செவ்வாய், 21 டிசம்பர், 2010

கலவை சாதம் (22/12/2010)நாஞ்சில் நாடன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறதாமே.. வாழ்த்துக்கள் ஐயா... அவரது கதைகளெல்லாம் பெயர் தெரியாத காலத்தில் படித்திருக்கிறேன். ஆனால் அவரை முழுக்க முழுக்க பரிச்சியப் படுத்தியது விகடன் தான். அதில் அவர் எழுதிய தீதும் நன்றும் தொடர் தான் அவரை ரசிக்க வைத்தது. பிற்பாடு இரு வருடங்கள் கழித்து நான் யூத்ஃபுல் விகடனில் சிலபல கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்த போது ஒரு தீபாவளி சமயத்தில் யூத்ஃபுல் விகடனில் எழுதுபவர்களுக்கெல்லாம் ஒரு பரிசு கொடுக்கலாம் என்று இருக்கிறோம் என்று மெயில் வந்தது. என்னவென்று பார்த்தால், தலைக்கு மூன்று மின் புத்தகங்கள் பரிசு என்று ஒரு லிஸ்ட் அனுப்பி அதில் ஏதேனும் மூன்று புத்தகங்களை தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள்.

நான் டிக் அடித்தது நாஞ்சில் நாடனின் "தீதும் நன்றும்", அது தவிர கம்ப்யூட்டர் பற்றிய புத்தகம் ஒன்று, மேலும் யுகபாரதியின் "தெருவாசகம்". எல்லாமே விகடன் வெளியீடுகள். விகடனில் வெளிவந்து பிற்பாடு புத்தகமாக உருப்பெற்றவை. நாஞ்சில் நாடன் எழுதியதில் எனக்குப்பிடித்தது (கருத்து மட்டும் தான் நினைவிருக்கிறது, வரிகளை அப்படியே நினைவு படுத்திக் கூற முடியவில்லை, எனவே என் வரிகளில் தந்திருக்கிறேன்)

"இரண்டு மூன்று படங்கள் ஹிட் கொடுக்கும் ஒரு தமிழ் சினிமா கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம். சில வருடங்களில் எங்கேயோ போய்விடுவான் அவன். வருடத்துக்கு நூறு (அதிகபட்சம் ஆயிரம் வரை) மாணவர்களை உருவாக்கும் ஒரு நல்லாசிரியருக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம். அந்த மனுஷன் மூன்று கோடியை சேர்க்க 3000 மாதங்கள் ஆகும். அதாகப்பட்டது சுமார் 250 வருடங்கள், எப்படி இருக்கிறது கதை? அப்புறம் எப்படி நாடு உருப்படும்?

------------------------------------------------------

அதே போல் சச்சினுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட உள்ளதாமே.. சூப்பர் இல்ல.. இந்த சச்சின், ஏ. ஆர். ரஹ்மான் போன்ற ஆட்கள் எல்லாம் இந்தியாவில் பிறக்க நாம் தான் அதிர்ஷ்ட சாலிகள். என்னமோ போங்கள் இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் விருது கொடுப்பதை விட்டு பிளைட்டில் புட்போர்டு அடித்த மாமனிதர்களுக்கெல்லாம் டாகுடரு பட்டம் கொடுக்கும் மாங்காய்களையெல்லாம் எந்த கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவதென்றே தெரியவில்லை. அந்தப் பட்டத்தைக்கொடுத்த மேதாவிகள் மேல் பாராவில் நாஞ்சில் நாடன் வருத்தப்பட்டு சொல்லியிருக்கும் பரிதாப வாத்தியார் ஜீவன்களில் கோஷ்டியைச் சேர்ந்தவை தான்.

------------------------------------------------------

ரத்த சரித்திரம் பாக்கணும். ரொம்பவும் ரத்தமாக இருக்கிறது என்றார்கள். பயமாயிருக்கிறது. பார்க்கலாமா? பார்த்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்கள். ஏழாம் அறிவு எப்பங்க வரும்?

------------------------------------------------------

அப்பபபபபபடிடிடிடியேயேயேயே வலை மேய்ந்து கொண்டிருந்த போது............. ஒரு கில்மா வெப்சைட் லிங்க் கிடைத்தது. அடல்ட்ஸ் ஒன்லி.. செமையாக இருக்கிறது. லிங்க் வேண்டுபவர்கள் என் ஈ.மெயில் முகவரியை கண்டுபிடித்து ரிக்வஸ்ட் அனுப்பினால் அந்த லிங்க்கைத் தரத்தயார். உண்மையிலேயே கிளுகிளு, ஜிலுஜிலு லிங்க். லேட் பண்ணாதீங்க... போனா வராது, பொழுது போனா கிடைக்காது. அதைப்பார்த்துட்டு நான் கெட்டவன்னு முடிவு பண்ணிணீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை....

------------------------------------------------------இதை டைப்பிக் கொண்டிருக்கும் போது சன் டிவியில் "கடல் மேலே பனித்துளி" ஓடிக்கொண்டிருக்கிறது வாரணம் ஆயிரம் படத்தில் இருந்து..... அட்டகாசமான மெலடி... சூப்பர்ப் பிக்சரைசேஷன்.

விஷூவலைசேஷனில் லேசாக ஆளவந்தான் வாசனை வந்தாலும் இது ரொம்ப நன்றாக இருக்கிறது. அதில் கமல் தான் தெரிவார். ஆனால் இந்தப்பாட்டில் சூர்யா தெரியவில்லை. கல்யாணம் முடிந்து ஆறு மாதத்திற்குள் ஹனிமூன் போன ஒரு ஜில் ஜோடியின் பின்னாடியே கேமராவை தூக்கிக் கொண்டு போனது போல் இருக்கிறது. அந்த ஜோடியின் சின்னச் சின்ன சீண்டல்கள், சிணுங்கல்கள், கெஞ்சல், கொஞ்சல், வெட்கம், ஆசை, கூச்சம், பயம், தயக்கம், லேசாய் முளைக்கும் தைரியம் என எல்லாவற்றையும் அழகாய் காட்சிப் படுத்தியிருக்கிறார் கெளதம் மேனன்.. ஸாரி கெளதம் வாசுதேவ் மேனன்..

ஏற்காடு லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட் போனதெல்லாம் நினைவுக்கு வருகிறது........ ம்ஹ்ஹ்ம்ம்ம்...... கல்யாணத்துக்கு அப்புறம் ஜோடியாக ஒரு தடவை போய்வர வேண்டும். இந்தப்பாட்டில் சூர்யா எவ்வளவு உயரமாக, கம்பீரமாக, ஃபிட்டாக, ஆறு பையோடு (சிக்ஸ் பேக்கோடு) இருக்கிறார். சூப்பர் போங்கள்.

அய்யய்யோ கடவுளே, இந்தப்பாட்டு முடிந்தவுடனே சிங்கம் பாட்டு.

ஹேய்... எவ்ரிபடி லிசனு சம்பா, சம்பா, கும்பா... சம்பசம்பா.. ஹேய்... காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே... காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே..........ன்னு பாடிக்கொண்டே வருகிறார் சூர்யா... அனுஷ்காவுடன்....

அய்யய்யோ. என்ன ஆச்சு. திடீரென்று சூர்யா குள்ளமாகி விட்டார்? எப்படி? போச்சு போச்சு.. டிவியில் ரிலே ப்ராப்ளமா? எதும் ரிப்பேரா....? அப்பா அந்த ரிமோட்ட எடு.. வி டோன் அட்ஜஸ்ட் பண்ணேன்...... என்னாச்சுன்னு தெரியல.........

------------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...

------------------------------------------------------

20 கருத்துகள்:

 1. // ரத்த சரித்திரம் பாக்கணும். ரொம்பவும் ரத்தமாக இருக்கிறது என்றார்கள். பயமாயிருக்கிறது. பார்க்கலாமா? //
  வன்முறை காட்சிகளை ரசித்து பார்ப்பீர்கள் என்றால் தாராளமாக பாருங்கள் அதைத் தவிர்த்து படத்தில் ஒன்றும் இல்லை...

  // அப்பபபபபபடிடிடிடியேயேயேயே வலை மேய்ந்து கொண்டிருந்த போது............. ஒரு கில்மா வெப்சைட் லிங்க் கிடைத்தது. அடல்ட்ஸ் ஒன்லி.. செமையாக இருக்கிறது. லிங்க் வேண்டுபவர்கள் என் ஈ.மெயில் முகவரியை கண்டுபிடித்து ரிக்வஸ்ட் அனுப்பினால் அந்த லிங்க்கைத் தரத்தயார். //
  தானே அனுப்பிடறேன்...

  // "கடல் மேலே பனித்துளி" //
  அது அனல் மேலே பனித்துளி...

  பின்னூட்டங்களுக்கு பதில் போடும் பழக்கம் உங்களுக்கு இல்லையா... வருந்துகிறேன்...

  பதிலளிநீக்கு
 2. மன்னிக்கணும் இப்போதான் உங்களுடைய பின்னூட்ட பதிலை முந்தய பதிவில் பார்த்தேன்... ஆக்சுவல்லி நான் follow up comments வைத்திருந்ததாக ஞாபகம் ஆனால் என் மெயில் பாக்ஸுக்கு எதுவும் வரவில்லை... அதனால்தான் அப்படி குறிப்பிட்டேன்...

  பதிலளிநீக்கு
 3. // ம.தி.சுதா சொன்னது…
  அருமையாக இருக்கிறது...//
  நன்றி... ம.தி.சுதா

  பதிலளிநீக்கு
 4. // philosophy prabhakaran சொன்னது… லிங்க் வேண்டுபவர்கள் என் ஈ.மெயில் முகவரியை கண்டுபிடித்து ரிக்வஸ்ட் அனுப்பினால் அந்த லிங்க்கைத் தரத்தயார். //
  தானே அனுப்பிடறேன்...//

  வாங்க.. வாங்க.. இந்த ஸ்பிரிட்டைத்தான் எதிர்பார்க்கிறேன்.

  // "கடல் மேலே பனித்துளி" // அது அனல் மேலே பனித்துளி...// கரெக்ஷனுக்கு நன்றி.

  //பின்னூட்டங்களுக்கு பதில் போடும் பழக்கம் உங்களுக்கு இல்லையா... வருந்துகிறேன்...// என்ன பிரபாகரன், இப்படி சொல்லிட்டீங்க..........?

  //மன்னிக்கணும் இப்போதான் உங்களுடைய பின்னூட்ட பதிலை முந்தய பதிவில் பார்த்தேன்... //

  ஓக்கே, பரவாயில்லை... விடுங்க...

  பதிலளிநீக்கு
 5. //பிளைட்டில் புட்போர்டு அடித்த மாமனிதர்களுக்கெல்லாம் டாகுடரு பட்டம் கொடுக்கும் மாங்காய்களையெல்லாம்//

  செம நக்கலு..!!கலக்கறடா நண்பா..!!

  பதிலளிநீக்கு
 6. //@@கலாநேசன்
  புதிய தகவல்களுக்கு நன்றி.//

  நன்றி. ஏதோ நம்மளால நாட்டுக்கு முடிஞ்ச ஒரு சேவை.......

  பதிலளிநீக்கு
 7. // சேலம் தேவா சொன்னது…
  செம நக்கலு..!!கலக்கறடா நண்பா..!!//
  தேங்க்ஸ்டா.......

  அப்புறம்... ரொம்ப நாளா ஆளக்காணோம்? என்னாச்சு?

  பதிலளிநீக்கு
 8. Enakum oru doctor pattam vanganumnu romba naal asai... Ivangalaam vangradha parthadhum adhu romba easy nu thonudhu..

  kalakkal...

  Aparam andha link anupidu pa...

  பதிலளிநீக்கு
 9. // அப்பபபபபபடிடிடிடியேயேயேயே வலை மேய்ந்து கொண்டிருந்த போது............. ஒரு கில்மா வெப்சைட் லிங்க் கிடைத்தது. அடல்ட்ஸ் ஒன்லி.. செமையாக இருக்கிறது. லிங்க் வேண்டுபவர்கள் என் ஈ.மெயில் முகவரியை கண்டுபிடித்து ரிக்வஸ்ட் அனுப்பினால் அந்த லிங்க்கைத் தரத்தயார். //

  இந்த வரிகளுக்கு அதிக ரெஸ்பான்ஸ் இருக்குதா? இருக்கணுமே !

  பதிலளிநீக்கு
 10. //sakthistudycentre.blogspot.com சொன்னது…
  நண்பரே அருமையான பதிவு//

  நன்றி. வருகைக்கும் வாழ்த்துக்கும்.

  பதிலளிநீக்கு
 11. //மதுரை பாண்டி சொன்னது…
  Enakum oru doctor pattam vanganumnu romba naal asai... Ivangalaam vangradha parthadhum adhu romba easy nu thonudhu..//
  அதெல்லாம் பெரிய மேட்டரே கெடையாது. சப்ப மேட்டர்.

  //kalakkal... // நன்றி

  //Aparam andha link anupidu pa...//
  ஐ..... இது போங்கு ஆட்டம்.. மெயில் ஐடி கண்டுபிடிச்சு வாங்க. அப்போ தர்றேன்.

  பதிலளிநீக்கு
 12. //இனியவன் சொன்னது…
  // அப்பபபபபபடிடிடிடியேயேயேயே வலை மேய்ந்து கொண்டிருந்த போது............. ஒரு கில்மா வெப்சைட் லிங்க் கிடைத்தது. அடல்ட்ஸ் ஒன்லி.. செமையாக இருக்கிறது. லிங்க் வேண்டுபவர்கள் என் ஈ.மெயில் முகவரியை கண்டுபிடித்து ரிக்வஸ்ட் அனுப்பினால் அந்த லிங்க்கைத் தரத்தயார். //

  இந்த வரிகளுக்கு அதிக ரெஸ்பான்ஸ் இருக்குதா? இருக்கணுமே !//

  கண்டிப்பா.... ஏகப்பட்ட மெயில்ஸ்.. முன்பதிவு நடந்து கிட்டு இருக்கு... உங்களுக்கும் வேணுமா?

  பதிலளிநீக்கு
 13. //மதுரை பாண்டி சொன்னது…
  Enakum oru doctor pattam vanganumnu romba naal asai... Ivangalaam vangradha parthadhum adhu romba easy nu thonudhu..//
  அதெல்லாம் பெரிய மேட்டரே கெடையாது. சப்ப மேட்டர்.

  //kalakkal... // நன்றி

  //Aparam andha link anupidu pa...//
  //ஐ..... இது போங்கு ஆட்டம்.. மெயில் ஐடி //கண்டுபிடிச்சு வாங்க. அப்போ தர்றேன்.

  anupiten!!!

  பதிலளிநீக்கு
 14. தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிற கலைத்தாகம் புல்லரிக்க வைக்கிது....

  பதிலளிநீக்கு