வியாழன், 17 செப்டம்பர், 2009

ரிப்ளையோ ரிப்ளை

ரிப்ளையோ ரிப்ளை
-எஸ்கா

"ப்ளீஸ் கால் மீ" ன்னு பொண்ணுங்களுக்கு பசங்க மெஸேஜ் அனுப்பினா பொண்ணுங்க என்னென்ன ரிப்ளை பண்ணுவாங்க?

1) ஸாரிப்பா, நான் நல்லா தூங்கிட்டேன். (ஏந்திரி அஞ்சலி ஏந்திரி)
2) ஸாரிடா, அப்பா பக்கத்துல இருந்தாங்க அதான் கூப்பிடலை. (இல்லேன்னா மட்டும்?)
3) பேட்டரி சார்ஜ் இல்லம்மா.
4) நெட்வொர்க் ப்ராப்ளம், கால் போக மாட்டேங்குதுடா செல்லம். (அது நெட்வொர்க் ப்ராப்ளம் இல்லம்மா, பேலன்ஸ் ப்ராப்ளம்)
5) பேலன்ஸ் இல்ல, 50 ரூபீஸ் டாப் அப் போட்டு விடேன் கண்ணா. (500-ஆ போட்டியின்னா ரொம்ப சந்தோஷம்)
6) ஸாரியா, மெஸேஜ லேட்டாதான் பாத்தேன். (நாங்க பண்ணினா மட்டும் ஃபர்ஸ்ட் ரிங்குலயே எடுக்குறீங்க?)
7) படிச்சுட்டு இருந்தேன் டியர். (அம்மா அய்யேயெஸ்ஸூ)
8) இன்னைக்குன்னு பாத்து ஹலோ டியூனுக்கு காசு எடுத்துட்டாண்டா புஜ்ஜிக்குட்டி. (அவுங்க டோரா, நாம புஜ்ஜி. அதாவது கொரங்கு)
9) பேலன்ஸ் மைனஸ்ல இருக்கு ஹனி. (என்னைக்கு அது ப்ளஸ்ல இருந்துச்சு?)
10) மொபைல வீட்ல வச்சுட்டு கோயிலுக்கு போயிட்டேன்பா. (பக்திமயமான ஃபேமிலி கேர்ளாம்)
11) கஸின் வந்திருந்தாம்பா, அதான் கொஞ்சம் பிஸியா இருந்தேன் (வில்லன்ன்ன்ன்ன்......... அவன் வந்தா நீ ஏன் பிஸியாகுற?)
12) க்ளாஸ்ல இருந்தேன்டா (க்ளாஸ்ல நீங்க என்ன பண்றீங்கன்னு எங்களுக்குத் தெரியாது?)

இதத்தவிர வேற ஏதாவது ரிப்ளை வந்துதுன்னா காலைல பீக் அவர் டிராபிக்ல நடு மெளண்ட் ரோடுல நிக்க நான் தயார். (ஆனா கால் மட்டும் வரவே வராது)


எனக்கு வந்த ஒரு எஸ்.எம்.எஸ்ஸில் சில மாற்றங்கள் செய்து, சிலவற்றை புதிதாய் சேர்த்திருக்கிறேன்.

4 கருத்துகள்:

 1. இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் - I will call you after 15 minutes .. ( சரியாகப் பதினனந்து நிமிடங்கள் கழித்தும் கால் வராது,நாள் முழுதும் காத்திருந்தாலும் இதே நிலைமை தான்..)

  பதிலளிநீக்கு
 2. // kousalya சொன்னது…
  தங்கள் அனுபவமா?? //

  ஹி.. ஹி.. நோ கமெண்ட்ஸ்...

  // kousalya சொன்னது…
  இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் - I will call you after 15 minutes .. ( சரியாகப் பதினனந்து நிமிடங்கள் கழித்தும் கால் வராது,நாள் முழுதும் காத்திருந்தாலும் இதே நிலைமை தான்..) //

  அனுபவமா??

  பதிலளிநீக்கு