களிலேயே மாஃபியாவாலும், பெரும் தொழிலதிபர்களாலும் அடக்கி வைக்கப் படுவான்.

அதிலும் டைரக்டர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளரையெல்லாம் விட்டுவிட்டு திரையில் தெரியும் நடிகர்களை மட்டுமே ஹீரோக்களாக போஷிக்கும் நமக்கு திரைக்குப் பின்னாலிருந்து அதை சாத்தியமாக்கும் ஆயிரக்கணக்கான ஹீரோக்கள் தெரிவதே இல்லை
. நல்ல வேளையாக டெக்னீஷியன்களை மதிக்கும் டெக்னீஷியன்களைப் பற்றிப் பேசும் நிலையேனும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உருவாகியிருக்கிறது.


தயாரிப்பு, வசனம், இயக்கம், நடிப்பு என நமக்குத் தெரிந்த தொழில்நுட்பத் துறைகள் மட்டுமின்றி தயாரிப்பு மேற்பார்வை, சவுண்ட் எஃபெக்ட்ஸ், ஆடியோ கிராபி, பி.ஆர்.ஓ என பல துறைகளைப்பற்றிய விவரங்களை அத்துறையின் ஒரு பிரபலரின் பேட்டியோடு விரிவாக அளித்திருக்கிறார் நூலாசிரியர், திரைத்துறையில் இணை இயக்குனராகப் பணியாற்றி வரும் "செல்லா". ஓசூர் புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை வாங்கினேன்.

விகடன் பிரசுரம்
ரூ.110
ஆசிரியர் - செல்லா