செவ்வாய், 23 நவம்பர், 2010

மைனா - ஒரு புலம்பல்ஸ், அப்புறம் ஒரு செல்போன்.

__________ ரில் இருந்து ___________________ போன் செய்திருந்தாள். வீட்ல மைனா பாத்துட்டு இருக்கேன்டா என்றாள். என்னடி சொல்ற? என்றால் ஆமாண்டா? டிவிடி வாங்கிட்டு வந்தேன், ஜஸ்ட் முப்பது ரூபா என்றாள். அதிர்ச்சியாக இருந்தது. சரி விடு, தியேட்டருக்குப்போனா அம்பது நூறு தலைக்கு ஆகும், இது வெறும் முப்பது தானே என்றால்.......... ஆளைப்பாரு இங்கலாம் டிக்கட் முன்னூத்தம்பது ரூவாடா என்றாள். அப்போதான் ஞாபகத்துக்கு வந்தது. பாவா கூட சொல்வார். ஜனசதாப்தியில் முப்பது ரூபாய்க்கு டிவிடி கிடைக்கிறதாம். போகும்போதெல்லாம் வாங்கிக் கொண்டு வரலாமாம். எந்திரன் கூட நல்ல பிரிண்டா இருந்தா கொண்டு வரச்சொல்லி வைக்கலாமாம். ரெகுலர் கஸ்டமராய் இருந்தால் உங்களுக்கு முன்னாடி கொட்டி வைத்து விட்டுப்போய்விடுவார். வேண்டுமென்பதை பொறுக்கி எடுத்துக்கொண்டு மீதியை அவனிடம் கொடுக்கலாம்.


அது சரி மைனா எப்படி? கதை கேட்டேன், (கேட்காமலே இருந்திருக்கலாம் போல) அவன் வருவான்டா, அப்டியே தண்ணி குடிப்பான் பாரு, அப்டியே ஒரு துளி அவ மேல......... உதடு கிட்ட தெறிக்கும், அப்டியே லவ்வ புழிஞ்சு குடுத்திருக்கான்டா, சுருளி இருக்கான்ல அவன் அவங்கம்மாவை போட்டு அடிப்பான், போலீஸ் புடிச்சிட்டு போய்டும், ஒரு நாள் நைட்டு அவ படிப்பாளா? கரண்டு போய்டும். எத்தனை பாடம் இருக்குன்னு கேப்பான்,பத்து பாடம்ன ஒடனே சைக்கிள்ல லைட்டு டைனமோ இருக்கில்ல அதை போட்டு மிதிப்பான், வெளிச்சம் வரும் அப்புறம் செயின் அந்துரும், அப்புறம் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் நெறையா மின்மினிப்பூச்சி எடுத்துட்டு வந்து காமிப்பான், அதை எப்டி எடுத்தாங்கன்னே தெரில..... அந்த பாட்டில் கீழ விழுந்து உடஞ்சிடும் என்றாள்.

கிளைமாக்ஸ் என்ன தெரியுமா? என்றவளிடம் ஒரு பஸ் ஆக்ஸிடென்ட் ஆகும் என்று சொல்ல ஆரம்பித்தேன். ஏய்., இரு இரு கதை சொல்லாத பாத்திட்டு வர்றேன் என்று போனை கட் செய்து விட்டாள். ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் கால். ச்ச்ச்சசச........ சான்ஸே இல்லடா, சூப்பர் படம், போய்ப்பாரு என்ன? என்றாள். என்னடா கிளைமாக்ஸூ என்று கேட்க வந்தவன் வாயை மூடிக்கொண்டேன். இவளிடம் கதை கேட்டால் காது ஜவ்வு அந்து விடும்.

ஆனால் தமிழ் சினிமாவில் லவ் சீஸன், காமெடி சீஸன், ரவுடி சீஸன், போலீஸ் சீஸன், எல்லாம் போய் ராமராஜன் விட்டுப்போன கிராமத்து சீஸன் மறுபடியும் வந்திருக்கிறது. அதுவும் பப்பி லவ்வில் ஆரம்பித்து பெரியாட்களாகும் வரையில் வரும் லவ் ஸ்டோரிக்கள். அழுக்கு ஹீரோ. மேக்கப் இல்லாத ஹீரோயின். நல்ல வேளை ராமராஜன் ஸ்டைலை யாரும் பின்பற்றவில்லை. அந்த வரைக்கும் சந்தோஷம். தப்பித்தோம். பாட்டுப்பாடியே மாட்டை அடக்கும் அநியாயத்தையெல்லாம் காணும் பாக்கியம் நம் தலைமுறைக்கு இல்லை..

மேலும் தெரிந்தோ தெரியாமலோ பாலா வேறு ஒரு டிரெண்டை உருவாக்கி வைத்து விட்டார். படத்தின் அடிநாதம் ஒரு சோகமான, பகீரென்ற ஒரு விஷயமாக இருக்க வேண்டும், ஆனால் படம் முழுக்க நகைச்சுவை தூவப்பட்டிருக்க வேண்டும். கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க பதைபதைக்கும் திரைக்கதையோடு திடீரென திடுக் திருப்பத்தோடு படம் முடியவேண்டும். இந்த ரூல்ஸை நெருங்கிப்படம் எடுத்தீர்களானால் அது தமிழ்சினிமாவின் சிறந்த படம். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட பாலாவின் படங்களோடு பருத்தி வீரன், வெயில், அங்காடித்தெரு, படங்களும் அந்த வரிசையே. (கமலின் அன்பே சிவம், மகாநதி வகையறாக்கள் இந்தக் கணக்கில் சேராது, அவற்றில் பிரேம் பை பிரேம் கமலின் ஆளுமை தெரியும்) மைனாவும் அப்படி ஒரு சிறந்த தமிழ்ப் படம்.

கிங், லாடம், கொக்கி போன்ற குப்பைப்படங்களை உருவாக்கி அளித்த பிரபு சாலமன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். இதில் கிங் படம் "பூவே பூச்சுடவா"வின் ரீமேக். படா ஜவ்வுப்படம். விக்ரம் வரிசையாக ஹிட்டுகள் கொடுத்துக்கொண்டிருந்த நேரம் அது. பிளாக்கில் டிக்கெட் கிடைக்காமல் பதினைந்து ரூபாய் டிக்கெட்டை நானும் கார்த்தியும் (அவர் தான் ஃபைனான்ஸ்) எழுபத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்கிப்பார்த்தோம். ரொம்ம்ம்ம்ப நேரமாக பார்த்துக்கொண்டே இருந்தோம். படம் முடிகிற பாட்டைக்காணவில்லை. ஒரே ஜவ்வு இழுவை... ஒரே ஆறுதலாக இருந்த ஜனகராஜ் இந்தப்படத்தோடு சினிமாவை விட்டே ஒதுங்கிக் கொண்டார். அமெரிக்காவில் பையனோடு போய் செட்டிலாகிறேன் என்று போயே போய்விட்டார் மனிதர். அதற்குப்பிறகு சாமுராய் படத்திற்குக்கூடப்போகவில்லை..

அப்புறம் "லாடம்" ஒரு படம். கருமம். அதை எந்த வரிசையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. வசனத்தை எல்லாரும் இழுத்து இழுத்துப் பேசினார்கள். அதிலும் சார்மியும், அந்த புது ஹீரோவும் நடு ராத்திரியில் ஒரு லைட் இல்லாத வீட்டில் பேசும் பைத்தியக்காரத்தனமான வசனத்தைப்பார்த்தேன். பழைய காலத்து வசனங்களையும், வடிவேலு ஜோக்குகளையும் கேனத்தனமாக பேக்கிரவுண்ட் பீஜியம் ஒலிக்க பார்த்ததில் கேராகிப் போனது. அதற்குப்பிறகு பிரபு சாலமன் படத்தையே பார்க்கக் கூடாது என்று முடிவு செய்திருந்தேன். "கொக்கி" அவரது டைரக்ஷனா என்று தெரியவில்லை. இருந்தாலும் அதுவும் ஒரு சுமார் படமே...


இப்போது மைனா என்றொரு படம். ரெட் ஜெயண்ட் மூவீஸ் டிஸ்டிரிபியூஷன் என்று போட்டபோதே............. ஓக்கே படத்தில் என்னமோ மேட்டர் இருக்கிறது.. அதுதான் ஒரே அமுக்காக அமுக்கி விட்டார்கள் என்று புரிந்தது. அங்கங்கே படித்த ரிவ்யூக்களும், ஆனந்த விகடன் வசனமும், டிவிக்களில் வந்த பேட்டிகளும், ஜில் பின்னணியில் எடுத்த பாடல்களும், இதோ முதல் பாராவில் வந்தது போன்ற நண்பர்களின் வாய்மொழி விமர்சனமும்.......... மைனா படம் நன்றாயிருக்கிறது என்கின்றன..

மைனா பார்க்கப் போகவேண்டும்.
-------------------------------------------------------

எனக்கென்னவோ டிவிடியில் படம் பார்ப்பது ஒன்றும் பெரிய குற்றம் போல் தோன்றவில்லை. திருட்டு டிவிடியில் பார்ப்பது தான் தப்பு. என்னய்யா குழப்புகிறாய் எனாதீர்கள். படம் ரிலீஸாகும் போதோ அல்லது இரண்டு மூன்று நாள் கழித்தோ எப்படியும் அந்தப்படத்தின் திருட்டு டிவிடி வரத்தான் போகிறது. அதற்கு..........பேசாமல் தயாரிப்பாளர்களே டிவிடியும் வெளியிட்டு விட்டால்?

-------------------------------------------------------

அப்புறம் இன்னோரு மேட்டர்...........

தயவு செய்து எந்த எம்.எல்.எம் ஆக இருந்தாலும் போய் சேர்ந்து தொலையாதீர்கள். அன்பர் தொப்பி தொப்பி அவர்கள் ப்ளாக்கில் "ஒரே நாளில் கோடிஸ்வரன் ஆவது எப்படி?"என்ற பெயரில் பதிவு ஒன்றை பார்த்தேன். நச்சென்று எழுதியிருந்தார்..

நானும் அந்த மாதிரி எல்லாம் மாட்டிக்கொள்ளாமல் உஷாராக இருந்தவன்தான். ஏதோ ஒரு முறை நண்பர் ஒருவர் சொன்னார் என்று போய் ஒரு எம்.எல்.எம் கான்செப்டில் மாட்டிக்கொண்டேன். கம்பூட்டர் லேப்டாப் தயாரிப்பில் பேமசாக இருந்து விட்டு இப்போது மொபைல் போன் தயாரி்க்கத் துவங்கி விட்டிருக்கும் ஒரு கம்பெனி அது. அவர்கள் செய்த மூளைச்சலவையை நம்பி நானும் (ஜஸ்ட்) ஆறாயிரம் கொடுத்து ஒரு மொபைல் போன் வாங்கினேன். அதை எம்.எல்.எம் கான்செப்டில் சேர்த்திருந்தார்கள்.

அதாகப்பட்டது நாம் இரண்டு பேரை சேர்த்து விட வேண்டுமாம். அவர்கள் தலைக்கு இரண்டு பேராம். அவர்கள் தலை தலைக்கு இரண்டிரண்டு பேராம். இப்படி ஒவ்வொருவராக சேர்த்துக் கொண்டே போனால் ஆளுக்கு ஆறு பாயிண்ட் தருவார்கள். நிறைய பாயிண்ட் சேர்க்க சேர்க்க காரு வாங்கலாமாம், வீடு வாங்கலாமாம், கோடீஸ்வரன் ஆகலாமாம், அந்தக் கம்பேனிக்கே டைரக்டராக ஆகிவிடலாமாம். அடங்கப்பா சாமி... முடியல.. ஆனாலும் அதையும் நம்பி பணம் கட்டிய என்னை என்னவென்று சொல்வது?



என்னை நம்பி வேறு இன்னும் நாலு பேர் வாங்கத் தயாராக இருந்தார்கள். போனை வாங்கி பத்து நாள் கூட முடியவில்லை. டச் ஸ்கிரீன் அவுட்டு (டச் ஸ்கிரீன் இல்லாமல் அந்தப்போனை ஆபரேட் செய்யவே முடியாது). எஸ்.எம்.எஸ்ஸில் டிக்ஷனரி ஆப்ஷன் இல்லை. கீ பேடு மகா கஷ்டப் படுத்தியது. போன் மெமரி வெறும் முன்னூறு தான். பார்ப்பவர்கள் எல்லாம் கிண்டல் செய்தார்கள். ஒழுங்காக ரெண்டாயிரம் கொடுத்து ஒரு சைனா போன் வாங்கியிருக்கலாமில்லை என்று. அதில் உள்ள ஆப்ஷன்களில் ஐம்பது சதம் கூட இதில் இல்லை. போய்க்கேட்டால் இந்தப்போன் உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் போன். கோடி வேணுமா? ஆப்ஷன் வேணுமா? என்றார்கள். முதல் வேலையாக என்னை நம்பியிருந்தவர்களுக்கெல்லாம் போனைப்போட்டு தயவு செய்து வாங்காதீர்கள் என்று சொன்னேன்.

ஒருவாரம் வெளியூரில் மாட்டிக் கொண்டு வந்த ஆபீஸ் போன்களையும் அட்டெண்ட் செய்ய முடியாமல் பட்ட கஷ்டத்தைப்பார்த்து அந்தப்போனே அழுதிருக்கும். ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக போனையும் டப்பாவோடு பேக் செய்து கடாசி விட்டேன். (அந்த மாதிரி நிறைய போன் திரும்பி வந்ததாம்) மாசம் ரெண்டாச்சு. அந்தப் போனுக்கு ரீப்ளேஸ்மென்டும் வரவில்லை, அந்தக்காசும் இன்னும் திரும்பி வரவில்லை.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
-------------------------------------------------------

18 கருத்துகள்:

  1. தங்களின் வலைப்பூ தமிழியில் [ http://thamili.com/pathivukal/ ] இணைக்கப்பட்டு விட்டது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். மறக்காமல் எமது வலைப்பட்டியை தங்களது தளத்தில் இணைத்துவிடவும். ஏதேனும் சந்தேகங்களுக்கு என்னை அணுகவும். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. Chinna pasanga school samacharam, chinna vayasu love, vayasukku varrathu, climax murder ... intha madiri matter llama padame vara mattenguthu... nalla fancy ya city subject storyee evanugalukku kedaikathu pola...

    பதிலளிநீக்கு
  3. உங்களுடைய Writing Style அருமையா இருக்கு... தொடர்ந்து இதே மாதிரி எழுதுனீங்கன்னா நல்ல எதிர்காலம் நிச்சயம் உண்டு... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. அருமையா எழுதியிருக்கீங்க.. யெஸ்கா

    பதிலளிநீக்கு
  5. // @ abdoul razack சொன்னது…
    your writting style amazing, keep it up //

    அமேஸிங்னு சொல்ற அளவுக்கு என்ன இருக்குன்னு தெரியல.. இருந்தாலும் நன்றி.... ஆனா என்னுடைய ப்ளாக் ஒரே நாளில் ஆயிரம் ஹிட்ஸ் பார்த்தது இன்றைக்கு தான். எப்படின்னு புரியல..........

    பதிலளிநீக்கு
  6. // தமிழி சொன்னது…
    மறக்காமல் எமது வலைப்பட்டியை தங்களது தளத்தில் இணைத்துவிடவும்//
    எப்படி இணைப்பது என்று தெரியவில்லை.. கொஞ்சம் உதவுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. // philosophy prabhakaran சொன்னது…
    உங்களுடைய Writing Style அருமையா இருக்கு... தொடர்ந்து இதே மாதிரி எழுதுனீங்கன்னா நல்ல எதிர்காலம் நிச்சயம் உண்டு... வாழ்த்துக்கள்...//

    நீங்களுமா? அன்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. // Chinna pasanga school samacharam, chinna vayasu love, vayasukku varrathu, climax murder ... intha madiri matter llama padame vara mattenguthu... nalla fancy ya city subject storyee evanugalukku kedaikathu pola... //
    நேட்டிவிட்டி நேட்டிவிட்டினு சொல்லி சாவடிக்குறாங்க.. எந்தப் போஸ்டரை பார்த்தாலும் நாலு பேர் அருவாவோட, இல்லாட்டி சட்டையில்லாம, அவ்வளவு ஏன்? மிளகான்னு ஒரு படத்து போஸ்டர்ல நாலு பேரு ஜட்டி கூட இல்லாம நின்னானுங்க... கருமம். இது என்ன நேட்டிவிட்டியோ....

    பதிலளிநீக்கு
  9. // Cable Sankar சொன்னது…
    :)) //

    தலைவரே...... நீங்கள்லாம் (+ ஜாக்கி சேகர் ரெண்டு தடவை) என்னோட ப்ளாக்குல எட்டிப்பாத்துருக்கீங்களா? ரொம்பவே சந்தோஷம். இன்னைக்கு நைட்டு சாப்பாடு எறங்காது..

    பதிலளிநீக்கு
  10. // பிரியமுடன் ரமேஷ் சொன்னது…
    அருமையா எழுதியிருக்கீங்க.. யெஸ்கா //
    ரொம்பவும் நன்றி ரமேஷ்..........

    பதிலளிநீக்கு
  11. // anu சொன்னது…
    Very nice flow.Good article//
    புளோவுல........................

    வடிவேலு: ஏம்பா, ஆபீஸரை எதும் வாடா போடான்னு சொன்னே......
    அர்ஜூன்: ஒரு புளோவுல வந்துருக்கும் ஏட்டய்யா..
    வடிவேலு: புளோவுலலலலலல............... சரி, வேற ஒண்ணும் வரலையே........
    அர்ஜூன்: புளோவுல அப்பப்ப கெட்ட வார்த்தைலாம் வரும்..........

    பதிலளிநீக்கு
  12. take care. கஷ்டப் பட்டு சம்பாதிச்ச பணம் இல்லையா?

    பதிலளிநீக்கு
  13. கதைகள் மக்களிடம் மற்றும் இந்த சமூகத்தில் மாற்றத்தை தரக்கூடியதாக இருக்க வேண்டும்.. ஆனால் தற்போது வெளிவரும் கதைகள் , காப்பியடிக்கப்படுகின்றன.. பருத்தி வீரன் ஹிட் ஆனதால் ,வழக்காடு மொழியும்,கிராமத்துக் கதையும் மூலதனமாகக் கொண்டு பல படங்கள் வந்துவிட்டன..
    உங்கள் படைப்பு அருமை... keep on posting...

    பதிலளிநீக்கு
  14. // kousalya சொன்னது…

    கதைகள் மக்களிடம் மற்றும் இந்த சமூகத்தில் மாற்றத்தை தரக்கூடியதாக இருக்க வேண்டும்.. //

    கண்டிப்பாக.. எஸ்.ரா அடிக்கடி சொல்லும் கருத்து இது.. கதை கேட்டு வளர்ந்த சமூகம் தானே இது..

    //பருத்தி வீரன் ஹிட் ஆனதால் ,வழக்காடு மொழியும்,கிராமத்துக் கதையும் மூலதனமாகக் கொண்டு பல படங்கள் வந்துவிட்டன.. //

    இதுவும் உண்மையே.. பதினாறு வயதினிலே வில் பாரதிராஜா ஆரம்பித்து வைத்த இந்த டிரெண்ட் அடங்க ரொம்ப வருஷங்கள் ஆனது.. அவர் விட்டாலும் ராமராஜன் விடவில்லை.. கொஞ்சம் கொஞ்சமாக ரவுடி படங்கள், ஹீரோயிசம் பேசும் படங்கள், காமெடி படங்கள், என்றெல்லாம் மாறி மீண்டும் பருத்தி வீரனுக்குப்பிறகு கிராமத்து சாம்ராஜ்யம். ஆனால் எதுவும் இயல்பாயில்லை.. பொறுக்கி ஹீரோ.. அவனது ஹீரோயிசம்.. அதுவும் தனது இரண்டாவது படத்திலேயே பறந்து பறந்து சண்டை போடும் ஹீரோ நடிகர்கள் என ரொம்பவும் வீணாய்ப்போய்க் கிடக்கிறது தமிழ்சினிமா...

    பதிலளிநீக்கு