செவ்வாய், 29 டிசம்பர், 2020

தீப்பிடிச்சிடுச்சேய்

29 டிசம்பர் 2015 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
.
நேஷனல் ஜியாகிராஃபிக் சேனலில் "சயின்ஸ் ஆஃப் ஸ்டுப்பிட்" என்று ஒரு நிகழ்ச்சி ரெகுலராக வருகிறது. செமையான நிகழ்ச்சி அது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பு ஆக்கமும் ஜாலியாக பட்டையைக் கிளப்பும் நடையில் இருக்கும். நாம் சாதாரணமாக நினைத்து வீட்டிலும் தெருவிலும் செய்யும் பல சாகச விஷயங்களில் அறிவியலின் ஆதிக்கம் எந்த அளவு உள்ளது, தவறு செய்து பல்பு வாங்கும் விஷயங்களில் அறிவியலை மனதில் வைத்து சரியாகச் செய்தால் எப்படி வெற்றி பெறலாம் என்பது தான் கான்செப்ட்.
.
ஒற்றை வீல் சைக்கிளில் பேலன்ஸ் செய்வது, போல் டான்ஸ் செய்து தவறி விழுவது, ஸ்கேட் போர்டில் வேகமாக வந்து படிக்கட்டில் இறங்குவது, சைக்கிள் அல்லது மோட்டர் சைக்கிளில் வெகு வேகமாக வந்து மிக நீண்ட தூரத்தைத் தாண்டி ஸேஃப் லேண்டிங் செய்வது போன்ற விஷயங்களில் எங்கெங்கே தவறு நடக்கிறது, மிக முக்கியமாக பெட்ரோல் ஊற்றி எதையாவது எரிக்கும் போது (நோட் திஸ் பாயிண்ட், யுவர் ஆனர்) என்ன நடக்கிறது, அறிவியலை மனதில் வைத்துச் செய்திருந்தால் எப்படி விபத்தைத் தவிர்த்திருக்கலாம் போன்ற விஷயங்களைச் சொல்வது அந்த நிகழ்ச்சி.
.
சென்ற வாரம் - பெட்ரோல் ஊற்றி எதையாவது எரிக்கும் போது காற்றில் என்ன எதிர்வினை நிகழ்கிறது, பெட்ரோல் என்ற எரிபொருளின் சிறப்பு என்ன? மற்ற எரிபொருட்களை விட அதன் அடர்த்தி எவ்வாறு வேறுபடுகிறது? பெட்ரோலை எதன் மீதேனும் ஊற்றும் போதே காற்றில் ஆறு (தான் என்று நினைக்கிறேன்) மடங்கிற்கும் வேகமாக அதன், நம் கண்ணுக்குத் தெரியாத நுண் துகள்கள் ஒருசில விநாடிகளிலேயே சுற்றுப்புறத்தில் எவ்வளவு வெகு வேகமாக பரவுகின்றன? (ஆகவே ஊற்றும் நமக்கே தெரியாமல் நம் மீது பெட்ரோலின் துகள் பரவல் நிகழ்ந்திருக்கும்) போன்ற விஷயங்களைப் பல வீடியோக்களுடன் காட்டினார்கள். எனவே தீ வைக்கும் போது அந்தப் பொருளின் மீது மட்டும் இல்லாமல் சுற்றுப்புறத்தில் உள்ள எல்லாப் பொருட்களிலும் அதே விநாடி எப்படி "பக்"கென்று தீப் பற்றுகிறது, தீயை வைத்தவன் எப்படித் தெறித்து ஓடுகிறான் என்றெல்லாம் காமெடியாக (நமக்கு, அவனுக்கில்லை) தெளிவாகக் காண்பித்தார்கள். சூப்பராக இருந்தது. செம என்டர்டெயிண்மெண்ட்.
.
ஆனால், வழக்கம் போல அமெரிக்க வீடியோக்கள் மட்டும் தான் காட்டப்பட்டன. இந்திய வீடியோ ஒன்று கூட இல்லை. அது ஒன்று தான் என் வருத்தம். அங்கே தான் முந்திரிக் கொட்டை முட்டாப் பசங்க அதிகம் என்று நினைத்தேன். இல்லையில்லை. நம்ம ஊருலயும் உண்டு என்று ஒரு கட்சியினர் இப்போது நிரூபித்து விட்டார்கள். நம்மாளுகளுக்கு எங்கே "சயின்ஸ் ஆஃப் ஸ்டுப்பிட்" பார்க்கவெல்லாம் நேரம் இருக்கும்? எத்தனை கன அடி தண்ணி தொறந்து விட்டீங்கன்னு கேட்டாக் கூட பெப்பெப்பே என்பவர்களாயிற்றே? (யோவ், நிதித்துறை - ஒரு மாச வருமானம் என்னய்யா? கட்சிக்குங்களா? நாட்டுக்குங்களா? - முதல்வன்)
.
அவர்களது சமீபத்திய "அந்த" வீடியோவை டவுன்லோடி, நேஷனல் ஜியாகிராஃபிக் சேனலுக்கு அனுப்ப வேண்டியதுதான்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக