புதன், 24 நவம்பர், 2010

கலவை சாதம் (24/11/2010)

ஒரு பெரிய டவுட்டு......

இன்ட்லியில இந்தப்பதிவு 21 ஓட்டு வாங்கியிருக்கு. ஆனா பிரபலமாக்கப்பட்டது ன்னு சொல்லி முதல் பக்கத்துக்கு வரலை. ஆனா 18 ஓட்டு, 20 ஓட்டு வாங்கிய பதிவுகள் எல்லாம் "சில நிமிடங்கள் முன்பு பிரபலமாக்கப்பட்டது" ன்னு சொல்லி முதல் பக்கத்துக்கு வந்து கிட்டு இருக்கு.

என்ன கணக்குல பதிவுகள் எல்லாம் பிரபலாமாக்கப்படுது? யாராவது சொல்லுங்களேன்.

------------------------------------------------------

குயில் குஞ்சு: ஊர்ல பத்து பதினஞ்சு கம்பூட்டர் வச்சிருக்குறவன்லாம் சந்தோசமா இருக்கான்.......

ஒரே ஒரு லேப்டாப்ப வச்சிகிட்டு நான் பட்ற அவஸ்த இருக்கே அய்யய்யய்யய்யய்யய்யோயோ......

(அது ஒண்ணுமில்லல. லேப்பு டாப்ப தொறந்தாலேலேலே.. ஒரே அபீசியல் (official) மெயிலா வந்து குமிஞ்சு கெடக்கு...... அதான்.... ஒரோரு மெயிலுக்கும் ஒரு மணி நேரம் வேல வக்கிது......

------------------------------------------------------

ஒரு டவுட்டு

ப்ளாக் மேயும் போது கண்ணுல பட்டுது.......... என் பிளாக்கு வேல்யூ....என் பிளாக்கு வேல்யூ....னு அங்கங்க போட்டு வச்சிருக்காய்ங்களே...... இந்த பிளாக்கையெல்லாம் யாரு வாங்குவா? அதுவும் அவ்ளோ காசு குடுத்து...........

(ஒரு வேளை பாண்டியராஜன் படத்துல வர்றா மாதிரி................. ரெண்டாயிரம்......... நாலாயிரம்............ ஆறாயிரம்........... - அப்படி இருக்குமோ? )

சில சினிமாக்கள்ல ஏழை அப்பாக்கள் சொல்வாங்களே..... என் தலையை அடமானம் வச்சாவது கல்யாணத்தை நடத்திடுறேன்.. (டேய் நாயே...... சிக்கும் பேனுமா இருக்குற உன் தலையை எவன்டா வாங்குவான்?)

------------------------------------------------------

கோச்சுக்காதீங்க - ஒரே ஒரு கவிதை

உனக்கான நேரங்களை
சேமித்து வைத்துக்
காத்திருக்கிறேன்
எனக்கான நேரம்
ஒதுக்கி வருவாயா?

------------------------------------------------------


விக்கிப்பீடியா கணக்குப்படி எந்திரன் வசூல் வெறும் 250 கோடி தானாமே........... அவ்ளோ தானா? கட்டுபடி ஆகாதேப்பா....... (சன் பிக்சர்ஸூக்கு). ஏதோ ஐநூறு கோடி கலெக்சன் ஆவும், ஆயிரம் கோடி கலெக்சன் ஆவும்னு சொன்னாய்ங்களே....... (அது சரி......... இந்தப்பணத்தையே நம்ம டவுசர் பாக்கெட்ல இருந்துதான் எடுக்குறாங்க. இன்னும் கலெக்சன் ஆவணும்னா லங்கோட்டையும் உருவுவாங்க, பரவாயில்லையா? - லங்கோடு ன்னா என்ன அங்கிள்னு கேக்குற குழந்தைங்கள்லாம் ஓடிப்போய்டுங்க)

நான் தான் அப்பவே சொன்னேன்ல. சன் டிவி ஷேர் வாங்குங்கடா, சன் டிவி ஷேர் வாங்குங்கடான்னு... யாராவது கேட்டீங்களா...... வாங்கிருந்தா கொஞ்சமாவது சம்பாரிச்சிருக்கலாம்ல....... (நான் தான் அப்பவே சொன்னேன்ல........... கேட்டா............. இவர் துபாய்ல இருந்து வரும்போதே டிக்கிட் எடுக்காமத்தான் வந்தாராம்)

நமக்கென்ன? ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அர்சி தர்றாய்ங்களே..... போதாது???? கூடவே கலர் டிவி. இலவச வேட்டி, சேலை... பீப்பீ........ போங்கடா டேய்........

------------------------------------------------------

மூணு வருடம் முன்பு எக்ஸாம் இன்விஜிலேஷன் டியூட்டியில் நடந்தது.

நான்: ஆன்ஸர் ஷீட்டை மறைச்சு வச்சு எழுதுடா. பக்கத்துல இருக்குறவன் எட்டிப்பாக்குறான்.

குயில் குஞ்சு: சார் மனசாட்சி இல்லாமப் பேசாதீங்க.. என் பேப்பரே காலியா இருக்கே என்ன பண்லாம்னு நான் யோசிச்சிட்டு இருக்கேன், நீங்க நக்கல் பண்றீங்களா...

நான் : ஙே.. ஙே.. ஙே.. ஙே..

------------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...

நீங்க (ஓட்டு) போட்டா மட்டும் போதும்.... போட்டா மட்டும் போதும்....

எலைக்கு ஏழ்நூறு ரூவா செலவு பண்ணிருக்கோம்ல....
------------------------------------------------------

செவ்வாய், 23 நவம்பர், 2010

மைனா - ஒரு புலம்பல்ஸ், அப்புறம் ஒரு செல்போன்.

__________ ரில் இருந்து ___________________ போன் செய்திருந்தாள். வீட்ல மைனா பாத்துட்டு இருக்கேன்டா என்றாள். என்னடி சொல்ற? என்றால் ஆமாண்டா? டிவிடி வாங்கிட்டு வந்தேன், ஜஸ்ட் முப்பது ரூபா என்றாள். அதிர்ச்சியாக இருந்தது. சரி விடு, தியேட்டருக்குப்போனா அம்பது நூறு தலைக்கு ஆகும், இது வெறும் முப்பது தானே என்றால்.......... ஆளைப்பாரு இங்கலாம் டிக்கட் முன்னூத்தம்பது ரூவாடா என்றாள். அப்போதான் ஞாபகத்துக்கு வந்தது. பாவா கூட சொல்வார். ஜனசதாப்தியில் முப்பது ரூபாய்க்கு டிவிடி கிடைக்கிறதாம். போகும்போதெல்லாம் வாங்கிக் கொண்டு வரலாமாம். எந்திரன் கூட நல்ல பிரிண்டா இருந்தா கொண்டு வரச்சொல்லி வைக்கலாமாம். ரெகுலர் கஸ்டமராய் இருந்தால் உங்களுக்கு முன்னாடி கொட்டி வைத்து விட்டுப்போய்விடுவார். வேண்டுமென்பதை பொறுக்கி எடுத்துக்கொண்டு மீதியை அவனிடம் கொடுக்கலாம்.


அது சரி மைனா எப்படி? கதை கேட்டேன், (கேட்காமலே இருந்திருக்கலாம் போல) அவன் வருவான்டா, அப்டியே தண்ணி குடிப்பான் பாரு, அப்டியே ஒரு துளி அவ மேல......... உதடு கிட்ட தெறிக்கும், அப்டியே லவ்வ புழிஞ்சு குடுத்திருக்கான்டா, சுருளி இருக்கான்ல அவன் அவங்கம்மாவை போட்டு அடிப்பான், போலீஸ் புடிச்சிட்டு போய்டும், ஒரு நாள் நைட்டு அவ படிப்பாளா? கரண்டு போய்டும். எத்தனை பாடம் இருக்குன்னு கேப்பான்,பத்து பாடம்ன ஒடனே சைக்கிள்ல லைட்டு டைனமோ இருக்கில்ல அதை போட்டு மிதிப்பான், வெளிச்சம் வரும் அப்புறம் செயின் அந்துரும், அப்புறம் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் நெறையா மின்மினிப்பூச்சி எடுத்துட்டு வந்து காமிப்பான், அதை எப்டி எடுத்தாங்கன்னே தெரில..... அந்த பாட்டில் கீழ விழுந்து உடஞ்சிடும் என்றாள்.

கிளைமாக்ஸ் என்ன தெரியுமா? என்றவளிடம் ஒரு பஸ் ஆக்ஸிடென்ட் ஆகும் என்று சொல்ல ஆரம்பித்தேன். ஏய்., இரு இரு கதை சொல்லாத பாத்திட்டு வர்றேன் என்று போனை கட் செய்து விட்டாள். ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் கால். ச்ச்ச்சசச........ சான்ஸே இல்லடா, சூப்பர் படம், போய்ப்பாரு என்ன? என்றாள். என்னடா கிளைமாக்ஸூ என்று கேட்க வந்தவன் வாயை மூடிக்கொண்டேன். இவளிடம் கதை கேட்டால் காது ஜவ்வு அந்து விடும்.

ஆனால் தமிழ் சினிமாவில் லவ் சீஸன், காமெடி சீஸன், ரவுடி சீஸன், போலீஸ் சீஸன், எல்லாம் போய் ராமராஜன் விட்டுப்போன கிராமத்து சீஸன் மறுபடியும் வந்திருக்கிறது. அதுவும் பப்பி லவ்வில் ஆரம்பித்து பெரியாட்களாகும் வரையில் வரும் லவ் ஸ்டோரிக்கள். அழுக்கு ஹீரோ. மேக்கப் இல்லாத ஹீரோயின். நல்ல வேளை ராமராஜன் ஸ்டைலை யாரும் பின்பற்றவில்லை. அந்த வரைக்கும் சந்தோஷம். தப்பித்தோம். பாட்டுப்பாடியே மாட்டை அடக்கும் அநியாயத்தையெல்லாம் காணும் பாக்கியம் நம் தலைமுறைக்கு இல்லை..

மேலும் தெரிந்தோ தெரியாமலோ பாலா வேறு ஒரு டிரெண்டை உருவாக்கி வைத்து விட்டார். படத்தின் அடிநாதம் ஒரு சோகமான, பகீரென்ற ஒரு விஷயமாக இருக்க வேண்டும், ஆனால் படம் முழுக்க நகைச்சுவை தூவப்பட்டிருக்க வேண்டும். கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க பதைபதைக்கும் திரைக்கதையோடு திடீரென திடுக் திருப்பத்தோடு படம் முடியவேண்டும். இந்த ரூல்ஸை நெருங்கிப்படம் எடுத்தீர்களானால் அது தமிழ்சினிமாவின் சிறந்த படம். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட பாலாவின் படங்களோடு பருத்தி வீரன், வெயில், அங்காடித்தெரு, படங்களும் அந்த வரிசையே. (கமலின் அன்பே சிவம், மகாநதி வகையறாக்கள் இந்தக் கணக்கில் சேராது, அவற்றில் பிரேம் பை பிரேம் கமலின் ஆளுமை தெரியும்) மைனாவும் அப்படி ஒரு சிறந்த தமிழ்ப் படம்.

கிங், லாடம், கொக்கி போன்ற குப்பைப்படங்களை உருவாக்கி அளித்த பிரபு சாலமன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். இதில் கிங் படம் "பூவே பூச்சுடவா"வின் ரீமேக். படா ஜவ்வுப்படம். விக்ரம் வரிசையாக ஹிட்டுகள் கொடுத்துக்கொண்டிருந்த நேரம் அது. பிளாக்கில் டிக்கெட் கிடைக்காமல் பதினைந்து ரூபாய் டிக்கெட்டை நானும் கார்த்தியும் (அவர் தான் ஃபைனான்ஸ்) எழுபத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்கிப்பார்த்தோம். ரொம்ம்ம்ம்ப நேரமாக பார்த்துக்கொண்டே இருந்தோம். படம் முடிகிற பாட்டைக்காணவில்லை. ஒரே ஜவ்வு இழுவை... ஒரே ஆறுதலாக இருந்த ஜனகராஜ் இந்தப்படத்தோடு சினிமாவை விட்டே ஒதுங்கிக் கொண்டார். அமெரிக்காவில் பையனோடு போய் செட்டிலாகிறேன் என்று போயே போய்விட்டார் மனிதர். அதற்குப்பிறகு சாமுராய் படத்திற்குக்கூடப்போகவில்லை..

அப்புறம் "லாடம்" ஒரு படம். கருமம். அதை எந்த வரிசையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. வசனத்தை எல்லாரும் இழுத்து இழுத்துப் பேசினார்கள். அதிலும் சார்மியும், அந்த புது ஹீரோவும் நடு ராத்திரியில் ஒரு லைட் இல்லாத வீட்டில் பேசும் பைத்தியக்காரத்தனமான வசனத்தைப்பார்த்தேன். பழைய காலத்து வசனங்களையும், வடிவேலு ஜோக்குகளையும் கேனத்தனமாக பேக்கிரவுண்ட் பீஜியம் ஒலிக்க பார்த்ததில் கேராகிப் போனது. அதற்குப்பிறகு பிரபு சாலமன் படத்தையே பார்க்கக் கூடாது என்று முடிவு செய்திருந்தேன். "கொக்கி" அவரது டைரக்ஷனா என்று தெரியவில்லை. இருந்தாலும் அதுவும் ஒரு சுமார் படமே...


இப்போது மைனா என்றொரு படம். ரெட் ஜெயண்ட் மூவீஸ் டிஸ்டிரிபியூஷன் என்று போட்டபோதே............. ஓக்கே படத்தில் என்னமோ மேட்டர் இருக்கிறது.. அதுதான் ஒரே அமுக்காக அமுக்கி விட்டார்கள் என்று புரிந்தது. அங்கங்கே படித்த ரிவ்யூக்களும், ஆனந்த விகடன் வசனமும், டிவிக்களில் வந்த பேட்டிகளும், ஜில் பின்னணியில் எடுத்த பாடல்களும், இதோ முதல் பாராவில் வந்தது போன்ற நண்பர்களின் வாய்மொழி விமர்சனமும்.......... மைனா படம் நன்றாயிருக்கிறது என்கின்றன..

மைனா பார்க்கப் போகவேண்டும்.
-------------------------------------------------------

எனக்கென்னவோ டிவிடியில் படம் பார்ப்பது ஒன்றும் பெரிய குற்றம் போல் தோன்றவில்லை. திருட்டு டிவிடியில் பார்ப்பது தான் தப்பு. என்னய்யா குழப்புகிறாய் எனாதீர்கள். படம் ரிலீஸாகும் போதோ அல்லது இரண்டு மூன்று நாள் கழித்தோ எப்படியும் அந்தப்படத்தின் திருட்டு டிவிடி வரத்தான் போகிறது. அதற்கு..........பேசாமல் தயாரிப்பாளர்களே டிவிடியும் வெளியிட்டு விட்டால்?

-------------------------------------------------------

அப்புறம் இன்னோரு மேட்டர்...........

தயவு செய்து எந்த எம்.எல்.எம் ஆக இருந்தாலும் போய் சேர்ந்து தொலையாதீர்கள். அன்பர் தொப்பி தொப்பி அவர்கள் ப்ளாக்கில் "ஒரே நாளில் கோடிஸ்வரன் ஆவது எப்படி?"என்ற பெயரில் பதிவு ஒன்றை பார்த்தேன். நச்சென்று எழுதியிருந்தார்..

நானும் அந்த மாதிரி எல்லாம் மாட்டிக்கொள்ளாமல் உஷாராக இருந்தவன்தான். ஏதோ ஒரு முறை நண்பர் ஒருவர் சொன்னார் என்று போய் ஒரு எம்.எல்.எம் கான்செப்டில் மாட்டிக்கொண்டேன். கம்பூட்டர் லேப்டாப் தயாரிப்பில் பேமசாக இருந்து விட்டு இப்போது மொபைல் போன் தயாரி்க்கத் துவங்கி விட்டிருக்கும் ஒரு கம்பெனி அது. அவர்கள் செய்த மூளைச்சலவையை நம்பி நானும் (ஜஸ்ட்) ஆறாயிரம் கொடுத்து ஒரு மொபைல் போன் வாங்கினேன். அதை எம்.எல்.எம் கான்செப்டில் சேர்த்திருந்தார்கள்.

அதாகப்பட்டது நாம் இரண்டு பேரை சேர்த்து விட வேண்டுமாம். அவர்கள் தலைக்கு இரண்டு பேராம். அவர்கள் தலை தலைக்கு இரண்டிரண்டு பேராம். இப்படி ஒவ்வொருவராக சேர்த்துக் கொண்டே போனால் ஆளுக்கு ஆறு பாயிண்ட் தருவார்கள். நிறைய பாயிண்ட் சேர்க்க சேர்க்க காரு வாங்கலாமாம், வீடு வாங்கலாமாம், கோடீஸ்வரன் ஆகலாமாம், அந்தக் கம்பேனிக்கே டைரக்டராக ஆகிவிடலாமாம். அடங்கப்பா சாமி... முடியல.. ஆனாலும் அதையும் நம்பி பணம் கட்டிய என்னை என்னவென்று சொல்வது?என்னை நம்பி வேறு இன்னும் நாலு பேர் வாங்கத் தயாராக இருந்தார்கள். போனை வாங்கி பத்து நாள் கூட முடியவில்லை. டச் ஸ்கிரீன் அவுட்டு (டச் ஸ்கிரீன் இல்லாமல் அந்தப்போனை ஆபரேட் செய்யவே முடியாது). எஸ்.எம்.எஸ்ஸில் டிக்ஷனரி ஆப்ஷன் இல்லை. கீ பேடு மகா கஷ்டப் படுத்தியது. போன் மெமரி வெறும் முன்னூறு தான். பார்ப்பவர்கள் எல்லாம் கிண்டல் செய்தார்கள். ஒழுங்காக ரெண்டாயிரம் கொடுத்து ஒரு சைனா போன் வாங்கியிருக்கலாமில்லை என்று. அதில் உள்ள ஆப்ஷன்களில் ஐம்பது சதம் கூட இதில் இல்லை. போய்க்கேட்டால் இந்தப்போன் உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் போன். கோடி வேணுமா? ஆப்ஷன் வேணுமா? என்றார்கள். முதல் வேலையாக என்னை நம்பியிருந்தவர்களுக்கெல்லாம் போனைப்போட்டு தயவு செய்து வாங்காதீர்கள் என்று சொன்னேன்.

ஒருவாரம் வெளியூரில் மாட்டிக் கொண்டு வந்த ஆபீஸ் போன்களையும் அட்டெண்ட் செய்ய முடியாமல் பட்ட கஷ்டத்தைப்பார்த்து அந்தப்போனே அழுதிருக்கும். ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக போனையும் டப்பாவோடு பேக் செய்து கடாசி விட்டேன். (அந்த மாதிரி நிறைய போன் திரும்பி வந்ததாம்) மாசம் ரெண்டாச்சு. அந்தப் போனுக்கு ரீப்ளேஸ்மென்டும் வரவில்லை, அந்தக்காசும் இன்னும் திரும்பி வரவில்லை.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
-------------------------------------------------------

ஞாயிறு, 14 நவம்பர், 2010

ஆனந்த விகடன் - "ஹிஹிக்கூ"

சுமார் மூன்று வருடங்கள் முன்பு ஆனந்த விகடன் (சுஜாதா சொன்ன எட்கூ போல) "ஹிஹிக்கூ" என்ற பெயரில் ஒரு போட்டியை நடத்தியது. தேர்வு செய்யப்பட்ட சுமார் பத்துப்பத்து "ஹிஹிக்கூ"க்களை வாராவாரம் வெளியிட்டது விகடன். பல வாரங்கள் தொடர்ந்து வெளியான "ஹிஹிக்கூ"க்களில் அடியேனுடையதும் ஒன்று.

(அப்போதைய) ஹாட் நியூஸ்களை வைத்து "ஹிஹிக்கூ" எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. ஆகையால் இதைப்படிக்கும் போது மூன்று வருஷம் பின்னோக்கிப்போக ஜம்போ கொசுவத்தி சுத்திக்கொள்ளுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விகடனில் வெளியான என்னுடைய "ஹிஹிக்கூ" இது

இரயில்வேயை நம்பர் ஒன்
ஆக்கிட்டாரு லாலு!
இதே போல ஹைவேயை
ஆக்குவாரா நம்ம பாலு!

மற்றவையெல்லாம் போட்டிக்காக எழுதி அனுப்பப்பட்டவை. (எத்தனை எழுதி அனுப்பினா ஒண்ணே ஒண்ணு பப்ளிஷ் ஆகுது பாருங்க).

-----------------------------------------

எடுப்பாவே இல்லையாம்
புது ஜேம்ஸ் பாண்டு
எப்படியோ போகட்டும்
உனக்கு ஏன் காண்டு?

-----------------------------------------

சர்ச்சைக்கு நடுவுல
வளருதுங்க "பெரியார்"
சர்ச்சையை வளர்க்குதுங்க
முல்லைப்பெரியார்

-----------------------------------------

விகடன்ல போடறாங்க
வாராவாரம் ஹிஹிக்கூ
சுஜாதா சொன்னது போல
இதுதானா எட்கூ?

-----------------------------------------

கோவலன் ஸ்லிப் ஆனது
சிலப்பதிகாரம்
நம்ம விஷாலு ஸ்லிப் ஆனது
சிவப்பதிகாரம்

-----------------------------------------

டெல்லியில் போடுறாங்க
கடைகளுக்குப் பூட்டு!
கோர்ட்டுக்குக் கேட்குதா
அவங்க வயித்துப் பாட்டு!

-----------------------------------------

இசையால நிறையுதுங்க
விகடன் புக்ஸூ....
போட ஆரம்பிச்சுட்டாங்க
சீஸன் சிப்ஸூ

-----------------------------------------

ஊரெல்லாம் கச்சேரி
டிசம்பர் மாசம்....
விகடன்லாம் வீசுது
மியூஸிக் வாசம்...

-----------------------------------------

அஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை
மாறுதுங்க ஆட்சி!
கேஸூலேர்ந்து தப்பிக்க
தாவுறாங்க பல கட்சி!

-----------------------------------------

ஆளில்லாத கேட்டு!
பாத்து வண்டியை ஓட்டு!
பாக்காம போனதுனால
பதினேழு பேரு அவுட்டு!

-----------------------------------------

தோனி தம்பிக்கு பிடிச்சது
படுகோன் பொண்ணு தீபிகா...
தோடா இங்கயும் பாரு...
ஸ்குவாஷ் ஏஞ்சல் தீபிகா...

-----------------------------------------

பள்ளிக்கூட கிணத்துல
+2 பொண்ணு பிணம்.
கொலைகாரப்பாவிக்கு
கல்லாய்ப்போச்சா மனம்?

-----------------------------------------

வரலாறு வெற்றியால
அஜீத்துக்கு ரிப்பீட்டு!
மத்தவங்க ஆகுறாங்க
அவரப்பாத்து அப்பீட்டு!

-----------------------------------------

பொங்கலுக்கு அடிப்பாங்க
சுவத்துக்கு சாந்து!
பொளந்து கட்றாருங்க
புது விஜயகாந்து!

-----------------------------------------

டென்னிஸூ ரேட்டிங்குல
சறுக்குதுங்க சான்யா!
ஸ்குவாஷ் போட்டி ரேட்டிங்ுகல
சாதிக்குமா சாய்னா!

-----------------------------------------

மெட்ராஸ்-ஐ பரவுதுன்னு
சொல்றாங்கப்பா நியூஸூ!
கலைஞர் போலக் கண்ணாடி
பண்ணுங்கப்பா யூஸூ!

-----------------------------------------
படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...

நீங்க (ஓட்டு) போட்டா மட்டும் போதும்.... போட்டா மட்டும் போதும்....

எலைக்கு ஏழ்நூறு ரூவா செலவு பண்ணிருக்கோம்ல....
-----------------------------------------

சனி, 13 நவம்பர், 2010

கலவை சாதம்..

போன முறை தலைப்பு இல்ல என்று எழுதிய உதிரிக் கட்டுரைக்கு கலவை சாதம் என்று பெயர் வைக்கலாம் என்று பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்சேபணை இருப்பவர்கள் போராட்டம் செய்யலாம். கொஞ்சம் டைம் பாஸாகும். (ஜோக் இருக்கட்டும், சீரியஸாக இந்தப்பெயரில் வேறு யாரேனும் அன்பர் எழுதிக்கொண்டிருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும், நான் பெயர் மாற்றிக் கொள்கிறேன்)

----------------------------------------

தனிமையிலே இனிமை காண முடியுமா? முடியாது என்பார்கள் சிலர். முடியும் என்பார்கள் பலர். Solitude is a bliss என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. (இதைத்தான் செல்வராகன் தன்னுடைய ஒரு படத்திற்காக Solitude என்ற வார்த்தை கிடைக்காமல் Being alone is a bliss என்று கேட்ச் லைன் போட்டிருந்தார். அந்தப்படம் நின்று போயிற்று என்று நினைக்கிறேன், பெயர் ஞாபகமில்லை) அதாகப்பட்டது தனிமை என்பது ஒரு வரமாம். சத்தியமாக இல்லை.. தனியாக ஒரு நாள் இருக்கலாம். இரண்டு நாள் இருக்கலாம். அல்லது எல்லாரும் இருக்கும் போது தனியாக இருக்கலாம். (அதாவது எல்லாரும் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில்) ஆனால் யாருமில்லாமல் நிஜமாகவே தனியாக இருப்பது என்பது கொடுமை. அதுவும் டி.வி கிடையாது. வண்டி கிடையாது. மியூஸிக் பிளேயர் கிடையாது. லேப்டாப் உண்டு, ஆனால் டேட்டா கார்டு கிடையாது. சோறு கிடையாது (நினைத்த நேரத்தில்), கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் எப்படி இருக்கும் என்று. புது ஊர் வேறு. இந்த ஊரில் எவனையும் தெரியாது வேறு.. (டிரான்ஸ்பரில் ஊர் மாறிவிட்டேன். அதான் இந்தப்புலம்பல்ஸ்)

----------------------------------------

டேட்டா கார்டு அதாங்க இன்டர்நெட்டு இல்லாததால் சுத்தமாக ஒரு நியூஸூம் தெரியவில்லை. பேப்பர் கூடப்படிப்பது இல்லை. ஒபாமா வந்துவிட்டுப்போய்விட்டாரா? ஜில் புயல் கரையை கடந்து விட்டதா? எந்திரன் மொத்த வசூல் எவ்வளவு? தங்கம் விலை எவ்வளவு ஏறியிருக்கிறது? ஏ.ஆர்.ரஹ்மான் புதுப்படம் ஏதும் ஒப்புக்கொண்டிருக்கிறாரா? மங்காத்தாவும் காவலனும் என்ன நிலைமை? சென்செக்ஸ் எவ்வளவு ஆகியிருக்கிறது? மெட்ரிகுலேஷன் பள்ளி ஃபீஸ் மேட்டர் என்னவாயிற்று? ரத்த சரித்திரா எப்ப ரிலீஸ்? சாரு இப்போ யார் கூட சண்டை போடுகிறார்? நீயா? நானா? என்னவாயிற்று? சூப்பர் சிங்கர் எத்தனை ரவுண்டு போயிருக்கிறது? என்று ஒரு நியூஸ் அப்டேட்டும் இல்லை. அதுசரி இதெல்லாம் தெரிந்து மட்டும் என்ன புடுங்கப்போற என்கிறீர்களா? அதுவும் சரிதான், நமக்கு லோக்கல் மேட்டரே ஒன்று கூட தெரியவில்லை. இன்டர்நேஷனல் மேட்டர் தெரிந்து என்ன ஆகப்போகிறது?

கம்பேனியில் ஒரு கொலீக் புதிதாக சேர்ந்திருக்கிறார் என் கம்பெனியில். அதாவது நான்தான் கொஞ்ச நாளைக்கு கம்பெனி கொடுக்க வேண்டுமாம். எதைப்பார்த்தாலும் கேள்வி கேட்கிறார் மனுஷன். செட்டப்பு செல்லப்பா என்று வடிவேலு வருவாரே அந்தா மாதிரி டவுட்டு டங்கப்பா இவர். அதிலும் பஸ்ஸில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு "கார்த்திக், இங்கே கத்தரிக்காய் எவ்வளவு? கார்த்திக், இங்கே லேண்ட் வேல்யூ எவ்வளவு? அரிசி எது ஃபேமஸ்? கார்த்திக், எந்த ஏரியாவில் வீடு பார்க்கலாம்? எந்த ஸ்கூல் நல்ல ஆக்டிவிடீஸோட எஜூகேஷன் தர்றாங்க? கார்த்திக், இந்த ஏரியாவில் எவ்வளவு வெயில் அடிக்கும்? சி.யூ.ஜி கனெக்ஷன் ஏன் வாங்கலை? நான் வெஜ் சாப்பாடு தலைவாழை இலை போட்டு எங்கே கிடைக்கும்? உங்க லேப்டாப் எத்தனை ஜி.பி? என்று ஒரே கேள்வீஸ் ஆஃப் இன்டியா. எனக்குத்தான் ஒன்றுக்குமே விடை தெரியவில்லை. ஆனால் இதை எனக்குப் புரிய வைத்ததற்கு அந்த மனுஷனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

----------------------------------------

ராவண் பாடல்களை (கவனிக்க ராவணன் அல்ல) இன்று ஹிந்தியில் கேட்டேன். தமிழை விட அருமையாக இருக்கின்றன.. ராவணனுக்கும் ராவணுக்கும் பாடல் வரிகளில் பல வேறுபாடுகள் இருந்தாலும் இசைக்கருவிகள் அனைத்தும் என்னவோ வட இந்திய வாடைக்கு தமிழை விட ஹிந்திக்கு தான் அருமையாக செட்டாகியிருப்பது போல் தோன்றுகிறது எனக்கு.. கெடா கெடாக் கறி பாடலில் வரும் ஹை பிட்ச் ஹம்மிங் தமிழை விட ஹிந்தியில் அட்டகாசமாக வந்திருக்கிறது. "வீரா"வை விட "பீரா" நன்றாக இருக்கிறது கேட்க..

----------------------------------------

டீம் மேனேஜ்மெண்ட் பற்றி கொஞ்சம் ஸ்டடி செய்ய வேண்டும். அதிலும் ரிமோட் மேனேஜ்மெண்ட் வேறு.... கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. பழைய கம்பேனியில் இருந்த டீமில் வெறும் ஐந்து பெண்கள் தான். அழகாக எட்டரைக்கு வருவார்கள், ஐந்து மணிக்கு கடையைச் சாத்தி விடுவார்கள். ஆனால் அப்போது அதுவே கஷ்டமாக இருந்தது போல் இருந்தது. இங்கே என்னடாவென்றால் டீம் சைஸ் பதிமூன்றில் ஆரம்பித்தது... மெள்ள மெள்ள ஏறி முப்பத்து இரண்டில் போய் நிற்கிறது. இன்னும் ஐந்தாறு பேர் தேவை. பெண்கள், ஆண்கள், கல்யாணம் ஆனவர்கள், கல்யாணம் ஆகாதவர்கள், டிப்ளமோ ஆட்கள், என்ஜினியரிங் முடித்தவர்கள், சிங்கிள் டிகிரி, டபுள் டிகிரி, கம்ப்யூட்டர் பேக்ரவுண்டு, ஃபர்ஸ்ட் ஜாப் பார்ப்பவர்கள் என்று ஒரே கலவை. அதுவும் ஒவ்வொருவரும் வெவ்வேறு இடத்தில், வெவ்வேறு மாவட்டங்களில். எல்லாரையும் கான்டாக்டிலேயே வைத்திருக்க வேண்டும். இது தவிர டெக்னிக்கல் டீம் ஆட்கள், சென்னை, பெங்களூரு பிராஞ்ச் ஆட்கள், உயரதிகாரிகள் என எல்லாரிடமும் பேசிக்கொண்டேடேடேடேடேடேடே இருக்க வேண்டியிருக்கிறது. இரண்டு போன்கள் வைத்திருந்தும் போன் கால்ஸ் மட்டுமே ஒரு நாளைக்கு மாறி மாறி ஐந்து மணிநேரம் ஓடுகிறது. ஒரு கால் பேசி வைப்பதற்குள் அதில் இரண்டு மிஸ்டு கால்கள். ஏ.வெங்கடேஷ், பேரரசு, டி.ராஜேந்தர் வகையறாக்களின் படம் பார்த்து முடித்ததும் ஒரு கேரிங்கான ஃபீலிங் வருமே.... அது தினமும் எனக்கு வருகிறது. காது வலிக்கிறது.

----------------------------------------

அப்படியே ஒரு ஜோக்கு (அப்பாடா, முதல்லயே சொல்லிட்டோம். கண்டிப்பா சிரிப்பாங்க)

எஸ்.பி.எம்-ல வேலைல இருக்கும் போது நிஜமாவே நடந்தது... நான் கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்கும்போது.......

நான்: ஷார்ட் ஃபார்ம்ஸ்-லாம் நல்லா பாத்துக்கோங்கப்பா.. கண்டிப்பா நாலு மார்க்குக்கு கேள்வி வரும்..

குயில் குஞ்சு : இங்கிலீஷுல கஷ்டமா இருக்கே சார்...

நான்: தமிழை கம்பேர் பண்ணிக்கோடா.. இப்போ................... தியாகராய நகரை "தி.நகர்" னு சொல்றோம், வாத்தியாரை "வாத்தி" னு சொல்றோம், தஞ்சாவூரை "தஞ்சை" னு சொல்லலாம்..... அந்த மாதிரி.........

குயில் குஞ்சு : குஞ்சாண்டியூரை என்னன்னு சார் சொல்றது?????

நான்: (வழக்கம் போல "பே" தான்........)
----------------------------------------படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...

நீங்க (ஓட்டு) போட்டா மட்டும் போதும்.... போட்டா மட்டும் போதும்....

எலைக்கு ஏழ்நூறு ரூவா செலவு பண்ணிருக்கோம்ல....
---------------------------------------

வியாழன், 11 நவம்பர், 2010

ஒரு நார்மல் ஸ்டூடண்ட்

ஒரு நார்மல் ஸ்டூடண்ட்

பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. டேட்டா கார்ட் என் கையில் இல்லை. ஆபீஸ் வேலையாக ஊர் சுற்றப் போயிருக்கிறது அது. நேரமும் கொஞ்சம் கம்மி அதான்..

அதனால் பதிவு போட வேண்டும் என்ற ஆசைக்கு இது. நண்பர் ரவி அனுப்பிய எஸ்.எம்.எஸ். அதை அப்படியே தமிழாக்கம் செய்து போட்டிருக்கிறேன். (இது வேறு எங்காவது படைப்பாக வெளியாகிக்கூட இருக்கலாம், அப்படி இருந்தால் எழுதியவருக்கே பெருமை போய்ச் சேரும்)

நீங்கள் ஒரு நார்மல் ஸ்டூடண்டா? கீழே உள்ள குறிப்புகள் உங்களுக்குப் பொருந்த வேண்டும்... படித்துப்பாருங்கள்.

1. எக்ஸாமுக்கு முன்பு தான் எல்லா நண்பர்களுக்கும் வெட்டி எஸ.எம்.எஸ் அனுப்பத்தோன்றும்.
2. இன்று படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ப்ளான் போட்டு அன்றைக்கு சாயங்காலம் "நாளை முதல் படிக்கலாம்" என்று தோன்றும்.
3. படிப்பதற்குப் பதில் புத்தகத்தில் எத்தனை சேப்டர் இருக்கிறது என்று ஒவ்வொரு முறையும் எண்ணிப்பார்த்தபடியே இருப்பீர்கள்.
4. இரண்டிரண்டு பக்கங்கள் படித்தவுடன் பிரேக் விடத்தோன்றும்.
5. சம்பந்தமே இல்லாமல் பசிக்கும்
6. தூர்தர்ஷனில் வரும் நிகழ்ச்சிகள் கூட ரொம்பப் பிடிக்கும்.
7. ஒவ்வொரு கஷ்டமான பாடத்திற்கும் இது தோன்றும் "இந்தக்கேள்வி எக்ஸாம்ல வராது".
8. படிப்பதற்கு முன் நண்பர்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் "மச்சி, நீ எவ்வளவு பாடம் முடிச்சிருக்க?"
9. இந்த எஸ்.எம்.எஸ்ஸை (அ) வெப்லிங்கை நண்பர்களுக்கு அனுப்பத் தோன்றும்
10. ஒவ்வொரு பாயிண்ட் படித்து முடித்ததும் புன்சிரிப்புடன் இது தோன்றும் "நமக்கு அப்படியே மேட்ச் ஆவுதில்ல?"

------------------------------------
அவ்ளோதான். பை பை..
---------------------------------------------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
----------------------------------------------------------------------