ஞாயிறு, 2 ஜனவரி, 2011

நடு ரோட்டில் கிடக்கிறீர்கள், தலைக்கு மேல் லாரி, முகத்திற்கு நேரே அதன் பேக் வீல்(கள்)..

தலைப்பில் இருப்பது போன்ற ஒரு சூழ்நிலையை கற்பனை செய்து பாருங்கள். நடு ரோட்டில் கிடக்கிறீர்கள், தலைக்கு மேல் லாரி, முகத்திற்கு நேரே அதன் பேக் வீல்(கள்).. எப்படி இருக்கும் உங்களுக்கு..?

சென்ற வாரம் சேலத்தில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவம் பற்றி பேசலாம் என்றுதான். அதற்கு முன்னால்......

எனக்கு ஆட்டோக்காரர்கள் மீது பொதுவாக அவ்வளவு நல்ல அபிப்ராயம் கிடையாது. என்னதான் ஆட்டோக்காரர்கள் உங்கள் நண்பர்கள் என்று சொன்னாலும், ஒன்றிரண்டு குடும்பப் பாங்கான நாற்பது சொச்சம் வயதொத்த, மரியாதையாகப்பேசும் டிரைவர்களைப் பார்க்கும் போதும், வரும் மரியாதை இரண்டே நாளில் மீண்டும் சில ரவுடி ஆட்டோக்காரர்களைப் பார்க்கும் போது காணாமல் போய்விடுகிறது.

ரஜினி, விஜய் வகையறாவைச்சேர்ந்த ஹீரோக்கள் ஆட்டோ டிரைவர்களாக நடித்து அந்த வேலைக்கு ஒரு ஹீரோ இமேஜைக்கொடுத்து விட்டார்கள். இதனால் ஆட்டோ ஓட்டும் எல்லோருக்குமே தான் ஒரு ஹீரோ என்று நினைப்பு. இதெல்லாம் பெரிசுகள் சொல்வது போல் இள ரத்தம் ஓடும் வரை தான். பத்து வருடம் ஆட்டோ ஓட்டி பைல்ஸ் வந்து, சொட்டையும், தொப்பையும் விழுந்து, போகிற வருகிற போலீஸூக்கெல்லாம் வணக்கம் வைத்து, பிள்ளைகளுக்கு பீஸ் கட்டும் நேரத்தில் ஆட்டோ ரிப்பேர், மழை பிரச்சினைகளைச் சமாளித்து, (மைனாவில் தம்பி ராமையா புலம்புவதைப்போல) முக்கி முக்கி உழைத்தும் மூணு ஜட்டி கூட முழுசா மிச்சம் நிற்கல என்று புலம்பித் திருந்தும் வரை அந்த ஹீரோ இமேஜ் கொடுக்கும் திமிர் அடங்காது. அப்படி அடங்கிய பின் அட்வைஸ் செய்தாலும் அடுத்த தலைமுறை திருந்துவதாகத் தெரியவில்லை.

ஒருமுறை ஜூவியில் படித்ததாக ஞாபகம். நியாயமாக நாலு சவாரி பார்த்தாலும், ஆட்டோக்காரர்களின் தினசரி வருமானம் நானூறு முதல் அறுநூறு ரூபாய் வரை வரும். மாதம் சர்வ சாதாரணமாக பனிரெண்டாயிரம் ரூபாய் முதல் பதினைந்தாயிரம் ரூபாய் வரை பார்க்கலாம். சாதாரணமாக மாத வருமாத்னதிற்கு வேலைக்குச் செல்பவர்களை விட இவர்களின் வருமானம் அதிகம். ஆனால் என்னதான் அவ்வளவு வருமானம் வந்தாலும் மாமூல், தினசரி கூத்து, குடி போன்ற விஷயங்களுக்கே வீணாய்ப்போகிறது என்று எழுதியிருந்தார்கள்.

இதில் ஷேர் ஆட்டோக்கள் தனி வகை. ஷேர் ஆட்டோக்கள் பார்த்திருக்கிறீர்களா? நார்மல் ஆட்டோக்களை விட சைஸில் பெரியவை. கோவை, சென்னை, சேலம் உட்பட பல ஊர்களிலும் ஃபேமஸ். இங்கே சேலம் போன்ற ஊர்களில் பியாஜ்ஜியோ ஆபே வண்டிதான் பொதுவாக ஷேர் ஆட்டோ பணிக்கு உதவுகிறது...

சேலத்தில் ஏகப்பட்ட ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன. ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் பத்தாயிரம் ஆட்டோக்கள். ஒரு பெரிய கட்டிடத்தின் மாடியில் நின்று கொண்டு கீழே பார்த்தால் ஆட்டோக்கள் ஏதோ பேரணி நடத்துவது போலவே இருக்கும். ஆனால் அது சாதாரணமாக ஓடும் ஷேர் ஆட்டோக்கள் தான். அது சரி, இத்தனை ஆட்டோக்கள் ஓடினால் எல்லா டிரைவர்களிடமும் பக்காவாக லைசென்ஸ், ஆர்.சி வகையறாக்கள் இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? ஒவ்வொரு முறை நான் ஷேர் ஆட்டோ ஏறும் போதும் அவர்களிடம் சாதாரணமாக பேச்சுக்கொடுத்துக்கொண்டே இந்தக் கேள்வியை கேட்பது வழக்கம். பத்தில் ஒரு ஆட்டோக்காரரிடம் லைசென்ஸ் கிடையாது. இதில் பல ஆட்டோக்கள் லோக்கல் போலீஸாரின் பினாமிகளாம்.இது தவிர இரு மாதங்களுக்கு முன்பு, இன்னோரு மூவாயிரத்தைநூறு ஆட்டோக்களை இறக்கியிருக்கிறார்களாம். வரும் எலக்ஷன் வரையில் பர்மிட் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்று சொன்னார் ஒரு ஆட்டோ டிரைவர். சேலத்தில் இந்தப்பக்கம் புதிய பெரியாஸ்பத்திரி திறப்பு விழா, புதிய கலெக்டர் ஆபீஸ் திறப்பு விழா, கோர்ட் மற்றும் வணிக வளாகங்கள் திறப்பு விழா என்றெல்லாம் பெரிய மேட்டர்கள் நடந்து கொண்டிருப்பதால் எல்லா ரூட்டுகளிலும் ஆட்டோக்கள் ஓடும் என்று கேள்வி.

முக்கியமான ஏரியாக்கள் என்று பார்த்தால் கொண்டலாம்பட்டி பை பாஸ், சீலநாயக்கன் பட்டி பை பாஸ் என்ற இரண்டு பகுதிளுக்கு அதிக எண்ணிக்கையில் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இந்தப்பக்கம் பார்த்தால் அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை என்ற இரு பகுதிகளுக்கு. ஆனால் என்னவோ தெரியவில்லை. இன்னும் செவ்வாய்ப்பேட்டை பக்கம் ஷேர் ஆட்டோ விடுவதே இல்லை. ஒருவேளை சரக்கு லாரிகள் நிறைய இருக்கும் என்பதாலோ என்னவோ?

டிரைவர்களைப்பற்றிச் சொல்ல வேண்டுமானால்……….. ஸீட்டில் கோணலாக உட்கார்ந்து, பான்பராக், மாணிக்சந்த், சைனி சைனி ஏதாவது ஒன்று வாங்கி குதப்பிக் கொள்ள வேண்டியது. அதில் ஒரு சந்தோஷமான ஹீரோ இமேஜ். நானும், எப்போதும் ஷேர் ஆட்டோவில் போகும்போது அதன் டிரைவர் சீட்டில் டிரைவர் கூடவே ஒட்டிக்கொண்டு வருவதே என் பழக்கம். அந்த டிரைவர் தனக்குத் தோதான ஆள் யாராவது பேச்சுத் துணைக்கு மாட்டுவானா என்றே வருவார்கள். ஏதேனும் விஷயம் தெரிந்து கொள்ளலாம்.

சென்ற வாரம் நடந்த கோர சம்பவம் இது. ஒரு ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்த போது அந்த டிரைவர் புலம்பியபடியே வந்து கொண்டிருந்தான். ஒரு ஆட்டோக்காரன் செய்த தப்புனால ரெண்டு குடும்பத்தோட வாழ்க்கையே போச்சே என்றபடி புலம்பிக்கொண்டிருந்தான்.. என்னவென்று விசாரித்தால், அன்று ஒரு ஆக்ஸிடென்ட் நடந்திருக்கிறது.

சேலத்தில் பொதுவாக ஷேர் ஆட்டோக்களுக்கென்று எந்த ஒரு ஸ்டாப்பிங்கும் கிடையாது. கை காட்டும் இடத்திலெல்லாம் நிறுத்துவார்கள், கண்ட இடத்தில் நிறுத்துவார்கள், போட்டியின் காரணமாக நிறுத்துவார்கள். பஸ்ஸை முந்திக்கொண்டு போய் நிறுத்துவார்கள். சடன் ப்ரேக் போட்டு நிறுத்துவார்கள்.

அன்று சேலம் உடையாப்பட்டி பெருமாள் கோவில் மேடு என்ற இடத்துக்கு அருகில் (அம்மாப்பேட்டை ரூட்). இரண்டு பெண் குழந்தைகள், இரண்டும் ப்ளஸ் ஒன் படிக்கிற குழந்தைகளாம். சைக்கிள் ஓட்டியபடி போய்க் கொண்டு இருந்திருக்கிறார்கள். வழக்கம் போல் முன்னால் பின்னால் என எல்லாப்பக்கமும் ஷேர் ஆட்டோக்கள். முன்னால் போன அந்த ஆட்டோவின் பரதேசி டிரைவர் எதையும் கவனிக்காமல் சடன் பிரேக் அடிக்க பின்னால் சைக்கிளில் வந்து கொண்டிருந்த குழந்தைகள் இருவரும், ஷேர் ஆட்டோ மேல் மோதி (துரதிர்ஷ்டவசமாக வலது பக்கமாக) ரோட்டில் சைக்கிளோடு கீழே விழுந்திருக்கிறார்கள்.

எதிரே லாரி..

ஆனால் இவர்களைப்பார்த்த அந்த லாரி டிரைவர் குழந்தைகள் மேல் ஃப்ரண்ட் வீல் ஏறக்கூடாது என்று லாரியை வளைத்து இடப்பக்கம் திருப்ப முயற்சித்ததாகவும் ஆனால் அதையும் மீறி பேக் வீல் அந்தக் குழந்தைகள் மீது ஏறியிருக்கிறது என்று நான் சந்தித்த ஆட்டோ டிரைவர் சொன்னார். ஒரு பெண் குழந்தை ஸ்பாட்டிலேயே அவுட். இன்னொன்று ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் பின்னர் கோர மரணம். இத்தனைக்கும் காரணமான அந்த ஆட்டோக்காரன் என்ன செய்தான் என்று கேட்டால், "அதெப்டி சார்? இதைப் பார்த்துட்டு, நானாவே இருந்தாலும் சிட்டாப் பறந்துருப்பேன் இல்ல?" என்று கேட்டார் இந்த டிரைவர்.

லாரி டிரைவர் ஸ்பாட்டிலிருந்தே எஸ்கேப் வழக்கம் போல, ஆனால் க்ளீனரை பின்னி பெடலெடுத்து பிசிறு கடாசி விட்டார்கள் பப்ளிக். என்ன பிரயோஜனம்.? போன உயிர்கள் போனது தானே.. இத்தனைக்கும் அவர்களில் பலருக்கும் அங்கே உண்மையில் நடந்த இந்தக் கூத்துக்களும், இதற்குக்காரணமானவன் யார் என்றும் தெரியாது. (கிரிக்கெட்டில முதலில் டொக்கு டொக்கு என்று ஆடி ஓவரை வீணாக்கும் பேட்ஸ்மேனை விட்டு விட்டு, இந்தியா தோற்றுப்போகையில் கடைசி ஓவரில் உயிரைக்கொடுத்து ஆடிய பேட்ஸ்மேனை விளாசுவோமே, அந்த மாதிரி) ....

இப்போது மீண்டும்.................. நடு ரோட்டில் நாலு பக்கமும் வண்டிகள் போக வர இருக்கும் போது, நீங்கள் விழுந்து கிடக்க, உங்கள் முகத்திற்கு நேராக ஒரு பெரிய லாரியின் இரட்டை பேக்வீல் வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

அது மட்டுமல்ல...

இந்த ஆட்டோ அட்டகாசம் பற்றி கட்டுரை எழுதப்போகிறேன் என்று சொன்னபோது நண்பர் ஒருவர் சொன்னார். சில வாரங்களுக்கு முன்பு சேலத்தின் லோக்கல் டி.வி ஒன்றில் கொடுத்த பேட்டியில் திருவாளர் அமைச்சர் அவர்கள் என்ன திருவாய் மலர்ந்திருக்கிறார் தெரியுமா? போலீஸ்காரர்கள் தான் இதற்குக் காரணம். அவர்களுக்குச் சம்பளம் ரொம்பவும் குறைவு. அப்புறம் அவர்கள் தங்கள் வருமானத்துக்கு வேறு என்ன தான் செய்வார்கள்? வருமானத்திற்காக இப்படி பினாமி பெயரில் ஆட்டோ ஓட்டத்தான் செய்வார்கள் என்று..... எப்படி இருக்கிறது கதை... ?

எனக்கு ஒன்று புரியவில்லை.. யாரோ ஓனராக இருக்கட்டும் வண்டிக்கு. ஆனால் அதற்கென்று ஒரு லிமிட் இல்லையா? ஒரு ஊருக்கு இவ்வளவு தான் ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கும் அதிகாரம் போக்குவரத்துத் துறைக்கு இல்லையா? அல்லது இப்படியே போனால் இந்தப் பூனைகளுக்கு மணி கட்டுவது யார்?

இதோ இதை டைப்பி முடித்து விட்டு டீம் பையர் (பையனின் மரியாதைச்சொல் - அவருக்குத் திருமணமாகி விட்டதால்) ஒருவருக்கு கால் செய்தால் பதட்டமாகப்பேசினார். எங்க இருக்கீங்க என்றதற்கு "சார், என் கண் முன்னாடி ஒரு ஆக்ஸிடென்ட் சார். பைக்குல ரெண்டு பசங்க. ரோடு க்ராஸ் பண்ணும் போது தலை மேலேயே லாரி ஏறி, தலை கூழாகிடுச்சு சார். பயமாயிருக்கு, ஒய்ப் வேற என் கூட இருந்தாங்க. இதைப்பார்த்துட்டு கத்திட்டாங்க...

வாழ்க்கை............???????????-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

25 கருத்துகள்:

 1. சரளமான எழுத்து நடை... நிறைய இடங்களில் ரசிக்க வைத்தது...

  பதிலளிநீக்கு
 2. புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...

  http://www.philosophyprabhakaran.blogspot.com/

  பதிலளிநீக்கு
 3. நண்பரே, நீங்கள் சொல்லி இருக்கும் வருமான கணக்கில் தவறு இருக்கிறது,. ஆட்டோ வாங்கிய லோன் யார் அடைப்பது ?? அப்புறம் போலிஸ் காரன் மாமூல் யார் தருவது ???

  பதிலளிநீக்கு
 4. // Philosophy Prabhakaran சொன்னது…
  சரளமான எழுத்து நடை... நிறைய இடங்களில் ரசிக்க வைத்தது...//
  நன்றி பிரபாகரன்.. ஆனால் இந்தப்பதிவை எழுதும் போது எனக்குக் கோபம் கோபமாகத்தான் வந்துது.. எழுத்து நடை பற்றி யோசிக்கவே முடியவில்லை...

  பதிலளிநீக்கு
 5. // Philosophy Prabhakaran சொன்னது…
  புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...//

  கண்டிப்பாக வருகிறேன்...

  பதிலளிநீக்கு
 6. //2 ஜனவரி, 2011 2:58 pm
  எல் கே சொன்னது…
  நண்பரே, நீங்கள் சொல்லி இருக்கும் வருமான கணக்கில் தவறு இருக்கிறது,. ஆட்டோ வாங்கிய லோன் யார் அடைப்பது ?? அப்புறம் போலிஸ் காரன் மாமூல் யார் தருவது ??? //

  நீங்கள் சொல்வது சரிதான்.. ஆனால் அது என் கணக்கல்ல.. ஜூ.வி கணக்கு.... ஆனால் மாமூல் மேட்டரை குறிப்பிட்டிருக்கிறேன். ஆட்டோ லோன் ரீபேமெண்ட் விஷயத்தை சேர்த்துக்கொள்ளலாம். (ஆனால் எந்தவொரு தொழிலுக்கும், முதல் என்று ஒன்று வேண்டுமல்லவா? அதை அவன் கட்டித்தானே ஆகவேண்டும்?)

  பதிலளிநீக்கு
 7. // ராமலக்ஷ்மி சொன்னது…
  சமூக அக்கறையுடனான பதிவு //

  நன்றி.. வருகைக்கும் கருத்துக்கும். நீண்ட நாட்களுக்குப்பிறகு வருகை தருகிறீர்கள். நடுவில் சில மொக்கை பதிவுகளை பதிவேற்றியிருந்தேன். அதனால் தான் தாங்கள் வராமல் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்... பரவாயில்லை....

  பதிலளிநீக்கு
 8. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

  பதிலளிநீக்கு
 9. உயிர்பயம்,உயர்ரத்த அழுத்தம்,ஸ்ட்ரோக்.. இத்யாதி.. இத்யாதி.. இந்த மாதிரியெல்லாம் நோய்கள் உங்களுக்கு வேண்டாதவங்களுக்கு வரணும்ன்னா.. சேலத்து ரோடுகள்ல நடந்தோ, பைக்லயோ போகச் சொல்லுங்க... இந்த ஆட்டோக்களால கண்டிப்பா ஏதாவது ஒண்ணு வரும்..!!நல்ல பதிவுடா நண்பா..!!

  பதிலளிநீக்கு
 10. இரண்டு நாட்களாக புத்தக சந்தைக்கு சென்று வந்த களைப்பில் இருந்ததால் நெட்பக்கம் வர முடியவில்லை...

  நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
  http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html

  பதிலளிநீக்கு
 11. ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் நாலுந்தெரிஞ்ச!!!!!!!!! அவங்களுக்கு என்ன கவலை! வண்டிய ஓட்டுனமா தன்னிய அடிச்சமான்னுட்டு!!!!!! நம்ம உசுருள்ள போயிடும் . அவங்க ஓட்டுர ஓட்டுல????

  பதிலளிநீக்கு
 12. அன்பு எஸ்காவுக்கு
  நானும் செலம்தான்.இந்த ஆட்டோக்காரர்கள் பண்ணும குசும்பு தொல்லைகள் பற்றி நிறையமனம் விட்டு யாரிடமாவது புலம்பவேண்டும் என்று ரொம்ப நாளாக ஒரு ஆசை.அது தாங்கள் பதிவை பார்த்த்து மனம் சிறிது சாந்தி அடைந்தது.
  ஆனாலும் தங்களுக்கு பொறுமை மிக அதிகம் என்று எண்ணுகிறேன்
  மிக்க மன அழுத்தத்துடன் எழுதியுள்ளீர்கள்.
  சேலத்துக்கு வெளியூர்சென்றுவிட்டு பஸ் ஸ்டாண்டில் - ரயில்வே ஜங்ஷன் - வந்து இறங்கியதும் முதலில் நம்மை டென்ஷன் செய்யக்கூடிய மகானுபாவர்கள் இவர்கள்.
  இவர்கள் எப்போது மனிதானுபத்துடன் நடந்து பயணிகளை மதிப்பார்களோ கடவுளுக்கே வெளிச்சம்.
  இதுபற்றி இன்னும் நிறைய எழுதுங்கள்
  வாழ்த்துக்கள்
  பொறிஞர்.கணேசன்

  பதிலளிநீக்கு
 13. // மதுரை பாண்டி சொன்னது…
  right!!! //
  ரைட், லெஃப்ட் எல்லாம் பாக்கறதில்லீங்க.. கன்னா, பின்னா ன்னு ஓட்றாங்க...

  பதிலளிநீக்கு
 14. // சேலம் தேவா சொன்னது…
  உயிர்பயம்,உயர்ரத்த அழுத்தம்,ஸ்ட்ரோக்.. இத்யாதி.. இத்யாதி.. //
  கண்டிப்பா வரும்.. எல்லாமே சேலத்துல சாத்தியம் தான்...

  பதிலளிநீக்கு
 15. // Philosophy Prabhakaran சொன்னது…
  இரண்டு நாட்களாக புத்தக சந்தைக்கு சென்று வந்த களைப்பில் இருந்ததால் நெட்பக்கம் வர முடியவில்லை... //
  வருக... வருக... வருக...
  // நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்... //
  நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. // manitham sathiq சொன்னது…
  ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் நாலுந்தெரிஞ்ச!!!!!!!!! அவங்களுக்கு என்ன கவலை! வண்டிய ஓட்டுனமா தன்னிய அடிச்சமான்னுட்டு!!!!!! நம்ம உசுருள்ள போயிடும் . அவங்க ஓட்டுர ஓட்டுல???? //

  ஆமோதிக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 17. // சிவகாமி கணேசன் சொன்னது…
  naanum //
  புரியலிங்களே...

  பதிலளிநீக்கு
 18. // சிவகாமி கணேசன் சொன்னது…
  மிக்க மன அழுத்தத்துடன் எழுதியுள்ளீர்கள். //
  இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு மிக்க மன அழுத்தம் ஏற்பட்டது உண்மை தான்..

  // பொறிஞர்.கணேசன் //
  நன்றி..... பொறிஞர் என்றால் என்ன வேலை என்று தெரியவில்லையே...

  பதிலளிநீக்கு
 19. ஆனாலும் சேலத்தில ரொம்ப அதிகம் ...மனசு வலிக்கிறது...

  பதிலளிநீக்கு
 20. // கோவை நேரம் சொன்னது…
  ஆனாலும் சேலத்தில ரொம்ப அதிகம் ...மனசு வலிக்கிறது... //

  அந்தக் குழந்தைகள் நம்ம வீட்டுக்குழந்தைகளாக இருந்தால்??? (இதே போன்ற "யுத்தம் செய்" கதையை நான் ஆதரிக்கிறேன்..)

  பதிலளிநீக்கு
 21. Poringar endral BE(Electrical)
  I am a retired TNEB Elecl.Engineer settled at coimbatore with my son Rajakannaiyan,Elecl.Engineer.
  from Feb 2009

  பதிலளிநீக்கு
 22. // சிவகாமி கணேசன் சொன்னது…
  Poringar endral BE(Electrical)
  I am a retired TNEB Elecl.Engineer settled at coimbatore with my son Rajakannaiyan,Elecl.Engineer.
  from Feb 2009 //

  ஓஹோ... அறிஞர் என்பது போல பொறிஞர்-ஆ? மிக்க மகிழ்ச்சி.... கோவை தான் என் தங்கையின் ஊர். கோவை வரும்போது முடிந்தால் சந்திக்கலாம்...

  பதிலளிநீக்கு