வெள்ளி, 31 டிசம்பர், 2010

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி

-----------------------------------------

முதலில் ஒரு விஷயம். இது என்னுடைய பதிவு அல்ல. கடந்த ஒரு வாரமாக இது மெயில் மூலமாக மூன்று, நான்கு நண்பர்களிடம் இருந்து வந்து கொண்டே இருந்தது. இதை நீங்கள் கூட எங்காவது படித்திருக்கலாம்.... அதனால் இதைப் பதிவாகப்போட வேண்டாம் என்று நினைத்தேன்.

ஆனால் இதைப்படித்து விட்டு என்னால் சிரிப்பு தாங்க முடியவில்லை. ஆதித்ய பிர்லாவில் இருக்கும் போது, XXX என்ற மிகப்பிரபல சாஃப்ட்வேர் கம்பெனியில் இருந்து ஒரு நான்கைந்து பேர் கொண்ட பெரிய டீமே இந்த மாதிரி "Maintenance and Support" என்று புரியாத விஷயங்களைச்சொல்லி ஒவ்வொரு விஷயத்துக்கும் நாள் கடத்திக்குழப்புவார்கள். அதிலும் ஒரு பெண் இருப்பாள். குறைந்தது ஒரு நாளைக்கு நாலரை மணிநேரம் அங்கும் இங்கும் நடந்து கொண்டே செல்ஃபோனில் பேசிக்கொண்டே இருப்பாள்.

அவள் எங்கள் நேரடி எம்ப்ளாயீ கிடையாது என்பதால் யாரும் அவளை கேள்வி கேட்க முடியாது. யாராவது அவளை முறைத்தாலும் அவளது டீம் மெம்பர் ஆபத்பாந்தவன் வந்து கூட்டிக்கொண்டு போய்விடுவான். இரண்டும் சேர்ந்து சேட்டிங்கில் உட்கார்ந்தால் அதில் ஒரு இரண்டு மணி நேரம் போகும். அப்புறம் சனிக்கிழமையானால் வரவே மாட்டார்கள். வாராவாரம் மீட்டிங் என்று ஒரு அரை நாள் போடுவார்கள்.

அதேபோல் எனக்குத்தெரிந்த பெண்ணொருத்தி இப்போது XXXXXXX என்ற கம்பெனியில் பணிபுரிகிறாள். அவளும் இப்படித்தான் "பெஞ்ச், சேர், க்ளையண்ட் லொக்கேஷன்" என்று சொல்லி கதை அளப்பாள். அவள் கதையைக்கேட்டாலும் ஒரே காமெடியாக இருக்கும். சரி, அதெல்லாம் கிடக்கட்டும், விடுங்கள். மேட்டரைப்படியுங்கள்.

-----------------------------------------

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
-
"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்"."இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கனு கேப்பாங்க.
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"
-
இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants. ...".

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.அப்பா : "இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MS-னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

அப்பா : "முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" –

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

அப்பா : “சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?”

“அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்”

அப்பா : "500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒண்ண நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐயோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.
-
"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.
-
அப்பா : "CR-னா?"
-
"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."
-
அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

அப்பா : "இதுக்கு அவன் ஒத்துபானா?"
-
"ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

அப்பா : "சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."
அப்பா : "அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது."அப்பா : "அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –
-
அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பான்னு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறதுதான் இவரு வேலை."
-
"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

அப்பா : "எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."
-
அப்பா : "நான் உன்னோட அம்மா கிட்ட பண்ற மாதிரி?!""இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."
-
அப்பா : "இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர் வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

அப்பா : "அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.

அப்பா : புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம்கறது மாதிரி."
"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"அப்பா: "கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."
-
அப்பா : "எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.

அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

அப்பா : "சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."
-
"அப்புறம்?"

"அவனே பயந்து போய்,
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"
புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."

இதுக்கு பேரு "Maintenance and Support".
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி.
தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.


அப்பா : "எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுச்சிப்பா."

-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

24 கருத்துகள்:

 1. நல்லா இருக்குங்க, ஆனா முன்னாடியே எங்கயோ படிச்ச மாதிரியே இருக்குங்க. அது என்ன வியாதிங்க?

  பதிலளிநீக்கு
 2. என்னா டெக்னிக்கலா ஏமாத்தறானுங்க Intelligent Terrors..!!

  பதிலளிநீக்கு
 3. // DrPKandaswamyPhD ....
  அது என்ன வியாதிங்க?//
  அந்த வியாதிக்கு ஞாபக சக்தின்னு பேரு....

  ஹா.. ஹா.. சார்...... உங்க கமெண்ட் பார்த்தப்புறம் இதை கூகுளடிச்சுப்பார்த்தேன். இன்னும் நாலஞ்சு பேரு இதை பப்ளிஷ் பண்ணிருக்காங்க.. அதான் உங்களுக்கும் அப்படி தோணிருக்கு..

  பதிலளிநீக்கு
 4. // கலாநேசன் //
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும்..

  பதிலளிநீக்கு
 5. // சேலம் தேவா சொன்னது…
  என்னா டெக்னிக்கலா ஏமாத்தறானுங்க Intelligent Terrors..!! //
  அப்ரைசல் (இன்க்ரிமென்ட்) சரியா போடலைன்னா மட்டும் ஜங்கு ஜங்கு ன்னு குதிப்பானுங்க...

  பதிலளிநீக்கு
 6. // விக்கி உலகம் சொன்னது…
  happy new year 2011//

  ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 7. This is a repeat of a blog for the third time or umpteenth time. We should at least say so before being pointed out.
  All the same, interesting and worth a repeat.

  பதிலளிநீக்கு
 8. super.. thanks for ur information..


  ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 9. எனக்கும் ரொம்பநாளா ஒரு டவுட்டுங்க. கம்ப்யூட்டர்ல அப்படி என்னதான் வேலை பார்க்கிறாங்கனனு. இப்ப புரிஞ்சிபோச்சுங்க. நம்ம நோய் னு டாக்டர்கிட்ட போனா என்ன செய்வாரோ அதையே தான் அவர்களும் செய்றாங்க.இரண்டுமே புலிவால் பிடித்த கதைதான்.

  பதிலளிநீக்கு
 10. puththaaNdu vaazththukkaL உங்க கட்டுரை நல்லாருக்கு. நகைச்சுவையோடு எழுதி இருக்கீங்க...வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
  எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை.
  ஆஹா அருமை .இப்படித்தான் நிறைய கம்பெனி வாழ்கை நடத்தும் போல

  பதிலளிநீக்கு
 12. // nerkuppai thumbi சொன்னது…//
  This is a repeat of a blog for the third time or umpteenth time. We should at least say so before being pointed out.
  All the same, interesting and worth a repeat.

  சரி விடுங்க. ஒரு காமெடி தானே.....

  பதிலளிநீக்கு
 13. // Ravi kumar Karunanithi சொன்னது…
  super.. thanks for ur information..//

  வருக.... வருக.... புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 14. // prak சொன்னது…
  kadhai nalla puridhunga....//

  புரிஞ்சுதா??????? குட்....

  ஊர்ல கொள்ள பேரு எங்ககிட்ட கதை கேட்டு காது கிழிஞ்சு ஓடிருக்கானுங்க......

  பதிலளிநீக்கு
 15. // இனியவன் சொன்னது…
  எனக்கும் ரொம்பநாளா ஒரு டவுட்டுங்க. //

  அப்போ நீங்களும் ஐ.டி காரவுக இல்லியா?

  பதிலளிநீக்கு
 16. // சி.பி.செந்தில்குமார் சொன்னது…
  உங்க கட்டுரை நல்லாருக்கு. நகைச்சுவையோடு எழுதி இருக்கீங்க...//

  அய்யோ... அய்யோ... இது என்னோட கட்டுரையே இல்லியே...........

  பதிலளிநீக்கு
 17. // சிட்டி பாபு சொன்னது…
  நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
  எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை. //

  அப்படின்னு சொல்லிகிட்டு இருக்கும் போதுதான் என்ன பதில் சொல்லலாம்னு யோசிப்பானுங்க..............

  பதிலளிநீக்கு
 18. // MANO நாஞ்சில் மனோ சொன்னது…
  ROMPA PAZASU MAKKAA ITHU...//

  ஓஹோ............... அப்படின்னா............ இனிமே இந்த மாதிரியான மெயில் மேட்டரையெல்லாம் ப்ளாக்ல போடக்கூடாது.......... நன்றி.... இனிமே அவாய்ட் பண்ணிக்கலாம்...........

  பதிலளிநீக்கு
 19. நான் ரொம்ப நாளா இந்த சாப்ட் வேர் பயலுகளைப் பாத்து கேட்க நினைச்ச கேள்வி, தெளிவா புரிஞ்சுபோச்சு. ஹா...ஹா..ஹா.. [இந்த கல்யாணம் பண்ணாமலேயே எல்லாம் பண்றது மாதிரி கலாச்சார சீரழிவை பிரபலப் படுத்தியது, ஊர்ல வீட்டு மனையில் இருந்து காய்கறி, அரிசி வரை அத்தனையையும் விலை ஏத்தி உட்டது போன்ற விஷயங்களில் இவனுங்க மேல எனக்கு வருத்தமும் உண்டு.] ஜெயதேவ் தாஸ்.

  பதிலளிநீக்கு
 20. Your feed back box doesn't allow me to sighn in, What is the matter?

  ஜெயதேவ் தாஸ்.

  பதிலளிநீக்கு