வியாழன், 11 நவம்பர், 2010

ஒரு நார்மல் ஸ்டூடண்ட்

ஒரு நார்மல் ஸ்டூடண்ட்

பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. டேட்டா கார்ட் என் கையில் இல்லை. ஆபீஸ் வேலையாக ஊர் சுற்றப் போயிருக்கிறது அது. நேரமும் கொஞ்சம் கம்மி அதான்..

அதனால் பதிவு போட வேண்டும் என்ற ஆசைக்கு இது. நண்பர் ரவி அனுப்பிய எஸ்.எம்.எஸ். அதை அப்படியே தமிழாக்கம் செய்து போட்டிருக்கிறேன். (இது வேறு எங்காவது படைப்பாக வெளியாகிக்கூட இருக்கலாம், அப்படி இருந்தால் எழுதியவருக்கே பெருமை போய்ச் சேரும்)

நீங்கள் ஒரு நார்மல் ஸ்டூடண்டா? கீழே உள்ள குறிப்புகள் உங்களுக்குப் பொருந்த வேண்டும்... படித்துப்பாருங்கள்.

1. எக்ஸாமுக்கு முன்பு தான் எல்லா நண்பர்களுக்கும் வெட்டி எஸ.எம்.எஸ் அனுப்பத்தோன்றும்.
2. இன்று படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ப்ளான் போட்டு அன்றைக்கு சாயங்காலம் "நாளை முதல் படிக்கலாம்" என்று தோன்றும்.
3. படிப்பதற்குப் பதில் புத்தகத்தில் எத்தனை சேப்டர் இருக்கிறது என்று ஒவ்வொரு முறையும் எண்ணிப்பார்த்தபடியே இருப்பீர்கள்.
4. இரண்டிரண்டு பக்கங்கள் படித்தவுடன் பிரேக் விடத்தோன்றும்.
5. சம்பந்தமே இல்லாமல் பசிக்கும்
6. தூர்தர்ஷனில் வரும் நிகழ்ச்சிகள் கூட ரொம்பப் பிடிக்கும்.
7. ஒவ்வொரு கஷ்டமான பாடத்திற்கும் இது தோன்றும் "இந்தக்கேள்வி எக்ஸாம்ல வராது".
8. படிப்பதற்கு முன் நண்பர்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் "மச்சி, நீ எவ்வளவு பாடம் முடிச்சிருக்க?"
9. இந்த எஸ்.எம்.எஸ்ஸை (அ) வெப்லிங்கை நண்பர்களுக்கு அனுப்பத் தோன்றும்
10. ஒவ்வொரு பாயிண்ட் படித்து முடித்ததும் புன்சிரிப்புடன் இது தோன்றும் "நமக்கு அப்படியே மேட்ச் ஆவுதில்ல?"

------------------------------------
அவ்ளோதான். பை பை..
---------------------------------------------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
----------------------------------------------------------------------

10 கருத்துகள்:

 1. //தூர்தர்ஷனில் வரும் நிகழ்ச்சிகள் கூட ரொம்பப் பிடிக்கும்.//

  அடடா .., என்னமா யோசிச்சிருக்கீங்க ., நல்லா இருக்கு .. இத எழுதினவர் உண்மைலேயே பெரிய ஆள் தான் ..!!

  பதிலளிநீக்கு
 2. கடவுள் பக்தியே அப்பதான் வரும்..!!
  தூக்கம் தூக்கமா வரும்..!!
  கடைசி பெஞ்ச்காரனுங்க இந்த கவலை எதுவும் இல்லாம எப்டி இருக்கானுங்க..?ன்னு தோணும்..!!

  பதிலளிநீக்கு
 3. // ப.செல்வக்குமார் சொன்னது… இத எழுதினவர் உண்மைலேயே பெரிய ஆள் தான் //
  இருக்கும், இருக்கும் ........ நம்மள மாதிரியே.....

  பதிலளிநீக்கு
 4. //Prasanna சொன்னது…
  ha ha nice :) //

  நன்றி.. இந்தா மாதிரி நெறையா போடலாம்னு இருக்கோம்.. ஆதரவு திரட்டுவோம்.. அப்பப்போ வந்துட்டுப்போங்க...

  பதிலளிநீக்கு
 5. //சேலம் தேவா சொன்னது… கடவுள் பக்தியே அப்பதான் வரும்..!! தூக்கம் தூக்கமா வரும்..!! கடைசி பெஞ்ச்காரனுங்க இந்த கவலை எதுவும் இல்லாம எப்டி இருக்கானுங்க..?ன்னு தோணும்..! //

  வாடி மாப்ள... கொஞ்ச நாளா உன்னிய காணாம நிம்மதியா இருந்தேன்.. ஸ்கூல்ல தான் இந்த மாதிரி பதிலுக்கு பதில் போட்டுட்டு இருந்தியேன்னு பாத்தா இங்கியும் வந்துட்ட.....

  பதிலளிநீக்கு
 6. //venkat சொன்னது…
  அருமை//

  நன்றி வெங்கட்... எல்லாப் புகழும் அதை எழுதிய பெரிய மனுசனுக்கே.. எனக்கு அனுப்பிய நண்பர் ரவிக்கு கொஞ்சம்..

  பதிலளிநீக்கு
 7. நன்றி......................
  நன்றி......................
  நன்றி...................... பன்னிக்குட்டி ராம்சாமியை விட எனக்கு "குயில் குஞ்சு"ங்குற பேர்தான் ரொம்பப்புடிக்கும்.. (பங்காளி படத்துல தலைவர் பேரு)

  பதிலளிநீக்கு