திங்கள், 26 ஜூலை, 2010

டீம் மீட்டிங்

மூணு சிம்மு, மூணு போன் என்று எத்தனை வைத்திருந்தாலும் வரும் போன்களில் எல்லாம் கேள்விகள் தான். ஆபீஸ் கேள்விகள் போக என்னாச்சு? இரண்டு வாரங்களாக பதிவே போடவில்லையே என்று எக்ஸ்ட்ரா கேள்விகள். வரும் மெயில்களிலும் அதே கேள்விகள் தான். துபாய் முதல் மஸ்கட், குவைத் என்று முளைத்திருக்கும் புதிய நண்பர்களிடமும் இருந்து மெயில். என்னப்பா இது. சும்மா சும்மா ப்ளாக்கை ஓப்பன் செய்து பார்த்துவிட்டு ஒண்ணுமில்லை என்று திரும்பிப் போக வேண்டியிருக்கிறதே என்று.

எல்லோருக்கும் ஸாரி. கொஞ்சம் பிஸியாகி விட்டேன். ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது போடுங்கள் என்று அட்வைஸூவார்கள் பிரபல பதிவர்கள். ஆனால் என்னவோ இப்போதெல்லாம் எழுத நேரம் இல்லாமல் போகிறது. தினசரி பஸ் பயணம் மட்டுமே சுமார் நான்கு மணி நேரமாவது ஆகிறது. வேலை, வேலை என்று ஊர், ஊராக சுத்துவதால் முதுகு வலிதான் மிச்சம். என் ஆர்.எம் (ரீஜனல் மேனேஜர்), பஸ்ஸூல போகும்போது டைம் வேஸ்ட் பண்ணாதீங்க கார்த்தி, அப்படியே லேப்டாப்பை ஓப்பன் பண்ணி நெட் கனெக்ட் பண்ணி மெயில் அனுப்புங்களேன் என்பார். அதற்காகவே எந்த பஸ்ஸாக இருந்தாலும் அதில் ஓடிப்போய் முன்ஸீட் பிடிப்பது வழக்கம்.

முன்ஸீட் என்றால் எக்ஸாக்டாக முன்ஸீட் அல்ல. தனியாக கண்டக்டருக்கு என்று ஒரு ஸீட் இருக்குமே, அதற்குப்பின்னால் உள்ள இரட்டை ஸீட்டில் முன்னால் இடிக்காத ஸீட். அதில் உட்கார்ந்து கொண்டால் லேப்டாப் உபயோகிக்கும் போது இடிக்காது. வேறு ஏதாவது ஸீட்டில் உட்கார்ந்தோமோ?? போச்சு.. ஸடன் பிரேக் போட்டால் லேப்டாப் ஸ்கிரீன் அரோகரா தான். அதனால் கண்டக்டர் ஸீட்டை விட்டுவிட்டு பின் ஸீட்டில் உட்கார்ந்து கொள்வேன்.

ஆரம்பத்தில் லேப்டாப்பை ஓப்பன் செய்து மெயில் பார்க்கவோ, பிரவுஸ் செய்யவோ கூச்சமாகத்தான் இருந்தது. என்னடா இது. ரொம்ப ஸீன் போடுகிறோமோ என்று. பின்னாளில் நானே எனக்குப் பல சமாதானங்களைச் சொல்லிக்கொண்டேன். அவன் அவன் பஸ்ஸில் தம் அடிக்கிறான், சைட் அடிக்கிறான், வாந்தி எடுக்கிறான், ஈவ் டீஸிங் செய்கிறான், நாம் என்ன மெயில் தானே பார்க்கிறோம் என்று. இப்போது இந்த ஐடியா ரொம்பவும் உபயோகமாக இருக்கிறது. ஒன்றிரண்டு ஆபீஸ் வேலைகளை அப்படியே முடித்து விடலாம் பாருங்கள்.

இனிமேல் அந்த ஃபார்முலாவையே ப்ளாக் எழுதவும் அப்ளை செய்து பார்க்கலாம் என்று இருக்கிறேன். டைமிங் பிரச்சினைக்கு அது மட்டும் காரணம் அல்ல.

போன வாரம் ஒரு மீட்டிங் நடத்த வேண்டியிருந்தது. டீம் மீட்டிங் ஒன்று வைக்கலாம் என்று திட்டம். என் டீமில் 23 பசங்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில், நான்கு மாவட்டங்களில். ஒன்றாக ஒரே ஆபீஸூக்குள் இருப்பவர்களை வேலை வாங்குவதே கஷ்டம்? இப்படி சிதறிக்கிடந்தால் எப்படி மேய்ப்பது என்று யோசித்துப்பாருங்கள்? ஒவ்வொருவருக்கும் போன் செய்தாலே ஒரு மணி நேரம் ஆகும்.

மாதம் ஒருமுறை வைக்க வேண்டிய மீட்டிங் அது. கிட்டத்தட்ட மூன்றரை மாதங்கள் ஆகி விட்டன. இன்னும் ஒரு மீட்டிங் கூட வைக்கவில்லை என்றால் போச்சு. பசங்கள் ஒருத்தருக்கொருத்தர் முகம் கூடப்பார்த்ததில்லை. தனித்தனித்தீவாகத் திரிகிறார்கள். ஆகவே ஒரு மீட்டிங், கெட் டுகெதர் போல வைத்து விட்டால் நன்றாக இருக்கும் என்று யோசனை.

அதைப்பற்றி (தொடரும்......)

-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------

பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..

-------

11 கருத்துகள்:

 1. என்ன ஸார்? தொடர் பதிவா?

  பதிலளிநீக்கு
 2. வேலைதான் முக்கியம் நண்பரே. பதிவுகள் பின்புதான்... ஒட்டு பொட்டி எங்க காணோம் ???

  பதிலளிநீக்கு
 3. ஓட்டுப்பெட்டி எப்படி இணைப்பது என்று தெரியவில்லை நண்பரே..

  யாராவது கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன். (டேய்... செல்வமுரளி, ஒரு பத்து நிமிஷம் ஒதுக்கேன் எனக்காக)

  பதிலளிநீக்கு
 4. hi,

  paravallappa... valkkaila ithellam sagajam, unga RM a pottuth thallidalama?!

  பதிலளிநீக்கு
 5. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. கொஞ்சம் அரசியல், கொஞ்சம் விளையாட்டு, கொஞ்சம் சினிமா பத்தி டச் இருந்தால் நல்ல இருக்குமே

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி திரு.YuvaShanmugarajan

  இந்த வார உயிரோசையில், ஆனந்த் அண்ணாமலை எழுதத் துவங்கியிருக்கும் "தமிழ் சினிமாவில் கலை: நம் சொல்லாடல்கள்" என்ற தொடரில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள். (அடைப்புக்குறிக்குள் இருப்பவை என் கைங்கர்யம்)

  //புனைவிலக்கியம் படைக்க கற்பனையைத் தொல்லைப்படுத்த வேண்டும், சினிமாவோ (அரசியலோ, விளையாட்டோ) கண் முன் இருக்கிறது, அதனைப் பார்த்து நல்லது கெட்டது சொல்லி விட்டால் அலுங்காமல் அசையாமல் ஜோலி முடிவதுடன் அது நிறைய பேரை அடைந்து சூடான ஒரு விவாதத்தையும் சுலபமாகக் கிளப்பி விடுகிறது. //

  இது எனை நோக்கிய உங்களது கேள்விக்கான பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  //இலக்கியம், சிறுகதை, நாவல்கள், நாடகங்கள், தத்துவ விசாரங்கள் போன்றவற்றை விட சினிமா (அரசியல்) பற்றி எழுதினால் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.//

  எனக்கு அது தேவையில்லை. சும்மா பதிவு படிக்க சேரும் கூட்டம் எனது சோற்றுக்கு வழி செய்யப் போவதில்லை.

  //மொத்த மாநிலமும் கொண்டாடும் புகழ், பணம் பெற்ற இயக்குனரை/ நடிகரைத் (அரசியல்வாதியை / விளையாட்டு வீரரை) தலையில் இரண்டு தட்டு தட்டி கீழிறக்குவதன் மூலம் மனதளவில் அவரை விட உயரமான இடத்தில் தன்னைத் தானே உயர்த்தி வைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ள முடிகிறது. Ego satisfaction//

  நான் என் மூளை மழுங்காமல் இருப்பதற்காக மட்டுமே, படிக்கவும், எழுதவும் செய்கிறேன். அதீத விளம்பர வெளிச்சம் தேவையில்லையென்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி திரு.YuvaShanmugarajan

 8. நீங்கள் எது எழுதினாலும் அது நன்றாகவே அமைந்து விடும் என்று கடந்த ஒன்றரை வருடமாக நான் அறிவேன். அது போல் இந்த தொடர் பதிவும் அமைய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
  ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
  ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
  நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
  ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
  :)

  பதிலளிநீக்கு
 10. //நீங்கள் எது எழுதினாலும் அது நன்றாகவே அமைந்து விடும் என்று கடந்த ஒன்றரை வருடமாக நான் அறிவேன். அது போல் இந்த தொடர் பதிவும் அமைய வாழ்த்துக்கள். //

  ஆஹா... உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளப் படுத்தி வச்சிருக்காங்களே..... நன்றி...

  பதிலளிநீக்கு
 11. யக்கா ஸ்வேதா? யாருக்கா நீங்க? எல்லா ப்ளாக்-குலயும் போயி இந்த கமெண்டைப்போட்டு வச்சிட்டு வர்றீங்க? விடாது கருப்பு மாதிரி விடாம துரத்துறீங்களே...

  பதிலளிநீக்கு