புதன், 24 நவம்பர், 2021

Bynge Tamizh ன் "தக்காளி பற்றி ஒரு ஹைக்கூ கவிதை சொல்லுங்களேன்" போட்டி

Bynge Tamizh ஃபேஸ்புக்கில் இரண்டு நாட்கள் முன்பு "தக்காளி பற்றி ஒரு ஹைக்கூ கவிதை சொல்லுங்களேன்!" ன்னு ஒரு போட்டி அறிவிச்சிருந்தாங்க. அதில் நானும் ஒரு சில கவிதைகள் போட்டு விட்டேன். ஹைக்கூ இலக்கணம் எனக்கு அவ்வளவா தெரியாது. முயற்சி பண்ணுவோம்னு போட்டது. இது கவிதையா? ன்னு மட்டும் கேட்டுறாதீங்க. 

---------------------------------------------------- 

இன்றாயிருந்திருந்தால்

50 கேஜி தக்காளி 

என மதுமிதாவை 

வர்ணித்திருப்பான் 

விசுவநாதன்

---------------------------------------------------- 

அடிபட்டால் இனி

தக்காளிச் சட்னி கூட

வரவாய்ப்பில்லை

ஏழைக்கு

---------------------------------------------------- 

நீர்மத்தங்கம்

பெட்ரோல்.போல்

இனி நீ

சிவப்புத் தங்கம்

---------------------------------------------------- 

வறுமையின் நிறம்

சிவப்பு

விலையேறிப்போனது

இந்த சிவப்பு

---------------------------------------------------- 

தினமும் ஏறும்

தினமும் இறங்கும்

பெட்ரோலல்ல

தக்காளி.

---------------------------------------------------- 

ஏழைகளின் ஆப்பிள்

இன்று ஆனது

ஏழைகளுக்கும் ஆப்பிள்

---------------------------------------------------- 

நேரம் கெட்டால் ரோட்டிலே..

நேரம் வந்தால் உச்சியிலே

தக்காளி

---------------------------------------------------- 

வீட்டிலே ரேஷன்

ஆனது தக்காளி.

நாட்டிலே தருவரா

ரேஷனில் தக்காளி?

---------------------------------------------------- 

வியாழன், 18 நவம்பர், 2021

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை

 வீட்டில் பெரியவர்கள், வயதானவர்கள் யாரும் இல்லாததாலோ என்னவோ, இந்த சனிக்கிழமை எண்ணெய் தேய்க்குறது, 6 மணிக்கு மேல வீடு கூட்டக் கூடாது, அமாவாசை தர்ப்பணம், காக்கா சோறு, சாமி பாட்டு போடுறது, மந்திரம் சொல்றது, சாமிக்கு நேர்ந்துக்குறது, காசு முடிஞ்சு வைக்கிறது, வாரம் தவறாமல் கோவில் போவது, சாம்பிராணி போடுறது, கண்ணு படுறது, கண் திருஷ்டி, ஞாயிற்றுக்கிழமை சுத்திப்போடுறது, ராகுகாலம், எமகண்டம் பார்க்கறது, தாயத்து கட்டுறது, அகால நேரத்தில் வெளியே போகக்கூடாதது, மசூதில போய் பாடம் போடுறது, போன்ற எந்த டிரெடிஷனல் விஷயங்களும், பழம் நம்பிக்கைகளும், வீட்டில் விவாதிக்கப்படுவதும் இல்லை. கடைப்பிடிக்கப் படுவதும் இல்லை. 

இவை எல்லாம் சரியா, தவறா என்று விவாதிக்காமல், அதைப் பற்றியே யோசிக்காமல் இரண்டு, படித்த, இந்தத் தலைமுறையினர் (சரி...... கொஞ்சம் வருஷம் முந்தைய தலைமுறை) லாஜிக் பார்த்து கேஷூவலாக நடத்தும் குடும்பம் எங்களுடையது. அதிலும் இந்த கண் திருஷ்டி விஷயமெல்லாம் நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தோம்.

ஆனால் சில சமயம், சில பேர், சில விஷ வித்துக்கள் ஒரு விழாவில் எங்காவது சந்தித்தால், "நாம நல்லா இருக்கோம்" என்று சொல்லி விடக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள். பழைய ஸ்டைலில் "எங்கங்க? கையி வலிக்கிது, காலு கொடையுது, கடன் இருக்குது, கஷ்டப் படுறோம்" என்று சொல்லக் கேட்டால் உள்ளூர சந்தோஷப்படுகிறார்கள். "பாவம் கஷ்டப்படுறான்" என்று இன்னும் நாலு பேரிடம் போய்ச் சொல்வதிலும் அவர்களுக்கு ஒரு ஆனந்தம். "நல்லா இருக்கேன்" என்றால் போதும் (பவர் ஆஃப் பாஸிடிவ் திங்க்கிங் தியரிப்படி எவ்வளவுக்கெவ்வளவு நாம் நல்லா இருக்கோம்னு நினைக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நம் வாழ்க்கை நன்றாக அமையும்) அவ்வளவு பொறாமை பொங்கி வழிய, ஒரு பெருமூச்சை இழுத்து விடுகிறார்கள் (சோலி முடிஞ்சுது) "என்னமோப்பா? அந்த லோன் முடிச்சிட்டியா? இந்த லோன் முடிச்சிட்டியா? அங்க வருமானம் எவ்ளோ வருது? சம்பளம் எவ்ளோ வருது?" என்று ஒரு என்கொயரி. (இதையே கேஷூவலாகவும், அன்புடனும் கேட்பவர்கள் வேறு கேட்டகிரி, அவர்களைப் பற்றி இப்போது பேச்சில்லை). 

சமீபத்தில் இப்படி ஒரு சம்பவம். ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி ஒரு அம்மணி நல்லா பொங்கிட்டுப் போயிருச்சி. கடந்த 15 நாளாக அது சம்பந்தப் பட்ட விஷயத்தில் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறேன். ஃபினான்ஷியலாகவும், வேறு சில பிரச்சினைகளுமாக சரியான குடைச்சலாக இருக்கிறது. எப்படா அந்தப் பிரச்சினையில் இருந்து வெளியே வருவோம் என்று இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது தான் இந்தக் கண் திருஷ்டி போன்ற நெகடிவ் விஷயங்களெல்லாம் இருக்குதப்பா, இனிமே இப்படிப்பட்ட ஆட்கள் கண்ணுல படாம இருந்துக்கணும்னு தோணுது. 

மறுபடியும் முதல் பாராவைப் படிங்க. இனிமே, அப்பாம்மா இருந்தப்ப என்னென்ன பழக்கங்கள் செய்வாங்களோ அதையெல்லாம் ஒன்னொன்னா கொண்டு வந்துரலாமானு தோணுது. "முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை".

19 நவம்பர் 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

வெள்ளி, 12 நவம்பர், 2021

சூரரைப் போற்று - கின்டிலில் கோபிநாத்

சூரரைப் போற்று படம் ஒரு பக்கம்.

சில மாதங்கள் முன்பே, இந்தப் படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் - உடைய (திரைப்பட சுவாரஸ்யத்திற்காகபுனைவுகள் சேர்க்கப்பட்ட) வாழ்க்கை வரலாறு என்று கேள்விப்பட்டதும் அவருடைய "வானமே எல்லை" புத்தகத்தைத் தரவிறக்கிப் படித்தேன். கின்டிலில் கிடைக்கிறது. Simply fly - A deccan Odyssey என்ற பெயரில் அவர் எழுதிய ஆங்கில மூலத்தின் தமிழாக்கம்.
"அன்ப்ரெடிக்டட் லைஃப்" என்று சொல்வார்களே அதற்கு பக்கா உதாரணம் இவருடைய கதை. எந்த ஒரு தொழிலதிபரும் என் நிறுவனத்திற்காக பெரும் ரிஸ்க் எடுத்தேன் என்றெல்லாம் சொல்வார்கள். அந்த ரிஸ்க்கையெல்லாம் தூக்கி ரஸ்க்கு மாதிரி சாப்பிட்டவர் இவர். ஒரே வாழ்க்கையில் ஒரு மிலிட்டரி மேனாக ஒரு வாழ்க்கை, ஒரு விவசாயியாக ஒரு வாழ்க்கை, ஒரு விமான நிறுவன அதிபராக ஒரு வாழ்க்கை எனக் கிட்டத்தட்ட நான்கு விதமான வாழ்க்கைகளை வாழ்ந்திருக்கிறார்.
படத்தை விடுங்கள். வணிகக் காரணங்களுக்காக நிறைய காம்ப்ரமைஸ் செய்து தான் எடுத்திருப்பார்கள். அல்லது, அட் லீஸ்ட் நேரம் காரணமாக நிறைய விஷயங்கள் குறைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், விருப்பமும் நேரமும் இருந்தால் கேப்டன் கோபிநாத்தின் புத்தகத்தைத் தரவிறக்கிப் படியுங்கள். அதுவும் ஒரு தொழில் முனைவோராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.


உங்கள் மனம் சோர்வு அடையும் போது "என்னைப்பாருப்பா" என்று உங்கள் மனக்கண்ணில் கோபிநாத் வந்து நிற்பார்.
பிற்சேர்க்கை - இப் பதிவை ஒரு மூவி குரூப்பில் போட்டதும், வதவதவென்று "பி.டி.எஃப் அனுப்புங்க", "பி.டி.எஃப் அனுப்புங்க", என்று கமெண்ட்களில் ஏகப்பட்ட கோரிக்கைகள். அதில் சிலர் "பி.டி.எஃப் அப்லோட் செய்யப்பட்ட வெப் சைட்டுகள் உள்ள ஏதோ லிங்குகளையும் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இது போக எனக்கு இன்பாக்ஸ் கோரிக்கைகளும் வந்தன. என்னிடம் பி.டி.எஃப் இல்லை. கின்டில் மூலம் படித்தேன் என்றதும் ஏமாற்றம் அவர்களுக்கு.

12 நவம்பர் 2020 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

சூரரைப் போற்று - விட்டுப்போன ஹெலிகாப்டர் சர்வீஸ்

மு.கு - ஸ்பாய்லர் இருக்கலாம்.

படத்தில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் கேப்டன் கோபிநாத் வாழ்க்கையில் நடந்தவையே. விமான விபத்து, மல்லையா பேரம் பேசுதல் உட்பட. திரைப்படத்தின் வடிவத்திற்காக சில புது கதாபாத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, மிலிட்டரி கதை, விவசாயி கதைகள் தேவைக்கேற்ப சுருக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் நிறுவனம் கதையில் வரவே இல்லை.
நிஜத்தில் மல்லையா பேரம் பேசுவது ஏர் டெக்கான் வெற்றி பெற்ற பிறகு. படத்தில் முன்பே பேசுவது போல காட்டப் படுகிறது. அதே போல் நிஜத்தில் மல்லையா பேரம் பேசி கம்பெனியை வாங்கியே விடுவார். இப்போது அதன் பெயர் "சிம்ப்ளிஃபை டெக்கான்" கிங்ஃபிஷர் பறவையின் லோகோவுடன்.
க்ளைமாக்ஸில் பெயர் போடும்போது காட்டப்படும் - ஃபிளைட்டில் பறக்கும் எளியோர்களின் சென்டிமெண்ட் கதைகள் ஏர் டெக்கானுக்கு மட்டும் நடந்தவை அல்ல. ஏர் டெக்கானுக்கும் முன்பே, கேப்டன் கோபிநாத் துவங்கிய "டெக்கான் ஏவியேஷன்" எனும் ஹெலிகாப்டர் சர்வீஸில் நடந்த உண்மைக் கதைகள்.
உண்மையில் சொல்லப்போனால் அதுதான் "ஏர் டெக்கான்" எனும் குறைந்த விலை ஏர் சர்வீஸை ஆரம்பிக்க கோபிநாத்துக்கு உந்துதலாக இருந்தது.

12 நவம்பர் 2020 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது