சனி, 13 நவம்பர், 2010

கலவை சாதம்..

போன முறை தலைப்பு இல்ல என்று எழுதிய உதிரிக் கட்டுரைக்கு கலவை சாதம் என்று பெயர் வைக்கலாம் என்று பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்சேபணை இருப்பவர்கள் போராட்டம் செய்யலாம். கொஞ்சம் டைம் பாஸாகும். (ஜோக் இருக்கட்டும், சீரியஸாக இந்தப்பெயரில் வேறு யாரேனும் அன்பர் எழுதிக்கொண்டிருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும், நான் பெயர் மாற்றிக் கொள்கிறேன்)

----------------------------------------

தனிமையிலே இனிமை காண முடியுமா? முடியாது என்பார்கள் சிலர். முடியும் என்பார்கள் பலர். Solitude is a bliss என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. (இதைத்தான் செல்வராகன் தன்னுடைய ஒரு படத்திற்காக Solitude என்ற வார்த்தை கிடைக்காமல் Being alone is a bliss என்று கேட்ச் லைன் போட்டிருந்தார். அந்தப்படம் நின்று போயிற்று என்று நினைக்கிறேன், பெயர் ஞாபகமில்லை) அதாகப்பட்டது தனிமை என்பது ஒரு வரமாம். சத்தியமாக இல்லை.. தனியாக ஒரு நாள் இருக்கலாம். இரண்டு நாள் இருக்கலாம். அல்லது எல்லாரும் இருக்கும் போது தனியாக இருக்கலாம். (அதாவது எல்லாரும் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில்) ஆனால் யாருமில்லாமல் நிஜமாகவே தனியாக இருப்பது என்பது கொடுமை. அதுவும் டி.வி கிடையாது. வண்டி கிடையாது. மியூஸிக் பிளேயர் கிடையாது. லேப்டாப் உண்டு, ஆனால் டேட்டா கார்டு கிடையாது. சோறு கிடையாது (நினைத்த நேரத்தில்), கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் எப்படி இருக்கும் என்று. புது ஊர் வேறு. இந்த ஊரில் எவனையும் தெரியாது வேறு.. (டிரான்ஸ்பரில் ஊர் மாறிவிட்டேன். அதான் இந்தப்புலம்பல்ஸ்)

----------------------------------------

டேட்டா கார்டு அதாங்க இன்டர்நெட்டு இல்லாததால் சுத்தமாக ஒரு நியூஸூம் தெரியவில்லை. பேப்பர் கூடப்படிப்பது இல்லை. ஒபாமா வந்துவிட்டுப்போய்விட்டாரா? ஜில் புயல் கரையை கடந்து விட்டதா? எந்திரன் மொத்த வசூல் எவ்வளவு? தங்கம் விலை எவ்வளவு ஏறியிருக்கிறது? ஏ.ஆர்.ரஹ்மான் புதுப்படம் ஏதும் ஒப்புக்கொண்டிருக்கிறாரா? மங்காத்தாவும் காவலனும் என்ன நிலைமை? சென்செக்ஸ் எவ்வளவு ஆகியிருக்கிறது? மெட்ரிகுலேஷன் பள்ளி ஃபீஸ் மேட்டர் என்னவாயிற்று? ரத்த சரித்திரா எப்ப ரிலீஸ்? சாரு இப்போ யார் கூட சண்டை போடுகிறார்? நீயா? நானா? என்னவாயிற்று? சூப்பர் சிங்கர் எத்தனை ரவுண்டு போயிருக்கிறது? என்று ஒரு நியூஸ் அப்டேட்டும் இல்லை. அதுசரி இதெல்லாம் தெரிந்து மட்டும் என்ன புடுங்கப்போற என்கிறீர்களா? அதுவும் சரிதான், நமக்கு லோக்கல் மேட்டரே ஒன்று கூட தெரியவில்லை. இன்டர்நேஷனல் மேட்டர் தெரிந்து என்ன ஆகப்போகிறது?

கம்பேனியில் ஒரு கொலீக் புதிதாக சேர்ந்திருக்கிறார் என் கம்பெனியில். அதாவது நான்தான் கொஞ்ச நாளைக்கு கம்பெனி கொடுக்க வேண்டுமாம். எதைப்பார்த்தாலும் கேள்வி கேட்கிறார் மனுஷன். செட்டப்பு செல்லப்பா என்று வடிவேலு வருவாரே அந்தா மாதிரி டவுட்டு டங்கப்பா இவர். அதிலும் பஸ்ஸில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு "கார்த்திக், இங்கே கத்தரிக்காய் எவ்வளவு? கார்த்திக், இங்கே லேண்ட் வேல்யூ எவ்வளவு? அரிசி எது ஃபேமஸ்? கார்த்திக், எந்த ஏரியாவில் வீடு பார்க்கலாம்? எந்த ஸ்கூல் நல்ல ஆக்டிவிடீஸோட எஜூகேஷன் தர்றாங்க? கார்த்திக், இந்த ஏரியாவில் எவ்வளவு வெயில் அடிக்கும்? சி.யூ.ஜி கனெக்ஷன் ஏன் வாங்கலை? நான் வெஜ் சாப்பாடு தலைவாழை இலை போட்டு எங்கே கிடைக்கும்? உங்க லேப்டாப் எத்தனை ஜி.பி? என்று ஒரே கேள்வீஸ் ஆஃப் இன்டியா. எனக்குத்தான் ஒன்றுக்குமே விடை தெரியவில்லை. ஆனால் இதை எனக்குப் புரிய வைத்ததற்கு அந்த மனுஷனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

----------------------------------------

ராவண் பாடல்களை (கவனிக்க ராவணன் அல்ல) இன்று ஹிந்தியில் கேட்டேன். தமிழை விட அருமையாக இருக்கின்றன.. ராவணனுக்கும் ராவணுக்கும் பாடல் வரிகளில் பல வேறுபாடுகள் இருந்தாலும் இசைக்கருவிகள் அனைத்தும் என்னவோ வட இந்திய வாடைக்கு தமிழை விட ஹிந்திக்கு தான் அருமையாக செட்டாகியிருப்பது போல் தோன்றுகிறது எனக்கு.. கெடா கெடாக் கறி பாடலில் வரும் ஹை பிட்ச் ஹம்மிங் தமிழை விட ஹிந்தியில் அட்டகாசமாக வந்திருக்கிறது. "வீரா"வை விட "பீரா" நன்றாக இருக்கிறது கேட்க..

----------------------------------------

டீம் மேனேஜ்மெண்ட் பற்றி கொஞ்சம் ஸ்டடி செய்ய வேண்டும். அதிலும் ரிமோட் மேனேஜ்மெண்ட் வேறு.... கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. பழைய கம்பேனியில் இருந்த டீமில் வெறும் ஐந்து பெண்கள் தான். அழகாக எட்டரைக்கு வருவார்கள், ஐந்து மணிக்கு கடையைச் சாத்தி விடுவார்கள். ஆனால் அப்போது அதுவே கஷ்டமாக இருந்தது போல் இருந்தது. இங்கே என்னடாவென்றால் டீம் சைஸ் பதிமூன்றில் ஆரம்பித்தது... மெள்ள மெள்ள ஏறி முப்பத்து இரண்டில் போய் நிற்கிறது. இன்னும் ஐந்தாறு பேர் தேவை. பெண்கள், ஆண்கள், கல்யாணம் ஆனவர்கள், கல்யாணம் ஆகாதவர்கள், டிப்ளமோ ஆட்கள், என்ஜினியரிங் முடித்தவர்கள், சிங்கிள் டிகிரி, டபுள் டிகிரி, கம்ப்யூட்டர் பேக்ரவுண்டு, ஃபர்ஸ்ட் ஜாப் பார்ப்பவர்கள் என்று ஒரே கலவை. அதுவும் ஒவ்வொருவரும் வெவ்வேறு இடத்தில், வெவ்வேறு மாவட்டங்களில். எல்லாரையும் கான்டாக்டிலேயே வைத்திருக்க வேண்டும். இது தவிர டெக்னிக்கல் டீம் ஆட்கள், சென்னை, பெங்களூரு பிராஞ்ச் ஆட்கள், உயரதிகாரிகள் என எல்லாரிடமும் பேசிக்கொண்டேடேடேடேடேடேடே இருக்க வேண்டியிருக்கிறது. இரண்டு போன்கள் வைத்திருந்தும் போன் கால்ஸ் மட்டுமே ஒரு நாளைக்கு மாறி மாறி ஐந்து மணிநேரம் ஓடுகிறது. ஒரு கால் பேசி வைப்பதற்குள் அதில் இரண்டு மிஸ்டு கால்கள். ஏ.வெங்கடேஷ், பேரரசு, டி.ராஜேந்தர் வகையறாக்களின் படம் பார்த்து முடித்ததும் ஒரு கேரிங்கான ஃபீலிங் வருமே.... அது தினமும் எனக்கு வருகிறது. காது வலிக்கிறது.

----------------------------------------

அப்படியே ஒரு ஜோக்கு (அப்பாடா, முதல்லயே சொல்லிட்டோம். கண்டிப்பா சிரிப்பாங்க)

எஸ்.பி.எம்-ல வேலைல இருக்கும் போது நிஜமாவே நடந்தது... நான் கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்கும்போது.......

நான்: ஷார்ட் ஃபார்ம்ஸ்-லாம் நல்லா பாத்துக்கோங்கப்பா.. கண்டிப்பா நாலு மார்க்குக்கு கேள்வி வரும்..

குயில் குஞ்சு : இங்கிலீஷுல கஷ்டமா இருக்கே சார்...

நான்: தமிழை கம்பேர் பண்ணிக்கோடா.. இப்போ................... தியாகராய நகரை "தி.நகர்" னு சொல்றோம், வாத்தியாரை "வாத்தி" னு சொல்றோம், தஞ்சாவூரை "தஞ்சை" னு சொல்லலாம்..... அந்த மாதிரி.........

குயில் குஞ்சு : குஞ்சாண்டியூரை என்னன்னு சார் சொல்றது?????

நான்: (வழக்கம் போல "பே" தான்........)
----------------------------------------படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...

நீங்க (ஓட்டு) போட்டா மட்டும் போதும்.... போட்டா மட்டும் போதும்....

எலைக்கு ஏழ்நூறு ரூவா செலவு பண்ணிருக்கோம்ல....
---------------------------------------

5 கருத்துகள்:

 1. கலவை சாதம் சுவையா இருக்கு:)! இந்தப் பெயரில் யாரும் எழுதி என்வரையில் பார்க்கல.

  தனிமை பற்றி சமீபத்தில் ஒரு கவிதை எழுதுனேன், அவ்வப்போது இருக்கணும் தனிமையில், அவசியம் அதுவென. நீங்க சொல்லியிருப்பது யோசிக்க வைக்குது:)!

  //தனியாக ஒரு நாள் இருக்கலாம். இரண்டு நாள் இருக்கலாம். அல்லது எல்லாரும் இருக்கும் போது தனியாக இருக்கலாம். (அதாவது எல்லாரும் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில்) ஆனால் யாருமில்லாமல் நிஜமாகவே தனியாக இருப்பது என்பது கொடுமை.//

  ம்ம்!!

  பதிலளிநீக்கு
 2. தேவா............... நண்பேண்டா........

  உன் ப்ளாக்குல பிரியாணி போலருக்கே..........

  பதிலளிநீக்கு
 3. //@ ராமலக்ஷ்மி....... நன்றி.. //

  // கலவை சாதம் சுவையா இருக்கு:)! இந்தப் பெயரில் யாரும் எழுதி என்வரையில் பார்க்கல. //

  எங்கேயாவது பார்த்தா சொல்லியனுப்புங்க...

  // தனிமை பற்றி சமீபத்தில் ஒரு கவிதை எழுதுனேன், அவ்வப்போது இருக்கணும் தனிமையில், அவசியம் அதுவென. நீங்க சொல்லியிருப்பது யோசிக்க வைக்குது:)!//

  தனிமை பற்றிய எனது இந்தக் கோணத்திலும் ஒரு கவிதை எழுதுங்களேன்... உயிரோசைக்கு அனுப்பலாம்....... (அப்பாடா...... யோசிக்க வச்சோமில்ல)

  பதிலளிநீக்கு