செவ்வாய், 22 செப்டம்பர், 2020

எல்.ஐ.சி ஆன்லைன் இம்சைகள்

22 செப் 2015 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

பூவோட சேந்த நாரும் மணக்கும் (பாஸிடிவ் பழமொழி)

மேயற மாட்டை நக்கற மாடு கெடுத்த மாதிரி (நெகடிவ்)
.
என்றைக்குமே அரசு அலுவலகங்களில், அரசு சம்பந்தப் பட்ட பணிகளில் எனக்கு நல்ல அனுபவம் இருந்ததே கிடையாது (இருந்தாலும் 10 சதம் இருக்கலாம்). இம்முறை எல்.ஐ.சி அனுபவம். என்னுடைய பாலிஸிக்கு ஆன்லைனில் பணம் கட்டலாம் என்று அவர்கள் வெப்சைட்டில் நுழைந்து பேமெண்ட் கேட்வே வில் ஐசிஐசிஐ ஆன்லைன் மூலம் கட்ட முயற்சித்தால் எப்போதும் ப்ராம்ப்ட் ஆக சட் சட் என வேலை செய்யும் ஐசிஐசிஐ நெட் பேங்கிங் ரெண்டாவது பழமொழிக்கு உதாரணமாக இங்கே மட்டும் நொண்டியடிக்கிறது. (இம்சை 1) எல்லா ப்ராஸஸூமே ஸ்லோ அல்லது ரிஜெக்டட் அல்லது செஷன் எக்ஸ்பையர்ட் அல்லது ஒன் டைம் பாஸ்வேர்டு வரக்கூட லேட், அதனால் ஒரு ரிஜக்ட், ப்ளா, ப்ளா, ப்ளா. கட்டி முடிக்க ஒரு மணி நேரம் ஆச்சு. கொடுமை என்னவென்றால் பணம் இரண்டு முறை வேறு டெபிட் ஆகி விட்டது. (இம்சை 2)
.
ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட் கச்சேரி அனுபவம் உங்கள் எல்லாருக்குமே இருக்கும். எல்.ஐ.சி - யும் அஃதே. ஜாக்கிரதை. கடைசி நேரத்தில் போய் இந்த மாதிரி சைட்டில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
.
சரி, இந்த மாதிரி தவறுதலாக நடந்தால் இரண்டு வொர்க்கிங் டேஸில் பொதுவாக பணம் தானாக ரிட்டர்ன் வந்து விடும் என்று நான்கு நாட்களாக காத்திருந்தால் ஊஊஊஊஊ. இன்னும் வரவில்லை. (இம்சை 3). ஏஜண்டிடம் நம்பர் வாங்கி கஸ்டமர் கேருக்கு போன் செய்தால், சரியான ஆப்ஷன் நம்பர்களை அமுக்கி அமுக்கி அமுக்கி உள்ளே போனாலும் சரியாக ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் காத்திருக்கச் சொல்லி தானாக கட் ஆகிறது. (இம்சை 4). காத்திருக்கும் நேரத்தில் இந்தி பாட்டு வந்து கடுப்பேற்றுகிறது (இம்சை 5), முந்தைய பதிவைப் பார்க்கவும்.
.
கடைசியாக ஒரு வழியாகப் பிடித்து விட்டேன். ஒரு அம்மணி பொறுமையாகப் பேசினார். தௌிவாகப் பதில் சொன்னார். ப்ராஸஸ் பென்டிங் இல் இருக்கிறது. இன்னும் இரண்டு நாளில் வந்து விடும் என்றார். அந்த வரை சந்தோஷம். நன்றி.
.
நல்ல வேளை TNEB ஆன்லைன் அப்படி இல்லை. சந்தோஷம்.
.
குறை சொல்வது என் நோக்கம் அல்ல. கையில் காசில்லா நேரத்தில் இப்படி நடப்பதைத் தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் இந்தப் பதிவு.
.

அதே நாள் போடப்பட்ட அந்த முந்தைய பதிவு. எல்.ஐ.சி கோவை மைய கஸ்டமர் கேருக்கு போன் செய்தால் காத்திருக்கும் நேரத்தில் ஹிந்தி பாட்டு கேட்கிறது. . எனக்கு இந்தி தெரியாதுன்னு நெனச்சுக்கோங்க. அல்லது உங்க கோவை மையத்துக்கு போன் பண்றவங்க 90 சதம் சத்தியமா தமிழர்களாத் தான் இருப்பாங்கன்னாவது புரிஞ்சுக்கோங்க. . தயவு செய்து தமிழ் பாட்டு எதுனா போடுங்க ஐயா. . பிற்சேர்க்கை - மஹாராஷ்டிராவுல ஒரு கஸ்டமர் போன் செய்யும் போது அவனுக்கு தமிழ் பாட்டு கேட்டா அவனுக்கு எப்படி இருக்கும்?
.