சனி, 22 செப்டம்பர், 2012

தி ஹேங் ஓவர்


நாளைக்கு விடிஞ்சா கல்யாணம். இன்னைக்கு நைட் பேச்சுலர் பார்ட்டி. அதைக் கொண்டாட நாலு நண்பர்கள் (மாப்பிள்ளை, அவனோட வருங்கால மச்சான், மாப்பிள்ளையோட இரண்டு நண்பர்கள் - ஒரு ஸ்கூல் வாத்தி, ஒரு பல் புடுங்கி டாக்டர்) லாஸ் வேகாஸ் போறாங்க. தண்ணி, கூத்து-ன்னு ஒரே ஜாலி நைட் பூரா...

காலையில் எழுந்தால் மூணு பேருக்கும் (மூணு பேரா? ஆமாம். மூணு பேர் தான்) பயங்கர தலைவலி. தண்ணி ஓவர். என்ன நடந்தது நேத்து நைட்டு..? தெரியலை...

எழுந்து பார்த்தால், ரூம் மகா மோசமான அலங்கோலமான நிலையில். மச்சானுக்கு ஜட்டி பேன்ட்டு எதையும் காணோம், பாத்ரூமுக்குள் உயிருடன் ஒரு புலி, ஆம், நிஜப்புலி. கெஸ்ட் ரூமில் ஒரு குழந்தை. டாக்டர் கையில் திருமண மோதிரம், டாக்டருக்கு ஒரு பல்லைக்காணோம், இந்தப்பக்கம் மாப்பிள்ளையையே காணோம், வாத்தி கையில் ஆஸ்பிடலில் அட்மிட் ஆனதற்கான ஸ்டிரிப், ஹோட்டலை விட்டு வெளியே வந்தால் இவர்களின் மெர்சிடிஸ் காரைக்காணோம், ஹோட்டல் மாடியில் இருந்த ஒரு பெரிய சிலையின் கையில் இவர்கள் ரூமில் இருந்த ஒரு படுக்கை. குட்மார்னிங் ஆபீசர் என்று ஒரு போலீஸ் காரைக்கொண்டு வந்து தந்துவிட்டுப்போகிறான் ஒருவன்.....

"ஹேங் ஓவர்" படம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது. முதல் ஐந்து நிமிடங்கள் நடப்பது தான் நான் மேலே சொன்னது... இவை ஆரம்பம் மட்டுமே.. இவற்றுக்குப்பிறகும் ஆனந்த (நமக்கு) அதிர்ச்சிகள் உண்டு படம் முழுக்க. ஸாம்பிள் வேணுமா? மெர்சிடிஸ் கார் போலீஸின் கன்ட்ரோலில், அதன் டிக்கிக்குள் அம்மணமாக ஒரு சைனா மேன், புலியின் ஓனர் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன். பல் டாக்டருக்கு ஒரு பார் டான்ஸருடன் கல்யாணம், சைனா மேன் ஒரு டான், அவன் கன்ட்ரோலில் மாப்பிள்ளை, காசு கொடுத்து மீட்டால் அன்ஃபார்ச்சுனேட்லி, அது மாப்பிள்ளை இல்லை, எக்ஸெட்ரா - இவையெல்லாம் பிற்பகுதிக்கதையில் வருபவை..

நைட்டு என்ன நடந்திருக்கும். விடை தேடிக் கிளம்புகிறார்கள் மூவரும், அந்தக் குழந்தையையும் எடுத்துக்கொண்டு.. அவர்களது விடை தேடும் அன்றைய ஒருநாள் பயணமே கதை... மாப்பிள்ளையைக் கண்டுபிடித்தார்களா? கல்யாணம் நல்லபடியாக நடந்ததா? ஏன் பல்லைக்காணோம்? இவையெல்லாம் வெண் திரையில்.

படம் வெளியானதும் சூப்பர் டூப்பர் ஹிட்டு. கொஞ்ச நாட்களில் இரண்டாம் பாகம் வரும் அளவுக்கு. படம் அச்சு அசலான அமெரிக்க யூத் கலாச்சாரத்தினை பிரதிபலிப்பதனாலும், அவற்றால் இப்படி சில அபத்தங்கள் விளைந்தால் என்ன ஆகும் என்ற ஜாலியான யோசைனையாலும். என்ன ஒன்று... பக்கா லோக்கல் லேங்குவேஜ் டயலாக்ஸ், பயங்கரமான கெட்ட வார்த்தைகளுடன்.

(இந்தப்படத்தின் லோக்கல் தமிழ் வெர்ஷன் சி.டி ஒன்றும் சில மாதங்களுக்கு முன் கிடைத்தது. யாரோ நம்மூர் பத்து காலேஜ் மாணவர்கள் வசனம் எழுதி, அவர்களே டப்பிங்கும் பேசி................. ஸோ மியூஸிக் மட்டும் மிஸ்ஸிங்.. ஆயா, அம்மா என்று ஆங்கில வெர்ஷனுக்குக் குறையாமல் கெட்ட வார்த்தைகளுடன் எழுதியிருந்தார்கள்)

அந்தப்படம் மூவீஸ் நவ் - ல் அடிக்கடி திரையிடப்படுகிறது...