திங்கள், 4 அக்டோபர், 2010

அழைப்பு

(இக்கட்டுரை உயிர்மையின் நேற்றைய (அக்டோபர் 4-ம் தேதி) உயிரோசை டாட் காம் இணைய இதழில் வெளியானது.)
--------------------------------------------------------------------------------
நைட்டு பன்னிரண்டே கால் மணி இருக்கும். ஓசூரில் இருந்து பயங்கர டயர்டாகி சேலம் வந்து, புது பஸ் ஸ்டாண்டில் பசியோடு இறங்கி கைவலியில் சூட்கேஸை தலைக்கு மேல் தூக்கியபடி, லேப்டாப்பை ஒதுக்கியபடி ஹோட்டல் ஏதாவது இருக்கிறதா என்று தேடியபடி உள்ளே நடந்தால், ஒரு ஓரமாக இருந்து "ஹெலோ...." என்று நளினம் கலந்த குரலில் ஒரு அழைப்பு.

பகீரென்று இருந்தது.

ஒரே இருட்டு. மச மசவென்று. மழை ஈரம் வேறு. வெளிப்புறமாகவே பஸ்ஸில் இறங்கி ஷேர் ஆட்டோ நிற்கும் இடத்தில் இருக்கும் சிறு திறப்பு வழியாக உள்ளே இறங்கிப்போனால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு வண்டிகள் நிற்கும். எந்திரன் போஸ்டர்கள் அங்கே ஒட்டப்பட்டிருக்கும். அந்த திறப்பிற்கு முன்பு இருந்து தான் இந்த அழைப்பு. பார்த்தால் உருவம் நல்ல ஆஜானுபாகுவாக இருந்தது. நம்ம சைஸூக்கு அவ்ளோ பெரிய உருவத்தைப்பார்த்தால் கை நடுங்க ஆரம்பித்து விட்டது.

நல்ல ஜிகுஜிகுவென்ற நிறத்தில் சேலை. கிட்டத்தட்ட ஸ்லீவ்லெஸ் போன்ற கையுடனான முழுதும் கீழிறங்கிய ஜாக்கெட். பளிச்சென்ற மேக்கப்புடனான முகம். உதட்டைத் துடைத்தபடி என்னை நோக்கிய கூர் பார்வை.. அந்த அகால நேரத்தில் ஓவர் மேக்கப் கொஞ்சம் பயமாகவே இருந்தது. லேசாக அசைந்தபடி சைகை காண்பித்தது அந்தப் பெண் உருவம். உற்றுப்பார்த்தால் அது பெண் அல்ல.


---------------------------------------------------

மும்பைக்கு அடுத்தபடியாக "அந்த" மேட்டரில் எங்க ஊர்தான் ஃபேமஸ் என்று பல பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். ஜூ.வி முதற்கொண்டு நெற்றிக்கண் வரை ஏதாவது கிசுகிசு மேட்டர்களில் இந்த மாதிரி மேட்டர்கள் தான் இருக்கும். முன்பெல்லாம் பெண்கள் மட்டும் தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்போது திருநங்கைகள் கூட. அதிலும் பெண் தன்மை அதிகமாக இருந்தால் ரேட் உயருமாம். அவர்கள் சொல்லும் இடத்தில் தனி ரேட், கஸ்டமர் இடத்திற்கு தனி ரேட், நேரக்கணக்கு மணிக்கணக்காக நீள்கிறது - அதற்கு தனி ரேட். (ரேட் கட்டர்-லாம் கிடையாதாம்)

ராஜேஷ்குமார் கூட ஒருமுறை ஊர்வாரியாக ஊர்களை மையமாக வைத்து குமுதத்திலோ, விகடனிலோ கதை எழுதிய போது எங்க ஊரைப்பத்தி மட்டும் பலான மேட்டருக்கு ரெய்டு போய் உயிருக்கு ஆபத்தை சந்திக்கும் குமரகிரி பெண் இன்ஸ்பெக்டர் கதையை எழுதியிருந்தார். அதைப்படிக்கும் போது இவர்கள் எல்லாம் எங்கே இருப்பார்கள் என்று பலநாள் யோசித்திருக்கிறேன்.

புது பஸ் ஸ்டாண்டு பக்கம் ஒரு சைடில் ஓரமாக வரிசையாக நிற்பார்கள், அல்லது பஸ் ஸ்டாப்பில் கூட நிற்பார்கள் என்று சொல்வான் கோவிந்தன். ஆனால் நான் இதுவரை பார்த்ததே இல்லையே, ஒருவேளை நான்தான் வேளை கெட்ட வேளைகளில் போயிருக்கிறேனோ என்னவோ, அல்லது நான் ரொம்ப நல்ல பிள்ளையோ, அல்லது அவன் சொன்ன அடையாளங்கள் பொருந்திப் போகவில்லையோ என்று ஒரு டவுட்டு இருந்தது.

ஒருமுறை இதை வைத்து ஒரு கட்டுரை எழுதலாம் என்று தகவல் திரட்டும் போது கோவிந்தனிடம் போன் செய்து திரும்பக் கேட்டால் நீ இன்னும் வயசுக்கு வரலடா மச்சி என்று சிரித்தபடியே போனை வைத்துவிட்டான். சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் சொன்ன பழைய பஸ் ஸ்டாண்டு பக்கமும் இரண்டு நாட்கள் சுற்றினேன். ஆனால் அவன் சொன்ன அடையாளங்கள் பல பேருடன் பொருந்திப் போயின. கருத்து கேட்கலாம் என்றால், அது அதிக அளவில் கிராம மக்கள் வந்து போகும் இடம். ஒரு வேளை தவறுதலாக ஏதேனும் பிரச்சினை ஆகி விட்டால் என்ன செய்வது என திரும்பி வந்து விட்டேன்.

இதே போல் போன வருடம் கல்கத்தா போனபோது கூட அங்கே (அங்கேன்னா? அங்கேன்னா அங்கே தாங்க - "சோனாகாச்சி" - தெரியாத மாதிரி கேக்குறது...) எட்டிப்பார்க்கலாமா? என்று ஒரு குறுகுறுப்பு இருந்தது. ஆனால் பயம். நெஞ்சு முழுக்க பயம். (பழைய) ஆபீஸில் சொல்லியனுப்பினார்கள். கொல்கத்தால மூணு ஆபீஸ் இருக்கு. அதுல விபின்-னு ஒரு பிராஞ்ச் மேனேஜர் இருக்கான். பார்த்துக்கோடா, அவன் ஆபீஸில் இருந்து எட்டிப்பார்த்தாலே பின்பக்கம் அந்த இடம் தெரியும் என்று. ஆனால் சுவ்ரோ கூடவும் ஷூப்ரா கூடவும் சுற்றியதில் அந்த மேட்டர் மறந்தே போயிற்று.


ஆச்சா? கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகி விட்டது.. கொல்கத்தாவும் மறந்து போயாயிற்று.. இப்போது திடீரென்று இங்கே நம்ம ஊரிலேயே (என்னையும் பெரிய மனுஷனாக மதித்து) ஒரு புதிய அழைப்பு. இவர்களை எல்லாம் எங்கே, எப்படிப் பார்ப்பது என்று ரொம்ப நாள் யோசித்த ஒரு விஷயம். அது திடீரென்று அது எங்க ஊரிலேயே நடக்கும் என நான் நினைக்கவே இல்லை. ஆனால் அந்தப் படபடப்பு இன்னமும் போகவில்லை.

எத்தனை பேர் இதில் ஈடுபட்டிருப்பார்கள், பெண்கள், திருநங்கைகள், இவர்கள் எப்படி வந்தார்கள்? அவர்கள் வருமானம், போலீஸ், மாமூல், கேஸ், அரசியல்வாதிகள், ரெளடிகள், என்றெல்லாம் எண்ணிபடி திரும்பி வந்தேன். இப்போதெல்லாம் பஸ் இறங்கியதும் உடனே அந்தப்பக்கம் திரும்பிப் பார்க்கத் தோன்றுகிறது. தினமும் கண்ணில் படுகிறார்கள். பரிதாபமாக இருக்கிறது.

(கடைசி வரை அன்றைக்கு எங்கேயும் ஹோட்டல் இல்லை. பசியோடு தான் திரும்ப வேண்டியிருந்தது)

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

8 கருத்துகள்:

 1. ஓட்டு போட்டாச்சு பா.
  நல்லவிவரமான பதிவு.

  பதிலளிநீக்கு
 2. தலைவரே.. இத்தனை நாளா என்னோட எந்த பதிவுக்காவது ஓட்டு போட்டிருக்கீங்களா? ஒரே ஒரு நான் வெஜ் பதிவு போட்டவுடனே கபால்-னு உள்ள பூந்து கை தட்டுறீங்களே....

  பதிலளிநீக்கு
 3. //படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.//

  இதோ இப்பவே போட்டசுங்க ..!!

  பதிலளிநீக்கு
 4. நானும் பல முறை நேரில் பார்திருக்கிறேன். அதிலும் சோகம் - கல்லூரி மாணவிகள் தோற்றம் உள்ள பலர். விசாரித்ததில் சில கல்லூரி மாணவிகள் கூட பணத்திற்காவும் வேறு பல இத்யாதிகளுக்காகவும் அவ்வாறு நடப்பது உண்டாம்.

  பதிலளிநீக்கு
 5. //@ப.செல்வக்குமார் // அன்புக்கு, ஓட்டுக்கு நன்றி செல்வா. பிரியாணி பொட்டலம் பார்சல்ல வருது. வாங்கிக்கோங்க.

  பதிலளிநீக்கு
 6. //@ கந்தசாமி சொன்னது… விசாரித்ததில் சில கல்லூரி மாணவிகள் கூட பணத்திற்காவும் வேறு பல இத்யாதிகளுக்காகவும் அவ்வாறு நடப்பது உண்டாம். //

  எல்லாக்கருமமும் நடக்கிறது. ஆனால் கல்லூரி மாணவிகள் இவ்வாறு பப்ளிக்காக செய்வதில்லை. அவர்களுக்கு மிகவும் தெரிந்த பணக்கார மாணவர்களிடம் (அல்லது மாணவர்கள் அல்லாதவர்களிடமும்) மட்டும் தொடர்பு வைத்துக்கொள்வது உண்டு. படிப்பு முடியும் வரை நீ எனக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கிக்கொடு, என்னை முழுதாக உபயோகப்படுத்திக்கொள் என்ற ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் வேறு.

  பதிலளிநீக்கு
 7. //@வினோ சொன்னது… நானும் ஓட்டு போட்டாச்சு.. // ஓக்கே.. இன்னோரு பிரியாணி பார்சல்ல்ல்லல்ல்ல்லல...............

  பதிலளிநீக்கு