வியாழன், 30 செப்டம்பர், 2010

பாபர் மசூதி வழக்கும் எந்திரன் சினிமாவும்

ஒரு வழியாக புலி வருது, புலி வருது கதையாக அயோத்தி, பாபர் மசூதி - ராம் ஜன்ம பூமி வழக்கில் இன்று (செப்டம்பர் 30-ம் தேதி) தீர்ப்பு வந்தாயிற்று. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் ஏக்கர் நிலத்தை மூன்று துண்டாக கேக் மாதிரி வெட்டி ஆளுக்கொன்றாக எடுத்துக்கொள்ளச் சொல்லி விட்டார்கள். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை இந்த உத்தரவைப்பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் சுதிர் அகர்வால், தரம் வீர் சர்மா, எஸ்.யு.கான் ஆகியோர்.


சர்ச்சைக்குரிய இரண்டரை ஏக்கர் நிலத்தை மூன்றாக (எப்படி பிரிப்பாங்க?) பிரிக்க வேண்டும், ஆனால் தற்போதைக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தற்போதைய நிலை தொடரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மூன்றில் ஒரு பங்கு நிலம் பாபர் மசூதி கமிட்டியிடம் ஒப்படைக்கப்படும். மற்றொரு பகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கு தர வேண்டும். எஞ்சிய இன்னொரு பகுதி இந்து மகா சபைக்கு தரப்பட வேண்டும். நிலத்திற்கு முழு உரிமை கோரிய சன்னி மத்திய வக்பு வாரியம் மற்றும் நிர்மோகி அகாரா அமைப்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அவற்றிற்கு அல்வா தரப்பட்டது.

கூடவே சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தது உண்மைதான் என்றும் நீதிபதிகள் ஒரு பிட்டைப்போட்டிருக்கிறார்களாம். அப்போ ராமாயணம் நடந்தது உண்மைதானா? அணிலுக்குக்கோடு போட்டது அவர்தானா? பாம்பன் (?????) பாலத்தைக்கட்டியது அனுமார்தானா? என்றெல்லாம் என் மனதில் பிறந்த உப கேள்விகளுக்கு என்னிடம் பதில்கள் இல்லை. இதில் இன்னோரு முக்கியமான விஷயம் என்னவென்றால் வழக்கம் போல "மூன்று மாதத்திற்குள் மேல் முறையீடு செய்து கொள்ளலாமாம்". தீர்ப்பின் முழு விவரம் ஐயாயிரம் பக்கங்களுக்கு மேலாம். டைப் செய்யவே ஒரு மாதம் ஆகியிருக்குமே..

சுமார் அறுபது (நோட் தி பாயிண்ட்: ரஜினியின் வயது அறுபது - எப்படி லிங்க் கொடுத்தேன் பாத்தீங்களா?) வருடங்களாக இழுத்துக்கோ, பறிச்சுக்கோ என்றிருந்த இந்த வழக்கின் இந்தத்தீர்ப்புக்காக நாடே காத்திருந்தது. ஒரு வாரமாக இதோ, இதோ என்று ஊரெல்லாம் ஒரே பரபரப்பு, பந்தோபஸ்து, டாஸ்மாக்கெல்லாம் மூடிட்டாங்களாம், மசூதிங்களுக்கெல்லாம் போலீஸ் போட்டிருக்காங்களாம், இன்போஸிஸ் கம்பெனி லீவாம், இஸ்கூல் எல்லாம் அரை நாள் லீவாம், இன்டர்நெட்டை ஸ்லோ பண்ணிட்டாங்களாம், இந்தியாவுல எல்லார் போனும் ரெக்கார்ட் ஆவுதாம், பல்க் மெஸேஜ் அனுப்பக்கூடாதாம், மசூதி பத்தி மெஸேஜ் அனுப்பினா தானாவே டெலிட் ஆகிடுமாம், எந்திரன் ரிலீஸ் தள்ளிப்போயிடுச்சாம், என்றெல்லாம் பரபரப்புக்குத் திரி கிள்ளிப்போட்டிருந்தார்கள்.

இதில் ஹைலைட் (?) என்னவென்றால் இந்தத்தீர்ப்புக்காக அகில உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த அகில உலக சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டூப்பர் டமால் டுமீல் ஹிட் எந்திரன் படமே ஒரு நாள் தள்ளி வைத்து ரிலீஸ் ஆகிறது. செப்டம்பர் 30-ம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தத் தீர்ப்பு வெளியாக வேண்டியிருந்ததால் ஏதேனும் பிரச்சினை வந்தால் என்ன செய்வது, பாபா மாதிரி படம் பப்படம் ஆகிவிடக் கூடாதே என்று (பயந்து) ஒரு நாள் தள்ளி வெள்ளிக்கிழமையில் ரிலீஸ் ஆகிறது படம். ஒரு நாள் வசூல் போச்சே.


அவ்வளவு ஏன்? செப்டம்பர் 23-ம் தேதியே வெளியாக வேண்டியதாம். சென்ற வாரமே பாபர் மசூதி தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்து தள்ளிப்போனதால் ஒரு வாரம் வீணாய்ப்போச்சு. (எந்திரன் டிக்கெட் புக் பண்ணியாச்சே!!!!!. பெரிய தியேட்டரில் ஐநூறு, ஆயிரத்திற்கெல்லாம் போவதாகச் சொன்னார்கள். எனக்கு சிம்பிளாக நூறு ரூபாய் பிளாட் ரேட்டில் கிடைத்தது. அது சரி, ஊரில் உள்ள சந்து, பொந்து, இண்டு, இடுக்கு, அது தவிர பிட்டு படம் போடும் தியேட்டர்களில் எல்லாம் எந்திரன் மட்டுமே வெளியானால்?) ஒரு வாரம் லேட். ஆனால் அத்தனை தியேட்டர்களிலும் ப்ளாட் ரேட் நூறு ரூபாய் மினிமமாம். அதற்கு மேலே என்றால் நோ ப்ராப்ளமாம்.

என்ன ஒரு அநியாயம்? இந்தியாவில் ஒரு மாபெரும் வசூல் சாதனை படைக்கப்போகும், புதிய புதிய ரெக்கார்டுகளை உருவாக்கப்போகும், சன் பிக்சர்ஸ் ஷேர் விலையை உயர்த்தப்போகும், 1000 கோடி ரூபாய் வசூல் செய்யப்போகும், ஹிந்தி பட ரெக்கார்டுகளை தாண்டப்போகும், எந்திரன் (மற்றும் ரோபாட்) படத்திற்கு ஒரு வாரம் தள்ளி வைத்து இப்படி ஒரு மாபெரும் தடையா?

சரி விடுங்கள். வழக்குக்குப்போவோம். நாட்டாமையில் கவுண்டமணி அலுமினியத்தட்டை ஓரே உடையாக உடைத்து சொத்தைப்பிரி என்பது போல், மூணு பீஸாப்பிரிச்சி எடுத்துக்கோங்கப்பா என்று அயோத்தி விவகாரத்தில் சொல்லி விட்டிருக்கிறார்கள். ஆனால் பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஏதேனும் ஒரு சார்பாகத்தீர்ப்பு வந்து அதனால் பல கலவரங்கள் வருவதற்குப்பதில் இந்தத்தீர்ப்பு பரவாயில்லை. ஓரளவு வீரியம் குறைவாகத்தான் இருக்கிறது.

ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போகிறார்கள், செய்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் கசிய ஆரம்பித்து விட்டன். இந்த இடத்தில் ஒரு சாதாரண ஒரு பொது ஜனமாக “இந்தச்சண்டையில் கடந்த அறுபது வருடங்களாக சம்பந்தமே இல்லாமல் உயிர் துறந்து கொண்டிருக்கும் அப்பாவிகளுக்கு ஒரு நினைவுச்சின்னம் கட்டலாம்” என்பது எங்களின் தாழ்மையான கருத்து. அல்லது “ஒரு பள்ளிக்கூடமோ அல்லது மருத்துவமனையோ” அந்த இடத்தில் கட்ட உத்தரவிட்டிருக்கலாம்.

அல்லது இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறார் காந்தித்தாத்தா. அவருக்கு ஒரு மணி மண்டபம் (!) கட்டலாம். யார் கேள்வி கேட்கப்போகிறார்கள்? ஒரு ஆலோசனைதான். அவருக்காக இடம் ஒதுக்கினால் இந்தியா முழுக்க யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. எந்தப்பிரச்சினையும் வரப்போவதில்லை. என்னடா ரொம்ப அட்வைஸா எனாதீர்கள். நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என்பார்கள். ஆனால் பிரதமரே "இந்தத் தீர்ப்பு இறுதித்தீர்ப்பு அல்ல" என்று சொன்ன பிறகு ஒரு சின்ன தைரியம் தான்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

7 கருத்துகள்:

 1. நல்லா முடிச்சு போட்டீங்க நண்பரே... ஒன்னும் இல்லாம போயிருச்சு தீர்ப்பு

  பதிலளிநீக்கு
 2. பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை. அலுவலகங்களுக்கு அரைநாள். எல்லோரையும் திருப்தி படுத்துகிற மாதிரி இருக்க முயன்றிருக்கிறது தீர்ப்பு.

  பதிலளிநீக்கு
 3. share four thunda pirichi, raman abdulla padam eduthavangalukkum oru part kuduthirukkalam

  பதிலளிநீக்கு
 4. @ வினோ...
  ஒன்னும் இல்லாம போன வரைக்கும் நல்லதே நண்பரே.. தேவையில்லாத அசம்பாவிதங்கள் நடந்தா, நம்மளை மாதிரி அப்பாவிங்கதான் மாட்டுவோம்.. எதுக்கு???

  பதிலளிநீக்கு
 5. @ ராமலக்ஷ்மி...

  எஸ், மேடம். பெங்களூரில் இன்ஃபோஸிஸில் தான் என் நண்பி ஒருத்தி பணி புரிகிறாள். அதனால் தான் "இன்ஃபோஸிஸ் கம்பெனி லீவாம், இஸ்கூல் எல்லாம் லீவாம்" என்ற குறிப்பைச்சேர்த்தேன். முழுக்க முழுக்க சரி. எல்லோரையும் திருப்திபடுத்த முயன்றிருக்கிறார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சலசலப்புகள் எழுந்தாலும் பெரிய பிரச்சினைகள் ஒன்றும் இல்லாமல் இருப்பது நல்லதே..

  பதிலளிநீக்கு
 6. @ பெயரில்லா...

  கருத்துக்கு நன்றி நண்பரே...
  சில ஆண்டுகளுக்கு முன் இரண்டு துண்டுகளாக ஆக்கச் சொன்னார்கள். இப்போது கேஸ் முடிந்ததும் மூன்று துண்டு. எப்படியும் மேல் முறையீடு செய்யத்தான் போகிறார்கள். இன்னும் ஒரு இருபது வருடம். அப்போது இன்னோரு துண்டு பிரிந்து நாலாக ஆகும். நாம் இருவரும் சேர்ந்து ஒரு ரிட் போடலாம் வருகிறீர்களா?

  பதிலளிநீக்கு