வியாழன், 10 செப்டம்பர், 2015

ரேஷன்

எங்க ரேஷன் கடை வாரம் ஒரு நாள் லீவாம். ஒரே கடையில் ரெண்டு ஏரியா பார்ப்பதால் அவர்களுக்கு மூன்று நாள், எங்களுக்கு மூன்று நாளாம். அது போக மாதக் கடைசியில் இரண்டு நாட்கள் (அவர்கள் டாகுமெண்டுகளை எடுத்துக்கொண்டு தாலுகா ஆபீஸ் போய்விடுவதால்) சப்ளை கிடையாதாம். புரூஃப் செக்கிங், புது ஸ்லிப் ஒட்டுவது போன்று ஸ்பெஷல் வேலைகள் வந்து விட்டால் அன்றும் சப்ளை கிடையாதாம். இதெல்லாம் போக மிச்சம் இருக்கும் நாட்களில் என் வேலையற்ற நாளும் மேட்ச் ஆனால் போய்ப் பொருள் வாங்கிக் கொள்ளலாமாம். அது என்னென்ன என்றால்....
.
எங்க கார்டுக்கு மண்ணெண்ணெய் கிடையாதாம். இலவச அரிசி கிடையாதாம். இலவச மிக்ஸி கிடையாதாம். இலவச கிரைண்டர் - நோ. இலவச ஃபேன் - அதுவும் நோ. ஏண்டான்னா? உங்களுது வெள்ளை கார்டு. அப்டின்னா? வெள்ளையா இருக்கும். ரைட்டு. வருஷம் தவறாத பைசா விடாம அரசாங்கத்துக்கு டேக்ஸ் கட்டுறேன். எனக்கு ஏன் தரமாட்டேங்கிறீங்க? இலட்சக் கணக்குல சம்பாதிக்கிற கட்சி ஆளுங்க ஒரே வீட்ல நாலு "அம்மா" பேன் வச்சி சுத்த உட்றானுங்க? இது என்ன நியாயம்
.
எங்க கார்டு பேரு சக்கரை கார்டாம். அதுக்கு அஞ்சு கிலோ சர்க்கரை தருவாங்களாம். எங்க வீட்டுக்கு ரெண்டு கிலோவே அதிகம். அஞ்சு கிலோ சர்க்கரையை வாங்கி நான் கேசரி கிண்டி திங்கவா? அவை போக ஒரு கிலோ உளுந்து, ஒரு கிலோ துவரை, ஒரு லிட்டர் பாமாயில் - அது குருடாயிலை விட கொடூரமா இருக்கு. அதுல எது செஞ்சாலும் கசக்குது. உளுந்து, துவரை (அதுவும் லோ க்வாலிடி பட்டை துவரை) விலை வெளி மார்க்கெட்டில் அதிகமென்பதால் இப்போதைக்கு எனக்கு என் ரேஷன் கார்டினால் பிரயோஜனமானவை அவை மட்டுமே
.
சில வங்கிகளிலும், சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிலும் ரேஷன் கார்டை இப்போது புரூஃப் ஆக ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்களாம். அப்புறம் என்ன டேஷூக்கு எனக்கு ரேஷன் கார்டு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக