வியாழன், 16 டிசம்பர், 2010

டாகுடரு விஜய் வாழ்க, சாரு நிவேதிதா?

போன வாரம் வலை மேய்ந்து கொண்டிருந்த போது பார்த்(துத் தொலைத்)தேன். நம்ம ஊரு நடிகர் டாகுடர் விஜய்க்கு கேரளாவில் சிலை வைத்துள்ளார்களாம் அவருடைய அம்மாநில ரசிகர்கள். நம்மூரு டாகுடரு ரசிகர்களுக்கு ஒரே சந்தோஷம் தான் போங்கள். இன்னும் ஒரே மாதம் தான். போதும். இங்கேயும் தமிழ்நாட்டில் சிலை வைத்து விடுவார்கள்.

அந்தக் காமெடியை நீங்களே பாருங்கள்.

இதைப்பார்க்கும் போது எல்லாருக்கும் என்ன ஞாபகம் வருமோ தெரியாது. எனக்கு இந்த சாரு நிவேதிதா இருக்கிறாரே சாரு நிவேதிதா அவரது ஞாபகம் தான் வந்தது எனக்கு. ஆ....... ஊ.......... என்று குதிப்பாரே அடிக்கடி. கேரளாவில் எல்லாரும் படிப்பாளிகள்.. கேரளாவில் எல்லாம் புத்திசாலிகள். கேரளாவில் நடிகனைக்கொண்டாட மாட்டார்கள். கேரளாவில் எல்லாரும் என்னைத்தான் படிப்பார்கள்....... கலா கெளமுதியில் கட்டுரை கேட்பார்கள். மம்முட்டியே வரிசையில் நின்று வேடிக்கை பார்ப்பார். அங்கே நடிகன் எல்லாம் பிறகுதான் என்றெல்லாம் கூவுவார். நாமும் நம்பிக்கொண்டு அவரது திட்டுக்களை படித்துக்கொண்டிருப்போம். பிறகென்ன செய்ய முடியும்? அவர் சொல்வது உண்மையா பொய்யா என்று கேரளாவுக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு போய் பார்த்து விட்டா வரமுடியும்? அவர் இப்போது இதற்கு என்ன சொல்லப்போகிறார்.

அவர் சொல்வதைப்பார்த்து நான் ரொம்ப நாளாக கலா கொளமுதி தான் கேரளாவில் நம்பர் ஒன் பத்திரிகை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது எங்க தெரு முக்கில் ஒரு புது நாயர் கடை போட்டிருக்கிறார். அவர் கடையில் பாட்டெல்லாம் நன்றாக இருக்கும். நேயர் விருப்பம் போல நாயர் விருப்பம். அவர் மலையாள மனோரமா தான் நம்பர் ஒன் என்கிறார். சாருவை விட அவரது டீக்கு ரசிகர்கள் அதிகம். இப்போ கலா கெளமுதியா மலையாள மனோரமாவா? எது பெரிசு...?இப்போது அங்கே விஜய்க்கு சிலை. ரைட்டு. யார் முன்னேறுகிறார்களோ இல்லையோ..... சினிமாக்காரன் இன்டர்நெட்டை விட வேகமாக காற்றில் கலந்து பரவுகிறான். ஒரு நடிகனுக்கு சிலை வைக்கும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இருக்கிறதென்றால் சோத்துக்காக என்ன வேலை பார்க்கிறார்கள். அல்லது விஜய் அவர்கள் ஏதேனும் மாதாந்திர உதவித்தொகைத்திட்டம் வைத்து அவர்களுக்கெல்லாம் உதவுகிறாரா? (அப்படி இருந்தால் நம்ம சாருவுக்கும் அவரது பிராண்ட் ரெண்டு பாட்டில் பார்சல்ல்லல்ல்ல்ல.....................)

இங்கே தமிழ்நாட்டில்? நடிகர்களை முதலமைச்சராகவே ஆக்கும் அளவு வெறித்தனமாக ரசிகத்தன்மை இருந்தாலும் சிலை வைக்கும் அளவுக்கெல்லாம் போகாத ஆட்கள் நம்ம தமிழ்நாட்டு ஆட்கள். (என்று பெருமை பீத்த முடியவில்லை. குஷ்புவுக்கு கோவில் கட்டியதைத்தவிர என்று வேண்டுமானால் சொல்லலாம். அது ஒரு விதிவிலக்கான கரும்புள்ளி. அதுவும் கேபிள் டி.விக்களும் இன்டர்நெட்டுகளும், வெறெந்த பொழுதுபோக்குகளும் ஆக்கிரமிக்காத காலம்) அப்புறம் கோயில் இடிக்கப்பட்ட பிறகு கற்களை நக்மாக்காரர்கள் வாங்கிப்போனதாகக் கேள்வி. பிறகு திரிசா கோஷ்டி களம் இறங்கி கற்களைப் பறிமுதல் செய்தார்களாம். (நம்ம திரிசாவையும் சாருவுக்கு பிடிக்கும் போலிருக்கிறது. ஒரு முறை திரி ஆங்கில மேகஸின் ஒன்றுக்கு குனிந்து நிமிர்ந்து வளைந்து நெளிந்து கொடுத்த போஸ்களின் வீடியோ கிளிப்பிங்களை தன் பிளாக்கில் கொடுத்து திரி யின் புகல் பரப்பினார்)

அடப் போங்கப்பா............. தூக்கம் வருது.......
(என்ன சாமி. புத்தக விழாவுல எம்புட்டு புக்கு வித்துச்சாம்?)


டெயில் பீஸ் குயில் குஞ்சு: சார், ஒரு டவுட்டு. ஒரு லட்சத்து எழுபத்தஞ்சாயிரம் கோடிக்கு எத்தனை சைபர் சார்..? அப்புறம் டூ ஜி, திரீஜி னா என்ன சார்?
நான்: போய் புள்ளைங்களைப்படிக்க வைங்கடா, கப்பித்தனமாப்பேசிகிட்டு.

------------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...

நீங்க (ஓட்டு) போட்டா மட்டும் போதும்.... போட்டா மட்டும் போதும்....

எலைக்கு ஏழ்நூறு ரூவா செலவு பண்ணிருக்கோம்ல....
------------------------------------------------------

9 கருத்துகள்:

 1. எலைக்கு எழுநூறு ரூபா செலவு பண்ணி டாகுடரைப் பத்தி எழுதியிருக்கீங்க!பாவம் நீங்க!

  பதிலளிநீக்கு
 2. // சாருவை விட அவரது டீக்கு ரசிகர்கள் அதிகம் //

  செம நக்கலு... ஆனா நிதர்சனம்...

  பதிலளிநீக்கு
 3. Dear Yeska. அது சிலை இல்லை. கட் அவுட் போன்ற ஒன்று.. தவிர பின் புலத்தில் SR troop of Designers என்ற விளம்பரக் கம்பெனியின் லோகோ. இது ஒரு விளம்பர யுக்தி. அவ்வளவு தான். சிலை என்றால் அது வணங்கப்பட வேண்டிய ஒன்று. அதற்கான அறிகுறிகள் அங்கு இல்லை. நம்மாட்கள் குஷ்புவுக்கு கோவில் கட்டினார்கள்-அங்கு பூஜையே செய்தார்கள் என்று கேள்வி. மற்றபடி கேரளாகாரர்களை தலையில் வைத்து கொண்டாடும் அளவுக்கு அங்கு ஒன்றும் இல்லை. அவர்களிடம் திறமை இருக்கலாம் ஆனால் மனித நேயம் என்பது தேடித் தான் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களிடம் இருக்கும் இயற்கை வளத்திற்கு அவர்கள் தமிழ் நாட்டிலிருந்து எதையும் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எது முக்கியம்.. உழைப்பு தானே.. கூரை மீது ஏறி கொழி பிடிக்க முடியாதவன்.. கதை தான் அங்கே!

  பதிலளிநீக்கு
 4. //YOGA.S சொன்னது…
  எலைக்கு எழுநூறு ரூபா செலவு பண்ணி டாகுடரைப் பத்தி எழுதியிருக்கீங்க!பாவம் நீங்க! //
  என்ன இருந்தாலும் நாளைக்கு பெரிய ஆளாவாரு இல்ல.............. படமெல்லாம் ஹிட்டாகி, கட்சி ஆரம்பிச்சு, தி.மு.க, அ.தி.மு.க வை எதிர்த்து, நாட்டுக்கு நல்லது பண்ணி, கவுன்சிலராகி, எம்மெல்லே ஆகி, முதலமைச்சர் ஆகி கார்ல போவாரு....... நாம டாட்டா காட்டுவோம் (கஞ்சா கருப்பு: நான் ஒரு மாடு தாம்னே வாங்குறேன்னு சொன்னேன்...)

  பதிலளிநீக்கு
 5. //philosophy prabhakaran சொன்னது…
  // சாருவை விட அவரது டீக்கு ரசிகர்கள் அதிகம் //

  செம நக்கலு... ஆனா நிதர்சனம்.....//

  கேரளாவுல எல்லாம் டீயே குடிக்க மாட்டாங்களாம். டீக்கடையில நின்னு சாரு வை பத்திதான் பேசுவாங்களாம் (ஹி ஹி)

  பதிலளிநீக்கு
 6. // Kandasamy // என்னமோ போங்க. ஒரு ஜோக்கு தான் ஞாபகத்துக்கு வருகிறது.. ஆம்ஸ்ட்ராங் போய் நிலாவுல கால வச்சிட்டு, கொடியை நட்டுட்டு திரும்பி டயர்டா நடந்து வரும்போது "சேட்டா, சாய் வோணுமோ" என்று கேட்டாராம் ஒரு மலையாளி... அந்த அளவுக்கு எல்லா இடத்திலும் இருப்பார்கள் மலையாளிகள் என்று சொல்வார்கள். இப்போது நிலைமை எங்கே போய்க்கொண்டிருக்கிறது பாருங்கள்.......

  பதிலளிநீக்கு
 7. சப்புன்னு ஆயிடுச்சுங்க!சந்திரசேகரு,அதான் டாகுடரோட அப்பா விசய் அரசியலுக்கு வரமாட்டாரு,ஆனா ஏதாச்சும் மேடயில(தேர்தல்)பேசுவாருன்னு சொல்லீட்டாரு!அத வேற சகிச்சுக்கணும்!!!

  பதிலளிநீக்கு
 8. intha maadiri aduthavargalai kurai solriye ezhudhuringale, ithula enna perumai? illa itha padikarathaala engalukku enna kedakuthunnu theriyala.. mm. nalla nadai. nalaa yosikka vaikara maadiri ethavathu ezhuthungalen..

  பதிலளிநீக்கு
 9. மிஸ்டர் ராமநாதன்...... குறை சொல்றேன்னு நினைக்கிறீங்களா? நானாவது மத்தவங்களை குறை தான் சொல்றேன். ஆனா சம்பந்தப்பட்ட சில பேரு அடுத்தவங்களை (குறிப்பா சீஸனுக்கு ஒருத்தரை) திட்டுறதையே பொழப்பா வச்சிருக்காங்க. அவங்களுக்கு ஒத்து ஊதறதுக்கு ஒரு கோஷ்டியே இருக்கு. இன்னோருத்தரு சமூகத்தையே கெடுத்துகிட்டு காசு சம்பாதிச்சிகிட்டு இருக்காரு.. அவுங்களையெல்லாம் போயி கேள்வி கேளுங்களேன்...

  அப்புறம் இன்னோரு விஷயம். இது என்னோட ப்ளாக். நான் என் விருப்பப்படி தான் எழுதுவேன். நான் ஒண்ணும் வாரப்பத்திரிகை நடத்தலை. காசு கொடுத்து வாங்குறவன் இஷ்டப்படி எழுதறதுக்கு.

  பதிலளிநீக்கு