வியாழன், 17 அக்டோபர், 2013

ஐயா.. நான் காப்பியடிச்சுட்டேன்.


"""உங்க சொந்த ஊரு எதுங்க?
எனக்கு திருநெல்வேலி பக்கம். உங்களுக்கு?
எனக்கு திருநெல்வேலி தூரம்"""

இது சேலம் எஸ்கா (எ) எஸ்.கார்த்திகேயன் என்கிற நான் எழுதிய ஜோக்.
வெளியானது 31.05.2006 தேதியிட்ட குமுதம் இதழ் (ஸ்கேன் காப்பி இணைப்பு)"""உங்க சொந்த ஊரு எதுங்க?
எனக்கு திண்டுக்கல் பக்கம். உங்களுக்கு?
எனக்கு திண்டுக்கல் தூரம்"""

இது கொளக்குடி சரவணன் என்ற அன்பர் எழுதியது (ஸ்கேன் காப்பி இணைப்பு)
வெளியானது அதே குமுதம் இதழ். ஆனால் வெளியான தேதி என்னவோ 16.10.2013.எப்படி? நான் ஏழு வருஷம் முந்தியே ஒரு ஜோக்கை காப்பியடிச்சுட்டேன். ஐயா.. ஜாலி.. ஜாலி.. ஜாலி.. ஜாலி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக