வியாழன், 12 ஆகஸ்ட், 2010

தேஜூ உஜ்ஜைன் - கவிதை

யூத்ஃபுல் விகடனில் சில மாதங்கள் முன்பு வெளியான கவிதைகள் இவை.

-----------------------
தேஜூ உஜ்ஜைன்
-----------------------


சிரிக்காதேயேன்
ப்ளீஸ்..!

நீ சிரிக்கையில் சிந்தி விடப்போகின்றன
உன் இதழ் முழுவதும் காத்திருக்கும்
எனக்கான முத்தங்கள்...

உன்னைச் சிரிப்பூட்டவும்
பயமாயிருக்கிறது எனக்கு

*


17 முறை
படையெடுத்துத் தோற்றாலும்
கடைசிப் போரில்
வென்றவன் தான் கஜினி

உன்
காதலைப் பொறுத்தவரை
நான்
கஜினி வம்சம்

*


அப்படிப் பார்க்காதேயேன்
ப்ளீஸ்...

உன்னை தரிசிப்பதை
விட்டுச் சாக
விருப்பமில்லை எனக்கு!

*


தாஜ்மகால்
மெல்ல மெல்ல
கறுத்து வருகிறதாமே...

வருத்தப்படுகிறார்கள்
சுற்றுச்சூழலியளாளர்கள்

நல்ல வேளை
உன்னைத் தாஜ்மகால்
பார்க்கவில்லை

பார்த்திருந்தால்
வெட்கப்பட்டு
உடனே கறுத்திருக்கும்!
--------------------------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..
-------

4 கருத்துகள்:

  1. hm...ungakita erunthu innum ethirparkirenga,

    super..

    hikoova...ella kavithaiyanu purialai???

    valthukal anna.

    பதிலளிநீக்கு
  2. //Covai Ravee சொன்னது…
    அருமை. //

    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. // siva சொன்னது…
    hm...ungakita erunthu innum ethirparkirenga,

    super..

    hikoova...ella kavithaiyanu purialai???

    valthukal anna. //

    சிவா, என்கிட்ட இருந்து ரொம்ப எதிர்பார்க்காதீங்க..

    ஹைக்கூ, அப்டி, இப்டின்னு தரம் பிரிக்கிற வேலையெல்லாம் கிடையாது. தோணுனா எழுதிடனும்.

    எனக்கு உங்களை ஏற்கனவே தெரியுமா என்ன?

    பதிலளிநீக்கு