வியாழன், 31 டிசம்பர், 2020

வரப்பெற்றேன்.....

2015 ஜனவரி 1 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

வரப்பெற்றேன்.....போட்டியே வைக்காமல் பரிசு கொடுக்கும் பெருந்தகையாளர் திரு.
Ganeshan Guru
அவர்களுக்கும் அது போன்ற அறிவிப்புகளை தன் சுவரில் ஒட்டி இந்த வாய்ப்பை வழங்கிய நல் உள்ளம் கொண்ட திரு.
என். சொக்கன்
அவர்களுக்கும் நன்றி.
இப் புத்தக வரவினால் கிளறப்பட்ட சில எண்ணங்கள்.
1. டிசம்பர் கடைசியில் வந்திருந்தாலும் இப்புத்தகம் என்னுடைய ஜனவரி கணக்கில் வரவு. யாரென்றே தெரியாத சிலருக்கு ஒரு நல்ல புத்தகத்தை அன்பளிப்பது என்று அவர் செய்த இந்த நல்ல விஷயத்தை என் வசதிக்கு நானும் எடுத்துச் செய்யலாம் என்று தோன்றுகிறது. அதாவது சிறு விலையுள்ள புத்தகங்களை அவ்வப்போது 5 அல்லது 10 பள்ளி மாணவர்களுக்கு கொடுப்பதாக முடிவெடுத்திருக்கிறேன்.
2. இப்புத்தகம் கோவைப்புதூர் மற்றும் குனியமுத்தூர் போஸ்ட் ஆபீஸூகளுக்கிடையில் 5 நாட்களுக்கும் மேல் அல்லாடியிருக்கிறது. என் முகவரி அடித்து அடித்து மாற்றப் பட்டிருப்பதைக் கவனியுங்கள். "இது என் ஏரியா அல்ல, உன்து" என்று அவர்களும் "ஸேம் டு யூ" என்று இவர்களும் மாற்றி மாற்றி தள்ளிவிடப் பார்த்து, "சனியன், ரெஜிஸ்டர் போஸ்டு, வேற வழியில்லை, குடுத்துத் தொலைப்போம்" என்று என்னை போனில் அழைத்து வரவழைத்து கொடுத்து விட்டார்கள். மீன் டைம் எனக்கு உறவினர்கள் அனுப்பிய சாதாரண போஸ்டுகள் இரண்டு இருபது நாட்களாகியும் வரவே இல்லை. புத்தகம் நேற்று வந்தது மகிழ்ச்சி. 2014-ன் கடைசி தினம் ஒரு அடையாளமாக...3. பொதுவாகவே அரசுத்துறைகள் மீது எனக்குக் கொஞ்சம் கோபமுண்டு. எதையெடுத்தாலும் tanken for granted ஆகவே நடந்து கொள்கிறார்கள் என்று. அவர்களின் பொறுப்பின்மையைப் பார்த்து ரொம்பவும் கோபம் வரும். எங்கேனும் எகிறலாம் என்றோ, அரசுக்கெதிரான கருத்துக்களைப் பதியலாம் என்றோ அடிக்கடி தோன்றும்.
ஆனால் என் வாழ்க்கைக்கான அடித்தளம் ஒரு அரசு உதவி பெற்ற பள்ளியிலும், ஒரு அரசுக்கல்லூரியிலும் அமைந்ததாலும், முடிந்தவரை தமிழ்நாட்டை அமைதிப்பூங்கவாகக் கொண்டு சென்று என்னைப் போன்ற ஒரு சாமானியனுக்கு அமைதியான ஒரு வாழ்க்கையை நல்குவதினாலும் (கட்சி பேதமின்றி) என்னுடைய மனம் தமிழக அரசுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதால் மூடிக்கொண்டு பொறுமையாய்ப் போய்விடுவேன். சரி, அது பற்றி பிறிதொரு சமயத்தில் பேசுவோம்....
4. புத்தகத்தின் சில அத்தியாயங்களைப் படித்தேன் இன்று. சந்தோஷ மனநிலையுடன். அதுவும் சினிமா நமக்குப் புடிச்ச சப்ஜெக்ட்டு. 2015 மகிழ்ச்சியுடன் துவங்கியிருக்கிறது.
5. என்னுள்ளும் உறங்கும் நக்கீரன் சிற்சில பிழைகளை கண்டுபிடித்துள்ளான். அதை எழுத்தாளருக்கு தனி மடலில் எழுத எண்ணம்.
6. இத்யாதி, எக்ஸெட்ரா, உபயகுசலோபரீ...

செவ்வாய், 29 டிசம்பர், 2020

அடுத்த திருட்டு

29 டிசம்பர் 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

போளூர் சி.ரகுபதி- என்ற துணுக்கு எழுத்தாளரின் அடுத்த திருட்டு

முதல் படம் - 2007 ல் குமுதத்தில் வெளியான எனது ஜோக். நண்பர் ஒருவரிடம் பேசும் போது "அவர் எங்க ஃபேமிலி டாக்டர்" என்றார். டாக்டர் கொஞ்சம் முரட்டுத்தனமாக திருட்டுப் பயல் ஜாடையில் இருக்கவே, "ஃபேமிலி திருடன்" என்று ஒருவன் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை தோன்றி எழுதிப் போட்டேன். அது குமுதத்தில் பிரசுரம் ஆனது.
இரண்டாவது படம் - கிட்டத்தட்ட ஆறேழு வருடங்கள் கழித்து அதை காப்பி அடித்திருக்கிறார் போளூர் சி.ரகுபதி அவர்கள்.
(கீழே உள்ள லிங்க்-கைப் பார்க்கவும், அது போளூர் ரகுபதி-யின் சென்ற வார குமுதத்தில் வெளிவந்த திருட்டு, காப்பி கதையைப் பற்றியது, பால் ராசய்யா அவர்கள் குறிப்பிட்டது)

LINK https://www.facebook.com/paulrasaiya.rasaiya/posts/812152855510970

அதே ஆளுடைய மற்றொரு காப்பி லிங்க். 

http://rekharaghavan.blogspot.com/2013/10/blog-post.html?fbclid=IwAR1ikWzbfSleif0f1JEciqiR96IS6xSfww2M821owyfdnjWIv2EoYgIilIE

தீப்பிடிச்சிடுச்சேய்

29 டிசம்பர் 2015 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
.
நேஷனல் ஜியாகிராஃபிக் சேனலில் "சயின்ஸ் ஆஃப் ஸ்டுப்பிட்" என்று ஒரு நிகழ்ச்சி ரெகுலராக வருகிறது. செமையான நிகழ்ச்சி அது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பு ஆக்கமும் ஜாலியாக பட்டையைக் கிளப்பும் நடையில் இருக்கும். நாம் சாதாரணமாக நினைத்து வீட்டிலும் தெருவிலும் செய்யும் பல சாகச விஷயங்களில் அறிவியலின் ஆதிக்கம் எந்த அளவு உள்ளது, தவறு செய்து பல்பு வாங்கும் விஷயங்களில் அறிவியலை மனதில் வைத்து சரியாகச் செய்தால் எப்படி வெற்றி பெறலாம் என்பது தான் கான்செப்ட்.
.
ஒற்றை வீல் சைக்கிளில் பேலன்ஸ் செய்வது, போல் டான்ஸ் செய்து தவறி விழுவது, ஸ்கேட் போர்டில் வேகமாக வந்து படிக்கட்டில் இறங்குவது, சைக்கிள் அல்லது மோட்டர் சைக்கிளில் வெகு வேகமாக வந்து மிக நீண்ட தூரத்தைத் தாண்டி ஸேஃப் லேண்டிங் செய்வது போன்ற விஷயங்களில் எங்கெங்கே தவறு நடக்கிறது, மிக முக்கியமாக பெட்ரோல் ஊற்றி எதையாவது எரிக்கும் போது (நோட் திஸ் பாயிண்ட், யுவர் ஆனர்) என்ன நடக்கிறது, அறிவியலை மனதில் வைத்துச் செய்திருந்தால் எப்படி விபத்தைத் தவிர்த்திருக்கலாம் போன்ற விஷயங்களைச் சொல்வது அந்த நிகழ்ச்சி.
.
சென்ற வாரம் - பெட்ரோல் ஊற்றி எதையாவது எரிக்கும் போது காற்றில் என்ன எதிர்வினை நிகழ்கிறது, பெட்ரோல் என்ற எரிபொருளின் சிறப்பு என்ன? மற்ற எரிபொருட்களை விட அதன் அடர்த்தி எவ்வாறு வேறுபடுகிறது? பெட்ரோலை எதன் மீதேனும் ஊற்றும் போதே காற்றில் ஆறு (தான் என்று நினைக்கிறேன்) மடங்கிற்கும் வேகமாக அதன், நம் கண்ணுக்குத் தெரியாத நுண் துகள்கள் ஒருசில விநாடிகளிலேயே சுற்றுப்புறத்தில் எவ்வளவு வெகு வேகமாக பரவுகின்றன? (ஆகவே ஊற்றும் நமக்கே தெரியாமல் நம் மீது பெட்ரோலின் துகள் பரவல் நிகழ்ந்திருக்கும்) போன்ற விஷயங்களைப் பல வீடியோக்களுடன் காட்டினார்கள். எனவே தீ வைக்கும் போது அந்தப் பொருளின் மீது மட்டும் இல்லாமல் சுற்றுப்புறத்தில் உள்ள எல்லாப் பொருட்களிலும் அதே விநாடி எப்படி "பக்"கென்று தீப் பற்றுகிறது, தீயை வைத்தவன் எப்படித் தெறித்து ஓடுகிறான் என்றெல்லாம் காமெடியாக (நமக்கு, அவனுக்கில்லை) தெளிவாகக் காண்பித்தார்கள். சூப்பராக இருந்தது. செம என்டர்டெயிண்மெண்ட்.
.
ஆனால், வழக்கம் போல அமெரிக்க வீடியோக்கள் மட்டும் தான் காட்டப்பட்டன. இந்திய வீடியோ ஒன்று கூட இல்லை. அது ஒன்று தான் என் வருத்தம். அங்கே தான் முந்திரிக் கொட்டை முட்டாப் பசங்க அதிகம் என்று நினைத்தேன். இல்லையில்லை. நம்ம ஊருலயும் உண்டு என்று ஒரு கட்சியினர் இப்போது நிரூபித்து விட்டார்கள். நம்மாளுகளுக்கு எங்கே "சயின்ஸ் ஆஃப் ஸ்டுப்பிட்" பார்க்கவெல்லாம் நேரம் இருக்கும்? எத்தனை கன அடி தண்ணி தொறந்து விட்டீங்கன்னு கேட்டாக் கூட பெப்பெப்பே என்பவர்களாயிற்றே? (யோவ், நிதித்துறை - ஒரு மாச வருமானம் என்னய்யா? கட்சிக்குங்களா? நாட்டுக்குங்களா? - முதல்வன்)
.
அவர்களது சமீபத்திய "அந்த" வீடியோவை டவுன்லோடி, நேஷனல் ஜியாகிராஃபிக் சேனலுக்கு அனுப்ப வேண்டியதுதான்.
.

வியாழன், 24 டிசம்பர், 2020

கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்.

இயக்குனர் கே.பாலச்சந்தரின் இறப்பினை முன்னிட்டு 24 டிசம்பர் 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு. 

கே.பி-யின் இரங்கல் நிகழ்வுத் தொகுப்புச் செய்திகளில் கே.பி அறிமுகப்படுத்திய பலரின் பெயர்களை முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வரிசையாகச் சொன்னபோது அதில் கமல், ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரும் வந்தது. அதைப்பார்த்து வீட்டில் என்னது? பாலச்சந்தரா? மணிரத்னம் தானே? என்றார்கள். 

அறிமுகப்படுத்தியது என்பது இரண்டு மீனிங்கில் வரும். ஒரு படைப்பாளியாக ஏ.ஆர்.ரஹ்மானை நமக்குக் காட்டியது "மணி"யாக இருக்கலாம். ஆனால் ஒரு தயாரிப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானின் திரைப்பிரவேசத்துக்கு பச்சைக்கொடி காட்டி முதல் சினிமாச் சம்பளம் கொடுத்த முதலாளி கே.பி தான். 

ஒருமுறை மணிரத்னமும் கே.பி-யும் பேசிக்கொண்டிருக்கும் போது (எமனெடுத்துச் சென்ற கணவன் சத்தியவானின் உயிரை அவனிடமே போராடி திரும்பக் கொண்டு வந்த சாவித்ரி என்ற புராணத்தின் மாடர்ன் வெர்ஷனான) ரோஜா அவுட்லைனை சொன்னாராம் மணி. உடனே இதே போல ஒரு அவுட்லைன் நானும் வச்சிருக்கேன் என்றாராம் கே.பி. ஆனால் கடத்தப்படும் ஹீரோவின் வீட்டில் நிகழும் நிகழ்வுகளை காட்டலாம் என்றிருந்தேன் என்றிருக்கிறார். 

அப்ப நீங்களே பண்ணுங்க சார். நல்லாயிருக்கும் என்றாராம் மணி. இல்லயில்ல. நீ அவுட்டோர்ல வச்சு நல்லா பண்ணுவ, உன் ஸ்டைலும் நல்லாயிருக்கும், நீயே பண்ணு. நான் தயாரிக்கிறேன் என்றாராம் பாலச்சந்தர். ரோஜாவுக்கான முதல் விதை விழுந்தது அங்கே தான். இயக்குனராக மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் சக்ஸஸ் கொடுத்தவர் கே.பி. ரோஜா மட்டுமல்லாமல் "கவிதாலயா"வின் பல படங்கள் வெற்றிப்படங்களே. 

கே.பி.ரிப்.

.