செவ்வாய், 6 ஜூலை, 2010

பட்டையைத் தட்டும் ஜேம்ஸ்பாண்ட் படங்கள்.

-எஸ்கா

ஸ்டார் மூவீஸ் (இந்தியாவின் நம்பர் ஒன் இங்கிலீஷ் மூவி சேனல்????) சேனலில் "ஜாக்கி சான் ஃபிலிம் ஃபெஸ்டிவல்" என்ற பெயரில் ஜூன் மாதம் முழுவதும் பதினோரு மணிக்கு சூப்பர் ஹிட் ஜாக்கி சான் படங்களாக வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். கிடைத்ததோ அட்டகாசமான வரவேற்பு. அந்த வரவேற்பு கிடத்த உற்சாகத்தில் "இந்த வாரம், ரம்பா வாரம்" என்பது போல இந்த மாதம் "ஜேம்ஸ்பாண்ட்" மாதம்.... என்று ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த மாதம் திங்கள் முதல் வியாழன் வரை இரவு பதினோரு மணிக்காட்சியில் தொடர்ந்து ஜேம்ஸ்பாண்ட் படங்களாக வெளியிடப்படுகின்றன. மொத்தம் 17 படங்கள். கேஸினோ ராயல் முதல் வரை தி மேன் வித் தி கோல்டன் கன் வரை வெரைட்டியான ஜேம்ஸ்பாண்ட் படங்கள் (குட்டித்) திரையிடப்படுகின்றன. சந்தோஷமாகக் கண்டு களியுங்கள்.

நான் ஒரு படம் விடுவதில்லை. வீட்டில் எல்லோரும் தூங்கினாலும் மியூட்டில் வைத்துக்கொண்டாவது எல்லா படங்களையும் பார்த்துக் கிழித்துவிட்டுத்தான் தூங்குவது. எப்படிப் புரியும் என்கிறீர்களா? அதான் சப் டைட்டில்ஸ் போடுகிறார்களே. அழகான ஆங்கிலத்தில். அப்புறம் என்ன? SDI Media என்ற கம்பெனி சப் டைட்டில்ஸை அழகாக வெளியிடுகிறது.

இன்று முதல் தேதி வாரியான படங்கள் வரிசை இங்கே.. மிஸ் பண்ணிவிடாதீர்கள்.

ஜூன் 7ம் தேதி - தி மேன் வித் தி கோல்டன் கன்

ஜூன் 8ம் தேதி - லைசென்ஸ் டு கில்

ஜூன் 12ம் தேதி - தி வேர்ல்டு ஈஸ் நாட் இனஃப்

ஜூன் 13ம் தேதி - பார் யுவர் ஐஸ் ஒன்லி

ஜூன் 14ம் தேதி - லிவ் அண்ட் லெட் டை

ஜூன் 15ம் தேதி - கோல்ட் ஃபிங்கர்

ஜூன் 19ம் தேதி - டைமண்ட்ஸ் ஆர் ஃபாரெவர்

ஜூன் 20ம் தேதி - எ வியூ டு எ கில்

ஜூன் 21ம் தேதி - யூ ஒன்லி லிவ் ட்வைஸ்

ஜூன் 22ம் தேதி - டுமாரோ நெவர் டைஸ்

ஜூன் 26ம் தேதி - டை அனதர் டே

ஜூன் 27ம் தேதி - மூன்ரேக்கர்

ஜூன் 28ம் தேதி - க்வாண்டம் ஆஃப் சோலேஸ்

ஜூன் 29ம் தேதி - ஆக்டோபுஸ்ஸி

இந்த லிஸ்ட்டு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
-------

2 கருத்துகள்:

  1. மூன்று படங்கள் முன்பே முடிந்துவிட்டதா? ஐயகோ!

    தகவல் தந்ததற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. மீதிப்படங்களையாவது மிஸ் பண்ணாமல் பார்த்துவிடுங்கள் நண்பரே. இந்தப் பின்னூட்டம் போடுகின்ற நேரத்தில் கூட "தி மேன் வித் தி கோல்டன் கன்" பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். என்ன ஒன்று... இந்த விளம்பரங்கள் தொந்திரவு தான் தாங்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு