செவ்வாய், 8 செப்டம்பர், 2015

ஹெல்மெட் இஷ்யூஸ்

வண்டி ஓட்டுகையில் விடாமல் தினமும் ஹெல்மெட் அணிகிறேன் என்கிற அனுபவத்தில் திமிரில் தான் நான் இதைச் சொல்கிறேன்.

ஹெல்மெட் அணிவது நிஜமாகவே ரொம்ப ரொம்ப சேஃப்டி. எனக்கு கண்கள் கொஞ்சம் சென்சிடிவ். மேலும் உணர்ச்சிகளும். அதாவது ஒரு நண்பருடன் பைக்கில் சென்றால் மண், குப்பை, தூசி, எரிச்சல், என எல்லாவற்றையும் அவர் உணர்வதை விட நான் அதிகமாக உணர்கிறேன். கண்களில் மண் விழுந்து அதனால் ஏற்படும் பிரச்சினைகள் ஹெல்மெட்டினால் கண்டிப்பாகக் குறையும்.

ஒருமுறை மண் துகள்கள் பட்டு நான் கண்ணை கசக்கி என் கண்களில் உள்ள ஒரு சிறு நரம்பு நசுங்கி ஒரு சொட்டு ரத்தம் (கண்ணுக்குள்) வெளிவந்து அதனால் நான் பட்ட அவஸ்தை சுமார் 20 நாட்கள். பெரிய பிரச்சினை ஏதேனும் ஆகியிருந்தால் ஆபரேஷன் அளவு ஆகியிருக்கும் என்றார் டாக்டர். ஹெல்மெட் போட்டு அதோட வைஸரை இறக்கி விட்டு வண்டி ஓட்டுங்க. அதான் எப்பவும் சேஃப்டி என்றார் அவர்.

நெகடிவ் என்று பார்த்தால் - "முடி கொட்டும்". ஹெல்மெட் போடாட்டாலும் கொட்டும். அதற்கு வயது, கெமிக்கல்ஸ், உணவு, கிளைமேட், சுற்றுப்புற தூசி, அலர்ஜி என பல காரணங்கள். ஹெல்மெட் அல்ல.

"வியர்வை உள்ளே நிறைய ஊறும்" - இது மறுக்க முடியாத உண்மை. ஆனால் வியர்வையால் முடி கொட்டுமே எனாதீர்கள். விளையாட்டில் ஆர்வம் உள்ள இளைஞர்களை ஞாயிற்றுக்கிழமை கிரவுண்டுக்குப் போய் பாருங்கள். தலையிலிருந்து வியர்வை வழிய வழிய விளையாடுவார்கள். அவர்களுக்கு முடி கொட்டுமா? "எஸ்" என்றால் அது ஹெல்மெட்டால் அல்ல. "நோ" என்றால் அப்போ ஹெல்மெட்டுக்கும் வியர்வைக்கும் சம்பந்தமே இல்லை.

ஆனால் வேலை விஷயமாகப் போகும் இடங்களில் போய்ச் சேர்ந்த பிறகு இந்த வியர்வையினால் உங்கள் ஹேர்ஸ்டைல் கண்டிப்பாக மாறி இருக்கும். கொஞ்சம் சங்கடம் தான். ஒரு ஐடியா. போகும் இடத்திற்கு கொஞ்ச தூரத்தில் நிறுத்தி ரிலாக்ஸ் செய்து கொண்டு போங்கள்.

இன்னொன்று - உங்கள் மண்டை ரொம்ப சென்ஸிடிவ் என்றால் வியர்வையால் நன்றாக அரிக்கும். அதை மட்டும் ஒன்றும் செய்ய இயலாது.

"ஹெல்மெட் வெயிட் அதிகம்" அப்டிலாம் ஒண்ணும் கிடையாது. நானும் வச்சிருக்கேன் என பேருக்கு ஹெல்மெட் வைத்திருக்கும் சிலரை எனக்குத் தெரியும். ஹெல்மெட்டை உதறினால் உள்ளிருந்து கரப்பான் பூச்சி ஓடும். அப்படி இல்லாமல் புது ஹெல்மெட்டை இன்னும் ஒரு 200 ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்து ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் பிராண்டட் ஹெல்மெட்டாக வாங்கினால் வெயிட் லெஸ் ஆகக் கிடைக்கிறது. தலையில் இருப்பதே தெரியாது.

பின்னாலும், அருகிலும் வரும் வண்டிகளின் சத்தம் கேட்கவில்லை என்பதெல்லாம் சும்மா. எனக்கு நன்றாகக் கேட்கிறது. தெளிவாகக் கேட்கிறது. ஒருவேளை கல்லு மாதிரி உள்ள பழைய ஹெல்மெட் வைத்திருப்பவர்கள் சொல்வதாக இருக்கும். ஒரு ஹெல்மெட்டில் எல்லா பக்கமும் திறப்பு இருக்கிறது. ஒளி நுழைவது தான் குறையுமே தவிர ஒலி நன்றாகவே நுழையும். டிஸ்கவரி - யில் "சயின்ஸ் ஆஃப் ஸ்டுப்பிட்" பாருங்கப்பா.

ஆனால் எல்லாவற்றையும் மீறி என்றாவது ஒருநாள் நாம் ஒரு விபத்தைச் சந்தித்து தப்பித்தால் (டச் உட், நடக்கக் கூடாது) அப்போ தெரியும் ஹெல்மெட்டின் அருமை. உசுரு பெருசா மசுரு பெருசா?


காது மிஷின் வைத்திருப்பவர்கள், கொண்டை வைத்த பூசாரிகள் போன்ற "ப்ராக்டிகல் டிஃபிகல்டீஸ்" கொண்டவர்களுக்கு ஹெல்மெட் பிரச்சினை உண்டு. அது தனியாக விவாதிக்க வேண்டிய விஷயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக