ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

த்ரீ இடியட்ஸ் – தமிழ் "நண்பன்" – யார் இடியட்ஸ்? சில கேள்விகள், சில ஐடியாக்கள்..

த்ரீ இடியட்ஸ் படம் பார்த்தேன், இது நாலாவது முறை.. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்.. நாவலையும் ஒருமுறை படித்தாயிற்று. முழுக்க முழுக்க நாவலை படமாக்கவில்லை என்றாலும் படத்தின் அடிநாதமாக ஓடும் கதை சேதன் பகத்தின் "ஃபை பாயிண்ட் சம் ஓன்" ஐத் தழுவியதே.. த்ரீ இடியட்ஸ் கூடவே ஹிந்தி கஜினியும் பார்த்தவர்கள் கண்டிப்பாக ஆமிருக்கு ரசிகர்கள் ஆவது உறுதி.. அப்படி ஆகவில்லை என்றால் தாரே ஸமீன் பர்-ஐயும் பார்க்கவும். மூன்றுமே மொழி அறிவு தேவைப்படாத படங்கள்..

த்ரீ இடியட்ஸ் படம் - ராஜூ ரஸ்தோகி (ஷர்மான் ஜோஷி - ஜீவா), ரான்ச்சோட் தாஸ் ஷ்யாமல்தாஸ் சான்ச்சட் (எ) ரான்ச்சோ (எ) ஃபுன்ஸூக் வாங்க்டு (ஆமிர் கான் - டாக்டர் விஜய்), பியா (கரீனா கபூர் - இலியானா குரூஸ்), சதுர் ராமலிங்கம் (ஓமி வைத்யா -எஸ்.ஜே.சூர்யா), ஃபர்ஹான் குரேஷி (மாதவன் - ஸ்ரீகாந்த்), வீரு ஷகஸ்த்ரபுத்தே (எ) வைரஸ் (போமன் இரானி - சத்யராஜ்) ஆகியோரை சுற்றிச் சுழழும் கதை.
தமிழில் செய்வது என்று பேச்சு வந்த போதே மாதவன் கேரக்டருக்கு முதலில் மாதவனே கேட்கப்பட்டு மறுத்து விட்டார்.. அதன் பின் ஸ்ரீகாந்த் என முடிவாகியதாம்.. ஹீரோவாக டாகுடரு விஜய், பின் சூர்யா, ஆனால் சூர்யா ஏழாம் அறிவில் பிஸியான பிறகு மறுபடி டாகுடரு விஜய். அதன் பிறகே மற்றவர்கள் முடிவாகியிருக்கிறார்கள்.. ஆனால் அந்த அயர்ன் மேன், ஸாரி, அயர்ன் பாய் கேரக்டருக்கு யாரு பாஸ்?? பார்க்கலாம்..

ஹிந்திப்படத்தில் பல இடங்களில் தமிழனை நக்கலடித்திருக்கிறார்கள். சரி விடுங்கள். நாம்தான் நம் படங்களில் எல்லா ஹிந்திக்காரர்களையும், குறிப்பாக சேட்டுகளை கள்ளக்கடத்தல் ஆட்களாகவே காட்டுகிறோமே... (தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள்). தானிக்கும், தீனிக்கும் சரியாப்போச்சு (தெலுங்குப் பழமொழிங்கோவ்)

"தமிழ் நண்பனை" டாகுடர் விஜய் அவர்கள் மறுத்திருப்பது சத்தியமாக ஸ்கிரிப்டுக்கு நல்லது. ஜீவா நல்ல சாய்ஸ். ஹீரோ கேரக்டருக்கு சூர்யா மிகப்பொருத்தமே.. என்றெல்லாம் எழுத நினைத்தேன்.. ஆனால் விதி வலியது.. ஹீரோ நம்ம டாக்டர் விஜய் தான் என்றான பிறகு ஒன்றும் செய்யமுடியாது.. படப்பிடிப்பும் துவங்கி பாதி முடிந்தே விட்டதாம்.. படத்தில் ஃபைட்டே கிடையாது. பாவம் விஜய்..

படத்தை பார்த்த பிறகு என்னிடம் சில கேள்விகள் மற்றும் சில சஜஷன்ஸ்.. அதாகப்பட்டது சில கருத்துக்கள் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை..

ரீமேக் படங்களில் பலரும் மிஸ் செய்யும் விஷயம் நேட்டிவிட்டி. அந்தப்படத்தில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே ஈயடிச்சான் காப்பி அடிப்பது.. நம்மூருக்கு பொருந்துமா என்று பார்ப்பதில்லை.. (உதா- யோகி படத்தில் லுங்கி கட்டிய ஹீரோயின்..) முழுப்படம் என்றால் சமீபமாக ராவணன் பக்கா உதாரணம்.. ஆனால் எனக்கென்னவோ ராவணனில் தவிர்க்க முடியாமல் தெரிந்தே அந்தத் தவறை செய்திருக்கிறார் என்று தான் தோன்றியது. கோடிகளைக்கொட்டி உருவாக்கிய செட்டுகளை தமிழுக்காக மாற்றித்திருத்திப்போட முடியாது என்று.. ஆகவே.... ஹிந்தி ராவண்-ல் செட்டாகியிருந்த நேட்டிவிட்டி தமிழில் டப்பிங் படம் பார்க்கும் உணர்வைத் தான் தந்தது.

சமீப வருடங்களாக என்.ஆர்.ஐ-களையும் உலக விருதுகளையும் குறி வைக்கும் மணிரத்னம் நேட்டிவிட்டியை, அதாவது தமிழ் நேட்டிவிட்டியை விட்டு முழுக்க விலகிவிட்டார். ஆனால் சும்மா சொல்லக்கூடாது. அவர் எங்கே தான் கற்றுக்கொண்டாரோ? அவரது ஹிந்தி நேட்டிவிட்டி பக்கா.. குரு படம் ஒன்றே போதும்.. அந்த ஊர் கலாச்சாரம், மக்கள் ஆகிவற்றை டிட்டோவாக நேட்டிவிட்டியுடன் காண்பித்திருந்தார். அதிலும் அபி-ஐஸ் கல்யாணக்காட்சியில் தண்ணீர் அலைகளை தடவியபடி எழுந்து, மெள்ள படிகளில் ஏறி, கல்யாண மேடையின் பூ அலங்கார செட்டின் மேலே தவழ்ந்து, டாப் ஆங்கிளில் அபியையும் ஐஸையும் காட்டும் ஜிம்மி ஜிப் காட்சி - அடடா, அட்டகாசம். இதற்காகவே இன்னோரு முறை மனமுவந்து அவர்கள் கல்யாணம் செய்து கொண்டிருப்பார்கள்.

சேது-வின் தெலுகு ரீமேக்கில் டாக்டர் ராஜசேகர் ஹீரோ.. காலேஜ் ஹீரோ கேரக்டருக்கு ஆள் கொஞ்சம் பார்க்க முத்தலாக இருப்பதால் ஹீரோ சில வருடங்கள் ஜெயிலில் இருந்துவிட்டு வந்தது போல லேசாக மாற்றியிருந்தார்கள். அதே போல் தெலுகு "ஆடவாரி மாடலுகு அர்த்தாலே வேறுலே" வில் வெங்கடேஷ் பத்து வருடம் வேலையில்லாதவராக வருவார்.. அதை தமிழ் "யாரடி நீ மோகினி"-யில் தனுஷ் சைஸூக்கு ஐந்து வருடமாக மாற்றியிருந்தார்கள்.

ஆகவே... இதோ டைரக்ட் (டைரக்டருக்கு என்) கேள்விகள்

ஹீரோவின் "ரான்ச்சோட் தாஸ் ஷ்யாமல்தாஸ் சான்ச்சட்"... "ஃபுன்சுக் வாங்க்டு", இவ்வளவு அழகான பெயர்களுக்கு தமிழில் மாற்று என்ன?

சதுர் ராமலிங்கம்.. உகாண்டாவில் பிறந்து வளர்ந்து, பாண்டிச்சேரியில் படித்த கேரக்டர்.. ஹிந்திப்படத்தில் தமிழன்.. அந்த கேரக்டர் தமிழில் எந்த ஊராக இருக்கும்?

படத்திலேயே பட்டையைக்கிளப்பும் ஸ்டேஜ் ஷோ-வின் "சமத்கார்", "பலாத்கார்" ஜோக்குகளை எப்படி தமிழாக்கப் போகிறார்கள்?

ஷங்கர் த்ரீ இடியட்ஸின் உயிர்நாடியான கிளைமாக்ஸ் பிரசவக்காட்சியை ஆல்ரெடி எந்திரனில் டுமீல் செய்து வைத்து விட்டார். இந்தப்படத்திற்கு அந்தக்காட்சியை என்ன செய்யப்போகிறார்? திரும்பவும் வந்தால் காப்பி அல்லது ரிபீட்டு போலத் தோன்றுமே..

கொஸ்டின் பேப்பர் திருட்டு கிட்டத்தட்ட சில திருத்தங்களுடன் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் ஏற்கனவே வந்து விட்டது.. ஸோ.....?

கிளைமாக்ஸ் லிப் டு லிப் கிஸ்ஸிங் காட்சி என்ன ஆகும்? தமிழ் படம் என்பதால் தூக்கி விடுவார்களா? அல்லது குஷி படத்தில் வந்து விட்டதே, அப்புறம் என்ன இருக்கட்டும் என்று வைத்துக்கொள்வார்களா? (ஆனால் அந்தக் காட்சி கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆமிர் தன் கனவை இரண்டு மூன்று முறை விவரிக்கும் போது கிளைமாக்ஸ் பொருத்தமாக இருக்கும்..)

ராகிங் காட்சிகள் உட்பட பல சீன்களில் ஜட்டியோடு ஹீரோக்கள் நடிப்பார்களா? சூர்யா செய்வார்.. ஜீவா கூட கன்வின்ஸ் ஆவார்.. டாகுடரு விஜய்?

ராஜூ வீட்டில் சப்பாத்தி சுட்டபடியே சோகமான அட்வைஸ் செய்யும் காட்சி இருக்கிறதே... சப்பாத்தி அவர்களது தேசிய உணவு.. அந்த பூரிக்கட்டை காமெடி??? நம்மூரில் இட்லியும், சாம்பார் சாதமும் வழக்கம்.. அந்தக் காட்சியை இட்லி சுடப்படுவது போல மாற்றுவார்களா?

வடக்கத்தி கல்யாணங்களில் மாப்பிள்ளை முகம் மூடி அமர்ந்திருப்பதே வழக்கம். இங்கே நம்ம ஊர் கல்யாணங்களில் அந்த வழக்கம் கிடையாது.. அந்த சீனில் கரீனாவை கூட்டிக்கொண்டு ஓடும் போது போமன் இரானி ஷாக்காகி பீப்பியை கையால் பொத்துவதும் ஒரு அசத்தலான பஞ்ச்.. காமெடி, சீன் க்ளோஸ், ஷாக் எல்லாவற்றையும் அந்த ஒரு பீப்பி ஷாட் உணர்த்தி விடும். ஆனால் அந்த மாதிரி பீப்பி நம்ம ஊர் கல்யாணத்தில் கிடையாது. இங்கே நாதஸ்வரம் தான்.. ஸோ.. என்ன செய்யப்போகிறார்கள்?

த்ரீ இடியட்ஸில் பத்து வருட ஃப்ளாஷ்பேக் இடைவெளி கொஞ்சம் அதிகம்.. பத்து வருடம் கழித்தும் அத்தனை பேரும் இளமையாகவே இருப்பது, பத்து வருடம் கழித்து தான் ஹீரோயின் திருமணம் செய்து கொள்கிறாள் (அதுவும் அதே மாப்பிள்ளையை) என்பதெல்லாம் லாஜிக்கை இடிக்கின்றன... அதையெல்லாம் கொஞ்சம் கவனித்து மாற்றுவார்களா?? அல்லது அந்த ஈயைப்புடிடா, அடிடா, அதே இடத்துல காப்பி அடிச்சு ஒட்டுடா-வா?

அதே போல் படத்திற்கு என்னுடைய சில கருத்துக்கள் (சஜஷன்ஸ்)

புரஃபசர் ரோலுக்கு ஷங்கரின் முதல் சாய்ஸ் பிரகாஷ் ராஜாகத்தான் இருந்திருக்கும். ஆனால் படத்தை வழக்கத்தை விட சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்று சத்யராஜை போட்டிருப்பார் என்று நினைக்கிறேன். அவரும் நல்ல சாய்ஸ் தான்.. பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு படங்களுக்குப்பிறகு நல்ல ஒரு நடிகரை பார்க்க முடிகிறது. ஆனால் கோபம் வந்தால் பல்லைக்கடித்து பேசும் டயலாக் டெலிவரி இதிலும் இருந்தால் ரொம்பக் கஷ்டம்.

ஜீவாவின் அந்த நோயாளி நோஞ்சான் அப்பா கேரக்டருக்கு என் சாய்ஸ் மனோபாலா (கனவுக்காட்சியில் ஸ்கூட்டி ஓட்டும் போது கலக்கலாக இருக்கும்). அப்புறம் ஷங்கர் சார்... அந்த அழுகாச்சி அம்மாவுக்கு கூத்துப்பட்டறை கலைராணி, தயவு செய்து வேண்டாம்... ஓவர் டிராமாவாக இருக்கும். அதற்கு பதில் "நான் மகான் அல்ல" கார்த்தியின் அம்மாவாக வருவாரே....... "யுத்தம் செய்" லக்ஷ்மி.. அவர் பொருத்தமாக இருப்பார்.

இலியானவை கல்யாணம் செய்யும் பணக்கார வாலிபன் கேரக்டருக்கு கோலங்கள் அபியின் வில்லன் பொருத்தமாக இருக்கலாம். யாரை போட்டிருப்பார்கள்...?

இசை ஹாரிஸ் ஜெயராஜ் இருந்தால் நல்லது... ஏன் ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டாம்? தேவையில்லாத ரிச்னஸைக்கொடுக்கும். தலைவர் டியூனெல்லாம் உலகத்தரத்துக்கு இருக்கும்.. வைரவாலிமுத்துக்குமாரவிஜய்களின் வரிகள் சேர்த்து படத்திற்கு தேவையில்லாத பாடல்காட்சிகள் செருகப்படும். (இந்தக்கட்டுரை மூன்று மாதங்களுக்கு முன்பு எழுதியது, படம் அறிவிப்பு வந்த போதே. அப்போது அவர்கள் இதையெல்லாம் முடிவு செய்திருக்கவில்லை)

ஷங்கர்ஜி இன்னொன்று... ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. தயவு செய்து கும்பலோ கும்பல் டான்ஸெல்லாம் மட்டும் வேண்டாம்.. வரிசையாக நின்று கொண்டு, ஒரே கலர் டிரஸ்ஸில்.. முடியல..

இவர்கள் நால்வருக்குள் பிரச்சினையும், வெறுப்பும் சவாலும் வரக்காரணமான அந்த பிளாஷ்பேக் வாட்டர் டேங்க் பேச்சுக் காட்சி உயிரோட்டத்துடன் தமிழுக்கேற்றவாறு மாற்றப்படுமா?..

கிளைமாக்ஸ் பிரசவக்காட்சியில் ஹீரோ குரூப், தேவையான உபகரணங்களைச் செய்கிறார்கள்.. அவற்றைச் செய்வதற்கான நேரம் குறைந்து அரை மணிநேரம் ஆகும். அந்த நேரத்தில் கர்ப்பிணிப்பெண் மயங்கியோ அல்லது வேறேதேனும் ஆபத்தாகி விடாதா? அல்லது அந்த நேரத்தில் கரீனாவே (இலியானாவே) ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்பி வந்து விடலாமே... அதைக்கொஞ்சம் லாஜிக்கலாக மாற்றலாம்..

அதே போல் குழந்தை பிறந்ததும் குழந்தையின் முதுகில் தேய்ப்பதற்குப் பதிலாக, குழந்தையின் கால்களைப்பிடித்து தலைகீழாக தொங்கவிட்டு (கிராமத்துப்பாட்டி வைத்திய பிரசவ முறைப்படி) முதுகில் தட்டுவது போல் காட்சியை வைக்கலாம். (ஆனால் அந்தக் காட்சி ஒரு விஜயகாந்த் படத்தில் வந்து விட்டது. பாதகமில்லை. ஒரு ஷாட் தானே, சுட்டுக்கொள்ளலாம்)

அந்த பிரசவக் காட்சியில் கர்ப்பிணியைத்தவிர வேறு பெண் கிடையாது. மேற்கண்ட ஐடியாவைச்சொல்வதற்காக ஒரு கிழவியைக் காட்சியில் நுழைத்து வைக்கலாம். கொஞ்சம் லாஜிக் கிடைக்கும். (தேனி குஞ்சாரம்மா பெஸ்ட் சாய்ஸ்.. கிடைக்காத பட்சத்தில் வடிவேலு ஜோக்குகளில் அவரைக்கலாய்க்குமே ஒரு கிழவி அது ஓக்கே)..

ஏழை வீட்டு இளைஞன் என்பதால் ஜீவாவுக்கு ஈ படத்தில் வந்தது போல கொஞ்சமாக பல் கறை சேர்க்கலாம்..

கமர்ஷியல் வேல்யூவுக்காக விஜய் தவிர மற்ற இருவருக்கும் ஹீரோயின் சேர்க்காமல் இருக்க வேண்டும்..

மேற்கண்ட ஐடியாக்கள் எல்லாம் முழுக்க முழுக்க நானே சிந்திச்சது.. மண்டபத்துல நாகேஷ் சிவாஜிகிட்ட வாங்கின மாதிரி வாங்கினது இல்லை.. இந்த திருத்தங்கள் படத்தில் உபயோகப்படுத்தப்பட்டால் நான் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன். காப்பிரைட்டெல்லாம் கிடையாது.. என்னிடம் கேட்காமலே படத்தில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்... இதைப்படிக்கும் யாரேனும் பிரபல பதிவர் அல்லது யாரேனும் அஜிஸ்டென்ட் டைரக்டர் ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துப்போய் யூனிட்டில் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

அப்புறம் இன்னொன்று.. இந்தப்படம் மட்டும் சொதப்பாமல் சொன்னபடி ஹிந்தி ஒரிஜினல் போலவே வெளிவந்து விட்டால் தளபதி விஜய்க்கு காவலனில் கிடைத்திருக்கும் ஸாஃப்ட் பாய் இமேஜ் கொஞ்சம் ஏறுவது உறுதி.. இப்படத்தின் கிளைமாக்ஸ் பிரசவக் காட்சியால்...... (தல... எங்கய்யா இருக்கீங்க? மங்காத்தா, பில்லா 2.. எல்லாம் அறிவிப்போட நிக்குதே.. எப்போ தான் வருவீங்க?)

--------------------
படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------

16 கருத்துகள்:

 1. Good joke

  Thanks
  Joseph
  Job Opportunity: Need candidates with good English knowledge and basic computer knowledge with any degree.
  Contact: Kannan: 94435-87282
  Work Location: Kanyakumari Dist.

  பதிலளிநீக்கு
 2. \\"தமிழ் நண்பனை" டாகுடர் விஜய் அவர்கள் மறுத்திருப்பது சத்தியமாக ஸ்கிரிப்டுக்கு நல்லது. ஜீவா நல்ல சாய்ஸ். ஹீரோ கேரக்டருக்கு சூர்யா மிகப்பொருத்தமே.. என்றெல்லாம் எழுத நினைத்தேன்..\\ இதைப் படிச்சதும் குழம்பிட்டேன் பாஸ், என்னடா இது விஜய் இல்லியா என்று!!

  பதிலளிநீக்கு
 3. ஹிந்தி படத்தில் வரும் நிறைய காட்சிகளை எப்படி தமிழ் படுத்தப் போகிறார் என்று கேட்டுள்ளீர்கள், அது அத்தனைக்கும் ஒரே பதில், "எவ்வளவோ பண்ணிட்டோம், இதப் பண்ண மாட்டோமா!!" [நாமே இவ்வளவு யோசிக்கும்போது ஷங்கர் இதுக்கெல்லாம் யோசிக்காமலா இருந்திருப்பார்?]

  பதிலளிநீக்கு
 4. \\சமீப வருடங்களாக என்.ஆர்.ஐ-களையும் உலக விருதுகளையும் குறி வைக்கும் மணிரத்னம் \\ என்னது உலக விருதுகளா?!! தமாஷ் பண்ணாதீங்க பாஸ். மணிரத்னத்துக்கே தெரியும் சொந்தமாகச் சிந்திக்காமல் உலக சினிமாக்களில் இருந்து கதையைத் திருடி படமெடுக்கும் வரை ஒரு போதும் உலக விருதுகளைப் பற்றி கனவிலும் நினைக்க முடியாதுன்னு!!

  பதிலளிநீக்கு
 5. \\ராகிங் காட்சிகள் உட்பட பல சீன்களில் ஜட்டியோடு ஹீரோக்கள் நடிப்பார்களா? சூர்யா செய்வார்.. ஜீவா கூட கன்வின்ஸ் ஆவார்.. டாகுடரு விஜய்? \\ அமீர்கான் ஜட்டியைக் கலட்டினாரா என்ன? அவர் தான் ரூமுக்குள் புகுந்து உச்சா போறவனுக்கு ஷாக் குடுத்து எஸ்கேப் ஆகிடுவாறே?

  பதிலளிநீக்கு
 6. \\ஷங்கர் த்ரீ இடியட்ஸின் உயிர்நாடியான கிளைமாக்ஸ் பிரசவக்காட்சியை ஆல்ரெடி எந்திரனில் டுமீல் செய்து வைத்து விட்டார். இந்தப்படத்திற்கு அந்தக்காட்சியை என்ன செய்யப்போகிறார்? திரும்பவும் வந்தால் காப்பி அல்லது ரிபீட்டு போலத் தோன்றுமே.. \\ இதுதான் ரொம்ப நாளாவே எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கும் மில்லியன் டாலர் கேள்வி, என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை!!

  பதிலளிநீக்கு
 7. \\மேற்கண்ட ஐடியாக்கள் எல்லாம் முழுக்க முழுக்க நானே சிந்திச்சது.. மண்டபத்துல நாகேஷ் சிவாஜிகிட்ட வாங்கின மாதிரி வாங்கினது இல்லை.. \\ ஹா.ஹா..ஹா... உங்களுக்கு நகைச்சுவை உணர்வு நல்லாவே இருக்கு..

  பதிலளிநீக்கு
 8. \\அப்புறம் இன்னொன்று.. இந்தப்படம் மட்டும் சொதப்பாமல் சொன்னபடி ஹிந்தி ஒரிஜினல் போலவே வெளிவந்து விட்டால் தளபதி விஜய்க்கு காவலனில் கிடைத்திருக்கும் ஸாஃப்ட் பாய் இமேஜ் கொஞ்சம் ஏறுவது உறுதி..\\ ஒரு காலத்தில் யாரோ பொம்பிளைக்கு சோப்பு போட வச்சு இவங்கப்பா இவரோட மார்கெட்டைகாப்பாத்தி இருக்காரு, அதே மாதிரி, இத்தோட மவன் காலி என்று எல்லோரும் நினைத்த போதெல்லாம் ஏதோ ஒன்னு பண்ணி தப்பிச்சு வந்திருக்காரு. இப்போ அடுத்தடுத்து அஞ்சு படம் காலி, இந்த சமயத்தில் காவலன் கொஞ்சம் நிதானத்துக்கு கொண்டாந்திடுச்சு, இப்போ இந்தப் படமும் ஓடுச்சுன்ன அடுத்த பத்து வருஷத்துக்கு இத வச்சே இவரு ஓட்டிடுவாரு.

  பதிலளிநீக்கு
 9. இப்டியே போனா ஷங்கருக்கு அஸிஸ்டென்ட் ஆகாம விட மாட்ட போலருக்கே..?! :) சூப்பர் நண்பா..உன் ஞாபகசக்தி வியக்கவைக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. நீங்களே படத்த எடுத்தடலாம்... போல...

  ஆனா, இது எதுவுமே ஒரிஜினல் அளவுக்கு வராதுனுதான் நினைக்கிறேன்.

  3 இடியட்ஸ் விட, தாரே ஜமின்பர் படத்த ரீமேக் பண்ண இதவிட நல்லா இருக்கும்...

  பதிலளிநீக்கு
 11. // Jayadev Das சொன்னது… //

  தேங்க் யூ
  தேங்க் யூ
  தேங்க் யூ
  தேங்க் யூ
  தேங்க் யூ
  தேங்க் யூ
  தேங்க் யூ
  தேங்க் யூ
  தேங்க் யூ (ஒன்பது தேங்க் யூ ஆச்சா.....? ஓக்கே. ஒன்பது பின்னூட்டங்களுக்காக)

  ரொம்ப கவனிச்சு படிச்சிருப்பீங்க போல?.. நீங்க சொல்லியிருக்கறது எல்லாமே சரிதான்..

  பதிலளிநீக்கு
 12. // JesusJoseph சொன்னது…
  Good joke

  Thanks
  Joseph //

  நன்றி.. அது என்னது குட் ஜோக்கு..

  //Job Opportunity: Need candidates with good English knowledge and basic computer knowledge with any degree.//

  ஏங்க என்னங்க இது? நீங்க விளம்பரம் குடுக்கறதுக்கு என் ப்ளாக் தான் கிடைச்சுதா?

  பதிலளிநீக்கு
 13. // சேலம் தேவா சொன்னது…

  இப்டியே போனா ஷங்கருக்கு அஸிஸ்டென்ட் ஆகாம விட மாட்ட போலருக்கே..?! :) //

  ஐ... இது நல்லா இருக்கே... உன் வாய் முகூர்த்தம் பலிக்குமா? ஆனா அதெல்லாம் சான்ஸே இல்ல.. ஏதோ சென்னைல இருந்தாலாவது ஒரு சான்ஸ் பாக்கலாம்...

  பதிலளிநீக்கு
 14. // Rajkumar சொன்னது…

  நீங்களே படத்த எடுத்தடலாம்... போல... //

  ஓ.. எடுத்துடலாமே... நீங்க தயாரிக்கிறீங்களா?

  //ஆனா, இது எதுவுமே ஒரிஜினல் அளவுக்கு வராதுனுதான் நினைக்கிறேன். //

  பாக்கலாமே... ஒரிஜினலை விட பட்டையைக்கிளப்புன ரீமேக் படங்கள்லாம் நெறையா இருக்கு...

  // 3 இடியட்ஸ் விட, தாரே ஜமின்பர் படத்த ரீமேக் பண்ண இதவிட நல்லா இருக்கும்... // இதுவும் சரி.. சொஸைட்டிக்கு ஒரு மெஸேஜ் சொன்ன மாதிரி இருக்கும்..

  பதிலளிநீக்கு
 15. // randy சொன்னது…
  nengale intha alavukku yosikkum pothu sankar yosikka mattara //

  ஹலோ... ஷங்கரை பாராட்டுறீங்களா? இல்ல என்னை நக்கல் விடுறீங்களா?

  பதிலளிநீக்கு