புதன், 24 நவம்பர், 2021

Bynge Tamizh ன் "தக்காளி பற்றி ஒரு ஹைக்கூ கவிதை சொல்லுங்களேன்" போட்டி

Bynge Tamizh ஃபேஸ்புக்கில் இரண்டு நாட்கள் முன்பு "தக்காளி பற்றி ஒரு ஹைக்கூ கவிதை சொல்லுங்களேன்!" ன்னு ஒரு போட்டி அறிவிச்சிருந்தாங்க. அதில் நானும் ஒரு சில கவிதைகள் போட்டு விட்டேன். ஹைக்கூ இலக்கணம் எனக்கு அவ்வளவா தெரியாது. முயற்சி பண்ணுவோம்னு போட்டது. இது கவிதையா? ன்னு மட்டும் கேட்டுறாதீங்க. 

---------------------------------------------------- 

இன்றாயிருந்திருந்தால்

50 கேஜி தக்காளி 

என மதுமிதாவை 

வர்ணித்திருப்பான் 

விசுவநாதன்

---------------------------------------------------- 

அடிபட்டால் இனி

தக்காளிச் சட்னி கூட

வரவாய்ப்பில்லை

ஏழைக்கு

---------------------------------------------------- 

நீர்மத்தங்கம்

பெட்ரோல்.போல்

இனி நீ

சிவப்புத் தங்கம்

---------------------------------------------------- 

வறுமையின் நிறம்

சிவப்பு

விலையேறிப்போனது

இந்த சிவப்பு

---------------------------------------------------- 

தினமும் ஏறும்

தினமும் இறங்கும்

பெட்ரோலல்ல

தக்காளி.

---------------------------------------------------- 

ஏழைகளின் ஆப்பிள்

இன்று ஆனது

ஏழைகளுக்கும் ஆப்பிள்

---------------------------------------------------- 

நேரம் கெட்டால் ரோட்டிலே..

நேரம் வந்தால் உச்சியிலே

தக்காளி

---------------------------------------------------- 

வீட்டிலே ரேஷன்

ஆனது தக்காளி.

நாட்டிலே தருவரா

ரேஷனில் தக்காளி?

---------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக