சனி, 25 டிசம்பர், 2010

கலவை சாதம் (26/12/2010) மற்றும் சுஜாதா


விகடன் பொக்கிஷம் பகுதியில் தலைவர் சுஜாதா பத்து வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்த "ரிசப்ஷன் 2010" என்ற கதையை படிக்க நேர்ந்தது. கே (GAY) மேரேஜ் பற்றிய ஒரு கதை. கிட்டத்தட்ட இன்றைய நிலைக்கு ஒட்டி வந்திருந்தது. ஒரு ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்வதாகக் கதை. ஆனால் அது முழுமையாய் நடக்க இன்னும் இருபது வருடங்களேனும் ஆகும்.

"உண்மைக்கு மிக நெருக்கமாய் கதை எழுதுவது என்பது கத்திமேல் நடப்பது போன்றது" என்று ஒருமுறை சுஜாதாவே சொல்லியிருந்தார். "அது உடனே உண்மை வாழக்கை வெளியில் நடந்து விடுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்" என்று சொன்னார். ஒரு தேசியத் தலைவரின் படுகொலை பற்றிய சுஜாதாவின் கதை (பெயர் ஞாபகமில்லை) பிற்காலத்தில் ராஜீவ் காந்தி படுகொலை விஷயத்தில் நடந்தேறியது. அவரது விஞ்ஞானச் சிறுகதைகள் தொகுப்பில் உள்ள "திமலா" எனும் கதை, திருமலை திருப்பதிக்கு அனுமதி வாங்கி சுவாமி கும்பிடப்போகும் ஒரு ஹைடெக் தம்பதி பற்றிய கதை. அதுவும் இன்றைய காலகட்டத்திற்கு கிட்டத்தட்ட எழுபது சதம் நடந்தேறி விட்டது. திருமலாவுக்குச் செல்ல வேண்டும் என்றால் முன் அனுமதி தேவையாகி விட்டது.

கருப்பு, சிவப்பு, வெளுப்பு தொடர் வந்த போது குமுதத்திற்கும் சுஜாதாவிற்கும் எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை பலரும் அறிவார்கள். அதன் பின்னர் அது பெயர் மாற்றப்பட்டு ரத்தம் ஒரே நிறம் என்று வெளியானதும் சமீபத்தில் உயிர்மையில் தனிப்பதிப்பு கண்டதும் வரலாறு. "ஜில்லு" கதை வந்தால் போச்சு. அது இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் நடைபெறும் அணு ஆயுதப் போர் பற்றிய கதை. (கிட்டத்தட்ட அவர் வர்ணித்துள்ள கதைக் காட்சிகள் டாம் க்ருஸ் நடிப்பில் இயக்குனர் ஸ்பீல்பெர்க்கின் War of the worlds மற்றும் வில் ஸ்மித்தின் I am legend திரைப்படத்திலும் காட்சிகளாக விரிகின்றன.

"ரிசப்ஷன் 2010" கதைக்கு ஆன்லைனில் அருமையான சில பின்னூட்டங்களும் வந்திருந்தன வாசகர்களிடம் இருந்து. சில சாம்பிள்கள் இதோ............... 1. தீர்க்கதரிசி. என்ன, 2020ல் இதில் உள்ள எல்லாமே நடந்து விடும்(.இயல்பாக) 2. அதுதானே பார்த்தேன் சுஜாதாவை தவிர வேரு யாரால் முடியும் மிக நன்ரு 3. தலைவர் தலைவர் தான்...'gay marriage; பத்தி 10 வருஷம் முன்னாடியே....ஹ்ம்ம் 4. சுஜாதா இதையும் முன்னேயே எழுதிவிட்டாரா.. அபாரம்!

எப்படி?? சுஜாதா சுஜாதா தான் இல்லையா?
------------------------------------------------------------
ஷங்கர் இயக்கத்தில் தயாராகப்போகும் "3 இடியட்ஸ்" தமிழ் ரீ-மேக்கில் சூர்யா நடிப்பது உறுதியாகி இருக்கிறதாம். இந்த கேரக்டருக்கு முதலில் பேசப்பட்டிருந்தவர் நமது டாகுடர் என்பது தமிழ் கூறும் நல்லுலகத்தில் டிவிடி, திருட்டு விசிடி பார்க்கும் அனைவர் வரை தெரிந்த ஒரு ரகசியம். முதலில் விஜய் நடிப்பதாக இருந்து, பிறகு சூர்யா நடித்த 'அயன்’, 'சிங்கம்’ படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற சென்ட்டிமென்ட்டில் "3 இடியட்ஸு"ம் ஹிட்தான் என்று இப்போதே குஷியில் இருக்கிறதாம் சூர்யா தரப்பு. அது தவிரவும் தெலுங்கு பதிப்பிலும் மகேஷ் பாபுவுக்குப் பதில் சூர்யாவேதான் இடியட்டாம்.
------------------------------------------------------------

ஏதோ யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு செமை மேட்டர் சிக்கியது. ராவணன் படத்தைப் பாருங்களேன். ப்ருத்விராஜ், ஐஸ்வர்யா ராய், விக்ரம் காம்பினேஷன் தான் படத்தின் அடிநாதத்தை நகர்த்தும் கதாபாத்திர முடிச்சு. அவர்களது வயதைப்பாருங்களேன். முறையே 28 (ப்ருத்விராஜ்), 37 (ஐஸ்வர்யா ராய்), 46 (விக்ரம் ). கிட்டத்தட்ட இந்த வரிசையில் ஒவ்வொருவருக்கும் ஒன்பது வயது வித்தியாசம். விக்ரமுக்கு காலாகாலத்தில் திருமணம் ஆகியிருந்து சீக்கரமே பையன் பிறந்திருந்தால் அவனுக்கு ப்ருத்விராஜ் வயது ஆகியிருக்கும் இல்ல.......................?
------------------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

14 கருத்துகள்:

  1. // தேசியத் தாலைவரின் //
    பிழை நீக்கவும்...

    // "ரிசப்ஷன் 2010" //
    லிங்க் தரவும்...

    பலான லிங்கை மெயிலில் அனுப்புகிறேன் என்று சொல்லி ஏமாற்றிய உங்களுக்கு எனது கடும் கண்டனங்கள்...

    பதிலளிநீக்கு
  2. //philosophy prabhakaran சொன்னது…
    பிழை நீக்கவும்... // நீக்கப்பட்டது. . சுட்டியதற்கு நன்றி..

    // "ரிசப்ஷன் 2010" //
    லிங்க் தரவும்...//

    லிங்க் கிடையாது. விகனுக்கு ஆன்லைனில் பணம் கட்டி சப்ஸ்க்ரிப்ஷன் எடுத்திருக்கிறேன். வேண்டுமானால் கட் காபி பேஸ்ட் செய்து மெயில் அனுப்புகிறேன்.

    //பலான லிங்கை மெயிலில் அனுப்புகிறேன் என்று சொல்லி ஏமாற்றிய உங்களுக்கு எனது கடும் கண்டனங்கள்...//
    நோ........நோ..... நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். என் வாக்குப்படி என் ஈ.மெயில் ஐ.டி யை கண்டு பிடித்து மெயில் அனுப்புபவர்களுக்கே அந்த லிங்க் அனுப்பப் படும். (பல பேருக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறேன்).

    நீங்களும் மெயில் ஐடிக்கு மெயில் அனுப்புங்கள். ரிப்ளையில் லிங்க் அனுப்புகிறேன். பின்னூட்டம் மூலமாகவெல்லாம் தர முடியாது.

    பதிலளிநீக்கு
  3. //கலாநேசன் சொன்னது…
    சுஜாதா சுஜாதா தான்// கண்டிப்பாக....

    நம்மைப்போன்ற வெகுஜனப்பத்திரிகை படிப்பவர்கள் எல்லாரையும் இலக்கியம் குறித்த எடுத்துக்காட்டுகள் கொடுத்து, இலக்கிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி நம்மையெல்லாம் இலக்கியச் சிற்றிதழ்கள் பக்கம் திருப்பியதே அவர்தான்.

    அவரை லைட் ரீடிங் எழுத்தாளர், வெகுஜன எழுத்தாளர், இலக்கியம் எழுத மாட்டார் என்றெல்லாம் சொல்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்... இன்றைக்கு இலக்கிய சிறு பத்திரிகைளை எல்லாரும் படிக்கிறார்கள் என்றாலே அது சுஜாதாவினால் தான். அவருடைய பரந்த வாசகர் வட்டம் தான் இன்றைக்கு சிறுபத்திரிகைகளை வாழவைத்துக்கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. அவர் உண்மையிலேயே ஒரு மேதை. http://desikan.com/blog இந்த லிங்ல எழுதறவரு அவரு கூடவே இருந்தவரு.ஓரளவுக்கு அவரு எழுத்து மாதிரியே இருக்கு..!!

    பதிலளிநீக்கு
  5. ஆமாம் தேவா......... தேசிகனைப்பத்தி சுஜாதா தன்னுடைய பல கட்டுரைகள்ல எழுதியிருக்கார்... சுஜாதாவோட பல படைப்புகளை தேசிகன் தான் முதல்ல படிப்பாராம்...

    பதிலளிநீக்கு
  6. // வேண்டுமானால் கட் காபி பேஸ்ட் செய்து மெயில் அனுப்புகிறேன். //
    சரி... நிச்சயம் அனுப்புங்கள்...

    // என் வாக்குப்படி என் ஈ.மெயில் ஐ.டி யை கண்டு பிடித்து மெயில் அனுப்புபவர்களுக்கே அந்த லிங்க் அனுப்பப் படும். //
    பாஸ்... நானும் உங்க மெயில் ஐடியை கண்டுபிடித்து மெயில் அனுப்பியவன்தான்... உங்கள் மெயில் பாக்சை செக் பண்ணவும்... இருக்கட்டும் மறுபடியும் அனுப்புகிறேன்...

    பதிலளிநீக்கு
  7. அனுப்பியாச்சு.. சந்தோசமா???

    பதிலளிநீக்கு
  8. வாத்தியாரின் கதைகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.. நிறைய தீர்க்க தரிசன கதைகளை எழுதியுள்ளார்....

    பதிலளிநீக்கு
  9. வாத்தியாரா?

    சரிதான். சினிமாவுக்கு ஒரு எம்.ஜி.ஆர் என்றால் எழுத்துலகுக்கு ஒரு வாத்தியார் நம் சுஜாதா தான்.

    பதிலளிநீக்கு
  10. யோவ் என்னய்யா இது..

    // விக்ரமுக்கு காலாகாலத்தில் திருமணம் ஆகியிருந்து சீக்கரமே பையன் பிறந்திருந்தால் அவனுக்கு ப்ருத்விராஜ் வயது ஆகியிருக்கும் இல்ல.......................?//

    உங்க கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா?

    பதிலளிநீக்கு
  11. இது கற்பனை அல்ல.. கேள்வி மட்டும் தான்.

    பதிலளிநீக்கு
  12. 46 (விக்ரம் )///

    நம்ப முடியலை!!!

    --
    மதுரை பாண்டி
    http://maduraipandi1984.blogspot.com

    பதிலளிநீக்கு
  13. உண்மைக்கு மிக அருகில் — சுஜாதா

    http://balhanuman.wordpress.com/2010/04/27/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%94-%E0%AE%9A/

    பதிலளிநீக்கு