ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

நீயா நானா?, ஜெயமோகன் மற்றும் சாருஇந்த வாரம் "நீயா நானா?" டாக்டர்கள் Vs பொதுமக்கள் என்ற தலைப்பில் நடைபெற்றது. வழக்கம் போல ஒரே டமால் டுமீல். அதுவும் இது கொஞ்சம் சென்ஸிடிவ்வான தலைப்பா? கிடைத்தது போதும் என்று ஒரே ரகளை. கூடவே, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணனும், ஜெயமோகனும் நம்ம ரமணா ரேஞ்சுக்கு புள்ளி விவரங்களாக தட்டிவிட்டுக்கொண்டே இருந்தார்கள் பொதுமக்கள் தரப்பில் இருந்து. அதே போல் எதிர் சைடில் இருந்து டாக்டர்களும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கெளன்டர் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.

சுறு சுறுவென்று போய்க்கொண்டிருந்தது விவாதம். வழக்கம் போல காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சிவிட்டு கடைசியில் ஸாரி சொல்லி ஒரு பெரிய கும்பிடாகப்போட்டு விட்டார் கோபி.. காய்ச்சியது இந்த வாரம் டாக்டர்களை. ஆனால் கடைசியில் "நீங்க சாமி மாதிரி. உங்களை திட்டு திட்டு என்று திட்டுவோம், ஆனால் கடைசியில் உங்களிடம் தான் வந்து நிற்போம், நீங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும்" என்று போட்டார் ஒரு போடு. டாக்டர்கள் தரப்பு சாய்ந்து விட்டது. போதாக்குறைக்கு அதில் ஒரு டாக்டரை செலக்ட் செய்து (சிங்கப்பூர் ஹார்டுவேர்ஸ் வழங்கும்) ஒரு டிவி பரிசு வழங்கியதும் சென்டிமென்டாக ஆஃப் ஆகிவிட்டது டாக்டர்ஸ் தரப்பு..

அது கிடக்கட்டும் எந்த தலைப்பாக இருந்தால் என்ன? வாராவாரம் ஏதாவது ஒரு தலைப்பை தட்டி, கொட்டி, பட்டி பார்த்து டிங்கரிங் செய்து கொண்டதான் இருக்கிறார்கள். ஆக அதை விடுங்கள். நாம் நம்ம சாரு மேட்டருக்கு வருவோம். இதில் சாரு எங்கேயிருந்து வந்தார் என்கிறீர்களா? அட என்னங்க? நீயா? நானா? என்றாலே சாரு ஞாபகத்துக்கு வர வேண்டுமில்லையா? அப்படி இல்லையென்றால் நீங்கள் எல்லாம் என்னத்துக்கு ப்ளாக் படிக்கிறீர்கள்?ஒன்னு, ரெண்டு, மூணு (மூணு அடிக்கு மேல போனா திருப்பி அடிக்கிறா மாதிரியே எண்ற??) என்று கெளண்டிங் கணக்கில் ஒவ்வொரு நீயா? நானா? நிகழ்ச்சியாக சாரு கலந்து கொண்டிருந்தார் ஆசையாக (அவரே சொன்னது போல் "இந்த பாழாய்ப்போன டிவியில் மூஞ்சி தெரியவேண்டும் என்று ஒரு ஆசைதான்") ஆனால் நம்ம நித்துக்குட்டி சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கார்னர் ஆக்கப்பட்டு, பிற்பாடு டென்ஷனாகி, சூடாகி ப்ளாக்கில் எழுதிப்போட்டு அதற்கு பல பேரும் பதில், எதிர்வாதம், எதிர்வினை, பின்னூட்டம் என்று எழுதிக் குவித்து பதிவர்களிடையே விவாதம் நீயா நானாவை விட ரொம்பப் பெரிதாக போய்க்கொண்டிருக்கிறது.

ஆன்டனியைப்பற்றி சாரு எழுதி, எழுதி, எழுதி, இப்போது, சாரு Vs ஆன்டனி என்ற லெவலுக்குப்போய்விட்டது மேட்டர். இதிலே என்ன காமெடி என்றால் நீயா நானாவில் பேசுகின்ற இருதரப்பும் மோதும். ஆனால் இங்கே சாரு தரப்பு மட்டும் தான் குதியோ குதி என்று குதித்துக்கொண்டிருக்கிறது (இன்னமும்). அவர்கள் (விஜய் டிவி) தரப்பில் இருந்து யாருக்கும் பதில் சொன்னதாகத்தெரியவில்லை. சிம்பிளாக அடுத்த ஆள் யார் என்று பார்த்து விட்டு ஜெயமோகனைக் களத்தில் இறக்கி விட்டு விட்டார்கள். அவர்தான் இந்த வார கெஸ்ட்டு.... அடுத்து ஜெயமோகன் கோபித்துக்கொண்டால் எஸ்.ராமகிருஷ்ணனை இறக்குவார்களோ என்னவோ? அவர்களுக்கென்ன? வி.ஐ.பிக்களுக்கா பஞ்சம் இந்த நாட்டில்?

ஆனால் ஜெயமோகனை விட, சாருவையே கொண்டு வந்து விட்டிருந்தால் தன்னுடைய ஹார்ட் பிராப்ளம், சர்ஜரி, டிராஸ்ப்ளான்டேஷன் எல்லாவற்றையும் சேர்த்து காரமாக நிகழ்ச்சியைக் கொண்டு போயிருப்பார். என்ன செய்வது? அந்த நிகழ்ச்சியில் அவருக்கு பதில் ஜெயமோகன் வந்து விட்டார். போகட்டும். ஆனால் அவர் மட்டும் சும்மா இல்லை. தன்னுடைய யூனியன் பற்றியெல்லாம் அடித்து விட்டுக்கொண்டிருந்தார். கோபியும் ரொம்ப சின்ஸியராக "ஜெயமோகன்" சொல்லி விட்டார், "ஜெயமோகன்" சொல்லி விட்டார், என்று பாட்டுப்பாடிக்கொண்டே இருந்தார்.இதில் ஹைலைட்டாக டாக்டர்களுக்கும், பொதுமக்களுக்குமான பொதுவான கருத்துக்களை, கன்க்ளூஷன் பேச்சுக்களை பேசும் போது கோபிநாத் ஜெயமோகனைக் கைகாட்டி, இந்தா "மிகச்சிறந்த" எழுத்தாளர்கள் இருக்காங்க என்று ஒரு பிட்டையும் சேர்த்துப்போட்டார். உடனே ஜெயமோகன் முகத்தில் சிரிப்பைப்பார்க்க வேண்டும். முகமெல்லாம் பூரித்துப்போய் விட்டது அவருக்கு. சாரு மட்டும் இதைப்பார்த்திருந்தால்? பார்த்திருந்தால் என்ன பார்த்திருந்தால்? இப்போது கூட யூடியூப்பில் தட்டிப்பார்த்தால் வந்து விடப்போகிறது.... பார்த்து விட்டு மீண்டும் உ.த.எ (உத்தமத் தமிழ் எழுத்தாளன்) என்று ஆரம்பத்து திட்டித் தீர்க்கத்தான் போகிறார்.. பதினைந்து வருடத்துக்கு முன்பே தினமலர் தீபாவளி மலரில் அவரை மையமாக வைத்து கதை எழுதிய ஆளாயிற்றே நம்ம ஆளு. என்னமோ போங்க, (நாங்க வழிப்போக்கர்கள் தான...)

இந்த நிகழ்ச்சியில் கோபி அவ்வப்போது தன் காதில் மாட்டியிருந்த மைக்ரோபோன் ரிஸீவரை சரிசெய்தபடியே இருந்தார். ஆன்டனியிடம் இருந்து எக்ஸ்ட்ரா பாயிண்ட்ஸ் வந்திருக்கும் என்று நனைக்கிறேன். அந்த மாதிரியான சமயங்களில் கேமரா லாவகமாக கோபிநாத்தின் இடது பக்கம், டாப் ஆங்கிள் ஷாட் என்று பயணிககிறது, ஸோ.... நோ ப்ராப்ளம். பார்வையாளர்கள் யாரும் கவனிக்க மாட்டார்கள்.

அப்புறம் இன்னோரு மேட்டர். இது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மற்றும் புரொடக்ஷன் டீமுக்கும். நீயா நானா? நிகழ்ச்சியில் நிறைய கொசு பறக்கிறது அய்யா. க்ளோசப்பில் பார்த்தால் பளிச்சென்று தெரிகிறது. ஜெயமோகன் தலைக்கு மேலே சொய் சொய் என்று நிறைய பறந்து கொட்டிருந்தது. அப்புறம் அந்தப்பக்கம் இடது கார்னரில் அமர்ந்திருந்த ஒரு டாக்டரம்மா நிகழ்ச்சி முழுமைக்கும் கையை வீசியபடியே (ஈ / கொசு ஓட்டிக்கொண்டு) தான் அமர்ந்திருந்தார். அதையெல்லாம் கொஞ்சம் கவனிங்கப்பா.

உட்கார்ந்து பார்க்கும் நாங்கள், செட்டின் டிசைனை பார்த்து விட்டு என்னமோ செட்டை ஏஸி ஹாலில் போட்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறோம். ஆனால் சுத்திக் கொண்டிருக்கும் இத்தனை கொசுக்களை பார்த்தால் ஏதோ கோயம்பேடு காய்கறி மார்க்கெட் குப்பைத்தொட்டி அருகில் செட்டைப்போட்டிருப்பார்களோ என்று டவுட்டாகிறது. கொஞ்சம் கவனிங்க. என்ன?

ஒன் மோர் டெய்ல் பீஸ்..: எல்லாம் முடிந்து விஜய் டிவியின் பிராண்ட் விளம்பரப்பாடலை போட்டார்கள் "உங்கள் வாழ்வை அழகாக்கும், வண்ண மயமாக்கும், உங்கள் விஜய்" என்று. (கூடவே பதிவுகை காரசாரமாக்கும் என்று ஒரு லைன் சேர்த்துக்கொள்ளலாம். அந்தளவுக்கு இருக்கிறது மேட்டர்). பை தி வே, இந்தப்பாடலின் விரிவாக்கப்பட்ட வடிவம் தான் "செம்மொழியான தமிழ்மொழியாயாயாயாயாயாயாயம்ம்ம்ம்" என்பது இரண்டையும் நன்றாக கவனிப்பவர்களுக்குத் தெரியும், கூடவே கொஞ்சம் தூர்தர்ஷனின் "மிலே சுரு மேரா துமாரா"வின் எசன்ஸையும் சேர்த்திருக்கிறார்கள்.

-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------

பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..

-------

17 கருத்துகள்:

 1. charu, a few months ago wrote in vigadan that he had quit neeya naana cause the "bata" was nt given regularly... :P well i have a serious doubt that they quit on him since he was asking for "bata"... now he has taken up writing in vigadan every week advising us about life and hw it s suppose to be run ... and wat is very important point to be noted regarding the programme is on the run for the ratings the prog has grown very awkward these days.... and i strongly object the build up mr.gopinath gets and him being personified as a role model for youth..

  பதிலளிநீக்கு
 2. //and i strongly object the build up mr.gopinath gets and him being personified as a role model for youth.. //

  கிட்டத்தட்ட இதையேதான் சாருவும் சொல்லிவருகிறார் பாலா.. கோபிநாத் வெறும் பொம்மைதான். பின்னாலிருந்து அவரை நொடிக்கு நொடி இயக்குபவர் ஆன்டனி தான். அதற்குத்தான் "ரிஸீவர் அட்ஜஸ்ட்மென்ட்" பாரா.

  ஆனால் நீங்கள் ரெண்டு பேரையுமே தாக்குகிறீர்களே..

  பதிலளிநீக்கு
 3. //good post.....// நன்றி திரு.rk guru. வெறுமனே போனால் எப்படி?

  பதிலளிநீக்கு
 4. charu may be a open, frank guy watever may be but still accepting that he did quit coz of money problem reduces his credibility as an intellectual....and about gopi i din notice the receiver thing all these days but now that u ve mentioned it i understand the trick ....
  both deserve to be criticised, i dont want to take sides...but i still credit gopinath for being a good actor ...

  பதிலளிநீக்கு
 5. இரண்டையும் நன்றாக கவனிப்பவர்களுக்குத் தெரியும், கூடவே கொஞ்சம் தூர்தர்ஷனின் "மிலே சுரு மேரா துமாரா"வின் எசன்ஸையும் சேர்த்திருக்கிறார்கள்.

  COngrats..

  பதிலளிநீக்கு
 6. நன்றி Palay King.. உங்க ஈ.மெயில் ஐடி அனுப்புங்களேன்..

  பதிலளிநீக்கு
 7. //ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…
  நல்லா எழுதியிருக்கீங்க. //

  நன்றி சார். நான் உங்களைப்பத்தி ப்ளாக்ஸ்-ல படிச்சிருக்கேன், கேள்விப்பட்டிருக்கேன். நீங்கல்லாம் நம்ம ப்ளாக்குக்கு வருவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை. நன்றி.

  பதிலளிநீக்கு
 8. நல்லா நோட் பண்ணியிருக்கீங்க!!நாங்க நிகழ்ச்சிய வாயதொறந்து வாய்க்குள்ள கொசு போறது கூட தெரியாம பாத்துட்டு இருக்கோம்!!ஆனா,நீங்க கொசு மட்டும் இல்லாம எத்தனை மேட்டர் நோட் பண்ணியிருக்கீங்க!!பாராட்டுகள்!!!

  பதிலளிநீக்கு
 9. மிஸ்டர் தேவா, நாங்கள்-லாம் விவேக்கு கோஷ்டி. "அஸிஸ்டென்ட் டைரக்டர்ஸ்.... நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்கப்பா..." நீயா நானால போய் கலந்துக்கலாம் வர்றீங்களா?

  பதிலளிநீக்கு
 10. நானும் அந்த நிகழ்ச்சி பார்த்தேன்..ஆனா...உங்க அளவுக்கு இவ்வளவு துல்லியமா..அதுக்குப் பின்னாடி உள்ள அரசியல்லாம்..எனக்குத் தெரியலை...பொதுஜனக் கண்ணோட்டத்தோட...அதுக்கு ஒரு பதிவு போட்டேன்..அன்னிக்கு நைட்டே...முடிஞ்சா படிச்சு பாருங்க...

  http://rameshspot.blogspot.com/2010/08/blog-post.html

  பதிலளிநீக்கு
 11. ரமேஷ், நானும் அன்னைக்கு நைட்டே உங்க பதிவையும் படிச்சுட்டேன். ஆனா பின்னூட்டம் தான் போடலை. ஸாரி.

  பதிலளிநீக்கு
 12. நல்லா சிரிச்சுகிட்டே படிச்சேன் தல ரொம்ப நல்லா இருந்தது,கொசுவை நோட் பண்ணியது சூப்பர்! நல்லாவருவீங்க!

  பதிலளிநீக்கு