புதன், 30 மார்ச், 2011

கலவை சாதம் (30 மார்ச் 2011)

கிரிக்கெட் சீஸன் அல்லவா? கிரிக்கெட் பற்றியே கொஞ்சம்....

வினவு ப்ளாக்கில் வந்திருந்த சமீபத்திய கட்டுரையின் இந்த வரிகள் எனக்குப் பிடித்திருந்தன...

தேசம் என்பது அங்கு வாழும் மக்களை குறிக்கும். அந்த மக்களது வாழ்க்கை நலனுக்காக செய்யும் நடவடிக்கைகளே தேசபக்தியோடு தொடர்புடையவை. காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, குஜராத்தில் முசுலீம் மக்கள் வேட்டையாடப்பட்டது, தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படுவது, விவசாயிகள் தற்கொலை இதற்கெல்லாம் ஏதாவது சிறு துரும்பையாவது செய்தீர்களென்றால் அது தேசபக்தி எனலாம். அப்படி எதுவும் செய்யாமல் டி.வியை பார்த்து ஐந்தாம் ஜார்ஜ் மன்னனை வாழ்த்தி எழுதப்பட்ட ஜனகனமனவை எழுந்து நின்று பாடி, பின்னர் உருளை சிப்சை விழுங்கி, பெப்சியை அருந்திக் கொண்டு டெண்டுல்கர் பாடில் ஸ்வீப் அடிப்பதை சிலாகித்தால் அது தேசபக்தியா? இல்லை இதுதான் தேசத்துரோகம்.

இந்தியா பாக் இரண்டு நாடுகளின் மேட்டுக்குடி சூதாடிகள் மொகலியில் நடைபெற இருக்கும் ஆட்டத்தை வைத்து பத்தாயிரம் கோடிக்கு சூதாடப் போவதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அப்பாவி இரசிகர்களோ தமது நாடு வெல்லப் போவதை எண்ணி காத்திருக்கிறார்கள். விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் இப்படி ஒரு போலி தேசபக்தி சண்டைக்கு என்ன அவசியம் இருக்கிறது?

---------------------------

எனக்கு வந்த ஒரு எஸ்.எம்.எஸ்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் செமி ஃபைனல்ஸ் வந்த டீம்கள்..
குரூப் ஏ - யில் இருந்து பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை...
குரூப் பி - யில் இருந்து இந்தியா (மட்டும்).
கண்ணா... பன்னிங்க தான் கூட்டமா வரும்... சிங்கம் சிங்கிளா தான் வரும்...

---------------------------

சரசரவென இன்னோரு ஒரு வதந்தி பரவிக்கொண்டிருந்தது இன்று மதியம்... இன்று இந்தியா பாகிஸ்தான் டீம்கள் செமி ஃபைனலில் சந்திப்பதால் அந்த மேட்சை பார்க்க இன்று எல்லா கம்பெனிகளும் குறிப்பாக ஐ.டி கம்பெனிகளுக்கு இன்று மதியம் அரை நாள் விடுமுறை என்று ஒரே பரபரப்பு. எனக்கும் கூட மெயில்களும், எஸ்.எம்.எஸ்களும் வந்தன.. காலையில் எழுந்திருக்கும் போதே பக்கத்தாத்து மாமாவும், எதுத்தாத்து மாமாவும் பேசிண்டிருந்தா... எனக்கு ஒரே காமெடியாக இருந்தது.. வந்து லேப்டாப்பை ஆன்செய்தால் எனக்கும் ஒரு மெயில் வித் அட்டாச்மெண்ட்.. அட்டாச்மெண்ட்டை ஓப்பன் செய்தால் தான் காமெடியே.... நீங்களே பாருங்களேன்...----------------------------------------

ஆச்சா... படிச்சாச்சா... அப்புறம் என்ன? வழக்கம் போல இன்ட்லியிலும், தமிழ்மணத்திலும் ஓட்டு தான்... கொஞ்சம் போட்டுடுங்களேன்... என்ன? முடிஞ்சா நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்க....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக