திங்கள், 28 பிப்ரவரி, 2011

காலேஜில் புரொபஸரை கவிழ்ப்பது / ஏமாற்றுவது எப்படி? - அசத்தல் ஐடியாக்கள்*


1. உங்கள் புரொபஸர் பக்திப் பழமாக இருக்கும் பட்சத்தில் முக்கிய பண்டிகை, விரத தினங்களில் லீவைப்போடுங்கள். நீங்கள் லீவ் போட்டதை அவருக்கு தெரியப் பண்ணிவிட்டு மறுநாள் பிரசாதத்தோடு டிபார்ட்மெண்டுக்குப் போய் நில்லுங்கள். (கந்தனுக்கு அரோகரா.. புரொபஸருக்கு அரோகரா)

2. புரொபஸர் பயன்படுத்தும் பொருட்களின் பிராண்டுகளைப் பற்றிய அப்டேட்டட் விபரங்களைச் சேகரியுங்கள். எக்ஸ்க்ளூஸிவ் ஷாப்புகளைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது அவரிடம் விபரங்களை அள்ளி விடுங்கள். (இன்பர்மேஷன் ஈஸ் வெல்த்)

3. புரொபஸர் பின்னாடியே சுத்தும் மாணவக் காக்காக்கள் உங்கள் கண்ணில் படும்போது புரொபஸரைப் பற்றி ஆகா ஓஹோ என்று பொளந்து கட்டுங்கள். தகவல் எஸ்.எம்.எஸ்ஸில் உடனே பறக்கும். (ட்விட்டரேய்....)

4. எப்பேர்ப்பட்ட கொம்பன்(ள்) ஆக இருந்தாலும் உங்கள் புரொபஸருக்கு ஒரு வீக்னஸ் கட்டாயம் இருக்கும். அதைக் கண்டு பிடித்துத் தட்டுங்கள். (ஐஸ்.. ஐஸ்..)
5. அப்படி என்ன செய்தும் மசியவில்லையென்றால் "எப்படி சார் / மேடம் எந்த புகழ்ச்சிக்கும் மயங்க மாட்டேங்கிறீங்க?" என்று கேட்டுப்பாருங்கள். பார்ட்டி டமால்தான். (ஐஸ்.. ஐஸ்.. ஐஸ்.. ஐஸ்.. ஐஸ்.. ஐஸ்..)

6. புரொபஸர் எப்படியும் புது கம்ப்யூட்டர் / லேப்டாப் வாங்க முயற்சிப்பார். விபரம் தெரிந்து கொள்ள தன் கெளரவம் கெடுக்காத ஆள் தேடுவார். கபாலென்று அமுக்குங்கள். கமிஷன் பார்க்காமல் காரியம் முடித்தால் கை மேல் பலன். (டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் வெரி மச்)

7. கம்ப்யூட்டர் / லேப்டாப் வாங்கியவர் நெட் கனெக்ஷன் குடுக்காமலா இருப்பார்? பெரிய பெட் ஷீட்டாகப் போட்டு அமுக்குங்கள். ஃபேஸ்புக், ஆர்குட் சொல்லிக் கொடுங்கள், ப்ளாக் ஆரம்பித்து எழுத கற்றுக்கொடுங்கள். இன்டர்னல் எக்ஸாமுக்குப் போகவே தேவையில்லை. (டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் வெரி வெரி வெரி மச்)

8. டாரெண்டில் புதுப்படங்கள் டவுன்லோட் செய்வீர்கள் அல்லவா? (இல்லையென்று பொய் சொல்லாதீர்கள்) பென் டிரைவில் ஒரு காப்பியைப் போட்டு புரொபஸரிடம் கொடுங்கள். குடும்பத்துடன் பார்த்து கும்மியடிக்கட்டும். (இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக...)

9. பார்ட்டியைக் கவிழ்க்க உங்கள் சீனியர்ஸ் பயன்படுத்திய பழைய பார்முலாக்களை கேட்டு வாங்கி ரீ யூஸ் பண்ணுங்கள். தப்பே இல்லை. ஓல்டு ஈஸ் கோல்டு. நமக்கு அவுட்புட் தான் முக்கியம். (ரீ மிக்ஸ்)

10. எவ்வளவோ செலவு செய்கிறோம். நம்ம புரபஸர் தானே. பண்டிகை பர்த்டேக்களில் ஒரு செட் டிரஸ் எடுத்துக்கொடுத்து சர்ப்ரைஸ் ஷாக் கொடுங்கள். சீப் ரேட்டில் எடுத்து ஸ்டிக்கர் & கவர் மாற்றித் தருவது உங்கள் சாமர்த்தியம். (ஏ... என்னைப் பெத்த ராசா..)

11. வாத்திக்கு வீட்டிலிருந்து டிபன் பாக்ஸ் வாங்கி வருவது, அவரது பெண்ணுக்கு இக்லூ ஒட்டித் தருவது, ப்ளஸ் டூ படிக்கும் மேம் பையனுக்கு சயின்ஸ் ரெக்கார்ட் எழுதித்தருவது, புக் எழுதும் புரொபஸருக்கு லைப்ரரியில் ரெஃபரன்ஸ் எடுத்துத் தருவது போன்ற டேஞ்சர் டெரர் மேட்டர்களை டீல் செய்வதெல்லாம் பழைய டெக்னிக்காக இருந்தாலும் எப்போதும் நன்மையே பயக்கும்.

12. தவிர்க்க முடியாமல் கேன்டீனில் புரொபஸர் எதிர்ப்பட்டு விட்டால் உங்கள் காசில் டோக்கன் வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டும். ஆனால் ஜாக்கிரதை.. அவருக்கு பிடிக்காத உணவைத் தவறியும் வாங்கிக் கொடுத்து விடக்கூடாது.

13. கேம்பஸூக்குள் நடமாடும் போது புரொபஸர் கண்ணில் படும் இடத்திலெல்லாம் கையில் பாடப்புத்தகம் (முக்கியமாக அவரது சப்ஜெக்ட்) இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

14. பாடத்தில் அடிக்கடி சந்தேகம் கேட்க வேண்டும். ஆனால் அது தொணதொணப்பாக மாறிவிடக்கூடாது. மேலும் முதல் நாள் கிளாஸ் டெஸ்ட் ஏதாவது சொல்லியிருந்தால் மறுநாள் காலையில் வந்தவுடன் அவருக்கு நினைவுபடுத்தலாம்

(இதனால் மற்ற மாணவர்களிடம் உங்கள் முதுகு பழுக்கும் அபாயம் இருக்கிறது)

15. புரொபஸர் லேட்டஸ்ட் மாடல் மொபைல் வைத்திருந்தால் சினிமா, சாமி பாடல்கள், ஈ.புக் ஆகியவை டவுன்லோட் செய்து தரலாம். பழைய மாடலாக இருந்தால் ஜி.பி.ஆர்.எஸ், வைஃபை, எஃப்.எம், எம்.பி3. எம்.பி4, டூயல் சிம், 8 ஜி.பி மெமரி கார்டு போன்ற வசதிகள் கொண்ட புதிய மாடலை பரிந்துரைத்து எப்படியாவது வாங்க வைத்துவிடுங்கள். அதை அவர் யூஸ் பண்ணிவிட்டு டவுட் கேட்க உங்களிடம் தானே வர வேண்டும்?

16. லீவு நாட்களில் போய் டவுட் கேட்பது, முதல் பெஞ்சைப் பிடித்துக் கொண்டு புரொபஸரிடம் கடலை போடுவது போன்ற ஐடியாக்களெல்லாம் காலம் காலமாக கடவுள் கோஷ்டி மாணவர்கள் செய்பவை. முடிந்தால் முயற்சிக்கவும்.

(ஆனால் இதை அமல் படுத்தும் பட்சத்தில் உண்மையிலேயே பாடங்களை நீங்கள் படிக்க வைக்கப்படும் பேரபாயம் இருக்கிறது)

17. இன்டர்னல் / லேப் வகுப்புகள் உள்ள மாணவ மணிகள், இன்டர்னல் இல்லாத மாணவக்கொழுந்துகளை விட்டு புரொபஸர்களை பழிவாங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது கூடவே கூடாது. அது மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். இதுபோன்ற சம்பவங்களில் முந்தைய வருடங்களில் ஈடுபட்டு பாதிக்கப் பட்டவர்களின் விபரங்களை அறிந்து கொள்ளல் உசிதம்.

18. இத்தகைய ஆர்ட்ஸ் குரூப்புக்கு அப்ளிகபிள் ஆகாது (எவனாயிருந்தா எனக்கென்ன?). இம் மாதிரியான வரலாற்றுச்சிறப்பு மிக்க ஐடியாக்களை உற்பத்தி செய்து அமல் படுத்த வேண்டியது இன்டர்னல் / லேப் உள்ள மாணவக்கண்மணிகள் மட்டுமே.

19. ஐடியாக்களை மட்டுமே நம்பி படித்துத் தொலைக்காமல் இருப்பது மிஸ்டர்.X படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் எடுப்பதற்குச் சமம். (ஊ... ஊ...) காலேஜில் மட்டுமே இவை நன்மை பயக்கும். யுனிவர்சிட்டி எக்ஸாமில் இவை உதவாது. உங்கள் புரொபஸர் வந்து பேப்பர் திருத்தவோ, பிட்டுக்கு ஹெல்ப் செய்யவோ போவதில்லை. (சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது)

20. புரொபஸருடைய பிறந்த நாள் தான் உங்கள் பிறந்த நாள் என்று ஒரு பெரிய பிட்டாகப் போடுங்கள். சென்டிமெண்டாக அட்டாச் ஆகி விடலாம். ஆனால் உங்கள் பர்த் சர்டிபிகேட் டிபார்ட்மெண்டில்தான் இருக்கும். அதை அவர் வெரிஃபை செய்யும் பட்சத்தில் எஸ்கேப் ஆக பொருத்தமான பதில் ரெடியாக இருக்க வேண்டும்.

குறிப்பு: மேற்குறிப்பிட்ட அனைத்தும் மாணவர்களுக்கான ஐடியாக்கள் மட்டுமே... புரொபஸர்கள் இவற்றை படிக்காமல் தவிர்ப்பது உடல் / மன நலத்திற்கு நல்லது. மீறிப்படிக்கும் புரொபஸர்களுக்கு - "பீ கேர்ஃபுல்......என்னச் சொன்னேன்..." (ஏ டண்டணக்கா.. ஏ டமுக்கு டக்கா)

ஏமாற்றும் மாணவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்ற ஐடியாக்கள் (புரொபஸர்களின் வேண்டுகோளுக்கிணங்க) தனியாக வெளிவரும். விரைவில் எதிர்பாருங்கள்.

-----------------------------------------

(*கன்டிசன்ஸ் அப்ளை. ஐடியாஸ் ஆர் சப்ஜெக்ட் டு மார்க்கெட் ரிஸ்க்ஸ். ப்ளீஸ் ரீட் தி
ஆஃபர் டாகுமெண்ட் பிஃபோர் அப்ளையிங். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை)

-----------------------------------------

ஆச்சா... படிச்சாச்சா... அப்புறம் என்ன? வழக்கம் போல இன்ட்லியிலும், தமிழ்மணத்திலும் ஓட்டு தான்... கொஞ்சம் போட்டுடுங்களேன்... என்ன? முடிஞ்சா நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்க....

-----------------------------------------

16 கருத்துகள்:

 1. என்ன எஸ்கா..ரொம்பநாளைக்கு அப்புறம் ஒரு பதிவு போட்டுருக்கிறீர் போல....இன்னைக்கு நாந்தாப்பா முதல் ஆளு....

  பதிலளிநீக்கு
 2. நீங்க யூத்து தான் நம்பறோம்.. எழுத்துல தெரியுது...பதிவுலகில் பர்சனாலிட்டியா இருக்கறது நீங்களும் ,கோகுலத்தில் சூரியன் வெங்கட்டும் அப்படின்னு ஒரு கிசு கிசு உலாவுதே அது உண்மையா/ ?( ஹி ஹி அந்த கிசு கிசுவை கிளப்பி விட்டதே நான் தான் )

  பதிலளிநீக்கு
 3. // ரஹீம் கஸாலி சொன்னது…
  என்ன எஸ்கா..ரொம்பநாளைக்கு அப்புறம் ஒரு பதிவு போட்டுருக்கிறீர் போல....இன்னைக்கு நாந்தாப்பா முதல் ஆளு.... //

  ஆமாங்க.. ஆனா இது கூட இப்போ எழுதின பதிவு இல்லை... ரொம்பப்பழசு.. யூத்ஃபுல் விகடன்ல வெளியானது..

  பதிலளிநீக்கு
 4. // சி.பி.செந்தில்குமார் சொன்னது…
  முத கட் //

  வட போச்சே செந்தில்... கஸாலி (ஃப்ரம் ரஹீம்) தட்டிட்டாரு வடைய....

  // ஹா ஹா செம காமெடி நண்பா... //

  ஹலோ... உண்மையா சொல்றீங்களா? நக்கல்ஸ் ஆஃப் இண்டியாவா? என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே....?

  // நீங்க யூத்து தான் நம்பறோம்.. எழுத்துல தெரியுது... //

  நான் நெஜமாவே யூத்து தாங்க.. நம்புங்க....

  அய்யோ நான் யூத்துங்க...

  அய்யய்யோ நான் யூத்து தாங்க...

  //பதிவுலகில் பர்சனாலிட்டியா இருக்கறது நீங்களும் ,கோகுலத்தில் சூரியன் வெங்கட்டும் அப்படின்னு ஒரு கிசு கிசு உலாவுதே அது உண்மையா/ /

  அழகாயிருந்தாலே இப்படித்தான்.. ஐ டோன்னோ ஒய்... ஆல் கேள்ல் ஆர் பாலோயிங் மை... ஹெ ஹெ.. உண்மையை என்னைக்கும் மறைக்க முடியாது...

  //( ஹி ஹி அந்த கிசு கிசுவை கிளப்பி விட்டதே நான் தான் ) //

  இதுக்கு ஸ்பெஷல் நன்றி..

  பதிலளிநீக்கு
 5. எனக்கு தெரியாம யூத்புல் விகடனில் எப்ப போட்டீங்க இந்த பதிவ....அங்கே நான் படிக்கவில்லையே

  எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
  கலைஞரின் பேச்சும் எடக்கு மடக்கான எனது கேள்விகளும்

  பதிலளிநீக்கு
 6. கல்லூரி இளசுகளுக்கு பயனுள்ள குறிப்புகள்

  இதை பாடத்திட்டமாக அறிவிக்க உத்தரவிடுகிறேன்

  பதிலளிநீக்கு
 7. // VELU.G சொன்னது…
  கல்லூரி இளசுகளுக்கு பயனுள்ள குறிப்புகள் //

  நீங்க எப்படி? கல்லூரியா?

  // இதை பாடத்திட்டமாக அறிவிக்க உத்தரவிடுகிறேன் //

  அறிவிச்சுட்டா போச்சு.. என்ன இப்ப? காசா? பணமா?

  பதிலளிநீக்கு
 8. இப்ப தெரியுது... இம்புட்டு படிப்ப நீ எப்படி படிச்சேன்னு..?!

  பதிலளிநீக்கு
 9. // ரஹீம் கஸாலி சொன்னது…
  எனக்கு தெரியாம யூத்புல் விகடனில் எப்ப போட்டீங்க இந்த பதிவ....அங்கே நான் படிக்கவில்லையே //

  கஸாலி... ஒரு வருடம் முன்பு என்று நினைக்கிறேன்.. யூத்ஃபுல் விகடன் மின்னிதழ் ஒன்றை வெளியிட்டது. ரெகுலராக யூத்ஃபுல் விகடனில் எழுதிக்கொண்டிருந்தவர்களுக்கு, அந்த மின்னிதழுக்கு படைப்புகள் அனுப்பச்சொல்லி மெயிலியிருந்தார்கள்.. என் பங்குக்கு நான் இதை அனுப்பினேன். அந்த மின்னிதழில் வெளிவந்தது தான் இது...

  பதிலளிநீக்கு
 10. // சேலம் தேவா சொன்னது…
  இப்ப தெரியுது... இம்புட்டு படிப்ப நீ எப்படி படிச்சேன்னு..?! //

  எம்புட்டு படிப்ப படிச்சாய்ங்க.. போடா டேய்.. தொழிலதிபரே..

  ஆக்சுவலி இதெல்லாம் நான் வாத்தியா கொஞ்ச நாள் சுத்திகிட்டிருந்தேன்ல... அப்போ யோசிச்சது..... ஆனா எவனும் எனக்கு இந்த மாதிரி ஐஸ் வைக்கல.. ஏன்னா நான் இங்கிலீஷ் டிபார்ட்மெண்டாச்சே... நோ ப்ராக்டிகல்ஸ்...

  பதிலளிநீக்கு
 11. உங்கள் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
  http://blogintamil.blogspot.com/2011/03/2_15.html

  பதிலளிநீக்கு
 12. // இராஜராஜேஸ்வரி சொன்னது…
  (இன்பர்மேஷன் ஈஸ் வெல்த்)
  good information.! //

  நன்றி..

  பதிலளிநீக்கு
 13. // எஸ்.கே சொன்னது…
  உங்கள் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி! //

  அன்புக்கும், ஆதரவுக்கும், வருகைக்கும், அறிமுகத்திற்கும் கோடானு கோடி நன்றிகள் எஸ்.கே.... சென்று பார்த்தேன்...

  இதற்கு முன்பாக ரஹீம் கஸாலியும், ஃபிலாஸபி பிரபாகரனும் என்னுடைய சில பதிவுகளை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்..

  பதிலளிநீக்கு