சனி, 2 அக்டோபர், 2010

எந்திரன் - சில (பல) கேள்விகள் (ஐ... ஜாலி... ஜாலி... எந்திரன் பாத்தாச்சே.....)

வெறும் மூன்று ரூபாய் தரை டிக்கெட்டிலேயே சங்கீத்தில் வாரா வாரம் இங்கிலீஷ் படம் பார்த்து வளர்ந்தவன் நான். சுப்ரகீத்தில் ஆறு ரூபாய். அப்புறம் தரை டிக்கெட்டை பத்து ரூபாய் ஆக்கினார் கலைஞர். ஆக படம் பார்க்க பத்து ரூபாய் போதும். ஆனால் நான் அதிக பட்சம் செலவு செய்தது என்று பார்த்தால் "மேட்ரிக்ஸ் ரீலோடட்"-கு 17 ரூபாய் ஃபர்ஸ்ட் கிளாஸ், “கிளாடியேட்டர்” 20 ரூபாய், “மைட்டி ஜோ யங்”-குக்கு 22 ரூபாய் பால்கனி, பிறகு டிக்கெட் விலை ஏறிய பின் “கஸீனோ ராயல்”-கு 30 ரூபாய், “க்வான்டம் ஆஃப் சோலேஸ்” 35 ரூபாய், அப்புறம் சென்னையில் காசு கொடுத்து பார்த்த “போக்கிரி” 40 ரூபாய், ஆபீஸில் தவிர்க்க முடியாமல் டீமாகப்போன “சரோஜா” 85 ரூபாய்.

ஆசைப்பட்டு பார்த்த ஒரே படமான அவதார் 120 ரூபாய் (நூற்றியிருபது ரூபாய் - த்ரீ டி கண்ணாடி உட்பட சத்யம் தியேட்டரில் - அது விதிவிலக்கு). அது தவிர என் வாழ்க்கையிலேயே முதன் முறையாக ஒரு படத்துக்கு நூத்தி ஐந்து ரூபாய் கொடுத்து பார்த்திருக்கிறேன் என்றால் அது எந்திரனுக்குத்தான். அதே போல் முதல் நாளிலேயே பார்த்த ஒரே தமிழ் படமும் இது தான். மத்ததெல்லாம் நிதானமாக ஒரு மாதம் கழித்து பார்த்தாலே போதும். ஆனால் தமிழ்நாட்டின் இண்டு, இடுக்கு, மூலை, முடுக்கு மற்றும் பிட்டு படம் போடும் தியேட்டர்களில் எல்லாம் எந்திரன் மட்டுமே ஓடினால் டிக்கெட் ஈஸியாகக் கிடைக்காதா என்ன?

அதுவும் நைட் ஷோ இரண்டு டிக்கெட். எனக்கொன்று. எங்க நைனாவுக்கு ஒன்று. ப்ளஸ் ஒரு முறுக்கு பாக்கெட். இரண்டு பாப்கார்ன். மூன்று ஸ்பிரைட். இரண்டு ஸ்வீட் கார்ன். ஒரு வாட்டர் பாட்டில். (நைனாவை பக்கத்தில் வைத்துக்கொண்டே கத்தித் தீர்த்ததில் கட்டிப்போன தொண்டையை சரி செய்ய) ஒரு ஸ்ட்ரெப்சில்ஸ். ஆக மொத்தம் எந்திரனுக்காக இந்த மாத குடும்பச்செலவில் கை வைத்தது ரூபாய் முன்னூற்று முப்பத்து இரண்டு. அதுவும் சேலம் என்ற ஊரில் ஒரு சாதாரண ஒதுக்குப்புறமான தியேட்டரில், இதையே சத்யத்தில் பார்த்துத் தொலைத்திருந்தால் ஆயிரத்தைநூறு ரூபாய் மொய்யாகி இருக்கும். (நான் போயிருக்கவே மாட்டேன். அது வேற விஷயம்..)

அப்புறம் நேற்று எந்திரன் பார்த்து விட்டு இன்றைக்கு வேலைக்குப்போகாமல் எங்க நைனா கட்டடித்ததில் மார்ஜினல் லாஸ் தனி. அதையும் கூட்டிக் கொள்ளுங்கள். இனிமேல் அவரையெல்லாம் கூட்டிக்கொண்டு போகக்கூடாது என்று தோன்றினாலும் அந்த மனுஷனுக்கு ரஜினியும், ராமராஜனும் ரொம்பப்பிடிக்கும் என்பதால் மன்னித்து விட்டு விட்டேன். பாட்ஷாவும், கரகாட்டக்காரனும் அவரது ஃபேவரைட். டிவியில் அந்தப்படங்கள் போடும் அன்றைக்கு வேலைக்கு லீவு போட்டு விடுவார்.

சரி. சொந்தக் கதை எதுக்கு? போதும். எந்திரன் படம் பற்றிப்பேசுவோம். பயப்படாதீர்கள். நான் விமர்சனம் எழுதவில்லை. நெட்டில் நோண்டும் பலரும் படம் பார்த்திருப்பீர்கள் அல்லது உங்களுக்குக் கதை தெரிந்திருக்கும். அப்படியும் தெரியாதவர்கள் "எந்திரன்" என கூகுளிட்டோ, தமிழ்மணத்திலோ, இன்ட்லியிலோ கதையைப்படித்து விட்டு வாருங்கள். இரண்டே நாள்தான் ஆகியிருக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட அனைத்து பதிவர்களும் "எந்திரன்" பற்றி பதிவு போட்டுள்ளார்கள். நாமளும் எதையாவது போடுவோம் என்று தோன்றியது...

பதிவாகப்போடுவதற்குப் பதில் கேள்வியாகக்கேட்டால்? (போட்ட காசுக்கு நாலு கேள்வியாவது கேட்கணும் இல்லையா?) இந்தக்கேள்விகளை பலரும் கேட்கிறார்கள்.. கேட்காவிட்டாலும் பலர் மனதில் இந்தக் கேள்விகள் உட்கார்ந்திருக்கின்றன.. காப்பி என்று சொல்லாதீர்கள். ரெடி.. விடு ஜூட்.. கதையை படித்துத் தெரிந்து கொண்டு விட்டு இந்தக் கேள்விகளை படியுங்கள்..

இதோ கேள்விகள்...

21-ம் நூற்றாண்டின் இம்மாம் பெரிய அச்சீவ்மெண்டைச் செய்யும் விஞ்ஞானிக்கு இருக்கும் உதவியாளர்கள் இவ்வளவு மொக்கையாக இருப்பார்களா?

டிரெயினில் முப்பது நாற்பது பேரை புரட்டியெடுக்கும் ஒருவரை போலீஸ் தேடவே தேடாதா?

நாடே பரபரக்கும் ஒரு பெரிய வழக்கில் ஒரு ரோபோவின் சாட்சியை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா?

இந்தியாவில் எந்தக் கேஸ் ஒரே நாளில் முடிகிறது?

ரோபோவை டிஸ்மேன்டில் பண்ணிடுங்க - என்று சிம்பிளாகச் சொன்னால் போதுமா? அதை உருவாக்கிய ஃபார்முலா வசீகரனின் மண்டையிலும் ஃபைலிலும் இருக்காதா? அதை என்ன செய்வதாம்?

அழிவு செய்யும் ரோபோவின் ஓனரான விஞ்ஞானியை அரெஸ்ட் செய்யாமல் அவரையே புராஜெக்டுக்கு தலைவராக்கும் மாங்கா போலீஸ் எந்த ஊரில் இருக்கிறது?

ரோபோவை உருவாக்கவே பத்து வருட ஆராய்ச்சி தேவைப்பட்டால், அதற்கு உணர்ச்சிகள் கொடுக்க சும்மா போர்டில் பாடம் நடத்தினால் போதுமா?

சர்வ வல்லமை உள்ள ஒரு ரோபோ தயாரானால் அந்த ஃபார்முலாவைக் கவர சர்வதேசத் தீவிரவாதிகளோ, காங்க்லோமெரேட் கம்பெனிகளோ முயற்சிக்க மாட்டார்களா?

நூற்றுக்கணக்கான போலீஸையும், ராணுவத்தையும், பொது மக்களையும் கொலை செய்யும் ரோபோவை தயாரித்த ஒரு விஞ்ஞானியை மனித உரிமை ஆர்வலர்கள் சும்மா விட்டு விடுவார்களா?
ரோபோவைத் துரத்தும் போலீஸ்காரர்கள் ஐஸ்வர்யா ராய் காருக்குள் இருக்கிறார் என்பதைப்பார்க்காமலே சுடுவார்களா?

ராணுவத்திற்கு கொடுக்க ரோபோவை உருவாக்கும் ஒரு விஞ்ஞானிக்கு அதற்கான கமாண்டு-களை யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்ற சின்ன விஷயம் தெரியாதா?

பத்து வருடம் உழைத்து தயாரித்த ஒரு ரோபோவை "நியூரோ சிப்"பை டெமாலிஷ் செய்யாமல் சும்மா தூக்கி குப்பையில் போடுவாரா ஒரு விஞ்ஞானி?

ரஜினியே இரண்டு அல்லக்கை அரைகுறை விஞ்ஞானிகளை வைத்திருக்கும் போது அயல்நாட்டு தீவிரவாதிகளுக்கு ரோபோ சப்ளை செய்யும் அளவுக்கு பெரியாளான அவரது விஞ்ஞானி புரபஸர் ஆள் பலம் இல்லாமல் தனியாகச் சுற்றுவாரா?

ஒரு சாதாரண குடிமகனின் பத்து இலட்ச ரூபாய் டீலிங்கில் எல்லாம் தலையிடும் ரெளடிகள், அரசியல் வாதிகள் எல்லாம் இவ்ளோ பெரிய மேட்டர்களில் தலையிடவே மாட்டார்களா?

ரோபோ பற்றியே படம் எடுத்தாலும் கும்பல் கும்பலாகவே ஆட்கள் வரிசையாக நின்று ஆடும் டான்ஸ்களை எப்போது நிறுத்துவார்கள்?

சுஜாதா இருந்திருந்தால் படத்தைப்பார்த்து விட்டு என்ன சொல்லியிருப்பார்?

வில்லனாக ரகுவரன் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

----------------------------------------------------------------------------------

சரி போகட்டும். கொஞ்சம் பொது அறிவு கேள்விகள் கேட்கலாமா?...

இது ரஜினி படமா? ஷங்கர் படமா?

இந்தப்படத்தில் அஜீத் அல்லது கமல் நடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

கிளைமாக்ஸ் கதை விவாதத்தில் இராம.நாராயணன் கலந்து கொண்டாரா?

ஒரு சூப்பர் ஸ்டாரே சாதாரணமாக அறிமுகம் ஆவதைப்பார்த்தாவது சுமோ டாப்பைக்கிழித்து, ஏரோப்ளேனில் ஃபுட்போர்ட் அடித்து, ஆட்டோவைக்கையால் தூக்கியபடி அறிமுகமாகும் மற்ற ஹீரோக்கள் கொஞ்சமாவது திருந்துவார்களா?.

போட்ட காசுக்கு மேல் திரும்பி வந்தால் மீண்டும் இதே கூட்டணியில் படம் எடுப்பாரா கல்லா நிறைய நிதி வைத்திருக்கும் மாறன்?

எந்திரனில் எடுக்கும் காசை கலாநிதி மாறன் மருதநாயகம் தயாரிப்பில் விடுவாரா?

எந்திரனில் ரஜினியின் சம்பளம் எவ்வளவு இருக்கும்? சம்பளமாக இருக்குமா? பர்சன்டேஜாக இருக்குமா?

டிவியில் கலாநிதி மாறன் பேரை காண்பிக்கும் போதெல்லாம் பின்னணியில் கேட்கும் ஆய், ஊய், விசில் சத்தங்கள் தியேட்டரில் கேட்கவில்லையே ஏன்?

எதிர்பார்த்தபடி கலெக்ஷன் ஆகி இலாபம் வந்தால், சன் டி.வி ஷேர் விலை எவ்வளவு ஏறும்?

காமன் வெல்த் போட்டிக்கு வரும் வெளிநாட்டு வி.ஐ.பிக்களுக்கு எந்திரன் படத்தை போட்டுக்காண்பிப்பார்களா?

எந்திரன் படத்தைப்பார்த்து பாராட்டியதற்காக கலைஞர் ஐயா அவர்களுக்கு பாராட்டு விழா வைப்பார்களா? அப்படி வைத்தால் அது சன் டி.வியில் வருமா? கலைஞர் டி.வியில் வருமா?

எல்லா தியேட்டரிலும் எந்திரனே ஓடினால் மற்ற படங்களை பார்க்க விரும்புபவர்கள் எங்கே போவது?

ஷங்கர், "த்ரீ இடியட்ஸின்" பிரசவக் காட்சியை சுட்டு எந்திரனில் வைத்திருக்கிறாரே? தன் அடுத்த படமான த்ரீ இடியட்ஸ் தமிழ் ரீமேக்கில் அந்தக் காட்சியை என்ன செய்வார்?

அமரர் சுஜாதாவுக்கு ஒரு அஞ்சலி கார்டு போட்டிருக்கக் கூடாதா?

படம் பார்க்காதவர்களை படம் பார்த்தவர்கள் இன்னுமா (?) எந்திரன் பாக்கலை என்று துக்கம் விசாரிக்கிறார்களே, ஏன்?

ரஜினி அடுத்த படத்துக்கு என்ன செய்வார்? இந்த அளவுக்கு பில்டப் யார் கொடுப்பார்கள்?
ரஜினியின் அடுத்த படத்தைத் தயாரிக்கப்போவது க்ளவுட் நைன் மூவீஸ் தயாநிதி அழகிரியா? ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலினா?
----------------------------------------------------------------------------------

ஓக்கே, படித்தாயிற்றா? கமர்ஷியல் படத்தில் லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது என்று அட்வைஸ் செய்ய வருவீர்களே? அல்லது என் மீது கோபப்பட்டாலும் படுவீர்களே? நோ டென்ஞன் பாஸ்.. எந்திரன் மேல் எனக்கொன்னும் கோவம் இல்லை. நானும் ரஜினி ரசிகன்தான். ஆனா சும்மா நாமளும் இருக்கோம்கிறதை காட்டிக்கணும் இல்லையா? அதுக்குத்தான்.. ஓக்கேவா? கூல்... (இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு. எல்லாத்தையும் கேட்டால் அடிக்க வருவீர்கள். பை பை..)

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

26 கருத்துகள்:

  1. ரூம் போட்டு யோசிப்பாங்களோ?எத்த்த்த்த்தன கேள்வி?படத்த பாக்க சொன்னா நல்லா கேக்கறாய்ங்க டீடெய்லு..!!!

    பதிலளிநீக்கு
  2. தேவா..... பல கேள்விகளுக்கு பதில் இல்லை... பதில் கிடைச்சா இன்னும் கேள்விகள் பிறக்கும்...

    பதிலளிநீக்கு
  3. // டிவியில் கலாநிதி மாறன் பேரை காண்பிக்கும் போதெல்லாம் பின்னணியில் கேட்கும் ஆய், ஊய், விசில் சத்தங்கள் தியேட்டரில் கேட்கவில்லையே ஏன்? ///

    உங்ககிட்ட என்னவோ இருக்கு பாஸ்... பட் உங்க கேள்விகள் எனக்கு பிடிச்சிருக்கு..

    பதிலளிநீக்கு
  4. இத்தனை கேள்விக் கேட்டா படிங்கிரவங்க பயந்துடுவாங்களா.

    கலைஞரை கலாய்த்தால் ஆட்டோ வருமாமே வந்ததா.

    சின்ன மூளைக்குள் இத்தனை கேள்விகளா..

    எனக்கும் வியாதி தொத்திக்கொண்டதா.@

    அய்யய்யோ...

    பதிலளிநீக்கு
  5. //@ Sukumar Swaminathan
    உங்ககிட்ட என்னவோ இருக்கு பாஸ்... பட் உங்க கேள்விகள் எனக்கு பிடிச்சிருக்கு.. //

    என்னங்க, செவன் ஜி விஜயன் ரேஞ்சுக்கு ஃபீல் பண்றீங்க?? பக்கத்துல உக்காந்து படம் பார்த்த எங்க நைனாவே இவ்வளவு ஃபீல் பண்ணலை...?

    பதிலளிநீக்கு
  6. //@ ஜெகதீஸ்வரன்...
    எனக்கும் வியாதி தொத்திக்கொண்டதா//

    அய்யய்யோ... பாத்து ஜெகதீஸ்.. இதுக்கு ஷங்கரெந்திரமாறன் குனியா-ன்னு பேரு, போய் ரெஸ்ட் எடுங்க. சன் டிவி பாத்தீங்கன்னா வியாதி அதிகமாகும். பீ கேர்ஃபுல்...

    பதிலளிநீக்கு
  7. கேள்வி கேக்குறது ஈசி பாஸ். பதில் சொல்றதுதான் கஷ்டம்..

    பதிலளிநீக்கு
  8. //@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
    கேள்வி கேக்குறது ஈசி பாஸ். பதில் சொல்றதுதான் கஷ்டம்.. //

    தோ.... வன்ட்டார்யா.. கமல் ரசிகரு... பஞ்சதந்திரம் டயலாக் சொல்லிக்கிட்டு.......

    (சும்மா, கோவிச்சிக்காதீங்க பாஸ்)

    பதிலளிநீக்கு
  9. போன கதை, சொந்தக் கதை, பார்த்த கதைகளோடு கேள்விகளும் நல்லாயிருக்கு.

    //அமரர் சுஜாதாவுக்கு ஒரு அஞ்சலி கார்டு போட்டிருக்கக் கூடாதா?//

    நல்ல ஆதங்கம்.

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. // ஷங்கர், "த்ரீ இடியட்ஸின்" பிரசவக் காட்சியை சுட்டு எந்திரனில் வைத்திருக்கிறாரே? தன் அடுத்த படமான த்ரீ இடியட்ஸ் தமிழ் ரீமேக்கில் அந்தக் காட்சியை என்ன செய்வார்? // Ha... Ha... Ha...

    பதிலளிநீக்கு
  12. அந்தக்கொடுமையை ஏன் கேட்கிறீர்கள். சுஜாதாவின் பெயரை தனியாகப்போடுவார்கள் என்று பார்த்தால் கார்க்கி மற்றும் இன்னொருவர் பெயரோடு சேர்த்துப்போடுகிறார்கள். அது மட்டுமல்ல. மொத்த தியேட்டரிலேயே நாலு பேர்கூட அவருக்காகக் கைதட்டவில்லை.

    பதிலளிநீக்கு
  13. moulefrite : நானும் பாக்கப் போறேன், லிங்கு குடுத்ததுக்கு ரொம்ப Thanks!

    பதிலளிநீக்கு
  14. அடப்பாவி நெட்டு நோண்டிகளா... நீங்க லிங்க்கு குடுத்து விளையாடுறதுக்கு என் ப்ளாக் தான் கிடைச்சுதா...? நீங்கள்லாம் வெளிநாட்டுல இருக்கீங்க.. ஆனா நாங்க...? எங்க வீட்டுக்கு ஆட்டோ வர்றதுக்கா? எனக்கு டின்னு கட்டிருவாங்கய்யா.. என்னை விட்ருங்க...

    பதிலளிநீக்கு
  15. //@ shree //
    போய்ப் பாருங்க பாஸூ. ஆனா பாதிதான் தலைவர் படம். மீதி ஷங்கர் படம்.. செகண்ட் ஆஃப்ல என்ன செய்யறதுன்னு தெரியாம ரசிகர்கள் எல்லாம் ஃப்ரீஸ் ஆகிப்போய் நிக்கிறாங்க.

    பதிலளிநீக்கு
  16. மிக அருமையான பதிவு

    http://denimmohan.blogspot.com/

    பதிலளிநீக்கு
  17. A VERY GOOD AND REAL BLOG ABOUT "ENDHIRAN". THERE SHOULD'NT BE ANY QUESTION WHEN YOU WATCH A RAJINI MOVIE, THAT IS THE RULE. DIRECTOR SHANKAR KNOWS WELL THAT RAJINI FANS HAVE NO BRAIN.

    ANYWAY ENDHIRAN HAS "FAILED"

    பதிலளிநீக்கு
  18. HOW CAN YOU EXPECT LOGIC IN A RAJINI FILM? EVEN IF ITS A SCI-FI FILM, THERE WON'T BE ANY LOGIC IN HIS FILMS. MOREOVER, DIRECTOR SHANKAR KNOWS WELL THAT RAJINI FANS DON'T HAVE BRAIN.

    ANYWAY "ENDIRAN FAILED"
    SATHYAMOORTHY

    பதிலளிநீக்கு
  19. அதகளம் பண்றீங்க.. நிறைய கேள்விகள் யோசிக்க வைப்பவை.

    பதிலளிநீக்கு
  20. இன்னும் நெறைய கேள்விகள் தோணுச்சு.. ஆனா பயமாயிருக்கு கேட்க.. எனக்கும் நோட்டீஸ் அனுப்பிட்டாங்கன்னா?

    பதிலளிநீக்கு
  21. Super.... Na ketka ninachathlam kettathuku thanks....... unga kitta nirya pesunum time irukum pothu pesuren... take care...

    பதிலளிநீக்கு
  22. நன்றி.. அமீர்... வருக... வருக...

    பதிலளிநீக்கு
  23. எனக்கு ஒரு சந்தேகம் வந்தது, கல்யாணத்துக்கு முன்னரே தான் காதலிக்கும் பெண்ணை "இடுப்பை இழுத்து, இறுக்கி அணைச்சு" 512 முத்தம் கொடுத்து வெளுத்துக் கட்டும் ஜகஜ்ஜால கில்லாடியா Valentine's Day -க்கு பரிசாக முருகர் படத்தைக் கொடுக்கும் அப்பாவியாக இருப்பார்?!!!

    பதிலளிநீக்கு
  24. // @@@ Jayadev Das சொன்னது…
    எனக்கு ஒரு சந்தேகம் வந்தது, //

    ரைட்டு....... படத்தை ரொம்ப உன்னிப்பா பார்த்திருப்பீங்க போலிருக்கு?? இல்லாட்டி பல தடவை பார்த்திருப்பீங்க போல.........

    பதிலளிநீக்கு
  25. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு