புதன், 18 ஏப்ரல், 2012

ரொம்ப நாளைக்குப்பிறகு... ஓக்கே.. ஓக்கே...ரிலீஸன்று முதல் நாள் ஈவினிங் ஷோவுக்கு ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முயற்சிக்கும் போதே எனக்கும் பப்பிக்கும் பஞ்சாயத்து ஆரம்பித்தது.. அந்த தியேட்டர், இந்த தியேட்டர் என்று.. பாவா (கோவை ப்ரூக்ஃபீல்ட்) "தி சினிமா" மால்-இல் தான் பார்க்க வேண்டும் என ஆரம்பித்து வைத்தார்.. அங்க ஒரு டிக்கெட் 120 ரூபாயாம், புக்கிங் சார்ஜ் 20 ரூபாயாம்.. மூணு பேருக்கு 420, பைக் வேற ரிப்பேர், ஸோ.. போக வர ஆட்டோக்களுக்கு ஒரு 200, இன்டர்வெல் ஸ்னாக்ஸ் ஒரு 150, நைட் வெளியில சாப்பிட்டா அது ஒரு 200, ஆக 900 ரூபாய் மொய் வைக்கப்போறீங்க, நான் ஒரே ஒரு பீட்ஸாவோ, மசால் பூரியோ கேட்டா மட்டும் வாங்கித் தராதீங்க யாரும்.... எப்படியும் ரெண்டு வாரம் கழிச்சு யாராவது நல்ல பிரிண்டா பென் டிரைவுல போட்டுத் தரத்தான் போறாங்க, அப்போ பாத்துகிட்டா என்ன குறைஞ்சா போயிடும், எக்ஸெட்ரா, எக்ஸெட்ரா, எக்ஸெட்ரா, என்றெல்லாம் இழுத்துக்கொண்டே போனதில்... எந்தப்பக்கமும் மெஜாரிட்டி இல்லாமல் பஞ்சாயத்து தோல்வியில் முடிந்தது. இதில் பாழாய்ப்போன பவர்கட் வேறு, டிக்கெட் புக் செய்ய முடியாமல் தமிழ்நாடு ஈ.பி மேல் லேசாக கோவம் வந்தது..

இரண்டாவது நாள் "ஏதாவது ஒரு தியேட்டர்" என சமாதானமாகி புக்கிங் செய்ய முயற்சித்தால் எல்லா தியேட்டர்களும் ஃபுல்.. விசாரித்தால் படம் ஹிட்டாம்.. ஆல் ஃபேமிலீஸ் ஆர் பிரசன்ட் இன் ஓக்கே ஓக்கே தியேட்டர்ஸ் என்று உளவுத்துறை ரிப்போர்ட் (வேறு யார், பாவாவும், அவர் தம்பியும ரவுண்ட்ஸ் போய்விட்டு வந்து) சொன்னது. மூன்றாவது நாளும் இதே கதை.. அப்புறம் மனசை "கல்"லாக்கிக் கொண்டு மூஞ்சியைக் கழுவி "கண்ணாடி" பார்த்து துடைத்துக்கொண்டு சாலமன் பாப்பையா, வேலாயுதம், சிறுத்தை, எக்ஸெட்ரா, எக்ஸெட்ரா ஆகியவற்றை இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக மாஸ்டர் சர்வேஷின் வீச் வீச் கிய்யா முய்யா கத்தல்களுக்கிடையில் பாத்திர, பொம்மை உருட்டல்களுக்கு இடையில் பார்க்க முயற்சித்தோம்... பார்த்தோம்... பார்த்துத் தொலைத்தோம்...

இந்த கேப்பில் ஒரு ஆர்வத்தில் ------------------- க்கு போன் செய்து தெரியாமல் கதையை கேட்டுத் தொலைத்து விட்டேன், அவள் (யாரா? பழைய பதிவு மைனா - ஒரு புலம்பல்ஸ், அப்புறம் ஒரு செல்போன் ஞாபகம் இருக்கிறதா?) காது ஜவ்வு அறுந்து போகுமாறு மைனா கதை சொன்னது ஞாபகம் இருக்கிறதா??? தெரியாமல் கேட்டு விட்டேன்.. "ஒரு கல் ஒரு கண்ணாடி பாத்துட்டியா" என்று. ஹே... சூப்பர்டா, நேத்து தான் பி.வி.ஆர்ல போய் பாத்தோம், சந்தானம் பிச்சுட்டான் (எதை?), ஆக்சுவலி ஹீரோ உதயநிதி ஸ்மார்ட் யூ நோ (கோடியில காசு இருந்தா, நான்கூட ஸ்மார்ட்டா தான் இருப்பேன்), அந்த ரே பான் (பெரிய கம்பேனி போல) க்ளாஸோட நச்சுன்னு இருக்கான், ஸ்னேகா வேற வர்றாடா படத்துல (அடடே), கடைசி கிளைமாக்ஸூல ஆர்யாவும் வருவான் (அடடடடே), ஹி ஈஸ் வெரி வெரி ஹேன்ட்ஸம் யூ நோ (எவன்தான் உனக்கு ஹேன்ட்ஸம் இல்லை? என்னைத் தவிர), ஆனா சந்தானத்தை பார்த்து "யார் இவன் சுத்த லூஸா இருக்கான்" னு சொல்லிடுவான் (உண்மைதானே). சந்தானம் மட்டும் இல்லன்னா படமே இல்லடா (அதுவும் உண்மைதானே), பிளைட்ல "ஏம்மா? சாகப்போற நேரத்துல தேங்கா எண்ணெயை வச்சுகிட்டு நாங்க என்ன பண்றது" (கதையை கேட்டா டயலாக்லாம் ஏன் சொல்றா இவ?) சொல்வான் பாரு, தியேட்டரே அலறும்... படத்துல செம்மை இன்ட்ரோடா சந்தானத்துக்கு, பி.எம்.டபிள்யூ காரை காட்டி (காட்டி?).. ஹி, ஹி நான் சொல்ல மாட்டேன், நீயே போய் பாரு சூப்பர் பில்ட் அப்..... (அடச் செங்குரங்கே)

நான் "யம்மா, கதை என்னம்மா? படம் எப்டி இருக்கு?" அவள் "கதையா, அது என்னன்னா உதயநிதி சிக்னல்ல நிப்பானா, அப்போ முக்காடு போட்டுட்டு வர்ற ஹன்சிகாவை கிண்டல் பண்ணுவானா? (சரி) ஆனா அவ மூஞ்சியை பாத்து ஃபாலோ பண்ணி லவ் பண்ண ஆரம்பிச்சுடுவான் (சரிதான்) அவங்கப்பா சிட்டி கமிஷனர் (வெரிகுட்), சந்தானம் தான் பிரெண்டு (வெரி வெரி குட்), அவனுக்கு ஒரு லவ்வர் (அது யாரு?). ஆனா ஃபிரண்ட்ஷிப்தான் முக்கியம்னு நெறைய ஸீன் இருக்கு (நல்ல விஷயம் நல்ல விஷயம்)... ஹே... அதுல நெறைய தண்ணி அடிக்கிற ஸீன் இருக்கு.. உதயநிதி தண்ணி அடிக்குறத போய் பாரேன், ஆக்சுவலி நீதான்டா அது, மொக்கை பையன் நீ, நீயெல்லாம் அப்படித்தான் கேவலமா பண்ணுவ... (என் கதையை விடு தாயே, கதைக்கு வா) சரி, சரி, அவன் ஹன்சிகா கிட்ட மாட்டிக்குவானா?. அப்புறம் பாண்டிச்சேரியில கல்யாணம் அவளுக்கு (அதுக்குள்ளயா?), அதை நிறுத்த ரெண்டு பேரும் போவாங்க (அப்போ யார்கூட கல்யாணம்?). வழி எல்லாம் கமெடிதான்.. ஒண்ணுக்கு போக போகும் போது இன்டர்வெல் (யார் ஒண்ணுக்கு?) அதுல என்னன்னா... ஹலோ.. ஹலோ.. நல்ல வேளை.. போன் சிக்னல் கட்.. நான் எஸ்கேப்.
ஏதேதோ காரணம் சொல்லி, ஆனால் உண்மையில் ஐ.பி.எல்லுக்கு பயந்து அஜீத்-தின் பில்லா 2, சூர்யாவின் மாற்றான், கமல்-இன் விஸ்வரூபம், கார்த்தி-யின் சகுனி ஆகியவை ஜூன் மாத ரிலீஸூக்கு தள்ளிப்போனாலும் தைரியமாக "ஒரு கல் ஒரு கண்ணாடி" படத்தை (ஐ.பி.எல் ஃபீவரில்) யோசிக்காமல் ரிலீஸ் செய்வதற்கே தனி தில் வேண்டும். இதில் வரிவிலக்கு வேறு தர மறுக்கப்பட்டிருக்கிறதாம்.. ஆனால் என்ன? போனால் போகட்டும்.. படம் ஹிட்.. நல்ல டாக், நல்ல கலெக்ஷன்.. தியேட்டர் பக்கம் போனால் ராம் சரண் தேஜாவின் டப்பிங் "ரகளை", சிவாஜி மற்றும் என்.டி.ஆர் தி கிரேட்டின் தூசு தட்டப் பட்ட ஈஸ்மெண்ட் கலர் கர்ணன் மட்டுமே போட்டிக்களத்தில். ஸோ.... "மச்சி, ஓப்பன் த பாட்டில்".... கலக்கிக் கொண்டிருக்கிறது "ஒரு கல் ஒரு கண்ணாடி" என்கிற ஓக்கே ஓக்கே.

வேலை டென்ஷனெல்லாம் குறைந்த ஒரு மாலை நேரத்தில் நான்கைந்து நாள் கழித்து ஆபீஸ் நண்பர்களுடன் படம் பார்க்கப்போயாயிற்று.. படம் ஆரம்பிக்கும் முன்பே தியேட்டர் ஃபுல். முழுக்க முழுக்க (சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்தையும் மறந்து வந்திருந்த) ஃபேமிலி கூட்டம். ஸார்... லேடீஸ் இருக்காங்க கொஞ்சம் கார்னர் ஸீட் எங்களுக்கு மாத்திக் கொடுங்களேன் என்ற புதுக் கணவர், ஸீட் க்ராஸ் செய்கையில் பெப்ஸியை மேலே ஊற்றி விட்டு ஸாரி சொல்லிப்போன ஸ்கூல் பெண், சந்தானம் அடிக்கும் ஜோக்குகளுக்கெல்லாம் கை தட்டத் தெரியாமல் முன் ஸீட்டை எட்டி, எட்டி உதைத்துக்கொண்டிருந்த நாலு வயது குட்டிப்பையன், உங்க அப்பா எப்பவுமே இப்டித்தான் லேட், படம் ஆரம்பிச்சப்புறம் தான் எப்பயும் உள்ளே வருவாரு, கல்யாணம் ஆனதில் இருந்தே இப்படித்தான் என பையனிடம் புலம்பியபடியே நுழைந்த ஒரு அம்மா, இந்தப் படத்துக்கு வராதே. கூட்டமா இருக்கும், யாராவது பாத்துட்டா என்ன பண்றது என்று துப்பட்டாவில் முக்காடு போட்டபடியே தன் ஆளிடம் முனகிய காலேஜ் பெண், எத்தனை வருஷம் கழிச்சு நீங்க என்னை தியேட்டருக்கு கூட்டிட்டடு வந்திருக்கீங்க என்று கொஞ்சலாக சொல்லிக்கொண்டிருந்த ஒரு பெரியம்மா என எல்லாரையும் ஒட்டு மொத்தமாக ஒரே இடத்தில் நீண்ட நாட்களுக்குப்பிறகு தியேட்டரில் பார்க்க முடிந்தது.

அந்த வகையில் உதயநிதி, ராஜேஷ், சந்தானம் டீமுக்கு ஒரு நன்றி சொல்லலாம்.. ஆனால் படத்தில் ஆறு இன்டர்வெல்.. ஒண்ணு நார்மல், அஞ்சு பாட்டு, அதைத்தான் சொன்னேன்.. தம்மடிக்கப்போகாதவர்கள் ஸீட்டுலேயே உக்காந்து நெளிய வேண்டியதுதான்... அதில் "அகிலா, அகிலா" பாட்டு ஜீவாவோட "என்னமோ, ஏதோ" மாதிரியே இருக்கு, "வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு" பாட்டுக்கு மட்டும் நான் என் காலேஜ் பசங்க செட்டோட போயிருந்தா தியேட்டருக்குள்ள எந்திரிச்சு கெட்ட ஆட்டம் ஆடியிருப்பேன்.. சிரித்து, சிரித்து, கை தட்டி கை தட்டி ஓயவில்லை.. எல்லா ஸீனிலும் இருக்கும் சந்தானம், ஒரு லாங் ஸீனில் இல்லாமல் மிஸ்ஸாகி யோசிக்க வைத்து விட்டு அடுத்த கன்டினியூட்டியில் பேக்கிரவுண்ட் ஸாங்குடன் ஸ்கூட்டரில் வரும் ஸீன் தியேட்டரில் இருக்கும் எல்லாரையும் ஆரவாரிக்க வைக்கிறது..

கதை மட்டும் தான் படம் முழுக்க காணாமல் போன ஒரே விஷயம். அது மட்டுமல்ல... வெளியே வந்த பிறகு ரொம்ப நேரமாக யோசித்தும் எந்த ஸீன் எங்கே வந்தது என கோர்வையாக யோசிக்க முடியவில்லை.. ஆனால் திருப்தியாக படம் முடிந்து போனது. நல்ல ஓபனிங்.. புதுமுக ஹீரோ படம் பார்க்கிறோம் என்று ஏற்படாத உணர்வு.. கதை வேண்டாம், திரைக்கதை போதும் என்று மூன்றாவது ஹிட்டடித்த ராஜேஷின் ஃபார்முலா.. சந்தானத்தின் லவ்வராக வரும் குள்ளப் பிசாசின் அட்டகாசம், சென்ஸாருக்கு தப்பி வந்த ஒன்றிரண்டு ஏ வசனங்கள், கே.எஸ்.ரவிகுமார், சிவாஜி கணேசன், நித்யானந்தா, பால் தினகரனின் இயேசு மொழிபெயர்ப்பு என ரிவர்ஸில் கலாய்த்து இறங்கி விளாசும் சந்தானத்தின் வசனங்கள், படம் முழுக்க பில்ட் அப்பே இல்லாத பக்கத்து வீட்டுப்பையன் ஸ்டைல் ஹீரோ, என்று பல ப்ளஸ்களும் உண்டு..என்னது? விமர்சனமா? ஏன் மேலே இவ்ளோ படிச்சது போதாதா? இதுக்கு மேல விமர்சனம் வேறயா? போய் புள்ள குட்டிங்களைப்படிக்க வைங்கப்பா... கப்பித் தனமா பேசிக்கிட்டு... படிக்க வச்சுட்டு, எக்ஸாம் முடிஞ்ச உடனே இந்த படத்துக்கு கூட்டிட்டுப்போங்க, நல்லா என்ஞாய் பண்ணுவாங்க, அவ்ளோ தான் சொல்வேன்...