புதன், 27 அக்டோபர், 2010

தண்ணி தண்ணி... தவிச்ச வாய்க்கு தண்ணி

கூகுளின் ஜிடாக் சேட்டிங்கில் இருந்த போது சேலம் தேவா (நண்பேன்டா...) ஒரு வீடியோ லிங்க் அனுப்பினான். தண்ணீர் பாட்டில்களின் (மோசமான) உபயோகம் பற்றி. ஒரு ஏழெட்டு நிமிட வீடியோ. கொஞ்சம் பாருங்கள். அப்புறம் பேசுவோம். இதோ அந்த வீடியோ..

Water

பார்த்தாயிற்றா? எவ்வளவு நாசம் செய்கிறோம் நாம் என்று தெரிகிறதா? இந்தக் கணக்கு வாட்டர் பாட்டில்களுக்கு மட்டும். அது தவிர பெப்ஸி, கோக், தம்ப்ஸ் அப், ஃபேன்டா, மிரிண்டா, செவன் அப், ஸ்பிரைட், மாஸா, லிம்கா, ஸ்லைஸ் போன்ற கூல்டிரிங்க் பாட்டில்கள் உபயோகம் தனி. இன்றைக்கு பேருந்துப்பயணங்களிலும், ரயில் பயணங்களிலும் நவநாகரீக இளைஞர்கள் இளைஞிகள் (முக்கியமாக ஐ.டி மக்கள்) இது இல்லாமல் ஏறுவதே இல்லை. இதைப்பார்த்து அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கும் வாங்கித் தர வேண்டியிருக்கிறது. ரயில்வே ஸ்டேஷனில் வரும் பைப் தண்ணீரை குழந்தைகள் குடிக்க மறுக்கிறார்கள். அது தவிர இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் ஆஸ்பிடல்களில் உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி வீசப்படும் சலைன் பாட்டில்கள் கணக்கில் இல்லை. அவை தவிர்க்க முடியாதவை..


வீடியோவை பார்த்தவுடன் எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. ஒருமுறை அமெரிக்காவில் வசிக்கும் (என்று நினைக்கிறேன்) ஷாஜகான் என்ற அன்பர் "அமெரிக்கா வாசி" என்ற பெயரில் யூத்ஃபுல் விகடனில் ஒரு கதை எழுதியிருந்தார். இந்தியாவுக்கு லீவில் திரும்பி வரும் ஒரு ஆன்சைட் என்ஜினியரின் பார்வையில் இருக்கும் அது.

"அமெரிக்கா வாசி"

ஆனால் அந்தக்கதை இந்தியாவைக்குறை கூறும் விதமாகவே நகரும். அதனால் பின்னூட்டத்தில் பலரும் அதை எதிர்த்து கொந்தளித்திருந்தார்கள். நானும் கொஞ்சம் கொந்தளித்தேன். இதைப்பற்றி காரசாரமாக ஒரு விவாதம் போனது அப்போது யூத்ஃபுல் விகடன் மூலம்...

அந்தக்கதைக்கு யூத்ஃபுல் விகடனில் என்னுடைய பின்னூட்டம் இது..

--------------------------

எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவ கம்பேர் பண்ணாதீங்க நண்பா... அமெரிக்காவ குறை சொல்ல எங்க கிட்ட ஆயிரத்தைநூறு விஷயமிருக்கு. ஆனா சுத்தம் பத்தி பேசிருக்கீங்கல்ல.. அதனால இத மட்டும் சொல்றேன்... அவனுக்கு வர்ற வியாதி பிரச்சினைகள்ல பத்து சதவீதம் கூட நம்ம ஊர்க்காரனுக்கு வர்றதில்ல.. இவ்வளவு சூடான நாட்ல இருந்துகிட்டு அம்மை நோயையே கன்ட்ரோல் பண்ணவங்க நாம, அதுவும் செலவில்லாம. சத்தியமா அது மாதிரி எல்லாம் அவனால பண்ண முடியாது.

--------------------------

ஆனால் அதற்குப்பிறகும் அந்தக்கதைக்கு பின்னூட்டம் போட்ட இரண்டு பெரிய மனிதர்கள் அமெரிக்கா அமெரிக்கா என்றே பாட்டுப்பாட எனக்கு "சுர்"ராகி விட்டது. மறுபடியும் ஒரு பெரிய பின்னூட்டம் போட்டேன்..

அது இது

--------------------------

அமெரிக்கன்கள் செய்யும் அட்டாகாசங்களுக்கும் சேர்க்கும் குப்பைகளுக்கும் ஒரே ஒரு சாம்பிள். 2004ம் ஆண்டில் மட்டும் 26,000,000,000 லிட்டர் பாட்டில் வாட்டரை குடித்து (மற்ற உபயோகங்கள் தனி) தீர்த்திருக்கின்றனர் (வெறும் 30 கோடி) அமெரிக்கன்கள். கிட்டத்தட்ட 28,000,000,000 பிளாஸ்டிக் பாட்டில்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் 86% குப்பைத்தொட்டிக்குப்போனவை. (வினாடிக்கு 1500 பாட்டில்கள் - அமெரிக்கன்கள் மட்டும்). இந்த பாட்டில்களை உருவாக்க 17,000,000 பேரல்கள் கச்சா எண்ணெய் (அதைப் பயன்படுத்தி 1,00,000 கார்களை ஒரு வருடம் இயக்க முடியும்) உபயோகப்படுத்தப்பட்டன. பாட்டில்களை உருவாக்கும் போது உண்டான கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு 2,500,000 டன்கள். அதுமட்டுமல்ல, அந்த பாட்டில்களை மட்டும் உருவாக்க ஆன செலவு $ 100,000,000,000 (100 பில்லியன் டாலர்கள் - இதை வைத்து அமெரிக்க பெடரல் வங்கியையே வாங்கலாம்). இவர்கள் போடும் குப்பைகளால் Aquifer எனும் பூமியின் தண்ணீர் லேயருக்கு ஏற்படும் பாதிப்பு எங்கோ உட்கார்ந்திருக்கும் எனக்கு, உங்களுக்கு, ஷாஜகானுக்கும் சேர்த்துத்தான். இதில் ஒரு விஷயம் கூட ஷாஜகானின் மண்டையில் தோன்றியிருக்காதா? அவர் இருக்கும் கேம்பஸூம், நகரமும் சுத்தமாயிருந்தால் நம்மை குறை கூறுவதா? அந்த இடங்களை சுத்தமாக்கிய ரசாயனப்பொருட்களின் கழிவுகள் எங்கே கொட்டப்பட்டன? தெரியுமா அவருக்கு? பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் நிரம்பி வழியும் அமெரிக்க ஆறுகளின் படங்களை கூகிளில் சர்ச் செய்து பாருங்கள். உண்மை புரியும்.--------------------------

அதையும் மீறி என் கோபம் அடங்கவில்லை மறுபடியும் ஒரு மெயில் தட்டினேன் யூத்ஃபுல் விகடனுக்கு "அமெரிக்க சுத்தம்" என்ற பெயரில்..

--------------------------
அன்புடையீர்,

யூத்ஃபுல் விகடனில் ஷாஜகானின் "அமெரிக்கா வாசி" - சிறுகதையில் இந்தியா திரும்பும் இளைஞனின் புலம்பல்கள் இருந்தன. இந்தியா சுத்தமாக இல்லையே என்று கரித்துக்கொட்டியிருந்தார் அமெரிக்க ரிட்டர்ன் இளைஞர். இந்த மெயிலின் இணைப்பில் உள்ள பவர்பாயிண்ட் பிரசன்டேஷன், தண்ணீர் பாட்டில் விஷயத்தில் மட்டும் (30கோடி) அமெரிக்கர்கள் செய்யும் அட்டகாசங்களை தெள்ளத்தெளிவாக விளக்குகிறது. இதை யூத்ஃபுல் விகடனில் முழுமையாக வெளியிடாவிட்டாலும் அட்லீஸ்ட் ஆற்றில் குப்பையுள்ள இரு புகைப்படங்களையாவது வெளியிடவும், இல்லாவிடில், தயவு செய்து அவருக்கு மட்டுமாவது அனுப்பி வைக்கவும். அவர் பார்க்கட்டும். (அல்லது அவரது மெயில் ஐடி யை வெளியிடவும்) இதெல்லாம் (100கோடி பேர் உள்ள) இந்தியாவில் நடக்கவில்லை என்பது அவர் மண்டையில் உறைக்கட்டும்.

எஸ்கா


--------------------------

ஆனால் ரொம்பவும் காரமாக இருந்தால் அவர்கள் யூத்ஃபுல் விகடனில் வெளியிட மாட்டார்கள். அதனால் எனக்கு அவர்கள் அனுப்பிய ரிப்ளை இது..

--------------------------

அன்பு எஸ்கா,

உங்கள் கோபம் புரிகிறது. நீங்கள் சொல்ல வேண்டியதை 'அமெரிக்கா வாசி' கதையின் பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டீர்கள். அந்தக் கருத்து ஏற்கப்பட்டுள்ளது. அதில் முழுமை இருந்தது. அதுவே போதும் என்று கருதுகிறோம். ஷாஜகான் தனது கருத்தை கதை வடிவில் சொல்லியிருக்கிறார். அதற்கான மாற்றுக் கருத்தை நீங்கள் பதிவு செய்துவிட்டீர்கள். இதுவே போதுமானது என்று நினைக்கிறோம்.

நன்றி.

- யூத்ஃபுல் விகடன்.

--------------------------

இப்போது சேலம் தேவா அனுப்பிய லிங்கைப்பார்த்தவுடன் மீண்டும் கொஞ்சம் டென்ஷன் வந்தது. அதற்காகத் தான் இந்தப்பதிவு.

அப்புறம் இன்னோரு விஷயம். முடிந்தால் அவன் ப்ளாக்கை எட்டிப்பாருங்கள். கொஞ்சம் மொக்கைதான் போட்டிருப்பான். ஆனால் வாய் விட்டு சிரிக்கும் படி இருக்கும். ரொம்பவும் ரசனையான பயல் அவன். பதினைந்து வருடத்திற்கு முன்னால் பத்து பைசா போஸ்ட் கார்டில் கச்சா முச்சாவென்று மொக்கையாக (எட்டாவது படிக்கும் போதே - 1994 என்று நினைக்கிறேன்) எழுதி எனக்கு லெட்டர் போட்டவன் அவன். முடிக்கையில் - இப்படிக்கு அன்பான, அறிவான, அழகான, புத்திசாலியான உன் நண்பன் தேவராஜ் என்று முடித்திருப்பான். கடைசி பஞ்ச் லைன் என்ன தெரியுமா? "வீட்ல காட்டிராத" அது எப்படி முடியும்? நேராக எங்கப்பா கைக்கு தான் போனது அது. அவர் வாங்கிப்படித்து விட்டு "யார்றா அவன் தேவா?" என்றார்.

----------------------------------------------------------------------

இந்தக் கட்டுரையை முழுதாக எழுதி முடித்த பிறகுதான் இந்த பரதேசி சேலம் தேவா இன்னோரு லிங்க்கை அனுப்பினான். அது அன்பர் "காக்டெயில் சந்தோஷ்" எழுதிய "பாட்டில் குடிநீர் : அழிவும் அறியாமையும்" என்ற கட்டுரை அதில் அவர் தெளிவாக அழகாக விளக்கமாக ஒரு பதிவு போட்டிருக்கிறார். நன்றாக இருந்தது. இது முன்னமேயே தெரிந்திருந்தால் நான் பதிவே போட்டிருக்க மாட்டேன். (டேய்... தேவா..... வெட்டிப்பயலே.... இருடி... உனக்கு இருக்கு....)

----------------------------------------------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
----------------------------------------------------------------------

5 கருத்துகள்:

 1. உனக்கு எப்பவும் வாய் தவிக்காம தண்ணி கிடைக்க (குடிநீர்டா..டேய்) இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 2. படித்து முடித்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டியதாயிற்று (சத்தியமா "பூச்சிக்கொல்லி மருந்தால சுத்தப்படுத்திய" பாட்டில் வாட்டர் இல்லை). முன்பெல்லாம் லேப்-டாப், மொபைலுடன் வலம் வரும் பீட்டர் ஆசாமிகள் மட்டும் தான் அந்த பூச்சிக்கொல்லி தண்ணீரை பந்தாவுக்காகவேனும் கையில் வைத்திருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் கிராமங்களிலும் கூட இந்த மெதுவிஷ தண்ணீர் தாராளமாக கிடைக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. நன்றி திரு.கந்தசாமி. அமெரிக்காவில் ஒரு லிட்டர் தண்ணீர் வாங்க ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டு காரை எடுத்துக்கொண்டு போய் வாங்கி வர வேண்டும் என்று எங்கேயோ படித்தேன். அந்த நிலை இன்றைய இந்தியாவின் மெட்ரோபாலிடன் நகரங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது... திருநெல்வேலி, கேரளா பக்கங்களில் கோக் கம்பெனிகளை அனுமதித்தது போல் எல்லா ஊர்களிலும் அனுமதித்தோமானால் கிராமங்களிலும் இந்த நிலை வரும்..

  பதிலளிநீக்கு
 4. Americaava yaen compare pannikittu, inga Dubailayum, Saudilayum velai senjuttu Oorukku ponaalae avan avan Pepsiyum, water bottleumaa thaan alaiyuraan...

  பதிலளிநீக்கு
 5. உங்க வாயில ஸ்வீட் தான் வாங்கிப்போடணும்.... இன்னைக்கு ஒரு சிங்கப்பூர் ரிட்டன் (ஆக்சுவலி அவன் லீவுல வந்திருக்கான்) பயலை பாத்தேன்... பயபுள்ள பெரிய இவனாட்டம் அக்கா பீனா தண்ணி பாட்டிலோடயே திரியுது. சிங்கப்பூர்ல தினக்கூலிக்கு இவன் படுற அவஸ்தை அங்க போய் பாத்தா தான் தெரியும்...

  பதிலளிநீக்கு