திங்கள், 9 ஆகஸ்ட், 2010

படைப்புத் திருட்டு, காப்பி

பதிவர், ஸாரி…. பிரபல பதிவர் ஜாக்கி சேகரின் பிரபல பதிவு ஒன்று பாக்யா வார இதழில் (வேறாருவர் பெயரில்) வெளியானது... அது குறித்து அவர் நொந்து போய் வெளியிட்டுள்ள பதிவு இது.

http://jackiesekar.blogspot.com/2010/08/blog-post.html

இது குறித்து பல பேருடைய எதிர்வினைகள், பின்னூட்டங்கள் என்று காரசாரமாக அங்கே போய்க்கொண்டிருக்கிறது விவாதம்.

அந்தப் பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம் இது..
--------------------------------------------------------------
பல எழுத்தாளர்களுக்கும் இது நடந்து கொண்டேதான் இருக்கிறது. பதிவர்களுக்கும் நடக்கிறது இப்போது. "ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக் கொள்வது எப்படி?" என்ற பெயரில் என்னுடைய நகைச்சுவைப்படைப்பு ஒன்று யூத்ஃபுல் விகடனில் வெளிவந்தது. சில வாரங்கள் கழித்து அதே, அப்படியே கல்கி புத்தகத்தில் "ஜான்ஸி ராணி" என்ற பெயரில் வெளிவந்திருந்தது. யூத்ஃபுல் விகடனையே காப்பி பேஸ்ட் செய்து அனுப்ப அவனுக்கு / அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? எழுதும் பழக்கம் இருப்பவர்கள் பல பத்திரிகைகளையும் படிப்பார்கள், அது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியவரும் என்று கூட அந்த நாதாறிக்கு அறிவு இல்லை போலிருக்கிறது. அது சரி.. அந்தப்பிரபல பத்திரிகைகளுக்கு பொறுப்பு இல்லையா? அவர்கள் எல்லாம் அதை எழுதி அனுப்புபவர்களிடம் குறைந்தபட்சம் "இந்தப்படைப்பு சொந்தக்கற்பனையே" என்ற உறுதி மொழியைக்கூட வாங்குவதில்லை போலிருக்கிறது. கொதித்துப்போய் போன் செய்தாலோ, கடிதம் எழுதினாலோ எந்த பதிலும் இல்லை. கல்கிக்கு மெயில் அனுப்பினால் சிம்பிளாக "sorry" என்று ஒரு பதில் வருகிறது "பொறுப்பாசிரியர் சார்பாக" என்று யாரோ பெயர் போட்டு. அந்த "ஜான்ஸி ராணி" யாரென்றே தெரியவில்லை.
--------------------------------------------------------------
ஜாக்கியின் பதிவை காப்பியடித்த பெரிய மனிதர் சி.பி.செந்தில்குமார் ஆனந்த விகடன், குமுதம், ஆனந்த ஜோக்ஸ், கல்கி, குங்குமம் போன்ற பல பத்திரிகைகளில் துணுக்குகள் எழுதும் ஆள். புதிதாக பதிவுலகிற்கு வந்திருக்கிறார். வந்தவுடனே அலப்பறை. ஒருமுறை குமுதம் போட்டியில் இலட்ச ரூபாய் பரிசு வென்றவர். அது அவருக்கு திருமணமான புதிது. அப்போதே அவர் தனது ஜோக்குகள் பத்தாயிரத்திற்கும் மேல் வெளியானதாகச் சொல்லியிருந்தார். இப்போது எவ்வளவோ?
-------------------------------------------------------
அவரே வெளியிட்ட அதனுடைய தொடர் இடுகை இது.
http://jackiesekar.blogspot.com/2010/08/blog-post_04.html
-------------------------------------------------------
சரி என் கதைக்கு வருவோம்.. ‘விகடன்’ குழுமத்தின் "யூத்ஃபுல் விகடன்" இணையதளத்தில் "ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக் கொள்வது எப்படி?" என்ற பெயரில் என்னுடைய நகைச்சுவைப்படைப்பு ஒன்று வெளிவந்தது. சில வாரங்கள் கழித்து அதே, அப்படியே ‘கல்கி’ புத்தகத்தில் "ஜான்ஸி ராணி" என்ற பெயரில் வெளிவந்திருந்தது. அடுத்தவர் படைப்பை காப்பியடிப்பதே தப்பு. அதிலும் வார்த்தை மாறாமல் யூத்ஃபுல் விகடனில் இருந்தே காப்பி பேஸ்ட் செய்து வெளியிட அவனுக்கு / அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? அது சரி.. அந்தப்பிரபல பத்திரிகைகளுக்கு பொறுப்பு இல்லையா? முன்பெல்லாம் "இந்தப்படைப்பு தன்னுடைய சொந்தக்கற்பனையே, இதுவரை வேறு எந்த புத்தகத்திலும் வெளியானதில்லை" என்று உறுதி மொழி வாங்குவார்கள். இப்போது எழுதுபவர் எண்ணிக்கையும் அதிகம், பத்திரிகைகள் எண்ணிக்கையும் அதிகம் ரொம்ப சுதந்திரம் ஆகிவிட்டது.

இதைப்பற்றி டென்ஷனாகி கல்கிக்கு என்னால் அனுப்பப்பட்ட மெயில் இது.
--------------------------------------------------------------
அன்புடையீர்,

என் பெயர் எஸ்.கார்த்திகேயன். எஸ்கா என்ற புனைபெயரில் ஆனந்த விகடன், குமுதம் இதழ்களில் நகைச்சுவைத் துணுக்குகளும் ஆனந்த விகடன் குழுமத்தின் யூத்ஃபுல் விகடன் என்ற இணையதளத்தில் நகைச்சுவைக் கட்டுரைகளும் எழுதி வருகிறேன். கல்கியில் கூட ஒரு முறை எனது ஜோக் ஒன்று பிரசுரமாகியுள்ளது.

இந்த வார கல்கி பத்திரிகையப் படித்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். காரணம் இவ்வார கல்கியின் 60ம் பக்கத்தில் ஜான்ஸி ராணி என்பவர் எழுதியதாக வெளியாகியுள்ள "நீங்கள் ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக் கொள்பவரா?" என்ற கட்டுரை யூத்ஃபுல் விகடனில் சில வாரங்களுக்கு முன் வெளியான "ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக் கொள்வது எப்படி?" என்ற எனது கட்டுரையில் இருந்து முழுக்கத் திருடப் பட்டுள்ளது.

கல்கி விரும்பினால் நான் கல்கிக்கும் எனது படைப்புகளை அனுப்பி வைக்க விரும்புகிறேன். கண்டவர்கள் என் படைப்பை தன்னுடையதாக ஆக்கிக் கொள்வது என்ன நியாயம்? இதே நிலை என்னுடைய ஜோக்குகளுக்கும் நிகழ்ந்துள்ளது. இன்று தொலைக்காட்சிகளில் கலக்கப் போவது யாரு? என்ற நிகழ்ச்சிகளில் ஜோக்காளிகள் சொல்வதெல்லாம் எங்களைப் போன்ற ஜோக் எழுத்தாளர்கள் பத்திரிகைகளில் எழுதியதைத்தான்.

(இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன், காப்பி அடிப்பது என்பது வேறு, அப்படியே உருவுவது என்பது வேறு) உச்சகட்டக் கோபத்தில் நான் அந்த ஜான்ஸி ராணியைக் கேட்பதெல்லாம் "ஏன் இந்த தே.......த் தனம்?" என் பிள்ளையை அவன் பிள்ளை என்று சொல்வதற்குச் சமமான இழிசெயல் இது. இப்படி அயோக்கியத் தனம் செய்வது சரியா? அதிலும் வேறெங்காவது இருந்து திருடியிருந்தால் கூடத்தெரியாது. ஆனால் இக் கட்டுரை மற்றொரு பிரபல பத்திகையான ஆனந்த விகடன் குழுமப் பத்திரிகையில் இருந்து திருடப்பட்டுள்ளது.

என் கோபமெல்லாம் கல்கி இப்படிச்செய்து விட்டதே என்பது தான். பொதுவாக பத்திரிகைகளில் பக்கங்கள் நிரப்ப ஆசிரியர் குழுவில் உள்ளவர்களே எதையேனும் எழுதுவதோ, (தற்காலத்தில்) நெட்டில் இருந்து உருவிப்போடுவதோ வழக்கம். ஆனால் கல்கி ஒரு பாரம்பரியம் மிக்க பத்திரிகை என்பதால் அதன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள் இதைச் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன். அந்த ஜான்ஸி ராணி என்பவர் கல்கியின் ஆசிரியர் குழுவினரில் ஒருவராக இருக்க மாட்டார்கள் என்றும் நம்புகிறேன்.

கல்கியிடம் என் வேண்டுகோள் என்னவென்றால் ஜான்ஸி ராணி என்ற பெயரில் எழுதியுள்ளவரிடம் இதனை விசாரிக்க வேண்டும். அடுத்த வாரப் புத்தகத்தில் அந்தக் கட்டுரையை எழுதியது ஜான்ஸி ராணி அல்ல "எஸ்கா" என்று ஒரு திருத்தம் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். என் வருத்தம் எல்லாம், மற்ற பத்திரிகைகள் செய்வது போல துணுக்குகள், கட்டுரைகள் எழுதுபவர்களிடம் "இது வேறு எங்கும் வெளியானது அல்ல, வேறு எவரையும் காப்பி அடித்து எழுதியது அல்ல" என்ற குறைந்த பட்சம் வாக்குறுதியைக் கூட கல்கி வாங்குவதில்லையா என்பது தான்.

நேற்று கல்கி புத்தகத்தைப் படித்ததில் இருந்து தங்கள் ஆசிரியர் குழுவைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறேன், ஆனால் முடியவில்லை. ஆகவே அதிக பட்ச மன வருத்தத்துடன் இந்த மெயிலை அனுப்புகிறேன். இந்த மெயில் கண்டவுடன் தயவு செய்து என்னை என்னுடைய செல் நம்பரில் அழையுங்கள். நான் தங்களி்டம் பேச விரும்புகிறேன்.
நன்றி,
எஸ்கா (எ) எஸ்.கார்த்திகேயன்
98 943 253 83
சென்னை
--------------------------------------------------------------
2009 செப்டம்பர் 20 ம் தேதி வெளியான "கல்கி" இதழ் அது.
--------------------------------------------------------------
அவர்களிடம் இருந்து என்ன பதில் வந்திருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? ரொம்பவும் எதிர்பார்க்காதீர்கள். காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளாத கல்கி ஒரு சாம்பார் பத்திரிகை. அதில் என்னுடைய மூன்று ஜோக்குகளும் வெளியாகியுள்ளன. ஆனால் அதற்காக சப்போர்ட் பண்ண முடியாது. அதில் இப்படித்தான் பதில் வரும் என்று எதிர்பார்த்தேன். அதே போல் வந்தது... இதோ அவர்களிடம் இருந்து வந்த பதில்.
--------------------------------------------------------------
We have received the article as a forwarded mail which was published in kalki net page. Sorry for the inconvenience.

Regards/(மிஸ்டர் எக்ஸ்)/for editor
--------------------------------------------------------------
யார் அந்த மிஸ்டர் எக்ஸ் என்று கேட்கிறீர்களா? அது வேண்டாம், பாவம். அது யாரோ ஒரு உதவி ஆசிரியர். அவர் பெயரைப்போட்டு அவருக்கு எதுக்கு வேண்டாத வீண் பழி. போகட்டும்.

இதே போன்ற "காப்பி" குறித்த பதிவு ஒன்றை கட்டுரையாக உயிரோசைக்கு அனுப்பியிருக்கிறேன். ஆனால் அது பாஸிடிவ்-வாக முடிந்திருக்கிறது. நாளை மாலை வரை காத்திருந்து விட்டு வெளியாகவில்லையென்றால் என் ப்ளாக்கில் வெளியிடத்திட்டம். செவ்வாய்க்கிழமை காலை எதிர்பார்க்கலாம்.
--------------------------------------------------------------
விகடன் இப்போது எப்படி என்று தெரியவில்லை. ஆனால் குமதம் "பிரசுரமாகும் கதை, கட்டுரை மற்றும் படைப்புகள் அனைத்திற்கும் பதிப்பாளரே உரிமையாவார். பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளுக்கு பி.ஆர்.பி சட்டப்படி ஆசிரியர் குழுவே பொறுப்பு" என்று நோட் போட்டிருக்கிறார்கள். இது போல் ஏதேனும் வெளியாகி யாராவது கேஸ் போட்டால் அவர்கள் தான் மாட்டுவார்கள் பாவம்.


-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------

பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..

-------

7 கருத்துகள்:

 1. ஓ சேலம் எஸ்கா என்பது நீங்க தானா.வணக்கம்.உங்கள் ஆதங்கம் நியாயமானது.கல்கி இதழில் பணி புரியும் ஒரு உதவி ஆசிரியர்தான் பட்டர்ஃபிளை என நினைக்கிறேன்.மதுரை முத்து,ஈரோடு மகெஷ் உட்பட பலர் ந்மது ஜோக்ஸை காப்பி அடிக்கிறார்கள்.விகடன் தீபாவளீ மலருக்கு ஜோக்ஸ் அனுப்பிவிட்டீர்களா?

  பதிலளிநீக்கு
 2. //சி.பி.செந்தில்குமார் சொன்னது…
  ஓ சேலம் எஸ்கா என்பது நீங்க தானா.வணக்கம்.உங்கள் ஆதங்கம் நியாயமானது.கல்கி இதழில் பணி புரியும் ஒரு உதவி ஆசிரியர்தான் பட்டர்ஃபிளை என நினைக்கிறேன்.மதுரை முத்து,ஈரோடு மகெஷ் உட்பட பலர் ந்மது ஜோக்ஸை காப்பி அடிக்கிறார்கள்.விகடன் தீபாவளீ மலருக்கு ஜோக்ஸ் அனுப்பிவிட்டீர்களா? //

  இல்லை. அந்த அளவுக்கு நான் ஃபாலோ அப் செய்வதில்லை. தற்போது வேலைப்பளு காரணமாக எந்தப் பத்திரிகைக்கும் அனுப்புவதில்லை. எல்லாம் இன்டர்நெட் பத்திரிகைகளுக்குத் தான். நீங்கள் இப்போதெல்லாம் கார்டு, கவர்களில் எழுதி அனுப்புகிறீர்களா? அல்லது ஈ.மெயிலிலா?

  பதிலளிநீக்கு
 3. //ஜாக்கி சேகர் சொன்னது…
  நல்லா சொல்லி இருக்கிங்க.. //

  நன்றி ஜாக்கி, நான் உங்க எழுத்தின் ரசிகன். எதேச்சையா ஒரு நாள் உங்க பதிவை படிச்சுட்டு, ஒரே நாள்ல உங்களோட இருபது பதிவுகளை படிச்சவன்... இப்பவும் தொடர்ந்து படிச்சுட்டு வர்றேன்...

  பதிலளிநீக்கு
 4. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
  thiruttu payalukalai seruppaala adichchaalum thiruntha maattanka //

  கண்டிப்பா

  பதிலளிநீக்கு
 5. இந்த கொடுமைய எங்க போய் சொல்லுரதுங்க .. அவுங்க அவுங்களுக்கு வர்றத எழுதணும் .. அடுத்தவங்க எழுதற காப்பி பண்ணி போட்டு என்னத்த கிழிக்கப் போறாங்களோ ..? நானும் ஒரு நகைச்சுவையாக தான் எழுதறேன் .. சில பத்திரிக்கைகளுக்கு அனுப்பியிருக்கேன் .. ஒண்ணும் பிரசுரம் ஆனது மாதிரி தெரியல ..?! பிரசுரம் ஆச்சுன நமக்கு அவுங்க ஏதாவது தகவல் தருவாங்களா .?

  பதிலளிநீக்கு