ஞாயிறு, 27 ஜூன், 2010

திருக்கருகாவூர், திருநள்ளார் மற்றும் சனிப்பெயர்ச்சி...

-எஸ்கா

சினிமா பட பேர் மாதிரியே இருக்குல்ல? ரொம்ப முக்கியம். யோவ் அதை விடுங்கய்யா, கதைக்குப் போவோம்..


கோயிலுக்கா?. சீச்சி.. தூத்தூ.. பேப்பே.. நான் வரல.. அந்த நேரத்துக்கு மல்லாக்கப் படுத்துகிட்டு மைண்டை ஃப்ரீ பண்ணி ரெஸ்ட் எடுத்தா எவ்ளோ சொகமா இருக்கும்னு சொல்ற ஆளு நானு. கூப்புடுற ஆளு நம்ம கிட்ட பதில் பேச முடியாது. எங்கெங்கயோ நாத்திகம் பத்தியும், பெரியாரைப் பத்தியும் பிட்டு பிட்டா படிச்சதையெல்லாம் அப்போதான் எடுத்து உடுவோம். சனியனே போய்த் தொலைன்னு விட்டுடுவாங்க. ஆனா அவங்ககிட்டயே என்னைய மாட்டி உட்றா மாதிரி சனிப்பெயர்ச்சி வந்துதய்யா வசதியா. அதாவது நம்ம ராசிக்கு சனி பகவானோட பலன் சரியில்லையாம். பரிகாரம் பண்ணணுமாம்.


ஏழரைச் சனி எட்டிப்பார்க்கும். அஷ்டமச் சனி ஆட்டிப் பாக்கும்னு வீட்ல எவனோ கொளுத்திப் போட்டுட்டான். சனிப்பெயர்ச்சிக்கு ப்ரீதி (பரிகாரமாம்) பண்ணியே ஆகணும்னு ஒரே அடம் வீட்டுல. டார்ச்சர் தாங்காம தலையைச் சொறிஞ்சு கிட்டே போய் ராமகிருஷ்ணன் சார் கிட்ட "சார், மண்டே ஒருநாள் லீவு". அவுரு "ஏன் கார்த்திக் சாட்டர்டே வேற லீவு வருதுல்ல", நாம "ஆமாம், சார், அதையும் சேர்த்தா மூணு நாளு லீவு. சனிப்பெயர்ச்சி வருது அதான் நம்ம ராசிக்கு (நம்ம வாயிக்கு) ஏற்கனவே ஏழரை சனி ஊடு கட்டி அடிக்குறான். இதுல அஷ்டமச் சனி வேறயாம். வீட்ல திருநள்ளாறு போலாம்கிறாங்கன்னேன்".


யோசிச்சாரு. இங்க இத்தனாம் தேதி டிரெயினிங். அங்க அத்தனாம் தேதி டிரெயினிங்குன்னு கொஞ்சம் பீதியக் கெளப்புனாரு. அப்புறம் “நோ இஷ்ஷூஸ். யூ கோ அஹெட்” அப்டின்னாரு. யப்பா எஸ்கேப்புன்னு கெளம்பிருக்க வேண்டியது. ஆனா சந்தோஷமா வெளிய வரும் போது திடீர்னு விக்ரம் வந்தாருய்யா. அவரு ஒரு சீனியர் மேனேஜரு.


"கார்த்திக் நாளைக்கு அண்ணா நகர் பிராஞ்சுல நாம எல்லாரும் மீட் பண்றோம். வி ஆர் கோயிங் டு ப்ரிப்பேர் மெட்டீரியல்ஸ் ஃபார் டிரெய்னிங்" அப்டின்னாரு. கார்ப்பரேட் பாஷைல சொன்னா "ங்கொய்யால, நீ ப்ரிப்பேர் பண்றே மவனே! உன்னை நொங்கெடுத்து நொட்டை சொல்ற வேலை மட்டும் எங்கள்து, நான் சைட்ல உக்காந்திருப்பேன்னு அர்த்தம். பகீர்னு ஆகிப்போச்சு. அப்புறம் பாலா மேம்கிட்ட போன் பண்ணி விக்ரம் கிட்ட கொஞ்சம் சொல்லுங்கன்னு சிபாரிசு லெட்டர் வாங்கி பெனிஃபிட் ஆஃப் டவுட்டுல லீவை வாங்க வேண்டியதாப் போச்சு.


எனக்கு ஏற்கனவே மனசுல – வாங்குற சம்பளமே கம்மி. இருக்குற மார்க்கெட் க்ராஷூக்கு இன்க்ரிமெண்ட் வேற வருமான்னு தெரியல. சும்மாவே சனிய எதும் சொல்ல முடியாது. இதுல நமக்கு வீட்டு ஓனரே அந்தாளுதான். அதான்பா ராசி அதிபதி. ஆனா என்னமோ பரிகாரம் பண்ணினா புதன் ஊட்ல போய் உக்காந்துகினு நம்மள ஓரக்கண்ணால பாப்பாருன்னாங்க. அப்படியே கோயிலுக்குப் போய் நெய் தீபம் போட்டுட்டு வந்தா நெய் மெதப்புல மதமதன்னு கொஞ்சம் கண்ணசருவாரு. நாம எஸ்ஸாயிடலாம்னு சொன்னாங்க. ரைட்டு ஓக்கே வரேன்னாச்சு.


நான் தனி ஆளு தான், ஆனா தனி ஆளு இல்ல.. (நாட்ல எவனெவன் பஞ்ச் டயலாக் பேசறதுன்னே இல்ல - இல்லலல?) அதான் அப்பிடியே திருநள்ளாறு சனி, சூரியனார் கோயில், சுவாமி மலை, முடிஞ்சா கும்பகோணம் சுத்தி இருக்குற நவக்கிரக கோயிலுக்கெல்லாம் ஒரு விஸிட் போயிட்டு வரலாம்னு திடீர் பிளான். ஒரு பில்கிரிமேஜ் மாதிரி. நான் இப்போ கும்பகோணம் போகணும், தனியா. (அதைத்தானுங்க பஞ்ச் டயலாக் மாதிரி சொன்னேன்) அங்கருந்து கோவிலுக்கு.


என் பாசமலர் ஏற்கனவே கெளம்பிட்டா கோயமுத்தூர்ல இருந்து கும்பகோணத்துக்கு. நாலு நாள் முன்னாடி அதுக்கு என்னா கூத்துன்றீங்க. ஸ்டேஷன்ல போய் கியூவுல நின்னு டிக்கெட் வாங்க முடியாதாம் அவளுக்கு. கோயமுத்தூர்ல இருந்து கும்பகோணம் போறதுக்கு மக்களே மெட்ராஸ்ல இருந்து ஆன்லைன்ல புக்கிங் பண்ணணுமாம். சரியே (விதியே)ன்னு நானும் பண்ணியாச்சு. சனிக்கிழமை காலைல கெளம்பி மதியம் போறா மாதிரி ஜன சதாப்தில டிக்கெட் போட்டாச்சு.


நாங்க இங்க இருந்து ஆன்லைன் ஃபண்ட் டிரான்ஸ்ஃபர்ல டிக்கெட் புக் பண்ணுவோமாம். அதை பாவாவோட தம்பிக்கு மெயில் பண்ணுவோமாம். அவரு ஆபீஸூல பிரிண்ட் எடுப்பாராம். பாவாகிட்ட கொண்டு போயி குடுப்பாராம். அவரு கொண்டு போய் மேடத்துகிட்ட குடுப்பாங்களாம். மகாராணி நோகாம நோம்பு கும்பிடுவாங்களாம். எப்படி இருக்கு பாருங்க கதை. கேட்டா டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்டு-ங்கிறா...


ஆனா நாங்க மட்டும் லொங்கு லொங்குன்னு ஆபீஸூல வேலையை முடிச்சுட்டு கெடைக்கிற பஸ்ஸைப் புடிச்சு நைட்டு தூக்கம் கெட்டு வந்து மெட்ராஸூல இருந்து கும்பகோணம் வந்து சேரணுமாம். 200 ரூபா பஸ்ஸூ டிக்கெட்டு. உள்ள கந்தசாமி ஓடுது. அதக்குடுத்து மறுபடி கந்தசாமி பாத்துத்தொலையணுமான்னு (ஏற்கனவே மாயாஜால்ல மேனஜர் ட்ரீட்ல பாத்தாச்சு) யோசிச்சேன். தனியாத்தான போறோம். ஏன் எறநூறு குடுத்துப்போவானேன். கொஞ்சம் வெயிட் பண்லாம். கொஞ்ச நேரத்துல நூத்தைம்பது ரூவா நூத்தைம்பது ரூவான்னு வந்தான் ஒருத்தன்.


சரின்னு ஏறிட்டேன். ஆனா கந்தசாமியே பரவாயில்லைன்னு சொல்றா மாதிரி ஆகிப்போச்சு நிலைமை. இதுல ராஜாதி ராஜா. காதுல, கண்ல கம்பி உட்டுக் காய்ச்சின மாதிரி ஆகிப்போச்சு. ஒவ்வொரு டயலாக்குமே பஞ்ச் டயலாக் மாதிரி இருக்கு. விஷ்ஷூ விஷ்ஷூன்னு ரீ ரிக்கார்டிங் வேற. சீட்ட விட்டு எந்திரிக் முடியலை. எப்படிப் போக முடியும்? இருக்கறது பஸ்ஸூலயாச்சே. சவுண்டைக் கூட குறைக்காம முழுப்படமும் பாக்க வச்சாரு கண்டக்டரண்ணன்.


அந்து அவலாகி, நொந்து நூலாகி, வெந்து வீணாகி அங்க போய் இறங்குனா படை பரிவாரத்தோட மேடம் ரெடியா நிக்குறாங்க. எந்தங்கச்சி, அவ புருஷன், எங்கண்ணன், அவன் பொண்டாட்டி, அதாவது அண்ணி, அவுங்க பையன்னு சொல்லி ஒரு கும்பலே மேக்கப் போட்டுகிட்டு ரெடியாயிட்டு இருக்கு. யோவ் என்னய்யா இது? எனக்குத்தான பரிகாரம். நீங்க என்ன பண்றீங்கன்னா "நாங்களும் வரோம், குடும்பத்தோட கோயிலுக்குப் போனா புண்ணிந்தான...." -னு எம்டன் மகன் டயலாக் வேற.


எங்கக்காளுக்கு சில மாசங்களுக்கு முன்னால தான் கல்யாணம் ஆச்சி. எதெதுக்கோ கோயிலுக்குப் போறோம் (எனக்கு சனிப் பெயர்ச்சி பரிகாரம் பண்றதுதான் எதெதுக்கோ) அப்படியே இதுக்கும் (கும்பகோணம் பக்கத்துல திருக்கருகாவூர்) போயிட்டு வந்துருவோம்னு சொன்னாங்க. ஆஹா, இப்ப புரியுதா மாஸ்டர் பிளான். திருநள்ளாறா? திருக்கருகாவூரா? எது மேஜர் லொக்கேஷன்னு தெரியுதா? திருக்கருகாவூர் போனா தம்பதிகளுக்கு நல்லதாமே. சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்குமாமேன்னு ஒரு பிட்டு.


சரி, ஆனது ஆயிப்போச்சு, போகலாம்னு சொல்லி கோயிலுக்கும் போயாச்சு. முதல்ல திருநள்ளார். ஆனா அங்க போன கதையெல்லாம் வெளாவாரியா சொல்லிகிட்டு இருக்க முடியாது. புளிமூட்டை பஸ்ஸூல போனது, ஸ்பெஷல் தரிசனத்துக்கு காசு தரமாட்டேன்னு சொல்லி அனுமார் வால் கியூவுல எரியுற வெளக்கை கைல புடிச்சிகிட்டே மூணு மணி நேரம் நின்னது, செருப்பு விடுற இடத்துல பிரச்சினை பண்ணினது, அழுக்குத் தண்ணி குளத்துல குளிச்சது, அங்க என் ஜட்டி மிஸ்ஸானது, குளத்துல பழைய டிரஸ்ஸை விடப்போயி கால் ஸ்லிப்பாயி என் ஆதாரத்துக்கே சேதாரமானது, பிரசாதம் வாங்கப்போயி பிரச்சினை ஆனது, பூஜைக்குக் குடுத்த தேங்காய் அழுகியிருந்தது, பிரகாரம் சுத்தி வர்றதுக்குள்ள அம்மன் சன்னிதி க்ளோஸ் ஆனது, திரும்பி வர்றப்ப பஸ்ஸூல சீட்டு கிடைக்காம என் பாச மலரை மடியில உட்கார வச்சிகிட்டு வந்தது (நான் நாப்பத்தேழு, அவ அறுபது கிலோ), ஆட்டோ ஃபேர் மட்டுமே ஐநூறு ரூபாய் அழுததுன்னு சொல்லிகிட்டே போனா ஏ ஃபோர்ல ஏழு பேஜூ வரும், பரவாயில்லையா?


இதையெல்லாம் முடிச்சிட்டு வீடு போய்ச் சேர்ந்துட்டு மறுநாள் மறுபடியும் திருக்கருகாவூர். அங்கயும் எல்லா எடமும் போயி, எல்லா பார்மாலிட்டி பூஜையும் பண்ணி நல்லபடியா கோயில், குளம், ஆறு எல்லாம் சுத்திட்டு வந்தோமய்யா.. நல்ல வேளை அங்க எனக்கு அதிக தலைவலி இல்லை. கேஷ் ட்ரான்ஸாக்ஷன் மட்டும் தான் நான். மத்ததையெல்லாம் பாவா பாத்துகிட்டாரு. ஆனாலும் ஒரே அலைச்சல். வீட்டுக்கு வந்ததும் என்னோட புலம்பல்ஸை கேட்டுட்டு "கவலைப்படாதடா, நல்ல விஷயத்துக்ககாகதானே கோயிலுக்குப் போனீங்க. பலன் சீக்கிரமே தெரியும்"னு பெரியம்மா அட்வைஸூ வேற.


க்ளைமாக்ஸ்: ஆனாலும் கோயிலுக்குப் போயிட்டு வந்தா அதுக்கான பலன் இவ்ளோ சீக்கிரம் கிடைக்கும்னு சத்தியமா எதிர்பார்க்கலை. அரசமரத்தை சுத்திட்டு உடனே வயித்தை தடவிப் பார்க்குற மாதிரின்னு ஒரு கதை சொல்லுவாங்க. வீட்டுக்கு வந்த ரெண்டு மணி நேரத்துல மூச்சப் புடிச்சிகிட்டு பாத்ரூம் போனவன்தான்யா எங்கண்ணன். சரி சரி எங்கண்ணர்ர்ர்ர்ர்.......... ஓக்கே? வயித்தப் புடிச்சிகிட்டு எடுக்குறான்யா அப்பிடி ஒரு வாந்தி. என்னப்பா ஆச்சுன்னு அவம்பையன் கேட்க நானு "உங்கப்பனுக்கு பாப்பா பொறக்கப்போகுதுடா குட்டி, தங்கச்சி வேணுமா, தம்பி வேணுமா"ன்னு கொளுத்திப்போட்டேன். கத இங்க இப்படி ஒரு டிவிஸ்ட் ஆகும்னு நான் எதிர்பார்க்கலை. ஆக மொத்தம் சுபம். முடிஞ்சு போச்சி.


நன்றி, வணக்கம். ----------


இன்னோரு காமெடி கலக்காத க்ளைமாக்ஸ்: கோயிலுக்குப்போயிட்டு வந்த பலனோ என்னவோ எதிர்பார்த்த பலனும் கிடைச்சாச்சு. அவளுக்கு இப்போ அஞ்சு மாசம். பஞ்ச தந்திரத்துல தேவயானி சொல்ற மாதிரி "ஹே, ராம். என்னடா செஞ்சே. எனக்கு வாந்தி வாந்தியா வருது" ன்னு காமெடி பண்ணிகிட்டு இருக்கா.. (மச்சான் பேரு ராம்) . ஓக்கேவா?


இன்னோரு டெரர் க்ளைமாக்ஸ்: அதெல்லாம் சரி. இவ்ளோ பில்டப்பு குடுத்துகிட்டே போனியே, உனக்கு என்னாச்சுங்கறீங்களா? நமக்கு நல்லது நடந்துட்டா தான் உலகம் அழிஞ்சுடுமே.. நமக்குத்தான் எப்பயுமே பாலா பட கிளைமாக்ஸ்தான் எழுதி வச்சிருக்கு விதி. எல்லாம் முடிஞ்சு செவ்வாய்க்கிழமை ஆபீஸூக்கு வந்தா ரிவீட்டு (ரிவீட்டு தெரியுமா ரிவீட்டு? நோ ஆணி, ஒன் சைடு ஒன்லி. மாமு... அப்பிடியே வச்சு அடிச்சி பச்சக்குன்னு உள்ள எறக்கிறணும். வெளியில எடுக்க முடியாது) பெருசு பெருசா...


ஆபீஸுல செவ்வாய்க்கிழமை நாலஞ்சு ஹிந்தித் தலையா நடமாடிட்டு இருந்தது. என்ன நியூஸூன்னா.... மார்க்கெட் க்ராஷ், கம்பேனி டேக் ஓவர், மூணு ஜெனரல் மேனேஜர்கள் (நான் நல்ல பேரு வாங்கி வச்சிருந்த ரெண்டு பேரு உட்பட) ரிஸைன் பண்ணிட்டாங்க, ஹெட் ஆபீஸ் மும்பை போகுதாம், பழைய எம்ப்ளாயீஸை முடிஞ்ச வரை தூக்கப் போறாங்க - ன்னு ஏகப்பட்ட குட் (?) நியூஸூ. எப்ப்ப்ப்ப்பபூபூபூபூடிடிடிடி...........? என் டிபார்ட்மெண்ட் ட்ரெயினிங் டிபார்ட்மெண்ட்டு. அது? இனிமே டிரெயினிங்கை மும்பை ஆபீஸ் பாத்துக்குமாம். அப்போ நானு.. மாப்பு, இதோட உன் ரீலு ஸ்டாப்பு. கெளம்பு கெளம்பு அப்டின்னுட்டாய்ங்க. ஊஊஊஊஊஊ.... ஊஊஊஊஊ......... சனிப்பெயர்ச்சி வேலையைக் காட்டிடுச்சுல்ல...


இப்போ வேற வேலை தேடிட்டு இருக்கேன் சாமி. ஏதோ பெரியவுங்கள்லாம் ஆசீர்வாதம் பண்ணுங்க. நல்ல ஆஃபர் எதுனா இருந்தா கூட கொஞ்சம் சொல்லுங்க..


சனி பகவானே போற்றி போற்றி..
-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
-------

12 கருத்துகள்:

  1. dont worry man. definitely u will get a better job this time.

    பதிலளிநீக்கு
  2. வயிறு வலிக்குது போங்க... சிரிச்சு ...சிரிச்சு ....
    வேற நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. சூப்பர்மா... செமையா இருக்கு கதை. சொந்தக்கதையா???

    பதிலளிநீக்கு
  4. //dont worry man. definitely u will get a better job this time.// சான்ஸே இல்ல நண்பா.. என் கதையெல்லாம் முழுசா கேட்டீங்கன்னா உங்களுக்கே அழுவாச்சி வரும். எனக்கு வர்ற பிரச்சினையெல்லாம் லோக்கல் இல்ல. குளோபல் லெவல்ல அடிவாங்குற ஆளு நானு. சாவகாசமா சொல்றேன் எல்லாத்தையும்...

    - எஸ்கா

    பதிலளிநீக்கு
  5. //ரஹீம் கஸாலி சொன்னது… kalakkareenga//

    வாங்க வாங்க ரஹீம். என்னாச்சு ரொம்ப நாளா ஆளக்காணோம். மறுபடியும் கடை மாறிட்டீங்களா என்ன? யூத்ஃபுல் விகடன்லயும் உங்க கதையைக் காணோமே....

    ஆமா, போட்டோவுல இது யாரு? உங்க பையனா?

    - எஸ்கா

    பதிலளிநீக்கு
  6. //வயிறு வலிக்குது போங்க... சிரிச்சு ...சிரிச்சு ....
    வேற நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள் //

    ரொம்ப நன்றி. நாங்கள்லாம் நாகேஷ் மாதிரி. எவ்ளோ கஷ்டம் வந்தாலும் அடுத்தவங்களை சிரிக்க வைப்போம்.

    பதிலளிநீக்கு
  7. //சூப்பர்மா... செமையா இருக்கு கதை. சொந்தக்கதையா??? //

    யோவ், இன்னா நக்கலா? விடிய விடிய கதை கேட்டு சிம்புவுக்கும், நயன் தாராவுக்கும் என்ன சம்பந்தம்னு ஒரு கேள்வி???

    பதிலளிநீக்கு
  8. did u send the link to ur brother... ;)
    shall i do the honour ;)

    பதிலளிநீக்கு
  9. did u send the link to ur brother.... ;)
    shal i do the honour??? ;)

    and its really sarcastic and humorous :) keep writing :):)

    பதிலளிநீக்கு
  10. //and its really sarcastic and humorous :) keep writing :):) //

    தம்பீ... ஊருக்குள்ள கொள்ள பேரு நம்மகிட்ட கத கேட்டு காதுல ரத்தம் வர ஓடிருக்கான்... நீயெல்லாம் எம்மாத்திரம்? பேசுற பாரு பேச்சு......

    பதிலளிநீக்கு
  11. சனிபகவான் சரியா வேல பாத்திருக்காரு!!!

    பதிலளிநீக்கு