புதன், 26 ஜனவரி, 2011

ட்வீட்ஸ்....... (பார்ட் டூ)

ட்வீட்ஸ் முதல் பார்ட்டுக்கு நல்ல ஆதரவு..... ஆகவே.......... ஆகவே.......... ஆகவே.......... மக்களே.... நான் நேற்று வரை அடித்த மிச்ச மீதி ட்வீட்களை இங்கே பார்ட் டூ-வில்http://www.blogger.com/img/blank.gif பதிவேற்றுகிறேன்... படித்து விட்டுச் சொல்லுங்கள்...

அன்பர்கள் சிலர் என்னுடைய ட்விட்டர் ஐ.டி கேட்டு மெயில் அனுப்பியுள்ளார்கள்... அன்புக்கு நன்றி....... என்னுடைய ட்விட்டர் ஐ.டி yeskha_karthik

அப்படியே சைடில் பாருங்கள்..... என்னுடைய ட்விட்டர் அப்டேட்ஸூக்கு கீழே என்னை ஃபாலோ செய்வதற்கான (follow me on twitter) ஆப்ஷனும் இருக்கிறது.

=============================================================

கமலின் மனைவிகள் ஏன் கொல்லப்படுகிறார்கள்? எல்லாப்படத்திலும்......

=============================================================

என் முன்னாள் காதலி எங்கும் போகவில்லை.. நெட் பேங்கிங்கின் பாஸ்வேடாக இருக்கிறாள்..

=============================================================

உலகில் உன்னை உன் விருப்பம் போல் எப்போதும் திருப்திப் படுத்துவது ஒரே ஆள் தான். நீதான் அது.

=============================================================

தட்டில் முடி கிடைத்தால் உறவு வளருமாம். எத்தனை பேனோ? ஈறோ? பொடுகோ?

=============================================================

அது எப்படி எல்லாப்பெண்களும் தாம் அழகென்று நினைத்திருக்கிறார்கள். கவிழ்ப்பது சுலபமாகிறதே ஆணுக்கு.

=============================================================

விமானத்தில் அட்ஜசன்ட் சீட் கிடைத்தால் மறக்காமல் ஹோஸ்டஸ்ஸிடம் தலையணை வேண்டுமெனக் கேளுங்கள். மேலிருந்து எடுத்துத்தர வையுங்கள்.

=============================================================

படுக்கையறையில் ஆடைகளை மடித்து வைப்பதை விட அவிழ்த்தெறிவதே பெண்களுக்கு பிடிக்குமாமே? அப்போ ஆண்களுக்கு?

=============================================================

சிங்கமும், சிறுத்தையும் ஒரே வீட்டில். அப்போ அவிங்க அப்பா என்ன இனம்?

=============================================================

ஆடு களம் என்ற பெயரை சேவல் களம் என்று வைத்திருக்கலாமோ?

=============================================================

அக்குயர்டு இம்யூனோ டெஃபிசியன்ஸி சின்ட்ரோம்........ அப்படின்னா? அட எயிட்ஸூங்க........

=============================================================

அம்மாவிடம் அப்பா எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ஆசைப்படும் மகன் தன் மனைவியிடம் அப்படி நடந்து கொள்வானா?

=============================================================

என் சம்பளத்தை என் வீட்டுக்குத் தான் தருவேன் - தனிக்குடித்தனம் போன பெண்.. இதையே ஆணும் சொன்னால் தனிக்குடித்தனச்செலவு?

=============================================================

பெண்மையிடம் வளைவுகளை எதிர்பார்க்கும் ஆணிடம் தொப்பையைத்தவிர வேறென்ன வளைவுகள் இருக்கின்றன?

=============================================================

பொட்டி தட்டும் வேலையால் புதிதாய் முளைத்திருக்கும் சுஜாதாக்களின் எண்ணிக்கை பயமூட்டுகிறது.

=============================================================

காரணங்கள் கேட்டுக்கொண்டா அனைத்துக்காரியங்களும் நடைபெறுகின்றன?

=============================================================

எவ்வளவு உத்தமன் வேடம் போட்டாலும் நள்ளிரவில் ரிமோட்டை எஃப் சேனலுக்குத் திருப்பும் விரல்களைத் தடுக்க முடியவில்லை.

=============================================================

தேஜூ உஜ்ஜைன்: தாயற்றவனின் பசி tejuujjain.blogspot.com/2011/01/blog-p…

=============================================================

பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி http://yeskha.blogspot.com/2011/01/blog-post_21.html

=============================================================

அரசியலில் ஈடுபட இது சரியான நேரமல்ல: நடிகர் விஜய் / / / யாருக்கு? யாருக்கோ....

=============================================================

ட்விட்டரில் வரும் குருவி செத்துப்போச்சாமே....

=============================================================

ஒரு பீர் அறுபத்தஞ்சு ரூபா.. கள்ளு ஒரு மொந்தை அஞ்சு ரூபா # சுதேசிடா....

=============================================================

dont drink & drive. ஒரு பீர் அறுபத்தஞ்சு ரூபா.. பெட்ரோல் ஒரு லிட்டர் அறுபத்தஞ்சு ரூபா. so, drink & sleep

=============================================================

மேட்ச் பாக்ஸ்ல மேட்ச் இருக்கும் . ஹைலைட்ஸ்ல லைட்ஸ் இருக்குமா?

=============================================================

கல்யாணம் ஆகாத பெண் கர்ப்பம்.. அவுங்கம்மா புலம்பினாளாம் "கடவுளே, இப்படி மோசம் பண்ணிட்டியே?"

=============================================================

பா.விஜய் ஹீரோவாம். பாவம் விஜய்..

=============================================================

தண்ணி கிடைக்க மாட்டேங்குது.. ங்கொக்கா கோலா ஆறா ஓடுது....

=============================================================

உன் உறக்க வேளையில் உன் கனவுகளைக் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன். என்னையும் உள்ளே அழைத்துச் செல்லும்படி...

=============================================================

சுஜாதா இருந்திருந்தா அவரையும் (பிரபல) பதிவர் ஆக்கியிருப்பாங்களோ....?

=============================================================

சுஜாதா இருந்திருந்தா அவரும் (பிரபல) பதிவர் ஆகியிருப்பாரோ?

=============================================================

நம்பர் ஒன்னுக்கு இவ்வளவு சண்டையா? இதற்காகவாவது சுஜாதா உயிருடன் இருந்திருக்க வேணும்....

=============================================================

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி இதெல்லாம் யாருக்காக.. sms, beb, okok - வரிவிலக்கு கன்ஃபர்ம்...

=============================================================

விஜய் படம் ஓடலைன்னா காசத்திருப்பிக் கொடுன்னு கேட்டாங்களாமே - விடுஙக பாஸ், இவங்க எப்பயுமே இப்படித்தான்...

=============================================================

தியேட்டர் தேடி அலைஞ்சதுல "காவலன்" நிலைமை "கோவலன்" மாதிரி ஆகிப்போச்சே...

=============================================================

தி.மு.க வுக்கு ஆப்பு கரண்டா, ஸ்பெக்ட்ரமா? ஆற்காடு வீ"ராசா"மி. அட, ராசா உள்ள ஒளிஞ்சிருக்காருப்பா...

=============================================================

சிறுத்தை விமர்சனம் - ஆபத்தில்லாததாம்... அப்போ "புலி" தான் பிரச்சினை போல.

=============================================================

ஸ்பெக்ட்ரம்........ ஒரே வார்த்தை....... ஓஹோன்னு வாழ்க்கை....

=============================================================

டெஸ்க்டாப்பில் அசைந்தாடும் அழகிகள் (வர்ச்சுவல் கேர்ள்ஸ்) இலவசப்பதிப்பாய் கிடைக்கிறார்கள்.

=============================================================

ஒரு பதிப்பகம் "நற்றினை" என்று புத்தகம் வெளியிட்டிருக்கிறது. இரண்டு சுழி "ன". உள் பக்கத்தில் "நற்றிணை" என்று மூன்று சுழி "ண".

=============================================================

ஒரு பதிப்பகம் "நற்றினை" என்று புத்தகம் வெளியிட்டிருக்கிறது. இரண்டு சுழி "ன" .

=============================================================

என் "புத்தகக்கண்காட்சி" பதிவை நமது சக பதிவர் சாரு நிவேதிதா (ஹி. ஹி. ஹி.) தன்னுடைய வெப்சைட்டில் லிங்க் கொடுத்திருக்கிறார்.

=============================================================


-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

திங்கள், 24 ஜனவரி, 2011

ட்வீட்ஸ்.......


"வாடி மாப்ள....... எப்டி இருக்க? ஆமாம் உனக்கு ஜிமெயில் ஐடி இருக்கா? அப்போ ப்ளாக்கர்ல ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டியது தானே..

நீ ஆரம்பி, நான் சொல்லித்தர்றேன். அது மட்டும் இல்ல.. ஃபேஸ்புக்லயும் ஜி.மெயில் ஐடி இருந்தா போதும் அக்கவுண்ட் ஆரம்பிச்சுடலாம். அதையும் ஆரம்பிடா......

அப்புறமா ட்விட்டர் சொல்லித்தர்றேன்.. அது ரொம்ப சிம்பிள். எப்படி ஃபாலோ பண்றதுன்னு தெரிஞ்சுகிட்டியின்னா போதும்..."

என்ன? ஜூ.வியோட டயலாக் மாதிரி இருக்கிறதா? இன்றைய காலகட்டத்தில் படித்த இரண்டு போர் ஒன்றாகச் சேர்ந்தால் பேசிக்கொள்ளும் டாபிக்குகளில் மேற்கண்ட அயிட்டம் கண்டிப்பாக உண்டு..

நெட்டில் உலாவரும் எல்லா விளம்பரங்களிலும், ஏன் டி.வியில் வரும் மொபைல் போன் விளம்பரங்களிலும் ஃபேஸ்புக், ட்விட்டர் என்ற இரண்டு சமூக வலைதளங்களும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன..

ஆரம்பத்தில் ட்வீட் அடிப்பது ஒன்றும் பெரிதாய் தோன்றவில்லை... அப்படியே நம் வீட்டில் பின்னிரவில் லேப்டாப்பை வைத்துக்கொண்டு தனியாக உட்கார்ந்திருக்கும் போது அப்படியே ஒரு மோன நிலை ஏற்படுகிறது.. அதிலும் அராத்து போன்றவர்களின் அதே நிலையிலான ட்வீட்களை பார்க்கும் போது நமக்கும் லேசாக வெறியேறுகிறது.. ட்வீட் அடித்துத் தள்ளத் துவங்குகிறோம். துண்டு துண்டாக எல்லா டாபிக்குகளையும் டச் செய்து விட்டுப் போவதால் என்னமோ நாம் ஒரு அறிவு ஜீவி என்ற எண்ணம் நமக்கு.. அல்லது ஃபிரண்டோடு எல்லா மொக்கை டாபிக்குகளையும் பேசுவது போன்ற ஒரு பிரமை....

டிசம்பர் மாதம் நான் ட்விட்டர் அக்கவுண்ட் ஆரம்பித்த தினத்தில் இருந்து தொடர்ந்த சில நாட்களுக்கு நான் அடித்த ட்வீட்கள் இங்கே பதிவேற்றப்படுகிறது...... இவை வரவேற்பு பெறும் பட்சத்தில் மிச்சமும் வெளியிடப்படும். (ரிப்ளைகள், ரீட்வீட்கள், தேவையற்ற பர்சனல் ட்வீட்கள், ரொம்ப மொக்கையானவை இவற்றில் இடம் பெறாது) அதுக்குப்பிறகு வாரம் ஒரு முறை அனைத்து ட்வீட்களும் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும்.

ஆனால் கீழிருந்து மேலாக ட்வீட்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நான் அடித்த முதல் ட்வீட் விருதகிரி பற்றியது. அங்கிருந்து காப்பி செய்யும்போது கீழிருந்து மேலாகத்தான் வருகின்றன..

=============================================================

ஒரு ட்வீடடுக்கு ரிப்ளை ட்வீட் அடித்தால் @abcdef என்றே ட்வீட் போகிறது. ரிப்ளை எதற்கானது என்பதற்கான குறிப்பே இல்லை.

=============================================================

எங்கு பார்த்தாலும் யாரைப்பார்த்தாலும் பொங்கல் வாழ்த்துக்கள். டெம்ப்ளேட் வாழ்த்துக்கள் சொல்லி போரடிக்கிறது.

=============================================================

சாவடிக்குறாங்கப்பா...

=============================================================

வாக்குக் கொடுத்து விட்டு தவறும் பெண்களை என்ன செய்யலாம்?

=============================================================

வரவர நாணயம் விகடன் படித்தால் ஒதுக்குப்புறமான மண்டபத்தில் நடக்கும் இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொள்வது போல் பயமாக இருக்கிறது.

=============================================================

தோழி ஒருத்தி வீட்டில் இருக்கிறேன்.. நல்ல உபசரிப்பு - அவளும், அவள் கணவனும். நல்ல துவக்கம் இந்தப்புத்தாண்டில்.

=============================================================

"சூப்பர் ஸ்டார் சூர்யாவை மும்பை ஜிம்மில் சந்தித்தேன்.. தமிழ் த்ரீ இடியட்ஸில் கமிட்டாகி இருக்கிறாராம். பணிவான ஆள் மட்டுமல்ல... பெண்கள் சொல்வது போல செம ஹாட்" - சொன்னது சேதன் பகத்.. மூல நாவலின் ஆசிரியர்.

=============================================================

நண்பன் வந்திருக்கிறான். சாவடிக்கிறான்.

=============================================================

உறங்கும் குழந்தையை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.

=============================================================

சிறுத்தை டிரெயிலர்ல இருந்து கார்த்தின்ற பேரை மட்டும் கட் பண்ணி எடு்க்கச்சொல்லிருக்கேன்... (ஒரு வெளம்பரரரரரரம்)

=============================================================

நாளை ஈரோட்டுல பதிவர் சந்திப்பாமே.. யாரெல்லாம் வர்றீங்க?

=============================================================

ஓஞ்ச வாளப்பளம் ஒரு டஜன் வாங்கினேன்....

=============================================================

திறந்த மனதுடன் இருப்பது எப்படி? பனிரண்டு மணிக்கு எஃப்.டிவி மங்கையர் கற்றுக்கொடுக்கிறார்கள்.

=============================================================

லேப்பு டாப்பை மடி மேலே வைத்து வேலை செய்தால் "அது"க்கு ஆபத்தாமே.... அய்யய்யோ...

=============================================================

கல்யாணம் ஆன முன்னாள் காதலியை பார்க்கப்போகும்போது என்ன வாங்கிக்கிட்டு போகலாம்?

=============================================================

புரொஃபைல் பிக்சர் மாற்றி விட்டேன். ஒருவேளை நம்ம ட்வீட் விகடனில் வந்தால்? (சொந்தப்போட்டோவை போட யோசிப்பாய்ங்க இல்ல)

=============================================================

சந்திராயன் எடுத்த போட்டோக்களில் நிலாவில் வடை சுட்டு விற்ற பாட்டியின் டெட்பாடி கிடைத்திருக்கிறதாம். ஆனால் காக்காவைக்காணுமாம்.

=============================================================

பாட்டி வட சுட்ட கதையில வடை உளுந்த வடையா? மசால் வடையா?

=============================================================

தினசரி நிறைய ஃபேஸ்புக் பிரண்ட் ரிக்வஸ்ட். இன்றைக்கு ரிக்வஸ்ட் கொடுத்திருப்பது நித்யானந்தா சுவாமி. என்ன செய்ய?

=============================================================

தங்கை கல்யாணத்தப்போ கே.எஃப்.சி பக்கெட் சிக்கன் ரூ.400. இப்போ அவளுக்கு பையன் பிறந்தான், சிக்கன் ரூ.500. அவனோடு போகும்போது எவ்வளவு ஆகும்?

=============================================================

மதுரையிலிருந்து வந்த தூரத்து உறவுப்பாட்டி "ராசா" மாதிரி இருக்கணும் என்றார். அய்யய்யோ, வேண்டாம் பாட்டி என்றேன்.

=============================================================

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதுக்கு ஒரு உதாரணம் - விஜயகாந்த் டைரக்ஷனில் விருதகிரி

=============================================================

-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

வெள்ளி, 21 ஜனவரி, 2011

பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி

நண்பன் சேலம் தேவா வின் ட்வீட் ஒன்று இந்த வார ஆனந்த விகடனில் வந்துள்ளது. அதைப்பற்றி அவன் எழுதிய "ஆனந்தம்.. பரமானந்தம்" என்ற பதிவில் பிரபல பதிவர் சி.பி. செந்தில்குமார் அவர்களின் "பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி? பாகம் - 3" என்ற பதிவின் லிங்க்கை கொடுத்திருந்தான். அவர் சென்னிமலை சி.பி. செந்தில்குமார் என்ற பெயரில் பல பத்திரிகைகளில் ஜோக்குகள், ஒரு பக்கக் கதைகள், வாசகர் கடிதங்கள் என்று எழுதி வருகிறார். அவருடைய பதிவு எனக்கு ரொம்பப் பிடித்தது. அதற்கு ஒரு பின்னூட்டம் போடப்போய் வரிசையாக ஆறு, ஏழு பின்னூட்டங்கள் போட்டேன்.. கொஞ்ச நேரம் கழித்து அதைப்படித்த போது அதையே ஏன் நம் ப்ளாக்கிலும் போடக்கூடாது என்று தோன்றியது.. இன்னும் ஒரு நூறுபேராவது படிப்பார்களே என்று.. இதோ போட்டு விட்டேன்..

இது போன்ற ஜோக் எழுத்தாளர்கள் பற்றிய "அறிவுத்திருட்டும், துணுக்கு எழுத்தாளர்களும்" என்ற எனது ஆதங்கக் கட்டுரை உயிரோசையில வெளியானது.

பின்னூட்டங்களை படிக்குமுன் மேற்கண்ட இரு பதிவுகளையும் படித்து விட்டு வந்தால் இது முழுதாகப்புரியும்... ஆகவே அவ்விரண்டையும் படித்து விட்டு வர வேண்டுகிறேன்...

பின்னூட்டம் ஒன்று

குமுதத்தில் ஜோக்ஸ், வாசகர் கடிதம் இரண்டுக்கும நான் இதே டெக்னிக்கை பின்பற்றுவது வழக்கம். சுமாராக என்னுடைய நூறு ஜோக்குகள் வெளியாகியுள்ளன. அதே போல் வாசகர் கடிதம் பகுதியில் ஏ.எஸ்.யோகானந்தம் மற்றும் உங்களுடையவை (வேறு வேறு பெயரில்) இரண்டு மூன்று கடிதங்கள் வந்ததைப்பார்த்து நானும் எழுதி அனுப்புவேன். (சுமார் ஐம்பது கடிதங்கள்) ஒருமுறை ஒரே பக்கத்தில் மூன்று கடிதங்கள் பிரசுரமானதைப்பார்த்து ஒரே குஷி. அதுவரை மணியார்டராகத்தான் பணம் வீட்டுக்கு வரும், ஆனால் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக செக் அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள். ஒருமுறை 750 ரூபாய்க்கு ஒரே செக் காக வந்தது. அப்போது என்னுடைய மாதச் சம்பளமே 2500 ரூபாய் தான். அப்போ தஞ்சை தாமுவை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கும். என்னய்யா இந்த மனுஷன் எல்லா புக்குலயும் எழுதுறாரு.. மாசா மாசம் அவருக்கு எவ்வளவு வரும்? என்று கணக்குப்போட்டுப்பார்ப்பேன்..

- சேலம் எஸ்கா

பின்னூட்டம் இரண்டு

நான் கவிதைக்கு டெக்னிக் எதையும் பின்பற்றாமல் தோன்றுவதை எழுதி அனுப்பி விடுவேன். அதனால் பிரசுரமானவை என்னுடைய இரண்டே இரண்டு கவிதைகளே.. ஒருபக்கக் கதைகளில் ஐரேனிபுரம் பால்ராசய்யா பற்றி நினைத்தாலே பற்றிக்கொண்டு வரும். எப்படிய்யா இந்த ஆளு அடிக்கடி கதை எழுதுறாருன்னு.. நானும் இரண்டு கதைகள் அனுப்பிப்பார்த்தேன். வரவில்லை. சரி இது நமக்கு வேலைக்காகாது. நாம பேசாம ஜோக் எழுதறதோட நிறுத்திக்க வேண்டியது தான்னு ஒருபக்கக் கதை அனுப்புறதையே நிறுத்தி விட்டேன்.

இந்த ஐடியாக்களை எல்லாம் என்னுடைய நண்பர்களுக்கும், இதே போல் எழுத ஆசைப்படுபவர்களுக்கும் சொல்வது உண்டு. ஆனால் இப்படி பதிவாய்ப் போட்டு பலருக்கும் உபயோகமாக ஆக்கும் எண்ணம் எனக்குத்தோணவே இல்லை. சி.பி. உண்மையாவே பெரிய ஆளுதான் நீங்க.

- சேலம் எஸ்கா

பின்னூட்டம் மூன்று

இன்னோரு டெக்னிக் சொல்றேன். நீலக்கலரை விட்டு விட்டு வித்தியாசமான வேறு கலர் (எப்போதும்) பேனாக்களை உபயோகப்படுத்திப்பாருங்கள். உங்கள் கார்டு மட்டும் தனியாகத்தெரியும். ஆனால் இதில் ரிஸ்க்கும் உண்டு. நீங்கள் நன்றாக எழுதி பல ஜோக்குகள் பிரசுரமாகும் பட்சத்தில் இந்த ஐடியா பலன் தரும். ஆனால் நாம் தத்தா புத்தா என்று எதையாவது எழுதி சொதப்பினால் இந்த ஐடியா ரிவர்ஸில் திரும்பி விடும். உங்கள் லெட்டரை, கார்டை பார்த்ததுமே தூக்கிப்போட்டு விடுவார்கள்.

ரொம்பவும் முக்கியமான ஒரு விஷயம். ஜோக்குகளும் கடிதங்களும் போஸ்ட் கார்டில் மட்டுமே அனுப்புதல் நலம். A4 பேப்பரில் எழுதி பிரவுன் கவரில் போட்டு அனுப்பாதீர்கள். மூட்டை மூட்டையாக வரும் கடிதங்களில் முதலில் அவர்கள் பார்ப்பது கார்டுகளை மட்டுமே... - சேலம் எஸ்கா

பின்னூட்டம் நான்கு

இன்னோரு முக்கியமான விஷயம்.. சாதாரண போஸ்ட் கார்டு ஐம்பது பைஸா.. மேக்தூத் போஸ்ட் கார்டு என்று ஒன்று உண்டு. மேக்தூத் கார்டு இருபத்தைந்து பைஸா மட்டுமே. ஆனால் அட்ரஸ் எழுதும் இடத்திற்கு பக்கத்தில் உள்ள ஏரியாவில் நாம் எழுத முடியாது... அந்த இடத்தில் விளம்பரம் வரும் (அரசாங்கத்திற்கு மிச்ச இருப்பதைந்து காசு கிடைப்பது அந்த விளம்பர வருமானம் தான்) அது லிமிடெட் எடிஷன். எப்போதாவது தான் வரும். வந்த இரண்டு தினங்களில் கார்டே தீர்ந்து போய் விடும். அதனால் லோக்கல் போஸ்ட் மாஸ்டரை ஃபிரண்டு பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.. இன்றைய கால கட்டத்தில் மொபைல் போன் நம்பர் கிடைக்கும். மேக்தூத்த கார்டு வந்தால் அவர் உங்களுக்கு போன் செய்வார்.. ஓடிப்போய் பல்க்காக ஒரு ஐம்பது, நூறு ரூபாய்க்கு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். கவலை வேண்டாம். நாம் எழுதி எழுதி அது தீர்வதற்குள் அடுத்த செட் மேக்தூத் கார்டு வந்து விடும்.. வேறு யாராவது விளம்பரம் கொடுப்பார்கள். அப்படி வந்த முதல் விளம்பரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "பாபா"..

பின்னூட்டம் ஐந்து

ஸோ... மேக்தூத் கார்டின் உள்ளே உள்ள அகன்ற பக்கத்தில் நம் ஜோக்கை எழுதி விட்டு கீழே நம் அட்ரஸை நுணுக்கி நுணுக்கி எழுத வேண்டும். அதற்கும் ஒரு ஐடியா. ஐம்பது ரூபாய் கொடுத்து ரப்பர் ஸ்டாம்பு செய்து வைத்துக்கொள்ளுங்கள்... (சுஜாதா எழுதியது ஞாபகம் இருக்கிறதா? குளச்சல் ஜார்ஜ் என்பரை ஓட்டு ஓட்டு என்று ஓட்டியிருப்பாரே - நாங்கள்லாம் குளச்சல் ஜார்ஜ் கோஷ்டி "சுஜாதா வீட்டில் ஒரு நாய் இருக்கிறது, அது ஆங்கிலத்தில் பேசினால் புரிந்து கொள்கிறது") நம் அட்ரஸ் மட்டுமல்ல. தனித்தனியாக ஆனந்த விகடன் அட்ரஸ், குமுதம், குங்குமம் மற்றும் வேறு என்னவெல்லாம் பத்திரிகைகளுக்கு நாம் அனுப்புகிறோமோ அவை அனைத்தின் அட்ரஸூம். (என்னிடம் கல்கி அட்ரஸூக்கு கூட ஸ்டாம்பு உள்ளது. (என்ன நக்கலா? சிரிக்காதீர்கள். எத்தனை கார்டில் அட்ரஸ் எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி அனுப்புவீர்கள். இம்போசிஷன் மாதிரி, முட்டி பெயர்ந்து விடும்) ஒரு ஜோக் பிரசுரமாக வேண்டுமென்றால் பத்து ஜோக் அனுப்ப வேண்டும். சமயத்தில் இருபது முப்பது (விகடனுக்கு) அனுப்பினால் போனால் போகிறதென்று ஒன்றே ஒன்று தான் பப்ளிஷ் ஆகும்..

பின்னூட்டம் ஆறு

சமயத்தில் ஒரு மாதம் அதாவது நான்கு வாரங்களாக நம் ஜோக்கே வராது எந்தப்பத்திரிகைகளிலும். அந்த சமயத்தில் ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.. சொந்தக் காசில் புக்கும் கார்டும் வாங்க மாட்டேன்.. பரிசாக வந்த பணத்தில் மட்டுமே வாங்குவேன் என்று. ஸோ போனமாதம் பரிசாக வந்த பணத்தில் மட்டும் விகடன், குமுதம், இந்தியா டுடே, கல்கி, ஆனந்த ஜோக்ஸ் எல்லாம் வாங்கினால் அந்த காசு தீர்வதற்குள் நமது அடுத்த கடிதமோ அல்லது ஜோக்கோ பிரசுரம் ஆக வேண்டுமே என்ற வெறி வரும்... எழுதித்தள்ளுவோம். கண்டிப்பாக அடுத்த வாரமே பப்ளிஷ் ஆகும். (மறுபடியும் நக்கலாய் சிரிக்காதீர்கள். எனக்குத் தெரிந்த ஜோக் எழுத்தாளர் ஒருவர். அவருக்கு மாதச் சம்பளம் கம்மி. இந்த மாதிரி மாதா மாதம் வரும் பணத்தில் தான் அவர் தனது பையனுடைய ஸ்கூல் ஃபீஸே கட்டுகிறார்)

பின்னூட்டம் ஏழு

இது போன்ற ஜோக் எழுத்தாளர்கள் பற்றிய "அறிவுத்திருட்டும், துணுக்கு எழுத்தாளர்களும்" என்ற எனது ஆதங்கக் கட்டுரை உயிரோசையில வெளியானது. அதன் லிங்க் இதோ... http://yeskha.blogspot.com/2010/08/blog-post_11.html

இந்தப்பதிவுக்கு ரொம்ப நேரமாக என்ன தலைப்பு வைப்பது என்று யோசித்து அவர் வைத்த தலைப்பையே கரெக்ஷன் போட்டு "பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி" என்று போட்டு விட்டேன். செந்தில் கோபித்துக்கொள்ளாமல் இருக்கக் கடவது..

-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

செவ்வாய், 18 ஜனவரி, 2011

புத்தகக் கண்காட்சி - ஒரு கண்டுபிடிப்பு, ஒரு காமெடி, ஒரு ஐடியா

புத்தகக் கண்காட்சி பற்றிய எனது முந்தைய பதிவு புத்தகக் கண்காட்சி, சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், நான், அபி.....

அந்தப்பதிவை நமது சக பதிவர் சாரு நிவேதிதா (ஹி... ஹி... ஹி... எப்பூடி.....) தன்னுடைய சாரு ஆன்லைன் டாட் காமில் லிங்க் கொடுத்திருக்கிறார். இதை அங்கே படிக்க............ சாரு ஆன்லைன்.காம்இந்த முறை புத்தகக் கண்காட்சிக்கு என்னுடைய கேமராவோடு போயிருந்தேன். ஒரு செம மேட்டர் சிக்கியது. இந்தப் பக்கத்தில் உள்ள போட்டோவைப்பாருங்கள் ஐயா... எதையாவது கண்டு பிடித்தீர்களா? அட்டைப்படத்தில் "நற்றினை" என்று தப்பாக இரண்டு சுழி "ன" அச்சடிக்கப்பட்டிருக்கிறது. உள் பக்கத்தில் "நற்றிணை" என்று மூன்று சுழி "ண" பிரிண்ட் ஆகி இருக்கிறது.

நமக்கே நாலு முறை படித்தால் "நற்றிணை"-க்கு ஸ்பெல்லிங் எனக்கு மறந்து போய் விடும் போலிருக்கிறது. இந்தக் கொடுமையை செய்தது எந்தப்பதிப்பகம் என்று நினைவில்லை.. பெரியப்பா கூப்பிட்டுக்கொண்டே இருந்தாரா?? . அந்த அவசரத்தில் பதிப்பகத்தின் பெயரை கவனித்தது மறந்து போய்விட்டது. இருந்தாலும் அங்கே கொட்டிக் கிடந்த எல்லா புத்தகங்களையும் இன்னோரு ஃபோட்டோ எடுத்து வந்தேன். அதை வைத்து எதையாவது கண்டு பிடிக்க முடியுமா பாருங்கள்?

இப்படி ஒரு சங்க இலக்கியப் புத்தகத்தையே தப்பாக அச்சடித்து அதையும் தைரியமாக இலட்சக் கணக்கானோர் கூடும் புத்தகக் கண்காட்சியிலேயே கொண்டுவந்து விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.. எந்த மாங்கா மடப்பயல் (அவனுக்கென்னங்க மரியாதை?) புரூஃப் பார்த்தானோ தெரியவில்லை. நல்ல வேளை......... மூலமும் உறையும் (???) என்று போடாமல் போனார்கள்.. உறை நாறியிருக்கும்...


அப்புறம் இங்கே வரும்போது ஒவ்வொரு முறையும் இன்னோரு காமெடி ஸ்டாலை கடப்பது வழக்கம். ஜோ மல்லூரி என்று ஒரு கவிஞர் (?) தனியாக ஸ்டால் போட்டிருப்பார். அவருக்கு பேனரெல்லாம் வழியிலேயே பட்டையைக்கிளப்பும். உண்மையிலேயே அவர் கவிஞரா என்று தெரியாது.. நான் எங்கேயும் (புத்ததகக் கண்காட்சி தவிர) அவர் பெயரை கேள்விப்பட்டதே இல்லை. ஒரு வேளை மலையாளியோ? இருக்காதே.. இருந்தால் ஜெயமோகன் எங்காவது பறஞ்சிருப்பாரே... அல்லது சாருவாவது எங்கேயாவது திட்டியிருப்பாரே....

ஸ்டாலை க்ராஸ் செய்தால் ரொம்ப சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டிருக்கும். நன்றாக மங்கி குல்லா போட்டு, ஒரு புரொஃபஷனல் போட்டோகிராபரை வைத்து போட்டோ எடுத்துக்கொண்டு ரஜனீஷ் லெவலுக்கு போஸ் கொடுத்து, சூப்பராய் நான்கு ஃப்ளக்ஸ் போர்டுகள் வைத்துக்கொண்டு....... "கவிஞர் ஜோ மல்லூரி யின் படைப்புலகம்" என்று ஒரு ஃப்ளக்ஸ் இருக்கும். இந்த முறை "அம்ரித்தா எனும் அழகியோடு" என்ற பெயரில் கூடுதலாக ஒரு புத்தகத்திற்கான பேனர். (சரோஜாதேவி புத்தகமோ?)அடுத்த முறை இதே மாதிரி நானும் ஒரு ஸ்டால் போட்டு விடலாமா என்று பார்க்கிறேன். என்ன? ஸ்டால் வாடகை தானே போகும்? (எவ்வளவு என்று தெரியவில்லை) கொடுத்து விடலாம். ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதச் சம்பளமாக இருக்கலாம். போகட்டும். பேர் கிடைக்கும் அல்லவா? இன்றைக்கு ஜோ மல்லூரி பற்றி நான் எழுதுவது போல என்னைப்பற்றி நக்கலடித்தாவது நாலு பேர் எழுத மாட்டார்களா?

இடம் நிறைய இருக்கிறது என்று பதிவர் சந்திப்பு என்று போர்டு போடலாம். சுற்றிக்கொண்டிருப்போரில் எப்படியும் இருபது முப்பது பேராவது தேறுவார்கள்... டெய்லி பதிவர் சந்திப்பு தான். எப்படியும் ஒரு கைப்புள்ளை பதிவர் புத்தகம் எழுதியிருப்பார். நம்ம ஸ்டாலிலேயே வெளியிட்டுக்கொள்ளலாம். கண்காட்சிக்கு வரும் யாராவது வி.ஐ.பியை கெஞ்சிக்கூத்தாடி வரவழைத்து போட்டோ போட்டுக்கொள்ளலாம்.

நான் புத்தகமே வெளியிடத்தேவையில்லை. புத்தகத்தின் அட்டைப்படம் போல ஃப்ளக்ஸ் போர்டுகள் தயார் செய்து (மொத்தம் நான்கு விதமான புத்தகங்கள்) வைத்துக்கொள்ளலாம். ஐநூறே ஐநூறு ரூபாய் தான் செலவாகும். அப்புறம் நம்ம ஃபோட்டோ.. ஒரு நாலஞ்சு விதமாக.. (பொண்ணு பார்க்கக் கொடுக்கணும்.. ஸ்டூடியோ போய் எடுத்துட்டு வா எடுத்துட்டு வா என்று வீட்டில் ரொம்ப நாளாக அரித்துக்கொண்டிருக்கிறார்கள்) ஒரே கல்லுல ரெண்டு மாங்கா...

ஸ்டால் வாசலில் ஒரு இருநூற்றைம்பது ரூபாய்க்கு மசாலா கடலை பாக்கெட்டுகளை வாங்கிப்போட்டு, (சாம்பிளுக்கு இரண்டிரண்டு கொடுப்பார்களே அந்த மாதிரி) ஸ்டாலுக்கு வரும் வாசகர்களுக்கு கொடுத்தால் அந்த சுவை நாக்கில் நிற்கும் வரை இன்னும் இரண்டு கடலை கிடைக்காதா என்று நிற்பார்கள். அந்த கேப்பில் ஒரு லெட்ஜர் போட்டு "சும்மா உங்கள் முகவரியை மட்டும் எழுதுங்கள், எங்கள் கார்திக் (த் விட்டுப்போயிற்றே என்று பார்க்கிறீர்களா? இப்படி எதாவது செய்தால் தான் இலக்கியம். நாலு பேர் கவனிப்பார்கள்) பதிப்பகத்தின் கேடலாக் உங்கள் வீடு தேடி வரும் என்று சொல்லிவிடலாம், கவிதை அல்லது கட்டுரைப் புத்தகங்களை முன்பதிவு செய்வோர்க்கு 25% டிஸ்கவுண்ட் என்றால் இன்னும் நிறைய கூட்டம் தேறும். நான்கைந்து லெட்ஜர்கள் வாங்கி வைக்க வேண்டியிருக்கும்.

பிற்பாடு அந்த லெட்ஜர்களை அப்படியே ஒரு ரேட் பேசி ஏதேனும் டேட்டாபேஸ் கம்பெனிக்கு விற்று விடலாம். (மக்களே....... உள்ளே நுழையும் போது என்ட்ரி கூப்பனில் உங்கள் பெயர், முழு முகவரி, வீட்டுக்கு போகும் குறுக்கு வழி, போன் நம்பர், ஈ.மெயில் ஐடி எல்லாவற்றையும் எழுதிப்போடுகிறீர்களே. அதெல்லாம் இப்படித்தான் விலை போகிறது. அப்புறம் கொஞ்ச நாள் கழித்து கிரெடிட் கார்டு, டூவீலர் லோன் காரன்லாம் எப்படி என் நம்பரைக்கண்டு பிடித்தான், இது புது நம்பராயிற்றே என்று மனைவியிடம் குழம்பிக்கொண்டிருப்பீர்கள்) அப்படி விற்றால் எப்படியும் ஒரு பதினைந்தாயிரம், இருபதாயிரம் தேறும். இன்னும் கொஞ்சம் நிறைய பணம் தேறினால் நிஜமாகவே ஒரு புத்தகம் போட்டு அடுத்த கண்காட்சியில் மனுஷ்ய புத்திரனை (கெஞ்சிக்கேட்டு) வெளியிடச் சொல்லலாம். ரொம்ப நல்லவர், பத்து நிமிடம் ஒதுக்கி வரமாட்டாரா?

இந்த மாதிரி நிறைய ஐடியாக்கள் ஸ்டாக் இருக்கிறது. அப்பப்போ ஒரு ஆயிரத்தை வெட்டுனீங்கன்னா இந்த ஐடியா டிப்போல இருந்து நெறைய ஐடியா வாங்கிக்கலாம். விபரங்களுக்கு தொலைபேசுங்கள் (நம்பரைக்கண்டு புடிக்கிறது ரொம்ப ஈஸி)..

-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

திங்கள், 17 ஜனவரி, 2011

நீயா? நானா?வில் கலந்து கொள்வது எப்படி?

அன்புத்தாய்மார்களே....அருமைப்பெரியோர்களே........ நான்தான் நீயா? நானா? விஜய் டி.வி புகழ் (??????????) கார்த்திக் பேசுகிறேன்...

கடந்த இருநாட்களாகவே ஒரே ஃபேன்ஸ் தொந்திரவு... என்னமா பேசிருக்க நீ? சூப்பர். ஆஹா... ஓஹோ.. அஹா.. ஒஹோ.. எஹே என்றெல்லாம் கமெண்ட்ஸ்.. ஒரே எஸ்.எம்.எஸ், ஈ.மெயில்ஸ், போன் கால்ஸ். நீயா? நானா? வில் எப்படி கலந்து கொள்வது? எப்படி கலந்து கொள்வது? என்று ஒரே கேள்வி மழை.. மெயில் மேல் மெயில் வேறு வந்து குவிந்து (???) கொண்டிருக்கிறது. பலருக்கும் என்னைப்பார்த்து ஒரே பொறாமை வேறு.

வீட்டில் திருஷ்டி சுத்திப்போடச்சொல்லியிருக்கிறேன்.

(ஓவர் பில்டப் இல்ல? அறிந்தும், அறியாமலும் படத்தில் கிருஷ்ணா சொல்வது போல - அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் மீனாக்கா கூட ஓடி வர்ற பசங்கள்ல முதல்ல ஓடி வர்ற பையன் யாரு? ஆங்... நான்தான் அதுக்கு தான் இவ்ளோ ஃபேன்ஸ் - என்று சொல்வாரே? ஞாபகம் இருக்கிறதா?)

சரி.. சரி.. சீரியஸ்... மெயில் மூலமாகக் கேட்ட நண்பருக்கு நான் அனுப்பிய பதில் மெயிலை இங்கே தருகிறேன்.


விஜய் TV யின் நீயா? நாணா? நிகழ்ச்சியில்கலந்து கொள்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை. நான் சில எண்கள் தருகிறேன். (அது தான் விளம்பர இடைவேளைக்கு முன்பு டி.வியிலேயே வருகிறதே)

போன் செய்து - நான் நீயா நானாவில் கலந்து கொள்ள விரும்புகிறேன் என்று சொல்லுங்கள்.

உங்கள் விபரங்கள் கேட்பார்கள்.

பிறகு உங்கள் பயோ டேட்டா அனுப்பச் சொல்வார்கள்.

பிறகு உங்கள் போட்டோ அனுப்பச் சொல்வார்கள்.

சில வாரங்களோ அல்லது மாதங்களோ கழித்து உங்கள் படிப்பு, சூழ்நிலை, தகுதி, தோற்றம் ஆகியவற்றிற்குத் தோதான ஒரு தலைப்பு வரும்போது நீயா நானாவில் கலந்து கொள்ள அழைப்பார்கள்.

விருப்பமும் நேரமும் இருந்தால் கலந்து கொள்ளலாம். (பஸ் சார்ஜ், தங்குமிடம் ஏற்பாடு அனைத்தும் உங்களுடையது. கலந்து கொள்பவர்களுக்கு அவர்கள் தருவது மதிய உணவும், இரண்டு முறை டீயும் மட்டுமே)

எப்படி? ஈஸியாக இருக்கிறதா? இப்படித்தான் நானும் செய்தேன். சப்ப மேட்டர்.

நீயா? நானாவில் கலந்து கொண்ட கொடுமையின் புலம்பலாக என் முந்தைய பதிவு இங்கே...நீயா நானா வில் நான்

எங்க? இப்போ எல்லாரும் சொல்லுங்க பார்க்கலாம்? வடிவேலு ஸ்டைல்ல... இது உங்கள் சொத்து......... இது உங்கள் சொத்து.........

அப்புறம் இன்னொன்று........... என்னிடம் மைக்கே வரவில்லை. நான் பேசியதை எடிட்டிங்கில் கட் செய்து விட்டார்கள். டி.வியில் என் மூஞ்சி சரியாகவே தெரியவில்லை, ஆயிரம் ரூபாய் தண்டச்செலவு, ஒரு நாள் லீவு வேஸ்ட் என்றெல்லாம் (என்னை மாதிரி) புலம்பக்கூடாது. ஓக்கே?

-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

கலவை சாதம் (17/01/2011)

பெட்ரோல் விலை மீண்டும் ஏறியிருக்கிறது. உடனடி அமல் ரூபாய் இரண்டு ஐம்பது லிட்டருக்கு.. விலையேற்றம் மட்டும் உடனடியாக அமலுக்கு வருகிறது. ஆனால் விலைகுறைப்பு என்றால்? வரமாட்டேனென்கிறது. ஒருமுறை கச்சா எண்ணெயின் விலை மிகவும் குறைந்து போன பிறகு, அதிலிருந்து லிட்டருக்கு இரண்டு ருபாயை குறைப்பதற்கு எத்தனை நாள் மீட்டிங் போட்டார்கள். பல நாள் பேசி பேசி பேசி பேசி அப்புறமாக ரொம்ப நாள் கழித்து பிறகுதான் அமலுக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் விலை ஏறும்போது மட்டும் "இன்று நள்ளிரவு முதல்" என்ற ஒற்றை அறிவிப்போடு... இந்த நேரத்தில் ஒரு லிட்டர் எழுபது பைசா என்று என் பைக்குக்கு பெட்ரோல் போட்டிருக்கிறேன் என்று தலைவர் சுஜாதா சொன்னது நினைவுக்கு வருகிறது. எழுபதைத்தொடப்போகிறது இன்னும் ஒரே வருடத்தில்.. கடவுளே இது எங்கே போய் நிற்குமோ?

-------------------------------------------------------------------

நீயா? நானாவில் கஷ்டப்பட்டு பேசிய பல பாயிண்டுகளில் நிறைய எடிட்டிங்கில் போய்விட்டது. என்ன தவம் செய்தனை? எனக்காக தன் நண்பர்களையும், குடும்பத்தினரையும் அழைத்து டி.வி முன்னால் உட்கார வைத்து நீயா நானா பார்க்க வைத்து, நான் நிறைய முறை பேசவில்லை என்று போன் போட்டு என்னைத்திட்டிய 23 அன்பர்களுக்கும் நன்றி. நான் டி.வியில் வந்தபோதெல்லாம் மெஸேஜ் அனுப்பி சேட்டில் இருந்த சுமார் 40 பேருக்கும் ஸ்பெஷல் நன்றி..

-------------------------------------------------------------------

ஆனந்த விகடனில் சாரு வின் மனம் கொத்திப் பறவை போன வாரமே முடிந்து விட்டது. அவரே முடித்து விட்டாரா? அல்லது ---------------------------------------------? அதுவே விகடன் பிரசுரம் மூலம் புத்தகமாகவும் வந்து விட்டது. சென்னை புத்தகக் காட்சியில் இருந்ததாகக் கேள்வி. அடுத்து விகடனில் மீண்டும் எஸ்.ரா வந்தால் நன்றாக இருக்கும். அல்லது என்னுடைய கணிப்புப் படி நாஞ்சில் நாடனை வைத்து ஒரு தொடர் வெளியிடுவார்கள் என்று நினைக்கிறேன். கரண்டில் லைம் லைட்டுக்கு வந்திருப்பவராயிற்றே...

-------------------------------------------------------------------

டிவிட்டரில் நாம் நிறைய பேரை ஃபாலோ செய்கிறோம்.. ஆனால் நம்மை நிறைய பேர் ஃபாலோ செய்ய வைப்பது எப்படி? அன்பர்கள் யாரேனும் வழி சொன்னால் நன்றாக இருக்கும். மேலும் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் உபயோகிக்க சிறந்த மொபைல் போன் மாடல் என்னவென்று சொன்னால் நன்றாக இருக்கும் (தமிழ் டைப்பிங் வசதியுடன்)

-------------------------------------------------------------------

ஆடுகளம், சிறுத்தை, காவலன் மூன்றுமே தேறும், நன்றாகப்போகும் என்று சொல்கிறார்கள். படங்கள் எப்படி? எதை முதலில் பார்க்கலாம்? தியேட்டரில் போய் காசு கொடுத்துப்பார்க்கலாமா? அல்லது கொஞ்சம் வெயிட் பண்ணலாமா? இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக சுறா சன் டி.வியில் இன்று ஒளிபரப்பாகித் தொலைத்தது. சந்தோஷூடன் 75 ரூபாய் கொடுத்து போனது வேஸ்டாகிப்போனது. நல்ல வேளை.. சிக்கு புக்கு வுக்கும் அந்த மாதிரி தான் கூப்பிட்டார்கள். நான் போகவில்லை.

இன்றைக்கு விஜய்யில் சிக்கு புக்கு, அய்யனார், அந்தப்பக்கம் ஈரம், இந்தப்பக்கம் மதராசப்பட்டினம், வேறெதோ டி.வியில் சேரனின் பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, இன்னோரு சைடில் அருணாச்சலம், வேறு ஒரு சைடில் முரட்டுக்காளை என்று இரட்டை இரட்டையாக படங்கள் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தன. ஸோ........... அவசரப்பட்டு எந்தப்படத்துக்கும் போக வேண்டாமென்று நினைக்கிறேன்.

-------------------------------------------------------------------

போனவாரம் சென்னை போனபோது பாரீஸ் கார்னரில் சுமார் 35 டிவிடிக்கள் வாங்கி வந்தேன். ஒன்று ரூபாய் பனிரெண்டு ஐம்பது என்ற கணக்கில். எல்லாமே இங்கிலீஷ் படங்கள் தான். காம்போ பேக் வேறு.. ஒற்றைப்படம், இரட்டை, நான்கு, டிராலஜீ சீரீஸ் வகை, க்ளாஸிக் வகைகள், ஆஸ்கர் கலெக்ஷன், உலகப்படம் என்று கலவையாக. முப்பது ரூபாய் சொன்னார்கள். பேசிப்பேசி பேரம் படிந்து 35 டிவிடிக்களை எடுத்துக்கொண்டு மொத்தமாய் 430 ரூபாய் கொடுத்து விட்டு நடையைக்கட்டி விட்டேன். போட்டுப்பார்த்ததில் அவ்வளவு தெளிவாக இல்லாவிட்டாலும் ஓக்கே ரகம் தான் எல்லாமே. பிரச்சினை என்னவென்றால், பாரீஸ் கார்னரில் நல்ல கடைகளை, நல்ல பிரிண்ட் உள்ள டிவிடி கடைகளை கண்டுபிடிப்பது தான் கஷ்டம். இப்போது ப்ளூ ரே டிஸ்க் என்று ஒன்று வந்திருக்கிறது. பிரிண்ட் ஓக்கே. ஆனால் ஆடியோ ப்ராப்ளமாக இருக்கிறது. பார்க்கலாம். சேலத்திலும் அதே தரத்தில் தான் கிடைக்கிறது.. ஆனால் முப்பது ரூபாய் சொல்கிறார்கள். ஓசூரில் நாற்பது. அதான்... சென்னை ரேட் பரவாயில்லை என்று வாங்கிவிட்டேன்.

-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

நீயா நானா வில் நான்

நான் பங்கேற்ற நீயா? நானா? ஷோ இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) இரவு 9 மணிக்கு விஜய் டி.வி.யில். (ப்ளூ ஷர்ட் - மேலிருந்து இரண்டாவது ரோ கடைசி சீட்) அன்பர்கள் பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள்

தலைப்பு "சிறு வயதில் இருந்தே கதைப்புத்தகங்கள் படித்து வளர்வது நல்லதா? கெட்டதா?" என்பது. ஆனால் இன்றைக்கு டி.வியில் டிரெயிலர் பார்த்தால் "நாவல் படிப்பது நல்லதா? கெட்டதா?" என்று மாறியிருக்கிறது.


ஆக்சுவலி நீயா? நானாவுக்கு நான் பெயர் கொடுத்ததென்னவோ வேறொரு ஷோவுக்காக. ஆனால் திடீரென்று ஒரு வெள்ளிக்கிழமை (அன்றைக்கு டீம் பசங்களுக்கு ஒரு டிரெயினிங் செஷன் போய்க்கொண்டிருந்து) வந்த கால், நீங்கள் கதைப் புத்தகங்கள் படிப்பது உண்டா என்று கேள்வி கேட்க ஆரம்பித்தது. சுமார் பத்து நிமிடங்கள் ஒரு சின்ன இன்டர்வியூ எடுத்தார்கள். பிறகு "நாளைக்கே சென்னையில் ஷூட்டிங் என்றால் உங்களால் உடனடியாக வர முடியுமா?" என்றார்கள். ஓக்கே சொல்லிவிட்டேன்.

மறுநாள் மூன்று மணிக்கு ஷூட்டிங் மதியம் இரண்டரை மணிக்கே வடபழனி செந்தில் ஸ்டூடியோவுக்கு வந்து விடுங்கள் என்றார்கள். சரி என்று சொல்லிவிட்டு அன்று இரவே பஸ் ஏறி விட்டேன். பெரியப்பா வீட்டில் போய் தங்கி விட்டேன். பெரியப்பாவே டிராப் செய்கிறேன் என்று சொன்னார். நான் இரண்டரைக்கெல்லாம் போகவில்லை. மூன்று மணிக்கு தான் போனேன். நாங்கள் போன போது யூனிட்டே உணவருந்திக் கொண்டிருந்தது. வருபவர்களை எல்லாம் கூப்பிட்டு கூப்பிட்டு "சாப்பிட்டீங்களா?" "சாப்பிட்டீங்களா?" என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

செந்தில் ஸ்டூடியோவில் ஒரே ஒரு அரங்கம் - அட்டை, தகரம் எல்லாம் போட்டு. இந்தப்பக்கம் பாதி நீயா நானாவுக்கான ஷூட்டிங் செட். அந்தப் பக்கம் மொட்டை சுரேஷின் காதல் மீட்டர் ஷூட்டிங்குக்கான செட். நீயா? நானா ஷூட்டிங் நடந்தால் கேமரா, யூனிட் ஆட்கள் எல்லாம் காதல் மீட்டர் செட்டின் மேல் உட்கார்ந்திருக்கிறார்கள். காதல் மீட்டர் ஷூட்டிங் நடந்தால் அப்படியே முழு யூனிட்டையும் மாற்றி நீயா? நானா? செட்டின் மேல் உட்கார வைத்து ஷூட் செய்கிறார்கள். காதல் மீட்டரில் ஜோடிகள் நின்று விளையாடும் அந்த ரவுண்டான பலகையின் மீது அமர்ந்துதான் ஸ்டார்ட், கட், எடிட்டிங்க கரெக்ஷன் எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார் ஆன்டனி.

ஒரு பெரிய டீமே வேலை செய்து கொண்டிருந்தது. அதில் முக்கியமாய் பார்ட்டிசிபேன்ட்ஸை ஆர்கனைஸ் செய்து கொண்டிருந்தது ஜோதி, மஞ்சு என்ற இரண்டு பேர். அந்த அட்டை, கண்ணாடி செட்டின் மேல் ஏறி யாரும் உடைத்து விடாமல் பார்த்துக்கொண்டு, (அந்த சிகப்பு நிற) பள்ளத்தில் விழுந்த ஒரு கிழவியை தூக்கி விட்டு, பார்ட்டிசிபேன்ட்ஸ் எல்லாருக்கும் பொறுமையாய் பதில் சொல்லி, சேர் அரேஞ்ச்மென்ட்ஸ் செய்து....... புன்சிரிப்பும் கொஞ்சம் கலந்து...... எல்லா டென்ஷனையும் மனதுக்குள்ளேய வைத்து ஆடியன்ஸிடம் காட்டாமல் வேலை செய்தார்கள்.

இரவு ஷோவின் ஷூட்டிங் முடிந்து கிளம்பும் முன் ஜோதியிடம் போய் "மறுபடியும் நீயா, நானா வரணும்னா?" வாக்கியம் முடிக்கும் முன் "ஒன் இயர் ஆகும்..." என்றார், "வாட்? எஸ், அட் லீஸ்ட் நைன் மன்த்ஸாவது ஆகும். வீ டோன்ட் வான்ட் ரிபீட்ட் ஃபேஸஸ்". அதையும் புண்படாமல் எல்லாரிடமும் பொறுமையாய் ஒரு ஸ்மைலுடன் சொல்ல பெரிய மனசு வேண்டும். கிளம்பி வரும் போது ஜோதியையும், மஞ்சுவையும் எனக்கு ரொம்ப பிடித்துப்போயிற்று.

அப்புறம் அவர்களுக்கு அஸிஸ்ட் செய்யும் செல்வா. அவர் சென்னையில் எதோ ஒரு காலேஜில் விஸ்காம் படித்துக்கொண்டிருக்கிறாராம். இரண்டு மாதம் இன்டர்ன்ஷிப் - காக வந்திருக்கிறாராம். திரும்ப காலேஜ் போய் விடுவாராம். விருப்பம் இருந்தால் படிப்பை முடித்து விட்டு திரும்ப வந்து கூட இணைந்து கொள்ளலாமாம். அங்கே தலையை விரித்துப்போட்டு சுற்றிக்கொண்டிருந்த ஒருவரைக்காட்டினார். “அவர் எங்க சீனியர் தாங்க. என்னை மாதிரியே இன்டர்ன்ஷிப்புக்காக வந்திருந்தார். கோர்ஸ் முடிச்சுட்டு திரும்ப வந்து நிருபரா ஜாய்ன் பண்ணிட்டார்” என்றார்.

ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன் அவரைத்தான் நடு மேடையில் நிறுத்தினார்கள் கேமரா பொஸிஷன் பார்க்க... "செல்வா....... நடுவுல வந்து நில்லு... பார்ட்டிசிபேன்ட்ஸ்..... க்ளாப்... ஒரு நிமிடம்.. கைதட்டல் ஸ்லோவாக...... க்ளாப்ஸ் அகெய்ன், எல்லாரும் நடுவுல நிக்கிறவரைப்பாருங்க... ரெண்டு நிமிடம்....... க்ளாப்ஸ் ப்ளீஸ்..... செல்வா இங்க பாரு... கேமரா த்ரீ...... ஜிம்மி ஜிப்பை பார்க்காத... எல்லாரும் நடுவுல நிக்கிறவரையே பாருங்க... க்ளாப்ஸ் ப்ளீஸ்...... க்ளாப்ஸ் வித் ஸ்மைல்........" புரிகிறதா?

அதாகப்பட்டது நீங்கள் நீயா? நானா? (அல்லது சாலமன் பாப்பையா பட்டிமன்றம்) வை டி.வியில் பார்க்கும் போது நடு நடுவே ஆடியன்ஸ் கைதட்டுவது, சிரிப்பதை எல்லாம் காண்பிக்கிறார்கள் அல்லவா? (குறிப்பாக சன் டிவியில் கலாநிதி மாறனை காண்பிக்கும் போதெல்லாம் ஆடியன்ஸ் கைதட்டல் கிழிக்குமே) அதையெல்லாம் இப்படித்தான் முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொண்டு எடிட்டிங்கில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

இரண்டு மணி நேரம் ஒளிபரப்பாகவிருக்கும் ஷோவுக்கு.. நாலு மணி நேரம் ஷூட்டிங். நான் பேசியதெல்லாம் எடிட்டிங், கட்டிங், வெட்டிங், ஒட்டிங் எல்லாம் போக மிச்சம், மீதி ஏதாவது இருந்தால் வரும். நாங்கள் போன அன்று எங்கள் ஷோவுக்கு மட்டும் என்ன கஷ்டமோ தெரியவில்லை. இரண்டு பக்கமும் ஆள் பற்றாக்குறை. இரண்டு டீமிலும் அவர்கள் யூனிட் ஆட்கள் இரண்டிரண்டு பேர் அமர வைக்கப்பட்டார்கள். ஷோ சென்சிடிவ்வாக போக வேண்டும் என்பது தான் ஒரே மோட்டோ..

பங்கேற்பவர்கள் ஷோவை பற்ற வைக்கவில்லையென்றால் அவர்களின் யூனிட் ஆட்கள் அதைச்செய்வார்கள். ப்ளூ ஸ்டிரைப்ட டீ ஷர்ட் காரர் ஒருத்தர் எங்கள் டீமில் கீழ் ரோவில் இருப்பார் பாருங்கள். அது அவர்கள் ஆள். திகுதிகுவென்று முழுதாகப் பற்ற வைத்தார். எதிர் டீமில் ஒரு நாற்பது வயது அப்பா கேரக்டருக்கும அவருக்கும் சரியான சண்டை.

இந்த கேப்பில் பெரியப்பா என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். ஆள் பற்றாக்குறையால் நான் அந்த அம்மணியிடம் ஆரம்பத்தில் இருந்தே நச்சு நச்சென்று நச்சிக் கொண்டிருந்ததில் என் பார்வையையே தவிர்க்க ஆரம்பித்து விட்டார் அவர். அப்புறம் ஒரு வழியாய் ஸ்பெஷல் சிபாரிசின் பேரில் அவரை கூப்பிட்டு ஷோவில் உட்கார வைத்தாயிற்று... "வெரி குட்" என்று பாராட்டியபடியே ஸ்டேஜ் ஏறி வந்தார் என் பெரியப்பா. (ம்ம்ம்...... இன்னும் ஒரு வருஷத்துக்குத் தாங்கும்)

ஷூட்டிங்குக்கு உட்கார வைக்கும் போதே ஒரே களேபரம் தான். அந்த ரெட் சுடிதாரோட பிரவுன் ஷர்ட் க்ளாஷ் ஆகுது. ஏய், அந்த ப்ளூ ஷர்ட்டை (நான் தான்) த் தூக்கி நடுப்புற போடுப்பா.. கேமரா டூ...... ஆங்கிள் பாரு... "செட்டாகலை சார்" ரோ ஒன், ரோ டூவுல வயசானவங்களா அஞ்சு பேர் உட்கார்ந்திருக்காங்க பாரு. அவங்களுக்கு நடுப்புற அந்த ப்ளூ ஷர்ட்டைத் தூக்கிப்போடு.. "சார், இங்க வாங்க". கேமரா ஃபைவ் முறைத்தது. மஞ்சு ஓடி வந்து ப்ளூ ஷர்ட்டுக்கும் பக்கத்துல இருக்குற லேடியோட க்ரீன் ஜாக்கெட்டுக்கும் க்ளாஷ் ஆகுது சார்.

"நான் வேணா சட்டையைக் கழட்டிட்டு பனியனோட வந்து உக்காரவா?"

"சாரி சார்" அப்படி இப்படி என்று ஒரு வழியாக என்னை நாலு இடம் மாற்றி மேலிருந்து இரண்டாவது ரோவில் வலது கடைசியில் தூக்கி உட்கார வைத்தார்கள். என்னருகில் ஒரு சாணி கலர் சபாரி சட்டைக்காரர்.

நியாயமாக எனக்கு சஃபாரியும் பிடிக்காது, சஃபாரி போடுபவர்களையும் பிடிக்காது. ஆனால் என் பக்கத்திலேயே பொறுமையாக அமர்ந்திருந்த அந்த சபாரி சட்டைக்காரரைப்பார்த்தால் ரொம்பவும் பரிதாபமாக இருந்ததது. ஷோவில் மனுஷன் பேசியது அதிகபட்சம் இரண்டு வரி இருக்கலாம்.. பாவம் அந்த சபாரி சட்டைக்காரர், அவர் திருநெல்வேலியில் இருந்து பஸ் பிடித்து வருகிறாராம். “வருஷா வருஷம் கூப்பிடுறாங்க சார். நானும் பஸ் பிடிச்சி வருவேன். அதிகம் பேசல்லாம் மைக் கிடைக்காது”

அன்றைக்கு ஒரே நாளில் மட்டும் மூன்று ஷோக்களுக்கான ஷூட்டிங் நடந்தது. எங்களது ஒன்று. மற்றொன்று டைம் மேனேஜ்மெண்ட் பற்றி. மூன்றாவது ஷோ கணவன் மனைவி பற்றிய ஷோவாம். டைம் மேனேஜ்மெண்ட் சென்ற ஜனவரி ஒன்றாம் தேதி ஒளிபரப்பாகியது. கணவன் மனைவி பற்றிய ஷோ ஜனவரி 2ம் தேதி. எங்களது ஷோ நார்மல் ஸ்லாட்டிற்காக. இதுதவிர முந்தைய நாள் ஒரு ஷோ டைரக்டர்ஸ் ஸ்பெஷலாம். அது அப்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஃபிலிம் ஃபஸ்டிவெலுக்காக பதிவு செய்யப் பட்டதாம். அது ஒளிபரப்பானது நியூ இயர் ஸ்பெஷலில்.


டைரக்டர் ஆன்டனி பற்றி சாரு மூலமாகவும், அங்கங்கே கிசுகிசு பாணியிலான நியூஸ்கள் மூலமும் கொஞ்சம் கொஞ்சம் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அன்று தான் முதலில் பார்த்தேன். ஒரே நேரத்தில் ஆறு ஷோக்கள் செய்ததாகவும் அனைத்துமே ஹிட் என்றும் சொன்னார். கதையல்ல நிஜம், இப்படிக்கு ரோஸ் உட்பட. கோபிநாத் வெறும் பொம்மை. நடிகர். அவ்வளவு தான். ஷோ ப்ரேக் விட்டால் அடுத்த நொடி விடு ஜூட் தான். மேக்கப் ரூமில் போய் ஒளிந்து கொள்கிறார்.

கோபியின் இடது காதில் ஒரு சிறிய மைக்ரோபோன் இருக்கும். அதற்கு ஆன்டனியின் ஹேண்ட் மைக் மூலம் கட்டளைகள் போகின்றன. மைக்கை அந்த யெல்லோ சுடிதார் கிட்டே கொடு, அந்த ப்ளூ ஷர்ட், அந்த ரெட் ஸாரிகிட்ட என்று இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பறக்கின்றன. "வாவ்" சொல்லு.. "நீங்க ஏன் நாவல் படிக்கறதில்லை? லவ்வுங்கற விஷயம் உங்களை பாதிச்சுடுமா? திரும்பவும் கேளு, திரும்பவும் கேளு.." ரெண்டு பேர் சண்டை போடும் போது "அப்படியே விட்டுடு, விடு, விடு இன்னும் கொஞ்சம் ஹாட் ஆகட்டும், ம்... ம்... இப்போ கூல் பண்ணு" என்றவுடன் கோபி ஓடி வந்து "ஹேய்.. ஹேய்.. ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.. " என்று ஆஃப் செய்கிறார். இந்த ஷோ முழுக்க முழுக்க முன்பே கட்டமைக்கப்படுகிற ஒன்று. முன்பே ப்ளான் செய்யப்பட்ட, சரியாக வழிநடத்தப்படுகிற ஒரு தேர்ந்த நாடகம்..


அன்றைய ஸ்பெஷல் கெஸ்ட் யார் தெரியுமா? எஸ். ரா.. புத்தகங்கள் என்ற தலைப்பு இருப்பதனால் சாரு நிவேதிதா அல்லது எஸ்.ராமகிருஷ்ணன்தான் அழைக்கப்படுவார்கள் என்று நினைத்திருந்தேன். அதே போல் எஸ்.ரா வந்தார். மேக்கப் எல்லாம் போட்டுவிட்டார்கள் அவருக்கு. மனிதர் வந்தவுடன் விசில், கைதட்டல் பறந்தது எங்கள் டீமில் இருந்து. வேறு யார்? நானும் என் பின்னால் அமர்ந்திருக்கும் அருள் என்ற சிவப்பு சட்டைப்பையனும் தான். சிறந்த பத்து புத்தகங்கள் அல்லது சிறந்த பத்து ஆசிரியர்களைச் சொல்லுங்கள் என்று கோபி கேட்டவுடன் கடகடவென்று சொல்ல ஆரம்பித்து விட்டார். ப.சிங்காரத்தையும் (புயலிலே ஒரு தோணி), ஹெப்சிபா ஜேசுதாசனையும் (புத்தம் வீடு) சொல்வார் என்று நினைத்தேன். சரியாக அவர்கள் இருவரையும் குறிப்பிட்டார்.

ஓக்கே... ரொம்பவும் நீளமாகப்போகிறது... இந்த ஷோவில் விவாதிக்கப்பட்ட விஷயத்தைச் சொல்ல அவசியமில்லை. டி.வியில் பாருங்கள். எனக்கு வீடியோ கிடைத்தால் யூ ட்யூபில் அப்லோட் செய்து லிங்க் தருகிறேன்.

கதை படிப்பதுங்கறதே ஒரு போதை மாதிரி ஆயிடுச்சே சார் என்றார் எதர் பக்கததில் இருந்த ஒருவர். சரியாக என்னிடம் அந்த நேரம் வந்தது மைக். "சார், போதைங்கறது ஒரு சுகமான போதையா இருந்தா அதை சந்தோஷமா அனுபவிக்கலாமே" என்றேன். அந்த லைன் தான் டிரெயிலரில் ஓடியதாம். நண்பர்களும், உறவினர்களும் பார்த்து விட்டு போன் செய்தார்கள்.

ஷோவில் எங்கள் டீமிடம் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரங்கள் யார்? என்ற கேள்விக்கு கடவுளும் கந்தசாமி பிள்ளையும் கதையில் வருகிற கந்தசாமி பிள்ளை கேரக்டரும், சமகால சரித்திர நாவலான "காந்தளூர் வசந்த குமாரன் கதை"யின் கணேச பட்டரும் எனது ஃபேவரைட் என்று சொன்னேன்.

நீயா நானா குறித்து நான் இதற்கு முன்பு எழுதிய மற்ற இரண்டு பதிவுகள் இதோ...

நீயா நானா?, ஜெயமோகன் மற்றும் சாரு

நீயா, நானா, சுதந்திர தினம், நித்தி, ஜக்கி, விகடன்

-------------------------------------
இனிமேல் டிவி புகழ் ஏ.எஸ்.ஜி மேனேஜர் என்று தான் அடைமொழி போட வேண்டும் என்று பசங்களிடம் சொல்லி விட்டேன். அதே மாதிரி பொண்ணு பார்க்கும் போதும் "விஜய் டிவி புகழ்" என்று ஞாதகத்தில் சேர்க்கச் சொல்லியிருக்கிறேன். வீட்டில் முன்னால் மாட்டுவதற்கு ஒரு மர போர்டு வேறு செய்து வைத்திருக்கிறேன். கடவுளே, நிறைய எடிட்டிங்கில் போகாமல் இருக்க வேண்டும்.

ஜனவரி பதினாறாம் தேதி அதாவது நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு டெலிகாஸ்ட் ஆகிறது. அன்பர்கள் பார்த்து விட்டு கருத்துக்கூறவும். டார்க் ப்ளூ ஷர்ட் போட்டுக்கொண்டு கோபிக்கு வலது பக்க டீமில் மேலிருந்து இரண்டாவது ரோ கடைசி சீட்டில் அமர்ந்திருந்தேன்...

-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

வெள்ளி, 14 ஜனவரி, 2011

புத்தகக் கண்காட்சி, சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், நான், அபி.....

இந்தப் பக்கத்தை சாரு நிவேதிதா தன்னுடைய சாரு ஆன்லைன் டாட் காமில் லிங்க் கொடுத்திருக்கிறார். இதை அங்கே படிக்க............ சாரு ஆன்லைன்.காம்


இந்த முறை சென்னை புத்தகக் கண்காட்சி நடக்கும் போது நான் ஹோசூரில். கடவுளே மிஸ் பண்ணிவிடுவோமோ என்று நினைத்தேன். எப்படியாவது போய்விட வேண்டும் என்றும் ஆசைப்பட்டேன். (பெரிய இது....................... புத்தகக் கண்காட்சிக்கு போய் மட்டும் என்ன கிழிக்கப்போறே.. ஐநூறு ரூபாய்காவது புக்கு வாங்குவியா என்று கேட்டுக்கொண்டிருக்கும் மனசாட்சியை என்ன செய்வது?)

சென்ற வருடம் ஒன்பது முறை போய் வந்தேன். இந்த வருடம் ஒரே முறை. நிறைய புத்தகம் வாங்குகிறோமோ இல்லையோ.. அங்கே ஸ்டால் ஸ்டாலாய் சுற்றும் போது வரும் சந்தோஷம் வேறு எங்கேயும் (எனக்குக்) கிடைக்காது. சேலம் டிஸிஎல் (டிஸ்டிரிக்ட் சென்ட்ரல் லைப்ரரி) யின் ரெஃப்ரன்ஸ் செக்ஷனில் வரும் அதே ஃபீலிங்கு இங்கே கிடைக்கும். அது மட்டுமில்லாமல் இங்கே ஒவ்வொரு முறையும் தவறாமல் சாருவையும், மனுஷ்யபுத்திரனையும் பார்த்து விடுவேன்.

இந்த முறை கம்பேனியில் (ஆமா... பெரிய மன்னார் அன்ட் கம்பேனி............ ரொம்ப அளக்காதடா டேய் என்கிறீர்களா?) சென்னையில் இரண்டாவது ரிவ்யூ மீட்டிங் போட்டார்கள். அங்கே டவுசர் கிழிபட்டதையெல்லாம் பெருமையாய் வெளியில் சொல்லிக்கொள்ள முடியாது. ரிவ்யூ மீட்டிங் முடித்து மறுநாள் தங்கி விட்டேன். பெரியப்பாவிடம் போய் பிட்டைப்போட்டதில் அவர் டோட்டல் ஃபேமிலியையும் கிளப்பிக் கொண்டு புத்தகக் காட்சிக்கு வந்து விட்டார். ஞாயிற்றுக்கிழமை... கூட்டம் அம்மும் என்று சொன்னாலும், பரவாயில்லடா போலாம், விட்டா மிஸ்ஸாயிடும் என்று அழைத்துச்சென்று விட்டார்.

மூன்று டு வீலர்கள். இரண்டு பைக்குகளிலும் இரண்டு ஜோடிகள், ஸ்கூட்டி பெப் எனக்கு. சென்னை தெருக்களில் டூ வீலர் ஒட்டியதே இல்லை நான். ஒரு வழியாய் ஓட்டிக்கொண்டு வந்து அங்கங்கே வழி தெரியாமல் சதீஷ் அண்ணாவை சிக்னல் சிக்னலாய் ஃபாலோ செய்து (லைசென்ஸ் வேறு இல்லை) எப்படியோ சரியாய் போய்ச் சேர்ந்தேன். கேட் வரை ஸேஃபாக வந்தபின்பு அங்கே போய், எனக்கு சைடில் வந்த ஒரு கார்மேல் இடிக்கப்போய் பார்க்கிங்கில் இருந்த செக்யூரிட்டியை போலீஸ் என்று பயந்து, பார்க் செய்ய இடம் கிடைக்காமல் (என் பயில்வான் உடம்பை வைத்துக்கொண்டு) வண்டிகளை அட்ஜஸ்ட் செய்து நகர்த்தி என் ஸ்கூட்டியை பார்க் செய்து (ஸ்ஸ்ஸ்ஸ்....... அப்பா) டயர்டாகி உள்ளே நுழைந்தால் தலைவர் சுஜாதா என்ட்ரன்ஸிலேயே இரண்டு பேனர்களில் புன்னகைத்தபடி இருந்தார். அப்பாடா... வந்த சந்தோஷம் கிடைத்தாயிற்று..


வரிசையாய் இருந்த எல்லா கவுன்டர்களிலும் டிக்கெட் காலி. நானும் ஒவ்வொரு கவுன்டராக ஓடி ஓடிப்போய் பார்த்தேன். ஆனால் கடைசியில் இருந்த ஒரு மூத்திர நாத்த கவுன்டர் ஒன்றில் தான் வாங்க முடிந்தது. அதனுடன் இணைக்கப்பட்ட கூப்பனில் பெயர் எழுதிப்போட்டாயிற்று. ஏதாவது பரிசு (வேறென்ன புத்தகங்கள் தான்) கிடைக்காதா என்று.. நம்பிக்கை தானே வாழ்க்கை. ஆனால் கூப்பன் எழுதிப்போடும் போது என்னோட ராசி நல்ல ராசி பாட்டு ஓடியது என் மன எஃப். எம் மில். கோயமுத்தூர் பிக் பஜாரில் இதே போல் கூப்பன் எழுதிப்போட்டதில் வாஷிங் மிஷின் விழுந்தது பாவாவுக்கு (காசு கொடுத்து பொருள் வாங்கியதென்னவோ நானு - எங்க வீட்டுக்கோழி உங்க வீட்ல முட்டை போட்டா அது எனக்கா உனக்கா?) சரி விடுங்கள், அந்தக் கதையை அப்புறம் சொல்கிறேன். நம்ம பாவா தானே வைத்துக்கொள்ளட்டும். "டேய், உங்க பாவாவுக்கு எழுதிப்போட்ட மாதிரி எனக்கும் கூப்பன்ல பேர் எழுதிப்போடுடா, எனக்கு எதாவது கிடைக்குமா பார்க்கிறேன்" என்றார் பெரியப்பா.


உள்ளே போகும்போது மேடையில் நடிகர் சிவகுமாரின் புத்தகங்கள் வெளியீட்டு விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. தமிழருவி மணியன் பேசிக்கொண்டிருந்தார். "போய் சிவகுமாரை போட்டோ எடுத்துட்டு வாடா" என்றார் பெரியம்மா. "ஓக்கே" என்று பக்கத்தில் போய் மேடையில் இருந்த எல்லாரையும் ரெண்டு மூணு போட்டோ எடுத்துக்கொண்டு வந்தேன். பென் டென், பென் டென் என்று குதித்துக்கொண்டே வந்தான் அபி.

உள்ளே நுழைந்ததும் தினத்தந்தி ஸ்டால்தான். அவர்களின் "வரலாற்றுச் சுவடுகள்" தான் இந்த வருடத்திய டாப் சேல்ஸாம். கியூவில் நின்று வாங்கிக்கொண்டு போகிறார்கள். அப்புறம் சாருவின் தேகமும், நாஞ்சில் நாடனின் "சூடிய பூ சூடற்க"வும், போன வருடம் மாதிரியே இந்த வருடமும் நீயா நானா கோபிநாத்தின் "ப்ளீஸ், இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க"வும் நல்ல சேல்ஸ் என்று சொன்னார்கள். வேறு என்னென்ன புத்தகங்கள் என்று தெரியவில்லை. நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். இன்னும் ரெண்டுமுறை பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன் என்று சொன்னார்கள்.

நான் உயிர்மை ஸ்டாலில் சுஜாதாவுடைய "கணையாழியின் கடைசிப்பக்கங்கள்" வாங்கினேன். ஆட்டோகிராஃப் போடும் போது வாசகரின் பெயரைக்கேட்டு எழுதி கையெழுத்திடுவது மனுஷ்யபுத்திரனின் வழக்கம். போன முறை புத்தகக் கண்காட்சியில் "ஹைக்கூ, ஒரு எளிய அறிமுகம் (சுஜாதா)" புத்தகத்தில் மனுஷ்யபுத்திரனிடம் ஆட்டோகிராஃப் வாங்கினேன். (அப்போதும் சாருவிடம் வாங்கவில்லை) என்று சொன்னேன் ஞாபகம் இருக்கிறதா? (அதைப்பற்றிய பதிவு இது சுஜாதாவும் மனுஷ்ய புத்திரனும் அப்போதும் பெயரைக்கேட்டுதான் ஆட்டோகிராஃப் போட்டார்.

இந்த முறை புத்தகத்தை நீட்டி, குனிந்த படியே உயிரோசையில் கட்டுரைகள் எழுதி வருகிறேன் என்று சொன்னேன். உடனே பளிச்சென்று நிமிர்ந்து பார்த்தார். என்ன பெயர் என்றார்? சொன்னேன். உதட்டில் ஒரு இன்ஸ்டன்ட் புன்னகை உற்பத்தி ஆகியது. ஓ. அது நீங்கள் தானா என்று கேட்டார். உங்க கட்டுரைகளை படிச்சிருக்கேன் (தளத்தின் ஆசிரியராயிற்றே, படிக்காமல் இருப்பாரா?) நல்லா நகைச்சுவையா எழுதுறீங்க என்றார். சீரியஸ் கட்டுரைகள் பற்றிப்பேசவில்லை.

அப்போது சிறிது நேரத்திற்குக் கூட்டம் இல்லை. நான் ஆட்டோகிராஃப் வாங்கிவிட்டு பேசிக்கொண்டிருந்ததைப்பார்த்து "இவர் யார்?" என்று கேட்டது ஒரு ஃபேமிலி. நாற்பத்தைந்து மதிக்கத்தகக்க ஏதோ துபாய் ரிட்டன் ஆட்கள் போல இருந்தார்கள். எனக்கு இவரை கவிஞன் என்று சொல்வதா அல்லது பதிப்பாளன் என்று சொல்வதா என்று ஒரு கணம் தடுமாற்றம் ஏற்பட்டது.

உடனே சொல்வதற்காக இவர் பெயர் மனுஷ்ய புத்திரன் என்றேன். பிறகு ஸ்டாலைக் காண்பித்து அதிலிருந்த அவரது புத்தகம் ஒன்றைக்கைகாட்டி இவர் சமகாலத்திய ஒரு பெரிய கவிஞர் என்றேன். "அப்படியா?" என்றார் அவர். ஆமாம், இந்தப்பதிப்பகம் கூட அவருடையதே. அவரது கவிதைப்புத்தகங்கள் கிடைக்கும், வாங்கிப்படியுங்கள் என்றேன். உள்ளே பிதுங்கிக் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து விட்டு மேலேயும் கீழேயும் தலையை ஆட்டிவிட்டு போய்விட்டது அந்தக் கும்பல். அனேகமாக ஜூஸ் கடையில் மேய்ந்து கொண்டிருப்பார்கள் என்று நினைத்தேன். ஓழியட்டும்.


மனுஷ்ய புத்திரன் போட்டோ எப்படி இருக்கிறது? நானே எடுத்தது..

கொஞ்ச நேரத்தில் அங்கே வந்தார் சாரு... சும்மா ஜிகு ஜிகு என்று இருந்தார். ஒரு ஆரஞ்சு டி.ஷர்ட், காதில் ஒரு கோல்டு ரிங் (அது ரிங்கோ, கடுக்கனோ, கம்மலோ தெரியவில்லை), ப்ளூ ஜீன்ஸ் என்று நினைக்கிறேன். பளபளா, தளதளா என்று இருந்தார். முகம் முழுக்க சிரிப்பு. ஒரு கல்யாண வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டால் வருமே அந்தச் சிரிப்பு. எங்கோ அழககம் (பியூட்டி பார்லர்) போய் ஃபேஷியல் போட்டுக்கொண்டு வந்திருப்பார் போலிருக்கிறது.

உள்ளே சேல்ஸ் பாய்ஸ் (டெம்பரரியாக வேலைக்கு சேர்ந்திருக்கும்) இரண்டு பேர் சாரு கடந்ததைப் பார்த்து விட்ட அவரைப் பற்றி பேசிக்கொண்டார்கள். "டேய், அங்க பாரு. அவர்தான் சார் நிவேதா (அப்படித்தான் உச்சரித்தான் அந்தப்பையன்)", "யாரு அவரு?", "ரைட்டருடா", "ம்?, என்ன சொல்ற?", "பெரிய ரைட்டருடா அந்தாளு, செம சேல்ஸ் ஆவும் அவுரு புக்கெல்லாம், ரொம்ப பேமஸ்", "அப்டியா?", "ஆமாங்கறேன்", "என்னென்ன புக்கு எழுதிருக்காரு?", "அதெல்லாம் எனக்கு தெரியாது."

நானும் அவரிடம் புத்தகத்தில் ஆட்டோகிராஃப் வாங்கலாமா என்று யோசித்தேன். ஆனால் முதலில் மனுஷ்யபுத்திரனிடம் வாங்குவது என்று முடிவு செய்து விட்டேன். வாங்கியபின் சாருவிடம் போனால் என்ன நினைப்பார் என்று சொல்ல முடியாது. மனுஷ்யபுத்திரனின் கையெழுத்துக்குக் கீழே ஆட்டோகிராஃப் போடுவாரா இல்லையா என்று தெரியாது. அல்லது ஆட்டோகிராஃப் போட்டு விட்டு அப்புறம் போய் ப்ளாக்கில் ஏதாவது திட்டினால்?

"புத்தகம் வாங்குபவர்களுக்கு அறிவே இல்லை. யாருமே தத்தாஸ்கி, ஃபூக்கோ படிப்பதே இல்லை, கேரளாவில் எல்லாம் இந்த மாதிரி எழுத்தாளர்களை அவமானப்படுத்த மாட்டார்கள். ஒரே புத்தகத்தில் இரண்டு பேரிடம் கையெழுத்து வாங்கி இரண்டு பேரையும் இன்ஸல்ட் செய்கிறார்கள். இந்த ஹமீது சொன்னால் கேட்கவே மாட்டேனென்கிறார், இந்த மாதிரி என்னை இன்ஸல்ட் செய்வதற்கா நான் புத்தகக் கண்காட்சிக்கு வந்தேன்" என்றெல்லாம் எழுதி விட்டால் என்ன செய்வது என்று பயம் எனக்கு... நம்மைத் திட்டினால் ஒன்றும் பிரச்சினையில்லை. நம்ம பேர் கொஞ்சம் அடிபடும். ஆனால் நம்மால் வீணாக மனுஷ்ய புத்திரன் எதற்கு வம்பில் என்று................... ஸோ.......... சாருவிடம் ஆட்டோகிராஃப் வாங்கவே இல்லை...

கொஞ்ச நேரம் நின்று வேடிக்கை பார்த்து விட்டு மீண்டும் ஸ்டால்களை வேடிக்கை பார்க்கப்போய் விட்டேன். பெரியப்பா போன் செய்து கூப்பிட்டார். "டேய், ஸ்டால் நம்பர் F 3 யில மனுஷ்ய புத்திரனும், பார்த்திபனும் இருக்காங்கடா". நான் "நீங்க இன்னும் முதல் ரோவையே பார்க்கலையா?, நான் ஒரு ரவுண்டு அடிச்சுட்டு கடைசி ரோல ஜிஞ்சர் ஜூஸ் குடிச்சிகிட்டு இருக்கேன்" என்றேன்.


பார்த்திபன்தான்.
பிறகு F 3 க்கு போனால் பார்த்திபனை மொய்த்துக்கொண்டிருந்தது ஒரு கூட்டம். எட்டிப்பார்த்தேன். பழைய மினுமினுப்பு இல்லை. ஆயிரத்தில் ஒருவன் சோழ ராஜா போல ரொம்ப சுருங்கிப்போயிருந்தார் பார்த்திபன். ஆனால் கூட்டம் கணிசமாக இருந்தது. சுமார் முப்பது, நாற்பது பேர் இருக்கலாம். மனுஷ்யபுத்திரன் ஒரு ஓரமாக பரிதாபமாக (ஸாரி, அமைதியாக) வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். "என்ன? போட்டோ எடுக்கணுமா?" என்றேன் பெரியப்பாவிடம். இல்லை வேண்டாம் என்றுவிட்டார்.

அந்தப் பக்கம் சாரு நின்று கொண்டிருந்தார். அப்புறம் மனுஷ்யபுத்திரனும். இருவரிடமும் சமீபகாலமாக கவிஞர் என அறியப்படும் நர்சிம் பேசிக்கொண்டிருந்தார்.

பதிவு ரொம்பப் பெரிதாகப்போகிறது... ஒரு தொடரும் போட்டு விட்டு மீண்டும் தொடர்கிறேன். மணி விடிகாலை ஒன்று... ஜெயாம்மா வாசல் தெளிக்க வந்து விட்டார். போய் கோலம் போட் எல்ப் பண்ணுவோம்....

இதனுடைய தொடர்ச்சியான பதிவு... புத்தகக் கண்காட்சி - ஒரு கண்டுபிடிப்பு, ஒரு காமெடி, ஒரு ஐடியா

-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

நடு ரோட்டில் கிடக்கிறீர்கள், தலைக்கு மேல் லாரி, முகத்திற்கு நேரே அதன் பேக் வீல்(கள்)..

தலைப்பில் இருப்பது போன்ற ஒரு சூழ்நிலையை கற்பனை செய்து பாருங்கள். நடு ரோட்டில் கிடக்கிறீர்கள், தலைக்கு மேல் லாரி, முகத்திற்கு நேரே அதன் பேக் வீல்(கள்).. எப்படி இருக்கும் உங்களுக்கு..?

சென்ற வாரம் சேலத்தில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவம் பற்றி பேசலாம் என்றுதான். அதற்கு முன்னால்......

எனக்கு ஆட்டோக்காரர்கள் மீது பொதுவாக அவ்வளவு நல்ல அபிப்ராயம் கிடையாது. என்னதான் ஆட்டோக்காரர்கள் உங்கள் நண்பர்கள் என்று சொன்னாலும், ஒன்றிரண்டு குடும்பப் பாங்கான நாற்பது சொச்சம் வயதொத்த, மரியாதையாகப்பேசும் டிரைவர்களைப் பார்க்கும் போதும், வரும் மரியாதை இரண்டே நாளில் மீண்டும் சில ரவுடி ஆட்டோக்காரர்களைப் பார்க்கும் போது காணாமல் போய்விடுகிறது.

ரஜினி, விஜய் வகையறாவைச்சேர்ந்த ஹீரோக்கள் ஆட்டோ டிரைவர்களாக நடித்து அந்த வேலைக்கு ஒரு ஹீரோ இமேஜைக்கொடுத்து விட்டார்கள். இதனால் ஆட்டோ ஓட்டும் எல்லோருக்குமே தான் ஒரு ஹீரோ என்று நினைப்பு. இதெல்லாம் பெரிசுகள் சொல்வது போல் இள ரத்தம் ஓடும் வரை தான். பத்து வருடம் ஆட்டோ ஓட்டி பைல்ஸ் வந்து, சொட்டையும், தொப்பையும் விழுந்து, போகிற வருகிற போலீஸூக்கெல்லாம் வணக்கம் வைத்து, பிள்ளைகளுக்கு பீஸ் கட்டும் நேரத்தில் ஆட்டோ ரிப்பேர், மழை பிரச்சினைகளைச் சமாளித்து, (மைனாவில் தம்பி ராமையா புலம்புவதைப்போல) முக்கி முக்கி உழைத்தும் மூணு ஜட்டி கூட முழுசா மிச்சம் நிற்கல என்று புலம்பித் திருந்தும் வரை அந்த ஹீரோ இமேஜ் கொடுக்கும் திமிர் அடங்காது. அப்படி அடங்கிய பின் அட்வைஸ் செய்தாலும் அடுத்த தலைமுறை திருந்துவதாகத் தெரியவில்லை.

ஒருமுறை ஜூவியில் படித்ததாக ஞாபகம். நியாயமாக நாலு சவாரி பார்த்தாலும், ஆட்டோக்காரர்களின் தினசரி வருமானம் நானூறு முதல் அறுநூறு ரூபாய் வரை வரும். மாதம் சர்வ சாதாரணமாக பனிரெண்டாயிரம் ரூபாய் முதல் பதினைந்தாயிரம் ரூபாய் வரை பார்க்கலாம். சாதாரணமாக மாத வருமாத்னதிற்கு வேலைக்குச் செல்பவர்களை விட இவர்களின் வருமானம் அதிகம். ஆனால் என்னதான் அவ்வளவு வருமானம் வந்தாலும் மாமூல், தினசரி கூத்து, குடி போன்ற விஷயங்களுக்கே வீணாய்ப்போகிறது என்று எழுதியிருந்தார்கள்.

இதில் ஷேர் ஆட்டோக்கள் தனி வகை. ஷேர் ஆட்டோக்கள் பார்த்திருக்கிறீர்களா? நார்மல் ஆட்டோக்களை விட சைஸில் பெரியவை. கோவை, சென்னை, சேலம் உட்பட பல ஊர்களிலும் ஃபேமஸ். இங்கே சேலம் போன்ற ஊர்களில் பியாஜ்ஜியோ ஆபே வண்டிதான் பொதுவாக ஷேர் ஆட்டோ பணிக்கு உதவுகிறது...

சேலத்தில் ஏகப்பட்ட ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன. ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் பத்தாயிரம் ஆட்டோக்கள். ஒரு பெரிய கட்டிடத்தின் மாடியில் நின்று கொண்டு கீழே பார்த்தால் ஆட்டோக்கள் ஏதோ பேரணி நடத்துவது போலவே இருக்கும். ஆனால் அது சாதாரணமாக ஓடும் ஷேர் ஆட்டோக்கள் தான். அது சரி, இத்தனை ஆட்டோக்கள் ஓடினால் எல்லா டிரைவர்களிடமும் பக்காவாக லைசென்ஸ், ஆர்.சி வகையறாக்கள் இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? ஒவ்வொரு முறை நான் ஷேர் ஆட்டோ ஏறும் போதும் அவர்களிடம் சாதாரணமாக பேச்சுக்கொடுத்துக்கொண்டே இந்தக் கேள்வியை கேட்பது வழக்கம். பத்தில் ஒரு ஆட்டோக்காரரிடம் லைசென்ஸ் கிடையாது. இதில் பல ஆட்டோக்கள் லோக்கல் போலீஸாரின் பினாமிகளாம்.இது தவிர இரு மாதங்களுக்கு முன்பு, இன்னோரு மூவாயிரத்தைநூறு ஆட்டோக்களை இறக்கியிருக்கிறார்களாம். வரும் எலக்ஷன் வரையில் பர்மிட் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்று சொன்னார் ஒரு ஆட்டோ டிரைவர். சேலத்தில் இந்தப்பக்கம் புதிய பெரியாஸ்பத்திரி திறப்பு விழா, புதிய கலெக்டர் ஆபீஸ் திறப்பு விழா, கோர்ட் மற்றும் வணிக வளாகங்கள் திறப்பு விழா என்றெல்லாம் பெரிய மேட்டர்கள் நடந்து கொண்டிருப்பதால் எல்லா ரூட்டுகளிலும் ஆட்டோக்கள் ஓடும் என்று கேள்வி.

முக்கியமான ஏரியாக்கள் என்று பார்த்தால் கொண்டலாம்பட்டி பை பாஸ், சீலநாயக்கன் பட்டி பை பாஸ் என்ற இரண்டு பகுதிளுக்கு அதிக எண்ணிக்கையில் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இந்தப்பக்கம் பார்த்தால் அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை என்ற இரு பகுதிகளுக்கு. ஆனால் என்னவோ தெரியவில்லை. இன்னும் செவ்வாய்ப்பேட்டை பக்கம் ஷேர் ஆட்டோ விடுவதே இல்லை. ஒருவேளை சரக்கு லாரிகள் நிறைய இருக்கும் என்பதாலோ என்னவோ?

டிரைவர்களைப்பற்றிச் சொல்ல வேண்டுமானால்……….. ஸீட்டில் கோணலாக உட்கார்ந்து, பான்பராக், மாணிக்சந்த், சைனி சைனி ஏதாவது ஒன்று வாங்கி குதப்பிக் கொள்ள வேண்டியது. அதில் ஒரு சந்தோஷமான ஹீரோ இமேஜ். நானும், எப்போதும் ஷேர் ஆட்டோவில் போகும்போது அதன் டிரைவர் சீட்டில் டிரைவர் கூடவே ஒட்டிக்கொண்டு வருவதே என் பழக்கம். அந்த டிரைவர் தனக்குத் தோதான ஆள் யாராவது பேச்சுத் துணைக்கு மாட்டுவானா என்றே வருவார்கள். ஏதேனும் விஷயம் தெரிந்து கொள்ளலாம்.

சென்ற வாரம் நடந்த கோர சம்பவம் இது. ஒரு ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்த போது அந்த டிரைவர் புலம்பியபடியே வந்து கொண்டிருந்தான். ஒரு ஆட்டோக்காரன் செய்த தப்புனால ரெண்டு குடும்பத்தோட வாழ்க்கையே போச்சே என்றபடி புலம்பிக்கொண்டிருந்தான்.. என்னவென்று விசாரித்தால், அன்று ஒரு ஆக்ஸிடென்ட் நடந்திருக்கிறது.

சேலத்தில் பொதுவாக ஷேர் ஆட்டோக்களுக்கென்று எந்த ஒரு ஸ்டாப்பிங்கும் கிடையாது. கை காட்டும் இடத்திலெல்லாம் நிறுத்துவார்கள், கண்ட இடத்தில் நிறுத்துவார்கள், போட்டியின் காரணமாக நிறுத்துவார்கள். பஸ்ஸை முந்திக்கொண்டு போய் நிறுத்துவார்கள். சடன் ப்ரேக் போட்டு நிறுத்துவார்கள்.

அன்று சேலம் உடையாப்பட்டி பெருமாள் கோவில் மேடு என்ற இடத்துக்கு அருகில் (அம்மாப்பேட்டை ரூட்). இரண்டு பெண் குழந்தைகள், இரண்டும் ப்ளஸ் ஒன் படிக்கிற குழந்தைகளாம். சைக்கிள் ஓட்டியபடி போய்க் கொண்டு இருந்திருக்கிறார்கள். வழக்கம் போல் முன்னால் பின்னால் என எல்லாப்பக்கமும் ஷேர் ஆட்டோக்கள். முன்னால் போன அந்த ஆட்டோவின் பரதேசி டிரைவர் எதையும் கவனிக்காமல் சடன் பிரேக் அடிக்க பின்னால் சைக்கிளில் வந்து கொண்டிருந்த குழந்தைகள் இருவரும், ஷேர் ஆட்டோ மேல் மோதி (துரதிர்ஷ்டவசமாக வலது பக்கமாக) ரோட்டில் சைக்கிளோடு கீழே விழுந்திருக்கிறார்கள்.

எதிரே லாரி..

ஆனால் இவர்களைப்பார்த்த அந்த லாரி டிரைவர் குழந்தைகள் மேல் ஃப்ரண்ட் வீல் ஏறக்கூடாது என்று லாரியை வளைத்து இடப்பக்கம் திருப்ப முயற்சித்ததாகவும் ஆனால் அதையும் மீறி பேக் வீல் அந்தக் குழந்தைகள் மீது ஏறியிருக்கிறது என்று நான் சந்தித்த ஆட்டோ டிரைவர் சொன்னார். ஒரு பெண் குழந்தை ஸ்பாட்டிலேயே அவுட். இன்னொன்று ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் பின்னர் கோர மரணம். இத்தனைக்கும் காரணமான அந்த ஆட்டோக்காரன் என்ன செய்தான் என்று கேட்டால், "அதெப்டி சார்? இதைப் பார்த்துட்டு, நானாவே இருந்தாலும் சிட்டாப் பறந்துருப்பேன் இல்ல?" என்று கேட்டார் இந்த டிரைவர்.

லாரி டிரைவர் ஸ்பாட்டிலிருந்தே எஸ்கேப் வழக்கம் போல, ஆனால் க்ளீனரை பின்னி பெடலெடுத்து பிசிறு கடாசி விட்டார்கள் பப்ளிக். என்ன பிரயோஜனம்.? போன உயிர்கள் போனது தானே.. இத்தனைக்கும் அவர்களில் பலருக்கும் அங்கே உண்மையில் நடந்த இந்தக் கூத்துக்களும், இதற்குக்காரணமானவன் யார் என்றும் தெரியாது. (கிரிக்கெட்டில முதலில் டொக்கு டொக்கு என்று ஆடி ஓவரை வீணாக்கும் பேட்ஸ்மேனை விட்டு விட்டு, இந்தியா தோற்றுப்போகையில் கடைசி ஓவரில் உயிரைக்கொடுத்து ஆடிய பேட்ஸ்மேனை விளாசுவோமே, அந்த மாதிரி) ....

இப்போது மீண்டும்.................. நடு ரோட்டில் நாலு பக்கமும் வண்டிகள் போக வர இருக்கும் போது, நீங்கள் விழுந்து கிடக்க, உங்கள் முகத்திற்கு நேராக ஒரு பெரிய லாரியின் இரட்டை பேக்வீல் வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

அது மட்டுமல்ல...

இந்த ஆட்டோ அட்டகாசம் பற்றி கட்டுரை எழுதப்போகிறேன் என்று சொன்னபோது நண்பர் ஒருவர் சொன்னார். சில வாரங்களுக்கு முன்பு சேலத்தின் லோக்கல் டி.வி ஒன்றில் கொடுத்த பேட்டியில் திருவாளர் அமைச்சர் அவர்கள் என்ன திருவாய் மலர்ந்திருக்கிறார் தெரியுமா? போலீஸ்காரர்கள் தான் இதற்குக் காரணம். அவர்களுக்குச் சம்பளம் ரொம்பவும் குறைவு. அப்புறம் அவர்கள் தங்கள் வருமானத்துக்கு வேறு என்ன தான் செய்வார்கள்? வருமானத்திற்காக இப்படி பினாமி பெயரில் ஆட்டோ ஓட்டத்தான் செய்வார்கள் என்று..... எப்படி இருக்கிறது கதை... ?

எனக்கு ஒன்று புரியவில்லை.. யாரோ ஓனராக இருக்கட்டும் வண்டிக்கு. ஆனால் அதற்கென்று ஒரு லிமிட் இல்லையா? ஒரு ஊருக்கு இவ்வளவு தான் ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கும் அதிகாரம் போக்குவரத்துத் துறைக்கு இல்லையா? அல்லது இப்படியே போனால் இந்தப் பூனைகளுக்கு மணி கட்டுவது யார்?

இதோ இதை டைப்பி முடித்து விட்டு டீம் பையர் (பையனின் மரியாதைச்சொல் - அவருக்குத் திருமணமாகி விட்டதால்) ஒருவருக்கு கால் செய்தால் பதட்டமாகப்பேசினார். எங்க இருக்கீங்க என்றதற்கு "சார், என் கண் முன்னாடி ஒரு ஆக்ஸிடென்ட் சார். பைக்குல ரெண்டு பசங்க. ரோடு க்ராஸ் பண்ணும் போது தலை மேலேயே லாரி ஏறி, தலை கூழாகிடுச்சு சார். பயமாயிருக்கு, ஒய்ப் வேற என் கூட இருந்தாங்க. இதைப்பார்த்துட்டு கத்திட்டாங்க...

வாழ்க்கை............???????????-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------