வெள்ளி, 31 டிசம்பர், 2010

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி

-----------------------------------------

முதலில் ஒரு விஷயம். இது என்னுடைய பதிவு அல்ல. கடந்த ஒரு வாரமாக இது மெயில் மூலமாக மூன்று, நான்கு நண்பர்களிடம் இருந்து வந்து கொண்டே இருந்தது. இதை நீங்கள் கூட எங்காவது படித்திருக்கலாம்.... அதனால் இதைப் பதிவாகப்போட வேண்டாம் என்று நினைத்தேன்.

ஆனால் இதைப்படித்து விட்டு என்னால் சிரிப்பு தாங்க முடியவில்லை. ஆதித்ய பிர்லாவில் இருக்கும் போது, XXX என்ற மிகப்பிரபல சாஃப்ட்வேர் கம்பெனியில் இருந்து ஒரு நான்கைந்து பேர் கொண்ட பெரிய டீமே இந்த மாதிரி "Maintenance and Support" என்று புரியாத விஷயங்களைச்சொல்லி ஒவ்வொரு விஷயத்துக்கும் நாள் கடத்திக்குழப்புவார்கள். அதிலும் ஒரு பெண் இருப்பாள். குறைந்தது ஒரு நாளைக்கு நாலரை மணிநேரம் அங்கும் இங்கும் நடந்து கொண்டே செல்ஃபோனில் பேசிக்கொண்டே இருப்பாள்.

அவள் எங்கள் நேரடி எம்ப்ளாயீ கிடையாது என்பதால் யாரும் அவளை கேள்வி கேட்க முடியாது. யாராவது அவளை முறைத்தாலும் அவளது டீம் மெம்பர் ஆபத்பாந்தவன் வந்து கூட்டிக்கொண்டு போய்விடுவான். இரண்டும் சேர்ந்து சேட்டிங்கில் உட்கார்ந்தால் அதில் ஒரு இரண்டு மணி நேரம் போகும். அப்புறம் சனிக்கிழமையானால் வரவே மாட்டார்கள். வாராவாரம் மீட்டிங் என்று ஒரு அரை நாள் போடுவார்கள்.

அதேபோல் எனக்குத்தெரிந்த பெண்ணொருத்தி இப்போது XXXXXXX என்ற கம்பெனியில் பணிபுரிகிறாள். அவளும் இப்படித்தான் "பெஞ்ச், சேர், க்ளையண்ட் லொக்கேஷன்" என்று சொல்லி கதை அளப்பாள். அவள் கதையைக்கேட்டாலும் ஒரே காமெடியாக இருக்கும். சரி, அதெல்லாம் கிடக்கட்டும், விடுங்கள். மேட்டரைப்படியுங்கள்.

-----------------------------------------

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
-
"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".



"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கனு கேப்பாங்க.
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"
-
இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants. ...".

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.



அப்பா : "இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MS-னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

அப்பா : "முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" –

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

அப்பா : “சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?”

“அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்”

அப்பா : "500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒண்ண நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐயோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.
-
"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.
-
அப்பா : "CR-னா?"
-
"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."
-
அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

அப்பா : "இதுக்கு அவன் ஒத்துபானா?"
-
"ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

அப்பா : "சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."
அப்பா : "அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது."



அப்பா : "அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –
-
அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பான்னு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறதுதான் இவரு வேலை."
-
"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

அப்பா : "எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."
-
அப்பா : "நான் உன்னோட அம்மா கிட்ட பண்ற மாதிரி?!"



"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."
-
அப்பா : "இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர் வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

அப்பா : "அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.

அப்பா : புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம்கறது மாதிரி."
"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"



அப்பா: "கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."
-
அப்பா : "எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.

அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

அப்பா : "சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."
-
"அப்புறம்?"

"அவனே பயந்து போய்,
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"
புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."

இதுக்கு பேரு "Maintenance and Support".
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி.
தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.


அப்பா : "எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுச்சிப்பா."

-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

சுஜாதா எழுதிய // "ரிசப்ஷன் 2010" //

போன பதிவில் வெளியிட்டிருந்த சுஜாதா பற்றிய குறிப்பை படித்து விட்டு நண்பர்கள் நிறைய பேர் அந்த // "ரிசப்ஷன் 2010" // கதையின் லிங்க்கை அனுப்புங்கள் என்று மெயிலியுள்ளார்கள். சிலர் அந்தக் கதையை கட், காபி, பேஸ்ட் செய்து மெயில் அனுப்புமாறு மெயிலியிருந்தார்கள்.

அந்தக் கதைக்கு என்னிடம் லிங்க் கிடையாது. விகனுக்கு ஆன்லைனில் பணம் கட்டி சப்ஸ்க்ரிப்ஷன் எடுத்திருக்கிறேன். வேண்டுமானால் கட் காபி பேஸ்ட் செய்து மெயில் அனுப்புகிறேன் என்று சொல்லியிருந்தேன். சொன்னபடி சிலருக்கும் அனுப்பியாயிற்று. இன்னும் சிலர் நீ அதை மெயில் அனுப்பாதே, ஆபீஸில் ஜி.மெயில் ப்ளாக் செய்திருக்கிறார்கள். பார்க்க முடியாது, பேசாமல் உன் பதிவில் போட்டுவிடு என்று சொன்னதனால் அவர்கள் அனைவரின் அன்புக்கிணங்கி தானைத் தலைவர், எழுத்துலகத்தின் வாத்தியார் சுஜாதா அவர்கள் எழுதிய // "ரிசப்ஷன் 2010" // கதையை இங்கே வெளியிடுகிறேன்.

முதலில் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. இதை இங்கே வெளியிடலாமா? என்று. அப்புறம், இலட்சக் கணக்கான பேர் படிக்கும் விகடனே அதை வெளியிட்டு விட்ட பிறகு சிலநூறு பேர் படிக்கும் என் ப்ளாக்கில் வெளியிட்டால் என்ன? என்றே தோன்றியது.

ஸோ................................. இதோ

------------------------------------------------------

ரிசப்ஷன் 2010

சுஜாதா

ஆறரைக்கு ரிசப்ஷன் என்று ராமலிங்கத்தின் வி-மெயில் அறி வித்தது. ஏழரைக்கு ஏர்போர்ட்டில் ஒரு

ஐகான் இருந்ததால், ஆறு பதினாலு நாற்பத்தேழுக்கே புறப்பட்டுவிட்டேன். ஹாலந்தில் இருந்து ட்யுலிப் மலர்க்கொத்து காரில் காத்திருந்தது. ராமலிங்கத் துக்குப் பிடித்த பானமான 'மே 22’ ஒரு காஸ்க் கொள்ளை விலை கொடுத்து வாங்கி வைத்திருந்தேன். கல்யாணத்துக்குப் பொருந்தாத பரிசுப்பொருளோ என்று யோசித்தேன். வேறு என்ன கொடுப்பது?

எல்லாப் புத்தகங்களும் வலையில் உள்ளன. ராஜேஸ்வரியருகில் பார்க்கிங் இருப்பதாக ஜிபிஎஸ் சொன்னது. மாடி எண்ணை பைக் கணினி மனப்பாடம் செய்துகொண்டதற்கு அறிகுறியாக பீப்பியது. லிஃப்ட்டில் இறங்கி க-மண்டபத்தில் நுழையும்போது Aruna weds Ramalingam என்று பாலிமர் எழுத்துக்கள் பொருத்திக் கொண்டிருந்தார்கள். சீக்கிரம் வந்துவிட்டதால் மெள்ள நடந் தேன்.

மணமக்களின் மேடை காலியாக இருந்தது. ஆர்க்கெஸ்ட்ரா ஸின்தரானைச் சுருதி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ரிசப்ஷன் பெண்கள் நீல ரோஜா மலர்களையும், லோ காலரி கல்கண்டையும் தட்டில் அமைத்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி குஜராத்தி உடையில் சூப்பராக இருந்தாள். பழக்கதோஷத்தில் ''நீங்க ராமலிங்கத்துக்கு உறவா?'' என்று கேட்டேன்.



''இல்லைங்க... நாங்க கன்ட்ரோல்ல டைனமிக்ஸ் ஹாஸ்டர்ஸ்ங்க..!''

போச்சுடா, ரோபாட்!

இப்போதெல்லாம் மனிதர்க ளுக்கும் இயந்திரங்களுக்கும் வேறுபாடே இல்லை. கன்னக்குழி கூட அப்படியே செய்கிறார்கள். உரித்துப் பார்த்தால்தான், அந்தரங்க முடி அக்ரிலிக் என்று தெரியும். ஒருமாதிரி லூபாயில் வாசனை வரும்.

அந்தப் பெண் 'களுக்’ என்று சிரித்தாள். அதைப் பார்த்தால் கவியரசு கணிதாசன் சொன்னது போல, ''ஏமாந்த கவிஞர்கள் எழுநூறு கவிதை செய்வர்!''

ஏகதேசம் காலியாக இருந்த ஹாலில் போய் வீற்றேன்.

''ஹாய்ஸ்ஸ்ஸத்யா... என்ன இவ்வளவு சீக்கிரம்...?'' என்றபடி வந்தான் ராமலிங்கம். கருநீல சூட் அணிந்து, ஸ்ப்ரே தெளித்து வாரி யிருந்தான். கல்யாணத்துக்கென்று முடியை வைக்கோல் நிறத்துக்கு மாற்றியிருந்தான். மூக்கைத் திருத் தியிருந்தான்.

''எங்கே, வாழ்க்கைப் படகில் உன்னோடு துடுப்புப் போடப் போகிற அருணா..?''

''அருணாவுக்குத்தான் காத்துக் கிட்டிருக்கேன். கமான்... வாழ்க் கைப் படகு, துடுப்பு... என்னடா 'ரொமான்டிக்’காயிட்டிருக்கே..? நீயும் கல்யாணம் பண்ணிக்க ணுமா..? அம்மாகிட்டே சொல் லவா?''

''ச்சே! 'ராமலிங்கம் கல்யாணத்துக்கு ஒப்புக்கிட்டானா’னு அம்மா ஆச்சரியப்பட்டுப் போயிட்டா. முதல்ல எப்ப சந்திச்சே..?''

''போன வாரம் நம்ம வெங்கி கல்யாணத்துல... லவ் அட் ஃபர்ஸ்ட் மில்லி செகண்ட்! ஒரே ரசனை, ஒரே சாப்பாடு, ஒரே கணிபாஷை எல்லாம். பிடித்த கவிஞர்கள்கூட ஒரே ஒரே... நூறாண்டு காலம் ப்ராஸ்தெட்டிக் வாழ்க்கை வாழ உத்தேசம்..! எக்ஸ்க்யூஸ் மி, அலங்காரமெல்லாம் ஆயிடுச்சுனு நினைக்கிறேன். நீ நேர்ல வர முடிஞ்சதுக்குச் சந்தோஷம். எல்லோரும் வி-மெயில்லயே நழுவறாங்க. ஒரு நிமிஷம்... அழைச்சுட்டு வந்துர்றேன்...''

மெள்ள மெள்ளக் கூட்டம் சேர ஆரம்பிக்க, ராமலிங்கம் அதில் மறைந்தான். வாசலை நோக்கி விரைந்தான். நான் அருணாவைப் பார்க்க ஆவலாகக் காத்திருந்தேன். ராமலிங்கத்தின் மனதைக் கவர்வது அத்தனை எளிதல்ல. எல்லாவற்றிலும் வித்தியாசமானவன். கணிமேதை. மேடைக்குச் செல்லும் முன், ஒரு முறை தெரிந்தான்.

கடிகாரம் 'ஆறு நாற்பது முப் பது’ என்றது. 'காலம் பொன்னானது’ என்று போதனை வேறு.

''ஷட் அப்..!'' என்றேன்.

''ஏர்போர்ட்டில் ஏழரைக்கு இருந்தாகணும். ப்ளேன் லேட்டா வதில்லை. என் கடமை சொல்ல வேண்டியது...''

''வர வர உனக்குப் பிரசங்கம் அதிகமாகிவிட்டது. ஒரு நாள் உன் ஆக்ஸிலியரி மெமோரியை நோண்டிவிடப்போகிறேன்...''

''நஷ்டம் உனக்குத்தான்; நானூறு ஷா. இன்னும் தவணையே முடியவில்லை'' என்றது.

ராமலிங்கம் நண்பர்கள் சூழ வந்தான். அவன் பின்னால் மறைந்திருந்த அருணாவைப் பார்த்தேன். கண்ணுக்கு மை தீட்டி, கன்னத்தில் சிவப்பு ஒத்தி, ஒரு வாட்டசாட்ட தேவதை போல...

வெயிட் எ மினிட்!

''அருணா... சொன்னேன் பார்த்தியா, இது என் அருமை நண்பன் சத்யா...''

நெருங்கினேன்.

''ஹாய், ஐம் அருணாசலம்!''

அவன் கைகுலுக்கல் மென்மையாக இருந்தது.
------------------------------------------------------

எப்படி? திகீரென்று இல்லை?

(பத்து வருடம் முன்னால் வெளியான கதை இது. இன்டர்நெட் கிடையாது. ஐ.டி இன்டஸ்ட்ரி கிடையாது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் கிடையாது. சாமியார் சரச சல்லாபங்கள் கிடையாது. ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் செய்து கொள்ளலாமா? வேண்டாமா? என்ற சர்ச்சைகள் கிடையாது. ஊர் ஓரளவுக்கு கொஞ்சம் அமைதியாகவும், ஒழுக்கமா(?)வும் இருந்த காலகட்டம் - அந்தக்கால கட்டத்தை வைத்து கதையை அணுகவும்)

------------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

சனி, 25 டிசம்பர், 2010

கலவை சாதம் (26/12/2010) மற்றும் சுஜாதா


விகடன் பொக்கிஷம் பகுதியில் தலைவர் சுஜாதா பத்து வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்த "ரிசப்ஷன் 2010" என்ற கதையை படிக்க நேர்ந்தது. கே (GAY) மேரேஜ் பற்றிய ஒரு கதை. கிட்டத்தட்ட இன்றைய நிலைக்கு ஒட்டி வந்திருந்தது. ஒரு ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்வதாகக் கதை. ஆனால் அது முழுமையாய் நடக்க இன்னும் இருபது வருடங்களேனும் ஆகும்.

"உண்மைக்கு மிக நெருக்கமாய் கதை எழுதுவது என்பது கத்திமேல் நடப்பது போன்றது" என்று ஒருமுறை சுஜாதாவே சொல்லியிருந்தார். "அது உடனே உண்மை வாழக்கை வெளியில் நடந்து விடுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்" என்று சொன்னார். ஒரு தேசியத் தலைவரின் படுகொலை பற்றிய சுஜாதாவின் கதை (பெயர் ஞாபகமில்லை) பிற்காலத்தில் ராஜீவ் காந்தி படுகொலை விஷயத்தில் நடந்தேறியது. அவரது விஞ்ஞானச் சிறுகதைகள் தொகுப்பில் உள்ள "திமலா" எனும் கதை, திருமலை திருப்பதிக்கு அனுமதி வாங்கி சுவாமி கும்பிடப்போகும் ஒரு ஹைடெக் தம்பதி பற்றிய கதை. அதுவும் இன்றைய காலகட்டத்திற்கு கிட்டத்தட்ட எழுபது சதம் நடந்தேறி விட்டது. திருமலாவுக்குச் செல்ல வேண்டும் என்றால் முன் அனுமதி தேவையாகி விட்டது.

கருப்பு, சிவப்பு, வெளுப்பு தொடர் வந்த போது குமுதத்திற்கும் சுஜாதாவிற்கும் எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை பலரும் அறிவார்கள். அதன் பின்னர் அது பெயர் மாற்றப்பட்டு ரத்தம் ஒரே நிறம் என்று வெளியானதும் சமீபத்தில் உயிர்மையில் தனிப்பதிப்பு கண்டதும் வரலாறு. "ஜில்லு" கதை வந்தால் போச்சு. அது இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் நடைபெறும் அணு ஆயுதப் போர் பற்றிய கதை. (கிட்டத்தட்ட அவர் வர்ணித்துள்ள கதைக் காட்சிகள் டாம் க்ருஸ் நடிப்பில் இயக்குனர் ஸ்பீல்பெர்க்கின் War of the worlds மற்றும் வில் ஸ்மித்தின் I am legend திரைப்படத்திலும் காட்சிகளாக விரிகின்றன.

"ரிசப்ஷன் 2010" கதைக்கு ஆன்லைனில் அருமையான சில பின்னூட்டங்களும் வந்திருந்தன வாசகர்களிடம் இருந்து. சில சாம்பிள்கள் இதோ............... 1. தீர்க்கதரிசி. என்ன, 2020ல் இதில் உள்ள எல்லாமே நடந்து விடும்(.இயல்பாக) 2. அதுதானே பார்த்தேன் சுஜாதாவை தவிர வேரு யாரால் முடியும் மிக நன்ரு 3. தலைவர் தலைவர் தான்...'gay marriage; பத்தி 10 வருஷம் முன்னாடியே....ஹ்ம்ம் 4. சுஜாதா இதையும் முன்னேயே எழுதிவிட்டாரா.. அபாரம்!

எப்படி?? சுஜாதா சுஜாதா தான் இல்லையா?
------------------------------------------------------------
ஷங்கர் இயக்கத்தில் தயாராகப்போகும் "3 இடியட்ஸ்" தமிழ் ரீ-மேக்கில் சூர்யா நடிப்பது உறுதியாகி இருக்கிறதாம். இந்த கேரக்டருக்கு முதலில் பேசப்பட்டிருந்தவர் நமது டாகுடர் என்பது தமிழ் கூறும் நல்லுலகத்தில் டிவிடி, திருட்டு விசிடி பார்க்கும் அனைவர் வரை தெரிந்த ஒரு ரகசியம். முதலில் விஜய் நடிப்பதாக இருந்து, பிறகு சூர்யா நடித்த 'அயன்’, 'சிங்கம்’ படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற சென்ட்டிமென்ட்டில் "3 இடியட்ஸு"ம் ஹிட்தான் என்று இப்போதே குஷியில் இருக்கிறதாம் சூர்யா தரப்பு. அது தவிரவும் தெலுங்கு பதிப்பிலும் மகேஷ் பாபுவுக்குப் பதில் சூர்யாவேதான் இடியட்டாம்.
------------------------------------------------------------

ஏதோ யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு செமை மேட்டர் சிக்கியது. ராவணன் படத்தைப் பாருங்களேன். ப்ருத்விராஜ், ஐஸ்வர்யா ராய், விக்ரம் காம்பினேஷன் தான் படத்தின் அடிநாதத்தை நகர்த்தும் கதாபாத்திர முடிச்சு. அவர்களது வயதைப்பாருங்களேன். முறையே 28 (ப்ருத்விராஜ்), 37 (ஐஸ்வர்யா ராய்), 46 (விக்ரம் ). கிட்டத்தட்ட இந்த வரிசையில் ஒவ்வொருவருக்கும் ஒன்பது வயது வித்தியாசம். விக்ரமுக்கு காலாகாலத்தில் திருமணம் ஆகியிருந்து சீக்கரமே பையன் பிறந்திருந்தால் அவனுக்கு ப்ருத்விராஜ் வயது ஆகியிருக்கும் இல்ல.......................?
------------------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

செவ்வாய், 21 டிசம்பர், 2010

கலவை சாதம் (22/12/2010)



நாஞ்சில் நாடன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறதாமே.. வாழ்த்துக்கள் ஐயா... அவரது கதைகளெல்லாம் பெயர் தெரியாத காலத்தில் படித்திருக்கிறேன். ஆனால் அவரை முழுக்க முழுக்க பரிச்சியப் படுத்தியது விகடன் தான். அதில் அவர் எழுதிய தீதும் நன்றும் தொடர் தான் அவரை ரசிக்க வைத்தது. பிற்பாடு இரு வருடங்கள் கழித்து நான் யூத்ஃபுல் விகடனில் சிலபல கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்த போது ஒரு தீபாவளி சமயத்தில் யூத்ஃபுல் விகடனில் எழுதுபவர்களுக்கெல்லாம் ஒரு பரிசு கொடுக்கலாம் என்று இருக்கிறோம் என்று மெயில் வந்தது. என்னவென்று பார்த்தால், தலைக்கு மூன்று மின் புத்தகங்கள் பரிசு என்று ஒரு லிஸ்ட் அனுப்பி அதில் ஏதேனும் மூன்று புத்தகங்களை தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள்.

நான் டிக் அடித்தது நாஞ்சில் நாடனின் "தீதும் நன்றும்", அது தவிர கம்ப்யூட்டர் பற்றிய புத்தகம் ஒன்று, மேலும் யுகபாரதியின் "தெருவாசகம்". எல்லாமே விகடன் வெளியீடுகள். விகடனில் வெளிவந்து பிற்பாடு புத்தகமாக உருப்பெற்றவை. நாஞ்சில் நாடன் எழுதியதில் எனக்குப்பிடித்தது (கருத்து மட்டும் தான் நினைவிருக்கிறது, வரிகளை அப்படியே நினைவு படுத்திக் கூற முடியவில்லை, எனவே என் வரிகளில் தந்திருக்கிறேன்)

"இரண்டு மூன்று படங்கள் ஹிட் கொடுக்கும் ஒரு தமிழ் சினிமா கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம். சில வருடங்களில் எங்கேயோ போய்விடுவான் அவன். வருடத்துக்கு நூறு (அதிகபட்சம் ஆயிரம் வரை) மாணவர்களை உருவாக்கும் ஒரு நல்லாசிரியருக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம். அந்த மனுஷன் மூன்று கோடியை சேர்க்க 3000 மாதங்கள் ஆகும். அதாகப்பட்டது சுமார் 250 வருடங்கள், எப்படி இருக்கிறது கதை? அப்புறம் எப்படி நாடு உருப்படும்?

------------------------------------------------------

அதே போல் சச்சினுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட உள்ளதாமே.. சூப்பர் இல்ல.. இந்த சச்சின், ஏ. ஆர். ரஹ்மான் போன்ற ஆட்கள் எல்லாம் இந்தியாவில் பிறக்க நாம் தான் அதிர்ஷ்ட சாலிகள். என்னமோ போங்கள் இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் விருது கொடுப்பதை விட்டு பிளைட்டில் புட்போர்டு அடித்த மாமனிதர்களுக்கெல்லாம் டாகுடரு பட்டம் கொடுக்கும் மாங்காய்களையெல்லாம் எந்த கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவதென்றே தெரியவில்லை. அந்தப் பட்டத்தைக்கொடுத்த மேதாவிகள் மேல் பாராவில் நாஞ்சில் நாடன் வருத்தப்பட்டு சொல்லியிருக்கும் பரிதாப வாத்தியார் ஜீவன்களில் கோஷ்டியைச் சேர்ந்தவை தான்.

------------------------------------------------------

ரத்த சரித்திரம் பாக்கணும். ரொம்பவும் ரத்தமாக இருக்கிறது என்றார்கள். பயமாயிருக்கிறது. பார்க்கலாமா? பார்த்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்கள். ஏழாம் அறிவு எப்பங்க வரும்?

------------------------------------------------------

அப்பபபபபபடிடிடிடியேயேயேயே வலை மேய்ந்து கொண்டிருந்த போது............. ஒரு கில்மா வெப்சைட் லிங்க் கிடைத்தது. அடல்ட்ஸ் ஒன்லி.. செமையாக இருக்கிறது. லிங்க் வேண்டுபவர்கள் என் ஈ.மெயில் முகவரியை கண்டுபிடித்து ரிக்வஸ்ட் அனுப்பினால் அந்த லிங்க்கைத் தரத்தயார். உண்மையிலேயே கிளுகிளு, ஜிலுஜிலு லிங்க். லேட் பண்ணாதீங்க... போனா வராது, பொழுது போனா கிடைக்காது. அதைப்பார்த்துட்டு நான் கெட்டவன்னு முடிவு பண்ணிணீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை....

------------------------------------------------------



இதை டைப்பிக் கொண்டிருக்கும் போது சன் டிவியில் "கடல் மேலே பனித்துளி" ஓடிக்கொண்டிருக்கிறது வாரணம் ஆயிரம் படத்தில் இருந்து..... அட்டகாசமான மெலடி... சூப்பர்ப் பிக்சரைசேஷன்.

விஷூவலைசேஷனில் லேசாக ஆளவந்தான் வாசனை வந்தாலும் இது ரொம்ப நன்றாக இருக்கிறது. அதில் கமல் தான் தெரிவார். ஆனால் இந்தப்பாட்டில் சூர்யா தெரியவில்லை. கல்யாணம் முடிந்து ஆறு மாதத்திற்குள் ஹனிமூன் போன ஒரு ஜில் ஜோடியின் பின்னாடியே கேமராவை தூக்கிக் கொண்டு போனது போல் இருக்கிறது. அந்த ஜோடியின் சின்னச் சின்ன சீண்டல்கள், சிணுங்கல்கள், கெஞ்சல், கொஞ்சல், வெட்கம், ஆசை, கூச்சம், பயம், தயக்கம், லேசாய் முளைக்கும் தைரியம் என எல்லாவற்றையும் அழகாய் காட்சிப் படுத்தியிருக்கிறார் கெளதம் மேனன்.. ஸாரி கெளதம் வாசுதேவ் மேனன்..

ஏற்காடு லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட் போனதெல்லாம் நினைவுக்கு வருகிறது........ ம்ஹ்ஹ்ம்ம்ம்...... கல்யாணத்துக்கு அப்புறம் ஜோடியாக ஒரு தடவை போய்வர வேண்டும். இந்தப்பாட்டில் சூர்யா எவ்வளவு உயரமாக, கம்பீரமாக, ஃபிட்டாக, ஆறு பையோடு (சிக்ஸ் பேக்கோடு) இருக்கிறார். சூப்பர் போங்கள்.

அய்யய்யோ கடவுளே, இந்தப்பாட்டு முடிந்தவுடனே சிங்கம் பாட்டு.

ஹேய்... எவ்ரிபடி லிசனு சம்பா, சம்பா, கும்பா... சம்பசம்பா.. ஹேய்... காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே... காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே..........ன்னு பாடிக்கொண்டே வருகிறார் சூர்யா... அனுஷ்காவுடன்....

அய்யய்யோ. என்ன ஆச்சு. திடீரென்று சூர்யா குள்ளமாகி விட்டார்? எப்படி? போச்சு போச்சு.. டிவியில் ரிலே ப்ராப்ளமா? எதும் ரிப்பேரா....? அப்பா அந்த ரிமோட்ட எடு.. வி டோன் அட்ஜஸ்ட் பண்ணேன்...... என்னாச்சுன்னு தெரியல.........

------------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...

------------------------------------------------------

திங்கள், 20 டிசம்பர், 2010

அப்பாடா டேட்டா கார்ட்.......... அப்புறம் சாருவின் "தேகம்"

எப்படியோ ஒரு வழியாக வேலை முடிந்து டேட்டா கார்ட் திரும்ப வந்து விட்டது. உடைந்த கையை மீண்டும் ஒட்ட வைத்தது போல் இருக்கிறது.

வந்த பிறகு ஒன்றும் பெரிய வெட்டி முறிக்கிற வேலை இல்லை. ஆனால் பயங்கர ரிலாக்ஸாக இருக்கிறது. மூவி டவுன்லோட், ஸாங் டவுன்லோட் என்று எதையும் செய்ய முடியாத படியான (ஆபீஸில் இருந்து கொடுக்கப்பட்ட) கனெக்ஷன் இது். ஆனால் டேட்டா கார்ட் இல்லாமல் ஆபீஸ் வேலை பார்ப்பதென்பது தான் ரொம்பவும் கொடுமை.

டேட்டா கார்ட் இல்லாத போது ஒவ்வொரு முறை ஈ.மெயில் அனுப்புவதற்காகவும் பிரவுஸிங் சென்டரில் போய் கியூவில் நின்று கொண்டு, அதுவும் லேப்டாப்பில் (தான் எம்.எஸ்.அவுட்லுக் போட்டு வைத்திருக்கிறேன். அதனால் லேப்டாப்பில்) கனெக்ட் செய்து கொடுங்கள் என்றால் சம்பந்தப்பட்ட சிஸ்டத்தில் அமர்ந்திருப்பவர் எழும் வரை உட்கார்ந்திருக்க வேண்டும். உட்கார்ந்திருக்கும் போது எதாவது ஃபைலை நோண்டலாம் என்றால் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விடும். சார்ஜ் போடலாம் என்றால் சார்ஜரை மறந்து விட்டு வந்திருப்போம். சார்ஜரை கொண்டு வந்திருந்தால் சார்ஜ் போடும் சாக்கெட் நமக்குத் தேவையான சிஸ்டத்தை விட்டு மிக தூரத்தில் இருக்கும். இருக்கும் சார்ஜை வைத்துக்கொண்டு பென்டிங் மெயில்களை அனுப்பி விட்டு புதிய மெயில்களை டவுன்லோட் செய்து கொண்டு செல்ல வேண்டும்.

வீட்டிலிருந்து பத்து நிமிட நடை தானே என்று ஈஸியாகச் சொல்லி விடலாம். ஆனால் பத்து நிமிடம் என்றால் ஷார்ப்பாக பத்து நிமிடமா ஆகும்? இல்லை. ஒவ்வொரு முறையும் கேஸை ஆஃப் செய்து விட்டு, எல்லா லைட்டயும் ஆஃப் செய்து விட்டு, ஹீட்டரை ஆஃப் செய்து விட்டு, வீட்டைப்பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு என்று இருபது நிமிஷ வேலை வைக்கும். போக இருபது, வர இருபது. கணக்குப்போட்டுக் கொள்ளுங்கள்.

இதில் மழை வந்தால் போச்சு. மழையிலேயே நனைந்து கொண்டே வீட்டிலிருந்து நடந்து வந்து மெயில் அனுப்பி விட்டு திரும்பி வீட்டுக்குப்போக வேண்டும். நாம் நனையாவிட்டாலும் லேப்டாப் நனையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிரவுசிங் சென்டர் 9.15க்கு க்ளோஸ். ஆக எட்டேமுக்காலுக்குள் போய் நிற்கவேண்டும். இல்லாவிட்டால் ஜென்டிலாக ஸாரி சொல்லி விட்டு ஷட்டரை இறக்கி விடுவார்கள். அப்புறம் பத்து மணிக்கு மேல் போய் சாப்பாட்டுக்கச்சேரியை ஆரம்பிக்க வேண்டும். ஓசூரில் மகா பிரச்சினை ஒன்று உண்டு அது குளிர். நடுக்கி எடுக்கும் குளிர். அதற்கு பயந்து கொண்டே ஆளாளுக்கு ஒன்பது மணிக்கே கடையை சாத்தி விட்டு போய் விடுகிறார்கள். பிறகு சிங்கி தான். அதாங்க சோத்துக்கு. மேகி, கெலாக்ஸ், ரெடி டு ஈட் வகையாக்களை கண்டு பிடித்த புண்ணியவான்களை கோயில் கட்டி கும்பிட வேண்டும் போலத்தோன்றும்.

எப்படியோ போங்கள். வந்து விட்டது அல்லவா? மற்ற வேலைகளை பார்க்கத் துவங்கலாம். சப் கலெக்டருக்கு டெமோ எடுத்தது, நீயா நானாவில் கலந்து கொண்டது, பாண்டிச்சேரி போய் பேக் வாட்டர்ஸ் போய் வந்தது, மைனா படம் பார்த்தது என இன்னும் எழுத வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.

ஆரம்பிக்கலாமா? ரெடி ஜூட்.

-----------------------------------------------------

சாருவின் தேகம்



சாருவின் தேகம் நாவல் நன்றாக இருக்கிறதாமே. ப்ளாக் வட்டாரம் முழுக்க ஒரே டாக் தான். பகீரென்று இருக்கிறது. திகீரென்று இருக்கிறது என்று. சாருவின் முந்தைய கதாபாத்திரங்களான சூர்யா, பெருமாள் வரிசையில் சேர்வானா தர்மா? பார்க்கலாம். சரோஜாதேவி நாவல் என வேறு மிஷ்கின் கிளப்பி விட்டுவிட்டுப் போய் விட்டார். சாருவின் ப்ளாக்கில் போட்டுக் கிழி கிழி என்று கிழிக்கிறார் மிஷ்கினை. அவருடைய அடிப்பொடிகள் எல்லோரும் தத்தமது ப்ளாக்கில் சப்போர்ட்டாக எழுதிக்குவிக்க ஐநூறு புத்தகங்களைத் தாண்டி விற்றுக்கொண்டிருக்கிறதாம் அது. என்ன ஒன்று? விலைதான் தொண்ணூறு ரூபாய். ஏழு ரூபாய்க்கு மாத நாவலும் அதையும் செகண்ட் ஹாண்டாக மூன்று ரூபாய்க்கு வாங்கிப்படிக்கும் என்னை மாதிரி கஞ்சப்பிசுனாறிகளுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். பார்க்கலாம். யாராவது வாங்காமலா போய்விடப்போகிறார்கள்? ஓசி வாங்கிப் படித்துக்கொள்வோம். ஒரு வேளை மிஷ்கின் மேலான தூற்றலே தேகம் நாவலுக்கான பப்ளிசிடியோ என்று தான் எனக்குத் தோன்றுகிறது.
------------------------------------------------------
படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...
------------------------------------------------------

வியாழன், 16 டிசம்பர், 2010

டாகுடரு விஜய் வாழ்க, சாரு நிவேதிதா?

போன வாரம் வலை மேய்ந்து கொண்டிருந்த போது பார்த்(துத் தொலைத்)தேன். நம்ம ஊரு நடிகர் டாகுடர் விஜய்க்கு கேரளாவில் சிலை வைத்துள்ளார்களாம் அவருடைய அம்மாநில ரசிகர்கள். நம்மூரு டாகுடரு ரசிகர்களுக்கு ஒரே சந்தோஷம் தான் போங்கள். இன்னும் ஒரே மாதம் தான். போதும். இங்கேயும் தமிழ்நாட்டில் சிலை வைத்து விடுவார்கள்.

அந்தக் காமெடியை நீங்களே பாருங்கள்.

இதைப்பார்க்கும் போது எல்லாருக்கும் என்ன ஞாபகம் வருமோ தெரியாது. எனக்கு இந்த சாரு நிவேதிதா இருக்கிறாரே சாரு நிவேதிதா அவரது ஞாபகம் தான் வந்தது எனக்கு. ஆ....... ஊ.......... என்று குதிப்பாரே அடிக்கடி. கேரளாவில் எல்லாரும் படிப்பாளிகள்.. கேரளாவில் எல்லாம் புத்திசாலிகள். கேரளாவில் நடிகனைக்கொண்டாட மாட்டார்கள். கேரளாவில் எல்லாரும் என்னைத்தான் படிப்பார்கள்....... கலா கெளமுதியில் கட்டுரை கேட்பார்கள். மம்முட்டியே வரிசையில் நின்று வேடிக்கை பார்ப்பார். அங்கே நடிகன் எல்லாம் பிறகுதான் என்றெல்லாம் கூவுவார். நாமும் நம்பிக்கொண்டு அவரது திட்டுக்களை படித்துக்கொண்டிருப்போம். பிறகென்ன செய்ய முடியும்? அவர் சொல்வது உண்மையா பொய்யா என்று கேரளாவுக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு போய் பார்த்து விட்டா வரமுடியும்? அவர் இப்போது இதற்கு என்ன சொல்லப்போகிறார்.

அவர் சொல்வதைப்பார்த்து நான் ரொம்ப நாளாக கலா கொளமுதி தான் கேரளாவில் நம்பர் ஒன் பத்திரிகை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது எங்க தெரு முக்கில் ஒரு புது நாயர் கடை போட்டிருக்கிறார். அவர் கடையில் பாட்டெல்லாம் நன்றாக இருக்கும். நேயர் விருப்பம் போல நாயர் விருப்பம். அவர் மலையாள மனோரமா தான் நம்பர் ஒன் என்கிறார். சாருவை விட அவரது டீக்கு ரசிகர்கள் அதிகம். இப்போ கலா கெளமுதியா மலையாள மனோரமாவா? எது பெரிசு...?



இப்போது அங்கே விஜய்க்கு சிலை. ரைட்டு. யார் முன்னேறுகிறார்களோ இல்லையோ..... சினிமாக்காரன் இன்டர்நெட்டை விட வேகமாக காற்றில் கலந்து பரவுகிறான். ஒரு நடிகனுக்கு சிலை வைக்கும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இருக்கிறதென்றால் சோத்துக்காக என்ன வேலை பார்க்கிறார்கள். அல்லது விஜய் அவர்கள் ஏதேனும் மாதாந்திர உதவித்தொகைத்திட்டம் வைத்து அவர்களுக்கெல்லாம் உதவுகிறாரா? (அப்படி இருந்தால் நம்ம சாருவுக்கும் அவரது பிராண்ட் ரெண்டு பாட்டில் பார்சல்ல்லல்ல்ல்ல.....................)

இங்கே தமிழ்நாட்டில்? நடிகர்களை முதலமைச்சராகவே ஆக்கும் அளவு வெறித்தனமாக ரசிகத்தன்மை இருந்தாலும் சிலை வைக்கும் அளவுக்கெல்லாம் போகாத ஆட்கள் நம்ம தமிழ்நாட்டு ஆட்கள். (என்று பெருமை பீத்த முடியவில்லை. குஷ்புவுக்கு கோவில் கட்டியதைத்தவிர என்று வேண்டுமானால் சொல்லலாம். அது ஒரு விதிவிலக்கான கரும்புள்ளி. அதுவும் கேபிள் டி.விக்களும் இன்டர்நெட்டுகளும், வெறெந்த பொழுதுபோக்குகளும் ஆக்கிரமிக்காத காலம்) அப்புறம் கோயில் இடிக்கப்பட்ட பிறகு கற்களை நக்மாக்காரர்கள் வாங்கிப்போனதாகக் கேள்வி. பிறகு திரிசா கோஷ்டி களம் இறங்கி கற்களைப் பறிமுதல் செய்தார்களாம். (நம்ம திரிசாவையும் சாருவுக்கு பிடிக்கும் போலிருக்கிறது. ஒரு முறை திரி ஆங்கில மேகஸின் ஒன்றுக்கு குனிந்து நிமிர்ந்து வளைந்து நெளிந்து கொடுத்த போஸ்களின் வீடியோ கிளிப்பிங்களை தன் பிளாக்கில் கொடுத்து திரி யின் புகல் பரப்பினார்)

அடப் போங்கப்பா............. தூக்கம் வருது.......
(என்ன சாமி. புத்தக விழாவுல எம்புட்டு புக்கு வித்துச்சாம்?)


டெயில் பீஸ் குயில் குஞ்சு: சார், ஒரு டவுட்டு. ஒரு லட்சத்து எழுபத்தஞ்சாயிரம் கோடிக்கு எத்தனை சைபர் சார்..? அப்புறம் டூ ஜி, திரீஜி னா என்ன சார்?
நான்: போய் புள்ளைங்களைப்படிக்க வைங்கடா, கப்பித்தனமாப்பேசிகிட்டு.

------------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...

நீங்க (ஓட்டு) போட்டா மட்டும் போதும்.... போட்டா மட்டும் போதும்....

எலைக்கு ஏழ்நூறு ரூவா செலவு பண்ணிருக்கோம்ல....
------------------------------------------------------

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

தி.நகரும் அங்காடித்தெருவும் கூடவே நானும்

பாதியில் நின்ற படத்தையோ பாதியில் நின்ற படைப்பையோ பார்த்திருக்கிறீர்களா? அந்த அனுபவம் நமக்கு என்றைக்கும் கிடைக்காது. எப்போதும் ஒரு முழுமை பெற்ற படைப்பே நமக்கு பார்க்கக் கிடைக்கும். என் பங்காக பாதியில் நின்ற படைப்புக்கு இதோ ஒரு சாம்பிள்.

தோன்றும் விஷயங்களை அப்படியே ஒன்றிரண்டு பாராக்கள் டைப்படித்து வைத்துக்கொள்வது நம் வழக்கம். பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மசாலாக்கள் சேர்த்து சேர்த்து பெரிதாக்கி அதனை முழுக்கட்டுரை ஆக்க சிலபல நாட்கள் பிடிக்கும். ஒரேயடியாக உட்கார்ந்து ஒரே கட்டுரையாக எழுவதெல்லாம் ஒரு சிலவே...

அங்காடித்தெரு படம் வரும் முன் எழுத ஆரம்பிக்கப்பட்ட கட்டுரை இது. அப்போது சென்னையில் வேலை. ரூமுக்குப் போக தவுசண்ட் லைட்ஸில் இருந்து டி.நகர் வரை பஸ்ஸில் வந்து ரங்கநாதன் தெருவை குறுக்கே கடந்து மாம்பலம் போய் அங்கிருந்து டிரெயினில் கிரோம்பேட்டை போகவேண்டும்.

ரங்கநாதன் தெருவில் தினசரி கவனிக்கும் விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக கவனித்து கட்டுரைக்கு பேட்ச் ஒர்க் செய்து கொண்டிருந்தேன். முழுதாக எழுதி முடித்தவுடன் ஆனந்த விகடனுக்கு அனுப்பத்திட்டம். ஆனால் என் நேரமோ என்னவோ நான் கட்டுரையை முடிக்கு முன் அங்காடித்தெரு படம் வெளிவந்து விட்டது. படம் வந்தபின் என்னவோ எனக்கு இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து முடிக்க மனமில்லை. அப்படியே விட்டு விட்டேன். என்னமோ படத்தைப்பார்த்து விட்டு கட்டுரை எழுதினாற்போல் இருக்கும்.

(இடையில் ஜெயமோகனின் புத்தக வெளியீட்டு விழாவில் வசந்தபாலனைப்பார்த்தேன். "லோகி" புத்தகத்தை வெளியிட்டு விட்டு மறைந்த இயக்குனர் லோகித தாஸ் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர் மேலிருந்த "வெயில்" வெளிச்சம் குறைய ஆரம்பித்திருந்த நேரம் அது. அடுத்த படமான அங்காடித்தெரு நீண்ட நாட்களாக இழுத்துக்கொண்டிருந்த நேரம். படம் எப்போது தான் வெளிவரும் என்று அவரிடம் கேட்டதற்கு மேலே கையைக்காட்டி என் கையில் ஏதும் இல்லை என்றார்.)



அவரும் தினசரி தி.நகருக்குப் போய் அங்கே இருப்பவர்களை அவதானித்து படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகளை செய்ததாகப் படித்தேன். இக் கட்டுரை குறுக்கே பல இடங்களில் இணைப்பு இல்லாமல் தொங்கிக் கொண்டிருக்கும். உட்கார்ந்தால் இரண்டு மணி நேரம் தேவை அங்கங்கே வரிகள் சேர்த்து செயின் லிங்க் கொடுப்பதற்கு.

தலைப்பு கூட பாதியில் நிற்கிறது. தி.நகரும் அங்காடித்தெருவும் என்று வைத்துக்கொள்ளலாமா? படியுங்கள். படித்து விட்டுச் சொல்லுங்கள்...

---------------------------

தி.நகரும்……………………..

திகுதிகுவெனத் தீப் பற்றியது போல் பரபரத்துக் கொண்டே இருக்கிறது தி.நகர்.

தி.நகர் எனச்சுருக்கப் பட்ட தியாகராய நகர் எனும் சென்னையின் மிக முக்கிய வர்த்தகக்கேந்திரம் இது. குண்டூசி முதல் கம்ப்யூட்டர் வரை எல்லாமே கிடைக்கும் என வழக்கமான வாக்கியத்துடன் ஆரம்பிக்கக் கூடாது என நினைத்தாலும் எல்லாமே இங்கே கிடைக்கும். தியாகராய நகர் ஏன் தி.நகர்னு ஆச்சு? இங்க சென்னைல எல்லாமே அப்படித்தான். கலைஞர் கருணாநிதி நகர் தான் கே.கே நகர், மகாகவி பாரதியார் நகர் இப்போ எம்.கே.பி நகர், அதே மாதிரி தியாகராய நகர் தான் தி.நகர்.

"எல... என்னல இது.. எங்கிட்டு திரும்பினாலும் சனக்காடாவுல்ல கெடக்கு" எனப் பிரமிக்கும் கிராமத்து அப்பாவை சும்மா வாப்பா என இழுத்தபடி நடக்கிறார் ஒரு ஐடி இளைஞர்..

போ, போ, போ நிக்காத நகந்துகிட்டே இரு, டேய் ஆட்டோ, இங்க நிறுத்தக் கூடாதுன்னு சொன்னா கேக்க மாட்டியா? கேஸ் புக் பண்ணாதான் அடங்குவியா? மூங்கில் லத்தியால் ஓங்கித் தட்டியபடியே உறுமுகிறார் ஒரு சின்சியர் போலீஸ்மேன்.

மொளகா பஜ்ஜி எங்கன கெடைக்கும் என்ற அம்மணியின் கேள்விக்கு பஸ் ஸ்டாண்டு வெளியில போயிடு பெரீமா. அங்க ஒரு பஜ்ஜிக்கடை கீது. என்ற பதில் வரும்போதே தே.. சும்மாயிரு. ஊருக்கு எத்தனை மணிக்கு வண்டின்னு நான் யோசிட்டு இருக்கேன். மொளகா பஜ்ஜி வேணுமாம் இவுளுக்கு என்று சடைத்த படியே இழுத்துக் கொண்டு நடக்கிறார்

தி.நகர் என்றாலே ரங்கனாதன் தெரு தான் எனுமளவு கூட்டம். அதிலும் திறந்து விடப்பட்டுள்ள புதிய பாலம் சரியாக ரங்கனாதன் தெருவின் துவக்கத்திலேயே வந்து முடிவதால் கன்ட்ரோல் செய்ய முடியாத அளவு ஜனக்கூட்டம். மாதம் ஒருமுறை டிராபிக்கை புதிய புதிய வழிகளில் திருப்பி விட்டு கூட்டத்தையும், டிராபிக்கையும் சமாளிக்க முயற்சிக்கிறது போலீஸ். ரங்கனாதன் தெரு முழுக்க தலைகள் மட்டுமே தெரிகின்றன.

என்னடா மாப்ள இது? இங்கயும் ஒரு சரவணா ஸ்டோர்ஸ். டி.நகர் முழுக்க சரவணா ஸ்டார்ஸ் இருக்கா என்ன? இனிப்பில் ஆரம்பித்து, துணிக்கடை, நகைக்கடை, பாத்திரங்கள் என ரங்கநாதன் தெரு முழுக்க வியாபித்து இருக்கின்றன சரவணா ஸ்டோர்ஸூம், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸூம். அது போக நூற்றுக்கணக்கான கடைகள். முப்பதடி இருந்த சாலை சுருங்கி பத்தடி ஆகிப்போயுள்ளது. சமீபத்திய சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்தின் விளைவாக கோர்ட் உத்திரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும் மீண்டும் மெள்ள மெள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன.

செருப்பு வாங்க காதிம்ஸிலும், பாட்டாவிலும் நுழையும் மேட்டுக்குடி வர்க்கம். நூறு ரூபாய் சேலையைக் கூட நடைபாதையில் பேரம் பேசி எண்பது ரூபாய்க்கு வாங்கும் கீழை வர்க்கம், மூணு பத்து மூணு பத்து சார் மூணு கர்ச்சீஃப் பத்து ரூபா சாரில் துவங்கி, இருபது ரூபாய், இருபது ரூபாய் டி.சர்ட்டுகள் வரை வாங்கி மாட்டி அழகு பார்க்கும் மத்திய வர்க்கம் எனக் கலவையாய் நகர்ந்து கொண்டே இருக்கும் ஜனத் திரள்.

பழம் வாங்கியபடியே சென்ட்ரல் செல்வதற்கு வழி விசாரிக்கும் வெளியூர் கஸ்டமருக்கு "இதோ இருக்கு பாரு, மாம்பலம் ரெயில்வே ஸ்டேஷன், அங்க போ சார். பார்க் ஸ்டேஷன்னு சொல்லி டிக்கெட் எடு. இறங்கி மெயின் ரோட்ட கிராஸ் பண்ணியானா சென்டிரல் தான். சப்வே இருக்கும் சார். அதுல போ. ஊர் ஞாபகத்துல அங்க போய் ரோட்டுக்கு குறுக்க கிராஸ் பண்ணிடாத. போலீஸ் ஃபைன் போட்
பத்து ரூபாய் ஃபேன்ஸி கம்மல் வாங்கித்தரும் காதலன்.

அம்மா எனக்கு கரும்பு ஜூஸ், அவனுக்கு ஐஸ்கிரீம் தான் வேணுமாம். ஒன்பதரை மணி ஆனவுடன் துணி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனங்கள் வந்து நிற்கின்றன.

எஸ்.கே.சி மாதிரி பிராண்ட் ஷோரூம்லாம் அந்தப்பக்கம் இருக்கு. இதெல்லாம் நம்ம ரேஞ்சுக்கு. உள்ளாற போய் பாரு. சத்யா பஜாருன்னு ஒன்னு கீது. ஜீன்ஸூ, டி.சர்ட்டு, பர்பியூமு, புதுப்பட சிடி, பேக்கு, பெல்ட்டு, பேன்ஸி அயிட்டம்னு இன்னா வேணும் உனுக்கு? எல்லாம் கிடைக்கும்.

"இவ்ளோ பெரிய பாலத்தை எப்பிடிறா கட்டியிருப்பானுக? இம்மாம் கூட்டம் வரும்போது எங்கன நின்னு கான்கிரீட்லாம் போட்டிருப்பாங்க?" உஸ்மான் ரோடை ஊடறுத்து ஓடும் புதிய மேம்பாலத்தை அண்ணாந்து பார்த்தபடியே போகிறது ஒரு கும்பல். "ஏன் பச்ச பெயிண்ட் அடிச்சுருக்காங்க. அது அம்மா கலராச்சே, கலைஞருக்குன்னா மஞ்ச பெயிண்டுல்ல அடிச்சிருக்கணும்?" என்று பாலத்தில் பாலிடிக்ஸை மிக்ஸ் பண்ணியபடியே போகிறது ஒரு கரைவேட்டிப்பெருசு.

கரும்பு ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ், இட்டாலியன் சாஃப்டி ஐஸ்கிரீம், பானி பூரிக் கடைகள், நாகற்பழம், சமோசா, மசால் சோடா, வெள்ளரிக்காய், புரூட் மிக்ஸ், மசால் பொரி, ஆட்டுக்கால் சூப் என அனைத்து ஐட்டங்களையும் விற்கிறார்கள் நடைபாதை வியாபாரிகள். இந்தக் கடைக்கெல்லாம் வாடகை கிடையாதுல்ல, எனக் கேட்கும் பெண்மணியிடம் அட நீ வேற சங்கத்துக்கு காசு, டெய்லி டோக்கன், போலீஸ் மாமூல், ரெளடிங்க தண்டல்னு எல்லாத்துக்கும் அழுவணும்.



போத்தீஸ் வாசலில் நின்றபடி சரவண பவன் எங்க இருக்கு என்று கேட்ட பப்ளிக்கிடம், உக்காரு சார், 20 ரூபா குடு, கொண்டு போய் விடுறேன் எனும் ஆட்டோக்காரரை விரட்டுகிறார் மற்றொரு ஆட்டோக்காரர். சார் நீங்க போங்க சார், நடக்குற தூரம் தான், இப்பிடியே லெஃப்டுல மூணு நிமிசம் நடந்தியானா சரவணா பவன் வந்துடும். டேய் ஏண்டா ஏமாத்துற அவுங்கள.

இடித்தபடி நகரும் கும்பலில் எரிச்சலுற்று "இதுக்குத்தான் ஞாயித்துக்கெழம வரவேணாம்னு சொன்னேன் கேட்டியா?" எனக்கூறியபடியே நடக்கும் ஒரு நடுத்தர வயது அப்பாவிடம் "எப்ப வந்தாலும் இதே கூட்டம் இருந்துகிட்டு தான் இருக்கும், புலம்பாம வாப்பா" என்றபடி நடக்கும் ஒரு கல்லூரி மாணவி.

ரங்கநாதன் தெருவில் ஒன்பதரை மணிக்கு நைட் இட்லிக்கடைகள் முளைத்திருக்கின்றன. பர்ச்சேஸ் முடித்து ஊர் செல்லும் அவசரத்தில் ஓடும் மக்கள், வேலை முடிந்து போகும் இளைஞர்கள், மாம்பலம் ஸ்டேஷன் வரும் இளைஞர்கள் என கலவையான கும்பல் மொய்க்கிறது. நாலு இட்லி கொடுப்பா என்பவரிடம் அஞ்சு இட்லியா வாங்கிக்கோ. இட்லிக்கு சேர்வையா? சாம்பாரா? என்றபடியே அள்ளி ஊற்றுகிறார் சர்வர் ப்ளஸ் சேல்ஸ்மேன் ப்ளஸ் மாஸ்டர் ப்ளஸ் ஓனரான வண்டிக்காரர். சேர்வைன்னா என்ன? கறிக்குழம்பா? குருமாவா? ரெண்டும் இல்லப்பா குடல் குழம்பு. அந்தா மொதக்குது பாரு குடலு.

தடதடத்தபடி கடந்து செல்கிறது ரயில்.

------------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...

நீங்க (ஓட்டு) போட்டா மட்டும் போதும்.... போட்டா மட்டும் போதும்....

எலைக்கு ஏழ்நூறு ரூவா செலவு பண்ணிருக்கோம்ல....
------------------------------------------------------

புதன், 24 நவம்பர், 2010

கலவை சாதம் (24/11/2010)

ஒரு பெரிய டவுட்டு......

இன்ட்லியில இந்தப்பதிவு 21 ஓட்டு வாங்கியிருக்கு. ஆனா பிரபலமாக்கப்பட்டது ன்னு சொல்லி முதல் பக்கத்துக்கு வரலை. ஆனா 18 ஓட்டு, 20 ஓட்டு வாங்கிய பதிவுகள் எல்லாம் "சில நிமிடங்கள் முன்பு பிரபலமாக்கப்பட்டது" ன்னு சொல்லி முதல் பக்கத்துக்கு வந்து கிட்டு இருக்கு.

என்ன கணக்குல பதிவுகள் எல்லாம் பிரபலாமாக்கப்படுது? யாராவது சொல்லுங்களேன்.

------------------------------------------------------

குயில் குஞ்சு: ஊர்ல பத்து பதினஞ்சு கம்பூட்டர் வச்சிருக்குறவன்லாம் சந்தோசமா இருக்கான்.......

ஒரே ஒரு லேப்டாப்ப வச்சிகிட்டு நான் பட்ற அவஸ்த இருக்கே அய்யய்யய்யய்யய்யய்யோயோ......

(அது ஒண்ணுமில்லல. லேப்பு டாப்ப தொறந்தாலேலேலே.. ஒரே அபீசியல் (official) மெயிலா வந்து குமிஞ்சு கெடக்கு...... அதான்.... ஒரோரு மெயிலுக்கும் ஒரு மணி நேரம் வேல வக்கிது......

------------------------------------------------------

ஒரு டவுட்டு

ப்ளாக் மேயும் போது கண்ணுல பட்டுது.......... என் பிளாக்கு வேல்யூ....என் பிளாக்கு வேல்யூ....னு அங்கங்க போட்டு வச்சிருக்காய்ங்களே...... இந்த பிளாக்கையெல்லாம் யாரு வாங்குவா? அதுவும் அவ்ளோ காசு குடுத்து...........

(ஒரு வேளை பாண்டியராஜன் படத்துல வர்றா மாதிரி................. ரெண்டாயிரம்......... நாலாயிரம்............ ஆறாயிரம்........... - அப்படி இருக்குமோ? )

சில சினிமாக்கள்ல ஏழை அப்பாக்கள் சொல்வாங்களே..... என் தலையை அடமானம் வச்சாவது கல்யாணத்தை நடத்திடுறேன்.. (டேய் நாயே...... சிக்கும் பேனுமா இருக்குற உன் தலையை எவன்டா வாங்குவான்?)

------------------------------------------------------

கோச்சுக்காதீங்க - ஒரே ஒரு கவிதை

உனக்கான நேரங்களை
சேமித்து வைத்துக்
காத்திருக்கிறேன்
எனக்கான நேரம்
ஒதுக்கி வருவாயா?

------------------------------------------------------


விக்கிப்பீடியா கணக்குப்படி எந்திரன் வசூல் வெறும் 250 கோடி தானாமே........... அவ்ளோ தானா? கட்டுபடி ஆகாதேப்பா....... (சன் பிக்சர்ஸூக்கு). ஏதோ ஐநூறு கோடி கலெக்சன் ஆவும், ஆயிரம் கோடி கலெக்சன் ஆவும்னு சொன்னாய்ங்களே....... (அது சரி......... இந்தப்பணத்தையே நம்ம டவுசர் பாக்கெட்ல இருந்துதான் எடுக்குறாங்க. இன்னும் கலெக்சன் ஆவணும்னா லங்கோட்டையும் உருவுவாங்க, பரவாயில்லையா? - லங்கோடு ன்னா என்ன அங்கிள்னு கேக்குற குழந்தைங்கள்லாம் ஓடிப்போய்டுங்க)

நான் தான் அப்பவே சொன்னேன்ல. சன் டிவி ஷேர் வாங்குங்கடா, சன் டிவி ஷேர் வாங்குங்கடான்னு... யாராவது கேட்டீங்களா...... வாங்கிருந்தா கொஞ்சமாவது சம்பாரிச்சிருக்கலாம்ல....... (நான் தான் அப்பவே சொன்னேன்ல........... கேட்டா............. இவர் துபாய்ல இருந்து வரும்போதே டிக்கிட் எடுக்காமத்தான் வந்தாராம்)

நமக்கென்ன? ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அர்சி தர்றாய்ங்களே..... போதாது???? கூடவே கலர் டிவி. இலவச வேட்டி, சேலை... பீப்பீ........ போங்கடா டேய்........

------------------------------------------------------

மூணு வருடம் முன்பு எக்ஸாம் இன்விஜிலேஷன் டியூட்டியில் நடந்தது.

நான்: ஆன்ஸர் ஷீட்டை மறைச்சு வச்சு எழுதுடா. பக்கத்துல இருக்குறவன் எட்டிப்பாக்குறான்.

குயில் குஞ்சு: சார் மனசாட்சி இல்லாமப் பேசாதீங்க.. என் பேப்பரே காலியா இருக்கே என்ன பண்லாம்னு நான் யோசிச்சிட்டு இருக்கேன், நீங்க நக்கல் பண்றீங்களா...

நான் : ஙே.. ஙே.. ஙே.. ஙே..

------------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...

நீங்க (ஓட்டு) போட்டா மட்டும் போதும்.... போட்டா மட்டும் போதும்....

எலைக்கு ஏழ்நூறு ரூவா செலவு பண்ணிருக்கோம்ல....
------------------------------------------------------

செவ்வாய், 23 நவம்பர், 2010

மைனா - ஒரு புலம்பல்ஸ், அப்புறம் ஒரு செல்போன்.

__________ ரில் இருந்து ___________________ போன் செய்திருந்தாள். வீட்ல மைனா பாத்துட்டு இருக்கேன்டா என்றாள். என்னடி சொல்ற? என்றால் ஆமாண்டா? டிவிடி வாங்கிட்டு வந்தேன், ஜஸ்ட் முப்பது ரூபா என்றாள். அதிர்ச்சியாக இருந்தது. சரி விடு, தியேட்டருக்குப்போனா அம்பது நூறு தலைக்கு ஆகும், இது வெறும் முப்பது தானே என்றால்.......... ஆளைப்பாரு இங்கலாம் டிக்கட் முன்னூத்தம்பது ரூவாடா என்றாள். அப்போதான் ஞாபகத்துக்கு வந்தது. பாவா கூட சொல்வார். ஜனசதாப்தியில் முப்பது ரூபாய்க்கு டிவிடி கிடைக்கிறதாம். போகும்போதெல்லாம் வாங்கிக் கொண்டு வரலாமாம். எந்திரன் கூட நல்ல பிரிண்டா இருந்தா கொண்டு வரச்சொல்லி வைக்கலாமாம். ரெகுலர் கஸ்டமராய் இருந்தால் உங்களுக்கு முன்னாடி கொட்டி வைத்து விட்டுப்போய்விடுவார். வேண்டுமென்பதை பொறுக்கி எடுத்துக்கொண்டு மீதியை அவனிடம் கொடுக்கலாம்.


அது சரி மைனா எப்படி? கதை கேட்டேன், (கேட்காமலே இருந்திருக்கலாம் போல) அவன் வருவான்டா, அப்டியே தண்ணி குடிப்பான் பாரு, அப்டியே ஒரு துளி அவ மேல......... உதடு கிட்ட தெறிக்கும், அப்டியே லவ்வ புழிஞ்சு குடுத்திருக்கான்டா, சுருளி இருக்கான்ல அவன் அவங்கம்மாவை போட்டு அடிப்பான், போலீஸ் புடிச்சிட்டு போய்டும், ஒரு நாள் நைட்டு அவ படிப்பாளா? கரண்டு போய்டும். எத்தனை பாடம் இருக்குன்னு கேப்பான்,பத்து பாடம்ன ஒடனே சைக்கிள்ல லைட்டு டைனமோ இருக்கில்ல அதை போட்டு மிதிப்பான், வெளிச்சம் வரும் அப்புறம் செயின் அந்துரும், அப்புறம் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் நெறையா மின்மினிப்பூச்சி எடுத்துட்டு வந்து காமிப்பான், அதை எப்டி எடுத்தாங்கன்னே தெரில..... அந்த பாட்டில் கீழ விழுந்து உடஞ்சிடும் என்றாள்.

கிளைமாக்ஸ் என்ன தெரியுமா? என்றவளிடம் ஒரு பஸ் ஆக்ஸிடென்ட் ஆகும் என்று சொல்ல ஆரம்பித்தேன். ஏய்., இரு இரு கதை சொல்லாத பாத்திட்டு வர்றேன் என்று போனை கட் செய்து விட்டாள். ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் கால். ச்ச்ச்சசச........ சான்ஸே இல்லடா, சூப்பர் படம், போய்ப்பாரு என்ன? என்றாள். என்னடா கிளைமாக்ஸூ என்று கேட்க வந்தவன் வாயை மூடிக்கொண்டேன். இவளிடம் கதை கேட்டால் காது ஜவ்வு அந்து விடும்.

ஆனால் தமிழ் சினிமாவில் லவ் சீஸன், காமெடி சீஸன், ரவுடி சீஸன், போலீஸ் சீஸன், எல்லாம் போய் ராமராஜன் விட்டுப்போன கிராமத்து சீஸன் மறுபடியும் வந்திருக்கிறது. அதுவும் பப்பி லவ்வில் ஆரம்பித்து பெரியாட்களாகும் வரையில் வரும் லவ் ஸ்டோரிக்கள். அழுக்கு ஹீரோ. மேக்கப் இல்லாத ஹீரோயின். நல்ல வேளை ராமராஜன் ஸ்டைலை யாரும் பின்பற்றவில்லை. அந்த வரைக்கும் சந்தோஷம். தப்பித்தோம். பாட்டுப்பாடியே மாட்டை அடக்கும் அநியாயத்தையெல்லாம் காணும் பாக்கியம் நம் தலைமுறைக்கு இல்லை..

மேலும் தெரிந்தோ தெரியாமலோ பாலா வேறு ஒரு டிரெண்டை உருவாக்கி வைத்து விட்டார். படத்தின் அடிநாதம் ஒரு சோகமான, பகீரென்ற ஒரு விஷயமாக இருக்க வேண்டும், ஆனால் படம் முழுக்க நகைச்சுவை தூவப்பட்டிருக்க வேண்டும். கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க பதைபதைக்கும் திரைக்கதையோடு திடீரென திடுக் திருப்பத்தோடு படம் முடியவேண்டும். இந்த ரூல்ஸை நெருங்கிப்படம் எடுத்தீர்களானால் அது தமிழ்சினிமாவின் சிறந்த படம். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட பாலாவின் படங்களோடு பருத்தி வீரன், வெயில், அங்காடித்தெரு, படங்களும் அந்த வரிசையே. (கமலின் அன்பே சிவம், மகாநதி வகையறாக்கள் இந்தக் கணக்கில் சேராது, அவற்றில் பிரேம் பை பிரேம் கமலின் ஆளுமை தெரியும்) மைனாவும் அப்படி ஒரு சிறந்த தமிழ்ப் படம்.

கிங், லாடம், கொக்கி போன்ற குப்பைப்படங்களை உருவாக்கி அளித்த பிரபு சாலமன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். இதில் கிங் படம் "பூவே பூச்சுடவா"வின் ரீமேக். படா ஜவ்வுப்படம். விக்ரம் வரிசையாக ஹிட்டுகள் கொடுத்துக்கொண்டிருந்த நேரம் அது. பிளாக்கில் டிக்கெட் கிடைக்காமல் பதினைந்து ரூபாய் டிக்கெட்டை நானும் கார்த்தியும் (அவர் தான் ஃபைனான்ஸ்) எழுபத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்கிப்பார்த்தோம். ரொம்ம்ம்ம்ப நேரமாக பார்த்துக்கொண்டே இருந்தோம். படம் முடிகிற பாட்டைக்காணவில்லை. ஒரே ஜவ்வு இழுவை... ஒரே ஆறுதலாக இருந்த ஜனகராஜ் இந்தப்படத்தோடு சினிமாவை விட்டே ஒதுங்கிக் கொண்டார். அமெரிக்காவில் பையனோடு போய் செட்டிலாகிறேன் என்று போயே போய்விட்டார் மனிதர். அதற்குப்பிறகு சாமுராய் படத்திற்குக்கூடப்போகவில்லை..

அப்புறம் "லாடம்" ஒரு படம். கருமம். அதை எந்த வரிசையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. வசனத்தை எல்லாரும் இழுத்து இழுத்துப் பேசினார்கள். அதிலும் சார்மியும், அந்த புது ஹீரோவும் நடு ராத்திரியில் ஒரு லைட் இல்லாத வீட்டில் பேசும் பைத்தியக்காரத்தனமான வசனத்தைப்பார்த்தேன். பழைய காலத்து வசனங்களையும், வடிவேலு ஜோக்குகளையும் கேனத்தனமாக பேக்கிரவுண்ட் பீஜியம் ஒலிக்க பார்த்ததில் கேராகிப் போனது. அதற்குப்பிறகு பிரபு சாலமன் படத்தையே பார்க்கக் கூடாது என்று முடிவு செய்திருந்தேன். "கொக்கி" அவரது டைரக்ஷனா என்று தெரியவில்லை. இருந்தாலும் அதுவும் ஒரு சுமார் படமே...


இப்போது மைனா என்றொரு படம். ரெட் ஜெயண்ட் மூவீஸ் டிஸ்டிரிபியூஷன் என்று போட்டபோதே............. ஓக்கே படத்தில் என்னமோ மேட்டர் இருக்கிறது.. அதுதான் ஒரே அமுக்காக அமுக்கி விட்டார்கள் என்று புரிந்தது. அங்கங்கே படித்த ரிவ்யூக்களும், ஆனந்த விகடன் வசனமும், டிவிக்களில் வந்த பேட்டிகளும், ஜில் பின்னணியில் எடுத்த பாடல்களும், இதோ முதல் பாராவில் வந்தது போன்ற நண்பர்களின் வாய்மொழி விமர்சனமும்.......... மைனா படம் நன்றாயிருக்கிறது என்கின்றன..

மைனா பார்க்கப் போகவேண்டும்.
-------------------------------------------------------

எனக்கென்னவோ டிவிடியில் படம் பார்ப்பது ஒன்றும் பெரிய குற்றம் போல் தோன்றவில்லை. திருட்டு டிவிடியில் பார்ப்பது தான் தப்பு. என்னய்யா குழப்புகிறாய் எனாதீர்கள். படம் ரிலீஸாகும் போதோ அல்லது இரண்டு மூன்று நாள் கழித்தோ எப்படியும் அந்தப்படத்தின் திருட்டு டிவிடி வரத்தான் போகிறது. அதற்கு..........பேசாமல் தயாரிப்பாளர்களே டிவிடியும் வெளியிட்டு விட்டால்?

-------------------------------------------------------

அப்புறம் இன்னோரு மேட்டர்...........

தயவு செய்து எந்த எம்.எல்.எம் ஆக இருந்தாலும் போய் சேர்ந்து தொலையாதீர்கள். அன்பர் தொப்பி தொப்பி அவர்கள் ப்ளாக்கில் "ஒரே நாளில் கோடிஸ்வரன் ஆவது எப்படி?"என்ற பெயரில் பதிவு ஒன்றை பார்த்தேன். நச்சென்று எழுதியிருந்தார்..

நானும் அந்த மாதிரி எல்லாம் மாட்டிக்கொள்ளாமல் உஷாராக இருந்தவன்தான். ஏதோ ஒரு முறை நண்பர் ஒருவர் சொன்னார் என்று போய் ஒரு எம்.எல்.எம் கான்செப்டில் மாட்டிக்கொண்டேன். கம்பூட்டர் லேப்டாப் தயாரிப்பில் பேமசாக இருந்து விட்டு இப்போது மொபைல் போன் தயாரி்க்கத் துவங்கி விட்டிருக்கும் ஒரு கம்பெனி அது. அவர்கள் செய்த மூளைச்சலவையை நம்பி நானும் (ஜஸ்ட்) ஆறாயிரம் கொடுத்து ஒரு மொபைல் போன் வாங்கினேன். அதை எம்.எல்.எம் கான்செப்டில் சேர்த்திருந்தார்கள்.

அதாகப்பட்டது நாம் இரண்டு பேரை சேர்த்து விட வேண்டுமாம். அவர்கள் தலைக்கு இரண்டு பேராம். அவர்கள் தலை தலைக்கு இரண்டிரண்டு பேராம். இப்படி ஒவ்வொருவராக சேர்த்துக் கொண்டே போனால் ஆளுக்கு ஆறு பாயிண்ட் தருவார்கள். நிறைய பாயிண்ட் சேர்க்க சேர்க்க காரு வாங்கலாமாம், வீடு வாங்கலாமாம், கோடீஸ்வரன் ஆகலாமாம், அந்தக் கம்பேனிக்கே டைரக்டராக ஆகிவிடலாமாம். அடங்கப்பா சாமி... முடியல.. ஆனாலும் அதையும் நம்பி பணம் கட்டிய என்னை என்னவென்று சொல்வது?



என்னை நம்பி வேறு இன்னும் நாலு பேர் வாங்கத் தயாராக இருந்தார்கள். போனை வாங்கி பத்து நாள் கூட முடியவில்லை. டச் ஸ்கிரீன் அவுட்டு (டச் ஸ்கிரீன் இல்லாமல் அந்தப்போனை ஆபரேட் செய்யவே முடியாது). எஸ்.எம்.எஸ்ஸில் டிக்ஷனரி ஆப்ஷன் இல்லை. கீ பேடு மகா கஷ்டப் படுத்தியது. போன் மெமரி வெறும் முன்னூறு தான். பார்ப்பவர்கள் எல்லாம் கிண்டல் செய்தார்கள். ஒழுங்காக ரெண்டாயிரம் கொடுத்து ஒரு சைனா போன் வாங்கியிருக்கலாமில்லை என்று. அதில் உள்ள ஆப்ஷன்களில் ஐம்பது சதம் கூட இதில் இல்லை. போய்க்கேட்டால் இந்தப்போன் உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் போன். கோடி வேணுமா? ஆப்ஷன் வேணுமா? என்றார்கள். முதல் வேலையாக என்னை நம்பியிருந்தவர்களுக்கெல்லாம் போனைப்போட்டு தயவு செய்து வாங்காதீர்கள் என்று சொன்னேன்.

ஒருவாரம் வெளியூரில் மாட்டிக் கொண்டு வந்த ஆபீஸ் போன்களையும் அட்டெண்ட் செய்ய முடியாமல் பட்ட கஷ்டத்தைப்பார்த்து அந்தப்போனே அழுதிருக்கும். ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக போனையும் டப்பாவோடு பேக் செய்து கடாசி விட்டேன். (அந்த மாதிரி நிறைய போன் திரும்பி வந்ததாம்) மாசம் ரெண்டாச்சு. அந்தப் போனுக்கு ரீப்ளேஸ்மென்டும் வரவில்லை, அந்தக்காசும் இன்னும் திரும்பி வரவில்லை.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
-------------------------------------------------------

ஞாயிறு, 14 நவம்பர், 2010

ஆனந்த விகடன் - "ஹிஹிக்கூ"

சுமார் மூன்று வருடங்கள் முன்பு ஆனந்த விகடன் (சுஜாதா சொன்ன எட்கூ போல) "ஹிஹிக்கூ" என்ற பெயரில் ஒரு போட்டியை நடத்தியது. தேர்வு செய்யப்பட்ட சுமார் பத்துப்பத்து "ஹிஹிக்கூ"க்களை வாராவாரம் வெளியிட்டது விகடன். பல வாரங்கள் தொடர்ந்து வெளியான "ஹிஹிக்கூ"க்களில் அடியேனுடையதும் ஒன்று.

(அப்போதைய) ஹாட் நியூஸ்களை வைத்து "ஹிஹிக்கூ" எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. ஆகையால் இதைப்படிக்கும் போது மூன்று வருஷம் பின்னோக்கிப்போக ஜம்போ கொசுவத்தி சுத்திக்கொள்ளுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விகடனில் வெளியான என்னுடைய "ஹிஹிக்கூ" இது

இரயில்வேயை நம்பர் ஒன்
ஆக்கிட்டாரு லாலு!
இதே போல ஹைவேயை
ஆக்குவாரா நம்ம பாலு!

மற்றவையெல்லாம் போட்டிக்காக எழுதி அனுப்பப்பட்டவை. (எத்தனை எழுதி அனுப்பினா ஒண்ணே ஒண்ணு பப்ளிஷ் ஆகுது பாருங்க).

-----------------------------------------

எடுப்பாவே இல்லையாம்
புது ஜேம்ஸ் பாண்டு
எப்படியோ போகட்டும்
உனக்கு ஏன் காண்டு?

-----------------------------------------

சர்ச்சைக்கு நடுவுல
வளருதுங்க "பெரியார்"
சர்ச்சையை வளர்க்குதுங்க
முல்லைப்பெரியார்

-----------------------------------------

விகடன்ல போடறாங்க
வாராவாரம் ஹிஹிக்கூ
சுஜாதா சொன்னது போல
இதுதானா எட்கூ?

-----------------------------------------

கோவலன் ஸ்லிப் ஆனது
சிலப்பதிகாரம்
நம்ம விஷாலு ஸ்லிப் ஆனது
சிவப்பதிகாரம்

-----------------------------------------

டெல்லியில் போடுறாங்க
கடைகளுக்குப் பூட்டு!
கோர்ட்டுக்குக் கேட்குதா
அவங்க வயித்துப் பாட்டு!

-----------------------------------------

இசையால நிறையுதுங்க
விகடன் புக்ஸூ....
போட ஆரம்பிச்சுட்டாங்க
சீஸன் சிப்ஸூ

-----------------------------------------

ஊரெல்லாம் கச்சேரி
டிசம்பர் மாசம்....
விகடன்லாம் வீசுது
மியூஸிக் வாசம்...

-----------------------------------------

அஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை
மாறுதுங்க ஆட்சி!
கேஸூலேர்ந்து தப்பிக்க
தாவுறாங்க பல கட்சி!

-----------------------------------------

ஆளில்லாத கேட்டு!
பாத்து வண்டியை ஓட்டு!
பாக்காம போனதுனால
பதினேழு பேரு அவுட்டு!

-----------------------------------------

தோனி தம்பிக்கு பிடிச்சது
படுகோன் பொண்ணு தீபிகா...
தோடா இங்கயும் பாரு...
ஸ்குவாஷ் ஏஞ்சல் தீபிகா...

-----------------------------------------

பள்ளிக்கூட கிணத்துல
+2 பொண்ணு பிணம்.
கொலைகாரப்பாவிக்கு
கல்லாய்ப்போச்சா மனம்?

-----------------------------------------

வரலாறு வெற்றியால
அஜீத்துக்கு ரிப்பீட்டு!
மத்தவங்க ஆகுறாங்க
அவரப்பாத்து அப்பீட்டு!

-----------------------------------------

பொங்கலுக்கு அடிப்பாங்க
சுவத்துக்கு சாந்து!
பொளந்து கட்றாருங்க
புது விஜயகாந்து!

-----------------------------------------

டென்னிஸூ ரேட்டிங்குல
சறுக்குதுங்க சான்யா!
ஸ்குவாஷ் போட்டி ரேட்டிங்ுகல
சாதிக்குமா சாய்னா!

-----------------------------------------

மெட்ராஸ்-ஐ பரவுதுன்னு
சொல்றாங்கப்பா நியூஸூ!
கலைஞர் போலக் கண்ணாடி
பண்ணுங்கப்பா யூஸூ!

-----------------------------------------
படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...

நீங்க (ஓட்டு) போட்டா மட்டும் போதும்.... போட்டா மட்டும் போதும்....

எலைக்கு ஏழ்நூறு ரூவா செலவு பண்ணிருக்கோம்ல....
-----------------------------------------

சனி, 13 நவம்பர், 2010

கலவை சாதம்..

போன முறை தலைப்பு இல்ல என்று எழுதிய உதிரிக் கட்டுரைக்கு கலவை சாதம் என்று பெயர் வைக்கலாம் என்று பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்சேபணை இருப்பவர்கள் போராட்டம் செய்யலாம். கொஞ்சம் டைம் பாஸாகும். (ஜோக் இருக்கட்டும், சீரியஸாக இந்தப்பெயரில் வேறு யாரேனும் அன்பர் எழுதிக்கொண்டிருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும், நான் பெயர் மாற்றிக் கொள்கிறேன்)

----------------------------------------

தனிமையிலே இனிமை காண முடியுமா? முடியாது என்பார்கள் சிலர். முடியும் என்பார்கள் பலர். Solitude is a bliss என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. (இதைத்தான் செல்வராகன் தன்னுடைய ஒரு படத்திற்காக Solitude என்ற வார்த்தை கிடைக்காமல் Being alone is a bliss என்று கேட்ச் லைன் போட்டிருந்தார். அந்தப்படம் நின்று போயிற்று என்று நினைக்கிறேன், பெயர் ஞாபகமில்லை) அதாகப்பட்டது தனிமை என்பது ஒரு வரமாம். சத்தியமாக இல்லை.. தனியாக ஒரு நாள் இருக்கலாம். இரண்டு நாள் இருக்கலாம். அல்லது எல்லாரும் இருக்கும் போது தனியாக இருக்கலாம். (அதாவது எல்லாரும் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில்) ஆனால் யாருமில்லாமல் நிஜமாகவே தனியாக இருப்பது என்பது கொடுமை. அதுவும் டி.வி கிடையாது. வண்டி கிடையாது. மியூஸிக் பிளேயர் கிடையாது. லேப்டாப் உண்டு, ஆனால் டேட்டா கார்டு கிடையாது. சோறு கிடையாது (நினைத்த நேரத்தில்), கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் எப்படி இருக்கும் என்று. புது ஊர் வேறு. இந்த ஊரில் எவனையும் தெரியாது வேறு.. (டிரான்ஸ்பரில் ஊர் மாறிவிட்டேன். அதான் இந்தப்புலம்பல்ஸ்)

----------------------------------------

டேட்டா கார்டு அதாங்க இன்டர்நெட்டு இல்லாததால் சுத்தமாக ஒரு நியூஸூம் தெரியவில்லை. பேப்பர் கூடப்படிப்பது இல்லை. ஒபாமா வந்துவிட்டுப்போய்விட்டாரா? ஜில் புயல் கரையை கடந்து விட்டதா? எந்திரன் மொத்த வசூல் எவ்வளவு? தங்கம் விலை எவ்வளவு ஏறியிருக்கிறது? ஏ.ஆர்.ரஹ்மான் புதுப்படம் ஏதும் ஒப்புக்கொண்டிருக்கிறாரா? மங்காத்தாவும் காவலனும் என்ன நிலைமை? சென்செக்ஸ் எவ்வளவு ஆகியிருக்கிறது? மெட்ரிகுலேஷன் பள்ளி ஃபீஸ் மேட்டர் என்னவாயிற்று? ரத்த சரித்திரா எப்ப ரிலீஸ்? சாரு இப்போ யார் கூட சண்டை போடுகிறார்? நீயா? நானா? என்னவாயிற்று? சூப்பர் சிங்கர் எத்தனை ரவுண்டு போயிருக்கிறது? என்று ஒரு நியூஸ் அப்டேட்டும் இல்லை. அதுசரி இதெல்லாம் தெரிந்து மட்டும் என்ன புடுங்கப்போற என்கிறீர்களா? அதுவும் சரிதான், நமக்கு லோக்கல் மேட்டரே ஒன்று கூட தெரியவில்லை. இன்டர்நேஷனல் மேட்டர் தெரிந்து என்ன ஆகப்போகிறது?

கம்பேனியில் ஒரு கொலீக் புதிதாக சேர்ந்திருக்கிறார் என் கம்பெனியில். அதாவது நான்தான் கொஞ்ச நாளைக்கு கம்பெனி கொடுக்க வேண்டுமாம். எதைப்பார்த்தாலும் கேள்வி கேட்கிறார் மனுஷன். செட்டப்பு செல்லப்பா என்று வடிவேலு வருவாரே அந்தா மாதிரி டவுட்டு டங்கப்பா இவர். அதிலும் பஸ்ஸில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு "கார்த்திக், இங்கே கத்தரிக்காய் எவ்வளவு? கார்த்திக், இங்கே லேண்ட் வேல்யூ எவ்வளவு? அரிசி எது ஃபேமஸ்? கார்த்திக், எந்த ஏரியாவில் வீடு பார்க்கலாம்? எந்த ஸ்கூல் நல்ல ஆக்டிவிடீஸோட எஜூகேஷன் தர்றாங்க? கார்த்திக், இந்த ஏரியாவில் எவ்வளவு வெயில் அடிக்கும்? சி.யூ.ஜி கனெக்ஷன் ஏன் வாங்கலை? நான் வெஜ் சாப்பாடு தலைவாழை இலை போட்டு எங்கே கிடைக்கும்? உங்க லேப்டாப் எத்தனை ஜி.பி? என்று ஒரே கேள்வீஸ் ஆஃப் இன்டியா. எனக்குத்தான் ஒன்றுக்குமே விடை தெரியவில்லை. ஆனால் இதை எனக்குப் புரிய வைத்ததற்கு அந்த மனுஷனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

----------------------------------------

ராவண் பாடல்களை (கவனிக்க ராவணன் அல்ல) இன்று ஹிந்தியில் கேட்டேன். தமிழை விட அருமையாக இருக்கின்றன.. ராவணனுக்கும் ராவணுக்கும் பாடல் வரிகளில் பல வேறுபாடுகள் இருந்தாலும் இசைக்கருவிகள் அனைத்தும் என்னவோ வட இந்திய வாடைக்கு தமிழை விட ஹிந்திக்கு தான் அருமையாக செட்டாகியிருப்பது போல் தோன்றுகிறது எனக்கு.. கெடா கெடாக் கறி பாடலில் வரும் ஹை பிட்ச் ஹம்மிங் தமிழை விட ஹிந்தியில் அட்டகாசமாக வந்திருக்கிறது. "வீரா"வை விட "பீரா" நன்றாக இருக்கிறது கேட்க..

----------------------------------------

டீம் மேனேஜ்மெண்ட் பற்றி கொஞ்சம் ஸ்டடி செய்ய வேண்டும். அதிலும் ரிமோட் மேனேஜ்மெண்ட் வேறு.... கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. பழைய கம்பேனியில் இருந்த டீமில் வெறும் ஐந்து பெண்கள் தான். அழகாக எட்டரைக்கு வருவார்கள், ஐந்து மணிக்கு கடையைச் சாத்தி விடுவார்கள். ஆனால் அப்போது அதுவே கஷ்டமாக இருந்தது போல் இருந்தது. இங்கே என்னடாவென்றால் டீம் சைஸ் பதிமூன்றில் ஆரம்பித்தது... மெள்ள மெள்ள ஏறி முப்பத்து இரண்டில் போய் நிற்கிறது. இன்னும் ஐந்தாறு பேர் தேவை. பெண்கள், ஆண்கள், கல்யாணம் ஆனவர்கள், கல்யாணம் ஆகாதவர்கள், டிப்ளமோ ஆட்கள், என்ஜினியரிங் முடித்தவர்கள், சிங்கிள் டிகிரி, டபுள் டிகிரி, கம்ப்யூட்டர் பேக்ரவுண்டு, ஃபர்ஸ்ட் ஜாப் பார்ப்பவர்கள் என்று ஒரே கலவை. அதுவும் ஒவ்வொருவரும் வெவ்வேறு இடத்தில், வெவ்வேறு மாவட்டங்களில். எல்லாரையும் கான்டாக்டிலேயே வைத்திருக்க வேண்டும். இது தவிர டெக்னிக்கல் டீம் ஆட்கள், சென்னை, பெங்களூரு பிராஞ்ச் ஆட்கள், உயரதிகாரிகள் என எல்லாரிடமும் பேசிக்கொண்டேடேடேடேடேடேடே இருக்க வேண்டியிருக்கிறது. இரண்டு போன்கள் வைத்திருந்தும் போன் கால்ஸ் மட்டுமே ஒரு நாளைக்கு மாறி மாறி ஐந்து மணிநேரம் ஓடுகிறது. ஒரு கால் பேசி வைப்பதற்குள் அதில் இரண்டு மிஸ்டு கால்கள். ஏ.வெங்கடேஷ், பேரரசு, டி.ராஜேந்தர் வகையறாக்களின் படம் பார்த்து முடித்ததும் ஒரு கேரிங்கான ஃபீலிங் வருமே.... அது தினமும் எனக்கு வருகிறது. காது வலிக்கிறது.

----------------------------------------

அப்படியே ஒரு ஜோக்கு (அப்பாடா, முதல்லயே சொல்லிட்டோம். கண்டிப்பா சிரிப்பாங்க)

எஸ்.பி.எம்-ல வேலைல இருக்கும் போது நிஜமாவே நடந்தது... நான் கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்கும்போது.......

நான்: ஷார்ட் ஃபார்ம்ஸ்-லாம் நல்லா பாத்துக்கோங்கப்பா.. கண்டிப்பா நாலு மார்க்குக்கு கேள்வி வரும்..

குயில் குஞ்சு : இங்கிலீஷுல கஷ்டமா இருக்கே சார்...

நான்: தமிழை கம்பேர் பண்ணிக்கோடா.. இப்போ................... தியாகராய நகரை "தி.நகர்" னு சொல்றோம், வாத்தியாரை "வாத்தி" னு சொல்றோம், தஞ்சாவூரை "தஞ்சை" னு சொல்லலாம்..... அந்த மாதிரி.........

குயில் குஞ்சு : குஞ்சாண்டியூரை என்னன்னு சார் சொல்றது?????

நான்: (வழக்கம் போல "பே" தான்........)
----------------------------------------



படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...

நீங்க (ஓட்டு) போட்டா மட்டும் போதும்.... போட்டா மட்டும் போதும்....

எலைக்கு ஏழ்நூறு ரூவா செலவு பண்ணிருக்கோம்ல....
---------------------------------------

வியாழன், 11 நவம்பர், 2010

ஒரு நார்மல் ஸ்டூடண்ட்

ஒரு நார்மல் ஸ்டூடண்ட்

பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. டேட்டா கார்ட் என் கையில் இல்லை. ஆபீஸ் வேலையாக ஊர் சுற்றப் போயிருக்கிறது அது. நேரமும் கொஞ்சம் கம்மி அதான்..

அதனால் பதிவு போட வேண்டும் என்ற ஆசைக்கு இது. நண்பர் ரவி அனுப்பிய எஸ்.எம்.எஸ். அதை அப்படியே தமிழாக்கம் செய்து போட்டிருக்கிறேன். (இது வேறு எங்காவது படைப்பாக வெளியாகிக்கூட இருக்கலாம், அப்படி இருந்தால் எழுதியவருக்கே பெருமை போய்ச் சேரும்)

நீங்கள் ஒரு நார்மல் ஸ்டூடண்டா? கீழே உள்ள குறிப்புகள் உங்களுக்குப் பொருந்த வேண்டும்... படித்துப்பாருங்கள்.

1. எக்ஸாமுக்கு முன்பு தான் எல்லா நண்பர்களுக்கும் வெட்டி எஸ.எம்.எஸ் அனுப்பத்தோன்றும்.
2. இன்று படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ப்ளான் போட்டு அன்றைக்கு சாயங்காலம் "நாளை முதல் படிக்கலாம்" என்று தோன்றும்.
3. படிப்பதற்குப் பதில் புத்தகத்தில் எத்தனை சேப்டர் இருக்கிறது என்று ஒவ்வொரு முறையும் எண்ணிப்பார்த்தபடியே இருப்பீர்கள்.
4. இரண்டிரண்டு பக்கங்கள் படித்தவுடன் பிரேக் விடத்தோன்றும்.
5. சம்பந்தமே இல்லாமல் பசிக்கும்
6. தூர்தர்ஷனில் வரும் நிகழ்ச்சிகள் கூட ரொம்பப் பிடிக்கும்.
7. ஒவ்வொரு கஷ்டமான பாடத்திற்கும் இது தோன்றும் "இந்தக்கேள்வி எக்ஸாம்ல வராது".
8. படிப்பதற்கு முன் நண்பர்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் "மச்சி, நீ எவ்வளவு பாடம் முடிச்சிருக்க?"
9. இந்த எஸ்.எம்.எஸ்ஸை (அ) வெப்லிங்கை நண்பர்களுக்கு அனுப்பத் தோன்றும்
10. ஒவ்வொரு பாயிண்ட் படித்து முடித்ததும் புன்சிரிப்புடன் இது தோன்றும் "நமக்கு அப்படியே மேட்ச் ஆவுதில்ல?"

------------------------------------
அவ்ளோதான். பை பை..
---------------------------------------------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
----------------------------------------------------------------------

புதன், 27 அக்டோபர், 2010

தண்ணி தண்ணி... தவிச்ச வாய்க்கு தண்ணி

கூகுளின் ஜிடாக் சேட்டிங்கில் இருந்த போது சேலம் தேவா (நண்பேன்டா...) ஒரு வீடியோ லிங்க் அனுப்பினான். தண்ணீர் பாட்டில்களின் (மோசமான) உபயோகம் பற்றி. ஒரு ஏழெட்டு நிமிட வீடியோ. கொஞ்சம் பாருங்கள். அப்புறம் பேசுவோம். இதோ அந்த வீடியோ..

Water

பார்த்தாயிற்றா? எவ்வளவு நாசம் செய்கிறோம் நாம் என்று தெரிகிறதா? இந்தக் கணக்கு வாட்டர் பாட்டில்களுக்கு மட்டும். அது தவிர பெப்ஸி, கோக், தம்ப்ஸ் அப், ஃபேன்டா, மிரிண்டா, செவன் அப், ஸ்பிரைட், மாஸா, லிம்கா, ஸ்லைஸ் போன்ற கூல்டிரிங்க் பாட்டில்கள் உபயோகம் தனி. இன்றைக்கு பேருந்துப்பயணங்களிலும், ரயில் பயணங்களிலும் நவநாகரீக இளைஞர்கள் இளைஞிகள் (முக்கியமாக ஐ.டி மக்கள்) இது இல்லாமல் ஏறுவதே இல்லை. இதைப்பார்த்து அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கும் வாங்கித் தர வேண்டியிருக்கிறது. ரயில்வே ஸ்டேஷனில் வரும் பைப் தண்ணீரை குழந்தைகள் குடிக்க மறுக்கிறார்கள். அது தவிர இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் ஆஸ்பிடல்களில் உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி வீசப்படும் சலைன் பாட்டில்கள் கணக்கில் இல்லை. அவை தவிர்க்க முடியாதவை..


வீடியோவை பார்த்தவுடன் எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. ஒருமுறை அமெரிக்காவில் வசிக்கும் (என்று நினைக்கிறேன்) ஷாஜகான் என்ற அன்பர் "அமெரிக்கா வாசி" என்ற பெயரில் யூத்ஃபுல் விகடனில் ஒரு கதை எழுதியிருந்தார். இந்தியாவுக்கு லீவில் திரும்பி வரும் ஒரு ஆன்சைட் என்ஜினியரின் பார்வையில் இருக்கும் அது.

"அமெரிக்கா வாசி"

ஆனால் அந்தக்கதை இந்தியாவைக்குறை கூறும் விதமாகவே நகரும். அதனால் பின்னூட்டத்தில் பலரும் அதை எதிர்த்து கொந்தளித்திருந்தார்கள். நானும் கொஞ்சம் கொந்தளித்தேன். இதைப்பற்றி காரசாரமாக ஒரு விவாதம் போனது அப்போது யூத்ஃபுல் விகடன் மூலம்...

அந்தக்கதைக்கு யூத்ஃபுல் விகடனில் என்னுடைய பின்னூட்டம் இது..

--------------------------

எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவ கம்பேர் பண்ணாதீங்க நண்பா... அமெரிக்காவ குறை சொல்ல எங்க கிட்ட ஆயிரத்தைநூறு விஷயமிருக்கு. ஆனா சுத்தம் பத்தி பேசிருக்கீங்கல்ல.. அதனால இத மட்டும் சொல்றேன்... அவனுக்கு வர்ற வியாதி பிரச்சினைகள்ல பத்து சதவீதம் கூட நம்ம ஊர்க்காரனுக்கு வர்றதில்ல.. இவ்வளவு சூடான நாட்ல இருந்துகிட்டு அம்மை நோயையே கன்ட்ரோல் பண்ணவங்க நாம, அதுவும் செலவில்லாம. சத்தியமா அது மாதிரி எல்லாம் அவனால பண்ண முடியாது.

--------------------------

ஆனால் அதற்குப்பிறகும் அந்தக்கதைக்கு பின்னூட்டம் போட்ட இரண்டு பெரிய மனிதர்கள் அமெரிக்கா அமெரிக்கா என்றே பாட்டுப்பாட எனக்கு "சுர்"ராகி விட்டது. மறுபடியும் ஒரு பெரிய பின்னூட்டம் போட்டேன்..

அது இது

--------------------------

அமெரிக்கன்கள் செய்யும் அட்டாகாசங்களுக்கும் சேர்க்கும் குப்பைகளுக்கும் ஒரே ஒரு சாம்பிள். 2004ம் ஆண்டில் மட்டும் 26,000,000,000 லிட்டர் பாட்டில் வாட்டரை குடித்து (மற்ற உபயோகங்கள் தனி) தீர்த்திருக்கின்றனர் (வெறும் 30 கோடி) அமெரிக்கன்கள். கிட்டத்தட்ட 28,000,000,000 பிளாஸ்டிக் பாட்டில்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் 86% குப்பைத்தொட்டிக்குப்போனவை. (வினாடிக்கு 1500 பாட்டில்கள் - அமெரிக்கன்கள் மட்டும்). இந்த பாட்டில்களை உருவாக்க 17,000,000 பேரல்கள் கச்சா எண்ணெய் (அதைப் பயன்படுத்தி 1,00,000 கார்களை ஒரு வருடம் இயக்க முடியும்) உபயோகப்படுத்தப்பட்டன. பாட்டில்களை உருவாக்கும் போது உண்டான கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு 2,500,000 டன்கள். அதுமட்டுமல்ல, அந்த பாட்டில்களை மட்டும் உருவாக்க ஆன செலவு $ 100,000,000,000 (100 பில்லியன் டாலர்கள் - இதை வைத்து அமெரிக்க பெடரல் வங்கியையே வாங்கலாம்). இவர்கள் போடும் குப்பைகளால் Aquifer எனும் பூமியின் தண்ணீர் லேயருக்கு ஏற்படும் பாதிப்பு எங்கோ உட்கார்ந்திருக்கும் எனக்கு, உங்களுக்கு, ஷாஜகானுக்கும் சேர்த்துத்தான். இதில் ஒரு விஷயம் கூட ஷாஜகானின் மண்டையில் தோன்றியிருக்காதா? அவர் இருக்கும் கேம்பஸூம், நகரமும் சுத்தமாயிருந்தால் நம்மை குறை கூறுவதா? அந்த இடங்களை சுத்தமாக்கிய ரசாயனப்பொருட்களின் கழிவுகள் எங்கே கொட்டப்பட்டன? தெரியுமா அவருக்கு? பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் நிரம்பி வழியும் அமெரிக்க ஆறுகளின் படங்களை கூகிளில் சர்ச் செய்து பாருங்கள். உண்மை புரியும்.



--------------------------

அதையும் மீறி என் கோபம் அடங்கவில்லை மறுபடியும் ஒரு மெயில் தட்டினேன் யூத்ஃபுல் விகடனுக்கு "அமெரிக்க சுத்தம்" என்ற பெயரில்..

--------------------------
அன்புடையீர்,

யூத்ஃபுல் விகடனில் ஷாஜகானின் "அமெரிக்கா வாசி" - சிறுகதையில் இந்தியா திரும்பும் இளைஞனின் புலம்பல்கள் இருந்தன. இந்தியா சுத்தமாக இல்லையே என்று கரித்துக்கொட்டியிருந்தார் அமெரிக்க ரிட்டர்ன் இளைஞர். இந்த மெயிலின் இணைப்பில் உள்ள பவர்பாயிண்ட் பிரசன்டேஷன், தண்ணீர் பாட்டில் விஷயத்தில் மட்டும் (30கோடி) அமெரிக்கர்கள் செய்யும் அட்டகாசங்களை தெள்ளத்தெளிவாக விளக்குகிறது. இதை யூத்ஃபுல் விகடனில் முழுமையாக வெளியிடாவிட்டாலும் அட்லீஸ்ட் ஆற்றில் குப்பையுள்ள இரு புகைப்படங்களையாவது வெளியிடவும், இல்லாவிடில், தயவு செய்து அவருக்கு மட்டுமாவது அனுப்பி வைக்கவும். அவர் பார்க்கட்டும். (அல்லது அவரது மெயில் ஐடி யை வெளியிடவும்) இதெல்லாம் (100கோடி பேர் உள்ள) இந்தியாவில் நடக்கவில்லை என்பது அவர் மண்டையில் உறைக்கட்டும்.

எஸ்கா


--------------------------

ஆனால் ரொம்பவும் காரமாக இருந்தால் அவர்கள் யூத்ஃபுல் விகடனில் வெளியிட மாட்டார்கள். அதனால் எனக்கு அவர்கள் அனுப்பிய ரிப்ளை இது..

--------------------------

அன்பு எஸ்கா,

உங்கள் கோபம் புரிகிறது. நீங்கள் சொல்ல வேண்டியதை 'அமெரிக்கா வாசி' கதையின் பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டீர்கள். அந்தக் கருத்து ஏற்கப்பட்டுள்ளது. அதில் முழுமை இருந்தது. அதுவே போதும் என்று கருதுகிறோம். ஷாஜகான் தனது கருத்தை கதை வடிவில் சொல்லியிருக்கிறார். அதற்கான மாற்றுக் கருத்தை நீங்கள் பதிவு செய்துவிட்டீர்கள். இதுவே போதுமானது என்று நினைக்கிறோம்.

நன்றி.

- யூத்ஃபுல் விகடன்.

--------------------------

இப்போது சேலம் தேவா அனுப்பிய லிங்கைப்பார்த்தவுடன் மீண்டும் கொஞ்சம் டென்ஷன் வந்தது. அதற்காகத் தான் இந்தப்பதிவு.

அப்புறம் இன்னோரு விஷயம். முடிந்தால் அவன் ப்ளாக்கை எட்டிப்பாருங்கள். கொஞ்சம் மொக்கைதான் போட்டிருப்பான். ஆனால் வாய் விட்டு சிரிக்கும் படி இருக்கும். ரொம்பவும் ரசனையான பயல் அவன். பதினைந்து வருடத்திற்கு முன்னால் பத்து பைசா போஸ்ட் கார்டில் கச்சா முச்சாவென்று மொக்கையாக (எட்டாவது படிக்கும் போதே - 1994 என்று நினைக்கிறேன்) எழுதி எனக்கு லெட்டர் போட்டவன் அவன். முடிக்கையில் - இப்படிக்கு அன்பான, அறிவான, அழகான, புத்திசாலியான உன் நண்பன் தேவராஜ் என்று முடித்திருப்பான். கடைசி பஞ்ச் லைன் என்ன தெரியுமா? "வீட்ல காட்டிராத" அது எப்படி முடியும்? நேராக எங்கப்பா கைக்கு தான் போனது அது. அவர் வாங்கிப்படித்து விட்டு "யார்றா அவன் தேவா?" என்றார்.

----------------------------------------------------------------------

இந்தக் கட்டுரையை முழுதாக எழுதி முடித்த பிறகுதான் இந்த பரதேசி சேலம் தேவா இன்னோரு லிங்க்கை அனுப்பினான். அது அன்பர் "காக்டெயில் சந்தோஷ்" எழுதிய "பாட்டில் குடிநீர் : அழிவும் அறியாமையும்" என்ற கட்டுரை அதில் அவர் தெளிவாக அழகாக விளக்கமாக ஒரு பதிவு போட்டிருக்கிறார். நன்றாக இருந்தது. இது முன்னமேயே தெரிந்திருந்தால் நான் பதிவே போட்டிருக்க மாட்டேன். (டேய்... தேவா..... வெட்டிப்பயலே.... இருடி... உனக்கு இருக்கு....)

----------------------------------------------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
----------------------------------------------------------------------

செவ்வாய், 26 அக்டோபர், 2010

தலைப்பு இல்ல

இந்தக்கொடுமையை நான் எங்க சார் போய் சொல்லுவேன்? இந்த மாதிரி இந்த மாதிரி பிட்டு பிட்டா பதிவு எழுதி வச்சிகிட்டு, இதுங்களுக்கு பொதுவா ஒரு பேரு வைக்கலாமே, நாளப்பின்ன திரும்பவும் எழுதும் போது தலைப்பு தேவைப்படுமேன்னு பாத்தா ஒரு பொதுத் தலைப்பு கிடைக்கவே மாட்டேங்குது... மிக்சர், நொறுக்கல், வாந்தி, குப்பைத்தொட்டி அப்படி இப்படின்னு எல்லாம் அரை மணிநேரத்துக்கும் மேலா யோசிச்சு யோசிச்சு ஒவ்வொரு பேரா கூகுளடிச்சுப்பாத்தா எல்லா பேருலயும் ப்ளாக்கு இருக்குது. என்ன கொடுமை சார் இது? புள்ளைக்குப் பேரு வைக்க முடியலையே....















-----------------------------------
தலைப்புக்காக கட்டுரை எழுதுவது, கருத்து சொல்ல பதிவு எழுதுவது, சமுதாயத்தை முன்னேற்றுவதற்காக எழுதுவது (?) எல்லாம் போக பிட்டு பிட்டாக "கற்றதும் பெற்றதும்" மாதிரி மனதில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ (ஹோய், ஹோய், ஹோய், ரொம்ப பேசாதடா டேய்) அதை அப்படியே கொட்டப் போகும் இடம் தான் இந்த குப்பைத்தொட்டி (அ) வாந்தி (அ) மிக்சர் (அ) நொறுக்கல் (அ) புது பேரு வைப்போம்.. இப்போதைக்கு "தலைப்பு இல்ல" ன்னு வச்சுக்கலாம்.
-----------------------------------

சி.என்.என் ஹீரோஸ் பட்டியலில் சேர்ந்துள்ள திரு.நாராயணன் கிருஷ்ணன் பற்றிய பதிவை எழுதிய பிறகு எனக்கு புதிதாய் இரண்டு ஃபாலேயார்கள் கிடைத்துள்ளார்கள். சந்தோஷமாக இருக்கிறது. வெறும் 13 ஃபாலேயார்கள் வைத்துக்கொண்டு ஏண்டா இந்த பில்ட் அப் என்கிறீர்களா? நான் ஒன்றும் பிரபல பதிவர் கிடையாது. ஏதோ ஒரு டைரி எழுதுவது போல எழுதிக்கொண்டிருக்கிறேன். டைரியைப்பொதுவில் வைப்பதால் டீசன்டாக எழுத வேண்டும் என்று கும்மி அடிக்காமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். மெயில் மூலமாக வரும் கடிதங்களுக்கு மெயில் மூலமாகவே பதில் அனுப்பி விடுகிறேன். வேலை அதிகமாக இருப்பதன் காரணமாக மற்றவர்களின் பதிவுக்கு பின்னூட்டமும் போடுவதில்லை, பதிவுகள் எழுதவே நேரம் கிடைப்பதில்லை. அதையும் மீறி ஒன்றிரண்டு பதிவுகள் எழுத முயற்சிக்கிறேன். அப்படி எழுதும் போது ஃபாலோயர்கள் எண்ணிக்கை அதிகமானால் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.

-----------------------------------

இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை காலபந்துபோட்டியின் போது, காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி உள்பட 8 போட்டிகளின் முடிவுகளை துல்லியமாக கணித்துக் கூறியதால் உலகம் முழுவதும் காலபந்து ரசிகர்களிடையே மிகுந்த பிரபலம் அடைந்தத ஆக்டோபஸ் பால் இறந்து போய்விட்டதாம். ஒரு டவுட்டு - தான் எப்போது இறக்கப் போகிறோம் என்று அதற்குத் தெரிந்திருக்குமோ?

-----------------------------------

திடீர்னு தோணிய ஒரு கவிதை (மாதிரி)

அவள் என்னருகில்
இல்லையென்றால் என்ன?
அவள் நினைவுகளும்,
அவள் புகைப்படமும்,
காதுகளில் ரீங்கரிக்கும்
அவள் குரலோசையும்
எனக்குப்போதும்.

- இது யாரைப்பற்றி இருக்கும்னு சொல்லுங்க பாக்கலாம்?

-----------------------------------

நம்ம கம்பேனி இஸ்கூலுக்கெல்லாம் டிஜிட்டல் பாடம் குடுக்குற கம்பேனி. டீச்சருங்க பசங்களுக்கு பாடம் சொல்லித்தர்றதுக்காக.. டிஜிட்டல் பாடமா? அப்படின்னா எப்பிடி?

புரியுற மாதிரி சிம்பிளா சொல்றேன். நாமள்லாம் படிக்க சொல்லோ எப்டி படிச்சோம். பிரிண்ட் அடிச்ச புக்குல இருக்குறதை, கலர் கூட இல்லாம, படம் கூட இல்லாம படிச்சோம். அந்தப்பாடம் எல்லாம் விஷூவலா இருந்தா எப்படி இருக்கும்னு யோசிங்க.. அதாவது ஹார்ட் பீட்டு, சாணக்யா, அசோகா, ட்ரயாங்கிள், எர்த் குவேக்கு, அந்தக் காலத்து கோவில்கள், ராஜாக்கள், கிட்னி, தவக்காளையை குப்புற போட்டு அறுக்குறது, கடல் தண்ணியில இருந்து உப்பு எடுக்குறது, எல்.கே.ஜி ரைம்ஸூ... அப்டி இப்டின்னு எல்லா பாடமும்...

அதுவும் கிளாஸ் ரூமுக்குள்ள எல்லா பசங்களும் பாக்குற மாதிரி பெருசா, அதுவும் டீச்சரோட ஒயிட் போர்டுல, அதுவும் அங்கங்க ஃப்ரீஸ் செஞ்சு அது மேல டிஜிட்டல் மார்க்கரால நோட் பண்ணி நோட் பண்ணி சொல்லிக்குடுக்குற மாதிரி.. எப்படி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க... அதான் டிஜிட்டல் பாடம்.

அதுக்காக ஒரு புது இஸ்கூலுல டீச்சருங்களை ஒக்கார வச்சி ஒரு டெமோ எடுத்துகிட்டு இருந்தேன். கூட்டத்துல ஒரு சின்னப்பய உக்காந்திருந்தான். (சின்னப்பய சாவகாசம் ஆகாதுங்கறது சரியா தான் இருக்கு) சரி, சும்மா இருக்கானே அவனுக்கு ஒரு ரைம்ஸ் போட்டுக்காமிக்கலாமேன்னு "ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்" போட்டு விட்டேன். ஆ-ன்னு பாத்துட்டே இருந்த பயபுள்ள திடீர்னு (விவேக்கு கிட்ட வையாபுரி கேக்குற மாதிரி) கேட்டான்யா ஒரு கேள்வி "மாமா இதுல சுட்டி டி.வி வருமான்னு".

நான் "பே"ன்னு முழிச்சுட்டு நிக்க கும்பலே என்னைப்பார்த்து சிரிச்சுது.

இது எனக்குத் தேவையா?

-----------------------------------

அப்புறம் எனக்கு வந்த ஒரு எஸ்ஸெம்மெஸ்ஸூ

செல்போனைக்கண்டு பிடிச்சவன் வேணும்னா இங்கிலீஸ் காரனா இருக்கலாம். ஆனா மிஸ்டு காலை கண்டு பிடிச்சவன் தமிளன்...டா......

-----------------------------------

அப்புறம் இன்னோரு எஸ்ஸெம்மெஸ்ஸூ நம்ம டாகுடரு பத்தி...

விஜய் என்பது யார்?
எவன்(ர்) ஒருவன்(ர்) தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த ஒரு படத்தை கர்ச்சீஃப் கலர் கூட மாற்றாமல் தமிழில் எடுத்து ப்ளாப் ஆக்குகிறானோ அவனே(ரே) விஜய் என்பவன்(ர்) ஆவான்(ர்).

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

ஓட்டு போடுங்க


ஆனந்த விகடன் இணைய தளம் மதுரை இளைஞர் கிருஷ்ணன் பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதோ அதில் இருந்து சில பாராக்கள்.

-----------------------------
மதுரை இளைஞர் கிருஷ்ணன்... சி.என்.என். (CNN) தேர்ந்தெடுத்துள்ள உலகின் சிறந்த 10 மனிதர்களுள் ஒருவர்.

சமூக அக்கறை, நம்பிக்கை, விடா முயற்சி இவற்றை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டு இந்தப் பூமியில் மாற்றத்தைக் கொண்டு வர முனைந்து செயல்படுவோரைக் கண்டறிந்து, ஆண்டுதோறும் சிறந்த மனிதர்களை உலகுக்கு அடையாளம் காட்டி வரும் திட்டமே 'சி.என்.என். ஹீரோஸஸ்'.

இதில், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 10 மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர், தமிழரான கிருஷ்ணன். (இவர், முதலிடம் பெறுவது உங்கள் கையில் - விவரம் கீழே)

தனி மனிதர் ஒருவருக்கு உணவில்லாதபோது, அவரது வயிற்றுச் சோறிட்டு வருபவர் இவர்.

கிருஷ்ணனை 2005 ஆம் ஆண்டே வாசகர்களுக்கு அடையாளம் காட்டியது விகடன். அவரது சமூகப் பணியின் ஆரம்பகட்ட நிலை குறித்து ஜூலை 31, 2005 தேதியிட்ட ஜூனியர் விகடனில் வெளிவந்த செய்திக் கட்டுரை இதோ ஒரு ஃப்ளாஷ்பேக்காக...

-----------------------------------------------

இது "நேசம் கிருஷ்ணன்... உன்னத மனிதருக்கு உலக அங்கீகாரம்!" என்ற தலைப்பில் ஆனந்த விகடன் வெளியிட்ட அந்தக் குறிப்பிட்ட கட்டுரையின் லிங்க்
http://www.vikatan.com/news/news.asp?artid=5281
-----------------------------------------------

இது குறித்து அன்பர் ஜாக்கி சேகர் வெளியிட்டுள்ள பதிவின் லிங்க்
http://www.jackiesekar.com/2010/10/1803102010_24.html

-----------------------------------------------

இன்னும் சில வரிகள் அதே விகடன் கட்டுரையில் இருந்து
----------------------------------------------
உலகின் சிறந்த 10 மனிதர்களைத் தெரிவு செய்துள்ள சி.என்.என்., அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து 'சி.என்.என். ஹீரோ ஆஃப் தி இயர்' என்ற கெளரவத்தை அளிக்க இணையத்தில் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.

சி.என்.என். தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.

இந்திய இணையவாசிகள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தாலே கிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி!
----------------------------------------------
நீங்க யாரோ எவரோ, உங்களுக்கு என்னை தெரியுமோ தெரியாதோ, எனக்குத் தெரிந்தவரோ தெரியாதவரோ யாராக இருந்தாலும் பரவாயில்லை. தயவு செய்து ஒரு ஓட்டுப்போடுங்கள். ரெண்டே நிமிடம் தான் ஆகும். உங்களுக்குத் தெரிந்த பெரியவர்கள் யாராவது கூட இதன் மூலம் உதவப்படலாம் இல்லையா?

மற்ற பதிவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். ஒவ்வொரு பதிவருக்கும் பல ஃபாலோயர்கள் உண்டு. உங்களை நம்பி நூற்றுக்கணக்கான முறை பக்கங்கள் திறக்கப்படுகின்றன. இது குறித்த ஒரு பதிவு வெளியிட்டால் இது இன்னும் பலரையும் போய்ச்சேரும். ஏதோ நம்மால் முடிந்த வரை தலைக்கு நூறு பேரை ஓட்டுப் போட வைக்கலாம் இல்லையா?

1,00,000 டாலர்கள் என்றால் நம்ம ஊர் மதிப்பில் சுமார் 43 அல்லது 44 இலட்சம் ரூபாய் வரும். அதை வைத்து இன்னும் எவ்வளவு பேருக்கு உதவி செய்யலாம்? நமக்கு என்ன கஷ்டமான வேலை? ஒரே ஒரு ஓட்டு தானே?
----------------------------------------------
நீங்கள் ஓட்டுப்போட வேண்டிய சி.என்.என் இணையத்தின் லிங்க் இது.
http://heroes.cnn.com/vote.aspx

நவம்பர் 18-ம் தேதிவரை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இதே டாப் டென் லிஸ்டில் என்னுடைய அடுத்த சாய்ஸ் "அனுராதா கொய்ராலா".

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

வெள்ளி, 8 அக்டோபர், 2010

ஆரோகணம் அவரோகணம்

இந்த கர்நாடக இசையில் ஆரோகணம் அவரோகணம் என்று இரண்டு சொல்வார்கள். தெரியுமா? அப்படி என்றால் என்ன என்கிறீர்களா? சினிமாவையே எடுத்துக் கொள்ளுங்களேன். அதாவது கர்நாடக சங்கீதம் சம்பந்தப்பட்ட படங்களில் எல்லாம் ஹீரோவும், ஹீரோயினும் அல்லது ஹீரோவும் காமெடி வில்லனும் போட்டி பாடல் பாடும் போது ஆரம்பத்தில் இந்த ச, ரி, க, ம, ப, த, நி, ச... என்று படிப்படியாக ஏற்றியபடியே ஒரு முறை பாடுவார்கள். அப்புறம் சா, நி, த, ப, ம, க, ரி, ச... என்று இறக்கிப்பாடுவார்கள் பார்த்திருக்கிறீர்களா? ஸாரி, கேட்டிருக்கிறீர்களா? அவைதான் ஆரோகணம் அவரோகணம் . முதல் செட்டில் ஏற்றிப் பாடுவது ஆரோகணம். இரண்டாவது செட்டில் இறக்கிப்பாடுவது அவரோகணம்.

இது நம்ம ஆளு படத்தில் கூட பாக்யராஜ் போட்டி பாடல் பாடும் போது ஷோபனாவை சுரவரிசை (ஸ்வர வரிசை - ஏழு ஸ்வரங்களின் வரிசை) பாடாதே என்று கேட்டுக்கொள்வார். ஆனால் அம்மணி நேரம் பார்த்து சுரவரிசை பாடி அவரை காலை வாரி விடுவார். அந்தப்படம் மட்டுமில்லாமல் எல்லா படங்களிலுமே கர்நாடக சங்கீதப்போட்டி என்று ஆரம்பித்து அந்த ஒரு வரியை மட்டும் பாடிவிட்டு அதுக்கு அப்புறம் அவர்கள் சாதாரணமாக தமிழுக்குத் தாவி பாடல் பாடத்துவங்கி விடுவார்கள்.

அதுசரி. சாதாரண ரசிகனுக்குப் புரிய வேண்டும் அல்லவா? முழுக்க முழுக்க சரிகம.... சரிகம.... சரிகம.... என்றே பாடிக்கொண்டிருந்தால்? முழுக்க கர்நாடக இசை பற்றிய படமான சிந்து பைரவியில் கூட அப்படித்தான். கர்நாடக இசைக்கச்சேரி செய்யும் பாடகரை ஒரு ரசிகை தடுத்து தமிழ்ப்பாடல் பாடி ரசிகர்களை வசியப்படுத்துவார். (பாலச்சந்தரின் க்ளாஸிக்குளில் ஒன்று...சிவகுமார், சுஹாசினி..)

ஆரோகணம், அவரோகணம் இரண்டும் கலந்து தான் எந்த ஒரு பாடலையும் அமைக்க முடியும். அதாவது ஏற்ற இறக்கத்துடன். பாடல் மட்டுமல்ல.. பேசுவது கூடத்தான். வெறும் ஏற்றம்? அல்லது இறக்கம்? அதாவது ஆரோகணத்தை மட்டுமே கொண்டு ஏற்ற வரிசையிலோ அல்லது அவரோகணத்தை மட்டுமே கொண்டு இறக்க வரிசையிலோ ஒரு பாடல் அமைக்க முடியுமா?

முடியாது என்று சொன்னவர்களை எம்.எஸ்.வியும் இளையாராஜாவும் தடுத்தாட்கொண்டார்கள். பழைய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் "அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்" பாடல் அப்படி ஒரு ஸ்பெஷல் பாடல். இசை? வேறு யாரு? மெல்லிசையில் கலக்கிய மன்னரான எவர்க்ரீன் எம்.எஸ்.விஸ்வநாதன் தான். அப்படி ஆரோகணத்தில் மட்டுமே (மற்ற இசையமைப்பாளர்களுக்கு சவால் விட்டு) அமைக்கப்பட்ட ஏற்ற வரிசைப் பாடல் அது.

அதற்குப்பிறகு நம்ம இளையராஜாவும் அதே மாதிரி ஆரோகணத்தில் மட்டுமே அமைந்த ஒரு பாடலை “சிந்து பைரவி” படத்தில் "கலைவாணியே உனைத்தானே, அழைத்தேன். உயிர்த்தீயை" என்று சிவகுமாரின் ரீ-என்ட்ரி சமயத்தில் பாடுவதாக அமைத்திருப்பார். அதிலும் அவரோகணம் கிடையவே கிடையாது. ஒன்லி ஆரோகணம். அந்தப்பாடல் படத்தில வரும் போது ஒரு நடிகர் (பேர் மறந்து போச்சு) வந்து இதைப்பற்றி லீட் கொடுத்து விட்டுப்போவார். இந்த இரண்டு பாடல்களும் தமிழ் சினிமா சரித்திரத்தில் இரு மைல்கல்கள்.

நம்ம ஏ.ஆர்.ரஹ்மான் அப்படி ஏதும் ஆரோகணத்தில் முயற்சி செய்திருக்கிறாரா? செய்திருப்பதாகத் தெரியவில்லை. செய்திருந்தால் சூப்பராக இருக்கும். அப்படி ஏதும் தகவல் தெரிந்தால் யாரேனும் பின்னூட்டம் போடுங்கள். ஏன் ஏ.ஆர்.ஆர் மட்டும் என்கிறீர்களா? 75 ஆண்டு காலத்திற்கான தமிழ் திரைப்படங்களை மொத்தமாக கணக்கெடுக்கும் போது தலைமுறை வாரியாக பார்த்தால் எம்.எஸ்.வி, இளையராஜா, அடுத்ததாக ஏ.ஆர்.ரஹ்மான் என்று மூன்று பேர்தான்அவுட்ஸ்டாண்டிங்-ஆக நிற்கிறார்கள்.



கே.வி.மகாதேவன், ராமமூர்த்தியில் ஆரம்பித்து சந்திரபோஸ், ஷங்கர் கணேஷ், மனோஜ்-கியான் என்று பயணித்து யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ், விஜய் ஆன்டனி என்று தொடரும் தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் லிஸ்ட் மிக மிக மிகப் பெரியது. ஆனால் டைம் ட்ராவல் செய்து பார்த்தாலும் கடைசியாக எஞ்சி விஞ்சி நிற்பது இவர்கள் மூவர் மட்டும் தான். அதனால் தான் ஆரோகணம் மேட்டரில் எம்.எஸ்.வி, இளையராஜா மட்டுமில்லாமல் ரஹ்மானும் ஒரு பாடல் போட்டால் நன்றாக இருக்கும் என்பது என் ஆசை.

இந்த ஏழு கட்டை, எட்டு கட்டை (நாட்டு கட்டைலாம் இல்லை) எல்லாம் கூட அப்படித்தான். அவ்வை சண்முகியில் ருக்கு ருக்கு ருக்கு பாடலுக்கு முன் மாமிகள் "மாமி எத்தனை கட்டை" (நான் செம கட்டை என்று கத்தினேன் தியேட்டரில்) கேட்கும் போது ம்ம்ம்ம்ம்ம்........ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........ என்று ஒரு முறை பாடிப்பார்த்து விட்டு அஞ்சு என்பார் மாமி கமல். பாய்ஸ் படத்தில் பாடல் பதிவு செய்யும் போது ஹரிணி (அப்போ ஹரிணி தானே, இப்போ தான் ஜெனிலியா... அதுவும் ஃபாஸ்ட் ட்ராக் விளம்பரத்தில் வரும் ஜெனிலியா!!!!!!!! ம்ஹூம்.. முடியல) கூட நாலா என்று கேட்கும் நகுல்-இடம் இதே மாதிரி ம்ம்ம்ம்ம்ம்........ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........ என்று ட்ரை செய்து விட்டு ஆமாம்.. என்பார் அவர்.. அதெல்லாம் இதில் தான் வருகிறதாக்கும்.

இந்த மேட்டரெல்லாம் எனக்குக்கூட தெரியாமல் தான் இருந்தது. ஆனால் இப்போல்லாம் விஜயில் சூப்பர் சிங்கர்கள் மற்றும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிகள் பார்க்கும் போது தான் ஒவ்வொரு ரவுண்டிலும் பாடகர்களை வார்த்தைகளையும் வரிகளையும் பிட்டு பிட்டாக பாடச்சொல்லி அப்படியே அக்கக்காக பிரித்து மேய்வார்கள் நடுவர்கள் என்று உட்கார்ந்திருக்கும் பெரிய பெரிய பாடகர்கள். அதையெல்லாம் பார்த்துத்தான் ஓஹோ, இப்படியெல்லாம் பல மேட்டர்கள் இருக்கிறது போல என்று நம் சிறுமூளை (சிறுமூளைன்னா சிறுமூளை இல்லைங்க. சிறிய மூளை)- க்கும் தெரிய வருகிறது.

என்னடா இது சம்மந்தமே இல்லாமல் திடீரென்று கர்நாடக சங்கீதம் பற்றியெல்லாம் பேசுற? எப்படி உனுக்கு இந்த அறிவு என்கிறீர்களா?

அது ஒன்றுமில்லை. நீண்ட நாட்களுக்குப்பிறகு பஸ்ஸில் எம்.ஜி.ஆரின் பழைய பாடல்களை ராஜ் வீடியோ விஷனில் பார்த்தபடியே ஒரு பயணம் செய்ய நேர்ந்தது. கிட்டத்தட்ட பதினைந்து சூப்பர் டூப்பர் ஹிட் எம்.ஜி.ஆர் பாடல்கள். அதில் பல பாடல்கள் மெலடி வகை. மழைச்சாரல் தூவ டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டே பாடல்கள் பார்த்தபடியே பளிச்சென்ற ஈரமான ரோட்டை ரசித்தபடியே ஒரு பயணம். ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி வரை கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் அப்படியே மிதந்து கொண்டே போனது மனது. இதைக்கூட அதே பஸ்ஸில் இருந்து தான் டைப் செய்து பதிவேற்றுகிறேன்.


அதில் வந்த ஒரு பாடல்தான் ஆயிரத்தில் ஒருவன்-ல் இருந்து "அதோ அந்த பறவை போல" பாடல். அதிசயமாக மேலும் ஒரு மணி நேரம் கழித்து "கலைவாணியே"வும் ஒளிபரப்பானது. அப்புறம் கொஞ்ச நேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஹிட்ஸ். அதையெல்லாம் பார்த்தவுடன் தோன்றியவைதான் இவையெல்லாம். ஆனால் நிஜமாகவே ஒரு க்ளாஸிக் ஃப்ரைடே தான் இது என்று சொல்ல வேண்டும். நாளை இருமத்தூரில் இருக்கும் ஒரு பேரன்ட் டெமோ, நாமக்கல்லில் செய்ய வேண்டிய பேமென்ட் கலெக்ஷன், சேலத்துக்கு ஒரு ஆர்.சி ரெக்ரூட்மெண்ட் எல்லாவற்றையும் மறக்க வைத்த ஒரு இரவுப்பயணம் இது.

டேய்.. போதும்டா போ... என்கிறீர்களா? ரைட்டு.. ஓக்கே.. பஸ் ஸ்டாண்டு வந்தாச்சு, இறங்கணும். பை... பை...

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

திங்கள், 4 அக்டோபர், 2010

அழைப்பு

(இக்கட்டுரை உயிர்மையின் நேற்றைய (அக்டோபர் 4-ம் தேதி) உயிரோசை டாட் காம் இணைய இதழில் வெளியானது.)
--------------------------------------------------------------------------------
நைட்டு பன்னிரண்டே கால் மணி இருக்கும். ஓசூரில் இருந்து பயங்கர டயர்டாகி சேலம் வந்து, புது பஸ் ஸ்டாண்டில் பசியோடு இறங்கி கைவலியில் சூட்கேஸை தலைக்கு மேல் தூக்கியபடி, லேப்டாப்பை ஒதுக்கியபடி ஹோட்டல் ஏதாவது இருக்கிறதா என்று தேடியபடி உள்ளே நடந்தால், ஒரு ஓரமாக இருந்து "ஹெலோ...." என்று நளினம் கலந்த குரலில் ஒரு அழைப்பு.

பகீரென்று இருந்தது.

ஒரே இருட்டு. மச மசவென்று. மழை ஈரம் வேறு. வெளிப்புறமாகவே பஸ்ஸில் இறங்கி ஷேர் ஆட்டோ நிற்கும் இடத்தில் இருக்கும் சிறு திறப்பு வழியாக உள்ளே இறங்கிப்போனால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு வண்டிகள் நிற்கும். எந்திரன் போஸ்டர்கள் அங்கே ஒட்டப்பட்டிருக்கும். அந்த திறப்பிற்கு முன்பு இருந்து தான் இந்த அழைப்பு. பார்த்தால் உருவம் நல்ல ஆஜானுபாகுவாக இருந்தது. நம்ம சைஸூக்கு அவ்ளோ பெரிய உருவத்தைப்பார்த்தால் கை நடுங்க ஆரம்பித்து விட்டது.

நல்ல ஜிகுஜிகுவென்ற நிறத்தில் சேலை. கிட்டத்தட்ட ஸ்லீவ்லெஸ் போன்ற கையுடனான முழுதும் கீழிறங்கிய ஜாக்கெட். பளிச்சென்ற மேக்கப்புடனான முகம். உதட்டைத் துடைத்தபடி என்னை நோக்கிய கூர் பார்வை.. அந்த அகால நேரத்தில் ஓவர் மேக்கப் கொஞ்சம் பயமாகவே இருந்தது. லேசாக அசைந்தபடி சைகை காண்பித்தது அந்தப் பெண் உருவம். உற்றுப்பார்த்தால் அது பெண் அல்ல.






---------------------------------------------------

மும்பைக்கு அடுத்தபடியாக "அந்த" மேட்டரில் எங்க ஊர்தான் ஃபேமஸ் என்று பல பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். ஜூ.வி முதற்கொண்டு நெற்றிக்கண் வரை ஏதாவது கிசுகிசு மேட்டர்களில் இந்த மாதிரி மேட்டர்கள் தான் இருக்கும். முன்பெல்லாம் பெண்கள் மட்டும் தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்போது திருநங்கைகள் கூட. அதிலும் பெண் தன்மை அதிகமாக இருந்தால் ரேட் உயருமாம். அவர்கள் சொல்லும் இடத்தில் தனி ரேட், கஸ்டமர் இடத்திற்கு தனி ரேட், நேரக்கணக்கு மணிக்கணக்காக நீள்கிறது - அதற்கு தனி ரேட். (ரேட் கட்டர்-லாம் கிடையாதாம்)

ராஜேஷ்குமார் கூட ஒருமுறை ஊர்வாரியாக ஊர்களை மையமாக வைத்து குமுதத்திலோ, விகடனிலோ கதை எழுதிய போது எங்க ஊரைப்பத்தி மட்டும் பலான மேட்டருக்கு ரெய்டு போய் உயிருக்கு ஆபத்தை சந்திக்கும் குமரகிரி பெண் இன்ஸ்பெக்டர் கதையை எழுதியிருந்தார். அதைப்படிக்கும் போது இவர்கள் எல்லாம் எங்கே இருப்பார்கள் என்று பலநாள் யோசித்திருக்கிறேன்.

புது பஸ் ஸ்டாண்டு பக்கம் ஒரு சைடில் ஓரமாக வரிசையாக நிற்பார்கள், அல்லது பஸ் ஸ்டாப்பில் கூட நிற்பார்கள் என்று சொல்வான் கோவிந்தன். ஆனால் நான் இதுவரை பார்த்ததே இல்லையே, ஒருவேளை நான்தான் வேளை கெட்ட வேளைகளில் போயிருக்கிறேனோ என்னவோ, அல்லது நான் ரொம்ப நல்ல பிள்ளையோ, அல்லது அவன் சொன்ன அடையாளங்கள் பொருந்திப் போகவில்லையோ என்று ஒரு டவுட்டு இருந்தது.

ஒருமுறை இதை வைத்து ஒரு கட்டுரை எழுதலாம் என்று தகவல் திரட்டும் போது கோவிந்தனிடம் போன் செய்து திரும்பக் கேட்டால் நீ இன்னும் வயசுக்கு வரலடா மச்சி என்று சிரித்தபடியே போனை வைத்துவிட்டான். சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் சொன்ன பழைய பஸ் ஸ்டாண்டு பக்கமும் இரண்டு நாட்கள் சுற்றினேன். ஆனால் அவன் சொன்ன அடையாளங்கள் பல பேருடன் பொருந்திப் போயின. கருத்து கேட்கலாம் என்றால், அது அதிக அளவில் கிராம மக்கள் வந்து போகும் இடம். ஒரு வேளை தவறுதலாக ஏதேனும் பிரச்சினை ஆகி விட்டால் என்ன செய்வது என திரும்பி வந்து விட்டேன்.

இதே போல் போன வருடம் கல்கத்தா போனபோது கூட அங்கே (அங்கேன்னா? அங்கேன்னா அங்கே தாங்க - "சோனாகாச்சி" - தெரியாத மாதிரி கேக்குறது...) எட்டிப்பார்க்கலாமா? என்று ஒரு குறுகுறுப்பு இருந்தது. ஆனால் பயம். நெஞ்சு முழுக்க பயம். (பழைய) ஆபீஸில் சொல்லியனுப்பினார்கள். கொல்கத்தால மூணு ஆபீஸ் இருக்கு. அதுல விபின்-னு ஒரு பிராஞ்ச் மேனேஜர் இருக்கான். பார்த்துக்கோடா, அவன் ஆபீஸில் இருந்து எட்டிப்பார்த்தாலே பின்பக்கம் அந்த இடம் தெரியும் என்று. ஆனால் சுவ்ரோ கூடவும் ஷூப்ரா கூடவும் சுற்றியதில் அந்த மேட்டர் மறந்தே போயிற்று.


ஆச்சா? கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகி விட்டது.. கொல்கத்தாவும் மறந்து போயாயிற்று.. இப்போது திடீரென்று இங்கே நம்ம ஊரிலேயே (என்னையும் பெரிய மனுஷனாக மதித்து) ஒரு புதிய அழைப்பு. இவர்களை எல்லாம் எங்கே, எப்படிப் பார்ப்பது என்று ரொம்ப நாள் யோசித்த ஒரு விஷயம். அது திடீரென்று அது எங்க ஊரிலேயே நடக்கும் என நான் நினைக்கவே இல்லை. ஆனால் அந்தப் படபடப்பு இன்னமும் போகவில்லை.

எத்தனை பேர் இதில் ஈடுபட்டிருப்பார்கள், பெண்கள், திருநங்கைகள், இவர்கள் எப்படி வந்தார்கள்? அவர்கள் வருமானம், போலீஸ், மாமூல், கேஸ், அரசியல்வாதிகள், ரெளடிகள், என்றெல்லாம் எண்ணிபடி திரும்பி வந்தேன். இப்போதெல்லாம் பஸ் இறங்கியதும் உடனே அந்தப்பக்கம் திரும்பிப் பார்க்கத் தோன்றுகிறது. தினமும் கண்ணில் படுகிறார்கள். பரிதாபமாக இருக்கிறது.

(கடைசி வரை அன்றைக்கு எங்கேயும் ஹோட்டல் இல்லை. பசியோடு தான் திரும்ப வேண்டியிருந்தது)

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------