ஞாயிறு, 12 ஜனவரி, 2014

ஏன் அஜீத் ஏன்?

கருந்தேளின் ஃபேஸ்புக் பக்கத்தில் வீரம் படம் பற்றிய ஒரு ஸ்டேட்டஸ் மெஸேஜை பார்த்தவுடன் அதற்கு நான் போட்ட கமெண்ட் இது. பெரியதாக வந்து விட்டதால் ஒரு போஸ்ட் ஆக போட்டு விட்டேன்.

கருந்தேள் ராஜேஷ் எழுதியதின் சாராம்சம் இது

(அஜீத்துக்கு மற்றுமொரு வெள்ளைமுடித் திரைப்படம்.
இந்தப்படம், ஆயிரத்தி தொளாயிரத்தி எழுபதுகளில் ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கவேண்டியது. இத்தனை வருடங்களாக கதையை விவாதித்து முன்னேற்றியிருக்கிறார்கள் போல.
ஒரு அடிப்படை மசாலா படத்துக்குத் தேவையான தக்கினியூண்டு கதை கூட படத்தில் முற்றிலுமாக இல்லை.
இந்தக் ‘கதையை’ அஜீத்திடம் எப்படி விவரித்திருப்பார்கள் என்பது கடைசிவரை புரிபடாத மர்மம்.
அஜீத்தை வைத்து எக்கச்சக்கமாக விளையாடலாம். பாவம் அஜீத். இவ்வளவு அப்பாவியாக இருக்கிறார். சிவாவுக்கு பிரியாணி செய்து பறிமாறியதாக எதிலேயோ படித்தேன்)




கீழே உள்ளது என்னுடைய பின்னூட்டம்.

இயக்கம் சிறுத்தை சிவா என்ற பெயரை பட அறிவிப்பின் போது பார்த்தபோதே நான் என் நண்பர் ஒருவரிடம் சொன்னேன் இந்தப் படம் ஃபிளாப் அல்லது செம மொக்கை கதையாக இருக்கும் என்று. ஏனென்றால் சிறுத்தை என்பது ரீமேக் படம். ரீமேக்-குக்காக வேறு மொழிப்படத்தை சீன் மாறாமல் எடுக்கும் ஒரு இயக்குனர் தன் அடுத்த படத்தை படு மொக்கையாகத் தான் இயக்குவார். பிரபுதேவா ஓர் உதாரணம். அவர் இயக்கிய "போக்கிரி" (தெலுங்கு ரீமேக்) ஹிட்டை பார்த்து விட்டு வில்லு பார்த்தவர்கள் எல்லாம் நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பார்கள். அவர் இயக்கிய சிரஞ்சீவியின் ஹிட் படமான சங்கர் தாதா ஜிந்தாபாத் கூட ரீமேக்கே. அப்புறம் வந்த எங்கேயும் காதல், வெடி ஆகிய படங்கள் எவ்ளோ பெரிய பல்புகளை ரசிகனுக்கு கொடுத்தன?

அஜீத்தின் ரசனை வேறு மாதிரி போலும். ஒரு ரசிகன் என்ற முறையில் அஜீத்துக்கு பிடிக்கும் படங்கள் நம்மைப் போன்றவர்களுக்குப்பிடிப்பதில்லை. அஜீத் ஆர்மி சோல்ஜராக நடித்த "உன்னைக்கொடு என்னைத் தருவேன்" படம் முடிந்தவுடன் படம் சூப்பர் என்று சொல்லி அதன் இயக்குனருக்கு வீடு வாங்கிக் கொடுத்தார் என்று ஒரு துணுக்குச் செய்தி வந்தது. ஆனால் படம் ரிலீஸாகி அட்டர் ஃபிளாப்.

குங்குமம் புத்தகத்தில் அஜீத் எழுதிய தொடர் ஒன்றில் ஆஹா, ஓஹோ என்று (உதவி ஆசிரியர்கள் மூலம்) பில்டப் கொடுக்கப்பட்ட ரெட் படத்தின் இயக்கம் பற்றிய கட்டுரைகளைப்படித்து விட்டு படத்திற்குப் போனால் செத்தீர்கள். அதன் இயக்குனர் சிங்கம்புலி இன்றைக்கு என்ன செய்கிறார் என்று எல்லாருக்கும் தெரியும். சிங்கம் புலி கதை எழுதிய உன்னைத் தேடி படம் ஹிட் ஆனால் நாம் சேர்ந்து படம் செய்வோம் என்று வாக்கு கொடுத்து அஜீத் ஏமாந்து போன கதை அது.

ஒரு இயக்குனரின் முதல் பட ஹிட்டை நம்பி அடுத்த படத்தை கொடுத்து அஜீத் ஏமாந்ததில் பில்லா டூ வும் ஒன்று. "உன்னைப்போல் ஒருவன்" ஹிட் படத்தை நம்பி சக்ரி டோலேட்டி-யை (அவரை எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் பப்ளிமாஸாக சின்ன வீடு படத்தில் பாக்யராஜ் காட்டியதில் ஏதேனும் குறியீடு இருக்குமோ?) பில்லா டூ இயக்கக் கொடுத்தார் அஜீத். என்னவாயிற்று? அதில் டைட்டில்ஸின் பின்னணியில் சுருக்கமாக வரும் இலங்கை பின்னணியிலான பில்லாவின் முன்கதையும், காமிக்ஸ் ஸ்டைலில் வரும் கேங் கேங் கேங்ஸ்டர் பாடலும் மட்டும் தான் தேறும். "உன்னைப்போல் ஒருவன்" படமே ஹிந்தி "எ வெட்னஸ்டே"-வின் ரீமேக். மேலும் அது லொக்கேஷன் முதல், டயலாக், ஸ்கிரீன்ப்ளே, மேக்கப் வரை கமல் என்ற ஒரு மிகப் பெரிய ஆளுமையால் பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட ரீமேக். அதில் சக்ரியின் பங்கு என்ன? வெறும் கால்ஷீட் அரேன்ஜ்மெண்ட் தான்.

இதேபோல் அஜீத் ஏமாந்த இன்னோரு பப்படம் "பரமசிவன்". சந்திரமுகியின் படா ஹிட்டுக்குப்பிறகு பி.வாசுவை நம்பி அஜீத் ஏற்ற படம். பட்டாஸ் ஹிட்டான "சந்திரமுகி" மலையாள "மணிசித்ரதாழு" வின் ரீமேக் என்று எல்லாருக்கும் தெரியும். மேலும் பி.வாசு-வின் மேஜிக்கெல்லாம் பத்து இருபது வருடங்களுக்கு முந்தைய ஆட்களிடம் தான் ஒர்க் அவுட் ஆகும். லவ் பேர்ட்ஸூக்குப் பிறகு அவர் இயக்கிய எல்லா படங்களுமே இந்தத் தலைமுறையால் நிராகரிக்கப்பட்ட ஃபிளாப்புகளே.. சின்னதம்பி, வால்டர் வெற்றிவேல் எல்லாம் போன தலைமுறை.

இது போக தனக்குப் பிடித்ததாக அஜீத் சொல்லி ரசிகர்கள் நிராகரித்த படங்கள் வரிசை மிகப்பெரியது. ஏகன், அசல், திருப்பதி, ஜனா, மகா, ஆழ்வார், ஜி, ஆஞ்சநேயா, ராஜா என எல்லா ஃபிளாப்புகளையும் தாண்டி இன்னமும் அஜீத் நிற்கிறார் என்றால் அவரிடம் என்னமோ இருக்கிறது.


பின் குறிப்பு - "மகா எப்போ வந்தது?" என்று அடுத்த கமெண்டில் கணேசன் அன்பு கேட்டிருந்தார். நான் "ஸாரி, மகா படம் டிராப் ஆகிவிட்டது. மகா பட துவக்க விழாவின் போது எழுதப்பட்ட ஒரு ரசிகர் மன்ற போர்டு பல வருடங்களாக எங்கள் வீட்டருகில் இருந்ததை பார்த்திருந்ததால் ஒரு ஃப்ளோவில் எழுதி விட்டேன்"

3 கருத்துகள்:

  1. அஜீத் ரசிகர்களின் கனிவான கவனத்திற்கு இந்தப்பதிவை கொண்டு செல்லவா நண்பா..?! ;)

    பதிலளிநீக்கு
  2. FYI: Villu - It is a remake of Hindi Film Soldier starring Bobby Deol and Preity Zinta. The film was released on 12 January 2009 to mixed reviews and was moderate at the box office. (Thanks Wiki)

    பதிலளிநீக்கு