திங்கள், 24 ஜனவரி, 2011

ட்வீட்ஸ்.......

"வாடி மாப்ள....... எப்டி இருக்க? ஆமாம் உனக்கு ஜிமெயில் ஐடி இருக்கா? அப்போ ப்ளாக்கர்ல ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டியது தானே..

நீ ஆரம்பி, நான் சொல்லித்தர்றேன். அது மட்டும் இல்ல.. ஃபேஸ்புக்லயும் ஜி.மெயில் ஐடி இருந்தா போதும் அக்கவுண்ட் ஆரம்பிச்சுடலாம். அதையும் ஆரம்பிடா......

அப்புறமா ட்விட்டர் சொல்லித்தர்றேன்.. அது ரொம்ப சிம்பிள். எப்படி ஃபாலோ பண்றதுன்னு தெரிஞ்சுகிட்டியின்னா போதும்..."

என்ன? ஜூ.வியோட டயலாக் மாதிரி இருக்கிறதா? இன்றைய காலகட்டத்தில் படித்த இரண்டு போர் ஒன்றாகச் சேர்ந்தால் பேசிக்கொள்ளும் டாபிக்குகளில் மேற்கண்ட அயிட்டம் கண்டிப்பாக உண்டு..

நெட்டில் உலாவரும் எல்லா விளம்பரங்களிலும், ஏன் டி.வியில் வரும் மொபைல் போன் விளம்பரங்களிலும் ஃபேஸ்புக், ட்விட்டர் என்ற இரண்டு சமூக வலைதளங்களும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன..

ஆரம்பத்தில் ட்வீட் அடிப்பது ஒன்றும் பெரிதாய் தோன்றவில்லை... அப்படியே நம் வீட்டில் பின்னிரவில் லேப்டாப்பை வைத்துக்கொண்டு தனியாக உட்கார்ந்திருக்கும் போது அப்படியே ஒரு மோன நிலை ஏற்படுகிறது.. அதிலும் அராத்து போன்றவர்களின் அதே நிலையிலான ட்வீட்களை பார்க்கும் போது நமக்கும் லேசாக வெறியேறுகிறது.. ட்வீட் அடித்துத் தள்ளத் துவங்குகிறோம். துண்டு துண்டாக எல்லா டாபிக்குகளையும் டச் செய்து விட்டுப் போவதால் என்னமோ நாம் ஒரு அறிவு ஜீவி என்ற எண்ணம் நமக்கு.. அல்லது ஃபிரண்டோடு எல்லா மொக்கை டாபிக்குகளையும் பேசுவது போன்ற ஒரு பிரமை....

டிசம்பர் மாதம் நான் ட்விட்டர் அக்கவுண்ட் ஆரம்பித்த தினத்தில் இருந்து தொடர்ந்த சில நாட்களுக்கு நான் அடித்த ட்வீட்கள் இங்கே பதிவேற்றப்படுகிறது...... இவை வரவேற்பு பெறும் பட்சத்தில் மிச்சமும் வெளியிடப்படும். (ரிப்ளைகள், ரீட்வீட்கள், தேவையற்ற பர்சனல் ட்வீட்கள், ரொம்ப மொக்கையானவை இவற்றில் இடம் பெறாது) அதுக்குப்பிறகு வாரம் ஒரு முறை அனைத்து ட்வீட்களும் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும்.

ஆனால் கீழிருந்து மேலாக ட்வீட்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நான் அடித்த முதல் ட்வீட் விருதகிரி பற்றியது. அங்கிருந்து காப்பி செய்யும்போது கீழிருந்து மேலாகத்தான் வருகின்றன..

=============================================================

ஒரு ட்வீடடுக்கு ரிப்ளை ட்வீட் அடித்தால் @abcdef என்றே ட்வீட் போகிறது. ரிப்ளை எதற்கானது என்பதற்கான குறிப்பே இல்லை.

=============================================================

எங்கு பார்த்தாலும் யாரைப்பார்த்தாலும் பொங்கல் வாழ்த்துக்கள். டெம்ப்ளேட் வாழ்த்துக்கள் சொல்லி போரடிக்கிறது.

=============================================================

சாவடிக்குறாங்கப்பா...

=============================================================

வாக்குக் கொடுத்து விட்டு தவறும் பெண்களை என்ன செய்யலாம்?

=============================================================

வரவர நாணயம் விகடன் படித்தால் ஒதுக்குப்புறமான மண்டபத்தில் நடக்கும் இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொள்வது போல் பயமாக இருக்கிறது.

=============================================================

தோழி ஒருத்தி வீட்டில் இருக்கிறேன்.. நல்ல உபசரிப்பு - அவளும், அவள் கணவனும். நல்ல துவக்கம் இந்தப்புத்தாண்டில்.

=============================================================

"சூப்பர் ஸ்டார் சூர்யாவை மும்பை ஜிம்மில் சந்தித்தேன்.. தமிழ் த்ரீ இடியட்ஸில் கமிட்டாகி இருக்கிறாராம். பணிவான ஆள் மட்டுமல்ல... பெண்கள் சொல்வது போல செம ஹாட்" - சொன்னது சேதன் பகத்.. மூல நாவலின் ஆசிரியர்.

=============================================================

நண்பன் வந்திருக்கிறான். சாவடிக்கிறான்.

=============================================================

உறங்கும் குழந்தையை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.

=============================================================

சிறுத்தை டிரெயிலர்ல இருந்து கார்த்தின்ற பேரை மட்டும் கட் பண்ணி எடு்க்கச்சொல்லிருக்கேன்... (ஒரு வெளம்பரரரரரரம்)

=============================================================

நாளை ஈரோட்டுல பதிவர் சந்திப்பாமே.. யாரெல்லாம் வர்றீங்க?

=============================================================

ஓஞ்ச வாளப்பளம் ஒரு டஜன் வாங்கினேன்....

=============================================================

திறந்த மனதுடன் இருப்பது எப்படி? பனிரண்டு மணிக்கு எஃப்.டிவி மங்கையர் கற்றுக்கொடுக்கிறார்கள்.

=============================================================

லேப்பு டாப்பை மடி மேலே வைத்து வேலை செய்தால் "அது"க்கு ஆபத்தாமே.... அய்யய்யோ...

=============================================================

கல்யாணம் ஆன முன்னாள் காதலியை பார்க்கப்போகும்போது என்ன வாங்கிக்கிட்டு போகலாம்?

=============================================================

புரொஃபைல் பிக்சர் மாற்றி விட்டேன். ஒருவேளை நம்ம ட்வீட் விகடனில் வந்தால்? (சொந்தப்போட்டோவை போட யோசிப்பாய்ங்க இல்ல)

=============================================================

சந்திராயன் எடுத்த போட்டோக்களில் நிலாவில் வடை சுட்டு விற்ற பாட்டியின் டெட்பாடி கிடைத்திருக்கிறதாம். ஆனால் காக்காவைக்காணுமாம்.

=============================================================

பாட்டி வட சுட்ட கதையில வடை உளுந்த வடையா? மசால் வடையா?

=============================================================

தினசரி நிறைய ஃபேஸ்புக் பிரண்ட் ரிக்வஸ்ட். இன்றைக்கு ரிக்வஸ்ட் கொடுத்திருப்பது நித்யானந்தா சுவாமி. என்ன செய்ய?

=============================================================

தங்கை கல்யாணத்தப்போ கே.எஃப்.சி பக்கெட் சிக்கன் ரூ.400. இப்போ அவளுக்கு பையன் பிறந்தான், சிக்கன் ரூ.500. அவனோடு போகும்போது எவ்வளவு ஆகும்?

=============================================================

மதுரையிலிருந்து வந்த தூரத்து உறவுப்பாட்டி "ராசா" மாதிரி இருக்கணும் என்றார். அய்யய்யோ, வேண்டாம் பாட்டி என்றேன்.

=============================================================

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதுக்கு ஒரு உதாரணம் - விஜயகாந்த் டைரக்ஷனில் விருதகிரி

=============================================================

-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

13 கருத்துகள்:

 1. //சந்திராயன் எடுத்த போட்டோக்களில் நிலாவில் வடை சுட்டு விற்ற பாட்டியின் டெட்பாடி கிடைத்திருக்கிறதாம். ஆனால் காக்காவைக்காணுமாம்.
  //

  காக்காவை பாட்டி பிடிச்சி துன்னுருக்குமோ....

  பதிலளிநீக்கு
 2. தினம் தினம் சட்டையை மாத்துறீங்களே...

  // நண்பன் வந்திருக்கிறான். சாவடிக்கிறான். //

  நான் நினைத்து நினைத்து சிரித்த த்வீத் இதுதான்... பாவம் அந்த நண்பர் படித்திருந்தால் நொந்திருப்பார்...

  // இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

  தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....? //

  ஒண்ணுமே இல்லையே நண்பா...

  பதிலளிநீக்கு
 3. நல்லா நல்லா ட்வீட்ஸ் களா பொறுக்கி எடுத்துப் போட்டு இருக்கீங்க! சூப்பரா இருக்குது! வாக்குகளும் போட்டாச்சு சார்! இனி என்ன பண்ணனும்?

  பதிலளிநீக்கு
 4. //மாத்தி யோசி சொன்னது…
  நல்லா நல்லா ட்வீட்ஸ் களா பொறுக்கி எடுத்துப் போட்டு இருக்கீங்க! சூப்பரா இருக்குது! வாக்குகளும் போட்டாச்சு சார்! இனி என்ன பண்ணனும்? //

  ஒண்ணுமில்ல பாஸ்... அடுத்த பார்ட் பதிவு போடறேன்.. படிச்சுட்டு கருத்து சொல்லுங்க...

  பதிலளிநீக்கு
 5. //Madurai pandi சொன்னது…
  ஓட்டு பட்டைகள் காணோம்!! //
  சேர்த்தாச்சு. பாஸ்... . சட்டையை (டெம்ப்ளேட்) கழட்டி மாத்துனதுல பாக்கெட்ல இருந்த சில்லறையெல்லாம் (ஓட்டுப்பட்டைகள்) கொட்டிப்போச்சு.....

  பதிலளிநீக்கு
 6. //சி.பி.செந்தில்குமார் சொன்னது…
  kalakkal கலக்கல் எஸ்கா //

  நன்றி... அடுத்த பார்ட் வருது பாருங்க..

  பதிலளிநீக்கு
 7. //MANO நாஞ்சில் மனோ சொன்னது…
  வடை...//
  சாப்பிடுங்க... உளுந்த வடையா? மசால் வடையா?

  பதிலளிநீக்கு
 8. // MANO நாஞ்சில் மனோ சொன்னது…
  காக்காவை பாட்டி பிடிச்சி துன்னுருக்குமோ.... //
  பாட்டி சைவம்ங்க.......

  பதிலளிநீக்கு
 9. // Philosophy Prabhakaran சொன்னது…
  தினம் தினம் சட்டையை மாத்துறீங்களே... //

  புதுசா இருக்கணும்னு ரெண்டு தடவை மாத்திப்பார்த்தேன்...

  //பாவம் அந்த நண்பர் படித்திருந்தால் நொந்திருப்பார்... //

  அவனை பக்கத்துல வச்சிகிட்டே எழுதினது தான் இது...

  // இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?, தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....? ஒண்ணுமே இல்லையே நண்பா... //

  எல்லாத்தையும் இப்போ மறுபடி சேர்த்தாச்சு... பாருங்க...

  பதிலளிநீக்கு
 10. //லேப்பு டாப்பை மடி மேலே வைத்து வேலை செய்தால் "அது"க்கு ஆபத்தாமே.... அய்யய்யோ...//
  எந்த விதமான சூடும் "அதுக்கு" ஆபத்துதான். [கல்யாண வீடுகள் போன்ற இடங்களில் நெருப்பின் அருகில் நின்று சமைப்பது, உருக்காலைகள் போன்ற தங்களில் உலோகங்களை உருக்கும் இடங்களுக்குப் பக்கத்தில் பணி புரிவது போன்ற எல்லாமே ஆபத்துதான், சில சமயம் தெரிய வரும், சில சமயம் பாதிப்பு வரும் சமயத்தில் வாழ்க்கையில் செய்ய வேண்டியதை செய்து முடித்திருப்பார்கள், ஸோ நோ பிராப்ளம்.
  //சந்திராயன் எடுத்த போட்டோக்களில் நிலாவில் வடை சுட்டு விற்ற பாட்டியின் டெட்பாடி கிடைத்திருக்கிறதாம். ஆனால் காக்காவைக்காணுமாம்.
  // அது சரி பதினோரு தடவை சந்திரனுக்கு மனுஷன் போனப்போ, அவங்க அங்கே விட்டு வந்ததாகச் சொல்லப் படும் அமெரிக்க கொடி, கருவிகள், உபகரணங்கள், மற்றும் கார் இவை எதுவுமே சந்திராயன் கண்ணில் படவில்லையா? ஏன்னா அமேரிக்கா காரன் நிலவுக்கு மனிதனை அனுப்பியதாகச் சொல்லப் படுவதே கட்டுக் கதை என்ற வாதம் வலுவாக நிலவி வருகிறது.

  பதிலளிநீக்கு