வியாழன், 17 செப்டம்பர், 2009

அவனா நீ...

அவனவன் என்ன எழுதலாம்னு மண்டையையும் கீ போர்டையும் உடைச்சுகிட்டு இருக்குற நேரத்துல தான் நாம படிக்கவே ஆரம்பிக்குறது. அப்பால நிதானமா என்ன தோணுதோ உக்காந்து எழுத (அடிக்க) ஆரம்பிக்குறது. நானும் அதே மூட்லதான் இருந்தேன். ஆனா இந்த சீனிப்பயதான் எதுக்கு புதுசா யோசிக்கணும்.. நம்ம சொந்தக்கதை, வெந்தக்கதையெல்லாம் சொன்னாலே போதும். செமையா இருக்கும்னான். பயபுள்ளக்கி நான் பல்பு வாங்குன கதைய நாலு பேர்ட்ட சொல்றதுல அப்டி ஒரு சந்தோசம்.

----- நல்லா படியுங்க.. உங்களுக்கு காமெடியாதான் இருக்கும். டிராஜிடியா எனக்குத்தான -----

ஒருதபா ஆபீஸூல (நம்ம கம்பெனிய ஒரு பெரிய குரூப்பு கம்பெனி வாங்கிபுடுச்சிங்க) முக்கியமான ஒரு மீட்டிங்கு ஏற்பாடு பண்ணுணாங்க. மீட்டிங் கோ ஆர்டினேசனா? இந்த கார்த்திய கூப்புடும்பாரு வாசு சாரு. நானும் போயி பெருந்தன்மையா எல்ப் பண்ணிட்டு வருவேன். நமக்கு சம்மந்தமிருக்கோ இல்லையோ எதுக்கு சான்ஸை உடணும்னு ஒரு ஆசைதான். அன்னிக்கும் அப்டித்தான். ஆனா அந்த மீட்டிங் முடிய எட்டரை ஆயிடுச்சு. ஆபீஸூல எல்லா பயலுவலும் எஸ்கேப். உள்ளாற மீட்டிங்குல இருந்த ஆளுக மட்டும் கொட்டாவி உட்டுகிட்டே வெளிய வருதுங்க.. (பின்ன சாண்ட்விச்சும் குட் டே பிஸ்கட்டுமாத் தின்னா?)

சரி. ஆனது ஆயிப்போச்சு. அட்மின் ஆளுங்க ஒர்த்தனையும் காணோம். போயிட்டாங்க. அந்த புரஜக்டர (ஒரு லட்ச ரூபா ஒர்த்து) பத்திரமா உள்ளாற எடுத்து வச்சுடலாம்னு கீழ் புளோருல ஒரு டேபிள்ல வச்சுப்பூட்டி சாவியத்தூக்கி மேல் பாக்கெட்டுல.. வேணாம்னு.. கீழ் பாக்கெட்டுல பத்திரமா போட்டுகிட்டு கிளம்பிட்டேன். நாதாறிப்பசங்க (சாரி.. கோவிச்சுக்காதீங்க. அவ்ளோ கோவம் எனக்கு) மறுநாளும் மீட்டிங் இருக்குன்றத எவனுமே என்கிட்ட சொல்லல.

மறுநாள் நானும் வழக்கம் போல நிதானமா (நாம என்னைக்கு ஒம்பதரைக்கு முன்னால வந்துருக்கோம் - எட்டரை ஆபீஸூக்கு) கெளம்பி பஸ்ஸேறி வந்துகிட்டிருக்கேன்.. வருதுய்யா வரிசையா போனு மேல போனு.. எங்கருக்க எங்கருக்கன்னு. மீட்டிங் ஆரம்பிச்சுடுச்சு. புரஜக்டர் எங்கன்னு கேக்குது இந்த ஜோதி. என்னன்னு நான் பதில் சொல்ல? என்னது ஜோதி யாரா? அதாங்க நம்ம ரிசப்ஷனிஸ்டு. நாம அப்பதான் ஏர்போர்ட்டயே தாண்டி கத்திப்பாரா ஜோதி ஏறிக்கிட்டிருக்கோம். ஆபீஸ் வர சத்தியமா முக்கா மணி நேரமாவும். இதுங்க என்னடான்னா அஞ்சே நிமிசத்துல வா-ங்குதுங்க.. பறந்தா வர முடியும்..? ஆனா டேபிள் சாவி எங்கிட்ட இருக்குது. என்ன பண்றது?

ஆய் ஊய்ன்னு ஆளாளுக்கு சவுண்டு உட்டுப்பாத்தாங்க.. ஆனா என்ன பண்ண? நம்ம நிதானமா குடுத்த ரிப்ளைல டர்ராகி.. எப்படியாவது ஒரு இருவது நிமிசத்துக்குள்ளார வரப்பாருன்னு கெஞ்ச ஆரம்பிச்சுட்டாங்க. நானும் கிண்டி தாண்டி சைதாப்பேட்டை வந்தாச்சு. நம்ம டிராபிக் தெரியாதா? சாதாரண ஜாமில்ல.. கிஸான் ஜாமு ரேஞ்சுக்கு டிராபிக்கு. ஆனா போனு வந்துகிட்டேயிருக்கு.. எனக்கும் கை காலு உதற ஆரம்பிச்சுடுச்சு. சரி ஒரு ஆட்டோ புடிச்சாவது போய்த்தொலைவோம்னு பஸ்ஸ உட்டு எறங்கிட்டேன்.

எறங்கி ஆட்டோ புடிக்கலாம்னு பாத்தா அந்த ஜாமுல எவன் வருவான்? அப்டியும் ஒருத்தன் மாட்னான்.. அவன்ட்ட ஆட்டோ வருமான்னேன். அவன் என்ன மூட்ல இருந்தானோ.. கனல் கண்ணன் மாதிரி (முதல்வன்பா) செய்கையோட .."வருமே... தூக்கி தலைல வச்சுக்கோ... வரும்-னான்" கொலவெறியோட அவன் சொன்னதப்பாத்து பயந்து அவன்ட்ட இருந்து எஸ்கேப்பாயி சைதாப்பேட்டை சர்ச்சுகிட்ட ஒரு ஆட்டோவ புடிச்சி (மறிச்சி) ரன்னிங்குலயே ஏறிக்கிட்டு வேகமாப்போய்யான்னா போறான்யா அப்டி ஒரு ஸ்பீடு.

என்னா ஸ்பீடுங்கிறீங்க. சர்ச்சாண்ட நடந்து போயிட்டு இருந்த ஒருத்தர் எங்க ஆட்டோவ ஓவர்டேக் பண்ணிட்டு பேயிட்டாரு. அதப்பாத்து கடுப்பான நான் உட்டேன் பாருங்க ஒன்னு.. என்ன அடியா? உதையா? ன்னாதீங்க. இவ்ளோ சன்னமா இருந்து கிட்டு அதெல்லாம் பண்ண முடியுமா? நான் உட்டது டயலாக்தான். ஒண்ணும் பெரிசா கேக்கலை.. பழைய டயலாக்தான். "இது ஆட்டோவா? மாட்டு வண்டியா"ன்னு தான் கேட்டேன். இதுக்கு போய் டென்ஷனாயிட்டான் அவன். அப்டி ஒரு மொறை மொறைச்சான் பாருங்க...

அப்போதான் வந்துது மறுபடி போனு.. எங்க இருக்க? புரஜக்டர் என்னாச்சுன்னு? ஆட்டோக்காரன் கூட சண்டை போட்டுட்டிருந்த கடுப்புல நானு... "இதோ வந்து எடுத்து தர்றேன்யா என் இதே..." ன்னு சொல்லிட்டேன். அப்பால தான் தெரியும் ஆபீஸூல (அதுவும் கான்பரன்ஸ் ஹால்ல) டெலிபோன ஸ்பீக்கர்ல போட்டிருக்கானுங்கன்றது... அதுக்கப்புறம் என்னத்தப்புலம்பி என்ன பண்றது..

மொத்தம் இருபத்தி அஞ்சு பேரு.. மீட்டிங்குல... 8 ஜி.எம்மு. 4 ஏ.ஜி.எம்மு. 7 சீனியர் மேனேஜருங்க, ரெண்டு மேனேஜருங்க.. 4 பேரு டாப் மேனேஜ்மெண்டு (அதாம்பா.. சஞ்சய் ராமசாமி கணக்கா பிளைட்ல இருந்து டயம் பாத்து கிட்டே எறங்கற ஆளுங்க) இதுல சிஸ்டம்ஸ் (கஸ்டம்ஸ் இல்லிங்க. சிஸ்டம்ஸ்) டிபார்ட்மெண்டு ஆளு ஒர்த்தன். எல்லாரும் நமக்காகத்தான் வெயிட்டிங். ஒரு வழியா வந்துட்டமில்ல.. ஆனா டைமு? அதிகமில்லை ஜென்டில்மேன்.. ஜஸ்ட் ஒம்போது நாப்பதுதான். (மீட்டிங் ஸ்டார்ட் ஆனது எட்ரைக்கு) இதுல நமக்கு அட்டெண்டன்ஸ் பஞ்ச் கார்டு வேற. தலவலி.

தடாபுடான்னு ஓடிப்போய் டேபிளத்தொறந்து புரஜக்டர அள்ளி எடுத்து அவன் கைல குடுத்துட்டு அப்பாடான்னு ரிலாக்ஸாயி உக்காந்தேன். (இதெல்லாம் சகஜம்தான, இதுல என்ன பல்புன்றீங்களா? வெய்ட்டுப்பா வெய்ட்டு) நன்னாரிப்பய.. நீயும் வான்னு காலரப்புடிச்சு கான்பரன்ஸ் ஹாலுக்குள்ள என்னயும் இழுத்துட்டுப்போய்ட்டான். உள்ள போயி "திஸ் ஈஸ் கார்த்திக்"னு இன்ட்ரோ வேற. நானும் வழிஞ்சுகிட்டே குட்மார்னிங் சொன்னேன்.

சரி ஆனது ஆயிப்போச்சு.. அட்றா புட்றான்னு தூக்கிப்போட்டு, இருக்குற ஒயரயெல்லாம் கனெக்ட் பண்ணி ரிமோட்டக்குடுத்து லேப்டாப்ப ஆன் பண்ணி சுட்சப் போட்டா "புர்..."ன்னு ஒரு சத்தம். (தொப்பி.. தொப்பி..) என்ன கருமமோ? என்ன இழவோ? புரஜக்டர் அவுட்டு. (நேத்து வரைக்கும் நல்லாத்தானய்யா இருந்தது?) நம்ம பய சிஸ்டம்ஸூ.. தடவித்தடவிப்பாத்தான். ஒண்ணும் வேலைக்காவல.. சைடா என்னையும் பாத்தான். நானென்ன கம்ப்யூட்டருக்கா படிச்சுருக்கேன் பதில் சொல்ல..? ராவணன்ட்ட தனியா மாட்டுன ஜடாயு கணக்கா நின்னேன் நானு..

அப்டியே இருபத்தஞ்சு தலையும் திரும்பி என்னப்பாத்துது "அவனா நீ-ன்னு". அவ்ளோதான். மாவ அள்ளி மொளகாத்தூளப்போட்டு பிசைஞ்சு வாழக்காய உரிச்சி பீஸ் பீஸா சீவி, கொதிக்கிற எண்ணையில போட்டு... சொர்-ன்னு ஒரு சத்தம்...
அடுத்த நிமிஷம் ஹாலுக்கு வெளில சோபால கெடந்தேன்.

அன்னிலேர்ந்து இன்னி வரைக்கும் இன்க்ரிமெண்டப்பத்தி ஒரு வார்த்த கேட்டிருப்பேன் நானு... ம்ஹூம்.. மூச்சு விடமாட்டேனே...

-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------

பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..

-------

12 கருத்துகள்:

 1. சுவைப்பட சொல்லியிருக்குங்க... சோகத்தையும் சுகமாக வடிக்க முடிந்துள்ளது. அருமை. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. //மதுரை சரவணன் சொன்னது…
  சுவைப்பட சொல்லியிருக்குங்க... சோகத்தையும் சுகமாக வடிக்க முடிந்துள்ளது. அருமை. வாழ்த்துக்கள் //

  நன்றி.. நாங்கள்லாம் நாகேஷ் மாதிரி...

  பதிலளிநீக்கு
 3. //சேலம் தேவா சொன்னது…
  சூப்பர்ர்ர்ர்ர்ர்!!! // டேய்... தேவா.. ங்கொய்யால... சூப்ப்ப்ப்பர்ரா??? இருடி உனக்கு இருக்கு....

  பதிலளிநீக்கு
 4. //Thomas Ruban சொன்னது…
  ha...ha...ha.....
  நன்றி திரு.தாமஸ் ரூபன். ஏன் இந்தச்சிரிப்பு. என் நிலைமை அந்தளவுக்கு இருக்கா?
  //

  பதிலளிநீக்கு
 5. அன்பின் எஷ்கா

  அருமை அருமை - இடுக்கண் வருங்கால் நகுக - சூப்பரா சமாளிச்சிருக்கீங்க - அந்த வாழக்கா பஜ்ஜி - சூப்பர். நல்லா நகைச்சுவை எழுதறீங்க - தொடர்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 6. Post suuuperaa irukku boss!! neraiyaa yedam roomba enjoy panninen,

  //பின்ன சாண்ட்விச்சும் குட் டே பிஸ்கட்டுமாத் தின்னா?//

  //சாதாரண ஜாமில்ல.. கிஸான் ஜாமு ரேஞ்சுக்கு டிராபிக்கு//

  //"இதோ வந்து எடுத்து தர்றேன்யா என் இதே..."//

  //அதாம்பா.. சஞ்சய் ராமசாமி கணக்கா பிளைட்ல இருந்து டயம் பாத்து கிட்டே எறங்கற ஆளுங்க//

  பதிலளிநீக்கு
 7. // தக்குடு சொன்னது…
  Post suuuperaa irukku boss!! neraiyaa yedam roomba enjoy panninen, //

  தக்குடு.......... பேரே அட்டகாசமா இருக்கு... உங்க ப்ளாக் பக்கம் எட்டிப்பார்த்தேன்... அருமையோ அருமை... சும்மா பொளந்து கட்டிருக்கீங்க.... என்னோட முதல் ஃப்ளைட் பயணம் ஞாபகத்துக்கு வந்தது... சூப்பர்...

  பதிலளிநீக்கு
 8. // cheena (சீனா) சொன்னது…
  அன்பின் எஷ்கா

  அருமை அருமை - இடுக்கண் வருங்கால் நகுக - சூப்பரா சமாளிச்சிருக்கீங்க - அந்த வாழக்கா பஜ்ஜி - சூப்பர். நல்லா நகைச்சுவை எழுதறீங்க - தொடர்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //

  சூப்பரா சமாளிச்சிருக்கேனா....? இப்போ நான் அந்தக் கம்பேனி (பெரிய மன்னார் அன்ட் கம்பேனி... போடா டேய்) யிலயே இல்ல... நாஞ்சொன்னா மாதிரி அந்த மீட்டிங்குல இருந்த பெரிய தலைங்கள்ல பாதியும் இல்ல.... ஏதோ ரெண்டு மூணு ப்ராடக்ட் லாஸாமாம்.. டபார் டபார் னு தலைங்களை தூக்கிட்டாய்ங்களாம்... இதுல எனக்கு என்ன ஒரு ஆறுதல்னா (கோவிச்சுக்கப்படாது) நான் வெளியே வந்தப்போ... என்னை இரு இரு ன்னு சொன்ன தலைங்க யாருமே இப்போ அங்கே இல்ல... இவுங்கள நம்பி நானும் அங்கயே இருந்திருந்தேன்னா?... (பாஸ்.. பாஸ்.. எங்க ஓடுறீங்க.. இங்க வாங்கே பாஸ்.. நாம அடி வாங்கறது சகஜம் தான)

  பதிலளிநீக்கு
 9. எப்படியோ அந்த பெரிய தலைகளுக்கு,உங்க தலையை காட்டியாயிற்றே... special intro தான் அன்று..

  பதிலளிநீக்கு
 10. அதுல ரெண்டு மூணு பெரிய தலை இன்னும் அங்கியே தான் இருக்கு... கோவால வாங்கிட்டு வந்த அவார்டை கொண்டு போய் காட்டினேன்.. சந்தோசப்பட்டாய்ங்க...

  பதிலளிநீக்கு