வியாழன், 31 டிசம்பர், 2020

வரப்பெற்றேன்.....

2015 ஜனவரி 1 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

வரப்பெற்றேன்.....



போட்டியே வைக்காமல் பரிசு கொடுக்கும் பெருந்தகையாளர் திரு.
Ganeshan Guru
அவர்களுக்கும் அது போன்ற அறிவிப்புகளை தன் சுவரில் ஒட்டி இந்த வாய்ப்பை வழங்கிய நல் உள்ளம் கொண்ட திரு.
என். சொக்கன்
அவர்களுக்கும் நன்றி.
இப் புத்தக வரவினால் கிளறப்பட்ட சில எண்ணங்கள்.
1. டிசம்பர் கடைசியில் வந்திருந்தாலும் இப்புத்தகம் என்னுடைய ஜனவரி கணக்கில் வரவு. யாரென்றே தெரியாத சிலருக்கு ஒரு நல்ல புத்தகத்தை அன்பளிப்பது என்று அவர் செய்த இந்த நல்ல விஷயத்தை என் வசதிக்கு நானும் எடுத்துச் செய்யலாம் என்று தோன்றுகிறது. அதாவது சிறு விலையுள்ள புத்தகங்களை அவ்வப்போது 5 அல்லது 10 பள்ளி மாணவர்களுக்கு கொடுப்பதாக முடிவெடுத்திருக்கிறேன்.
2. இப்புத்தகம் கோவைப்புதூர் மற்றும் குனியமுத்தூர் போஸ்ட் ஆபீஸூகளுக்கிடையில் 5 நாட்களுக்கும் மேல் அல்லாடியிருக்கிறது. என் முகவரி அடித்து அடித்து மாற்றப் பட்டிருப்பதைக் கவனியுங்கள். "இது என் ஏரியா அல்ல, உன்து" என்று அவர்களும் "ஸேம் டு யூ" என்று இவர்களும் மாற்றி மாற்றி தள்ளிவிடப் பார்த்து, "சனியன், ரெஜிஸ்டர் போஸ்டு, வேற வழியில்லை, குடுத்துத் தொலைப்போம்" என்று என்னை போனில் அழைத்து வரவழைத்து கொடுத்து விட்டார்கள். மீன் டைம் எனக்கு உறவினர்கள் அனுப்பிய சாதாரண போஸ்டுகள் இரண்டு இருபது நாட்களாகியும் வரவே இல்லை. புத்தகம் நேற்று வந்தது மகிழ்ச்சி. 2014-ன் கடைசி தினம் ஒரு அடையாளமாக...



3. பொதுவாகவே அரசுத்துறைகள் மீது எனக்குக் கொஞ்சம் கோபமுண்டு. எதையெடுத்தாலும் tanken for granted ஆகவே நடந்து கொள்கிறார்கள் என்று. அவர்களின் பொறுப்பின்மையைப் பார்த்து ரொம்பவும் கோபம் வரும். எங்கேனும் எகிறலாம் என்றோ, அரசுக்கெதிரான கருத்துக்களைப் பதியலாம் என்றோ அடிக்கடி தோன்றும்.
ஆனால் என் வாழ்க்கைக்கான அடித்தளம் ஒரு அரசு உதவி பெற்ற பள்ளியிலும், ஒரு அரசுக்கல்லூரியிலும் அமைந்ததாலும், முடிந்தவரை தமிழ்நாட்டை அமைதிப்பூங்கவாகக் கொண்டு சென்று என்னைப் போன்ற ஒரு சாமானியனுக்கு அமைதியான ஒரு வாழ்க்கையை நல்குவதினாலும் (கட்சி பேதமின்றி) என்னுடைய மனம் தமிழக அரசுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதால் மூடிக்கொண்டு பொறுமையாய்ப் போய்விடுவேன். சரி, அது பற்றி பிறிதொரு சமயத்தில் பேசுவோம்....
4. புத்தகத்தின் சில அத்தியாயங்களைப் படித்தேன் இன்று. சந்தோஷ மனநிலையுடன். அதுவும் சினிமா நமக்குப் புடிச்ச சப்ஜெக்ட்டு. 2015 மகிழ்ச்சியுடன் துவங்கியிருக்கிறது.
5. என்னுள்ளும் உறங்கும் நக்கீரன் சிற்சில பிழைகளை கண்டுபிடித்துள்ளான். அதை எழுத்தாளருக்கு தனி மடலில் எழுத எண்ணம்.
6. இத்யாதி, எக்ஸெட்ரா, உபயகுசலோபரீ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக