வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

ஞாநி பெங்களூரில் - 'ஓ' - பக்கங்கள் வாசகர் வட்டம்

ஓர் அறிவிப்பு..

பெங்களூரில் இருந்து அன்பர் திரு. திருவேங்கடம் அவர்கள் அழைத்திருந்தார். இதற்கு முன்பு அறிமுகம் இல்லை.. இதுதான் முதல் முறை அவரிடம் பேசுவது...

பத்திரிகையாளர், விமர்சகர் ஞாநி பெங்களூர் வருகிறாராம்.... பெங்களூரு தமிழ்ச்சங்கம் சார்பில் அவருடன் ஒரு கலந்துரையாடலை வாசகர் வட்டம் சார்பாக ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தார்.. மேற்கொண்டு விபரங்கள் கீழே..... அவரது பதிவை அப்படியே கொடுத்துள்ளேன்..

கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திரு.திரு.வை தொடர்பு கொள்ளவும்.. அவர் பெங்களூருவில் இருக்கிறார்.. (நான் இருப்பது ஹோசூரில். எனவே) நானும் கலந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்...

அவரது பதிவைப்பார்க்க இங்கே க்ளிக்கவும்.

தமிழ் நாட்டு ஆளுமைகளில் மிக முக்கியமானவரும், அறிவுசார் கருத்துகளில் சக மனிதனுக்காக எந்த வகையிலும் சமரசம் செய்துகொள்ளாமல் தொடர்ந்து இயங்குவதில் முதன்மையானவருமான எழுத்தாளர், பத்திரிக்கையாளர், விமர்சகர் திரு.ஞாநி அவர்கள், பெங்களுருவிற்கு வருகை தருகிறார். அலுவல் நிமித்தமாக பெங்களுரு வரும் அவர், அப்படியே வாசகர்களையும் சந்தித்து (பிப்ரவரி 10 ம் தேதி) கலந்துரையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

49ஓ, விகிதாசார தேர்தல் முறை, 2011 சட்டமன்ற தேர்தல், கோலம், கேணி, தீம் தரிகிட, பரிக்ஷா, இடஒதுக்கீடு,அரசியல், சமுகம், வாழ்க்கை, என பல தளங்களில் அவரிடம் கேள்விகள் கேட்டு அளவளாவலாம். அவரை சந்திக்க விரும்பும் வாசக நண்பர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...

இடம்: பெங்களூர் தமிழ் சங்கம்.

நாள்: 10 - 02 - 11 (வியாழன்)
நேரம்: மாலை 6 மணி.

தொடர்புக்கு: thiruji@gmail.com, 09980122730
www.thirupakkangal.blogspot.com
----------------------------------
இன்ட்லி, தமிழ்மணத்தில் ஓட்டுப்போடுங்கள். இன்னும் சிலரை இந்தப்பதிவு சென்றடையட்டும்... கலந்துரையாடலுக்கு ஆள் சேர்ப்போம்.. பெங்களூரு பதிவர்கள் இதை பதிவாகப்போட்டாலோ, இணைப்புக் கொடுத்தாலோ மகிழ்ச்சி....
----------------------------------

11 கருத்துகள்:

 1. தகவலுக்கு நன்றி மக்கா....
  என்ன எஸ்கா கொஞ்ச நாளா ஆளையே காணோம்....!!!??

  பதிலளிநீக்கு
 2. "அறிவுசார் கருத்துகளில் சக மனிதனுக்காக எந்த வகையிலும் சமரசம் செய்துகொள்ளாமல் தொடர்ந்து
  இயங்குவதில் முதன்மையானவருமான"

  Gook joke.

  Now Gnani is on the Italian mafia payroll

  பதிலளிநீக்கு
 3. // MANO நாஞ்சில் மனோ சொன்னது…
  என்ன எஸ்கா கொஞ்ச நாளா ஆளையே காணோம்....!!!?? //

  வேலை நிமித்தமாக கொஞ்சம் பிஸி. நிஜமாகவே நிமித்துகிறது. வேலை பெண்டு நிமித்துகிறது ஐயா... முடியலை... ரெண்டு நாள் பெங்களூரு.. ஒரு நாள் ஹோசூர்.. இப்போது சென்னை ஆபீஸில் நான்கு நாட்களாக பெண்டு நிமிர்த்தப்படுகிறது.

  பதிலளிநீக்கு
 4. // பெயரில்லா சொன்னது…
  Gook joke.
  Now Gnani is on the Italian mafia payroll //

  எது சொல்வதாக இருந்தாலும் சொந்தப்பெயரில் வந்து சொல்லுங்கள்.. பெயரில்லா பெரியசாமியாக வந்து துப்பிவிட்டுப்போக இது ஒன்றும் குப்பைத்தொட்டி அல்ல....

  பதிலளிநீக்கு
 5. நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும்.
  http://blogintamil.blogspot.com/2011/02/2-thursday-in-valaichcharam-rahim.html

  பதிலளிநீக்கு
 6. அன்புக்கு நன்றி கஸாலி.... வேலைப்பளு காரணமாக நீண்ட நாட்களாக பதிவுகள் எழுதவே மனம் ஒத்துழைக்க மறுக்கிறது... ஆனால் தங்கள் அன்பு மீண்டும் எழுத வேண்டும் என்ற ஆவலைத்தூண்டுகிறது... மீண்டும் நன்றி....

  பதிலளிநீக்கு
 7. அன்பின் எஸ்கா - ஞானியுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டீர்களா - இடுகை இடவில்லையா ? - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 8. // jayakumar சொன்னது…
  good post ....thank you //

  நன்றி... வருகைக்கும் சேர்த்து...

  பதிலளிநீக்கு
 9. // cheena (சீனா) சொன்னது…
  அன்பின் எஸ்கா - ஞானியுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டீர்களா - இடுகை இடவில்லையா ? - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா //

  இல்லை நண்பரே.... கடமை அழைத்தது... சென்று விட்டேன்... கிருஷ்ணகிரி கலெக்டர் கலந்து கொண்ட ஒரு விழாவில் பேச ஒரு வாய்ப்பு கிடைத்தது... ஆகவே ஞாநி கேன்சல்....

  பதிலளிநீக்கு
 10. உங்களைப் பற்றி இங்கே சில வரிகள் எழுதியிருக்கிறேன்...

  http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_2005.html

  பதிலளிநீக்கு