செவ்வாய், 13 ஜூலை, 2010

ஆந்திரா மெஸ்ஸூம், ஆர்மண்ட்லா சுதீர் குமாரும்

-எஸ்கா

(இக்கட்டுரை ஜூலை 12 அன்று உயிரோசை டாட் காமில் வெளியானது.)


(இரு நாட்கள் கழித்து யூத்ஃபுல் விகடனால் குட் பிளாக்ஸ் பகுதியில் தேர்ந்தெடுத்து வெளியிடப்பட்டது.)


அய்யா கவிமணி மங்கையர்க்குச் சொன்னாற்போல், பேச்சுலராய் இருப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று தான் சொல்ல வேண்டும்.. வாழ்வது எதற்கு? (பல விஷயங்களுக்கு………….. ஆனால் முக்கியமாய்?) சாப்பாட்டிற்கு. அந்த விஷயத்தில் பேச்சுலராய் இருப்பது ரொம்பவே வசதி. அதிலும் பேச்சுலராய் வெளியூரில் வேலை பார்ப்பது வசதியோ வசதி. வீட்டுத் தொந்திரவு கிடையவே கிடையாது. நைட்டு மீந்து போன புளித்த மாவில் ரவை கலந்து அடை போட்டுத் தருகிறேன் என்ற கொடுமையெல்லாம் இங்கே நடக்கவே நடக்காது.


பெங்களூர் மாதிரி ஹை டெக் நரகங்களில் மாட்டாமல், செங்கல்பட்டு, திருப்பூர் போன்ற சிறு நகரங்களிலும் மாட்டாமல் சென்னை மாதிரி மீடியம் நகரங்களில் வேலை பார்ப்பது சாப்பாட்டுக்கு ரொம்ப ரொம்ப வசதி. சென்னை என்றதும் ஐடி-யா எனாதீர்கள். ஆ, ஊ என்றால் எல்லாருக்கும் ஐடி ஞாபகம் வந்து தொலைத்து விடுகிறது. ஐடி தவிரவும் ஆயிரம் வேலைகள் இருக்கின்றன அய்யா.. கொளுத்து வேலையில் இருந்து சுஜாதா சொன்னது போல் நாய் குளிப்பாட்டுவது வரை பல வேலைகள்.


ஐடி-க்காரர்களுக்கு கேன்டீன், ஸாரி கேஃபடேரியா என்று ஒன்று இருக்கும். மிலிட்டரி கேன்டீனில் டேக்ஸ் இல்லாமல் சோறு, டீ, காபி தருவதைப்போல இவர்களுக்கு இந்த கேஃபடேரியாவில் ஆஃபர் ரேட்டில் அயிட்டம்கள் கிடைக்கும். இடையிடையே ஸோடக்ஸோ, டிக்கட் ரெஸ்டாரண்ட் வகையறா சலுகைகளும் அனுபவிக்கக் கிடைக்கும். மற்றவர்களுக்கெல்லாம் ஹோட்டல்கள் தான் கதி.. அதனால் கொஞ்சம் கஷ்டம் தான். இதே போல் யூத்ஃபுல் விகடனில் எனது முந்தைய கட்டுரையான "ஒரு மெட்ராஸ் பேச்சுலரின் (சாப்பாட்டு) டைரி" யை இந்த லிங்கில் http://youthful.vikatan.com/youth/yeskhastory07082009.asp படித்துப் பாருங்கள்.


(தமிழிஷில் ஓட்டுப் போடுவீர்கள்தானே??)



ஆனால் என்ன? கொஞ்சம் கஷ்டப் பட்டாலும் சோறு என்னவோ வகை வகையாகக் கிடைக்கும். தின்று விட்டு, தின்று விட்டு, மல்லாந்து கிடக்கலாம். ஊர் சுத்தலாம். அனுபவிக்கலாம். என்ன ஒன்று? பொங்கல், தீபாவளி போன்ற விசேஷ தினங்களில் மட்டும் ஊரே காலியாகி விடும். ஹோட்டல்களும் மூடப்பட்டு விடும். அந்த நேரத்தில் மட்டும் சோத்துக்கு.... சோத்துக்கு.... அது என்ன? ஆங்..சிங்கி.. சிங்கி.. சோத்துக்கு.... சிங்கிதான். உஷாராகி ஊருக்கு ஓடிப்போவது உங்கள் சாமர்த்தியம்.


அந்த வகையில் நமக்கு வேலை கிரீம்ஸ் ரோடில். ஆயிரம் விளக்கு பகுதி அய்யா. “பிரபல கம்பெனி” ஒன்றில் டிரெய்னர். இப்போது இல்லை. அதனால் தானோ என்னவோ அது இப்போது “மிகப் பிரபல கம்பெனி” ஆகி விட்டது. சரி விடுங்கள். ஆந்திரா மெஸ் கதைக்கு வருவோம். கிரீம்ஸ் ரோடில் உள்ள கம்பெனிகளில் வேலை செய்யும் பேச்சுலர்களிடம் ரொம்பவும் பேமஸ் ஆந்திரா மெஸ்(கள்). கொல்கத்தா மெஸ், தாலி ஹவுஸ், நீலா பவன், செந்தூர், அபூர்வாஸ் சங்கீதா, கையேந்தி பவன், தள்ளு வண்டி, இந்திய உணவுக் கழகம், போஸ்ட் ஆபீஸ் கேன்டீன், பஞ்சாபி தாபா என எத்தனை ஹோட்டல்கள் இருந்தாலும் பலரும் ஆந்திரா மெஸ்களை அதிகம் நாடுவதுண்டு. அதன் அதிமுக்கிய காரணம், அங்கே போடப்படும் அன்லிமிடெட் மீல்ஸூம், நேட்டிவிட்டி கலந்த உபசரிப்பும்.


வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஒரு மீல்ஸ் இருபத்து நான்கு ரூபாய் இருந்தது. இப்போது படிப்படியாக உயர்ந்து முப்பதைத் தாண்டியிருக்கிறது. ரெகுலர் கண்மணிகளுக்காக ஒரு மாதம் முழுமைக்குமான மன்த்லி கார்டும் உண்டு. அதில் முப்பது நாட்களுக்கான சாப்பாடு எண்ணிக்கை குறிக்கப் பட்டிருக்கும். ஒரு அட்டெண்டென்ஸ் போன்ற அட்டை. ஆந்திரவாலாக்கள் அதிகமாகப் புழங்கும் இடமது. தெலுங்கு பேப்பரெல்லாம் கிடக்கும். சிரஞ்சீவி, சித்தார்த் படமெல்லாம் போட்டிருக்கிறதா என்று பார்த்து விட்டு வருவேன் நான். பிரஜா ராஜ்யம் இஷ்யூ வந்தபோது ஒரே அமளிதுமளியாக இருந்தது.


ஹைதராபாதில் இருந்து பாலாஜி சார் வந்தால் முரளி சாருக்கு போன் செய்யுமுன்பு எனக்குக் கூப்பிடுவார் "பாபு, எக்கட உன்னாவு? சென்னாய் ஒச்சானுப்பா.. என்பார். அவருக்கு பவர்பாயிண்டில் ப்ரசன்டேஷனகள் செய்து தர வேண்டும். கூடவே அவரது டாகுமெண்டுகளை லிஸ்ட் அவுட் செய்து சரியாக தயார் செய்து கொடுப்பதால் அவருக்கு ரொம்பப்பிடிக்கும். கூடவே தெலுங்கு வேறு. நடுநடுவில் வரும் போன்கால்களில் ஹிந்தி பேசிவிட்டு தவறி என்னிடமும் ஓரிரு வார்த்தை விடுவார், பதில் சொன்னால் நீகு ஹிந்திகூட ஒஸ்துந்தா? என்பார். "ம்" என்பேன்.


வேலை இருந்தால் கூட அப்படியே போட்டுவிட்டு, மதியம் சரியாய் ஒரு மணிக்கு சாப்பிடக் கிளம்பி விடுவோம். செந்தூரில் கல் தோசை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். சின்னச்சின்னதாய் மூணு தோசை போடுவான். ஆனால் ஒவ்வொரு முறை வரும்போதும் உன்னை ஆந்திரா மெஸ் கூட்டிப்போகிறேன் என்பார். பலமுறை மிஸ்ஸாகி ஒரே முறை எல்.ஐ.சி அருகில் உள்ள மாடர்ன் லாட்ஜில் ஆந்திரா மெஸ்ஸுக்குப்போய் சாப்பிட்டோம். (அதுவே நாங்கள் இணைந்து சாப்பிட்ட கடைசி முறையாகிப்போனது.)


ஆனால் அந்தச் சுவை இன்னும் நாக்கடியிலேயே ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதையெல்லாம் முதன் முதலில் நமக்கு அறிமுகப் படுத்தி பெருமையைத் தட்டிக்கொண்டு போனது நம்மாளு சுதீர்தான். முழுப்பெயர் ஆர்மண்ட்லா சுதீர் குமார். அர மண்டேலா, அரை மண்டையன், என்றெல்லாம் ஆபீஸில் பட்டப் பெயர்கள் வழங்கும். லூஸூப்பயல் மாதிரி திரிவான். ஆனால் தலைவரை சாப்பாட்டு நேரத்தில் பார்க்க வேண்டுமே, ஆஹா... கைப்பட்டியை மடித்து முழங்கைக்கு மேலேற்றி, நன்றாக முழங்கை வரை வழித்துச் சாப்பிடுவான். நல்ல தீனிக்காரன். ஒரு முறை நீலா பவனில் ஒரு புல் லிமிடெட் மீல்ஸை சாப்பிட்டு விட்டு எனக்குப் போதவில்லை என்று ஆந்திரா மெஸ்ஸூக்குப் போனவன் அவன்.


வேலைக்குச் சேர்ந்த புதிதில் முரளி சார் எக்ஸ்பீரியன்ஸ்டு பர்சன் என்று அவனுடன் கோர்த்து விட்டு விட்டார். கொஞ்சம் டார்ச்சராய் இருந்தாலும் விஷயம் தெரிந்ததால் (அந்நியன் அம்பி மாதிரி. அந்தக் கேரக்டர் எல்லாம் சினிமாவுக்குத் தான் சுவாரசியமாக இருக்கும். நிஜ வாழ்வில் டார்ச்சர் தாங்க முடியாது) சில மாதங்கள் அவனையும் கூடவே வைத்துக்கொள்ள வேண்டியதாய்ப் போயிற்று. என்ன கேள்வி கேட்டாலும் ஐன்ஸ்டீன் மாதிரி வேறு எதையோ யோசித்துக் கொண்டு இருப்பான். தோன்றினால் பதில் சொல்வான். இல்லாவிட்டால் பதில் வாங்குவது கஷ்டம்.


ஒன்று தெரியுமா? கம்ப்யூட்டரையே குளிப்பாட்டிய அதிமேதாவி அவன். தவறுதலாய் கீபோர்டில் காபி கொட்டி விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவன் அழகாக பக்கத்தில் இருந்த வாட்டர் கேனை எடுத்து ஒரு குழந்தையைக் குளிப்பாட்டும் லாவகத்துடன் தண்ணீர் ஊற்றினான். அப்போது அவனைப்பார்த்து பயமாக இருந்தது எனக்கு. ஓடிப்போய் கிஷோரிடம் சொன்னேன். அவர் ஓடி வந்து டேய் லூஸூப்பயலே என்று சொல்லி கீபோர்டின் யு.எஸ்.பி ஒயரை பிடுங்கி விட்டார்.


அதே போல் ஒரு முறை டிரெயினிங் செஷனில் ஒருமுறை பேசிக்கொண்டிருந்த போது தனக்கு வந்த போன் காலை அட்டெண்ட் செய்த படியே போக்கிரி வடிவேலு போல டிரெயினிங் வந்த ஒருவர் எழுதிக் கொண்டிருந்த பவர் ஆஃப் அட்டார்னி பேப்பரைக் கிழித்து போன் நம்பர் எழுதியவன் அவன். (தம்பி, வட இன்னும் வரல.. அவனை பிறகு நாங்கள் உரித்துக் காயப் போட்டது தனிக்கதை.)


வேலை நேரத்தில் என்ன நடந்தாலும் சாப்பாட்டு நேரத்துக்கு சரியாகப் பிரிந்து விடுவோம். ஆனால் ஒருமுறை "கார்த்திக், இக்கட ஒஸ்தாரா, இக்கட ஒக ஆந்த்ரா மெஸ் உந்தி, தீஸ்கி யெல்தானு.." (இங்கே வருகிறீர்களா? இங்கே ஒரு ஆந்திரா மெஸ் இருக்கிறது, கூட்டிச் செல்கிறேன்) என்று அழைத்துப் போனான். போகும் போது இவனை நம்பிப் போகிறோமே என்று யோசனையாய் இருந்தாலும், போன பின்பு ஆந்திரா மெஸ் ரொம்பவும் பிடித்துப் போனது.


சுடச்சுட உதிரியாய் அள்ளி அள்ளிப் போடப்படும் அன்லிமிடெட் சுடுசாதம், பப்பு எனப்படும் பருப்புக்கூட்டு, கொஞ்சம் நெய், சட்னி, துவையல், ஆந்திரா ஸ்பெஷல் பருப்புப் பொடி ப்ளஸ் நெய், சாம்பார், ரசம், கூட்டு, மோர்க் குழம்பு, ஊறுகாய், ஏதேனும் ஒரு வறுவல் வகை, பொறியல் இத்துடன் ஒரு முழு தயிர் கப்பும் உண்டு. அதில் சேர்த்துச் சாப்பிட சர்க்கரை கொஞ்சம் கேட்டால் ஸ்பூனுடன் சேர்த்துத் தருவார்கள். எல்லாம் முடிந்து வாழைப்பழம் தனி. அதையும் முடித்து விட்டு கை கழுவித்துடைத்து விட்டு வந்தால் பன்னீர் சர்க்கரை கலந்த சோம்பு வைத்திருப்பார்கள். பீடா வேண்டுமென்றால் அதுவும் உண்டு. ஒரு முழு கல்யாண விருந்து சாப்பிட்ட எஃபெக்ட் இருக்கும்.


அடிக்கடி அங்கே போவோம். வரும் எல்லோருமே சாப்பாட்டுடன் சேர்த்து ஆந்திரா ஆம்லெட் ஒன்றையும் ஆர்டர் செய்வர். மசாலாத்தூளை முட்டை, ஆனியனுடன் கலந்து ஒரு மாதிரி காரமாக ஆம்லெட் போடுவார்கள். அதையும் சேர்த்து வகையாக வழித்துச் சாப்பிட எனக்குச் சொல்லிக் கொடுத்தவன் அவனே.


ஒரு நாள் திடீரென்று ரிஸைன் செய்து விட்டுப்போய்விட்டான். சம்பளம் பத்தவில்லை என்று ஒரு காரணம். பிஸினஸ் செய்யப் போகிறேன் என்று ஒரு காரணம். ஷேரில் லாஸானதும் ஒரு காரணம் என்று ஆபீஸில் சொன்னார்கள். ரிஸைன் செய்வதற்குக் கொஞ்ச நாட்கள் முன்புதான் சத்யம் ஷேரில் இன்வெஸ்ட் செய்தான், அன்றுதான் மார்க்கெட் விழுந்து சத்யத்தை அடி பின்னிக் கொண்டிருக்கிறார்கள். தலைவர் இப்போது தான் உள்ளே நுழைந்து 120 ரூபாய்க்கோ 80 ரூபாய்க்கோ 200 ஷேர் வாங்கினார். மறு நாளிலிருந்து மேலும் சறுக்கத் துவங்கியது அது. இரண்டு நாட்களில் ஆறு ரூபாய்க்கோ, பத்து ரூபாய்க்கோ போய் நின்றதாக ஞாபகம்.


இப்போதும் ஆந்திரா மெஸ்ஸூக்குப் போனால் சுதீரின் நினைவுகள் அலை மோதும். ரொம்ப நாளாயிற்று. பிஸினஸ் செய்யப் போனவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை. சும்மா சுற்றிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். இருந்த உருப்படியான வேலையை விட்டு விட்டு ஏன் இந்தப் பொழப்பு என்று நானும் கூடச் சொன்னேன். ஆனால் யார் கண்டது? சொதப்பல் எனப் பெயரெடுத்திருந்த நம்ம லல்லுவே சூப்பராக ஒரு பட்ஜெட் போட்டு அசத்தியதைப்போய் அவனுக்கும் ஒரு நல்ல டீம் அமைந்தால்....? நல்லாயிருக்கட்டும்.


சரி, சரி. அதை விடுங்கள். அங்காடித் தெரு பார்த்தீர்களா? தி.நகரில் செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் என்று போர்டு வைத்திருப்பார்கள் அல்லவா? அதற்கு நேர் பின்புறம் நடேசன் தெரு (என்று ஞாபகம்)வில் கனகதுர்கா மெஸ் என்று இரண்டாவது மாடியில் ஒரு மெஸ் உண்டு. அருமையாய் இருக்கும். அங்கே ஸ்பெஷல் என்னவென்றால் லேடீஸ் கூட்டமும் வரும். ஏனென்றால் அங்கே ஒரு ஓனர் அம்மாயி இருப்பார். நேடிவிட்டி டச்சுக்காக. அதனால் சாப்பாடும் நன்றாய் இருப்பதாய் ஒரு பிரமை.


இரண்டாவது மாடிக்குப் போகும் கூட்டத்தில் கொஞ்சத்தைப் பிரிப்பதற்காக முதல் மாடியில் ஒரு ஆந்திரா மெஸ் இருக்கிறது. ஆனால் கூட்டம் போவதென்னவோ கனகதுர்கா மெஸ்ஸூக்குத் தான்.



ஆயிரம் விளக்கு பகுதியில் ஜெமினி பிரிட்ஜ் இறக்கம் முடியும் இடத்தில் ஒரு பெட்ரோல் பங்க் இருக்கிறது. அதை ஒட்டிப் பிரியும் தெரு ஒன்றில் இன்றும் ஒரு ஆந்திரா மெஸ் இருக்கிறது. கூட்டம் அலைமோதும். வாழ்க்கையில் பார்க்கவே கூடாது என்று சங்கல்பம் செய்து கொண்டு நினைத்திருந்த பாலாஜியையும் அங்கே ஒருநாள் பார்த்து்த்தொலைத்தேன். (அவனும் கொல்ட்டிதான்.)


அதே போல் அந்த தெருவையும், கிரீம்ஸ் ரோட்டையும் இணைக்கும் சந்து ஒன்றில் சாய் மெஸ் என்று மற்றொன்று. சீனிவாசன் வருவதாக இருந்தால் அங்கே போவோம். அதன் ஸ்பெஷல் என்னவென்றால் அங்கே உள்ள அனைவரும் நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள். சந்தானத்துக்கு கக்கத்தில சொறிந்த படியே வடை எடுத்துத் தரும் எஃபெக்டில் இருப்பார்கள் அனைவரும்.


அதே போல் தாம்பரம் சானடோரியம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி கொஞ்ச தூரம் நடந்தால் ஒரு ஆந்திரா மெஸ் உண்டு. அங்கும் இதே சாப்பாட்டு அனுபவம் மிஸ்ஸாகாமல் கிடைக்கும். விலையும் மேனேஜபிள் தான்..


எல்.ஐ.சி அருகில் உள்ள மாடர்ன் லாட்ஜ் ஆந்திரா மெஸ்ஸில் மட்டும் சாப்பாடு கொஞ்சம் காஸ்ட்லி (ஐம்பது ரூபாய் - ஆனால் பாலாஜி சாரே கொடுத்து விடுவார். போக வர ஆட்டோ ஃபேரும் அவரே). கவனிப்பு அருமையாக இருக்கும். எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லிக்கூட கொடுப்பார்கள். ரெகுலர் கஸ்டமர்களை பெயர் சொல்லி அழைத்து, கோங்கூரா சட்னி போட்டு, அளவு பார்த்துப் பரிமாறி என்று ராஜ உபசாரமாக இருக்கும்.


தாம்பரம் சேலையூரில் ஒரு காலேஜில் வேலை செய்த போது அங்கிருந்து இரண்டாவது கேட்டின் பக்கத்து சந்தில் ஒரு ஆந்திரா மெஸ்ஸில் (அப்போது இருபது ரூபாய் மட்டுமே) சாப்பிடுவதுண்டு. அங்கே மட்டும் பப்புக் கூட்டு கொஞ்சம் காரமாய் இருக்கும். சாம்பார் குழம்பு மாதிரி இருக்கும். அங்கே வருவது முழுக்க காலேஜ் பசங்கள் என்பதால் அனுபவித்துச் சாப்பிடலாம்.

ஒருமுறை டிரை செய்து தான் பாருங்களேன்.

-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------

பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..

-------

30 கருத்துகள்:

  1. karthik thambi, andhra mess ungra perla sudhira kappathuriya illa vaarriya.

    பதிலளிநீக்கு
  2. ராகவ் சொன்னது…

    தலை,

    உங்க ப்லாக்க படிச்ச உடனைய ஒரு ஆந்திர மீல்ஸ முழுசா சாப்பிடனும் போல இருக்கு.
    வீடிய காலை மணி 2.45 ஆனாலும் நாக்குல எச்சி ஊருது.

    ராகவ்

    பதிலளிநீக்கு
  3. u have missed out rajalakshmi mess in greams road( thought its not andhra mess, food taste ie good)

    பதிலளிநீக்கு
  4. //karthik thambi, andhra mess ungra perla sudhira kappathuriya illa vaarriya.// இந்தியன் அண்ணா,,, இதுல அவன காப்பாத்துறது என்ன இருக்கு? வார்றதுதான் நோக்கமே... போனாப்போகுதுன்னு லேசா வாரியிருக்கேன். தனி மனிதத்தாக்குதல் வேண்டாம்னு,,

    அது சரி உங்களுக்கு என்னை ஏற்கனவே தெரியுமா என்ன?

    பதிலளிநீக்கு
  5. //தலை, உங்க ப்லாக்க படிச்ச உடனைய ஒரு ஆந்திர மீல்ஸ முழுசா சாப்பிடனும் போல இருக்கு. வீடிய காலை மணி 2.45 ஆனாலும் நாக்குல எச்சி ஊருது. //


    எனக்கும் அப்படித்தான் ராகவ். ஆபீஸ் விஷயமா இப்போ ஓசூர்ல இருக்கேன். இங்க வந்து கூட ஆந்திரா மீல்ஸ் எங்க இருக்குன்னு விசாரிச்சு போய் சாப்பிட்டேன்.

    பதிலளிநீக்கு
  6. //u have missed out rajalakshmi mess in greams road( thought its not andhra mess, food taste ie good)//
    வருகைக்கு நன்றி மிஸ்டர் LK. கிரீம்ஸ் ரோடுல எல்லா இடத்துலயும் போயி சாப்பிட்டிருக்கேன். ஆனா ராஜலக்ஷ்மி மெஸ் எந்த இடத்துல இருக்கு?

    பதிலளிநீக்கு
  7. ஆஹா... அப்படியா? அது சரி? DLF எங்க இருக்கு கிரீம்ஸ் ரோடுல? MRF கிட்டயா?

    பதிலளிநீக்கு
  8. சுவாரஸ்யமாக இருக்கு என்று வாசிக்க ஆரம்பித்தேன் . சாப்பாட்டு விசயமாகவும் இருந்ததால் நல்லாவே இருக்கு. ஆனால் ரொம்பவே நீளம். நன்றாக எழுதுகிறீர்கள் . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. நீளத்தைக் குறைக்க முயற்சி செய்கிறேன். ஆனால் முடியாது என்றுதான் நினைக்கிறேன். எனக்குக் கை நீளம், வாயும் கொஞ்சம் நீளம் தான். "ஒரு மெட்ராஸ் பேச்சுலரின் (சாப்பாட்டு) டைரி" படித்தீர்களா? இன்னும் நீளமாக இருக்கும்.

    அதுசரி... உங்கள் ப்ளாக்கில் எட்டிப் பார்த்தேன். என்ன? ஒரு போஸ்டைக்கூடக் காணோம்? ப்ளாக்கிற்குப் புதியவரா?

    பதிலளிநீக்கு
  10. very funny man :)(i read all ur blogs "superb" do well), i was spent more days in thousand lite...... missing those days:(

    பதிலளிநீக்கு
  11. Dear yeshka,

    unga writing romba nalla iruku. ippo inga (kuwait) oru kutti kuttam unga wrting padika arambichuruku! eppadiya ellam ennalathan. unga demat accout details very use ful to us. please write about more in that article please.

    suresh.k.
    sureshkothanda@gmail.com

    பதிலளிநீக்கு
  12. Dear yeshka,

    Unga writing romba nalla nakaisuvaiya ka iruku. (aduthavan kastapata namaku santosam thana.) unga blog il ulla demat vevaram romba useful aka iruku. inga kojam kuttam unga writing vasika arabichutanga. eppadiya! ellam en mulamathan.

    valthukal . write more.

    anbudan suresh.k. kuwait.

    பதிலளிநீக்கு
  13. Migavum nanaraga ulladhu.. andhra messai pol..

    idhanidayil maraindha our legend "SUJATHA" vin

    siru keetralayum serthu ezhudhi iruppadhu,

    sujatha innum nammodu vazhndhu varuvadhagave

    ennugiraen ... thodarndhu idhu pondra naalla

    padaippugalai ezhudha vaazhthugiren.. nanri..

    NIYAZ, DUBAI...

    பதிலளிநீக்கு
  14. //youv thalaiva madras fulla irukira andhra mess add kudutha nalla irukum. naanum suvai virumbhi// மெட்ராஸ் ஃபுல்லா இருக்கற அட்ரஸ் எனக்கு எப்படி நண்பா தெரியும். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் கொடுத்திருக்கேன். ஆந்திரா மெஸ் மட்டும் தான் இருக்கா என்ன? இன்னும் எவ்வளவோ இருக்கு.

    கையேந்தி பவன், தள்ளு வண்டி, ரோட்டுக் கடை, த்ரீ ஸ்டார், ஃபைவ் ஸ்டார், பிரியாணி ஹோட்டல், ஐயர் மெஸ், ஆந்திரா மெஸ், கொல்கத்தா மெஸ், சைனீஸ், இத்தாலியன், தந்தூரி, கான்டினென்டல், தாலி ஹவுஸ், போஜன்சாலா, இந்திய உணவுக் கழகம், போஸ்ட் ஆபீஸ் கேன்டீன், முனியாண்டி விலாஸ், தலப்பா கட்டு, அஞ்சப்பர், சரவண பவன், பஞ்சாபி தாபா என்று எத்தனை வகை.

    கொஞ்சம் டிரை பண்ணித்தான் பாருங்களேன்.

    பதிலளிநீக்கு
  15. //very funny man :)(i read all ur blogs "superb" do well), i was spent more days in thousand lite...... missing those days:( //

    தேங்க்ஸ் நித்யா... தெளசண்ட் லைட்ஸ்ல நீங்க எங்க இருந்தீங்க? இப்போ எங்க இருக்கீங்க?

    பதிலளிநீக்கு
  16. தேங்க்ஸ் நித்யா... தெளசண்ட் லைட்ஸ்ல நீங்க எங்க இருந்தீங்க? இப்போ எங்க இருக்கீங்க

    பதிலளிநீக்கு
  17. karthik thambi,

    nalla ezhudhareenga, nalla vaarreenga, enna theriyaumannu vera kekkareenga, ungala nalla theriyum, ungalukkum enna nalla theriyum. all the best for your further writes...

    indian
    jai hind

    பதிலளிநீக்கு
  18. //Dear yeshka,

    unga writing romba nalla iruku. ippo inga (kuwait) oru kutti kuttam unga wrting padika arambichuruku! eppadiya ellam ennalathan. unga demat accout details very use ful to us. please write about more in that article please.

    suresh.k.
    sureshkothanda@gmail.com //

    கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் திரு சுரேஷ். நன்றி.

    பதிலளிநீக்கு
  19. //suresh சொன்னது…
    Dear yeshka,

    Unga writing romba nalla nakaisuvaiya ka iruku. (aduthavan kastapata namaku santosam thana.) unga blog il ulla demat vevaram romba useful aka iruku. inga kojam kuttam unga writing vasika arabichutanga. eppadiya! ellam en mulamathan.

    valthukal . write more.

    anbudan suresh.k. kuwait. //

    உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப நன்றி சுரேஷ். எனக்கு குவைத்துல கூட நண்பர்கள் கிடைச்சிருக்காங்கன்னு என் தங்கச்சி கிட்டே பெருமையா சொல்லியிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  20. //Migavum nanaraga ulladhu.. andhra messai pol..//

    நன்றி நியாஸ்..


    //idhanidayil maraindha our legend "SUJATHA" vin

    siru keetralayum serthu ezhudhi iruppadhu,

    sujatha innum nammodu vazhndhu varuvadhagave

    ennugiraen ... //

    சுஜாதாவை தவிர்த்து தமிழ் இலக்கியம் கிடையாது நண்பரே... இல்லை என்று வீம்புக்குச் சொல்பவர்கள் கூட சுஜாதாவை படித்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

    //thodarndhu idhu pondra naalla

    padaippugalai ezhudha vaazhthugiren.. nanri..//

    வாழ்த்துக்களுக்கு நன்றி.


    // NIYAZ, DUBAI... //


    ஹேய்.. எனக்கு துபாய்லயும் ஒரு நண்பர் கிடைச்சிட்டார்பா....

    பதிலளிநீக்கு
  21. // indian சொன்னது…
    karthik thambi,

    nalla ezhudhareenga, nalla vaarreenga, enna theriyaumannu vera kekkareenga, ungala nalla theriyum, ungalukkum enna nalla theriyum. all the best for your further writes...

    indian
    jai hind //

    இந்தியன் அண்ணா, நீங்க யாருன்னு சொன்னா கொஞ்சம் நல்லாயிருக்கும். ப்ளாக் லிங்க் -கூட எதுவும் இல்லையே...?

    ஷங்கர் படத்துல வர்றா மாதிரி கடைசியில தான் மூஞ்சி காமிப்பீங்களா என்ன?

    பதிலளிநீக்கு
  22. Hello Boss,
    Mannikkanum... "Athisha" - "Yeshkaa" oru chinna peyar kolappam.
    Matrapadi Water Bottle kuritha ungal Katturai Arumai.... Vaazhthukkal. ( intha karuthu sollratha eppadi Tamil la sollrathu nu konjam sonna innum vivaramaa solvaen...

    பதிலளிநீக்கு
  23. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  24. http://www.higopi.com/ucedit/Tamil.html

    இந்த லிங்க் ட்ரை பண்ணுங்க... அழகா தமிழ்ல டைப் பண்ணலாம். (டைப் ரைட்டர் கீ போர்டும் இருக்கு, தமிங்கிலிஷ் கீ போர்டும் இருக்கு)

    பதிலளிநீக்கு
  25. பேச்சுலர் பசங்க மெஸ்ஸூ மெஸ்ஸா போயி நல்லா துன்றீங்கப்பா!எனக்கும் மெட்ராசு வந்தா சாப்புடுனும் போல இருக்கு.அது சரி இந்த பேச்சுலர் பொண்ணுங்க எல்லாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுதுவோ? அது பத்தி யாராவது எழுதி இருக்காங்களா?

    பதிலளிநீக்கு
  26. //anbu சொன்னது…//
    பேச்சுலர் பொண்ணுங்களா? அதுங்க பண்ற அட்டகாசத்தை எல்லாம் சொல்லி மாளாது. என்ன ஒரு அட்வான்டேஜூன்னா அதுங்க எல்லாம் தனியா வீடு புடிச்சி கேஸ் கனெக்ஷன்லாம் வாங்கி குடும்பமே நடத்துதுங்க...

    பதிலளிநீக்கு