ஞாயிறு, 16 ஜனவரி, 2011

கலவை சாதம் (17/01/2011)

பெட்ரோல் விலை மீண்டும் ஏறியிருக்கிறது. உடனடி அமல் ரூபாய் இரண்டு ஐம்பது லிட்டருக்கு.. விலையேற்றம் மட்டும் உடனடியாக அமலுக்கு வருகிறது. ஆனால் விலைகுறைப்பு என்றால்? வரமாட்டேனென்கிறது. ஒருமுறை கச்சா எண்ணெயின் விலை மிகவும் குறைந்து போன பிறகு, அதிலிருந்து லிட்டருக்கு இரண்டு ருபாயை குறைப்பதற்கு எத்தனை நாள் மீட்டிங் போட்டார்கள். பல நாள் பேசி பேசி பேசி பேசி அப்புறமாக ரொம்ப நாள் கழித்து பிறகுதான் அமலுக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் விலை ஏறும்போது மட்டும் "இன்று நள்ளிரவு முதல்" என்ற ஒற்றை அறிவிப்போடு... இந்த நேரத்தில் ஒரு லிட்டர் எழுபது பைசா என்று என் பைக்குக்கு பெட்ரோல் போட்டிருக்கிறேன் என்று தலைவர் சுஜாதா சொன்னது நினைவுக்கு வருகிறது. எழுபதைத்தொடப்போகிறது இன்னும் ஒரே வருடத்தில்.. கடவுளே இது எங்கே போய் நிற்குமோ?

-------------------------------------------------------------------

நீயா? நானாவில் கஷ்டப்பட்டு பேசிய பல பாயிண்டுகளில் நிறைய எடிட்டிங்கில் போய்விட்டது. என்ன தவம் செய்தனை? எனக்காக தன் நண்பர்களையும், குடும்பத்தினரையும் அழைத்து டி.வி முன்னால் உட்கார வைத்து நீயா நானா பார்க்க வைத்து, நான் நிறைய முறை பேசவில்லை என்று போன் போட்டு என்னைத்திட்டிய 23 அன்பர்களுக்கும் நன்றி. நான் டி.வியில் வந்தபோதெல்லாம் மெஸேஜ் அனுப்பி சேட்டில் இருந்த சுமார் 40 பேருக்கும் ஸ்பெஷல் நன்றி..

-------------------------------------------------------------------

ஆனந்த விகடனில் சாரு வின் மனம் கொத்திப் பறவை போன வாரமே முடிந்து விட்டது. அவரே முடித்து விட்டாரா? அல்லது ---------------------------------------------? அதுவே விகடன் பிரசுரம் மூலம் புத்தகமாகவும் வந்து விட்டது. சென்னை புத்தகக் காட்சியில் இருந்ததாகக் கேள்வி. அடுத்து விகடனில் மீண்டும் எஸ்.ரா வந்தால் நன்றாக இருக்கும். அல்லது என்னுடைய கணிப்புப் படி நாஞ்சில் நாடனை வைத்து ஒரு தொடர் வெளியிடுவார்கள் என்று நினைக்கிறேன். கரண்டில் லைம் லைட்டுக்கு வந்திருப்பவராயிற்றே...

-------------------------------------------------------------------

டிவிட்டரில் நாம் நிறைய பேரை ஃபாலோ செய்கிறோம்.. ஆனால் நம்மை நிறைய பேர் ஃபாலோ செய்ய வைப்பது எப்படி? அன்பர்கள் யாரேனும் வழி சொன்னால் நன்றாக இருக்கும். மேலும் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் உபயோகிக்க சிறந்த மொபைல் போன் மாடல் என்னவென்று சொன்னால் நன்றாக இருக்கும் (தமிழ் டைப்பிங் வசதியுடன்)

-------------------------------------------------------------------

ஆடுகளம், சிறுத்தை, காவலன் மூன்றுமே தேறும், நன்றாகப்போகும் என்று சொல்கிறார்கள். படங்கள் எப்படி? எதை முதலில் பார்க்கலாம்? தியேட்டரில் போய் காசு கொடுத்துப்பார்க்கலாமா? அல்லது கொஞ்சம் வெயிட் பண்ணலாமா? இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக சுறா சன் டி.வியில் இன்று ஒளிபரப்பாகித் தொலைத்தது. சந்தோஷூடன் 75 ரூபாய் கொடுத்து போனது வேஸ்டாகிப்போனது. நல்ல வேளை.. சிக்கு புக்கு வுக்கும் அந்த மாதிரி தான் கூப்பிட்டார்கள். நான் போகவில்லை.

இன்றைக்கு விஜய்யில் சிக்கு புக்கு, அய்யனார், அந்தப்பக்கம் ஈரம், இந்தப்பக்கம் மதராசப்பட்டினம், வேறெதோ டி.வியில் சேரனின் பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, இன்னோரு சைடில் அருணாச்சலம், வேறு ஒரு சைடில் முரட்டுக்காளை என்று இரட்டை இரட்டையாக படங்கள் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தன. ஸோ........... அவசரப்பட்டு எந்தப்படத்துக்கும் போக வேண்டாமென்று நினைக்கிறேன்.

-------------------------------------------------------------------

போனவாரம் சென்னை போனபோது பாரீஸ் கார்னரில் சுமார் 35 டிவிடிக்கள் வாங்கி வந்தேன். ஒன்று ரூபாய் பனிரெண்டு ஐம்பது என்ற கணக்கில். எல்லாமே இங்கிலீஷ் படங்கள் தான். காம்போ பேக் வேறு.. ஒற்றைப்படம், இரட்டை, நான்கு, டிராலஜீ சீரீஸ் வகை, க்ளாஸிக் வகைகள், ஆஸ்கர் கலெக்ஷன், உலகப்படம் என்று கலவையாக. முப்பது ரூபாய் சொன்னார்கள். பேசிப்பேசி பேரம் படிந்து 35 டிவிடிக்களை எடுத்துக்கொண்டு மொத்தமாய் 430 ரூபாய் கொடுத்து விட்டு நடையைக்கட்டி விட்டேன். போட்டுப்பார்த்ததில் அவ்வளவு தெளிவாக இல்லாவிட்டாலும் ஓக்கே ரகம் தான் எல்லாமே. பிரச்சினை என்னவென்றால், பாரீஸ் கார்னரில் நல்ல கடைகளை, நல்ல பிரிண்ட் உள்ள டிவிடி கடைகளை கண்டுபிடிப்பது தான் கஷ்டம். இப்போது ப்ளூ ரே டிஸ்க் என்று ஒன்று வந்திருக்கிறது. பிரிண்ட் ஓக்கே. ஆனால் ஆடியோ ப்ராப்ளமாக இருக்கிறது. பார்க்கலாம். சேலத்திலும் அதே தரத்தில் தான் கிடைக்கிறது.. ஆனால் முப்பது ரூபாய் சொல்கிறார்கள். ஓசூரில் நாற்பது. அதான்... சென்னை ரேட் பரவாயில்லை என்று வாங்கிவிட்டேன்.

-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

9 கருத்துகள்:

 1. விஜய் டிவி புகழ் எஸ்கா அவர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.சுகமான போதை என்றால் அனுபவிப்பதில் என்ன தப்பு என்ற புத்தகங்கள் படிப்பதை பற்றிய உங்கள் அரிய கருத்தையும்,எஸ்.ரா வைப் பற்றிய உங்கள் ஆவலையும் விஜய் தொலைக்காட்சியில் கண்டு மகிழ்ந்தேன்.இதே போன்று சன் டிவி.ஜெயா டிவி,ஸ்டார் டிவி,போன்ற டிவிக்களில் எல்லாம் உங்களைக் காண பேராவல் கொண்டிருக்கிறேன்.ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
  எஸ்காவின் மூலம் எஸ்.ராவின் கதைகளை பற்றிய அருமையான விளக்கத்தை கேட்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி.எழுத்தில் மட்டுமல்ல...பேச்சிலும் அவருடைய ஆளுமையை நிரூபிக்கிறார் எஸ்.ரா.நன்றிகள் பல உங்களுக்கு. :-))))

  பதிலளிநீக்கு
 2. நானும் நீங்கள் பேசியதை பார்த்தேன்.
  உங்கள் blog படித்தால் கீழ் வரிசை t-shirt பேசும் போது எரிச்சல் தான் வந்தது.
  கோபியை கவனித்ததில் அவர் நடிகர் என்பதை உணர முடிந்தது.

  பதிலளிநீக்கு
 3. பொங்கல் படம் இன்னும் எதுவும் பார்க்கல !!! பார்த்ததும் சொல்றேன்!!! வரட்டா!!! ஜூட்!!!
  --
  மதுரை பாண்டி
  http://maduraipandi1984.blogspot.com

  பதிலளிநீக்கு
 4. // @@@ சேலம் தேவா சொன்னது…
  )))) //

  என்னை கலாய்ச்சிட்டாராம்...........................

  பதிலளிநீக்கு
 5. // MANO நாஞ்சில் மனோ சொன்னது…
  ஆத்தீ வடை எனக்கா...................!!! //

  ஆமாம்........ ஆனா மூணாவது வடை........

  பதிலளிநீக்கு
 6. // Suresh S R சொன்னது…
  நானும் நீங்கள் பேசியதை பார்த்தேன்.
  உங்கள் blog படித்தால் கீழ் வரிசை t-shirt பேசும் போது எரிச்சல் தான் வந்தது.
  கோபியை கவனித்ததில் அவர் நடிகர் என்பதை உணர முடிந்தது. //

  நன்றி... ஆனால் நிறைய எடிட்டிங்கில் போய் விட்டது.

  பதிலளிநீக்கு
 7. // Madurai pandi சொன்னது…
  பொங்கல் படம் இன்னும் எதுவும் பார்க்கல !!! பார்த்ததும் சொல்றேன்!!! வரட்டா!!! ஜூட்!!! //

  ம்........ நானும் பதிவுகள் படிச்சேன்..... மூணுமே நல்லாயிருக்குங்குற மாதிரிதான் எல்லா விமர்சனமும் இருக்கு...

  பதிலளிநீக்கு
 8. //போட்டுப்பார்த்ததில் அவ்வளவு தெளிவாக இல்லாவிட்டாலும் ஓக்கே ரகம் தான் எல்லாமே. பிரச்சினை என்னவென்றால், பாரீஸ் கார்னரில் நல்ல கடைகளை, நல்ல பிரிண்ட் உள்ள டிவிடி கடைகளை கண்டுபிடிப்பது தான் கஷ்டம்//

  எனக்கு தெரிந்த கடை ஒன்று இருக்கிறது, blu-ray நல்ல ப்ரிண்ட் டிவிடிக்கள் கிடைக்கும். விலை 20 ரூபாய்.

  பதிலளிநீக்கு